| ஏலாதி இலக்கியவிருது மற்றும் தேசிய பல்துறை 
  ஆய்வரங்கம். 
 - ஹெச்.ஜி.ரசூல் -
 
 ஏலாதி இலக்கிய விருது 2009 : முனைவர் பொ.நா.கமலா மற்றும் 
  விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
 
   ஏலாதி இலக்கிய விருதுவிழங்கும் விழா தமிழ்நாடு 
  கலைஇலக்கியப் பெருமன்றம் தக்கலையின் சார்பில் ஆகஸ்ட்15 சனி மாலை தேசிய 
  பல்துறைஆய்வரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் 
  தலைமைதாங்கினார்.பேராசிரியர் நட.சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். 
 2007 - 2009 ஆண்டு காலகட்டத்தில் வெளிவந்த சிறந்த திறனாய்வு நூல்களுக்கான 
  போட்டியில் முனைவர் பொ.நா.கமலா எழுதி காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள 
  தொல்காப்பியர் முதல் தெரிதா வரை திறனாய்வுநூல் தேர்வு செய்யப்பட்டது.
 
 மற்றொரு நூலாக சென்னையைச் சேர்ந்த திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரன் எழுதிய 
  சிறுவர் சினிமா சிறந்த உலகத் திரைப் படங்கள் திறனாய்வு நூலும் தேர்வு 
  செய்யப்பட்டது.
 
 ஏலாதி இலக்கியவிருது ஹசன்கதீஜா நினைவுப் பரிசுக்கான ரூ2000 / க்கான பணமுடிப்பும் 
  ஞாபகசிற்பமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முனைவர் பொ.நா.கமலாவிற்கு டாக்டர் 
  பிளாட்பின் முன்னிலையில் பேரா.அய்யப்பன் மற்றும் கவிஞர் ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் 
  வழங்கினர்.
 
 முனைவர் பொ.நா.கமலா விருதுநகரைச் சேர்ந்தவர். தமிழ்துறைப் பேராசிரியராக பணியாற்றி 
  ஓய்வு பெற்றவர்.எண்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் ஆய்வுகள் நிகழ்த்தியுள்ள 
  இவர் மலேஷியா, தாய்லாந்து. சிங்கப்பூர் என உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் 
  கட்டுரை வாசித்துள்ளார். புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பொதுத் 
  தொண்டைச் செய்துவருகிறார்.
 
 ஏலாதிவிருது பெற்ற தொல்காப்பியர்முதல் தெரிதாவரை நூலில் அறுபது ஆய்வுக்கட்டுரைகள் 
  இடம் பெற்றுள்ளன்.தொல்காப்பியம்,சங்க இலக்கியம்,வள்ளுவம்,காப்பியம்,நவீனகால 
  நாவல், புனைகதை,கவிதை படைப்பிலக்கியங்களை பின் அமைப்பியல் ஆய்வியல் முறையில் 
  திறனாய்வு செய்துள்ளார்.
 
 ஏலாதி விருது அவுக்காரும்மாள் நினைவுப்பரிசை பெற்ற மற்றொருநூல் திரைப்பட 
  விமர்சகர் விஸ்வாமித்திரனின் சிறுவர்சினிமா சிறந்த உலகத் திரைப்படங்கள் இரு 
  தொகுதிகள் வம்சி வெளியீடாக வந்துள்ளன.கியூப அரசியல் திரைப்பட இயக்குநர் தாமஸ் 
  கிதாரெஸ் அலியா குறித்த இவரது தொகுப்பு நூல் கியூபசினிமா ஒரு கலைஞனின் 
  புரட்சித்தடம்.குருதியில் படிந்த மானுடம் சமகால அரசியல் திரைப்படங்கள் என்ற 
  மற்றொரு நூலும் வெளிவந்துள்ளது.இவர் இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்னா விதான 
  கேவினோடு இணைந்து பணியாற்றிய பிளவேர்ஸ் ஆப் த ஸ்கை 2008 ல் கோவா திரைப்பட 
  விழாவில் வெள்ளிமயில் விருதைப் பெற்றது.
 
