நாற்பது ஆண்டுகளாக சின்ன மாமியின் சின்ன மகளைத் தேடும் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம்! - முருகபூபதி -
இலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் உட்படத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் உலக நாடுகள் பலவற்றிலும் சின்னமாமியே பாடல் மூலம் புகழ் பெற்ற நித்தி கனகரத்தினம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பும் சின்ன மாமியை மறக்காமல் பாடிக்கொண்டிருக்கிறார். இந்தச்சின்னமாமிக்கு (பாடலுக்கு) 2007ம் ஆண்டு நாற்பது வயதாகப் போகிறது. நித்தி படித்தவர்.- பண்பான இயல்புகளைக் கொண்டவர். பிரபலமான பல மேடைப்பாட்டுக் கலைஞர்களிடம் இயல்பாகவுள்ள பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மனிதாபிமானவாதி. தான் இயற்றிப்பாடிய பாடல்களை சமூக சீர்திருத்தப் பாடல்கள் என்று கலாரசிகர்களும் விமர்சகர்களும் கருதினாலும்- நான் அவற்றை மண்ணின் ராகங்கள் - என்று தான் சொல்லுவேன் என்ற கருத்து நிலையில் இருப்பவர்.
அவுஸ்திரேலிய விக்ரோரியா மாநிலத்தின் விக்ரோரியா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானக் கல்லூரியில் விரிவுரையாளராக (Pharmacology)) பணியாற்றிக்கொண்டே மூலிகை மருத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டவாறு தமிழ் உணவு வகைகளில் இருக்கும் உயிர்ச்சத்து குறித்து ஆங்கிலேயர்களுக்கும் பிற இன மக்களுக்கும் அவ்வப்போது னுநஅழளெவசயவழை¦ செய்து கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மேடைகளைக்கண்டு விட்ட நித்தி கனகரத்தினத்தின் வாழ்க்கைச் சரிதம் கூடக் கலைநயம் மிக்கது தான். ஆவர் எழுதிக் கொண்டிருக்கும் என் இசையும் என் கதையும் நூல் வெளியாகும் பட்சத்தில் நித்தியின் கலையுலக வாழ்வின் பல பரிமாணங்களை அறிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் உரும்புராயில் பிறந்த நித்தி;; - தமது ஆரம்பக்கல்வியை வேம்படி ஆரம்பப்பாடசாலையில் தொடங்கி யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி விவசாய பீடம் முதலானவற்றில் மேற்கல்வியைத்தொடர்ந்து இந்தியாவில் அலகபாத் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் கற்று முதுமாணிப்பட்டம் பெற்றவர்.
1955ம் ஆண்டளவில் நித்தியின் பாடுந்திறன் கண்டு ஆசிரியர் வேலுப்பிள்ளை ஊக்குவித்து விழா நிகழ்ச்சிகளின் போது வாழ்த்துப்பா பாட அழைத்திருக்கிறார். நித்தியின் பாடல் , கலையுலகப் பிரவேசத்தக்கு வித்திட்டது ஆசிரியர் வேலுப்பிள்ளைதான் என்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பும் மறக்காமல் நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறார்.
நித்தி நடித்த முதல் நாடகம் துருவன். ஏட்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போது ,எமது ஊருக்குத் தமிழகத்திலிருந்து வந்திருந்த குகானந்தவாரியார் என்ற பெரியவர் முன்னிலையில் :
நாறியிடைப்பாகருக்கு நஞ்சளித்த வைகையன்றி
வாவியிடை போகாத வைகையே- பாரில் இடத்தும் வலத்தும் இருமருங்கும் ஓடி நடத்தும் தமிழ்ப்பாண்டி நாடே
என்று பாடினேன். அப்பெரியார் எனது தலையில் தொட்டு ஆசிர்வாதம் வழங்கினார் என்று நெகிழ்வுடன் சொல்கிறார்.
சிறிய வயதிலேயே கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் மலரும் மாலையும் தொகுப்பைப் படித்து - கவிதை எழுதவும் பயின்ற நித்தி , யாழ். மத்திய கல்லூரியில் கற்கும் காலத்தில் மாங்கனி என்ற கையெழுத்துப்பத்திரி;கையையும் 1957ல் வெளியிட்டுள்ளார்.
கல்லூரி விழாக்களின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமது கலை ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட நித்தி - குழந்தை இலக்கிய கவிஞர் அழ.வள்ளியப்பா , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் , கி.வா. ஜகந்நாதன் , முதலான தமிழக இலக்கியவாதிகளினதும் வாழ்த்துக்களைப் பெற்றிருப்பவர்.
