இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2010  இதழ் 132  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

"SATURDAY REVIEW" சிவநாயகம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக கூட்டம்!
"SATURDAY REVIEW" சிவநாயகம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக கூட்டம்! அண்மையில் காலமான எழுத்தாளர் , ஊடகவியலாளர் "Saturday Review" சிவநாயகம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமை (19.12.2010) பிற்பகல் 6.00 மணிக்கு "கென்னடி சப்வேக்கு" அருகில் அமைந்துள்ள Mid Scarborough Community Centre மண்டபத்தில் (Don Montgomery CRC, 2467 Eglinton Ave,East. @ kennedy Subway) கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் சேரன் உரையாற்றுகிறார். அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
தொடர்புகட்கு; 647-891-8597, 647-857-4415, 647-237-3619

Chelian S : chelians@gmail.com

'மண்மனம்' அத்தியாயங்கள் சில தேவை!
ஆதவனின் மண்மனம் நாவல் இன்னமும் புத்தகமாக வராதபடியால் நூலகத்திலிருந்தும் தமிழ்த்தேசிய ஆவணச் சுவடிகளில் இருந்தும் தரவிறக்கம் செய்தேன். எனினும் நோர்வேயில் இருந்து வெளிவந்த 'சுவடுகள்' சஞ்சிகையின் 12/20/22/23/27 ஆகிய 5 இதழ்களும் எங்கும் கிடைக்காதபடியால் நாவலை முழுமையாகப் படிக்கமுடியவில்லைஆதவனின் மண்மனம் நாவல் இன்னமும் புத்தகமாக வராதபடியால் நூலகத்திலிருந்தும் தமிழ்த்தேசிய ஆவணச் சுவடிகளில் இருந்தும் தரவிறக்கம் செய்தேன். எனினும் நோர்வேயில் இருந்து வெளிவந்த 'சுவடுகள்' சஞ்சிகையின் 12/20/22/23/27 ஆகிய 5 இதழ்களும் எங்கும் கிடைக்காதபடியால் நாவலை முழுமையாகப் படிக்கமுடியவில்லை. யாரிடமாவது அந்தச் சஞ்சிகை இருக்குமாயின் அவற்றில் இருக்கும் விடுபட்ட அத்தியாயங்களை பெறமுடியுமா என யோசிக்கிறேன். உங்களால் உதவி செய்ய முடியுமா?

அன்புடன்
சு. குணேஸ்வரன்
S.Kuneswaran Subramaniam  mskwaran@yahoo.com

கூடு இணையத்தளத்தில் தமிழவனின் புதிய தொடர்: 'யாயும் ஞாயும் யாராகியரோ'
கூடு இணையத்தளத்தில் தமிழவனின் புதிய தொடர்: 'யாயும் ஞாயும் யாராகியரோ' தமிழவன் தமிழ் ஆய்வாளர்களில் முக்கியமானவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர். சிறுகதைகள் மற்றும் புதின எழுத்தாளர். தமிழ‌வன் 80களில் தமிழ் இல‌க்கிய‌த்தில் அமைப்பிய‌ல் வாத‌த்தை முன்னெடுத்துச் சென்ற‌வ‌ர். த‌மிழ் ஆய்வில் முன்சென்ற‌ த‌லைமுறையைத் தாண்டி ஆய்வுமுறையில் த‌ன‌க்கென்ற‌ த‌னியிட‌த்தைப் பிடித்த‌வ‌ர். அமைப்பியலிலும் பின் ந‌வீன‌த்துவ‌திலும் தேர்ந்த‌ இவ‌ர் த‌மிழின் மிக‌ச் சிற‌ந்த‌ ஆய்வு நூல்க‌ளை எழுதியுள்ளார். த‌மிழ‌வ‌ன் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள், ஜி.கே. எழுதிய மர்மநாவல், வார்ஸாவில் ஒரு கடவுள் போன்ற நாவல்களையும் பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தமிழவன் ஸ்ட்ரக்சுரலிசம், படைப்பும் படைப்பாளியும், தமிழும் குறியியலும், தமிழில் மொழிதல் கோட்பாடு போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழவன் தொடர்ந்து தீராநதியில் "மரமும் ஓயாத காற்றும்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழ் வாழ்வும் அதன் மரபுத் தொடர்ச்சி சங்க காலம் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் இன்றளவும் தொடரும் உயிர்ப்பும் தமிழ் தேசியம் என அவர் எழுதும் கட்டுரைகள் தமிழ் பதிவுகளில் மிக நுட்பமானது.அவர் ஓர்மை என்ற சொல்லாடலை கட்டமைக்கிறார். ஓர்மை என்பது தமிழ் ஞாபகம். அது தொடர் ஓட்டம் போல் நூற்றாண்டுகள் கழிந்தும் மரபைக் கடத்தி மொழியை அதன் உன்னதத்துடன் இயங்க வைத்துக் கொண்டு இருப்பது. தொல்காப்பியனிடம் தொடங்கி அது எவ்வாறு பாரதி, அண்ணா, பிரபாகரன், பாரதிதாசன் , நேசமணி, க.நா.சு, புதுமைப்பித்தன் ஏனைய தமிழ் எழுத்தாளர்கள், போராளிகள் எனத் தொடர்ந்து தமிழ் தன் இருப்பை அர்த்தப்படுத்திக் கொண்டு இருப்பதன் அழகியலை நுண் சிந்தனையால் தருவிக்கிறார். மொழியென்பது சொற்கள் என்னும் அதிர்வலைகளால் கட்டப்பட்டிருக்கும் ஒரு மந்திரம். அதன் புலன் நம் மரபணுக்களில் உள் நுழைந்து மறைந்து கொள்கிறது.

தமிழவன் கூடு இணையதளத்திற்காக எழுதும் இக்கட்டுரையின் நோக்கம் தமிழின் புதிய தலைமுறைக்கு இலக்கியத்தை எடுத்துரைத்தலும் பொய்மையாக இலக்கியமென வியாபாரிகளால் கட்டமைக்கப்பட போலி பிரதிகளின் கட்டமைப்பை உடைத்தலும். அமைப்பியலிலும் பின் நவீன போக்கின் வழியிலும் திறனாய்வை நவீன வாசகர்களும், மொட்டுவிரிக்கும் எழுத்தாளர்களுக்கும் கற்றுக் கொடுத்தலே இதன் அடிப்படை. விவாதங்களும் தத்துவ மோதல்களும் என்பதே இக்கட்டுரைகளின் ஊடாட்டமாக இருக்கும். இதன் வழி தமிழில் திறனாய்வை கற்றுக் கொடுத்தல், சரியான இலக்கியப் புரிதலை ஏற்படுத்துதல், உலக இலக்கியங்களைக் காட்டிலும் தமிழில் ஒரு சிறந்த படைப்புமுறைமையை உருவாக்குதலே இதன் எண்ணம்.

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
முகவரி:thamizhstudio@gmail.com

அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268


 
aibanner

 ©©©©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்