| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| அரசியல்! |  
| மாறுதலைத் தேடிடும் தேர்தல் 
 - சக்தி சக்திதாசன் -
 
 
  “வந்திட்டங்காய்யா ! வந்திட்டாங்க !” வடிவேலின் முத்திரை வார்த்தைகள் 
            தான் ஞாபகத்திற்கு வருகின்றன. என்ன? இவன் எதைப் பற்றிக் கூறுகிறான் 
            என்று உங்கள் புருவம் சுருங்குவது புரிகிறது. இங்கிலாந்துப் 
            பாரளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களைத்தான் குறிப்பிடுகிறேன். மே மாதம் 
            6ம் திகதி 
            இங்கிலாந்தின் அடுத்த நான்கு வருட ஆட்சி யார் கையில் போகப் போகிறது 
            என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் நிகழப் போகிறது.. பிரச்சாரங்களோ 
            படுவேகமாக நிகழ்கிறது. என்ன வழமையான தேர்தல் பிரசாரம் போலத்தானே 
            இருக்கும் இதிலென்ன பிரமாதம் என்று சலித்துக் கொள்ளாதீர்கள் 
            ஏனெனில் இத்தேர்தலுக்கும், கடந்த தேர்தல்களுக்கும் வித்தியாசம் 
            பிரதானமானது. 
 1930களுக்குப் பின்னால் உலகம் சந்தித்திருக்கும் பாரியப் பொருளாதாரப் 
            பின்னடைவு இங்கிலாந்தை அதிக அளவில் பாதித்திருப்பது ஒரு காரணி.
            அடுத்து இங்கிலாந்துப் பாரளுமன்ற அரசியல் சரித்திரத்தில் கண்டிராத 
            அளவில் அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை 
            நிலைகுலைந்து போகுமளவிற்கு பாரளுமன்ற உறுப்பினர்களின் செலவுகள் 
            குறித்து வெளியாகிய செய்திகள் சர்ச்சையைக் கிளப்பி விட்டது அடுத்த 
            காரணி. மூன்றாவதாக முதன்முறையாக இங்கிலாந்துப் பாரளுமன்றச் 
            சரித்திரத்தில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சித் 
            தலைவர்களுக்கிடையில் 
            தொலைக்காட்சியில் பொது விவாதம் நடத்தப்பட்டது மற்றுமொரு காரணி.
 
 வங்கிகளின் கட்டுப்பாடற்ற வியாபாரமுறைகளினால் பொருளாதர முன்னனி 
            நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், இங்கிலாந்து உட்பட்ட பல
            நாடுகளின் முக்கிய வங்கிகள் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டன. 
            நாட்டின் முக்கிய வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும்
            சாமான்ய சராசரி பிரஜைகளின் கடும் உழைப்பை இழக்கும் அபாயத்திற்கு 
            அவர்கள் தள்ளப்பட்டார்கள். பங்குச் சந்தைகள் படுவீழ்ச்சியடைந்தன. 
            இதுவரை இத்தகைய ஒரு பொருளாதரா நெருக்கடியை இத்தகைய முனையில் 
            சந்தித்திராத அந்நாட்டு அரசாங்கங்ளும் அவைக;ளின் தலைவர்களும் 
            பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துணிந்து எடுக்க வேண்டிய 
            நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி 
            நிறுத்த இனிமேலும் தனியார் முதலீடுகளை நம்பியிருக்க முடியாத நிலையில், 
            இங்கிலாந்துப் பிரதமர் கோர்டன் பிறவுண், வீழ்ச்சியடையும் 
            வங்கிகளையும், அவர்களின் சேமிப்பாளர்களையும் காக்கும் பொருட்டு 
            வங்கிகளில் பங்குகளை பெருமளவில் வாங்கி அவைகளைத் தூக்கி நிறுத்தினார்.
            பல முக்கிய பெயர் பெற்ற வங்கிகளில் அரசாங்கம் பிராதான பங்குகளை 
            வாங்கியது . அதைத் தொடர்ந்து ஜரோப்பிய அளவிலும், உலக அளவிலும்
            பல அரசியல் தலைவர்களின் சந்திப்புக்கு கோர்டன் பிறவுண் முன்னின்று 
            உழைத்து பொருளாதார நெருக்கடியத் தீர்க்க தானெடுத்த நடவடிக்கைகளின் 
            நியாயத்தை மற்றைய தலைவர்களுக்கு நிரூபிப்பதன் மூலம் அவர்களையும் 
            அதேபாதையில் பயணிக்கப் பண்ணினார்.
 