 ஏலாதி விருதுக் குழுவினர் ஹெச்.ஜி.ரசூல்.ஜி.எஸ் தயாளன், நட.சிவகுமார், 
  எச்.முஜிபுர் ரகுமான் மற்றும் தக்கலை கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் 
  குறும்பட இயக்குநர் எஸ்.ஜே. சிவசங்கர் நன்றி கூறினார்.
 
 கவிதை இரவு
 
 ஏலாதி இலக்கியவிருது வழங்கும்விழா மற்றும் ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறைக் 
  கருத்தரங்க நிகழ்வுகளோடு கவிதை இரவு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது,
 
 20 கவிஞர்களும் 100 கவிதைகளும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வை 
  ஹெச்.ஜி.ரசூல்.நட.சிவகுமார்.ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.கவிஞர்கள் 
  குமரிஆதவன்,அபுஹாஷிமா,ஆளுர் அஸ்கர்,முத்துராமன்,மஜ்வா,உள்ளிட்ட இருபதுகவிஞர்கள் 
  இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
 ஆன்றோ எம் அப்பாஜியின் குறளிசை இசை ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 
 ஏலாதி சிந்தனைப் பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
 
 ஏலாதி சிந்தனைப் பள்ளி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தேசியப் பல்துறை 
  ஆய்வரங்கு ஆகஸ்டு 14 மற்றும் 15 தேதிகளில் தக்கலையில் பவ்டா அரங்கில் நடைபெற்றது.
 
 முதல் அமர்வு நவீன இலக்கியம் தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் நெறிப்படுத்தினார். நேசமணி 
  நினைவு கிறிஸ்தவக் கல்லூரி முனைவர்பட்ட ஆய்வாளர் ஜே.ஹெலன் கிறிஸ்டிபாய் 
  சுகிர்தராணி கவிதைகளில் தலித் பெண்மொழி, மாங்குழி தூய பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி 
  தலைமை ஆசிரியை அருட்சகோதரி அல்போன்சாள் ஐசக் அருமைராஜனின் நாவல்களில் கிறிஸ்தவ 
  வாழ்வியல் நெருக்கடிகள், தெ.தி.இந்துக் கல்லூரி முனைவர்பட்ட ஆய்வாளர் 
  கே.ஆர்.பீனாஇலக்கியத்தில் மானுடம்,ஜெ.எழில் முனைவர் பட்ட ஆய்வாளர் சிறுபத்திரிகை 
  சூழலில் புதிய காற்று,ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் வாசித்தனர்.
 
 கவிஞர் ஆர்.பிரேம்குமார், ஆய்வாளர் செந்தீநடராஜன் ஆகியோர் பகிர்வும் பதிவும் 
  தலைப்பில் விவாதங்களை முன்வைத்தனர்.
 
 இரண்டாம் அமர்வு மீள்வாசிப்பில் சமயமும் பண்பாடும் என்ற பொருளில் 
  நடைபெற்றது.புதிய ஆராய்ச்சி இதழின் பொறுப்பாசிரியர் சி.சொக்கலிங்கம் தலைமை 
  வகித்தார்.
 
 முனைவர் எஸ்.குமரேசன் திருத்தமிழர் போராட்ட இயக்கங்கள் முனைவர் பட்ட ஆய்வாளர் 
  சு.சுந்தர் ஹெச்.ஜி.ரசூல் கவிதைகளில் சமுதாயச் சித்தரிப்புகள்,என்.ஐ.கல்லூரி 
  தமிழ்துறைத் தலைவர் பேரா. பத்மதேவி வள்ளலார்-நாராயணகுரு படைப்புகள் ஓர் ஒப்பீடு 
  ஆகிய கட்டுரைகளை வாசித்தனர்.
 