ஆரம்ப காலத்தில் - ஊர் சனசமூக நிலையங்களில் பல கிண்டல் நாடகங்களை அரங்கேற்றியுள்ள நித்தியிடம் இயல்பாகவே அங்கதச்சு வையுணர்வும் இருந்தமையால்தான் பின்னாளில் சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே , கள்ளுக்கடைப்பக்கம் போகாதே , சோளஞ் சோறு பொங்கட்டுமா - முதலான பாடல்களைப் பாட முடிந்திருக்கிறது.
ஊர் மேடைகளில் கிண்டலடிக்கும் பாடல்களைத் தாமே இயற்றிப் பாடிக் கவனத்தை ஈர்ந்தவரிடம் - உங்கள் ஞாபகத்தில் இருக்கும் அந்தக் கிண்டல் பாடல் ஒன்றைச் சொல்லுங்களேன் என்றேன்.
ஆமணக்கம் சோலையிலே
பூமணக்கப் போற பெண்ணே
உன்னழகைக் கண்டவுடன்
கோமணங்கள் துள்ளுதடி -
இவ்வாறு பாடி விட்டு - இப்படி நிறைய இயற்றியிருக்கிறேன் அந்தக் காலத்தில். காலம் மாறி விட்டது.இனி, காலத்துக்கேற்ற பாடல்கள் பாட வேண்டும் - என்ற மனப்பாங்கு உருவாகியுள்ளது என்றார்.
சிங்கள பைலாப்பாட்டு உடனுக்குடன் இயற்றப்பட்டு வாதப்பிரதி வாதங்களுடன் கிண்டலுடன் இரட்டை அர்த்தங்களுடன் பாடப்பட்ட கால கட்டத்தில் - தமிழிலும் இவ்வாறு எமது மண்சார்ந்த இயல்புகளைச் சித்திரிக்கும் பாடல்களை நாமும் ஏன் இயற்றிப் பாடக் கூடாது- என்ற சிந்தனையின் தாக்கத்தால் நான் உந்தப்பட்டேன். அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக் கல்லூரிக்கு 1966ம் ஆண்டளவில் படிக்கச் சென்ற சமயம்- ஹார்டிடே விழா நிகழ்ச்சியில் தான் - முதல் முதலில் சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே? பூடினேன். எதிர்வரும் 2007ம் ஆண்டு - இந்தப் பாட்டுக்கு 40 வயதாகப் போகிறது - என்றார் நித்தி.
இலங்கையில் பிறந்த சின்ன மாமி - இன்று தமிழகத் திரைப்படங்களிலும் இடம் பெற்றுள்ளாள். அந்தளவுக்கு அதன் மவுசு இன்னமும் குறையவில்லை.
இலங்கையிலும் - அவுஸ்திரேலியாவிலும் - தமிழர் இல்லங்களில் பிறந்த நாள் - திருமணநிறைவு நாள் கொண்டாட்டங்களின்போது இளைஞர்கள் சில பக்க வாத்தியங்களுடன் பாடி ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். அங்கே நித்தியின் புகழ் பெற்ற பாடல்கள் நிச்சயம் இடம் பெறும்.
நித்தியின் அந்தப்பாடல்களைப் பாடியே இலங்கையிலும் - மலேசியாவிலும் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலும் புகழ் பெற்ற பாடகர்கள் பலர் இருக்கின்றனர்.
யூழ்ப்பாணம் திறந்த வெளியரங்கு - பெளர்ணமிவிழாக்களிலும் - யாழ் மத்திய கல்லூரி - யாழ் பரியோவான் கல்லூரி கிரிக்கட் ஆட்டங்களின்போதும் நித்தியின் பாடல் கள் மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.
இலங்கைப் பத்திரிகைகளின் ஆண்டு விழா நிகழ்ச்சிகளிலும் நித்தி பாடிப் புகழ் பெற்றுள்ளார். ஈழநாடு பத்தாவது ஆண்டு விழா - யாழ்ப்பாணத்தில் நடந்த தினகரன் விழா முதலானவற்றிலும் பங்கேற்றதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
இலங்கையிலும், தமிழகத்திலும் கவனத்தைப் பெற்ற இக்கலைஞர் - நோர்வே - டென்மார்க்- ஜேர்மன்- பிரான்ஸ்- கனடா- அமெரிக்கா- லண்டன்- மலேசியா- சிங்கப்பூர்-புரூணை முதலான நாடுகளிலும்- தற்போது வாழும் அவுஸ்திரேலியாவிலும் பல மேடைகளில் பாடியுள்ள நித்தி வட இந்தியாவில் அலகபாத்தில் நடந்த கலை நிகழ்ச்சியொன்றில் இந்தித் திரையுலகில் பிரபலம் பெற்ற சங்கர்- ஜெய்கிசான் இரட்டையர்களுடன் சேர்ந்து பாடியதை பெருமிதத்தடன் நினைவு கூர்ந்தார்.