 
  பணமுடையால் வியாபாரங்களுக்கும், மக்களின் மனை கொள்வனவுக்கும் கடன் 
            கொடுக்கத் தயங்கிய வங்கிகளின் முலாமையாளர்களைச் சந்தித்து 
            திரும்ப வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுக்கத் தொடங்குவதன் மூலமே 
            முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை மீண்டும் நடக்கச்செய்யலாம் 
            என்பதை வலியுறுத்துவதோடு மிகவும் சர்ச்சைக்குர்ள்ளாகி பணம் அச்சிட்டு 
            வினியோகிக்கும் கொள்கையை முன்னெடுத்து பணப்புழக்கத்தைத் 
            துரிதப்படுத்தினார்.
            இங்கிலாந்துப் பிரதமர் எடுத்தநடவடிக்கைகள் எவ்வளவு தூரம் இங்கிலாந்துப் 
            பொருளாதார வீழ்ச்சியை மேலும் மோசமாகாமல் தடுத்து நிறுத்தியது 
            என்பது இன்னும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கிறது. இதன் வெற்றியின் 
            விகிதத்தை எதிர்காலச் சரித்திரங்கள் தான் நிர்ணயிக்கவேண்டும். 
 ஏறத்தாழ பதின்மூன்று வருடங்கள் தொடர்ந்து ஆட்சியிலிருந்த தொழிற் கட்சி 
            இப்பொருளாதாரச் சரிவினால் செல்வாக்கை மோசமாக இழந்தது. டோனி 
            பிளேயர் பிரதமராக இருந்தபோது ஈடுப்பட்ட ஈராக் யுத்தத்தினால் ஏற்கனவே 
            அரசின் மீது அதிருப்தி அடைந்திருந்த மக்களுக்கு இப்பொருளாதாரச் 
            சரிவிற்கான பொறுப்பை அரசாங்கத்தின் மீது திணிப்பது இலகுவாக இருந்தது.
 
 வழமையாக நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைப் போலல்லாது 
            இவ்வீழ்ச்சி உலகளவிலானது என்பதையோ, அதற்குக் காரணம் உலக 
            முன்னனி நாடுகள் அனைத்தினதும் வங்களின் நடவடிக்கைகள் என்பதையோ 
            ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இருக்கவில்லை. அத்துடன் இச்சுழலைத் 
            தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் காத்திருந்த எதிர்க்கட்சிகளின் 
            தீவிரப்பிரசாரம் அரசாங்கத்தின் செல்வாக்குச் சரிவிற்கு 
            உறுதுணையாகவிருந்தது
            என்பதும் உண்மையே. மேற்கூறிய தாக்கங்களினால் வீழ்ச்சியடைந்திருந்த 
            கோர்டன் பிறவுணினது அரசாங்கம் மற்றொரு பாரிய 
            தாக்குதலுக்குள்ளானது. ஆமாம் "பனைமரத்திலிருந்து விழ்ந்து கிடப்பவனின் 
            மீது ஒரு மாடு ஏறி உலக்கியதாம்" என்றொரு பழமொழி உண்டு.
 
 இங்கிலாந்து தினசரி நாளேடுகளில் ஒன்றான தினத்தந்தி (டெய்லி டெலிகிராப்) 
            என்னும் பத்திரிகை இங்கிலாந்து அரசியல் வானில் ஒரு பேரிடியைத்
            தூக்கிப் போட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சலுகைகளின் வழி 
            அரசிலிருந்து எவ்வகையான செலவுகளுக்கு எவ்வளவு பணத்தை
            கோரியுள்ளார்கள் என்னும் விபரங்கள் அடங்கிய சீடி ஒன்று 
            இப்பத்திரிகையின் கைகளில் கிடைக்க, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடியாக 
            முக்கிய
            அரசியல் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வண்டவாளங்களை 
            அப்பத்திரிக்கை அவிழ்க்கத் தொடங்கியது. அனைத்து ஊடகங்களும் 
            இதை இறுக்கிப் பிடிக்க அரசியல்வாதிகள் என்போர் தீண்டத்தகாதவர்கள் 
            போன்றதொரு நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பொருளாதார வீழ்ச்சியினால்
           
            தமது அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கே தத்தளிக்கும் மக்களுக்கு, 
            பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொகுசு வாழ்க்கைக்காக 
            அரசாங்கத்திலிருந்து 
            தாம் வரியின் மூலம் செலுத்தும் பணத்தை பெற்றுக்கொள்வது, அதைக் 
            கையாடுபதற்கு சமனாகத் தென்பட்டது.
 
 அதிகாரத்திலிருந்த தொழிற்கட்சிக்கும், கோர்டன் பிறவுணுக்குமே இதனால் 
            அதிக அளவில் பாரியத் தாக்கம் உண்டாகியது. இத்தேர்தலில் முக்கிய 
            மூன்று கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் தொலைக்காட்சியில் விவாதம் 
            நடைபெறும் என்ற அறிவித்தல் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 
            இதுவரை நடந்த தேர்தல்களில் எப்போதும் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படும் 
            சுதந்திர ஜனநாயகக் கட்சியும் (லிபரல் டெமகிரட்ஸ்) அதன் தலைவர் 
            நிக் கிளார்க்கும் இச்சந்தர்ப்பத்தை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் 
            கொண்டார்கள்.
 
