இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2008 இதழ் 108  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்நாவல்!

மின்வாழ்வு! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: மின்னுரையாடல்!
பானுமதிராதாகிருஷ்ணன்ராதாகிருஷ்ணனுக்கும் பொருளாதாரத்திற்கும் எட்டாப் பொருத்தம். எவ்வளவு உழைத்தாலும் அவனால் என்றுமே மேலதிகமாகச் சேர்க்க முடிந்ததில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு செலவு வந்துவிடும். அன்றாடம் உழைக்கும்போது அவ்வப்போது தேவைகளுக்கேற்ப செலவு செய்து விடுவான். இதனால் அவனது பல கனவுகள் நிறைவேறாமலேயே இருந்து விட்டன; இருந்து கொண்டிருக்கின்றன. இந்த ஒரு காரணத்திற்காகவே அவன் இதுவரை சம்சார பந்தத்தில் சிக்குவதைத் தவிர்த்து வந்திருக்கின்றான். இதனால் இதுவரை அவனது வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பட்ட பெண்களெல்லாரும் அந்தந்தக் காலகட்டங்களுக்குரிய அவனது கனவுலக நாயகிகளாக இருந்து விட்டதோடு சரி. அவர்களில் பெரும்பாலானவர்கள் காலப்போக்கில் குடியும் குடித்தனமுமென ஒதுங்கி அவனது நினைவுகளிலிருந்து மறைந்தும் போய் விட்டார்கள். இப்பொழுது புதிதாக ஒருத்தி. பானுமதி. இவளுடனான அவனது தொடர்பும் எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறதென்பதில் அவனுக்கு எந்தவித எதிர்காலத் திட்டங்களுமில்லை. ஆனால் ஆரம்பத்திலேயே அவன் அவளுக்குத் தன் வாழ்க்கை பற்றி, தன் திட்டங்கள் பற்றியெல்லாம் தெளிவாகக் கூறிவிட்டான். அவற்றையும் மீறி அவள் ஏதாவது தன் பங்கிற்குக் கனவுகள், திட்டங்களேதாவது வைத்திருந்தால் அவனால் அவற்றுக்கெல்லாம் பொறுப்புகள் ஏற்க முடியாது. அவர்களிருவருக்கும் இடையிலான தொடர்பும் இதுவரையில் பரஸ்பர உணர்வுகளை மனவிட்டுப் பரிமாறிக் கொள்ளும் வகையிலானதொரு தூய்மையான, நட்புரீதியிலான, அறிவியல்ரீதியிலானதொரு பந்தமாகவே இருந்து வந்திருக்கிறது. இருவருக்குமிடையில் சமூக. அரசியல், அறிவியல், இலக்கிய, தத்துவரீதியில் இருப்பின் பலவேறு விடயங்களைப் பற்றியும் ஆழமாக, மனம் விட்டு உணர்வுகளை மிகவும் இலகுவாகப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. மேற்படி தொடர்பினை அவர்கள் பலவேறு வழிகளில்- நேரில், மின்னஞ்சலில், மின் உரையாடலில், தொலைபேசியிலென - செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இருவரினதும் குணவியல்புகளை ஓரளவுக்காவது அறிந்து கொளவதற்கு ஊர் துஞ்சும் பின்னிராவொன்றில் நிகழ்ந்த மின் உரையாடலொன்று - கீழுள்ளது - உதவக் கூடும்.

பானுமதிமருதம்_25 (இதுதான் பானுமதியின் பெரும்பாலான இணையத் தொடர்புகளுக்குப் பாவிக்கப்படும் பெயர் வயலும், வயல் சார்ந்த பொழுதுகளும், காட்சிகளும் அவளுக்கு மிகவும் பிடித்தவை. அதனால் அவள் வைத்த பெயரிது.): 'ஹாய் ராதா! இன்றைக்குப் பொழுது மிகவும் சலிப்பாக இருக்கிறது... உங்களுடைய பாடு எப்படிப் போகிறது?

