லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச்
சபையின் பட்டமளிப்பு விழா
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
‘கீழைத்தேய பரீட்சைச் சபையினர் நடாத்தி வரும் நுண்கலைகளுக்கான பரீட்சைகள் உயர்ந்த
தரத்தைக்கொண்டு காணப்படுவதால் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து பெருந்தொகை மாணவஇ
மாணவிகள் இந்தப் பரீட்சைகளில் உற்சாகத்தோடு கலந்துகொள்வதை காணமுடிகிறது’ என்று
கீழைத்தேய பரீட்சைச்சபையின் தலைவி ஸ்ரீமதி.அம்பிகா தாமோதரம் கீழைத்தேய பரீட்சைச்
சபையின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
இந்த நுண்கலைத் தகுதிகளுக்கான சான்றிதழ்கள் மாணவ மாணவிகளுக்குஇ அவர்களின் கலை
ஆளுமையை வலுப்படுத்த உதவுகின்றதென்றும், அவர்களின் கலை ஆர்வத்தையும்
பாண்டித்தியத்தையும் மேலும் வளர்த்துச் செல்வதற்கும் இச்சான்றிதழ்கள் உற்சாகம்
தருவதாக அமைந்திருக்கின்றன
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லண்டனில் முதல் தடவையாக வெற்றிகரமாக நடத்துவதற்கு மாணவஇ மாணவிகளும், பெற்றோரும்,
இசை நடன ஆசிரியர்களும், கலை அபிமானிகளும் காட்டிய ஊக்கமும் அக்கறையுமே
பெருந்துணையாக அமைந்தன என்று ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் தனது உரையில் மேலும்
தெரிவித்தார்.
‘லண்டனில் இளைய தலைமுறையிடம் இசையிலும்இ வாய்ப்பாட்டிலும், நடனத்திலும் சிறப்புடன்
திகழ்வதற்கு பெற்றோர்களின் ஆர்வமும் அக்கறையுமே அடிப்படையாக அமைந்துள்ளது என்றும்,
நுண்கலைகளில் சிறப்புத் தகுதியை அடைந்து மாணவர்கள் பட்டம் பெறும் இத்தினம்
பிரிட்டனின் கலாச்சார சரித்திரத்தில் தனி முக்கியத்துவம் பெறுகின்றது என்றும்’
லண்டன் முதல் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து உரையாற்றிய ஸ்ரீமதி
விஜயலட்சுமி ஆறுமுகசாமி தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நவஜோதி ஜோகரட்னம் பேசும்போது, ‘ஸ்ரீமதி அம்பிகா
தமோதரம் அவர்கள் இலங்கை வானொலியில் மெல்லிசை ஆரம்பிப்பதற்கு முன்னரேஇ இசைப்பேரரசு
சண்முகரத்தினம் இசையமைப்பில் தனது இனிமையான குரலால் வானொலியில் பல பாடல்களைப்
பாடிப்
பாராட்டுப் பெற்றவர். மலேசியாவின் 6வது உலகத் தமிழ் மகாநாட்டிலும் 1984ம் ஆண்டு
நேபாளத்தில் நடைபெற்ற உலக இந்து மகாநாட்டிலும் இலங்கை அரசின் பிரதிநிதியாக கலந்து
பாடிச் சிறப்பித்தவர். இத்தகைய இசைப்புலமை மிகுந்த அம்பிகா தாமோதரத்தின் முன்னோடி
முயற்சியில் இந்தப் பட்டமளிப்பு விழா லண்டனில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது’ என்று
குறிப்பிட்டார். முதல் தடவையாக லண்டனில் இசை நடனத் துறைகளில் தகுதி பெற்ற இளம்
கலைஞர்களின் இந்த பட்டம் அளிப்பு விழா கீழைத்தேய பரீட்சைச் சபையின் சரித்திரம்
முக்கியத்தவம் வாய்ந்த நாளாகும் என்று மேலும் தனது உரையில் குறிப்பிட்டார்.
கீழைத்தேய பரீட்சைச் சபை நடாத்திய இந்தப் பட்டமளிப்பு விழாவில் 34 மாணவ மாணவிகள்
சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கடந்த 6 ஆண்டு காலப் பகுதியில் கீழைத்தேய
பரீட்சைச்சபையின் தேர்வுகளில் நாலாயிரத்துக்கும்; மேற்பட்ட மாணவர்கள்
கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது
இப்பரீட்சைச் சபையின் தனி முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. லண்டன், நோர்வே,
ஜேர்மனி, ஹொலன்ட் ஆகிய நாடுகளிலிருந்து பெருந்தொகையான மாணவர்கள் இந்தப்போட்டிகளில்
கலந்து கொண்டுள்ளார்கள்.
கீழைத்தேய பரீட்சைச் சபையின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் திரு பத்மநாதன்
தம்பதியினர் முக்கிய அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். திருமதி இந்திராணி
பத்மநாதன் பட்டச் சான்றிதற்களை மாணவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்திருந்தார். இந்தப்
பட்டமளிப்பு விழாவில் திரு கலாதரன் தயாரிப்பில் தமிழ்த்தாய் வணக்கமும், ஸ்ரீமதி
பகவதி ஜனார்த்தன ஐயர், சங்கீத வித்துவான் ஏ.ஞானசுந்தரம், ஸ்ரீமதி வி.ஆறுமுகசாமி,
புல்லாங்குழல் வித்துவான் ரி.ராகவராம், ஸ்ரீமதி செய்மணி சிறிதரன், ஸ்ரீமதி விநோதினி
சண்முகநாதன், ஸ்ரீமதி விநோதினி பரதன், ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா ஆகிய இசைநடன
ஆசிரியர்களின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் மிக நேர்த்தியாக
இடம்பெற்றிருந்தன. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளை நவஜோதி ஜோகரட்னம், குந்தகை
செல்வநாதன் ஆகியோர் தொகுத்தளித்திருந்தனர்.
navajothybaylon@hotmail.co.uk. |