பல்சுவை நிறைந்த காரை வசந்தம் 2008
- த. சிவபாலு -
கோடை காலம் முழவதும் கலை நிகழ்வுகள். ஆனால் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலமும்
வந்து மாரிகாலத்திலும் வசந்தம் வந்ததென்றால் அது காரை வசந்தமாகத்தான் இருக்கும்.
கனடா-காரை கலாச்சார மன்றத்தினரால் சிறப்பாக நடத்தப்பெற்றது. ஆர்மேனியன் இளைஞர்
நிலையத்தின் கலையரங்கில் இந்த விழா நிகழ்ந்தது. மங்கல விளக்கேற்றலுடன் காரைநகரைச்
சேர்ந்த சிறார்களால கனடிய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, மன்ற கீதம் என்பன
அழகாக இசைக்கப்பட்டன. அமைதிவணக்கம் செலுத்தப்பட்ட பின் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மன்ற செயற்குழு உறுப்பினர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதம்பிள்ளை வரவேற்புரை
நிகழ்த்தினார். தலைவர், பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், மற்றும்
வந்திருந்த கலைஞர்கள், ரசிகர்கள் அனைவரையும் அவர் வரவேற்று உரையாற்றினார்.
இந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார் திரு.ஞானபண்டிதன். வரவேற்புரையைத் தொடர்ந்து
தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய, வெற்றியீட்டிய
மாணவர்களுக்கு பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
விழாவுக்குப் பிரதம விருந்தினராக அமெரிக்காவிலிருந்து வைத்திய கலாநிதி ஆர்.
செல்வராசாவும் அவர்தம் பாரியார் வைத்திய கலாநிதி திருமதி சறோ செல்வராசாவும் வருகை
தந்திருந்தனர். சிவஸ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள், குழந்தைகள் வைத்திய நிபுணர் வைத்திய
கலாநிதி விஜயரத்தினம், பேராசிரியர் சிவகுமாரன், அதிபர்.பொ.கனகசபாபதி, மார்க்கம்
பிரதேச நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி, ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக வருகை
தந்;திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பரத சூடாமணி நடனக் கல்லூரி முதல்வர்
திருமதி துவாரகா கேதீஸ்வரனின் மாணவிகளின் ‘வரவேற்பு நடனத்துடன் கலை நிகழ்வுகள்
தொடங்கின. ஐந்து சிறுமியரின்; அழகிய இந்நடனம் வந்திருந்த அவையோரை உற்சாகமாக
வரவேற்றதோடு மட்டுமல்லாமல் தாயகத்தையும் ஒருமுறை நினைந்து வணங்குவதாக
அமைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து வடஇந்;தியசங்கீதம் என்னும் ஹிந்துஸ்தானிய இசை நிகழ்வு
இடம்பெற்றது. தர்பாரி சங்கீத சாலா நிறவன முதல்வர் ரஷ்னா மெஃராவின் மாணவி செல்வி
பிருந்தா ஜெயானந்தன் ஹிந்துஸ்தானி, ஹிந்திப் பாடல்களைப் பாடியதோடு ஹார்மோனியம்
வாத்திய இசையையும் வழங்கினார். எமது பிள்ளைகள் பண்ணிசை, மெல்லிசை, மேலைத்தேய இசை,
கர்நாடக இசையோடு இந்துஸ்தான் இசையையும் கற்றுக்கொள்ளும் நிலை காணப்படுவதனை
அவதானிக்க முடிந்தது. ஹிந்திப் பாடல்களைப் பாடுவதிலும், கேட்பதிலும்
நாட்டங்கொண்டுள்ள எம்மவர்கள் பலர் இருக்கின்றார்கள். அந்த வகையில் இந்த நிகழ்வு
தமிழ், கலை, கலாச்சாரத்தின் பாற்படவில்லை எனினும் இங்கு அவருக்குச் சந்தர்ப்பம்
அளிக்கப்பட்டிருந்தமை எம்மவரை ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கமே யாம். அவையோருக்குப்
பாடலின் பொருள் புலப்படாதபோதிலும் இசையை இரசித்தமையை அவர்களின் கரவொலி
எடுத்துக்காட்டியது.
