பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
சினிமா! |
மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்!
நடிகர் நாகேஷ் காலமானார்
[01
- February - 2009] தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் புகழ் பெற்ற, மிகச்
சிறந்த நடிப்பாற்றல் மிக்கவரான நாகேஷ் தனது 76 ஆவது வயதில் நேற்று சனிக் கிழமை காலை
காலமானார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கே.ஏ. தங்கவேலு, சந்திரபாபு ஆகிய
நகைச்சுவை நடிகர்களை அடுத்து தமிழ்த் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது
நகைச்சுவை நடிப்பின் மூலம் தமிழ் இரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நாகேஷ்.
ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் பிரபல்யம்
பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்ததால்
நாகேசுக்கு தலையில் அடிபட்டது. இதற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு
இரத்தக் கசிவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மூச்சுத்திணறலும் இருந்து
வந்ததாகத் தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு மூச்சுத்திணறல் அதிகரித்து மருத்துவமனையில் அவர்
சேர்க்கப்பட்டார். அவர் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்
வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டார். நேற்றுக் காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு
மருத்துவர்கள் வருவதற்குள் 11.20 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. நாகேசுக்கு
நடிகர் ஆனந்பாபு, டேவிட் என்று இரு மகன்கள் உள்ளனர்.
நாகேஷின் உடல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்களின்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பில் நாகேஷின் மறைவுக்கு இரங்கல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், கமலஹாசன், சோ, மனோரமா உள்ளிட்ட திரையுலக
பிரமுகர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் உள்ளிட்ட
திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வாழ்க்கைக் குறிப்பு
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ் என்பதாகும். தந்தை
கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். கிருஷ்ணராவ் ரயில்வேயில் கடமையாற்றி
வந்தார். தமிழ் நாட்டுக்கு வந்த அவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.
1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி பிறந்த நாகேஷ் தாராபுரத்தில் தனது இளமை
பருவத்தைக் கழித்தார். பல இடங்களில் வேலை பார்த்த அவர் கடைசியாக ரயில்வேயில்
எழுதுவினைஞராக சென்னையில் பணியாற்றினார்.
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில்
நடித்து வந்தார். ஒரு நாடகத்தில் வயிற்றுவலி காரணமாக அவர் நடித்ததைப் பார்த்து
எம்.ஜி.ஆர். வெகுவாக பாராட்டினார்.
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நாகேஷ் "தாமரைக்குளம்'
என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை
நடிகராக வேடந்தாங்கி சிறப்பாக நடித்தார். அவருக்குப் பல படங்களில் ஜோடியாக
நடித்தவர் மனோரமா ஆவார். இந்த ஜோடி இல்லாத படமே ஒரு காலத்தில் இல்லை என்ற நிலை
நிலவியது.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக
நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். திருவிளையாடல்
படத்தில் சிவாஜியுடன் புலவர் தருமியாக நடித்த நாகேஷ?க்கு அந்தப் படத்தில் பெரும்
புகழ் கிட்டியது. காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களில்
நாகேஷின் நடிப்பு அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. தேன்கிண்ணம், நவக்கிரகம்,
எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற
படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நடிகர் வீரப்பனுடன் சேர்ந்து
பணத் தோட்டம் படத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளைப் பார்த்து சிரித்துச் சிரித்து
வயிறு புண்ணாகாதவர்கள் இல்லை என்று கூறலாம். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி,
அன்பே வா உட்பட பல படங்களில் அவரது நகைச்சுவை நடிப்புப் பிரகாசித்தது.
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர்
தோன்றினார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நாகேஷ் நடித்த கடைசிப் படம்
தசாவதாரம் ஆகும்.
நாகேஷின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது
என்றால் அது மிகையாகாது.
நாகேஷின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். கலைத்துறையில்
புகழ் பெற்ற சிறந்த குணச்சித்திர நடிகரான நாகேஷ் இயற்கை அடைந்த செய்தியினை அறிந்து
பெருந்துயருற்றேன்.
தனிச் சிறப்பான நகைச்சுவையாலும் பல திறமையான நடிப்பாற்றலாலும் தமிழகத் திரைப்பட
வரலாற்றில் தனக்காக ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ். தனிப்பட்ட
முறையில் என்னிடம் மாறாத அன்பும் பாசமும் கொண்டவர். தமிழத் திரைப்பட ரசிகர்களின்
பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர். நாகேஷின் மறைவினால் வாடும் அவரது
குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கின்றேன் என்றும் முதல்வர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினக்குரல்.காம்
http://www.thinakkural.com/news/2009/2/1/importantnews_page66995.htm |
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|