பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
அரசியல்! |
தினமணி.காம்!
கிளிநொச்சியை மீட்க முடியும்: புலிகள் நம்பிக்கை
கொழும்பு, ஜன. 7: இலங்கை ராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை மீட்க எங்களால் முடியும்
என்று விடுதலைப் புலிகள் இயக்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ராணுவத்துடன் நடந்து
வரும் சண்டையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு விடுதலைப் புலிகளுக்குப்
பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இழந்த இடங்களை மீட்டெடுப்போம் என்று அந்த
இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பி. நடேசன் தெரிவித்தார்.
இதற்கு முன்பு கூட ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை கிளிநொச்சியை இலங்கை ராணுவம்
பிடித்துள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கெனவே மீட்டு எடுத்த வரலாறு உண்டு என்று அவர்
கூறினார். அதைப் போல தற்போது கிளிநொச்சி நகரை நாங்கள் மீண்டும் மீட்டுவிடுவோம்
என்று நடேசன் கூறியதாக புலிகளின் ஆதரவு இணையதளமான "தமிழ்நெட்டில்'
தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியைப் பிடித்து முன்பு போல நிர்வாக வசதிகளை
ஏற்படுத்துவோம் என்றும் நடேசன் கூறினார்.
வட மாகாணத்தை முழுவதுமாக கைப்பற்றி அங்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
என்று இலங்கை அரசு கூறி வருவது குறித்து கேட்டபோது, வட மாகாணத்தில் தேர்தல் நடத்த
முனைவது பயனற்ற செயல். மக்களின் உண்மையான பிரதிநிதிகளை ஒதுக்கிவைத்துவிட்டு
கைப்பாவைகளையும் துணை ராணுவ ஏஜென்டுகளையும் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லவதை
எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தங்களது அரசியல் விருப்பத்தை ஏற்கெனவே
தெரிவித்துவிட்டனர். மக்களின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து அவர்களின் விருப்பத்தை
நிறைவேற்றும் பொருட்டு எங்கள் வீரர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். ஈழ
தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான். எங்கள் மக்களும் அதுபோல் உலகம்
முழுவதும் உள்ள தமிழ் சமூகமும் எங்களுடன் உள்ளனர். கைப்பாவைகளை கொண்டு வட
மாகாணத்தில் ஆட்சி புரிய விரும்புபவர்களுக்கு நாங்கள் சொல்லும் செய்தி இதுதான்
என்றார் நடேசன்.
நாங்கள் அரசியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் பெரிய சவால்களை எதிர்கொண்டு
வருகிறோம். இந்த சவால்களை சமாளித்து விரைவில் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல்
நடத்தி வருகிறது. ஆனால் உலக சமூகம் இந்த மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ளாமல்
இருப்பது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது என்றார் அவர்.
நன்றி: தினமணி.காம்
http://www.dinamani.com |
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|