| 
அ.முத்துலிங்கத்தின் இரு சிறுகதைகள்!ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து | 
லூசியா
 
 ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து
 
 
  ஒரு பேச்சுக்கு இந்த உலகத்தில் நூறு கொசுக்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால் 
அதிலே 50 பெண் கொசுக்களும், 50 ஆண் கொசுக்களும் இருக்கும். ஆண் கொசு கடிக்காது, 
பெண் கொசுதான் கடிக்கும். கடிக்கும் 50 பெண் கொசுக்களில் 30 கொசுக்கள் மலேரியா 
கிருமியை காவும் என்றால் அதிலே ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த கொசுக்கள் 24 ஆக 
இருக்கும். அந்த 24 கொசுக்களில் இரண்டு சியாரா லியோன் என்ற நாட்டைச் சேர்ந்தவை 
என்று வைத்துக் கொள்வோம். 
 அந்த இரண்டில் ஒரு கொசு என்னைக் கடித்துவிட்டது.
 
 அதுதான் என்னுடைய முதல் மலேரியாக் காய்ச்சல். துரதிர்ஷ்டம் என்னவென்றால் நான் 
ஆப்பிரிக்கக் காட்டில் இருந்த ஒரு வீட்டில் தனியாக அகப்பட்டுக் கொண்டதுதான். 
என்னுடைய மனைவியும் பிள்ளைகளும் விடுமுறையில் போய்விட்டார்கள். என்னைப் பார்க்க ஒரு 
வேலைக்காரன்
மட்டுமே இருந்தான். அவனுடைய பெயர் ஸாண்டி. கறுத்த மேனி. கன்னங்களில் சாய்வாக இரண்டு 
கோடுகள் கிழித்திருக்கும். அவனுடைய 
இனக்குழுவின் அடையாளம். உயரமாக வாட்டசாட்டமாக இருந்த அவன் ஓர் ஆபத்து என்றால் 
என்னைத் தூக்கிக்கொண்டு 10 மைல் 
நடக்கக்கூடியவன். ஒரு தகப்பனைப்போல, ஒரு மகனைப்போல அவன் என்னருகே நின்று என்னைக் 
கவனித்தான்.
 
 அந்த இரவு வீட்டிலே இருந்த அத்தனை போர்வைகளை போர்த்திய பிறகும் தூக்கி தூக்கிப் 
போட்டது. அடுத்த நாள் காலை மட்டும் 
காத்திருக்காமல் என்னைத் தனியாக விட்டுவிட்டு அவன் நடந்து சென்று மருத்துவரை 
அழைத்து வந்தான். அவர் ஊசி போட்டதும், மருந்து தந்ததும் 
அரை ஞாபகமாக என் நினைவில் இருந்தது. ஸாண்டிக்கு வெள்ளைக்கார மருந்தில் நம்பிக்கை 
கிடையாது. தன் கணக்குக்கு •பீவர் மரத்து 
பட்டையையும் அவித்து அந்த நீரைப் பருக்கினான். அது உடம்பில் தங்கவில்லை. பச்சை 
நாடாவாக வாந்தி வெளியே வந்து விழுந்தது. எப்பொழுது 
கண் விழித்தாலும் ஸாண்டி என் முன்னே என்னைப் பார்த்தபடி நின்றான்.
 
 அப்படி ஒருமுறை கண் விழித்தபோது எனக்கு பயம் பிடித்துக்கொண்டது. எனக்கு ஏதாவது 
ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம். ஒரு 
பேப்பரில் என்னுடைய முகவரியை எழுதி அப்படி ஏதாவது ஆகிப்போனால் தந்தி கொடுப்பாயா 
என்று கேட்டேன். தலையை ஆட்டினான். எட்டு மைல் 
தூரமுள்ள அஞ்சல் நிலையத்துக்கு அவன் நடந்து போகவேண்டும். சிறிது நேரம் கழித்து அவன் 
என் காலைச் சுரண்டினான். ' மாஸ்ட, தந்தியடிக்க 
காசு' என்றான். எனக்கு கிலி பிடித்தது. அப்பொழுதே அடித்தாலும் அடித்துவிடுவான் 
போலப்பட்டது. என் பணப்பையில் இருந்த அவ்வளவு காசையும் 
அவன் கையில் வைத்தேன். அப்படியே நித்திரையாகிவிட்டேன்.
 
 மூன்றாவது நாள் காலை கண் விழித்தபோதும் அவன் என் முன்னே சிரித்தபடி நின்றான். அவன் 
கையில் சூப் கோப்பை இருந்தது. அவனைப் 
பார்த்தபோது அவன் கன்னத்தில் தள்ளிக்கொண்டு நிற்கும் வடு தெரியவில்லை. சப்பையான 
மூக்கும் அகலமான முகமும் தெரியவில்லை. அவன் 
நெஞ்சிலே இருந்து தொடங்கும் வைரமான தொடைகளும் என் கண்ணுக்கு படவில்லை. ஒரு 
தேவதூதன்தான் தெரிந்தான். அவ்வளவு சூப்பையும் 
ஒரு சொட்டு விடாமல் நான் குடித்தேன். கொஞ்சம் புளிப்பும், ஆப்பிரிக்க உறைப்பும் 
கலந்து அது சுவையாக இருந்தது.
 
 இரண்டு மூன்று நாட்கள் இப்படி ஓடின. நான் படுக்கையில் இருந்தபடி யன்னல் வழியாக 
பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு விநோதமான காட்சி 
தென்பட்டது. ஆறடி உயரமான ஸாண்டி ஒரு சிறு பெண்ணைத் துரத்திக்கொண்டு போனான். 
அவளுக்கு 12, 13 வயதுதான் இருக்கும். முதுகிலே ஒரு 
குழந்தையைக் கட்டியிருந்தாள். அது கழுத்து முறிந்ததுபோல ஒரு பக்கத்துக்கு தலையை 
மடித்து தூங்கிக்கொண்டிருந்தது. ஸாண்டியின் முகத்தில் 
கோபம் படபடத்தது. வீட்டின் எல்லை வரைக்கும் அவளைக் கலைத்து அவள் போய்விட்டாளா என்று 
நிச்சயப் படுத்திக்கொண்டு திரும்பினான்.
மத்தியானம் அவன் சாப்பாடு பரிமாறியபோது என்னப்பா விசயம் என்று விசாரித்தேன். அவன் 
சொன்ன விருத்தாந்தம் இதுதான்.
 
 அந்தச் சிறுமியின் பெயர் கதீஜா. எங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள ஒரு 
வீட்டில் அவள் வேலை செய்தாள். அவளுடைய எசமானும் 
எசமானியும் இளம் தம்பதியர். இருவருமே வேலைக்குப் போனார்கள். அவர்களுடைய 
குழந்தையத்தான் அவள் முதுகிலே கட்டியபடி திரிந்தாள். 
பிள்ளை பார்ப்பதோடு சமையல் வேலையையும் அவள் ஒருத்தியாகவே கவனித்தாளாம்.
 
 'அது சரி, எதற்காக அவளை அந்த விரட்டு விரட்டினாய்?'
 
 அவன் முகம் ஆத்திரத்தால் சிவந்திருக்கவேண்டும், ஆனால் கறுப்பு நிறம்தான் இன்னும் 
கூடியது. கோபத்தில் நாக்குளறத் தொடங்கியது. எங்கள் 
வீட்டு வளவில் எட்டுக்கு எட்டு வலையடித்து கூண்டு செய்து அதற்குள் இரண்டு காட்டு 
முயல்களை வளர்த்தோம். அதைப் பார்க்க வந்திருக்கிறாள்
அவள் ஏதோ பாரதூரமான குற்றம் செய்ததுபோல முகத்தை வைத்துக்கொண்டான். 'நாங்கள் 
வளர்க்கும் முயல்களை அவள் என்ன வந்து பார்ப்பது. 
இது என்ன நியாயம்?'
 
 பக்கத்து வீட்டு கணவனின் பெயர் வூ•ரி. அவர் அணை கட்டும் கம்பனி ஒன்றில் வேலை 
பார்த்தார். இங்கிலாந்தில் படித்து திரும்பிய பொறியியலாளர்.
அவர் மனைவி அமினாட்டா காரியதரிசி படிப்பு படித்தவர். அவரும் கணவர் வேலை பார்க்கும் 
அதே கம்பனி மேலதிகாரியிடம் காரியதரிசியாக 
பணியாற்றினார். அமினாட்டா கொடிபோல மெலிந்து இருப்பார். தலை மொட்டை போட்ட அழகி. 
எந்தக் கொடிய வெய்யில் மழை என்றாலும் 
நீண்ட கறுப்பு ஸ்டொக்கிங்க்ஸ் அணியாமல் அவர் வெளியே புறப்படுவதில்லை. நீளத்துக்கு 
லேஸ் கட்டிய பூட்ஸ் டக்டக் என்று சப்தம் எழுப்பி அவர் 
தூரத்தில் நடந்து வரும்போதே அறிவித்துவிடும்.
 
 அவர்கள் மணமுடித்த காலத்திலிருந்து கதீஜா அங்கே வேலைசெய்தாள். '1000 முயல்கள்' என்ற 
கிராமத்துக்கு போய் அவளைப் பிடித்து
வந்திருந்தார்கள். அதென்ன அப்படி ஒரு பெயர் என்று கேட்டேன். ஆப்பிரிக்க கிராமத்துப் 
பெயர்களுக்கு காரணம் கேட்கக்கூடாது என்றார்கள்.
முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பதுபோல இதுவும் ஒரு கணக்கு என்று 
நினைத்துக்கொண்டேன்.
 
 என் மனைவியும் பிள்ளைகளும் விடுமுறையிலிருந்து திரும்பிய பிறகு நாங்கள் காட்டு 
முயல்களைப் பராமரிப்பதில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டோம். 
முயல்கள் அபாரமாகப் பெருகும் என்று படித்திருந்தேன். ஒரு வருடத்தில் மூன்று தரம் 
குட்டிபோடும். இரண்டு வருடத்தில் குட்டிக்குமேல் குட்டி 
போட்டு எண்ணிக்கை நூறுக்கு மேலே போய்விடும். ஆனால் இந்த முயல்களுக்கு அப்படியான ஒரு 
நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆண் 
அணுகும் போதெல்லாம் பெண் முயல் பைத்தியம் பிடித்ததுபோல முன்னங்காலால் அடித்து 
விரட்டும். அநேகமாக மார்ச் மாதத்தில் இது 
நடைபெறுவதால் லூயி கரோல்கூட தன்னுடைய 'அலிஸின் அற்புத உலகம்' புத்தகத்தில் தேநீரில் 
பைக்கடிகாரத்தை முங்கி எடுக்கும் முயலுக்கு 'மார்ச்
 ஹேர்' என்று பெயர் சூட்டியிருப்பார்.
 
 காட்டு விலங்குகளைப் பற்றி தெரிந்த ஆப்பிரிக்க நண்பர் ஒருவர் வந்தபோது அவை ஏன் 
பெருகவில்லை என்று கேட்டேன். பெண் முயல், ஆணுடைய 
ஆசையை அதிகரிப்பதற்காக அப்படித்தான் அடித்து விரட்டும் என்றார். தன்னுடைய விலையை 
அது எப்பவும் கூட்டியபடியே இருக்குமாம். ஆப்பிரிக்க 
வயலட்டும், ஆப்பிரிக்க முயலும் ஒன்றுதான். திடீரென பெருக ஆரம்பிக்கும், திடீரென 
நிறுத்திக்கொள்ளும் என்றார்.
 
 நாங்கள் முயல்களைப் பார்வையிடும் சமயங்களில் கதீஜா குழந்தையை முதுகில் 
கட்டிக்கொண்டு கண் படும் தூரத்தில் சுற்றிக்கொண்டே நிற்பாள். 
தேடக் கிடைக்காத திரவியம் அங்கே இருக்கிறது என்பதுபோல அவள் கண்கள் மினுங்கும். 
கையசைத்து அவளை எவ்வளவு கூப்பிட்டாலும் கிட்ட 
வரவே மாட்டாள். ஸாண்டி அவளை அப்படி அச்சுறுத்தி வைத்திருந்தான்.
 
 எங்களுக்கு அயல் வீடு என்றால் அது அமினாட்டாவின் வீடுதான். இன்னும் சில வீடுகள் 
தூரமாக இருந்தன. அமினாட்டா எங்கள் வீட்டுக்கு ஏதாவது
கடன் வாங்குவதற்காக அவ்வப்போது வருவாள். சில சமயம் கால் பாதங்களை மறைக்கும் நீண்ட 
அங்கி அணிந்து, பெரிய கவடுகள் எடுத்து வைத்து,
வூ•ரி வருவார். ஏதாவது பழைய ஆங்கில மாத இதழ்கள் கேட்பார். ஆனால் ஒரு போதும் 
இருவரும் சேர்ந்து வந்ததில்லை. எந்தச் சமயத்திலும் 
அவர்கள் தங்கள் பிள்ளையை தூக்கி விளையாடியதையும் நான் காணவில்லை. அது கதீஜாவின் 
முதுகில் நிரந்திரமாக குடியிருந்தது. அவள் போகும் 
இடமெல்லாம் போனது.
 
 ஆனால் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக மேடு பள்ளம் இல்லாமல் அலுப்பு தரும்படி 
இருப்பதில்லை, அல்லவா?
 
 ஒரு சனிக்கிழமை பின்மதியம், மழை பெய்து ஓய்ந்திருந்த சமயம், வூ•ரியும் அவர் 
மனைவியும் திடீரென்று ஒன்றாக வந்து கதவை தட்டினார்கள். 
ஏதோ விவகாரமாக இருக்கவேண்டும் என்று உள்மனது பதைத்தது. அமினாட்டா அன்றைக்கு 
உடம்பைவிட்டு சற்று விரிந்திருந்த ஆடம்பரமான 
உடையுடுத்தி எங்கோ புறப்பட்டதுபோல காட்சியளித்தார். நான் உள்ளே அழைத்ததும் இருவரும் 
வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்பொழுதுதான் 
பார்த்தேன், இவர்களுக்கு பின்னால் கதீஜாவும் நின்றாள். வழக்கம்போல குழந்தை அவள் 
முதுகிலே தூங்கியது. அவளும் உள்ளே வந்து, கால்களை 
மாறி மாறி தூக்கி வைத்து மனதுக்குள் ஓடும் ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தாள்.
 
 மூன்றாம் ஆள் ஒட்டுக் கேட்கமுடியாத ரகஸ்யக் குரலில் அமினாட்டா ஏதோ வூ•ரியிடம் 
சொன்னார். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் 
கடிகாரத்தையே பார்த்தபடி இருந்தவர், ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் 'உங்களுக்கு 
தெரியாமல் பல காரியங்கள் நடந்துவிடுகின்றன' என்றார். 
'என்ன விசயம், சொல்லுங்கள்?' என்றேன்.
 
 அவர் கதீஜாவை சுட்டிக்காட்டி 'இவள் இப்போது கர்ப்பம்' என்றார். நான் திகைத்துப்போய் 
அந்தச் சிறுபெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு பொருட்டாகவே எங்களை மதிக்காமல் இரண்டு பக்கமும் தலையை வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள். 
அமினாட்டா மேலும் நல்லாய் பின்னால் 
சாய்ந்துகொண்டு ஸ்டொக்கிங்ஸ் அணிந்த தன்னுடைய நீண்ட கால்களை மடிக்காமல் நீளத்துக்கு 
நீட்டி உட்கார்ந்தார். அவருடைய ஆயத்தத்தைப் 
பார்த்தால் அன்று முழுக்க அங்கே தங்குவதற்கு தீர்மானித்து வந்தவர்போல இருந்தது.
 
 'இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?'
 
 'ஸாண்டிதான் இதற்கு காரணம். உங்களிடம் வழக்கை தீர்த்துவைக்கும்படி கேட்க வந்தோம்.'
 
 இப்படித்தான் நான் ஆப்பிரிக்காவில் பஞ்சாயத்து தலைவர் உத்தியோகம் பார்க்கும்படியான 
நிலைமை ஏற்பட்டது.
 
 பஞ்சாயத்துக்கள் எப்படி இயங்குகின்றன என்பது எனக்கு தெரியாது. ஒரு பஞ்சாயத்தை 
நேரிலே பார்த்த அனுபவமும் இல்லை. 'எத்தனை தமிழ் 
சினிமா பார்த்திருக்கிறேன், எப்படியும் சமாளித்துவிடலாம். இது தினசரி 
கிடைக்கக்கூடிய வாய்ப்பா, என்ன?' என்று நினைத்தேன். வழக்கு என்ற 
வார்த்தை காதில் விழுந்ததும் போட்டது போட்டபடியே மனைவியும் வந்து எங்களுடன் கலந்து 
கொண்டார். நாலு அங்கத்தவர், ஒரு வாதி, ஒரு 
பிரதிவாதி.
 
 ஸாண்டியை கூப்பிட்டதும் அவன் ஆடி அசைந்து இரண்டடி தூரத்தை மூன்று நிமிடத்தில் 
கடந்து வந்து சேர்ந்தான். எதற்கு இவர்கள் 
கூடியிருக்கிறார்கள், என்னை எதற்காக அழைக்கிறார்கள் என்ற ஒருவித குழப்பமோ, அச்சமோ, 
வியப்புக் குறியோ அவன் முகத்தில் கிடையாது.
 
 கதீஜாவைக் காட்டி 'இந்தப் பெண் கர்ப்பம் என்று இவர்கள் கூறுகிறார்களே, உண்மையா? 
என்றேன்.
 
 'எனக்கு எப்படி தெரியும்?' என்றான். என்னுடைய ஆரம்பக் கேள்வியே பிழை.
 
 'நீதான் காரணம் என்று சொல்கிறார்களே?'
 
 'அதுபற்றி நிச்சயமாக எதுவும் சொல்லமுடியாது.'
 
 'நீ அவளுடன் எப்பவாவது பேசிப் பழகி இருக்கிறாயா?'
 
 'இல்லை.'
 
 'அவளுடன் உறவு கொண்டிருக்கிறாயா?'
 
 'அப்படித்தான் நினைக்கிறேன்.'
 
 'எத்தனை தடவை?' இது அவசியமில்லாத கேள்வி, ஆனால் மனித ஆர்வத்தை யார் தடுக்க 
முடியும்?
 
 'கணக்கு வைக்கவில்லை. பிடித்த தடவை எல்லாம்.'
 
 'அது என்ன பிடித்த தடவை எல்லாம்?'
 
 'மாஸ்ட, இவள் முயல் பார்க்க அடிக்கடி வருவாள். நான் துரத்துவேன். தப்பி 
ஓடிவிடுவாள். சிலவேளை பிடிபடுவாள். பிடிபடும் சமயங்களில் மட்டுமே
 உறவுகொள்வேன்.'
 
 'எங்கே உடலுறவு வைப்பீர்கள்?' இதுவும் தேவையில்லாதது.
 
 'முயல் கூட்டுக்குள்தான்.'
 
 வூ•ரியும் அமினாட்டாவும் வாய் திறக்கவில்லை. பூரண ஒத்துழைப்போடு விசாரணையை 
செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரேயொரு 
கேள்வி, ஆனால் அதைக் கதீஜாவிடம் கேட்கவேண்டும். அவளுக்கும் இதில் 
பங்கிருக்கிறதல்லவா? கதீஜா முதுகில் கட்டிய குழந்தையுடன் 
நடுக்கூடத்தில் வந்து நின்றாள். ஒரு கன்கூரன் நடனம் ஆட அழைத்ததுபோல இரண்டு 
கைகளையும் பின்னால் நீட்டி ஆயத்தமாக அசைந்தபடி 
நின்றாள்.
 
 'நீ உடலுறவுக்கு சம்மதம் கொடுத்தாயா?'
 
 அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அமினாட்டா '1000 முயல்கள்' கிராமத்தில் மட்டுமே 
புழங்கும் ஒரு கொச்சை மொழியில் நீண்ட நேரம் எதோ 
கூறினார். அதற்கு கதீஜா பதில் சொன்னாள். அதுவும் மிக நீண்டதாக இருந்தது. முடிவில் 
என் பக்கம் திரும்பி அவள் சொன்னதை அமினாட்டா
மொழிபெயர்த்தார்.
 
 'நான் பெரிய ஓம் சொல்லவில்லை, சின்ன ஓம் தான் சொன்னேன்'
 
 அது என்ன பெரிய ஓம், சின்ன ஓம், நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். சின்ன ஓம் 
என்றால் மூன்று மாதத்தில் பிள்ளை பிறந்துவிடுமா? என் 
மனதுக்குள் நடந்ததை எப்படியோ அறிந்து என் மனைவி சொண்டுக்குள் சிரித்தாரே ஒழிய 
எனக்கு ஒருவித உதவியும் செய்யவில்லை.
 
 கேள்விகள் எல்லாம் முடிந்துவிட்டன, இப்போது தீர்ப்பு சொல்லும் முறை. ஆனால் ஸாண்டி, 
தன் நெஞ்சு பொத்தான் சட்டையை ஒரு கையால் 
பிடித்து திருகியபடி, பேசத் தொடங்கினான். 'இவளுக்கு இங்கே என்ன வேலை? ஏன் சும்மா 
சும்மா முயல்களைப் பார்க்க வருகிறாள். அதுதான் 
துரத்தினேன். இவள் வேகமாக ஓடவில்லை. போகப்போக இவள் வேண்டுமென்றே என்னிடம் 
பிடிபட்டுக்கொண்டாள்' என்று குற்றம் சாட்டினான். நான் , மினாட்டாவையும் கடைசியில் கதீஜாவையும் பார்த்தேன். இறுதி முடிவுக்கான 
கட்டம் நெருங்கி வந்தது. ஆப்பிரிக்காவிலே இப்படியான 
குற்றத்துக்கு என்ன தண்டனை? தாலிகட்டச் சொல்வதா? இருக்காது. கணவனும் மனைவியும் என் 
வாயிலே இருந்து உதிரப் போகும்
 வார்த்தைகளுக்காக காத்திருந்தார்கள்.
 
 என் சங்கடத்தைப் புரிந்துகொண்டு வூ•ரியே அடி எடுத்துக் கொடுத்தார். 'கர்ப்பம் 
என்பதை நாங்கள் உறுதிப்படுத்திவிட்டோம். எங்களுக்கு 
உத்திரவாதம் வேண்டும். பிள்ளை பிறந்ததும் ஸாண்டி மாதாமாதம் பராமரிப்பு பணம் 
கட்டுவதாக.'
 
 'அவ்வளவுதானா?'
 
 'அவ்வளவுதான்.'
 
 ஸாண்டி பெருத்த குரலில் புலம்பத் தொடங்கினான். 'இவளல்லவோ அத்துமீறி நுழைந்தவள். 
இவளுக்கல்லவோ தண்டனை கொடுக்கவேண்டும்.' 
அவனுடைய முகம் அவன் கத்தக் கத்த அகலமாகிக்கொண்டு போனது. மலேரியாக் காய்ச்சலில் நான் 
படுத்திருந்தபோது எந்த நேரம் கண்ணைத் 
திறந்தாலும் என் முன்னே தோன்றிய தேவதூத முகம் நினைவுக்கு வந்தது. ஆனால் நீதிபதிக்கு 
பாரபட்சம் கூடாது. நான் 'பிள்ளை பிறக்கும் 
தினத்திலிருந்து அவனுடைய சம்பளப் பணத்தில் 25 வீதம் அவன் தரவேண்டும்' என்றேன். 
அதுதான் தீர்ப்பு.
 
 யாரோ தலையில் அடித்தது போல ஸாண்டி வாய் பிளந்து நின்றான். கணவனும் மனைவியும் 
திறந்தவாய் மூடவில்லை. ஒரு வேளை தீர்ப்பு பணம் மிக 
அதிகம் போல என்று நினைத்துக்கொண்டேன். ஸாண்டி மட்டும் தன் காதுகளை நம்பமுடியாமல் 
'அவளுக்கு தண்டனை என்ன? அவளுக்கு தண்டனை 
என்ன?' என்று அரற்றிக்கொண்டே இருந்தான். ஆப்பிரிக்க முன்குடிகள் உடலுறவை 
குற்றத்துக்கு தண்டனையாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற 
விசயம் எனக்கு பல வருடங்கள் கழித்துதான் தெரிய வரும்.
 
 அமினாட்டா ஒரு மகாராணியின் தோரணையுடன் முன்னே நடக்க, அவளுடைய மொட்டைத் தலை சூரிய 
ஒளிபட்டு பிரகாசித்தது. வூ•ரி மிகத்
 திருப்தியடைந்தவராக சற்று இடைவெளிவிட்டு நடந்தார். கதீஜா நடனமாடியபடியே அவர்களைப் 
பின்தொடர்ந்தாள்.
 
 நாளடைவில் கதீஜாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது அவள் தன்னுடைய 
குழந்தையை முதுகிலே கட்டிக்கொண்டு, எசமானியின்குழந்தையை தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு உலாத்தினாள். ஸாண்டி இல்லாத சமயம் பார்த்து 
முயல் கூண்டுப் பக்கம் காலடி எடுத்து வைப்பாள். 
வீட்டினுள்ளே என்ன தலைபோகிற காரியமாயிருந்தாலும் ஸாண்டி பாய்ந்து வந்து அவளை 
துரத்துவான். அவள் எப்படியோ தப்பி ஓடிவிடுவாள்.
 
 ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதி அமினாட்டா வந்து ஸாண்டியின் சம்பளத்திலிருந்து 
பராமரிப்பு காசை பெற்றுப் போவாள். சம்பளத்துக்கு மூன்று 
நாள் இருக்கும்போதே ஸாண்டி மன்றாட ஆரம்பித்துவிடுவான். 'மாஸ்ட, இந்த மாதம் 
பராமரிப்பு காசு கொடுக்கவேண்டாம். எனக்கு பணக் கஷ்டம். 
அடுத்தமாதம் பார்க்கலாம்' என்பான். நானோ பஞ்சாயத்து தீர்ப்புக்கு மதிப்பு 
கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
 
 எனக்கு மாற்றல் உத்தரவு கிடைத்தது. நாங்கள் புறப்படும் வேளை வந்தபோது ஸாண்டியை 
கூப்பிட்டு முயல்களை என்ன செய்யலாம் என்று 
கேட்டேன். அவன் காட்டுக்குள் விடலாம் என்றான். 'பாவம், செத்துப் போகுமே. அவைகளுக்கு 
தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தெரியாதே'
என்றேன். அவன் சிரித்தான். 'மாஸ்ட, வேட்டையாடும் மிருகம் என்றால் அது புதிதாக 
வேட்டை கற்க முடியாது. பட்டினி கிடந்து இறந்துவிடும். முயல் 
அப்படியல்ல. அது பதுங்கும் மிருகம். பதுங்குவதற்கு பயிற்சி தேவை இல்லை' என்றான். 
முப்பத்தியொரு முயல்களை எண்ணினோம். அவற்றைப்
பிடித்து காட்டுக்குள் விட்டு வந்தபோது முயல்கூடு வெறுமையாகிக் கிடந்தது.
 
 முயல்கள் போன பிறகு, பெரிய ஒம் சொல்லாமல் சின்ன ஓம் சொன்ன பெண், கழுத்து ஆடும் 
குழந்தையை முதுகிலே கட்டிக்கொண்டு முயல்கள் 
பார்க்க வருவதை நிறுத்திவிட்டாள். ஸாண்டிக்கும் அவளை துரத்திச் செல்லவேண்டிய 
அவசியம் நேரவில்லை. 'அவளுக்கு என்ன தண்டனை' என்று 
அவன் கத்தக்கத்த நான் வழங்கிய தீர்ப்பு அவனுக்கு பிடிக்கவில்லை. அவனும் தன் ஊருக்கு 
புறப்படப்போவதாகச் சொன்னான். அவனுடைய ஊரின் 
பெயர் '3000 முயல்கள்' என்றுகூட இருக்கலாம். நான் முதன்முதல் பஞ்சாயத்து தலைவராக 
பதவியேற்று வழங்கிய தீர்ப்பு அதற்கு பிறகு நடைமுறைப் 
படுத்தப்பட்டதா என்ற தகவல் என்னிடம் இல்லை.
 
 amuttu@gmail.com
 
 *****************
 
 லூசியா
 
 
  அவன் ஆற்றிலே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அவனுடைய கறுப்பு அடிமைச் சிறுவன் 
ஓடோடி வந்தான். ஓடிவந்த வேகத்தில் அவனுடைய மூச்சு 
மேலும் கீழுமாக ஆஇழுத்தது. 'என்ன என்ன?' என்று கேட்டான் எசமான். 'அந்தக் கிழவன் 
உங்களுடன் பேசவேண்டுமென்று எனக்கு சைகைமூலம் 
சொன்னான். அவனிடம் ஒரு கறுப்பு அட்டை புத்தகம் இருக்கிறது. அது பைபிள்தான்' என்றான் 
சிறுவன். 'உனக்கு எப்படி அது பைபிள் என்பது 
தெரியும்?' அதற்கு அடிமை 'எனக்கு தெரியும் எசமான். என்னுடைய முந்தைய எசமானிடம் ஒரு 
பைபிள் இஆருந்தது. அதை நான் 
பார்த்திருக்கிறேன்' என்றான். 
 அந்தச் சம்பவத்திற்கு பிறகு எசமானால் நேராக சிந்திக்க முடியவில்லை. மீன் 
பிடிப்பதிலும் நாட்டம் குறைந்துவிட்டது. தூண்டிலை எடுத்து சுற்றி 
வைத்துக்கொண்டு தன் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்தான். அவன் நெஞ்சு படபடவென்று 
அடித்தது. அடிமை சொல்வது உண்மையாக இருக்குமா? 
கூடையையும் மீன்களையும் துக்கிக்கொண்டு அடிமையும் அவன் பின்னால் போனான்.
 
