'இயல்விருது' பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி....
- வ.ந.கிரிதரன் -
வணக்கம்
திரு. ஜெயமோகன் அவர்களே, உங்களது 'இயல்விருது' பற்றிய 'திண்ணை'க் கட்டுரை
படித்தேன். அதில் வரும் 'என்னுடைய
எப்போதுமுள்ள ஐயம் இது. அது எந்த விருதாக இருந்தாலும், இங்குள்ள சாகித்ய அக்காதமியோ
பப்பாஸி விருதோ அல்லது புலம்பெயர்ந்த இயல் விருதோ முதல்தர எழுத்தாளர்களை ,
தமிழுக்கு தன்னைத் தந்து சாதனை புரிந்த படைப்பாளிகளை கவனமாக தவிர்க்கும் மனநிலை
எப்படி ஒவ்வொரு முறையும் சரியாக உருவாகிவிடுகிறது? எப்படி அதற்கான நடுவாந்தரங்கள்
தவறாமல் உள்ளே நுழைந்துவிடுகின்றன' என்னும் வரிகள் பற்றிய விளக்கமிது.
நடுவர்களாக நாமாகப் போய் நுழைந்து விடவில்லை. அவர்களாகக் கேட்டுக் கொண்டதின்பேரிலே
ஒப்புக் கொண்டோம். அடுத்தது
'இயல்விருது'க்கு எத்த்னை படைப்பாளர்களுக்கு ஆதரவாக சிபாரிசுகள் வந்தன என்பது பற்றி
எமக்குத் தெரியாது. எமக்கு இயல் விருதுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட இறுதி
அறுவரின் பெயர்களே தரப்பட்டன. அவற்றிலிருந்து 1, 2, 3... 6 என்னும் அடிப்படையில்
எமது தெரிவினைத் தெரிவிக்கும்படி கேட்கப்பட்டதன் அடிப்படையில் நாம் தேர்வு
செய்தோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவித நிர்ப்பந்தங்களுமின்றி என் சுயவிருப்பின்
அடிப்படையில் அதனைத் தெரிவு செய்தேன். எனக்குத் திருமதி திருமதி
லக்சுமி ஹோம்ஸ்ரோமை
நேரடியாகத் தெரியாது.
எமக்கு வந்த அறுவரில் என் தேர்வு 'தமிழ் மொழிக்கும் , தமிழ்
இலக்கியத்துக்கும் தன் வாழ்நாளில் ஆற்றிய பங்கின்' அடிப்படையில் மேற்படி தமிழ்
இலக்கிய தோட்டம் இயல் விருதினை வழங்குகின்றதென்பதன் அடிப்படையில்
பின்வருமாறிருந்தது:
1. பேராசிரியர் ராமானுஜம்
1. திருமதி லக்சுமி ஹோம்ஸ்ரோம்
2. அம்பை
3. தியோடர் பாஸ்கரன்
4. தொ.பரமசிவம்
பேராசிரியர்
இராமானுஜத்தையும், திருமதி லக்சுமியையும் நான் முதலாவது தெரிவாகத்
தேர்ந்தெடுத்திருந்தேன். காரணங்கள் வருமாறு:
ஒருவருடைய வாழ்நாளுக்கான இயல்விருது அவர் தமிழ் மொழிக்கும் , தமிழ்
இலக்கியத்துக்கும் தன் வாழ்நாளில் ஆற்றிய பங்கிற்காக வழங்க்கப்படுமொன்று.
இந்தவகையில் எனக்குத் தந்த அறுவரைப் பார்க்கும்போது பேராசிரியர் ராமானுஜம் ,
லக்சுமி ஹோம்ஸ்ரோம் ஆகியோரையே இறுதியான இருவர்களாகப் பின்வரும் காரணங்களுக்காகத்
தேர்ந்தெடுக்கிறேன். இவர்களிள் பேராசிரியர் ராமானுஜம் முத்தமிழிலொன்றான
நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு பாராட்டுதற்குரியது. நாற்பது வருடங்களுக்கும்
மேலாக இவர் இத் துறைக்குக் குறிப்பாக நாடக மொழி, நாடக விமரிசனம், நாடக ஆய்வென....
ஆற்றிவரும் பங்களிப்பின் மூலம் இயல் விருதுக்கு முற்றிலும் தகுதியானவராகின்றார். .
அடுத்தவர்
திருமதி லக்சுமி ஹோம்ஸ்ரோம். இன்றைய உலகில் சுமார் எண்பது மில்லியன் தமிழர்கள்
பூமிப்பந்தெங்கும் சிதறி
வாழ்ந்திருந்தும் உலக இலக்கிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் இன்னும்
பூரணமாக அறியப்படவில்லை. இந்நிலையில் தமிழ்ப் படைப்புகளை ஆங்கில மொழி மாற்றம்
செய்து, அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின், மொழியின் பங்களிப்பை உலக இலக்கிய அரங்கில்
நிறுவும் வேலையினைத் தனியொருவராக நின்று இவர் ஆற்றிவரும் பணி போற்றுதற்குரியது.
தமிழ் இலக்கியத்தின் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை, நவீனப் படைப்புகளை,
தமிழின் நவீன நாடக முயற்சிகளை, பெண்ணியம் மற்றும் தலித் இலக்கியப்
படைப்புகளையெல்லாம் ஒரு பரந்த அளவில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ் மொழி, தமிழ்
இலக்கியத்தை ஒரு பரந்த அளவில் சர்வதேசமயப்படுத்தியதன் மூலம் இவர் ஆற்றியுள்ள
பங்கு பாராட்டுதற்குரியது.
மேலும் தனது கட்டுரையில் திருமதி லக்சுமி ஹோல்ஸ்ட்ராம்
பற்றிப் பினவருமாறு குறிப்பிடுகின்றார் ஜெயமோகன்: 'இந்த வருடத்தின் விருதுபெறும்
லட்சுமி ஹாம்ஸ்டாமை நான் ஒருமுறை சந்தித்து உரையாடியிருக்கிரேன். சுந்தர
ராமசாமியின் வீட்டில். அவரது நாவலை அந்த அம்மையார் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.
எனக்கு இரு விஷயங்கள் தோன்றின. ஒன்று அவருக்கு எந்த இலக்கியம் பற்றியும்
சொல்லும்படியான ரசனையோ புலமையோ இல்லை. மிக மேலோட்டமான ஒரு வாசகி. இரண்டு அவருக்கு
தமிழ் பண்பாடு பற்றி அடிப்படை ஞானம் கூட இல்லை ''இந்த அம்மையார் லண்டனில்
இருப்பதனால் ஒருசரளமான பொது ஆங்கிலம் இவரிடம் உள்ளது. அதற்குமேல் இவருக்கு எந்த
தகுதியும் இல்லை. இவர் உங்கள் நூலை மொழிபெயர்க்கத்தான் வேண்டுமா?''என்று சுந்தர
ராமசாமியிடம் வாதிட்டேன். ''அவரது நடை ஆங்கில வாசகனை கவர்வதாக இருக்கிறது. நம்மூர்
மொழிபெயர்ப்பாளர்களிடம் அது இல்லை''என்றார் சுந்தர ராமசாமி. ''சார், இவர் அங்குள்ள
சராசரி நடைக்கு எல்லா படைப்புகளையும் மாற்றுவார். சிவசங்கரி ஹெமிங்வேயை இங்கே
மொழிபெயர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி. எல்லா நுட்பங்களையும்
மழுங்கடித்துவிடுவார். இங்குள்ள ஆங்கிலப் பேராசிரிய மொழிபெயர்ப்பாளர்கள் குறைந்தது
நம்மிடம் உள்ள பண்பாட்டு நுட்பங்களை மொழியாக்கம்செய்ய முயற்சியாவது செய்வார்கள்.
அதன் மூலம் அவர்கள் நடை வெளிநாட்டு வாசகர்களுக்கு அன்னியமாக இருக்கலாம்.ஆனால் அது
நேர்மையான செயல்...''என்றேன். ஆனால் சுந்தர ராமசாமிக்கு லட்சுமி ஹாம்ஸ்டாம் மூலம்
தனக்கு உலகப்புகழ் தேடிவரும் என்ற கனவு இருந்தது.இந்த அம்மையாரின் மொழிபெயர்ப்புகளை
பின்னர் படித்தபோது என் மதிப்பீடு அப்படியே உறுதியாயிற்று. அவற்றினூடாக அந்த தமிழ்
படைப்புகளின் எளிய நிழல்களையே காணமுடியும். உலக இலக்கியமறிந்த எந்த வாசகனும் அவற்றை
பொருட்படுத்தமாட்டான். அவற்றுடன் ஒப்பிடுகையில் இங்குள்ள சம்பிரதாயமான
மொழிபெயர்ப்புகளுக்கு ஒருவகை ஆவண மதிப்பாவது உள்ளது.'
திருமதி லக்சுமி ஹோல்ஸ்ட்ராமின் மொழிபெயர்ப்பு பற்றி ஜெயமோகனுக்கு வேண்டுமானால்
தாழ்வான கருத்து இருக்கலாம். நவீன மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து (இளங்கோ
தொடக்கம் புதுமைப் பித்தன், சு.ரா, மெளனி, அசோகமித்திரன், நா.முத்துசாமி, பாமா என நவீனத் தமிழ் இலக்கியப்
படைப்பாளிகள் வரை) அவ்வப்போது படைப்புகளை மொழிபெயர்த்துத் தமிழ் இலக்கியத்துக்குச்
சேவையாற்றிவரும் திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ட்ராமின் பங்களிப்பு தமிழ்ப்
படைப்பாளிகளின் பங்களிப்புக்கு எந்தவகையிலும் குறைவானதல்ல என்பது என் கருத்து.
பாமாவின் 'கருக்கு' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக திருமதி லக்சுமி
ஹோல்ஸ்ட்ராம் 2000ஆம் ஆண்டிலும் , அம்பையின் 'காட்டில் ஒரு மான்' நூலின் ஆங்கில
மொழிபெயர்ப்புக்காக 2006 ஆம் ஆண்டிலும்
Crossword விருதினைப் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
தத்தமது துறைகளில் வெளியிட்ட படைப்புகளை, ஆற்றிய பங்களிப்பு, அதற்காக அவர்கள்
செல்வழித்த காலம், உழைப்பு போன்றவற்றின்
அடிப்படையில், அவற்றின் மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் ஆகியவற்றுக்கு
ஆற்றிய பங்களிப்பின் அடிப்படையில்
திருமதி லக்சுமி ஹோம்ஸ்ரோம் மற்றும் பேராசிரியர் ராமானுஜம் இருவரையும் இவ்வருட
இயல்விருதினைப் பகிர்ந்து கொள்ள நான்
தெரிவு செய்தேன். ஏனையவர்களை அவர்களது ஆக்கங்கள், பங்களிப்பு, அதற்கான அவர்களது
உழைப்பு, உழைத்த காலம்
என்பவற்றின் அடிப்படையில் தெரிவு செய்தேன்.
ஜெயமோகனின் நடுவர்கள் மீதான குற்றச்சாட்டு எந்தவித
ஆதாரங்களுமற்ற அவசரமானதொரு குற்றச்சாட்டு. குற்றம் சாட்டுவதற்கு முன்னர் அவர்
இயல்விருது பற்றியும் , அது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது பற்றியும்
விரிவாக் ஆராய்ந்திருக்க வேண்டும். அதற்குப் பின்னரே நடுவர்கள் பற்றிய
குற்றச்சாட்டையாவது முன்வைத்திருக்க வேண்டும். குறைந்தது அவர் நடுவர்களுடன் அல்லது
தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவரான எழுத்தாளர்
அ.முத்துலிங்கத்துடனாவது தொடர்பு கொண்டு உண்மை விபரங்களை அற்நிது கொண்டபின்னர் தன்
குற்றச்சாட்டுகளைத் திண்ணை இதழில் முன் வைத்திருக்கலாம். ஒரு விடயத்தைப் பற்றிய
சரியான தகவல்களைப் பற்றிய கவலைகளேதுமற்று அவர் குற்றச் சாட்டியிருப்பது வியப்பினைத்
தருகின்றது.
திருமதி லக்சுமி ஹோம்ஸ்ரோம் பற்றிய இணையத்
தளங்கள் சில:
1.http://translators-at-katha.blogspot.com/2006/10/lakshmi-holmstrm-freelance-writer.html
2.http://www.crosswordbookstores.com/Html/AboutCW.htm
3.http://www.rlf.org.uk/fellowshipscheme/profile.cfm?fellow=30&menu=2
4.http://www.salidaa.org.uk/salidaa/docrep/docs/about/trustees_and_advisors/docm_render.html
5.https://www.vedamsbooks.com/no29164.htm
6.http://www.hindu.com/lr/2006/02/05/stories/2006020500210400.htm
7.http://www.amazon.ca/s?ie=UTF8&search-type=ss&index=books-ca&field-author=Lakshmi%20Holmstrom&page=1
8.http://unjobs.org/authors/lakshmi-holmstr%C3%B6m
9.http://www.hinduonnet.com/2001/09/16/stories/1316017m.html
From: SALIDDA
http://www.salidaa.org.uk/salidaa/site/Home)
Lakshmi Holmström is a critic, translator and
freelance writer. Lakshmi has translated extensively from modern Tamil fiction
into English and edited two collections of modern Indian short fiction, The
Inner Courtyard: Stories by Indian Women (Virago, 1990) and Writing from India
with Mike Hayhoe (Cambridge University Press, 1994). She has also retold, in
English, two 5th century Tamil narrative poems. Her critical articles and
reviews have appeared in journals in India, Europe, United States, and England.
She has been guest lecturer at successive Open University summer schools and has
been invited to give lectures and workshops at different universities in
England, Europe and India
ngiri2704@rogers.com |