‘ருக்ஷ நர்த்தனாலயா’ வின் 
                பரதநாட்டிய அரங்கேற்றம். - 
                நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
                
 எமது 
                கலை கலாச்சாரத்தை எடுத்துச் செல்லும் பணியில் முக்கியத்துவம் 
                வாய்ந்த சாரண்யா மகீதரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்இ புலம்பெயர்ந்த 
                எமது தமிழ் மக்களிடையே குறிப்பிடக்கூடிய வகையில் தனது கலைத் 
                திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார் என பிரதம விருந்தினராகக் கலந்து 
                கொண்ட கவுன்சிலர் யோகன் யோகநாதன் தனது உரையில் 
                குறிப்பிட்டிருந்தார். ‘ருக்ஷ நர்த்தனாலயா’ என்ற நடனப்பள்ளியின்; 
                மாணவியான செல்வி. சாரண்யா மகீதரன் ஆச்சரியத்தை ஊட்டும் வகையில் 
                தனது ஆடற்கலையை வெளிப்படுத்திய விதம் தன்னை மிகுந்த மகிழ்ச்சிக் 
                கடலில் ஆழ்த்தியதாக சுட்டிக்காட்டிய கவுன்சிலர், செல்வி 
                சாரண்யாவின் குருவான நாட்டியத்தாரகை நளாயினி ராஜதுரையின் 
                திறமையையும்,  அவரது பெற்றோரின் ஆர்வத்தையும் விதந்து 
                பாராட்டினார்.

                கம்பீரமான குரலால் இசை வழங்கிய சங்கீதரத்தினம் ஜாதவன் யோகநாதன், 
                மற்றும் மிருதங்க வித்துவான் ஸ்ரீ. கே.எஸ்.பவானிசங்கர்,  
                வயலின் இசைக்கலைமணி கண்ணன் பாக்கியராஜ், புல்லாங்குழல் வேணுகானமணி 
                பிச்சையப்பா ஞானவரதன், தபேலா நிசாந்தன் ராஜ்குமார் போன்ற கைதேர்ந்த 
                கலைஞர்களின் பக்க வாத்தியங்கள் செல்வி சாரண்யாவின் பரத அரங்கிற்கு 
                மெருகூட்டியதை உளமார தனதுரையில்; பாராட்டினார்.
                
                 ‘சின்னப்பாதம்’ 
                என்ற கண்ணனை நினைந்து ஜாதவனின் வசீகரமானகுரலில் வெளிப்பட்ட 
                இசைக்குஇ கண்ணனாகவே பாவம் காட்டி, கால்களால், கைகளால், கண்களால் 
                ஜாலம் காட்டிய சாரண்யா, குரு நளாயினி ராஜதுரையின் 
                நட்டுவாங்கத்தோடும், பவானி சங்கரின் மிருதங்கத்தோடும் சாரண்யாவின் 
                பாதங்கள் பிண்ணிப் பிணைந்தன என்று கௌரவ விருந்தினராகக் கலந்து 
                சிறப்பித்த நவஜோதி ஜோகரட்னம் பாராட்டியிருந்தார். ‘பரதவிருட்சம்’ 
                என்ற ராகமாலிகாவில் அமைந்த பாடலுக்கு பஞ்சநடையில் கையாண்ட விதமும் 
                புதுவிதமாக இருந்தது. தாளக் கட்டோடு கருத்தைப் புலப்படுத்தியவிதம் 
                அபாரம் என்று பேசிய நவஜோதி,  செல்வி சாரண்யாவின் 
                அரங்கேற்றத்திற்கு உயிரூட்டிய பக்கவாத்தியக்காரர்கள் மிகப் பெரிய 
                பாராட்டுக்குரியவர்கள் எனவும்; தெரிவித்தார்.

                செப்டம்பர் மாதம்; லண்டனில் குரோய்டன் அஷ்றொவ்ட் தியேட்டரில் மிகச் 
                சிறப்பாக இடம்பெற்ற அரங்கேற்றத்தில், ‘ருக்ஷ நர்த்தனாலயா’ 
                நடனப்பள்ளியின் மேடையலங்காரம், உடை அலங்காரம், முகப்பூச்சுகள் 
                போன்றன செல்வி சாரண்யாவின் அரங்கேற்றத்தை வேறொரு உலகிற்கு 
                எடுத்துச் சென்றதோடு,  ஈழத்தின் நாட்டியத் துறைக்கு பெருமை 
                சேர்க்கின்ற நாட்டியத்தாரகை,  நடனநாடகச் செல்வி,  
                நாட்டிய மயில் போன்ற விருதுகளைப் பெற்ற ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை 
                சிறந்த ஆசானாகக் கொண்டு,  செல்வி சாரண்யா மகீதரன் 
                இவ்வரங்கேற்றத்தைக் கர்ச்சிதமாகச் செய்து கொண்டமை சிறப்பு அம்சம் 
                எனவும் கூறியிருந்தார். 
                
                 செல்வி 
                சாரண்யா மகீதரனுக்கு நாட்டியக் கலையில் சிறந்ததொரு எதிர்காலம் 
                காத்திருக்கிறது. தமிழ்மொழி அவருக்கு மிகவும் கைகொடுக்கின்றது. 
                பாடல்களின் உட்கருத்துக்களையும்இ தத்துவங்களையும் உணர்ந்து 
                பாவங்களை வெளிப்படுத்திய சாரண்யாவிற்கு பாராட்டுக்கள் 
                தெரிவித்ததோடுஇ சாரண்யா அவரது குருவின் ஆசீரோடும் ஓழுக்கம் நிறைந்த 
                அர்ப்பணிப்போடும் இக்கலையை முன்னெடுக்க வேண்டும் என்றும்இ 
                சாரண்யாவின் பெற்றோரான டாக்டர் மகீதரன் - நந்தினியின் 
                முயற்சிகளையும் நவஜோதி வாழ்த்தி நின்றார்.

                navajothybaylon@hotmail.co.uk
                19.10.2010.