பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்! |
அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- தாஜ் -
சு.ரா.வை
தமிழ் இலக்கியம் இழந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு மாதிரியே வானம்
கொட்டிய ஓர் மழை நாளில்தான் அந்த நல்ல மனிதரை நாமும் இழந்தோம். தொடர்ந்து எதிர்
கொள்ளும் அக்டோபர்-15ம் தினமெல்லாம் மனதின் சலனங்கள் கொஞ்சமல்ல! அவர் குறித்த என்
நினைவுகள் அத்தனையும் அழியாமல் அப்படியே இருப்பது ஆச்சரியம். இந்த மூன்று
ஆண்டுகளில் அவரது இறப்பின் இழப்பை முன் வைத்து வந்த நியாயமான அஞ்சலிகளுக்கு ஒப்ப
நேர் எதிர் முரண் கொண்ட அர்ச்சனைகளுக்கும் நம் இலக்கியப் பரப்பில் குறைவே இல்லை.
சு.ரா.வின் நினைவை மனதில் தாங்கி தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருக்கும்
நெஞ்சங்கள் இந்த அர்ச்சனைகளில் கலக்கம் கொள்ள ஒன்றுமில்லை. காலங்காலமாக இந்த
மண்ணில் தன் வெளிச்சத்தைக் காட்டிய எந்த கலைஞர்களும் தங்களது சமகால சகாக்களால்
இப்படியான கறையினைக் கொண்டவர்கள்தான்.
என்னுடைய தேடலில் அவரை இலக்கிய வாதியாகத்தான் கண்டைந்தேன். ஜே.ஜே.சில குறிப்புகள்
வழியாகத்தான் அவர் கிடை த்தார். அன்றையக்குத்தொட்டு அவரது இலக்கிய பார்வைகளோடு,
அவரின் சமூக அரசியல் சஞ்சாரங்களையும் கவனம் கொண் டவன் நான். என் கவனத்தில், அவரது
நடைப்பிசகை பெரிதாய் கண்டது இல்லை. இப்படி ஒரு கவனயீர்ப்போடு இன்றைய முன்னணி நவீன
இலக்கியவாதிகளில் எவர் ஒருவரையும் நான் பின் தொடரக்கூடுமானால்... அது பத்து
மாதம்கூட தாங்காது, கிழித்துக் கொண்டு வெளியே வந்து தங்களது கோரத்தைக் காட்டி
மிரளவைத்திருப்பார்கள்.
நவீன இலக்கியம்தான் சு.ரா.வின் மையம். சமூகமும் அரசியலும் அவருக்கு அடுத்தடுத்த
புள்ளிகள்தான். என்றாலும் அவைகள் குறித்த அவரது பார்வையை நம் முன்னணி
படைப்பாளிகளைவிட தெளிவானது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை தீர்க்கமாக
பதிவும் செய்திருக்கிறார் ஒன்றைத்தவிர! பெரியாரைப் பற்றிய அவரது உயர்வான
மதிப்பீடுகளை கசியவிட்டிருந்தார் யென்றாலும் அழுத்தமானப் பதிவென்று ஒன்றையும்
செய்தார் இல்லை.
சென்ற நூற்றாண்டில் இந்த மண்ணின் புரட்சிக்காரராக பெரியார் இயங்கினார் என்கிற
நிஜத்தையும் தாண்டி, நம் தமிழ் மண்ணில் எந்த நூற்றாண்டும் காணாதப்
புரட்சிக்காரராகவே அவர் சரித்திரத்தின் பக்கங்களில் கணிக்கவும்படுகிறார்.
நெருக்கத்தில் அல்லது சககாலத்தில் வாழ்ந்த இத்தனைப்பெரிய ஆகிருதியைக் குறித்து,
சு.ரா. தீர பதிவு செய்யாதுவிட்ட காரணம் விளங்கவே இல்லை!
மடாதிபதிகள், சாமியார்கள், ஆன்மீகச் செம்மல்கள் குறித்தெல்லாம் அவருக்கு நல்ல
அபிப்ராயங்கள் இருந்ததில்லை. அது போலவே ரோமத்தைப் பிளக்கும் அவர்களது தத்துவங்கள்
மீதும் அவருக்கு ஈர்ப்பு இருந்ததில்லை. தவிர, காலத்திற்கு ஒவ்வாத பழமைகளின்
நெறிபேசும் சூத்திரங்களின் மீதும் அவர் விழுந்துப் புரண்டதில்லை. அவைகளில் தனது
ஒட்டாதத் தனத்தை பதிவு களில் அவர் கசியவிட்ட விதங்கள் நினைவுகூறத்
தக்கதென்றாலும், இவைகள் குறித்தும் பதிவிலேற்றி நீட்டி முழங்கியதில்லை. இதையொட்டி
யோசிக்கிற போது..... பெரியார் குறித்த அவரது பதிவின்னை நிச்சயம் இந்தவகைச்
சேர்ந்ததல்ல என்பது மட்டும் நிஜம்.
1992 - 94ம் ஆண்டு வாக்கில் 'கேப்பியார்' என்ற இதழில் வாசர்களின் கேள்விக்கு அவர்
பதில் அளித்திருப்பதை 'விரிவும் ஆழ மும் தேடி' என்கிற அவரது கட்டுரைத் தொகுப்பின்
வழியே காணமுடிகிறது. அவைகளில் சில கேள்விகளையும் அதற்கான அவ ரின் பதில்களையும்
அவரது இந்த நான்காம் நினைவு நாளில் என் அஞ்சலியாக வாசகர்களின் பார்வைக்கு
வைக்கிறேன். புதி தாக இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்ட இளம் வாசகர்களுக்கு
இந்தக் கேள்வி பதில் பெரிய தெளிவைதரும் என்றும் நினைக்கிறேன்.
****
ஒரு நாவல் எப்படி எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
சகல படைப்புகளும் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவை. படைப்பு என்பது அதற்கு முன்
நிகழாத விதத்தில் அப்போது நிகழ் வது. படைப்பாளி சர்வ சுதந்திரம் கொண்டவன்.
வரையறைகள், இலக்கணங்கள் ஆகியவற்றின் பிரக்ஞை இல்லாதவன். நாவல் என்ற சொல்லுக்கே
புதுமை என்று பொருள். ஒரு நாவலை நாம் படிக்கும்போது, உண்மையிலேயே அது
புதுமையானதுதானா என்ற கேள்விக்குச் சரிவர அது பதில் சொல்ல வேண்டும். நேற்று
வரையிலும் வெளிவந்திருக்கும் நாவல்களின் சொச்சம், நிழல் கள், தோரணைகள், நேற்றையப்
பழமையின் தூசி அதில் படிந்து கிடக்கும் என்றால் அது படைப்பு அல்ல. புதுமை அல்ல;
பழமை. நாவல் பிறக்கும்போது புதுமையாகப் பிறக்கிறது. காலத்தில் வயதாக மறுத்து
இளமையைத் தக்கவைத்துக்கொள்கிறது.
நாவல் கதை அல்ல. வாழ்க்கையைப் பற்றிய விமர்சனம். விமர்சகனின் விமர்சனம் அல்ல;
கலைஞனின் விமர்சனம்.விமர்சகனின் விமர்சனம் வாழ்க்கையின் ஒரு பகுதியை, ஒரு நாவலை,
ஒரு ஓவியத்தை இசையின் ஒரு தொகுப்பை, சிற்பங்களின் சில ஆக்க ங்களைப் பற்றிப்
பேசுகிறது. கலைஞனின் விமர்சனம் வாழ்க்கையின் முழுமையை கணக்கிலெடுத்துக்
கொள்கிறது. சொல்லப் பட் டுத் தேய்ந்து, பழமையாகிப் போன உண்மைகளை உதறிவிட்டு
வாழ்க்கையின் புறக்கோலத்தில் தெருநாய் போல் புரள்வதை வெறுத்துச் சாரங்களைத்
தேடிக்கொண்டு செல்கிறது. காட்சிகளும் கோலங்களும் நிறையவே இருக்கின்றன எல்லா
நாவல்களி லும். ஆனால் அந்தக் காட்சிகளும் கோலங்களும் நாவலாசிரியருக்கே உரித்தான
பார்வையைச் சார்ந்து தேர்வு செய்யப்படவில் லை என்றால் அந்த நாவலாசிரியன்
பிரக்ஞையற்ற பிரதிபலிப்பாளன். நம் மொழியில் நாம் நாவலாசிரியர் என்று கூறும்
பலரும் பிரக்ஞையற்ற பிரதிபலிப்பாளர்கள்தான். அவர்கள் படைக்கவில்லை; பழக்கத்தால்
மாதிரிகளை ஜோடனை செய்கிறார்கள். ஒன்று கனவுகள் சார்ந்து அந்தக் கோலங்கள் ஜோடனை
செய்யப்பட்டிருக்கும். அல்லது யதார்த்தங்கள் சார்ந்து அந்தக் காட்சிகள் பிரதி
பலிக்கப்பட்டிருக்கும். கலைஞனோ யதார்த்தத்தை ஊடுருவிப் புதிய உண்மைகளைத்
தொகுத்துக்கொண்டுபோகிறான். நாவலாசிரி யனின் புதிய உண்மைகளில் நம் மனம்
விரிவுரைகளைத் தழுவுகிறது. அப்போது வாசகன், தன்னால் எளிதில் விவரித்துக் கூற
முடியாத பேருவகை அடைகிறான்.
நாவலாசிரியன் தொகுக்கும் உண்மையின் துகள்களில் அநேகம் நாம் அறிந்தவையே. ஆனால்
நாம் அவற்றை அறிந்திருக்கி றோம் என்பதை அறியாமல் இருக்கிறோம். நாம் அறிந்து அது
பற்றிய பிரக்ஞையில்லாமல் இருப்பவற்றை நம் பிரக்ஞை நிலை க்குக் கொண்டுவருகிறான்
கலைஞன். நம் மனதில் நம்மால் எடுக்கப்பட்டுக் கழுவப்படாமல் கிடக்கும் புகைப்
படங்களின் இருள் தொகுப்பை கலைஞன் கழுவி வெளிச்சத்தின் கவனத்திற்குக்
கொண்டுவருகிறான். இதன் மூலம் நம்மை அறிந்துகொள்ளவும் கலைஞன் துணை செய்கிறான்.
நாவலைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகன் பெரிய நாவல்களை அவசியம் படிக்க
வேண்டும். நாவல்கள் பல கோடி. பெரிய நாவல்கள் ஒருசில. தமிழ் மட்டுமே
அறிந்திருக்கும் வாசகன்கூட ஐந்தாறு பெரிய நாவல்களைத் தமிழ் மொழிபெயர்ப்புக ளில்
இன்று படித்துவிட முடியும். இந்த நாவல்கள் அந்த வாசகனுக்கு உணர்த்தும்
பேரனுபவத்தை எவ்வளவுதான் விரித்துச் சொன்னாலும் என்னால் உருவாக்க முடியாது.
அனுபவங்களுக்கும் கருத்துகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது.
****
ஒரு சிறுகதை எவ்வாறெல்லாம் அமைந்திருக்க வேண்டும்?
படைப்புருவங்கள் சார்ந்த இலக்கணங்கள் வளர்ச்சியை முடக்கக் கூடியவை. உருவங்கள்
சார்ந்த உணர்வுகளே சிறந்த படைப் பின் கட்டுமானத்தை தீர்மானிக்கின்றன. இலக்கணம்
காலத்தினால் இறுகக்கூடியது. உணர்வுகள் காலத்திற்கேற்ப மாறக்கூடியவை.
சிறுகதை என்பது வாழ்க்கையில் ஒரு கீற்று. வாழ்க்கை என்ற பெரும்
நீர்த்தேக்கத்திலிருந்து பீறிட்டு வெளியே வரும் சிற்றோ டை. அதில் வாழ்க்கையைப்
பிரதிப்பலிக்கும் பரப்பு குறைவு. அனுபவ சாரங்களின் ஆழம் மிக அதிகம்.
காலந்தோறும் சிறுகதைகள் இங்கும் பிற மொழிகளிலும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால்
இந்த மாற்றங்களிலும் மாறாமல் இருக்கும் அவற்றின் குணங்கள்தான் சிறுகதை வடிவத்தைத்
தீர்மானிக்கின்றன. அவை...
1. ஒற்றை இழை முறுகி வரும் வீச்சு.
2. புதிய கோணத்தின் மூலம் ஒரு புதிய பரிமாணம் வெளிப்படுதல்.
3. நினைவில் தங்கி நிற்கும் அதன் ஆற்றல்.
4. கதை முடிந்த இடத்தில் அனுபவம் முடியாமல் விரிவு பெறும் குணம்.
சிறுகதை எழுத விரும்பும் ஆரம்ப எழுத்தாளர் சில ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
சிறுகதை எழுதுவது சுலபம் என்ற எண்ணத்தை முதலில் கிள்ளி எறிந்துவிட்டுக் கடுமையாக
உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழ் மொழி தெரிவதால் சிறு கதை எழுதிவிடலாம்
என்பது இல்லை. மொழி அறிவு வேறு, படைப்பு மொழி வேறு.
உலகத் தரத்திற்கு ஈடான கதைகள் தமிழில் உள்ளன. புதுமைப்பித்தன, மௌனி,
பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரி சாமி, தி.ஜானகி ராமன் போன்றவர்கள்
மிகச் சிறந்த சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களுடைய சிறந்த சிறுகதை
களை மீண்டும் படிப்பதைப் போன்ற பயிற்சி வேறு எதுவும் கிடையாது.
சிறந்த சிறுகதைகள் தரும் அனுபத்திற்குள் திளைக்கும்போது சிறுகதை சார்ந்த
பிரக்ஞையை மனம் உணரும். இந்த உணர்வுதான் படைப்பிற்கு ஆதாரம்.
****
இலக்கியத்தின் தரத்தை அளவிடும் அளவுகோல் எது?
இலக்கியத்தின் தரத்தை அளவிடும் அளவுகோலை மனமயக்கங்கள் இன்றி ஒரு வாசகன்
உருவாக்கிக் கொள்வது சற்றுக் கடின மானது. அவன் பெரிய படைப்புகளை ஆழ்ந்து கற்பதின்
மூலம் பேரனுபவங்களைப் பெற வேண்டும். இவ்வனுபவங்களின் சாராம்சம் மற்றொரு புதிய
படைப்பின் தரத்தை மதிப்பிட உதவுகிறது.
சிறந்த படைப்புகளுக்கு ஒரு சில குணங்கள் உள்ளன. அவை தோன்றிய காலங்களிலும்
படிக்கப்படுகின்றன. பின்வரும் காலங் களிலும் படிக்கப்படுகின்றன. கால
மாற்றத்தினால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக்கோலங்கள்
மாறுகின்றன. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. இவ்வாறு மாறிவரும் கோலங்கள் ஒருபுறம்
இருக்க, மனிதனின் அடிப்படைக் குணங்கள் பெரிய அளவில் மாற்றம் கொள்ளாமல்
இருக்கின்றன. பெரிய படைப்புகள் அவை தோன்றிய காலங்களின் புறகோலங்களைத் தத்ரூபமாகச்
சித்தரிக்கின்றன என்றாலும் அவற்றின் உயிர், மாறிவரும் கோலங்களில் சிக்கிக்
கிடக்கவில்லை. மனித வாழ்க்கை யின் அடிப்படையையே அவை ஊடுருவுகின்றன. இந்த ஊடுருவல்
தரும் உண்மை உணர்வையே ஆழம் என்கிறோம்.
ஒரு சிறந்த படைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை படிக்க முடியும். முதல் வாசிப்பில்
பெறாத அர்த்தங்களை மறு வாசிப்பில் பெற முடியும். ஒரு சிறந்த படைப்பை ஒரு வாசகன்
தன் இளமைப் பருவத்தில் படிக்கும் போது அது தரும் அனுபவம் ஒன்று. அவனே தன்
முதுமைப் பருவத்தில் அதைப் படிக்கும்போது பெறும் அனுபவம் மற்றொன்று. ஒரு சிறந்த
படைப்பு பல முகங் கள் கொண்டது.
எப்போதும் ஒரு புனைவு ஓர் ஊர் சார்ந்தோ, ஒரு மக்கள் கூட்டம் சார்ந்தோ, ஒரு
வாழ்க்கை முறை சார்ந்தோதான் உருவாக முடியும். ஆனால் அது படைப்பாக நிமிரும்போது
ஊரைத் தாண்டியும் மொழியைத் தாண்டியும் குறிப்பிட்ட வாழ்க்கை முறை யைத் தாண்டியும்
சுய வாழ்வு கொள்ள வேண்டும். படைப்புத் தோன்றிய காலம், இடம், வாழ்க்கை முறை
இவற்றுடன் நேர்த் தொடர்பு இல்லாத ஒரு வாசகனும் அப்படைப்பின் மூலம் அணுபவம் பெற
வேண்டும். அப்போதுதான் படைப்பு பொதுமை பெறுகிறது. பொதுமை பெற்று மனித மனங்களைப்
பாதிக்கும் ஆற்றலையே கலைத்திறன் என்கிறோம்.
வாழ்க்கையின் போதாமை சார்ந்த துக்கம் ஒரு படைப்பில் வெளிப்படையாகவோ, மறைந்தோ
ஊடுருவி இருக்கும். மனித வாழ் க்கையின் செம்மை சார்ந்த ஏக்கங்களை கொண்டவன்
படைப்பாளி. மனிதனை முன்னிலைப்படுத்தி மனித வாழ்க்கையை மேன் மைப்படுத்துவது பற்றிய
விசாரணைகள் கொண்டவன் அவன். இந்த விசாரணைக் குணம்தான் படைப்பின் மீது நம்மை ஈர்ப்
புக்கொள்ள வைக்கிறது. படைப்பில் வெளிப்படும் மொழி முக்கியமானது. பொதுமொழியின்
பழமையையும், பயன்பாட்டில் தேய் ந்துபோன அதன் சரிவையும், தவறாகப் பயன்படுத்தியதன்
மூலம் நிகழ்ந்த கூர் மழுங்கலையும் ஒரு படைப்பு நிமிர்த்தி மொழி யை மீண்டும்
நுட்பத்தின் தளத்தில் புத்தாக்கம் செய்கிறது. படைப்பின் சகல கூறுகளும் புதுமையாக
இருப்பதாலேயே அதை படைப்பு என்கிறோம்.
பெரிய படைப்புகளைப் படித்து அனுபவம் பெறாமலேயே விமர்சனப் புத்தகங்கள் மூலம்
தரத்தை விளக்கும் சொற்களை மனப் பாடம் செய்து கொள்ளலாம். இந்த மனப்பாடம் புதிய
படைப்பை மதிப்பிட உதவாது. வாசகன் தன் வாசிப்பின் மூலம் அனுப வம் பெற வேண்டும்.
அவனுடைய அனுபவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இலக்கியத்தின் அரிய குணங்கள்.
****
ஒரு நல்ல விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு நல்ல விமர்சனம் நடுநிலையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுதான் அடிப்படை.
நடுநிலையில் நிற்க வேண்டும் என்று
சொல்வது சுலபம். பின்பற்றுவது கடினம். ஆகவே ஒரு விமர்சனம் நடுநிலையில்
நிற்பதற்கான ஆகக் கூடிய முயற்சியை மேற் கொண்டதாகவேனும் இருக்க வேண்டும் என்று
என்னளவில் நான் அளவுகோல் கொண்டிருக்கிறேன். இந்த அளவுகோல்படி தேறுகின்றவைகூட
மிகக் கொஞ்சம். அதிகமும் விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள்.
கவிதை, சிறுகதை, நாவல், கதை, இலக்கிய விமர்சனம் என்று படைப்பில் பல வகைகள்.
இதற்கு மேல் ஆராய்ச்சி, அறிவியல் நூல்கள். விமர்சகனுக்குத் தான் மதிப்பிடும்
நூலின் வகை பற்றி ஆழ்ந்த அறிவு இருக்க வேண்டும். படைப்பை மதிப்பிட அறிவு க்குமேல்
அனுபவமும், கலைப் பார்வையும், உண்மை உணர்ச்சியும் இருக்க வேண்டும். ஒரு துறை
சார்ந்த தேர்ச்சியை வைத் துக் கொண்டு பிறிதொரு துறை சார்ந்த நூலை மதிப்பிட
முடியாது. பயிற்சியின்மை, பயிற்சியற்றவர்களுக்குத் தெரியாது. பயிற்சி
பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.
விமர்சகன் மனித வாழ்க்கையைப் பற்றி ஆழமான சிந்தனைகள் கொண்டவன். ஆகவே
வேடிக்கைகளின் பல உருவங்களையும் ஒதுக்கி விட்டுத் தீவிரமான படைப்புகள் பற்றி
மட்டுமே பேசுகிறான். படைப்பாளி, தன் வாழ்க்கைக் கண்ணோட்டத்தைத் தன் அனுபவ
சாரங்களை முன் வைத்து உணர்த்துகின்றான் என்றால், விமர்சகன், படைப்பை முன்
வைத்துத் தன் வாழ்க்கைக் கண் ணோட்டத்தை வெளிப்படுத்துகிறான். மனிதனை அடிப்படைச்
சக்தியாக ஏற்றுத்தான் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முடியும். அதனால்
படைப்பாளியும் சரி, விமர்சகனும் சரி மனிதனின் செயல்பாடுகள் குறித்தும், அவனது அக
புற உலகங்கள் குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டவர்கள்.
இக்குணங்கள் கொண்ட விமர்சகன் தமிழில் இன்று வரையிலும் தோன்றவில்லை, நாளையே அவன்
தோன்றக்கூடாது என்பதும் இல்லை.
****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|