தாய் மொழியாம் தமிழில் மாத்திரமின்றி ஆங்கிலம்,சிங்களம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடும் திறன் பெற்ற நித்தி கனகரத்தினம் - 1970களில் பொப்பிசைப்பிதா என்ற பெயரெடுக்கும் அளவுக்கு இலங்கையில் பு¢ரபலம் பெற்றார். நித்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்ந்த காலத்தில் ஸ்டனி சிவானந்தன், எஸ் இராமச்சந்திரன், ஏ.ஈ.மனோகரன், கணபதிப்பிள்ளை, டோனி ஹசன், சுரேஸ், அமுதன் அண்ணாமலை, முத்தழுகு முதலான பல கலைஞர்களும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இத்தகவலையும் காலம் கடந்தும் சக நண்பர்களை மறக்காமல் நினைவு கூர்ந்து சொன்னார்.
நித்தியின் புகழ் பெற்ற தமிழ் பொப் பாடல்கள் இலங்கை வானொலியின் ஆசிய ஒலிபரப்பில் இடம் பெற்றதனால் இலங்கை வானொலிக்கு நித்தியின் பெயரில் நேயர் கடிதங்கள் வந்தன.
ஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை - காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்கான காரணம் என்ன? என்று கேட்டேன்.புதிய கலைஞர்கள் தோன்றாமல் போனது மாத்திரமன்றி - தொலைக்காட்சியின் அறிமுகம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி விட்டது. இந்நிலை மிகவும் கவலைக்குரியது என்றார்.
மலேசியாவில் 45வது சுதந்திர தின விழா -மேடே காடே- ஊர்வலக் காட்சிகளை , மலேசியாவில் நின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றதைப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் சொரிந்தது.எங்கோ பிறந்த பாடல் எங்கெங்கோ சென்று மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பதைப் பார்த்துப் பரவசமடைந்தேன் என்றார்.
இச்சந்திப்பின்போது நித்தி கூறிய தகவல்கள் அவர் எழுதவுள்ள அவரது சுயசரிதைக்கு மேலும் பயனுடையதாக இருக்கும்.
ஒரு சமயம் (1975இல்) பருத்தித்துறையில் மீன் சந்தையில் பேராசிரியர் கா. சிவத்தம்பியை எதிர்பாராத விதமாக நித்தி சந்தித்துள்ளார். நித்தியிடம் பொப்பிசை குறித்து கலந்துரையாடிய அவர் பின்பு ஓர் இதழில் கட்டுரையும் எழுதியுள்ளார்.
1983ல் நிகழ்ந்த இனவாத வன்செயல்களினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானதையடுத்து மிகவும் விரக்தியடைந்திருந்த நித்தி- இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார்.
சிங்கள அரசியல்வாதிகள்- தமது தேர்தல் பிரசார மேடைகளில் சிங்களப் பாடகர்களுக்கு அழைப்பு விடுத்தமை போன்று - நித்திக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.நித்திக்குப் பல பிரபலமான பாடகர்களுடன் நெருக்கமான நட்பு இருந்தமையால் - அத்தகைய அழைப்புகள் வந்துள்ளன. எனினும் நித்தி தமது சபதத்தைத் தொடர்ந்து நிறைவேற்றினார்.
1986ல் மட்டக்களப்புப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுப்புறப்படும் தறுவாயில் நடந்த பிரிவுபசார விழாவில் பலரது வற்புறுத்தி;னால் - பாடியுள்ளார். ஆனால் அது நித்தியின் வழக்கமான பொப்பிசைப்பாடல் அல்ல.
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்ற சுதந்திர வேட்கை நிரம்பிய பாடலை மாத்திரம் பாடி விடை பெற்றார்.
தமிழகத்தில் எம்,ஜீ.அர், முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் - மதுவிலக்கு கொள்கை மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலி பரப்பான பாடல் நித்தியின் கள்ளுக்கடைப் பக்கம் போகாதே. ரஜனிகாந்த் நடித்த அவசர அடி ரங்கா, எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்த சிவரஞ்சனி விஜயகாந்த் நடித்த ரமணா - முதலான படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. எனினும் - இதற்காக தமிழக முதல்வரிடமிருந்தோ தமிழ்த் திரைப்படத் துறையிடமிருந்தோ நித்திக்கு வெகுமதிகள் கிடைக்கவில்லை.
நித்தியின் பாடல்கள் மக்கள் மயப்பட்டதனால் இன்றும் எங்காவது அவை ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. நித்தி அவுஸ்திரேலியாவில் இருந்து தமது அன்றாடக் கடமைகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார். கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார். அடுத்த ஆண்டு சின்ன மாமிக்கு 40 வயது. அந்தப் பிறந்த நாளில் நித்தியை மீண்டும் நாம் மேடையில் பார்க்கலாம்.