‘தாய் மண்’ என்னும் நடனத்தை சாயி சகானா நாட்டியக் கல்லூரி முதல்வர்
திருமதி.ஞானாம்பிகை குணரட்ணத்தின் மாணவிகள் வழங்கினர். புலரும் பொழுதின் இயற்கை
ஒலிகளுடன் தொடங்கிய நடனம் எமது தாய் மண்ணின் மகிமையைச் சித்தரிப்பதாக
அமைந்திருந்தது. சின்னஞ்சிறுமியரின் அபிநயம் பாராட்டுவதற்குரியது. தொடர்ந்து
அரவிந்தனின் மெகா ரியூனேஸின் திரை இசைப்பாடல்கள் இடம்பெற்றன. இதில் ஹரி பாஸ்கர்,
சங்கரி, சாம்பவி, சிவகௌரி, பிரபா, ரவி, பாலச்சந்திரன், கொலின், நிரோஜன், அனோசன்,
நரேந்திரன் ஆகியோர் கலந்து இசை நிகழ்வைச் சிறப்பித்தனர். ‘மொன்சூன் ராகம’; என்னும்
நிகழ்வை திருமதி.சித்திரா தர்மலிங்கத்தின் பாலவிமல நர்த்தநாலயத்தின் மாணவிகள்
தந்திருந்தனர். புதுமையான முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்நடனம் அவையோரின்
பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டது.
சிவமணியின் எழுத்துருவாக்கத்தில் கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
அதிபர் இளையபாரதி அவர்களின் நெறியாள்கையில் எட்டாவது தடவையாக மேடையேறியது
‘இரண்டுக்கும் நடுவே’ என்னும் நாடகம். புலம்பெயர் நாட்டின் தமிழ்க் குடும்பங்களின்
சீரழிவைச் சித்தரித்துக்காட்டியது இந்நாடகம். பிள்ளைகளுக்காகத்தான் நாம் இந்த
நாட்டிற்கு வந்தோம் என்று சொல்லிக்கொள்ளும் பல பெற்றோர்கள் வாழும் இந்த நாட்டில்
பிள்ளைகளல்ல தங்கள் சுயநலந்தான் முக்கியமானது என வாழும் பெற்றோர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள். அவர்களால் பிள்ளைகளுக்கு அன்பு, அணைப்பு, பாசம் என்பது என்ன என்று
தெரியாது, தாய் தந்தையரின் நித்திய வாக்குவாதம், பிள்ளைகளிடமே குறைகூறுதல்
போன்றவற்றால் பிஞ்சுகளின் உள்ளத்தில் விரக்தி, மனவேதனை என்பனவற்றை
விதைத்கின்றார்கள். இந்த நிலைமையை உணர்த்துவதற்கு இ;ப்படியான நாடகங்கள்
ஆக்கபூர்வமானவை. இந்த நாடகத்தில் நடித்த சாந்தா அக்காவும் உட்பட பிள்ளைகளுக்கு
நடித்த இரு சிறார்களும் அவையோரின் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டனர் ஏன்தற்கு
அவர்களிடம் இருந்து அவ்வப்போது எழுந்த கரவொலி கட்டியம் கூறியது.
Pநநட வுயந முறழn-னுழ அதிபர் மாஸ்ரர் ஜேம்ஸ் கந்தசாமி அவர்களின் மாணவர்கள் தாம்
கற்கும் தற்காப்புக் கலை தமக்கு எவ்விதம் உளத்துணிவையும், உடல் வலுவையும்
தருகின்றதோடு பணிவையும், அடக்கத்தையும் கற்றுத்தருகின்றது என்பதனை
எடுத்துக்காட்டும் விதமாக அமைந்ததோடு திரைப்படங்களில் இடம்பெறும் சண்டைக்
காட்சிகளைப் போல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்ற
இந்நிகழ்வு அவ்வப்போது சபையோரின் கைதட்டலைப் பெறத்; தவறவில்லை. விருதுளைப்
பெற்றுக்கொண்டபோது அவர்கள் அதனைப் பெரிதாதகப் பொருட்படுத்தாது நிலையில் நடந்து
கொண்டமை அந்தக் கலையின் பண்பாட்டு விழுமியங்களை அவர்கள் சரியாகப் பின்பற்றவில்லையோ
என்று எண்ணத்தோன்றியது.
வாழ்த்துச் செய்திக கட்டுரைகள், காரைநகர் தொடர்பான செய்திகள், மன்றச்
செயற்பாடுகள் ஆகியனவற்றை உள்ளடக்கியும் அழகிய அட்டைப்படத்துடன் விழாவையொட்டிய ‘காரை
வசந்தம்’ சிறப்பு மலர் பல வர்த்தக நிறுவனங்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்டிருந்தது.
மலரை வெளியிட்டு வைத்து உரையாற்றினார் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய ஞானபண்டிதன்.
அவரே இந்த மலரின் அட்டைப் படத்துடனும் வரைந்தவரும் ஆவார்.
மன்றத் தலைவர் திரு.அ.கருணாகரன் உரையாற்றும்போது விழாக்குழு உறுப்பினர்களின்
ஊக்கத்தாலும் விடா முயற்சியாலும் இந்த விழா சிறப்பாக இடம்பெறுவதையும் பேச்சுப்
போட்டிகள், பண்ணிசைப் போட்டிகளை எல்லாம் சிறப்பாக நடத்தி இளைஞர்களின்
முன்னேற்றத்திற்காக, எமது கலை பண்பாட்டை வளர்க்க இளைஞர்களைப் பயிற்றுவிக்கும்
நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த பிரமுகர்களைக்
குறிப்பிட்டு உரையாற்றிய அவர் சங்க உறுப்பினர்களின் கடின உழைப்பையும் குறிப்பிட்டு
நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த வைத்திய கலாநிதி செல்வராசா அவர்கள் காரை
மன்றம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தான் எப்போதுமே ஆதரவு தருவதாகவும்.
காரைநகரில் உள்ள பிள்ளைகளுக்கு உதவும் கல்வி நிதியத்திற்கு வருடாவருடம் 500
டொலர்களைத் தான் வழங்க முன்வந்துள்ளமையையும் குறிப்பிட்டு, எமது கலை பண்பாடு,
பாரம்பரியத்தை அழியவிடாது பாதுக்காக்க இத்தகைய நிகழ்வுகள் உதவுகின்றன எனத் தலைவர்,
செயலாளர் உட்பட அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் பாராட்டி உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி அன்று
தனது மகளோடு வந்திருந்து பல நிகழ்வுகளைப் பார்த்துத் தான் உண்மையிலேயே
மகிழ்வடைந்ததாகவும் எமது சமுதாயத்திற்குத் தேவையானவற்றையும் இளைய சமுதாயத்தை பல
துறைகளிலும் முன்னரங்குக் கொண்டுவரவேண்டிய பங்களிப்பை இத்தகைய நிகழ்வுகளால்த்தான்
பெற்றுத்தரமுடியும் என்றும் உரைத்தார். மேலும் கனடா-காரை கலாசார மன்றத்தின்
பணிகளைப் பாராட்டிப் பேசியதுடன் மார்க்கம் நகரசபை சார்பில மன்றத்திற்கான
விருதினையும்; மன்றத் தலைவரிடம் வழங்கினார்.
இறுதியாக மன்றத்தின் செயலாளர் திருமதி. கிருஷ்ணவேணி சோதிநாதன் நன்றியுரையாற்றினார்.
தாயக உறவுகளின் அவலங்களும், இங்கு எமது ஊhச்;சொந்தங்களின் அழுத்தங்களும் தம்மை ஒரு
தடவை ஆட்டி வைத்துவிட்டதாகவும் இடையில் ஏற்பட்ட குழப்பத்திற்குப்பின் இயன்ற
பிரயத்தனத்துடன் இவ்வருட காரை வசந்தத்தை எம்முன் வீச விட்டிருப்பதாகவும்
குறிப்பிட்டார். கலைஞர்கள் மென்மையானவர்கள் என்பதனால். இடையில் ஏற்பட்ட தடங்கல்
அவர்களை அதிகம் பாதித்ததாகவும் அதற்காக மன்றம் சார்பில் தனது மனவருத்தத்தைத்
தெரிவித்துக் கொண்டார். ஒரு கலைப்படைப்பின் அபஸ்வரங்களை அந்தக் கலைஞன் மட்டுமே
கேட்பதாகவும் ரசிகர்களாகிய நாம் சுபஸ்வரங்களைத்தான் ரசிக்கிறோம் எனவும் கூறிய அவர்
கலைபடைத்த எல்லாப் படைப்பாளிகளுக்கும் கலைமாணவர்களுக்கும் நன்றி கூறியதுடன்
விழாவின் வெற்றிக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு நன்றி கூறினார். மேலும் மன்றம்
நிறுவிய உறுப்பினர்களுக்கும் மன்ற வளர்ச்சியில் சேவையாற்றிய கடந்தகால தலைவர்களின்
செயலாளர்களின் சிறப்புகளைக் குறிப்பிட்டுப் பேசினார். மன்றச் செயற்பாடுகளில்
எல்லோரும் தாமாக முன்வந்து பங்குபற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன்
குறிப்பாகப் பெண்கள், இளையோர் முன்வந்து பங்குபற்ற வேண்டும் எனவும்
கேட்டுக்கொண்டார்.
இடையில் ஏற்பட்ட தடங்கல்கள், சவால்களைச் சமாளித்தவாறு ஏற்பாடு செய்யப்பட்ட
இக்கலைவிழாவில் சில குறைகள் இருந்தாலும் நிறைவான ஒரு பல்சுவைக் கலைவிழாவினை ரசித்த
மனநிறைவுடன் பார்வையாளர்கள் சென்றமையை அவர்களின் கருத்துக்கள் எடுத்துக்காட்டின. பல
இடர்பாடுகளுக்கு மத்;தியில் இந்த விழாவை நடத்தி முடித்த நிருவாக உறுப்பினர்கள்,
பங்களிப்புச் செய்தோர் அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்களே.
thangarsivapal@yahoo.ca
|