 
  தலைவர்களுக்கிடையிலான முதலாவது சுற்று விவாதம் முடிந்ததும் சமீபகால 
            இங்கிலாந்து அரசியலில் கண்டிராத ஒரு புதிய திருப்பம் உண்டாகியது.
            ஆமாம் அரசியல்வாதிகளில் மிகவும் வெறுப்படைந்திருந்த இங்கிலாந்து 
            மக்களில் பலருக்கு இவ்விவாதத்தில் நிக் கிளார்க் ஈடுபட்ட விதமும், அவர்
        
            தனது கட்சியின் கொள்கைகளை முன்வைத்த விதமும் ஒரு புதுவிதத் தெம்பைக் 
            கொடுக்க, கருத்துக் கணிப்புக்களில் இதுவரை கண்டிராத வகையில் 
            கான்சர்வேடிவ் கட்சிக்கு நிகராக போட்டிபோடும் அளவிற்கு லிபரல் 
            டெமகிராட்ஸ் கட்சிக்கும் அதன் தலைவர் நிக் கிளார்க்குக்கும் ஆதரவு 
            வலுத்தது..
            விளைவு இதுவரை அரசிலிருந்த தொழிற்கட்சி மூன்றாம் இடத்துக் 
            தள்ளப்பட்டது. 
 இங்கிலாந்து அரசியல்வானை மிகவும் நன்றாக அவதானித்துக் 
            கொண்டிருப்போருக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்திருக்கும். 
            இருப்பவர்களுக்குள் பழுத்த 
            தலைவரான கோர்டன் பிறவுண் பொருளாதாரத்துறையில் மிகவும் திறமை உடையவராக 
            இருந்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதிலும், 
            அதேசமயம் மக்களைக் கவரக்கூடியவகையில் பேசுவதிலும் பின் தங்கியவராகவே 
            காணப்படுகிறார்.
 
 இன்றைய அரசியல் வானில் ஒருவர் நன்றாக அரசியல் தெரிந்தவர் என்பதனைக் 
            காட்டிலும் அவர் எவ்வகையில் தொலைக்காட்ச்சியிலும், 
            பொதுமேடைகளிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதிலேயே 
            அவருக்கான ஆதரவு தங்கியுள்ளது.
 
 அதைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது சுற்று தலைவர்களுக்கிடையிலான 
            விவாத,மும் முதலாவது சுற்றின் முடிவுகளையே ஒத்துப் போயிருந்தது.
            தொழிற்கட்சி தங்களுடைய பிரச்சார முறையை மாற்றியமைக்கவேண்டிய 
            கட்டாயத்துக்குள்ளக்கப்பட்டது. விளைவாகத் தலைவர் கோர்டன் பிரவுண் 
            முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டு ஊடக ஸ்தாபனங்களினால் நாடகம் போல 
            அமைக்கப்படும் பிரச்சாரமேடைகளை விடுத்து, சாதாரண 
            வாக்களர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடும் வகையிலான பிரச்சாரமுறையைத் 
            தேர்ந்தெடுத்தார்கள்.
 
 முன்னேற்றம் கண்டார்களா? இல்லையே அவர்களுக்கு அடுத்தொரு பேரிடியல்லவா 
            காத்திருந்தது.
 
 தொழிற்கட்சி ஆதரவாளரான ஒரு ஓய்வூதியம் பெற்ற பெண்மணி கோர்டன் பிறவுணின் 
            பிராச்சாரத்தின் போது அவரை எதிர் கொண்டு சர்வகலாசாலை 
            மாணவர்களின் கல்வி, ஓய்வூதியம், வெளிநாட்டவரின் குடிவரவு என்பது பற்றி 
            மிகவும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு இறுதியில் தான் 
            தொழிற்கட்சிக்கே வாக்களிக்கப் போவதாகக் கூறினார்.
 
 ஆனால் கோர்டன் பிரவுணைப் பற்றிக் கொண்ட துரதிருஷ்டம் அவரை விடவில்லை. 
            ஊடகத்துறையின் வசதிக்காக தனது மார்பில் அணிந்திருந்த சிறிய 
            ஒலிப்பெருக்கியைப் பற்றி அறவே மறந்து விட்ட பிரதமர் தனது காரில் 
            ஏறியதும், “யார் அந்தப் பெண்ணை என் முன்னால் கொண்டு விட்டது ? 
            சரியான நிறவெறி கொண்ட பெண்மணி அவர் " என்று பேசியது இங்கிலாந்து 
            மக்களின் அனைத்துக் காதுகளிலும் ஒலித்தது.
 
 தொழிற்கட்சி ஆதரவாளர்களினதும், வேட்பாளர்களினதும் காதுகளில் நரகாசுரமாக 
            ஒலித்த வார்த்தைகள், எதிர்க்கட்சிகள் காதுகளில் தேன்கானமாய் 
            இனித்தது.
 
 பிறகென்ன ? ஆரம்பிச்சுட்டாங்கய்யா ! ஆரம்பிச்சுட்டாங்க .
 
 தவிர்க்க முடியாமல் பிரதமர் பகிரங்கமாக தனது தப்பை தொலைகாட்சியில் 
            ஒத்துக்கொண்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு, அப்பெண்னின் 
            வீடுதேடிச் சென்று 40 நிமிடங்கள் உரையாடி நேரடியாக மன்னிப்பும் 
            கேட்டுக்கொண்டார்.
 
 ஆனால் அவர் மீது விழுந்த கறை விழுந்ததுதான். ஏற்கனவே கருத்துக் 
            கணிப்புகளின் படி மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த தொழிற்கட்சி
           
            படுபாதாளத்தில் விழுந்தது.
 
 அடுத்து நடந்த மூன்றாவது சுற்று விவாதத்தில் பிரதமர் கோர்டன் பிறவுண் 
            முன்வைத்த வாதங்கள் மிகவும் உண்மையானவைகளாகத் தென்பட்டாலும் 
            சூழல்களின் காரணமாக அவருக்கிருந்த ஆதரவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
 
 அதன் விளைவாக இதுவரை காலமும் இயல்பாகவே தேர்தல் போட்டியில் மூன்றாவது 
            இடத்தை வகிப்பதையே தனது வழமையாகக் கொண்டிருந்த
            லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தாமே இப்போது கன்சர்வேடிவ் கட்சிக்கு ஜாரிக்கு 
            ஜாரியாக போட்டியிடும் வல்லமை படைத்த கட்சி என்று துணிந்து 
            கோரும் நிலையை அடைந்துள்ளது.
 
 
  இந்தத்தேர்தல் நிச்சயமாக ஒரு மாறுதலை ஏற்படுத்தப் போகிறது என்பது 
            அனைத்துத் தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பினரும் இரண்டே இரண்டு முடிவுகளில் ஒன்றுதான் இத்தேர்தலில் கிடைக்கும் 
            என்று எதிர்பார்க்கப்படுகிறது.
            டேவிட் கமரன் தலமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் 
            கூடிய அரசை அமைக்கும்.
            நிக் கிளார்க் தலைமையிலான லிபரல் டெமகிரட்ஸ் இங்கிலாந்து அரசியலில் 
            ஏறக்குறைய எழுபது வருடங்களின் பின்னால் கூட்டரசாங்கத்தின்
            பெரும்பான்மைக் கட்சியாக அரசிலமரும்.
            இந்த இரண்டில் எது நடந்தாலும் இத்தேர்தல் நிச்சயமாக ஏற்படுத்தப்போவது 
            ஒரு மாற்றமே !
 
 ஆனால் இம்மாற்றத்தினால் இங்கிலாந்துப் பொருளாதாரம் தனது வீழ்ச்சியை 
            அடுத்து எடுத்திருக்கும் மெதுவான வளர்ச்சி தொடர்ந்து வளர்ச்சிப் 
            பாதையில் போகுமா அன்றி திரும்பவும் ஒரு வீழ்ச்சியை நோக்கிச் சறுக்குமா? 
            எனபதுவே கேள்வி.
 
 டேவிட் கமரன் தலைமையிலான எவ்வகையான அரசும் அவர்கள் கொண்டிருக்கும் 
            முதலாளித்துவ பழமைவாதக் கொள்கைகளினால் வீழ்ச்சியை
            நோக்கியே போகும் என்கிறார் கோர்டன் பிறவுண்.
 
 இல்லை எமது கட்சியின் மூலம் அமையும் அரசே எமது நாட்டை பொருளாதார 
            வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும் என்கிறார் கன்சர்வேடிவ்
            கட்சியின் தலைவர் டேவிட் கமரன்.
 
 போங்கப்பா ! இந்த நாட்டைக் காக்க என்னை விட்டால் யாருமில்லை என்கிரார் 
            லிபரல் டெமகிரட்ஸ் தலிவர் நிக் கிளார்க்.
 
 மே 6அம் திகதி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகப் போகிறது
 
 இந்தத் தேர்தல் கொண்டுவரும் மாற்றம் இங்கிலாந்தின் வளர்ச்சியா? 
            வீழ்ச்சியா? காலம் தான் பதிலளிக்க வேண்டும்
 
 ssakthi@btinternet.com
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |