| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| அரசியல்! |  
| மீள்பிரசுரம்: புதினம்.காம் தமிழர் படுகொலை குறித்த அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்காவின் பதில் இல்லை: 
  ஐ.நா. மனித உரிமைகள் பிரதிநிதி கண்டனம்
 
  தமிழீழ 
  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து 
  அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசு இணங்காதமை குறித்து ஐக்கிய 
  நாடுகள் மனித உரிமைகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.  "சிறிலங்காவில் 
  இடம்பெற்ற இறுதிப் போரின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக 
  விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்ந்து 
  விடுத்த கோரிக்கைகள் பலவற்றுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கவே இல்லை" என ஐ.நா.வின் 
  மனித உரிமைகளுக்கான தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். 
 போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் என ஐக்கிய 
  நாடுகள் சபை பொதுச் செயலாளர் கூட சிறிலங்கா அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்தார் என 
  நவநீதம்பிள்ளை பிறசல்சில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
 
 "இந்த விடயம் குறித்துத் தான் பொறுப்புடன் நடந்துகொள்வார் என சிறிலங்கா அரச 
  தலைவர் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு உறுதி அளித்திருந்தார். அதனை அவர் 
  நிறைவேற்றுகிறாரா என்பது குறித்து அறிவதற்கு பொதுச் செயலாளருடன் நாங்கள் 
  நெருங்கிச் செயற்படுகின்றோம்.
 
 உறுதியளித்தபடி சிறிலங்கா அரச தலைவர் இந்த விடயத்தில் எத்தகைய நடவடிக்கைகளை 
  எடுத்துள்ளார் என்பதை நாங்கள் அறியவேண்டும்" என்றார் நவநீதம்பிள்ளை.
 
 அனைத்துலக பட்டினிக்கு எதிரான நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கிழக்குப் 
  போரின்போது கொல்லப்பட்டமை குறித்து சிறிலங்கா நடத்திய விசாரணைகளைச் 
  சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை, அந்தக் கொலைகள் மிக மோசமானவையாக இருந்தபோதும் அது 
  குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளன என்பதையும் 
  குறிப்பிட்டு கூறினார்.
 
 "மிக முக்கியமான குற்றங்கள் குறித்து அவர்கள் நடத்திய விசாரணைகள் குறித்து இதுவரை 
  நல்ல பதிவுகள் எவையும் இல்லை. தற்போது எந்த வகையிலான விசாரணை முறைகள் அவர்களுக்கு 
  ஏற்புடையதாக இருக்கும் என்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளருடன் நான் ஆராய்ந்து 
  வருகின்றேன். ஆனாலும் இவற்றை சிறிலங்கா அரசு நிராகரிக்கின்றது என்பதுதான் நான் 
  இறுதியாகச் சொல்லக்கூடியது" என நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.
 
 சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து அறிந்துவரும் பொருட்டு அந்த 
  நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளாரா என 
  ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், தான் சிறிலங்கா சென்றால் 
  தன்னை அனுமதிக்கப் போவதில்லை என்று ஐ.நா. பொதுச் செயலாளரிடமும் பொது 
  அரங்குகளிலும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது என்றார்.
 
 Courtesy: http://www.puthinam.com/
 16 அக்டோபர் 2009
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |