இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2010 இதழ் 121  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை
நுவல்

- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -

கமலாதேவி அரவிந்தன்அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது. திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு இந்த பட்சி ஸ்நேகம்?? ரேணுவை அதற்குமேலும் திகைக்க வைக்காமல், மாதவன் விளக்கினார். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது,சிக்னலுக்காக வண்டியை நிறுத்திய நேரத்தில், அவருடைய காருக்குள் பறந்து வந்து ஸ்டீரியங்கின் மேலேயே அமர்ந்து விட்டதாம். கார்க் கண்ணாடியை ஒரு விநாடி திறந்ததில் அந்தப் பட்சிக்கு நேர்ந்த துரதிருஷ்டமா? அல்லது அந்த ஒரு வினாடி தோன்றிய பாசத்தில், ஏன் அதை நாமே கொண்டுபோய் வளர்க்கக்கூடாது, என்று மாதவனுக்கு தோன்றிய அதிருஷ்டமா? என்று தெரியவில்லை. உடனே ஒரு கூண்டு வாங்கி, பறவையை, பதவிசாய், அதற்குள் வைத்து , பட்டுப்போல் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டாராம். ரேணுவுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம் என்ன தெரியுமா?. நண்பர்களின் வீட்டுக்குப்போனால் கூட,பூனையையோ, நாயையோ, அவர்கள் மடியில் வைத்து கொஞ்சுவதைக் கண்டாலே, எட்டடி தள்ளிப்போய், அருவருப்போடு, அமர்ந்து விடும் மாதவனுக்கு, எப்படி, இப்படி ஒரு ஜீவியின் மேல் பாசம் வந்தது, என்பதைத் தான் ரேணுவால் நம்பவே முடியவில்லை.ஆனாலும் கணவரின் உற்சாகம் கண்டபோது, மனைவியாய் , லட்சணமாய், தானும் அருகில் போய் நின்று கொண்டாள். ரேணுவுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இது என்ன புறாவா?அல்லது குருவியா?, இல்லை, ஏதாவது மைனாவா?

அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது. திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு இந்த பட்சி ஸ்நேகம்?? ரேணுவை அதற்குமேலும் திகைக்க வைக்காமல், மாதவன் விளக்கினார்.வந்ததே கோபம் மாதவனுக்கு. இது ஒன்றும் புறாவோ, மைனாவோ,அல்ல. இதுதான் கிளி. புரிகிறதா? என்றபோது தான் சத்தியமாய், அது கிளி என்றே ரேணுவுக்கு புரிந்தது. கிளி என்றால் மூக்கு நீண்டு, உடம்பெல்லாம் பல வர்ணங்களில்,மனதைக்கவரும் அழகிய பட்சி என்பதுதான் அவளது அறிவின் அனுபவம். ஆனால் மாதவன் கொண்டு வந்த கிளியோ , ரொம்ப வித்தியாசமாக இருந்தது.வளைந்த மூக்கு மட்டும் தான் கிளி மூக்கு. மீண்டும் உற்று நோக்கினாள் .இரண்டு சிட்டுக் கண்களுக்குக் கீழே, கூர்மையாய் வளைந்த மூக்கும், இரண்டு சாதா சிறகுகளுமாய்,கழுத்துக்குக் கீழ், குட்டிக் குட்டி கறுப்புப் பொட்டுக்களும், உடம்பெல்லாம் நீல வர்ண மேகப் புள்ளிகளுமாய், பார்க்க என்னமோ கிளி தான், என்றாலும் கூட, என்னவோ, நெருடியது.

என்ன, என்ன, அது? ஏதோ, எங்கோ நெருடியது. கணவர் திட்டினார். உனக்கு எதில் தான் சந்தேகமில்லை? ஆனால், மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய குழந்தைகள்,கிளியின் வருகையில் அப்படியே மெய்ம் மறந்து போனார்கள். கிளிக்கூண்டை விட்டு, இந்தண்டை, அந்தண்டை நகரவில்லை.குழந்தைகள் கண்களுக்கு கிளி சொக்க வைக்கும் அழகாக இருந்தது. ஹலோ”, என்று மாதவன் கிளியைக் கொஞ்சினார். குழந்தைகளில் பெரியவன் சாரதி,”ஹாய், ஸ்வீட்டி! என்று குசலம் விசாரித்தான்.இளையவன் செந்தில், மை, பேபி;! என்று மழலையில் மிழற்றினான். பொறுக்கவில்லை ரேணுவுக்கு.

“இது என்ன கண்றாவிக் கொஞ்சல்! கிளியாக இருந்தாலும் , அதையும் மரியாதையாகக் கொஞ்ச வேண்டாமா?"

’ இதற்கு நாம் ஒரு பெயர் வைத்தாலென்ன?”

”அருமையான ஐடியாதான்!.எங்கே நீ தான் ஒரு பெயரைச் சொல்லேன்!”என்று மாதவன் முடிக்கவில்லை ”அசுவதி”, என்ற பெயர் அவளையும் அறியாமல் வாயில் வந்து விட்டது. பட்டென்று கூறினார் மாதவன்.

"உன்னுடைய கதாநாயகிகளுக்கும் பெயர் அசுவதி,. நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு,ஆசையோடு ஒரு பெயர் கேட்டாலும் அசுவதிதான். போதாக்குறைக்கு, இப்பொழுது என் கிளிக்கும் பெயர் அசுவதிதானா? இந்த பெயரை விட்டால் வேறே பெயரே தெரியாதா உனக்கு?"

ரேணுவுக்கு மட்டும் கோபம் வராதா?ஆனால் செய்கையில் வெளிப்பட்டது பொட்டென்ற விம்மல் தான்.

”சரி!, எனக்குத்தான் தெரியவில்லை. நீங்களே ஒரு பெயர் சொல்லுங்கள், அந்தப்பெயரிலேயே அழைப்போம்"

“அது,அது, உடனே எப்படிச் சொல்வது?யோசித்துத்தான் சொல்லவேண்டும்!“என்று மாதவன் திரு திருவென்று விழிக்க, உண்மையிலேயே சிரிப்பு வந்து விட்டது. குழந்தைகளுக்கானால் கிளிக்கு நாமகரணம் கண்டுபிடிக்கும் வரை பொறுக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு,ஸ்வீட்டி, பேபி,என்று கிளியைக் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். கணவரைப் பார்க்கப்பார்க்க வியப்பும் வேடிக்கையும் தாளவில்லை. பெற்ற குழந்தைகளைத் தவிர, இன்றுவரை வேற்றுக் குழந்தைகளைக் கையால் கூடத் தொட்டறியாதவருக்கு இந்தக்கிளியின் மீது இவ்வளவு பற்றுதலா? என்னமோ உலக அழகிக்குப் பட்டம் கொடுப்பது போல் யோசித்து பெயர் சூட்ட வேண்டுமாமே! இதெல்லாம் அந்நிமிட சம்பவமே தவிர, அதற்குப்பின் , கிளியின் வரவால் வீட்டின் சூழ்நிலையே மாறித்தான் போனது.

மாதவன் காலையில் அலுவலகம் புறப்படும் முன்னர், பத்து நிமிடமாவது,கிளியின் அருகில் அமர்ந்து, “ஹலோ, குட்டி, சாப்பிட்டாயாம்மா? இரவு தூங்கினாயா?”என்று குசலம் விசாரிக்க மறக்கவில்லை.குழந்தைகளும் மிக பொறுப்பாய், வீட்டுக்கு, பெரிய மனுஷியிடம் விடைபெறுவதைப்போல்,”பை,பை”!என்று கிளியிடம் சொல்லிக்கொண்டே பள்ளிக்குப் புறப்பட்டுப்போனார்கள். உடனே சினிமாவில், கதைகளில் எல்லாம் வருவதுபோல், இறகுகளைப் பட, படவென்று அடித்தோ, கழுத்தை வளைத்தோ, மூக்கை வளைத்தோ, கிளி ஒன்றும் விடை கொடுக்கவில்லை.இவர்கள் தான் பேசினார்களே தவிர, அது பாட்டுக்கு ,தான்யத்தைக் கொத்திக்கொண்டோ, அல்லது குனிந்து நீரைக் குடித்துக்கொண்டோ தானிருந்ததே தவிர, எவரையும் ஏறிட்டும் பார்த்ததாகவே தெரியவில்லை.

அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது. திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு இந்த பட்சி ஸ்நேகம்?? ரேணுவை அதற்குமேலும் திகைக்க வைக்காமல், மாதவன் விளக்கினார்.முதல் ஒரு வாரத்துக்கு ரேணுவுக்கு உண்டான எரிச்சலும், கோபமும் கொஞ்ச நஞ்சமல்ல. இருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில், கிளியின் பராமரிப்பும் அவள் தலையில் விழுந்ததில், அழாத குறையாகத்தான், கிளிக்கூண்டை சுத்தப்படுத்தினாள்..வேண்டா வெறுப்பாகத்தான், அதற்குத்தான்யமும், பழங்களும் வைத்தாள்..அத்தருணங்களில் மட்டுமே, கிளியின் ரூபத்தைக் கவனித்தாளே தவிர, மற்றபடி அதனுடன் கதைக்கவோ, , கொஞ்சவோகூட.அவளுக்கு நேரமிருக்கவில்லை. ஒரு நாள் நள்ளிரவில் , இரண்டு மணிக்குமேல், எழுதிக்கொண்டிருந்த ரேணுவுக்கு,” க்ற்றீச்,கிற்ற்றீச்! என்ற விநோத சப்தம் , திடுக்கிட்டு ஏறிட வைத்தது.அடடா! கிளிக்குட்டியல்லவா சப்தப்படுத்துகிறது.!என்னவாம்??? என்றவாறே கிளிக்கூண்டின் அருகே போனாள். தண்ணீர் குடிக்கும் குட்டிக்குப்பி ஒரு பக்கமாய் சரிந்து கிடக்க ,நீர் குடிக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தது கிளி. , அந்த இயலாமையில் தான் க்க்ற்ர்ரீச்,”! ஒலியா?. குப்பியில் புதிய நீரை நிரப்பி உள்ளே சொருகியதும், கிளி ஆவலுடன் நீரைக்குடிக்கும் காட்சி, அந்த நள்ளிரவு நேரத்தில் , ஏனோ அவ்வளவு ரம்மியமாகப்பட்டது ரேணுவுக்கு. தண்ணீர் குடித்து முடித்த கிளியை கூண்டுக்குள் கையை விட்டு,தன் கைக்குள் எடுத்துக்கொண்டாள்..நடுங்கிகொண்டிருந்த கிளியை மெல்ல தடவிக்கொடுத்தாள்.. ஏனோ அது ரேணுவைப் பட்சமாய் பார்ப்பதாய்த்தான் பட்டது. இந்த நள்ளிரவில் என் பிழைப்புத்தான் இப்படியென்றால், உனக்கும் கூடவா தூக்கமில்லை? என்று செல்லமாய்க் கொஞ்சினாள். இப்பொழுது கிளி அவள் கையைக் கொத்தத் தொடங்கியது.உள்ளங்கையில் இருக்க ஏனோ அதற்குப் பிடிக்கவில்லை, என்பதை ரேணுவால் உணர முடிந்தது.மீண்டும் கிளியை அவள் பரிவோடு தடவிக்கொடுத்தாள்..இப்பொழுது கிளி வேகமாகக் கொத்துவதும் ,நெளிவதுமாக,சிரமப்படுவது கண்டு,கூண்டுக்குள் கிளியை ஒப்படைத்துவிட்டு, கதவைச்சாற்றினாள்.ஆனால் அதற்குப்பிறகு ரேணு எழுததொடங்கி, சில நிமிடங்களுக்குப்பிறகு, யதேச்சையாக, கிளிக்கூண்டப்பார்த்தபோது, சரிந்து படுத்துக்கொண்டு ,கிளி அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கிளிக்கூண்டை விட்டத்தில் தொங்க விடாமல், தன் எதிரேயே வைத்துக்கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.. அடடா? இப்படி விளக்கை எரியவிட்டு எழுதிக்கொண்டிருந்தால், கிளிக்குத் தூங்க முடியுமா? அதுதான் இப்படிக்கோணக்கண்களால், தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறதா? பேசாமல் கூண்டை விட்டத்தில் தொங்க விட்டுத் திரும்பியிருக்கமாட்டாள். கிற்றீச்! எனக் கிளியின் கீச்சொலி. கூண்டுக்கம்பியின் மேல் தொங்கிக்கொண்டு, கிளி இப்பொழுது விடாமல் கத்தத் தொடங்கியது. என்ன வேணுமாம்! அருகில் சென்று கூண்டை கையிலெடுத்த மறுகணம், கிளியின் விராட்’, கத்தல் நின்றுபோனது தான் ஆச்சரியம். ஏனோ ரேணுவுக்கு திடீரென்று ஒரு புதுக்கவிதை நினைவுக்கு வந்தது. சஹானா ராகத்தில் மெல்லப் பாடினாள்.கிளி மெளனமாக இவளையே கவனிக்க ,இவள் ரசித்து ரசித்துப் பாடினாள்.

அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது. திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு இந்த பட்சி ஸ்நேகம்?? ரேணுவை அதற்குமேலும் திகைக்க வைக்காமல், மாதவன் விளக்கினார்.இப்பொழுதெல்லாம் கிளியும் ரேணுவும் மிகவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். பொழுது விடிந்தும் விடியாமலும் , கண்ணைப்பிட்டுக்கொண்டதுமே,கண்கள் கிளி மகளைத்தான் தேடும்.முதல் வேலை, கிளிக்கு ”குட் மோர்னிங் “! சொல்வதுதான். கிளியை அத்தனை பதனமாகக் குளிப்பாட்டினாள். கூண்டுக்குள் அங்குமிங்கும் பறந்து அவளைப் பாடாய்ப் படுத்திய பிறகே, தண்ணீர் உடம்பில் பட சம்மதித்தது கிளிக்குட்டி. வெளியில் போவதென்றாலும் கூட, ”கண்மணி, போய் வரவா?!, என்றுதான் விடை பெற்றாள்.மொத்தத்தில் ரேணுவின் அத்தனை அசைவிலும் கிளிக்குழந்தை இருந்தாள். அன்று புதிதாகக் கற்ற, நாட்டிய அடவு ஒன்றை, கிளியின் முன் ஆடிக்காட்டினாள். அனைத்துக்கதவையும் இறுக சாற்றி விட்டு, மூச்சைப் பிடித்துக் கொண்டு,களறி, செய்து காட்டினாள். ”கி, கிகீற்றீச்”, இப்பொழுது கிளிக்குட்டி சிரிப்பதாகப் பட்டது ரேணுவுக்கு. ஆங்கிலக் கவிதையை ,நவீனபாணியில் பதம் பிடித்து ஆடினாள்,.கிளி என்னவோ ரசித்து மகிழ்வதாகவே அசாத்ய நம்பிக்கை ரேணுவுக்கு. கிளியின் முன்னால் அத்தனை அப்பியாசங்களும் செய்து காட்டிக்கொண்டிருக்கும் போது தான், தேவராகம் போல் தொலைபேசி கிணுகிணுத்தது. அவ்வளவு நேரமும் அமைதியாயிருந்த கிளி, திடீரென்று படபடவென்று இறக்கைகளை அடித்துக்கொண்டு, கூண்டுக்குள் அப்படியும் இப்படியுமாகப் பறந்து அலைபாயத் தொடங்கிவிட்டது. இவள் கவலைப்படவில்லை. தோழியிடம் பேசிவிட்டு, தொலைபேசியை வைத்ததும், ”விராட்” என்று வினோதமாகக் கத்தியது. உடனே கூண்டைத்திறந்து,கிளியை நெஞ்சோடணைத்து ரேணு அன்பொழுக முத்தமிட்டாள் . அடுத்த கணம் ,என்ன, ஏது, என்று கூட நிதானிப்பதற்குள் அது நிகழ்ந்து விட்டது. பொறி கலங்கிப்போய் நெஞ்சை அழுத்திப்பிடிக்க, அந்தக்கைகளிலும் கிளி கொத்தியது. கையை எடுத்தவுடன் வேகம் வேகமாக, கிளி நெஞ்சில் கொத்திக்கொண்டே இருந்தது. பொட்டுப்பொட்டென்று கிளியின் கொத்தலில், சுரீர் சுரீரென்று வலியில் ரேணு அதிர்ந்து போனாள். நெஞ்சைப்பிடித்துக்கொண்டு, அப்படியே கீழே அமர்ந்து விட்டாள். அடுத்தகணம் கிளியும் பறந்து வந்து , கீழே தரையில் அவளை ஏறிட்டவாறு, அவள் எதிரே அமர்ந்து கொண்டது. கத்தவில்லை. அசையவில்லை. அப்படி வைத்த கண் வாங்காமல் இவளையே , வெறித்துப் பார்த்துக்கொண்டு சம்பிரம்மமாய் அமர்ந்து விட்டது.கோபம் போன இடம் தெரியவில்லை.வலியையும் மறந்து, கிளியை பாசத்தோடு வருடிக்கொடுத்தாள் ரேணு. அன்றிரவு ரேணு ஒரு தவறு செய்துவிட்டாள்.முக்கியமான மொழிபெயர்ப்புக்கதை ஒன்றை அரும்பாடு பட்டு, உருவாக்கிக் கொண்டிருந்தபோது, கிளியின் ”க்ற்ற்றீச்’ சிடலை கவனிக்க முடியவில்லை. அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது கிளி. விராட்,விராட் , என்று கத்திப்பார்த்தது. அடிக்குரலில் வழக்கமான ,க்க்ற்றீச்”என்று உறுமிப் பார்த்தது. இவளுக்கானால் , குறிப்பிட்ட சொல்லுக்கு, மலையாளத்தில் , பொருத்தமான வடிவம் கிட்ட, பரிதவித்துக்கொண்டிருந்த கவலையில், எந்த ஸ்மரணையுமே இல்லை.மோனமே, தவமாய், வரிவடிவத்தில், லயித்துப்போயிருந்தாள். ரேணுவைச் சுற்றி சுற்றி வந்த கிளி, நெஞ்சினருகில் வந்தமர்ந்தது. பளீரென்று நெஞ்சில் கொத்தியது. ஒரு விநாடி வலியில் பொறி கலங்கிப்போய், கண்ணீரே வந்து விட்டது. ”சீ,கழுதை,”! என திட்டி விட்டாள். ரேணு சற்றும் எதிர்பார்க்கும் முன்பே , மீண்டும் நெஞ்சில் வன்மையாகக் கொத்தியது .வலியில் துடித்துப்போன ரேணுவால் தாங்கவே முடியவில்லை. “கழுதை, கழுதை, நீ, கிளியல்ல, கழுதைக்குட்டி, “ என்று கோபத்தோடு கிளியை, நெஞ்சிலிருந்து வலுக் கட்டாயமாகத் தள்ளி விட, அடுத்த கணம் அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே,கிளி ஜன்னல் வழியாக பறந்து போனது. ஒருவழியாக ரேணு நிதானத்துக்கு வந்த பிறகு பார்த்தால், கிளியைக்காணோம்.. வெளியில் பறந்துபோன கிளி பின் வரவே இல்லையா? ஹா! என விக்கித்துப்போனாள் ரேணு ! மறுநாள் குழந்தைகளிலிருந்து , மாதவன் வரை தவித்துப்போனார்கள். என்ன செய்தாய்? என்று யாருமே ரேணுவைக் கேட்கவில்லை. அதுவரை அவள் பிழைத்தாள். ஆனால், இரண்டே நாட்களில், பித்துப் பிடித்தாற் போலானாள் ரேணு.

அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது. திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு இந்த பட்சி ஸ்நேகம்?? ரேணுவை அதற்குமேலும் திகைக்க வைக்காமல், மாதவன் விளக்கினார்.”உண்மையா? ஞான் திட்டியதால் தான் நீ பறந்து போனாயா? எங்கே போனாய் கண்மணி?” நிலையிழந்து தவித்துருகினாள். மூன்றாவது நாள் ஜன்னலருகில் நின்ற போது ரேணு அழுதாள். கிளி வரவே இல்லை. அன்று மாலை மாதவனோடு கோயிலுக்குச்சென்றாள். வீடு திரும்பும் போதே, வீட்டில் கிளிமகள் வந்திருப்பாளோ, என்ற அசட்டு நம்பிக்கையிலேயே உள்ளே நுழைந்தாள். ஏமாற்றம் இம்மட்டு அம்மட்டல்ல.ரேணுவால் எழுத முடியவில்லை. பாடல் கேட்க முடியவில்லை. பொருந்தி நின்று எதையுமே செய்ய முடியவில்லை. இனி கிளி மகள் வரவே மாட்டாள், என்ற நிதர்சனம் உறைக்கவுமில்லை. அன்றிரவு மாதவன் உறங்கியபின்னர், மெல்ல கட்டிலிலிருந்து எழுந்து வந்து, ஜன்னல் கம்பிகளூடே நோக்க வானம் விரிந்து கிடந்தது. நட்சத்திரங்கள் ஒன்றும் கூட அசங்கவில்லை. திரும்பி வந்து கட்டிலில் அமர, ’” ”கிற்ற்றீச்!, கிற்ற்றீச்!” என்ற ஒலி. ஒரு வேளை, பிரம்மைதானோ,என்று திரும்பினால்,மொட்டுப்போல், ஜன்னல் கம்பிகளில் நிற்கிறாள் கிளிமகள் !. கண்மணி, நீயா!, நீயேதானா?! பரவசத்தில் அழுகையே வந்து விட்டது ரேணுவுக்கு. கைகளில் ஆசையோடு எடுத்தபோது, உரிமையோடு கிளிக்குட்டி நெஞ்சிலணைந்து கொண்டாள், அடுத்த கணம் இன்னும் உரிமையோடு தன்னுடைய நீண்ட அலகினால், கொத்தத் தொடங்கி விட்டது. துடித்துத் துடித்து வலியை அனுபவித்த ரேணு இப்பொழுது கிளியைத் திட்டவில்லை.

kamaladeviaravind@hotmail.com
http://www.kamalagaanam.blogspot.com

 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்