முல்லை-23: (அவனுக்குக் காடும் , காடு சார்ந்த பொழுதுகளும், காட்சிகளும் பிடித்தவை. அதன் விளைவான பெயரிது.)' 'உம்மைப்போல்தான். சில வேளைகளில் இருப்பு இவ்விதம்தான் அமைந்து விடுகிறது மாதத்து முழுநிலா போல. எப்பொழுதுமே பூரணமாக எதுவுமே இருப்பதில்லை. சில நேரங்களில் எந்தவிதக் காரணங்களுமில்லாமல் உறசாகம் பொங்கி வழியும். இன்னும் சில நேரங்களிலோ அமாவாசையாக இருண்டு கிடக்கிறது. இருப்பின் இயல்புகளில் இதுவுமொரு விசித்திரம்.'

மருதம்_25: 'இந்த இரவின் அமைதியில் இவ்விதம் உங்களுடன் உரையாடத் தொடங்கி விட்டதுமே எவ்விதம் பொழுதின் இயல்பு மாறத்தொடங்கி விடுகிறது.'

இவ்விதமாகத் தொடங்கிய மின்னுரையாடல் வழக்கம்போல் பலவேறு விடயங்களைப் பற்றிப் படர்ந்து விரியத் தொடங்கியது. சொந்தமண், உலகம், பிரபஞ்சம், சமூகம், கலையிலக்கியம் (சினிமாவுட்பட) தத்துவமென உரையாடுவதற்குப் பலவேறு விடய்ங்கள் எப்பொழுதுமே குறைவில்லாமல் இருந்தன. இருவருமே எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர்கள். போதாதா எழுதித் தள்ளுவதற்கு; பகிர்ந்து கொளவ்தற்கு. உரையாடல் முதலில் சொந்த மண் பற்றி ஆரம்பித்தது. இருவருமே ஈழத்திலிருந்து சமூக, அரசியற் சூழல்களின் விளைவுகளினால் மேற்கிற்குப் புலம்பெயர்ந்தவர்களில் இருவர்.

மருதம் _25: 'ஊர் மீண்டும் பற்றியெரிகிறது. தமிழகத்திலும் ஊர்ப்பிரச்சினை பற்றி ஓரளவு கவனம் ஏற்பட்டிருக்கிறதே. பாவம் அப்பாவி மக்களை நினைத்தால்தான் கவலையாகவிருக்கிறது. எந்த நேரமும் நிம்மதியாகவிருக்க முடியாமல் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகள், மாணவர்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?'

ராதாகிருஷ்ணன்முல்லை_23: 'தற்போதுள்ள சூழலில் தீர்வு இரண்டு வழிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். முதலாவது உடனடியாக யுத்த நிறுத்தம். அமைதிக்கான பேச்சு வார்த்தைகள். அது ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும். இரு இனங்களுக்குமிடையில் நிலவிவரும் தப்பபிப்பிராயங்கள் நீங்கும் வரையில். அது நீடிக்க வேண்டும். அடுத்த கட்டம் .. நிலையான நிரந்தர தீர்வு பற்றி முடிவெடுக்க வேண்டிய காலகட்டம்... '

மருதம்_25: 'என்ன ராதா, ஏற்கனவே இரண்டாயிரத்து இரண்டில் நடைமுறைப்படுத்திய யுத்தநிறுத்தத்தை மறந்து விட்டீர்களா? நடந்ததுதான் தெரியுமே.. இனியும் பேச்சு வார்த்தைகள், யுத்த நிறுத்தமெல்லாம் சாத்தியமென்று கருதுகிறீர்களா?'