 அன்றிரவு எசமானுக்கு நித்திரை வரவில்லை. அடுத்தநாள் காலை எப்படியும் பைபிளை 
வாங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்தான். அவனிடம் இ 
ரண்டே இரண்டு புத்தகங்கள்தான் இஆருந்தன. கடந்த இரண்டு வருடங்களில் அவற்றை பத்து 
தடவை படித்து அவை மனப்பாடமாகிவிட்டன. 
கர்த்தரின் கருணையை எண்ணி வியந்தான். பத்தாயிரம் மைல்களுக்கப்பால் 
காட்டுமிராண்டிகள் வாழும் ஒரு தீவில் சிறைத்தண்டனை அனுபவித்து 
வரும் அவனுக்கு ஒரு பைபிளை அனுப்பியிருக்கிறான். முழங்கால்களில் உட்கார்ந்து 
ஆண்டவனைப் பிரார்த்தித்தான். கப்பல் உடைந்ததோடு 
அதிலிருந்த பொருட்கள் எல்லாம் மூழ்கிவிட்டன. அவனிடம் எஞ்சியது இஆரண்டு 
வெள்ளிக்காசுகள், ஒரு தங்கக் காசு, கைக்கத்தி, வாள், சப்பாத்து, 
அவன் அணிந்திருந்த உடை, இரண்டு புத்தகங்கள். அவனுடைய அடிமை நேற்றிரவு பின்னிய அழகான 
தொப்பியும் இருக்கிறது. இவை
எல்லாவற்றையும் கொடுத்தால்கூட பரவாயில்லை, எப்படியும் பைபிளை வாங்கிவிடவேண்டும்.
 
 பொழுது புலர்ந்ததும் கிழவனைத் தேடி புறப்பட்டார்கள். அந்த அதிகாலையில் அவர்களைப் 
பார்த்ததில் கிழவன் அதிசயப்படவில்லை. தினமும் அது 
நடப்பது போலவே முகத்தை வைத்திருந்தான். கிழிந்த ஆடையை உடுத்து குறுக்காலே ஒரு 
துண்டைக் கட்டியிருந்தான். எசமான் உயரமாக 
நின்றான். அடிமை பேரத்தை சைகையினால் ஆரம்பித்தான். முதலில் ஒரு வெள்ளிக்காசுக்கு 
கேட்டுப்பார்ப்போம் என எசமான் நினைத்தான். ஆனால் 
கிழவன் அடிமைச் சிறுவன் பின்னிய தொப்பியை எடுத்துக்கொண்டு பைபிளை தரச் 
சம்மதித்தான். தொப்பியை எடுத்து தலையில் மாட்டி தன் சிவந்த 
பற்களைக் காட்டிச் சிரித்தான். எசமானும் அடிமையும் திரும்பிப் பாராமல் பைபிளை 
தூக்கிக்கொண்டு தங்கள் இருப்பிடத்துக்கு போய்ச் 
சேர்ந்தார்கள்.
 
 பைபிளைத் திறந்து பார்த்தான் எசமான். அவன் கண்கள் பனித்தபடி இ ருந்ததால் அவனால் 
எழுத்துக்களை உடனே வாசிக்க முடியவில்லை. 
திறந்த பக்கத்தில் அவனுடைய கைவிரல்கள் தொட்ட இடத்தை படிக்கத் தொடங்கினான். 16வது 
அதிகாரம். புனிதபோலிடம் சிறையதிகாரி 
தன்னை கடைத்தேற்றுவதற்கு என்ன வழி என்று கேட்கிறான். அதற்கு புனிதபோல் 'நீ 
யேசுவிடம் விசுவாசமாக ஆஇரு. அவர் உன்னை ரட்சிப்பார்' 
என்று கூறுகிறான். தன்னுடைய நிலமைக்கும் அது பொருந்தியிருந்ததைக் கண்டு எசமான் மனம் 
நெகிழ்ந்து உருகினான்.
 
 1611 ல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அரசனால் பதிப்பிக்கப்பட்ட பைபிள் அது. அவன் 
அதைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் கண்களால் பார்ப்பது 
ஆஇதுவே முதல் தடவை. விலைமதிக்கமுடிஆயாத இந்த பைபிள் ஒரு காட்டுவாசியின் கையில் 
எப்படி சிக்கியது. கிழவனே அதற்கு பதில் கூறினான். 
போர்த்துக்கீயர்கள் சிலோனை ஆண்ட காலத்தில் ஒரு போர்த்துக்கீயன் அதனைக் கிழவனுக்கு 
கொடுத்தான். போர்த்துக்கீயனுக்கு பைபிள் 
எழுதியிருந்த மொழி படிக்கத் தெரியாது. கிழவன் அதை விற்பதற்கு இத்தனை நாட்கள் 
காத்திருக்க வேண்டியிருந்தது.
 
 ரோபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயனும் அவனுடைய தகப்பனும் ஆஇன்னும் 14 மாலுமிகளும் ஆன் 
என்ற கப்பலில் ஆசிலோனை அணுகியபோது  
பெரும்புயலில் அது சிக்கிக்கொண்டது. பாய்மரத்தை வெட்டி புயலிலிருந்து தப்பி மூதூர் 
கரையோரத்தில் ஒதுங்கிக்கொண்டார்கள். இன்னொரு 
பாய்மரம் கட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைத்தார்கள். அப்பொழுது கண்டி அரசன் 
இரண்டாம் ராஜசிங்கனுடைய ஆட்சி 
நடந்துகொண்டிருந்தது. அவன் என்ன நினைத்தானோ அவர்களைச் சிறைபிடித்து கண்டிக்கு 
அழைத்துவர உத்தரவிட்டான். அவர்களை பல 
குழுக்களாகப் பிரித்து காவலில் வைத்தான். கூரை போட்ட, சுவர்கள் இல்லாத சிறைகள் 
அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மலைகளும், காடுகளும் 
சூழ்ந்த பிரதேசம். ஒடுக்கமான பாதைகள். எல்லா எல்லைகளிலும் காவல் இ\ருந்தது. அந்த 
ஊர் மக்களே அவர்களுடைய உணவுக்கும் 
பாதுகாப்புக்கும் பொறுப்பு. வேறு தேவைகளுக்கு அவர்களாகவே உழைக்கவேண்டும் என்பது 
மன்னனின் கட்டளை.
 
 கண்டி அரசன் அவர்களைச் சிறை பிடித்த வருடம் 1659. அப்பொழுது ரோபர்ட் நொக்சுக்கு 18 
வயது. கப்பல் உடைந்து அவர்கள் தீவிலே ஒதுங்கிய 
நாளிலிருந்து ரோபர்ட்டின் தகப்பனுக்கு மலேரியாக் காய்ச்சல் கண்டது. மலேரியாவுக்கு 
என்ன மருந்து கொடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு 
தெரியவில்லை. அவர் நாளாந்தம் மெலிந்துகொண்டே வந்தார். உடம்புத் தோல் வற்றி 
எலும்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தெரிந்தன. 
ரோபர்ட்டுக்கு தகப்பனை பார்க்க பரிதாபமாகவிஆருந்தது. அவர் கப்பலின் தலைவனாக பல 
வருடங்கள் பணியாற்றியவர். சிறப்பான நிர்வாகி. அவர் 
முடிவு இஆந்த காட்டுவாசிகளின் நடுவே என்று கர்த்தர் எழுதிவைத்ததை நினைத்து 
வேதனைப்பட்டான்.
 
 ஒருநாள் ரோபர்ட்டை அவர் படுத்திருந்த புல்லுப்பாய்க்கு கிட்ட அழைத்தார். 'என்னுடைய 
உடம்பிலிஆருந்து உயிர் மெள்ள மெள்ள பிரிகிறதை 
என்னால் உணரக்கூடியதாக ஆருக்கிறது. மரணம் இஆவ்வளவு இன்பமானதாயிருக்கும் என்பதை நான் 
அறியவில்லை. நீ எப்படியும் தப்பித்து 
போய்விடு. உன் சகவாசத்தில் கவனமாயிரு. கடவுளை தோத்திரம் செய்ய மறக்காதே' என்றார்.
 
 அன்றிரவு அவர் இறந்துபோனார். ரோபர்ட்டுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனுக்கு 
ஆதரவாக இருந்தது கறுப்புச் சிறுவன் மட்டுமே. 
ஊர்க்காரர்கள் உதவ மறுத்துவிட்டார்கள். ஒரு கயிற்றை மாத்திரம் தூக்கி எறிந்தார்கள். 
அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. 
தகப்பனுடைய கழுத்திலே கயிற்றைக் கட்டி ஒரு செத்த நாயை இழுப்பது போல இழுத்து 
காட்டுக்குள் கொண்டுபோனார்கள். அங்கே குழி 
வெட்டுவதற்குகூட அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. ரோபர்ட்டும் சிறுவனும் 
கையினாலேயே குழி பறித்து அதிலே தகப்பனை புதைத்து, 
மரத்திலே சிலுவைக் குறி நட்டு, சமாதியின் மேலே ஒரு கல்லையும் வைத்தார்கள். அந்த 
இடத்தின் பெயர் பண்டாரகொஸ்வத்த என்று 
சொன்னார்கள்.
 
 தகப்பன் இறந்த பிறகு அவன் கையிலே இருந்த இஆரண்டு புத்தகங்களையும் இரவு பகலாகப் 
படித்தான். எஞ்சிய நேரத்தில் தொப்பி பின்னினான். 
அதை அடிமை விற்று வருவான். மிக எளிமையான வாழ்க்கை. அப்பொழுதுதான் கர்த்தரின் 
கிருபையால் பைபிள் கிடைத்தது. தினமும் பைபிள் 
படிக்கத் தொடங்கினான். அவனுடைய அப்பாவின் கடைசிநேர அறிவுரையும் நினைவுக்கு வந்தது. 
எப்படியும் இந்த நாட்டைவிட்டு தப்பிவிடவேண்டும் 
என்ற வைராக்கியம் பிறந்தது. அப்படி தப்பிச் செல்லவேண்டுமென்றால் அந்த நாட்டு 
மக்களுடைய மொழியை புரியவேண்டும். மிருகம், பறவை, 
மரத்தைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தான்.
 
 ரோபர்ட் சிங்களம் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தான். அங்கே வரும் வியாபாரிகளிடம் 
கண்டியிலிருந்து பாதைகள் எப்படி எப்படி பிளந்து 
போகின்றன. அவை எங்கே போய் முடிகின்றன. எங்கே எங்கே காவல்கள் உண்டு என்று கேட்டு 
ஞாபகத்தில் வைத்துக்கொண்டான். 
கரையோரங்களின் டச்சுக்காரர்களின் ஆட்சி நடந்தது. அங்கே சனங்கள் எப்படி 
வாழ்கிறார்கள் என்பதை அறியவும் ஆவல். வியாபாரிகள் 
சந்தேகப்படும்போது கேள்விகளை நிறுத்தினான்.
 
 ஒருநாள் அவன் எதிர்பாராத சம்பம் ஒன்று நடந்தது. நடு வீதியிலே ஒருத்தன் இஆரண்டு 
கைகளையும் உயரப் பிடித்தபடி ஒரு நீலநிற துணிப் 
பொட்டலத்தை தூக்கிப் போனான். வீதியிலே நின்ற போன சனங்கள் எல்லாம் தலைகுனிந்து 
நிலத்தை முத்தமிட்டார்கள். ரோபர்ட் இஆந்த 
அதிசயத்தை பார்த்தபடி நின்றான். அப்பொழுது பின்னால் வந்த ஒருவன் அவன் முதுகில் 
பளீர் பளீர் என்று பிரம்பினால் அடித்தான். அவனுடைய வலி 
மாறுமுன்னரே அது என்னவென்று விசாரித்தான். அது அரசரின் உடைகள் என்றும் அதை ஒருவன் 
தோய்ப்பதற்கு ஆற்றுக்கு எடுத்துப்போகிறான் 
என்றும் சொன்னார்கள். மரியாதை செய்யாதவர்களுக்கு வழக்கமாக மரணதண்டனை கிடைக்கும். 
அவன் புதிய ஆள் என்றபடியால் பிரம்படியோடு 
தப்பிவிட்டான் என்று அறிந்தான்.
 
 ரோபர்ட்டுக்கு அப்பொழுது ஒரு விசயம் பிடிபட்டது. மொழியையும் மிருகங்களையும் 
பறவைகளையும் மட்டும் அறிந்தால் போதாது. மக்களுடைய 
பழக்க வழக்கங்களும் தெரிந்திருக்கவேண்டும். அவற்றையும் படித்தான். ஆடுகளும் 
பன்றிகளும் வளர்க்கத் தொடங்கினான். அதில் அவனுக்கு நல்ல 
லாபம் கிடைத்தது. போதிய பணம் சேர்த்தால்தான் அவன் தப்பலாம். அந்த நாட்டு மக்கள் 
முழுச்சோம்பேறிகளாக இஆருந்தார்கள். ஆற்றிலே நிறைய 
மீன்கள் ஓடின, அவர்களுக்கு பிடிக்கத் தெரியவில்லை. ஒரு மானை வேட்டையாடுவதற்கு 
முழுக்கிராமமும் படையெடுத்து புறப்பட்டது. யானை 
பிடிப்பதில் மாத்திரம் அவர்களை வெல்லமுடியாது. அவ்வளவு 
திறமைசாலிகளாகவிஆருந்தார்கள்.
 
 அவனுடன் கப்பலில் வந்தவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராக மணமுடித்து அங்கேயே வாழ்க்கையை 
அமைத்துக்கொண்டார்கள். கறுப்பு அடிமைகூட 
விடுதலையாகி மணமுடித்துவிட்டான். ரோபர்ட்டுடன் கடைசிவரை விசுவாசமாக இஆருந்தது 
ஜோனும், ஸ்டீபனும்தான். அவர்கள் மூவரும் சில 
வருடங்களுக்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். மணம் முடித்து அங்கேயே 
வாழ்நாளை முடித்துக்கொள்ள அவர்களுக்கு சம்மதமில்லை. 
ஆனால் இஆளமை போய்க்கொண்டிருந்தது. ஆஇதற்கு என்ன வழியென்று யோசித்தபின் அந்த முடிவை 
எடுத்தார்கள்.
 
 கண்டி ராச்சியத்தில் இஆரண்டு மனைவிகளை ஓர் ஆண்மகன் வைத்திருப்பது அரிது. ஆனால் 
பெண்கள் இஆரண்டு மூன்று கணவன்மாரை 
வைத்திருந்தார்கள். பிள்ளைக்கு யார் தன்னுடைய அப்பா என்று தெரியாது. மனைவியும் 
அதுபற்றி கவலைப்படமாட்டாள். அவர்கள் வாழ்ந்த ஊரிலே 
ஒரு மணவிலக்கான பெண் இஆருந்தாள். அவள் பெயர் சிந்திரிக்மல். ஆண் செய்யும் அவ்வளவு 
காரியத்தையும் அவளும் செய்வாள். அவ்வளவு 
திடகாத்திரமான பெண். மூன்றுபேரும் அவளை மனைவியாக வரித்தார்கள். அவளும் உடன்பட்டாள். 
எப்போது வேண்டுமானாலும் யாரும் 
வந்துபோகலாம். ஒருவரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதுதான் நிபந்தனை.
 
 அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. லூசியா என்று பெயர். கறுப்பு தலைமயிர், 
நீலக் கண்களுடன் குழந்தை மிகவும் அழகாக இருந்தது. 
ஆனால் அதனுடைய நிறம் இஆன்னும் அபூர்வமானது. கறுப்பாக இல்லாமல் வெள்ளையாகவும் 
இஆல்லாமல் பொன் தூவிவிட்டது போன்ற சருமம். 
மூன்று பேரையும் லூசியா அப்பா என்றே அழைத்தாள். ரோபர்ட் அவளுக்கு ரகஸ்யமாக ஆங்கிலம் 
கற்றுக்கொடுத்தான். நாளாவட்டத்தில் அவள் 
பைபிளை வாசிக்கவும் துவங்கினாள். ரோபர்ட்டுக்கு லூசியாவைப் பிரிந்து கணமும் 
இருக்கமுடியாது. லூசியாவுக்கும் அவன்மேல் அதிகப் பிரியம்.
 
 அந்த மூன்று கணவன்மாருக்கும் சிந்திரிக்மல்லை பிடித்ததுபோல அவள் பெயரும் 
பிடித்திருந்தது. அது ஒரு பூவின் பெயர். அபூர்வமானது அத்தோடு 
அழகானது. உபயோகமான மலர்கூட. நேரம் என்னவென்று பார்ப்பதற்காக அந்தப் பூ மரத்தை 
எல்லோரும் தங்கள் வாசல்களில் வளர்த்தார்கள். நடு 
மத்தியானம் கழிந்து சரியாக 10 நாழிகையானதும் அந்தப்பூ பூக்கும். அடுத்தநாள் 
காலையில் வாடிவிடும்.
 
 சிந்திரிக்மல் தன் பெயருக்கு ஏற்றபடி வீட்டு வேலைகளை ஒழுங்குடனும் முறைதவறாமலும் 
செய்தாள். அதிகாலையில் எழுந்துபோனால் தலையில் 
விறகு கட்டும் இடுப்பில் மண்பானையில் தண்ணீருமாக திரும்புவாள். அவள் 
கணவன்மார்களிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டதில்லை. 
என்னவென்ன சமையலுக்கு தேவையோ அதையெல்லாம் அவளே சம்பாதித்தாள்.
 
 ஒருநாள் சிந்திரிக்மல் குரக்கன் மாவைக் குழைத்து உருட்டி புட்டு செய்தாள். 
மண்பானையின் வாயில் துணிகட்டி அதற்குமேல் வைத்து அவித்த 
புட்டில் அவளே காட்டிலே பறித்து வந்த தேனைக் குழைத்து லூசியாவுக்கு ஊட்டினாள். 
தேனில் விட்டுக் குழைக்கும்போது அதில் தேனீக்களும் 
இஆருந்தன. எதற்காக அப்படிச் செய்கிறாய் என்று ரோபர்ட் பதறிப்போய் கேட்டான். அவள் 
குலுங்கி சிரித்தாள். 'தேனீக்களுடன் தேனை 
சாப்பிட்டல்தான் இஆனிமையான குரலுடன் வார்த்தைகள் கூர்மையாக வரும். இதுகூடத் 
தெரியாதா?' என்றாள். அவனுக்கு தெரியவில்லை.
'அப்படியா? நீயும் தேனீக்களை சாப்பிடுவியா?' 'நிறைய. என் வார்த்தைகள் மட்டுமல்ல. 
என் பற்களும் கூர்மையானவை' என்றபடி அவள் தன் சிவந்த
பற்களைக் காட்டியபடி அவனை அணுகினாள். ஒரு கணம் ரோபர்ட் தகப்பனுக்கு கொடுத்த 
சத்தியத்தை மறந்தான். இங்கிலாந்துக்கு திரும்பி போகும் 
எண்ணத்தை துறந்துவிட்டு அவளுடன் அங்கேயே தங்கிவிடலாம் என்றும் தோன்றியது. அஆது 
நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
 
 அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருந்தபோது மன்னருடைய கொடுங்கோலைப் 
பற்றிய செய்திகள் அடிக்கடி வந்தன. 
ஒருநாள் அரசன் பரிவாரத்துடன் தன்னுடைய தடாகத்தில் நீச்சலுக்கு போனான். அவன் 
திறமையான நீச்சல்காரன். ஆனால் அன்று நீந்தும்போது ஒரு 
பரிசோதனைக்காக நீரில் மூழ்குவதுபோல நடித்தான். பரிவாரத்தில் ஒருவர்கூட அசையவில்லை. 
இரண்டு ஆளைஞர்கள் பாய்ந்துபோய் நீந்தி 
அரசரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் சபைகூடியதும் அரசன் தன்னைக்காப்பாற்றிய 
இளைஞர்கள் யார் என்று வினவினான். இரண்டு 
வாலிபர்களும் எண்ணெய்போட்டு சீவி இழுத்த தலைமுடியுடன் முன்னே வந்து அரசருடைய பரிசை 
வாங்குவதற்காக நின்றார்கள். அவர்களை 
யானையின் காலில் இஆடறவைக்கச் சொல்லி அரசன் தண்டனை விதித்தான். நாட்டை ஆளும் ஓர் 
அரசனை அவர்கள் எப்படி தொடலாம். இது 
மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினை என்றான்.
 
 அவர்கள் கேள்விப்பட்ட இன்னொரு கதையும் மனதை நடுங்கவைத்தது. அரசனிடம் ஓர் ஆங்கிலேயர் 
ஏவல் புரிந்தார். மன்னருக்கு வெள்ளைத்தோல் பணியாளர்களில் விருப்பம் அதிகம். ஆஅங்கே உத்தியோகத்துக்கு போனவர்கள் ஒருவராவது 
உயிருடன் திரும்ப வந்ததில்லை. இது நாடறிந்த 
ரகஸ்யம். ஆனாலும் பேராசை யாரையும் தடுப்பதில்லை. அரசனுடைய தாராளமான பரிசுகளுக்காக 
துணிந்து புதியவர்கள் வருவார்கள். ஒருநாள் 
வெள்ளைக்காரன் அரசனின் பீங்கான் கோப்பையை போட்டு உடைத்துவிட்டான். அதை அரசன் 
மன்னித்திருப்பான். ஆனால் அவன் பயந்து ஓடி 
புத்தகுரு வீட்டில் ஒளித்தது மன்னனுக்கு பிடிக்கவில்லை. அவனை கழுவில் ஏற்றிக் 
கொல்லவேண்டும் என்பது தண்டனை. கழுவேற்றப் போகும்போது 
பின்னால் அரண்மனை நாய்களும் ஓடும். ஆங்கிலேயனைக் கொண்டுபோனபோது வழியிலேயே நாய்கள் 
அவன் பின்னாலே பாய்ந்து பிருட்டத்தின் ஒரு 
பகுதியை தின்றுவிட்டன. அவனைக் கழுவிலே ஏற்றியபோது அவன் பாதி செத்துவிட்டான் 
என்றார்கள்.
 
 ஆஇவற்றை எல்லாம் கேட்டபோது ஸ்டீவனும் ரோபர்ட்டும் தப்பி ஓடுவதற்கான முயற்சியை 
துரிதப்படுத்த நினைத்தார்கள். ஜோன் மாத்திரம் தான்
 அந்த எண்ணத்தை மறந்துவிட்டதாகக் கூறினான். லூசியாவையும் மனைவியையும் விட்டுப் போக 
அவனுக்கு விருப்பமில்லை. அத்தோடு அவனுடைய
 வியாபாரமும் நல்ல லாபம் ஈட்டியது. இஆருப்பதை விட்டுவிட்டு ஆஇல்லாத ஒன்றைத்தேடிப் 
போக அவன் மறுத்துவிட்டான்.
 
 எதிர்பாராமல் திசாவ வெண்குதிரையில் ஒருநாள் ஆரோகணித்து வந்தான். அந்தக் கிராமம் 
அவனுடைய அதிகாரத்துக்கு கட்டுப்பட்டது. அரசனுக்கு
 யானை பிடிப்பவர்கள் வேண்டுமென்று அந்த தொழிலில் திறமையானவர்களை 
தேர்ந்தெடுத்துக்கொண்டு காட்டுக்கு சென்றான். அவர்களுடன் ஒரு
 பெண்யானையும் போனது. அவனுடைய கம்பீரத்தைப் பார்க்க வீதிக்கு ஓடிவந்த இஆரண்டு 
சிறுவர்களை அவன் அரண்மனை சேவகத்துக்கு பிடித்துப்
 போனான். தலைவாரி இஆழுத்து நீண்ட பின்னல்கள் கட்டியிருந்த அந்தச் சிறுவர்களை 
ஆஇஆழுத்துக்கொண்டு போனபோது தாய்மார் கண்ணீர்
 விட்டனர். அந்த பிள்ளைகள் இஆனிமேல் என்றென்றைக்கும் திரும்பி வரமாட்டார்கள் என்பது 
அவர்களுக்கு தெரியும்.
 
 அரசனிடமிருந்து செய்தி வந்த அன்று ரோபர்ட்டும் ஸ்டீபனும் என்ன செய்வதென்று 
தெரியாமல் தடுமாறினார்கள். அரசன் முடிதுறக்கவேண்டும் என்று
 சனங்கள் கிளர்ச்சி செய்தார்கள். அரசன் முந்திக்கொண்டு முடிக்குரிய தன்னுடைய 
பதினைந்து வயது மகனை நஞ்சு வைத்துக் கொன்றான். தனக்கு
 ஒரு ஆங்கில ஆலோசகன் வேண்டுமென்று தீர்மானித்து ரோபர்ட்டுக்கு அரசன் செய்திக்குமேல் 
செய்தி அனுப்பினான். ரோபர்ட் பெரும் பொருளீட்டி
 செல்வந்தனாகியிஆருந்தான். நல்லாய் சிங்களம் பேசினான். அவனுக்கு பல சலுகைகள் தருவதாக 
அரசன் ஆசை காட்டினான். மறுத்தால்
 ராசக்குற்றம் ஆகிவிடும். ஒரே வழி அன்றிரவு எப்படியும் தப்பி ஓடிவிடுவதுதான்.
 
 தன்னுடைய தகப்பனின் சமாதியில் பிரார்த்தனை செய்து ரோபர்ட் விடைபெற ஆயத்தமானான். 
சிந்திரிக்மல் அவனிடம் 'லூசியா உங்களுடைய மகள்.
 அது உங்களுக்கு தெரியுமா? ஆஇஆந்த உண்மையை கடைசி நாளன்று நான் மறைக்க விரும்பவில்லை' 
என்றாள். 'எப்படி அவ்வளவு நிச்சயமாகச்
 சொல்கிறாய்?' 'பிள்ளை உண்டாகும்போது ஒரு தாய்க்கு தெரியும்' என்றாள். 'நீ 
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவள் என்னுடைய மகள்தான்'
 என்றான்.
 
 ரோபர்ட் லூசியாவை தனிமையில் அழைத்துப் பேசினான். 'என் கண்ணே! நான் உன்னை 
உயிருக்குயிராக நேசிக்கிறேன். உனக்கும் அது தெரியும்.
 எப்படியும் உன்னை ஆஇங்கிலாந்துக்கு அழைத்துப்போக திரும்பி வருவேன். நீ எனக்காக் 
காத்திரு. ஆஇரண்டு விசயங்களை மறக்கக்கூடாது. உன்
 கண்களை நிமிர்த்தி யாரையும் பார்க்காதே. அந்த நீலம் உன்னைக் காட்டிக் 
கொடுத்துவிடும். ஆஇரண்டாவது, எந்தச் சந்தர்ப்பத்திலும் உனக்கு
 ஆங்கிலம் தெரியும் என்பதை சொல்லாதே.' லூசியா அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் 
கொடுத்து 'நிச்சயம் வருவீர்களா?' என்றாள்.
 
 'நிச்சயமாக. உலகம் முழுவதும் டச்சுக்காரர்கள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். 
ஆங்கிலேயர்கள் வெல்கிறார்கள். நான் கிழக்கிந்திய கம்பனியில்
 சேருவேன், அவர்களுடன் திரும்ப உனக்காக வருவேன், கண்ணே' என்றான்.
 
 ஸ்டீபனும் ரோபர்ட்டும் விடை பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் முதுகிலே காவிய 
மூட்டைகளில் அத்தியாவசியமான பொருட்கள் மாத்திரம்
 இஆருந்தன. அவற்றுள் பைபிளும் ஒன்று. வாசலிலே சிந்திரிக்மல் பூத்து சரியாக ஐந்து 
நாழிகை கடந்த சமயத்தில் அவர்கள் புறப்பட்டார்கள். அது
 1679ம் ஆண்டு மே மாதம். அப்போது லூசியாவுக்கு வயது 14. ரோபர்ட் டுக்கு வயது 37. 
அவன் சரியாக 19 வருடங்களை சிலோன் மன்னன்
 இஆரண்டாம் ராஜசிங்கன் ஆட்சியிலும், 18 வருடங்களை இஆங்கிலாந்து அரசன் இஆரண்டாம் 
சார்ல்ஸ் மன்னன் ஆட்சியிலும் அதுவரை
 கழித்திருந்தான்.
 
 லூசியாவுக்கு எப்பொழுதும் ரோபர்ட்டின் நினைவாகவே இஆருந்தது. அது அவளுக்கே 
ஆச்சரியம். ரோபர்ட்டுடைய பெயரை தல்லிபத் ஆஇலையில்
 எழுதி எழுதிப் பார்ப்பாள். பிறகு கிழித்து எறிந்துவிடுவாள். அவன் எப்பொழுது 
திரும்பி வருவான் என்று நாட்களை எண்ண ஆரம்பித்தாள்.
 பண்டாரகொஸ்வத்தவை தாண்டியவுடன் ஆஇங்கிலாந்து வந்துவிடுமென்று அவள் நினைத்தாள். அது 
பத்தாயிரம் மைல்கள் தள்ளியிஆருக்கும் ஒரு நாடு
 என்பது அவளுக்கு தெரியாது.
 
 1680 மார்ச் 28ம் தேதி புதுவருடம் பிறந்தபோது முதல் தவறு ஏற்பட்டது. அன்று மன்னரின் 
பீரங்கி வெடிக்கும் சத்தம் அவர்களுக்கு கேட்கும்.
 கழுத்தை முறித்து அண்ணாந்து பார்க்க வைக்கும் கம்புகளில் வண்ண வண்ண கொடிகள் 
பறக்கும். அரசர் தலை முழுகியதை பறை அறிவித்ததும்
 குடிகளும் முழுகி புத்தாடை புனைவார்கள். அதன் பிறகு கொண்டாட்டம் ஆரம்பமாகும். 
பரிசுகள் கிடைக்கும். திசாவ பரிவாரத்துடன் உலா
 போனபோது லூசியா ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்த்தது மிகப் பெரிய தவறு. அவளுடைய 
நீலக் கண்கள் ஜொலித்தன. அவளையும் இஆன்னும்
 சிலரையும் திசாவ பிடித்து அரண்மனைக்கு புது வருடப் பரிசாக அனுப்பிவைத்தார்.
 
 அரண்மனை சமையலறையில் அவளுக்கு பணி. அவளுடன் சேர்த்து அங்கே 12 இஆளம்பெண்கள் 
வேலைசெய்தார்கள், அவர்கள் எல்லொருமே
 அழகாக இஆருந்தார்கள். அழகான பெண்களை பிடித்து அனுப்பச் சொல்லி திசாவமாருக்கு கட்டளை 
இஆருந்தது. ஆஇதை அவள் பின்னர்தான்
 தெரிந்துகொண்டாள். அவளுடைய வேலை சமைத்த உணவை தட்டங்களில் ஏந்தி அரசருக்கு 
எடுத்துப்போவது. அவற்றை வெள்ளைத் துணி போட்டு
 மூடியிருப்பார்கள். அவளுடைய வாயும் மூக்கும் கறுப்புத் துணியால் 
கட்டப்பட்டிருக்கும். முப்பது தட்டங்கள் வரிசையாகப் போகும். அவர்களுடைய
 மூச்சுக் காற்று மன்னரின் உணவில் படாமல் எச்சரிக்கையாக இஆருப்பார்கள். அவளுடைய 
வாழ்க்கை படாடோபமாகவும் சந்தோசமாகவும் போய்க்
 கொண்டிருந்தது. அவள் ஆஇரண்டாவது தவறைச் செய்யும்வரைக்கும்.
 
 ஓர் ஆங்கிலேயன் ஒருநாள் அரசனுடன் உணவருந்த வந்தான். அவன் பேசிய ஆங்கிலத்தை ஒருவன் 
மொழிபெயர்த்தான். இஆவள் அரசரின் வலது
 பக்கம் நின்றாள். மொழிபெயர்ப்பாளன் இடதுபக்கம் நின்றான். முப்பது பதார்த்தங்களில் 
அவ்வப்போது ஒன்றை அரசர் ருசி பார்ப்பார். பிறகு கையை
 துடைப்பதற்கு அவளுடைய தொடையையோ, பிருட்டத்தையோ, கால்கள் சந்திக்கும் பிரதேசத்தையோ 
பயன்படுத்துவார். சிலவேளை அடுத்த
 உணவை அவர் தொடுவதற்கு தீர்மானிக்கும்வரை அவர் கைகள் அங்கேயே இஆருக்கும். அந்த 
மொழிபெயர்ப்பாளன் அன்று என்ன கவனத்தில்
 இஆருந்தானோ அந்த ஆங்கிலேயன் சொன்னதை தப்புத் தப்பாக மொழிபெயர்த்தான். ஆஇவள் 
கேட்டுக்கொண்டு மௌனமாக இஆருந்தாள்.
 
 அன்று சமையலறையில் அவளுடன் வேலைசெய்த உற்ற சிநேகிதி ஒருத்திக்கு ஆஇதைச் சொன்னாள். 
அரசருக்கு ஒவ்வொரு அறையிலும்,
 ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒற்றர்கள் இஆருந்தார்கள். ஆஇவள் சொன்னது 
அன்று இஆரவே அரசர் காதுகளுக்கு
 எட்டிவிட்டது. சேவகன் வந்து அரசர் அழைப்பதாகக் கூறியதும் லூசியா நடுங்கினாள். 
இஆனிமேல் தான் திரும்பி வரப்போவதில்லை என்பது
 தெரிந்தது. தெய்வத்திடம் மன்றாடினாள். கழுமரத்தில் ஏற்றவேண்டாம். யானை மிதித்து 
கொல்லவேண்டாம். மலை உச்சியிலிருந்து என்னை தள்ளிக்
 கொல்லட்டும், ஆண்டவனே என்று பிரார்த்தித்தாள்.
 
 ஆனால் மன்னர் சிரித்தபடியிஆருந்தார். லூசியா கைகளைக் குவித்து, நெற்றியின் ஓரத்தில் 
வைத்து தலையை சாய்த்து, அரசகுலப் பெண்கள்
 செய்வதுபோல வணக்கம் சொன்னாள். உனக்கு ஆங்கிலம் தெரியுமா, பெண்ணே? 'ஆம், மாட்சிமை 
தங்கிய அரசரே' என்றாள். அவள் வழக்கம்போல
 கறுப்பு துணியினால் தன் வாயையும் மூக்கையும் கட்டவில்லை. அவளுடைய தலைமயிர் ஒழுங்காக 
வாரப்பட்டு மடித்து கட்டப்பட்டு தலைக்கு
 மேலேயிஆருந்தது. மெல்லிய ஆடை மறைக்காத உடம்பு பகுதி பொன் தூவியதுபோல மினுமினுத்தது. 
கண்கள் நீலமாக மிதந்துகொண்டிருந்தன.
 பயத்தினால் அவள் கால்கள் நடுங்குவதுகூட அவளுடைய அழகை அதிகப்படுத்தியது. மன்னர் 
அதிசயித்துவிட்டார். இஆப்படியான ஓர் அழகுப்பதுமை
 தன்னுடைய சமையலறையில் வீணாகப் போய்க்கொண்டிருக்கிறதா? இஆவ்வளவு காலமும் அவர் 
கண்களிலிருந்து எப்படி தப்பினாள்.
 
 'உனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை ஏன் என்னிடம் நீ சொல்லவில்லை?'
 
 'நீங்கள் கேட்கவில்லை, மாட்சிமை தங்கிய அரசரே.'
 
 தேனுடன் சேர்த்து தேனீயை சாப்பிட்டதனாலோ என்னவோ அவள் குரல் இஆனிமையாகவும் அதே சமயம் 
கூர்மையாகவும் வெளிவந்தது. அரசர்
 அவளை அருகே கூப்பிட்டார். அவள் தாடையைப் பிடித்து திருப்பி கண்களை பார்த்தார். 
சிறிதுநேரம் திக்குமுக்காடிப்போனார். பற்களைப் பார்த்தார்.
 அவை வெள்ளை வெளேரென்று இஆருந்தது அவருக்கு பிடிக்கவில்லை.
 அவற்றை பழுப்பு நிறமாக்கச் சொன்னார். பிறகு இஆரண்டு கைகளையும் எடுத்து அவள் 
இஆடையையும் பிருட்டத்தையும் மார்பையும் ஆராய்ந்து,
 தடவி திருப்திப்பட்டார். 'இஆன்றிரவே என்னுடைய சயன அறை மஞ்சத்துக்கு வந்துவிடு' 
என்றார். அந்தக் கணமே அவள் 37வது ஆசைநாயகியாக
 நியமனம் ஆனாள்.
 
 அன்று சேடிகள் லூசியாவை பட்டுடையினால் அலங்கரித்தார்கள். அவள் தன் வாழ்நாளில் 
கண்டிராத நகைகளை எல்லாம் அவளுக்கு அணிவித்தார்கள்.
 அவற்றை எந்த அங்கத்தில் அணிவது, எப்படி பூட்டுவது என்பதெல்லாம் லூசியாவுக்கு 
தெரியவில்லை. அவளுடைய எடை கூடி நடப்பதற்கே
 சிரமப்பட்டாள். அவள் நடக்கும்போது உடம்பிலிருந்து பலவிதமான ஒலிகள் எழுந்தன. சேடிகள் 
லூசியாவை மஞ்சத்துக்கு அழைத்துவந்தபோது
 அடிமைகள் அரசனுக்கு இஆரவு ஆடை அணிவித்துக்கொண்டிருந்தார்கள்.
 
 அவளுடைய சேடிகள் பக்கத்திலே நிற்க லூசியா தலைகுனிந்து நின்றாள். பஞ்சணையில் 
சாய்ந்தபடி அவள் அழகை அரசன் சில கணங்கள்
 ரசித்தான். பிறகு கைகளைத் தட்டினான். ஆஅவ்வளவு நேரமாக ஆடைகளை புனைந்து, ஆபரணங்களை 
ஒவ்வொன்றாகப் பூட்டிய சேடிகள் அவற்றை
 அவசர அவசரமாக கழற்றத் தொடங்கினார்கள். ஆகழற்றி கழற்றி தட்டத்தில் அடுக்க அதன் உயரம் 
கூடிக்கொண்டுவந்தது. ஆஇறுதியில் லூசியாவின்
 உள்ளாடை தெரியத் தொடங்கியதும் அரசன் காலினால் ஒரு சேடியை எட்டி உதைத்தான். அவள் 
விழுந்து எழுந்து ஓடினாள். மற்றவளும் உரித்த
 துகிலையும், குவித்த ஆபரணத்தட்டையும் கையில் ஏந்தியபடி கணத்தில் மறைந்தாள்.
 
 'நான் புள்ளிபோட்ட பட்டத்து யானையில் அவ்ருத்த பவனி வரும்போது நீ எனக்குப் 
பக்கத்தில் அமரவேண்டும்' என்றான் அரசன். அவள் தலையை 
குனிந்து சரி என்பதுபோல ஆட்டினாள். 'ஓ, நான் மறந்துவிட்டேன். ஆங்கிலத்தில் சொல்' 
என்றான். அவள் பதிலை ஆங்கிலத்தில் சொன்னாள். 
'என்னுடைய அம்மாவின் பெயர் உனக்கு தெரியுமா? டொன்னா காதரீனா. அது 
போர்த்துக்கீயர்கள் சூட்டிய கத்தோலிக்க பேர். உன்னுடைய 
பெயர் லூசியா. எங்கள் பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம்?' என்று கேட்டுவிட்டு அவன் 
ஆஇடியிடியென்று குலுங்கி சிரித்தான். பிறகு 'ஓ, என் 
நீலக்கண் ஆங்கிலக்காரியே' என்று அவளை ஆஇழுத்து தன்னுடம்போடு அணைத்தான். அவனுடைய 
பெரிய ஆகிருதிக்குள் அவளுடைய சிறிய உடல்
 சுலபமாக மறைந்துகொண்டது
 
 லூசியா திரும்பி மன்னரைப் பார்த்தாள். ஓர் அசிங்கமான உடல் மஞ்சத்தின்மீது 
குறுக்காகப் படுத்துக் கிடந்தது. மன்னருடைய வயிறு மேலுக்கு 
போவதும் கீழுக்கு வருவதுமாக இருந்தது. எப்படித்தான் உற்று நோக்கினாலும் காற்று அந்த 
உடலுக்குள் எந்த வழியாக உள்ளே போகிறது என்பது 
தெரியவில்லை. ஆனால் அது வெளியே வரும்போது பேரிரைச்சலுடன் வந்தது. லூசியா எங்கே 
படுக்கலாம் என்று சுற்றுமுற்றும் ஆராய்ந்தாள். அங்கே 
சேவை செய்த பதினாறு தாதியரில் ஒருத்திகூட அவள் எங்கே சயனிக்க வேண்டும் என்பதை 
சொல்லிக் கொடுக்கவில்லை.
 
 வெளியே கறுப்பு அடிமையின் காலடி சத்தம் கேட்டது. அவன் யாரைக் காவல் காக்கிறான் என்ற 
எண்ணம் திடீரென்று எழுந்தது. ஒருவேளை அவள் 
தப்பி போய்விடாமல் இருக்கத்தான் அவன் அந்தளவு பெரிய வாளை உருவிக்கொண்டு 
உலாத்துகிறானோ? மன்னருடைய தாடி அவருடைய வெள்ளை 
உள்ளாடையில் உரசி மடிந்துபோய் கிடந்தது. தலையில் மன்னருக்கு முக்கால்வாசி வழுக்கை. 
அவர் நாலு மூலை கிரீடம் அணிந்திருந்தபோது அந்த 
வழுக்கை சாமர்த்தியமாக மறைக்கப்பட்டிருந்தது. அவர் கால்களுக்கிடையில் கிடந்தது 
வெள்ளை உள்ளாடை வழியாகத் தெரிந்தது. அது 
இஆறந்துபோன வௌவால் போலவே அவளுக்கு அப்போது தோன்றியது.
 
 நாழிகைப் பாத்திரத்தில் மறுபடியும் தண்ணீர் நிறைத்து வைக்கும் சத்தம் கேட்டது. நாலு 
நாழிகைகள் ஓடிவிட்டன. நாளை இஆரண்டு ஆங்கிலேயத் 
தூதுவர்கள் மன்னனைப் பார்க்க வருவார்கள் என்று மன்னன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 
அவர்கள் என்ன காரியமாக வருகிறார்கள் என்பது 
அவளுக்கு தெரியவில்லை. திரை மறைவிலிஆருந்து அவள் அவர்கள் பேசுவதைக் கேட்பாள். 
பின்பு அரசருக்கு அதை சொல்லவேண்டும். அரண்மனை 
மொழிபெயர்ப்பாளரில் மன்னர் சந்தேகம் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன தண்டனை 
கிடைக்கும்? முதலைகளுக்கு தின்னக் கொடுப்பார் என்றே 
நினைத்தாள்.
 
 இந்த தூதுவர்களை அவளுடைய அப்பா ஏற்பாடு செய்திருக்கலாம் என்று பட்டது அவளுக்கு. 
தான் அரசருடைய 37வது ஆசைநாயகியான செய்தி
 அவருக்கு போயிருக்குமா? அது தெரிந்தால் தன்னை விடுவிக்கும் முயற்சியை 
நிறுத்திவிடுவாரா? அவர் சந்தோசப்படுவாரா அல்லது துக்கப்படுவாரா?
 அவளால் ஒன்றுமே யூகிக்க முடியவில்லை. ஆசைநாயகி என்றாலும் அவருக்கு தன் மகளை எப்படி 
மறக்கமுடியும்?
 
 வரப்போகும் தூதுக்குழுவுடன் தனிமையில் பேசுவதற்கு ஏதாவது வழியிருக்குமா என்று 
லூசியா யோசித்தாள். ஆஇரண்டாவது ராஜசிங்கனின் 37வது 
ஆசைநாயகி ஆங்கிலம் பேசுவதைப் பார்க்கும்போது அந்த தூதுவர்களின் முகம் எப்படிப் 
போகும் என்பதை நினைத்தபோது அவளுக்கு சிரிப்பாக 
வந்தது. அவளுடைய அப்பாவின் வீரச்செயல்களை மற்றவர்கள் சொல்லி அவள் கேட்டிருக்கிறாள். 
எப்படியும் அவளை அழைத்துப்போக அவர் வருவார்.
நாளைக்கே அவளுக்கு விடுதலை கிடைத்தாலும் கிடைக்கலாம்.
 
 அவள்போல அன்றிரவு முழுக்க தூங்காமல் ஆஇருவர் இஆருந்தனர். ஒருவன் வாள் உருவிய 
கறுப்பு அடிமை. மற்றவன் நாழிகை பாத்திரத்தை 
நிறைத்து வைக்கும் நாழிகைக்காரன். யார் தூங்கினாலும் நாழிகைக்காரன் தூங்க முடியாது. 
அவன் தூங்கினால் காலம் நின்றுபோகும். அவனுடைய 
மூச்சும் நின்றுபோகும்.
 
 நாழிகைக்காரன்போல அவள் தூங்காமல் கழித்தது 1680ம் ஆண்டு நவம்பர் மாதத்து 6ம் தேதி 
இஆரவு. ரோபர்ட் நொக்ஸ் வழி தெரியாமல் பல 
மாதங்கள் காட்டில் அலைந்து ஆகடைசியாக சிலோனின் டச்சுப் பிரதேசத்திலுள்ள அரிப்புக் 
கோட்டைக்கு போய்ச் சேர்ந்தான். அங்கே மேசையில் 
டச்சுக்காரர்களுடன் உட்கார்ந்து, இருபது வருடங்களுக்கு பிறகு, பீங்கான் கோப்பையில் 
உணவருந்தினான். அடுத்தநாள் யாழ்ப்பாண பட்டினத்தின் 
கோட்டை அதிபதியுடன் கொழும்புக்கு பயணமாகி அங்கிருந்து ஆஇங்கிலாந்துக்கு கப்பல் 
ஏறினான். இஆந்தப் பயணத்தை செய்துமுடிக்க அவனுக்கு 
16 மாதங்கள் பிடித்தன. இந்த 16 மாதங்களில் ஒருநாள்கூட அவன் பைபிளை வாசிக்கத் 
தவறவில்லை. லூசியாவுக்கு வாக்கு கொடுத்ததுபோல 
கிழக்கிந்திய கம்பனியில் அவன் சீக்கிரம் சேருவான். அப்போது சிலோன் நிலவரங்கள் பற்றி 
அவர்களிடம் தன் அபிப்பிராயத்தை கூறுவதற்கு
அவனுக்கு நிறைய வாய்ப்பு கிட்டும்.
 
 மேலும் ஏழு வருடங்கள் கழித்து இஆரண்டாம் ராஜசிங்கன் இஆறந்துபோவான். அப்போது 
லூசியாவுக்கு வயது 22 ஆகும். அரசனின் மரணத்தை 
தொடர்ந்து நாட்டில் குழப்பங்கள் உண்டாகும். டச்சுக்காரருடைய ராச்சியம் முடிந்து 
ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமாகும். அதற்கெல்லாம் ஆஇன்னும் 
118 வருடங்கள் அவள் காத்திருக்கவேண்டியிருக்கும்.
 
 amuttu@gmail.com
 |