 மூன்றாம் அமர்வு நெல்லை மனோன்மணியம் பல்கலைகழக தமிழ்துறைப் பேராசிரியர் முனைவர் 
  ஞா.ஸ்டீபன் நெறிப்படுத்தலில் இனவரைவியலும் எழுத்தும் பொருளில் நடை பெற்றது.
 
 வி.ஆன்றெனி பிரகாஷ் பபிலா முனைவர் பட்ட ஆய்வாளர் கத்தோலிக்க சமயத்தில் புனிதர்கள் 
  நாட்டார் வழ்க்காற்றியல் நோக்கு, எம்.டி.அருள்மொழிநங்கை குமரிமாவட்ட சலவைத் 
  தொழிலாளர் வாழ்க்கைமுறையும் பண்பாட்டுக் கூறுகளும், முனைவர் பட்ட ஆய்வாளர் ஏஞ்சல் 
  ஜெலட்ராணி திலகவதி நாவல்களில்பெண்ணியம் கட்டுரைகளை வாசித்தனர். ஆய்வளர் 
  மா.பென்னி,எஸ்.ஜே.சிவசங்கர் விவாதங்களை முன்வைத்தனர்.
 
 இரண்டாம்நாள் நான்காம் அமர்வு நாவல் புனைகதை சங்க இலக்கியம் பொருளில் நடைபெற்றது.
 
 பேரா.நட.சிவகுமார் நிகழ்வை நெறிப்படுத்தினார். தெ.தி இந்துக் கல்லூரி தமிழ்துறை 
  பேராசிரியை ஆர்.என்.சிறீகலா நாவல்கள் முன்வைக்கும் விளிம்புநிலை மக்களின் 
  வாழ்க்கை மலர்சாலமன் விவிலியத்தில் கதையாடல்கள் முனைவர் பட்ட ஆய்வாளர் 
  எம்.அழகுமுருகண் நாஞ்சில்நாட்டு வெள்ளாளரின் இன வரைவியல், தலைப்புகளில் 
  கட்டுரைகள் வாசித்தனர். ஆய்வாளர் ஷாகுல்ஹமீது விவாத கருத்துரை ஆற்றினார்.
 
 ஐந்தம் அமர்வினை முனைவர் பொ.நா.கமலா நெறிப்படுத்தினார். முனைவர் பட்ட ஆய்வாளர் 
  கே.பாலஸ் குமரி மாவட்ட குழூகுறியீட்டுச் சொற்கள், முனைவர்பட்ட ஆய்வாளர் சரஸ்வதி 
  குன்று தோராடும் குமரன் கட்டுரைகளை வாசித்தனர். நாவலாசிரியர் மீரான்மைதீன் 
  கருத்துரை வழங்கினார்.
 
 ஆறாம் அமர்வினை முனைவர் வறீதையா கான் ஸ்டன்டைன் நெறிப்படுத்தினார். முனைவர்பட்ட 
  ஆய்வாளர் ராணி மீனவர் கிராமம் ஊர்பெயர் ஆய்வு பேராசிரியை ஜி.நாகேஸ்வரி சங்க 
  இலக்கியத்தில் மானுடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர் தே.மெர்லின் கலைஞரின் கவிதைநயம் 
  கட்டுரைகளை வாசித்தனர்தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன.
 
 தேசியபல்துறை ஆய்வரங்கில் திரளான முதுகலை கல்லூரிமாணவ மாணவியர்களும், 
  படைப்பாளிகளும் பார்வையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.ஆய்வாளர்களுக்கான 
  சிறப்புச் சான்றிதழை மருத்துவர் ஏ.பிளாட்பின்.பேரா.ஐய்யப்பன், ஹெச்.ஜி.ரசூல் 
  ஆகியோர் வழங்கினர். புதிய காற்று ஆசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான 
  ஹாமீம் முஸ்தபா நன்றி கூறினார்.
 
 mylanchirazool@yahoo.co.in
 |