முல்லை_23: 'ஏழு முறை தோற்ற மன்னனொருவன் விடாமுயற்சியுடன் சிலந்தி வலைபின்னுவதைப் பார்த்து உற்சாகமடையவில்லையா? தோமஸ் அல்வா எடிசன் பத்தாயிரம் தடவைகள் தோற்ற பின்னர்தானே மின் குமிழினை வெற்றிகரமாக எரிக்கச் செய்தார். இவற்றுடன் ஒப்பிடும்பொழுது இவ்விதமானதொரு சர்வதேசச் சக்திகளின் அனுசரனையுடனான யுத்த நிறுத்தமும், பேச்சுவார்த்தையும் ஒருமுறைதானே நடைபெற்றிருக்கின்றது. இதன் வெற்றி தோல்வியிலிருந்து பெற்ற அனுபவத்தோடு அடுத்த பேச்சு வார்த்தையினையும், யுத்த நிறுத்தத்தினையும் தொடங்க வேண்டும். தெற்கின் அரசியல் சக்திகளெல்லாம் ஒற்றுமையாக இவ்விடயத்தில் தீர்வொன்றினைக் காணும் சூழல் நிரந்தரத் தீர்வின் வெற்றிக்கு மிகவும் அவ்சியம். அதே சமயம் வட, கிழக்கின் அரசியல் சக்திகளெல்லாம் ஒன்றுதிரண்டு வரவேண்டும். இதற்கு வட, கிழக்கில் பலவேறு அரசியல் அமைப்புகளெல்லாம் சுயமாக இயங்கும் தன்மை ஏற்படவேண்டும். அவ்விதமானதொரு சூழல் ஏற்படாவிட்டால் தொடர்ந்தும் தெற்கு வடகிழக்கின் பிளவுகளைப் பாவித்துப் பிரித்தாள முனையும்.'

மருதம்_25:' கேட்பதற்கு நன்றாகத்தானிருக்கிறது. நடைமுறையில் இதற்கான சாத்தியங்களுண்டா?'

முல்லை_23:' பானு! இது என் கருத்து. இதனைச் சுயமாக நான் கூறுகிறேன். இவ்விதம்தான் என்னால் சுயமாகச் சிந்திக்க முடியும். நிச்சயமாக நடைமுறையில் சாத்தியப்படுமென்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு விடயங்களை மிகவும் தொலைநோக்கில் ஆராய வேண்டும்...'

மருதம்_25:' தொலைநோக்கிலென்றால் .. எவ்விதமானதொரு தொலைநோக்கில்...'

முல்லை_23:' பானு. நாம் வாழுமிந்த பூமியிருக்கிறதே.. இது ஒரு சிறிய கிரகம். நமது சூரிய மண்டலம் மிகவும் பிரமாண்டமாகக் கணத்திற்த்குக் கணம் விரிந்து கொண்டிருக்குமொரு பிரபஞ்சத்தின் ஒரு சிறு மூலையிலுள்ள மிகவும் முக்கியத்துவமற்றதொரு சூரியனின் மண்டலம். இந்த இருப்பின் அற்புதத்தினைப் பார்த்தீரா..? மிகவும் கனன்றுகொண்டிருக்கும் சூரியனின் அருகில் நம்மால் நெருங்கக்கூட முடியாது. எரிந்து சாமபலாகி விடுவோம். ஆனால் கதிரில்லையென்றால் இங்கு உயிருமில்லை. வித்தியாசமானதொரு பந்தம்...'

பானுமதிமருதம்_25: 'வியப்பென்னவென்றால்.. பில்லியன் பில்லியன் ஏன் டிரில்லியன் கணக்கில் காலக்ஸிகளை உள்ளடக்கியதொரு பிரபஞ்சத்தின் ஒவ்வொரு காலக்ஸியிலும் பில்லியன் கணக்கில் கதிர்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒளியாண்டுத் தொலைவுகள் இவற்றைப் பிரித்து நிற்கின்றன. மிகவும் அருகிலுள்ள கதிர் மண்டலத்துக்குத் தற்போதுள்ள தொழில்நுடப்த்தின் அடிப்படையில் செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் செல்லும். இவ்விதமானதொரு சூழலில் நமதிருப்பு இங்கிருக்கிறது'

மருதம்_25:'எவ்வளவு வியப்பாகவிருக்கிறது... '

முல்லை_23: 'ஒவ்வொரு கணமும் நாம் வாழுமிந்தப் பூமி வெளியினூடு மிகவும் பிரமாண்டதொரு வேகத்தில் விரைந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் உணர்வதில்லை.இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டிருக்கிறது. அதனையும் நாம் உணர்வதில்லை. உண்மையில் இப்பூமிக்கு வெளியில், தொலைவிலிருந்து வெளியினூடு விரையுமிந்தப் பூமியினைப் பார்த்தால் எப்படியிருக்கும் தெரியுமா?'

மருதம்_25:' எப்படியிருக்கும்.. ராதா..'

ராதாகிருஷ்ணன்முல்லை_23: 'பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயுப்படை மட்டுமில்லையென்றால் இங்கு உயிர்கள் வாழ்வதற்கே முடியாது. இவ்விதமானதொரு சூழலில் தொலைவிலிருந்து பார்க்கும் போது வாயுப்படையுடன் கூடிய இந்தப் பூமி எனக்கு வெளியில் விரையுமொரு நீர்க்குமிழி போன்றதொரு தோற்றமாகத்தான் தெரிகிறது. இந்தச் சிறிய நீர்க்குமிழி எந்த நேரத்திலும் உடைந்து விடலாம். இன்னுமொரு கிரகத்துடன் அல்லது எரிகல்லொன்றுடன் மோதி, அல்லது விண்வெளியின் ஏதாவதொரு மூலையில் நடைபெறும் மாற்றமொன்றின் விளைவான தாக்கத்தால் .. அல்லது நமது சூழற் சீரழிப்பால், அணுவாயுத யுத்தங்களினால் .. அழிந்து போகலாம்... '

மருதம்_25:' எனக்கென்னவென்றால்.. இந்த நீர்க்குமிழி, உயிர்களை உள்ளடக்கிய நீர்க்குமிழ், உயிர்த்துடிப்புடன் கூடியதொரு கருப்பையாகத்தான் தெரிகிறது. கவிதையொன்று கூறட்டுமா?'

முல்லை_23:' கூறும்..'

மருதம்_25:'

வெளியில் விரையுமொரு
கருப்பை!


முல்லை_23: 'நல்லதொரு விடுக(வி)தை..'

பானுமதிமருதம்_25: 'இந்தச் சின்னஞ்சிறு கோளொன்றில் வளையவரும் உயிரினங்களை நிணைத்தால் சில நேரங்களில் பரிதாபத்துடன் கூடியதொரு உணர்வு பொங்கி வழிகிறது. வெளியில். விரையுமிந்தக் குமிழிக்கு வெளியே நீண்டு கிடக்கிறது ஒளியாண்டுத் தனிமை. இந்த ஒளியாண்டுத் தனிமைக்குள் மூழ்கிக் கிடக்குமிந்த உயிரினங்களைச் சுற்றி இருப்பதெல்லாம் வெறுமை கவிந்த தனிமைதான். இந்தத் தனிமையை நம்மால் உணர முடியவில்லை. உணர மட்டும் முடிந்திருக்குமென்றால் .. இந்தப் பூவுலகினை இனம, மதம் மொழி, வர்க்க மட்டும் சாதிப்பிளவுகளென்று பிரித்துச்  சீரழித்துக் கொண்டிருப்போமா? '

முல்லை_23:' பானுமதி! நன்றாகக் கூறினீர். மிகவும் ஆழமானதொரு கூற்று. சிந்திக்க வைக்குமொரு கூற்று. ஏன் இருப்பின் அர்த்தம் பற்றி எம்மால் உணர முடியவில்லை. அதனால்தானே இந்தப் பூவுலகின் எழிலை மாந்திட முடியாமல், மானுடராகிய நாம் பிளவுண்டு கிடந்து முட்டி மோதிக் கொண்டிருக்கின்றோம். ஏன்?...'

மருதம்_25:' ஏன்? ஏன்?'

( மின்னுரையாடல் மேலும் தொடரும் )


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner