- பட்டுக்கோட்டை தமிழ்மதி -
              
              
மருத்துவமனையில் தான்
              காயம் உங்களுக்கு.
              
              அஞ்சி ஒண்டிய
              பாடசாலையில் கற்பிக்கப்பட்டது
              அநீதி.
              
              ஆலயங்களில் நீங்கள்
              கைவிடப்பட்டீர்கள்.
              
              தன்
              சொந்தமண்ணில்
              அகதிகள் நீங்கள்
              
              பாதை மூடி
              பாதமளந்த மண்ணை
              கூண்டாக்கினார்கள்.
              
              பறந்து வந்த விமானம்
              உங்கள் தலையில்
              கொட்டிப் போனது
              குண்டு மழை.
              
              அந்த
              நெருப்புமழைக்கு
              அந்த
              கூண்டுக்குள்ளிருந்து
              நீங்கள் பிடிக்க
              குடை போதாது
              உங்களுக்கு
              நாடெனும் ஒரு
              கூரை வேண்டும்.
              
              கல்லடி படுகிறீர்கள்
              நீங்கள்
              காய்த்த மரங்கள்...
              
              உங்களின் கைகள்
              கல்லெடுத்தால்
              காய்விழாது
              எறிந்தவன்தான் வீழ்வான்.
              
              அவன்
              எறிகணை கொண்டு எறிகிறான்.
              
              எறிபவனை எறிய
              தானிருந்த கூண்டுக்குள்
              அவனை இருக்கவைத்து எறிய
              
              நீங்கள்
              ஏந்தும் நல்லாயுதம் 
              இயக்கும் நேரம் வரை
              அவர்களின்
              இலக்குக்கு ஆளாகாமல்
              இடம்பெயர்ந்தீர்கள்.
              
              நகர்தல் நல்லது
              வாழ்ந்த வாகரையைவிட்டு
              நகர்ந்தது நல்லது.
              
              பட்டினிகிடந்த மரங்களே
              நீங்கள்
              சாயும் மரங்களல்ல
              பதுங்கிப்
              பாயும் மரங்கள்.
              
              tamilmathi@tamilmathi.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




