Toronto, Canada May 09, 2009:
சிறிலங்காவில் படுகொலையை நிறுத்தவும் இன அழிப்பை நிறுத்தவும் நகரெங்கும்
பேரணியும் நடைபவனியும்:
சிறிலங்காவில்
படுகொலையை நிறுத்தவும் இன அழிப்பை நிறுத்தவும் பல்சமூக அமைப்புக்கள் இணைந்து
நடத்தும் பேரணியும், நடைபவனியும்...
அனைத்துலக மேற்பார்வையில் இடம்பெற்ற யுத்தநிறுத்ததை உடன்படிக்கையை
ஒரு தலைப்பட்சமாக கைவிட்டுவிட்டு, சிறுபான்மைத் தமிழருக்கெதிரான போரில் அப்பாவிப்
பொதுமக்களை, ஸ்ரீ லங்கா அரசு கொன்று குவித்து வருகின்ற நிலையில்… ஜனவரி மாதம் முதல்
6000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், 10,000க்கு அதிகமானோர்
படுகாயப்படுத்தப்பட்டும், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்க்கப்பட்டும் உள்ள நிலையில்…
அனைத்துலக சமூகமும் இப்படுகொலைகளை நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளாத நிலையில்…
சிறிலங்காவில் இடம்பெறுகின்ற தமிழினப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரியும்… கனடிய
மக்கள் தமிழின அழிப்பைப் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள் என்பதை கனேடிய அரசுக்கு
தெரிவிக்கும் முகமாகவும்… உண்மைக்காகவும், நீதிக்காவும், தன்னாட்சி உரிமைக்காகவும்
நிமிர்ந்து நிற்கும் பல்சமூகத்தின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டும் முகமாகவும்…
Canadian Federation of students – Ontario, Canadian
Peace Alliance, Toronto Coalition to stop the war
ஆகிய அமைப்புகள் முன்னெடுக்கும் இந்த பேரணி மற்றும் நடைபவனிப் போராட்டத்தில்
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழ் சமூகமும், கனடியத் தமிழ் மாணவர்
சமூகமும் கேட்டுக் கொள்ளுகின்றனர். மேலதிக விவரங்களுக்கோ, ஆதரவளிப்பதற்கோ Canadian
Peace Alliance ஐத் தொடர்புகொள்ளவும்…
தொலைபேசி: 416-588-5555
மின்னஞ்சல்: cpa@web.ca
இணையம்: www.acp-cpa.ca
தகவல்: http://www.cmr.fm/ |