மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர மான்மியம்
நூல் வெளியீட்டு விழா
- கலாரசிகன் -
நாவற்குடா இளையதம்பி தங்கராசாவால் எழுதப்பட்ட மேறபடி நூல் கடந்த 25.10.2008
சனிக்கிழமை ஐயப்பன் ஆலய மண்டபத்தில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்
த.சிவபாலு தலைமையில் பாடும்மீன் அமைப்பின் அனுசரணையுடன் இடம்பெற்றது. சிவாவிஷ்;ணு
தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ லிங்கதாச குருக்களும், கனடா கந்தசுவாமி ஆலய பிரதம
குருக்கள் சிவஸ்ரீ ரகுவர குருக்களும் விழாவை மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்து
ஆசியுரையும் நல்கினர். தொடர்ந்து திருமதி ரஞ்சிதராணி தங்கவேலின் தமிழ்த்தாய்
வாழ்த்து இடம்பெற்றது. அத்தோடு கனடிய தேசிய கீதத்தை செல்விகள் ஆர்த்தி
சிவபாதசுந்தரமம், அபிராமி வசநந்தகுமார், அங்கணி லகணாஜன் இசைத்தனர்.
தொடர்ந்து ஸ்ரீமதி சாந்தினி சிவரூபனின் மாணவியர்களான கீர்த்தனா கிருபாகரன்,
நிதர்சியா சிறிகாந்தன் அவர்களின் புஸ்பாஞ்சலி கணபதி வந்தன நடனங்கள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரன் அவர்களின் பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து கீபோட்
இசையை நல்கினர் திருமதி தில~;சி சிவசேகரம், பிரகதீ~; சிவசேகரம். தொடர்ந்து ஸ்ரீமதி
சிவா திவ்யராஜனின் மாணவி செல்வி அமலகுமார் வைஸ்ணவியின் சிவதாண்டவம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளைப் பாடும்மீன் குழவைச்சேர்ந்த வசந்தகுமார் தொகுத்து
நெறிப்படுத்தினார்.
கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து நூல் வெளியீடு எழுத்தாளர் இணையத்தின் தலைவர் த.சிவபாலு
தலைமையில் ஆரம்பமானது. சேயலாளர் திருமதி இராஜ்மீரா இராசையா அனைவரையும் வரவேற்று உரை
நிகழ்த்தினார். தொடர்ந்து முன்னைநான் அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் வாழ்த்துரை
நல்கினார். அவர் வாழ்த்துரையில் இந்த நூல் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
எமக்குத்தெரியாத பல தகவல்களைக் கெண்டுள்ளது. மாமாங்கேஸ்வரத்தின் சிறப்பு, அதன்
வராறு என்பனவற்றை இந்த நூல் தருகின்றது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்னும் மூவகைச்
சிறப்புக்களும் ஒருங்கே இணையப்பெற்றது மாமாங்கம். இதுவைரை நான் கேள்விப்பட்டிராத
ஒன்று. அது மட்டுமன்றி காகத்திற்கு புல்லால் கண்பார்வையை ஒரு பார்வையாக்கிய கதை
என்பன போன்ற வற்றை இந்த நூலின் மூலம் அறியக்கிடக்கின்றது என்று இது ஒரு அருமையான
ஆவணப்பதிப்பு என்று குறிப்பிட்டு அவரின் முயற்சி தொடரவேண்டும் என வாழ்த்தினார்.
தொடர்ந்து வித்துவான் தமிழொளி செபரத்தினம் வாழ்த்துத் தெரிவிக்கும்போது இன்றைய
நாயகர் தங்கராசா என்னைக் கேட்காமலே என்னைப் பேசுவதற்கு நிகழ்ச்சியில்
சேர்த்திருப்பதைப் பார்த்து என்னைக் கேட்கவி;ல்லையே என்றதற்கு நான் ஏன்
கேட்கவேண்டும் சொன்னால் பேசவேண்டியதுதானே என்று தனது உரிமையை, அன்பை
நிலைநாட்டினார். அத்தோடு அவர் இந்த வெளியீட்டைச் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
எழுத்தாளர் இணையத்தின் தலைவர் சிவபாலு அவர்களிடம் நானும் அவரும் அவரது
குடும்பத்தோடு சென்று இந்த நூலை வெளியீடு செய்ய உதவவேண்டும் என்று கேட்டதற்கு அவர்
மறுப்புத்தெரிவியாது சம்மதம் தெரிவித்திருந்தார். என்றாலும் அவர் மிகவும்
கட்டுப்பாட்டோடு நடப்பவர் அவரோடு நிதானமாக நடந்துகொள்ளவேண்டும் என நான் புத்திமதி
கூறியிருந்ததேன். ஆதன் வண்ணம் இன்று இந்த நூல் வெளியீடு சிறப்பாக நடப்பதையிட்டு
மனமகிழ்ச்சியடைகின்றேன். என்ற அவர் தொடர்ந்தும் எமது பிரதேசத்தின்
வரலாறுகள்பதியப்படவேண்டும் தொடர்ந்தும் நீண்ட ஆயுளோடு இருந்து பணியாற்றவேண்டும்என
வாழ்த்தினார்.
தொடர்ந்து தலைமையுரையில் இந்த நூலை ஒரு சமய நூலாகவன்றி ஒரு ஆணவப்படைப்பாகவே நான்
பார்க்கின்றேன். இத்தகைய செவிவழியான கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள், சான்றுகள்
என்பனவற்றை அழிந்துபோகாது பாதுகாக்கவேண்டியது தமிழர்களாகிய எமது பொறுப்பு அந்தப்
பணியிலே இன்று தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டுள்ளால் நாவற்குடா தங்கராசா என்றால்
அவரைப் பாராட்டாமல் இருக்கமுடியாது என்றதோடு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்
நோக்கத்தோடு எமது பங்களிப்பை நாம் செய்துவருகின்றோம். எனவே புலம்பெயர்ந்த
எழுத்தாளர்களாக இருந்தாலென்ன வெளிநாடுகளில் இருப்பவர்களாக இருந்தால் என்ன
அவர்களுக்கு கரம்கொடுக்கும் நற்பணியை எழுத்தாளர் இணையம் தொடர்ந்து செய்து
வருகின்றது என்றார்.
தொடர்ந்து ஆங்கில நூலுக்கான ஆய்வுரையைச் செய்தார் வைத்தியக்கலாநிதி லம்போதரன்
அவர்கள். அவர் சமய சம்பந்தமான இத்தகைய நூல்கள் வெளிவருவது பாராட்டத்தக்கதும்
காலத்தின் தேவையும் கூட என்ற அவர் தொல்காப்பியர் தொட்டு தமிழ் மொழியின்
சிறப்பையும், சமய குரவர்கள் தொட்டு சமயத்தின் மேன்மையையும் தொட்டு நூலை ஒப்பிட்டு
நோக்கியதோடு நூலாசிரியரின் மகன் என்னோடு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஆத்தோடு
எனக்கு உறவுக்காரரும் என உரிமையயோடு பங்குபற்றியமையைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றும்போது நாவற்குடா
தங்கராசாவின் இந்த நூல் பல மறைந்துகிடந்த வராற்றை வெளியே கொண்டுவந்துள்ளது.
மட்டக்களப்பு மாமாங்ஸே;வரம் மிகவும் பிரபலமான மிகவும் பழமைவாய்ந்த ஆலயம். ஆங்கு
உள்ள சிவலிங்கம் பிள்ளையாரின் உருவமைப்புக் கொண்டது. இதனால் ஈஸ்வரம் என்ற பெயர்
பெற்றுள்ளது. ஈஸ்வரம் என்பது சிவ ஆலயத்திற்கு மட்டுமே உரியது எனினும் அது
பிள்ளையார் ஆலயமாக மாறியமைக்கு சிவலிங்கத்தின் அமைப்பே காரணம் என்ற அவர் இராம,
இராவண காலத்தோடுஇந்த ஆலயம் தொடர்பு பட்டுள்ளது என்ற அவர் இந்த நூல் உண்மையிலேயே ஒரு
பூரணமான நூலாக ஏற்றுக்கொள்ளபபட முடியாவிட்டாலும் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கான ஒரு
தூண்டுகோலாகப் பல தகவல்களை இந்த நூல் தந்துள்ளது என்றும் உரைத்தார்.
தொடர்ந்து தமிழாலயத்தின் அதிபரும் வானொலிக் கலைஞருமான கவிஞர் கலாராஜன் வெளியீட்டுரை
நிகழ்த்தினார். அவர் இந்த நூலை வெளியீடு செய்யும் தகுதி எனக்கு இல்லை எனினும் இதனை
வெளியீடு செய்வதில் பெருமை அடைகின்றேன் என்ற அவர் தமிழ் வாழ, தமழ் மொழி;யின்
சிறப்பு உயர உழைக்கும் பெரியோர்களின் முன் நான் உரையாற்றுவது எனக்கு ஐயத்தைத்
தருகின்றது என்ற அவர் தமிழ் மொழியில் இத்தகைய நூல்கள் வெளிவருவதோடு மட்டும்
நின்றுவிடாது இளஞ்சமுதாயம் பயனடைய அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்துள்ளமையையும்
பாராட்டி வெளியீடு செய்துவைத்தார்.
தொடர்ந்து விசேட பிரதிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏற்புரை நல்கினார்
நாவற்குடா தங்கராசா அவர்கள் அவர் தனது நூலில் உள்ள இருபாடல்களை இசையோடு பாடியதோடு
இன்று என்னை உயர்தி வைத்த தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவரையும், இணையத்தையும்,
இங்கு வந்து உரையாற்றிய பெரியோரையும்; நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்து
பாராட்டியதோடு இந்த நிகழ்வு என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டியுள்ளது என்பதனையும்
குறிப்பிட்டார்.
தொடர்ந்து எழுத்தாளரின் மைத்துணர் திரு. சா.சிவபாக்கியராஜா நன்றியுரை வழங்கியதைத்
தொடர்ந்து விழா நிறைவுற்றது.
thangarsivapal@yahoo.ca
|