| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| அரசியல்! |  
| மாலைமலர்.காம்! மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதம் வழங்ககூடாது: கருணாநிதி கோரிக்கை!
 
 
  சென்னை, 
ஏப். 23- சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் ஜி.கே.மணி (பா.ம.க.) பேசியதாவது:- 
மத்திய அரசு ராணுவ தளவாடங்களை இலங்கைக்கு கொடுப்பதாக வந்துள்ள செய்தி நமக்கு 
அதிர்ச்சி அளிக்கிறது. அங்கு முப்படை தாக்குதல் நடக்கிறது. இலங்கை ராணுவத்தினர் 
தமிழக வீடுகளுக்கு சென்று கணவன் கண்முன்பு மனைவியை கற்பழிக்கிறார்கள். அங்கே சோகமான 
சம்பவங்கள் நடக்கிறது. 
 அங்குள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் சமரச தீர்வு வரவேண்டும் 
என்று போப் ஆண்டவர் உள்பட பலர் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலைக்கு இலங்கைக்கு ராணுவ 
உதவியை மத்திய அரசு வழங்காமல் இருக்க முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும். இதற்காக 
இங்கு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அனுப்ப வேண்டும்.
 
 இவ்வாறு அவர் பேசியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். 
பதிலுக்கு பா.ம.க.வினரும் எழுந்து நின்று தாங்கள் பேசுவது சரிதான் என்றறு குரல் 
கொடுத்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் 
சபாநாயகர் அமைதிப்படுத்தினார்.
 
 சுதர்சனம் (காங்):- பா.ம.க. தலைவர் இங்கு ஒரு விளக்கத்தை சொல்லி இருக்கிறார். 
மத்திய அமைச்சரவையில் பா.ம.க.வும் பங்கு வகிக்கிறது. அங்கே அவர்களுக்கு சொல்ல 
வாய்ப்பு இருக்கிறது. அதை விட்டு விட்டு இங்கே தீர்மானம் கொண்டு வர சொல்கிறார். இதை 
விவாதிக்கும் இடம் மத்திய அரசு தான்.
 
 சிவபுண்ணியம் (இந்திய கம்ïனிஸ்டு):- இதில் மத்திய அரசு நிலைப்பாடு சரி யில்லை.
 
 முதல் அமைச்சர் கருணா நிதி :- நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும் 
காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் இந்தியக் கம்ïனிஸ்டு கட்சியின் சார்பிலும் 
எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள் இந்த அவையில் பதிவாகி யிருக்கின்றன.
 
 அதே நேரத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் பத்திரிகைகளிலே வந்த 
கருத்துக்கள் அந்த கருத் துக்களின் அடிப்படையிலே தான் இங்கே நம்முடைய பாட்டாளி 
மக்கள் கட்சியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இந்தியக் கம்ïனிஸ்டு 
கட்சியின் தலைவரும் இங்கே உரை யாற்றிருக்கிறார்கள்.
 
 பத்திரிகையிலே வந்த இந்த கருத்துக்கள், செய்திகள் உண்மையானவைதானா என்பதை 
அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். என்ன செய்தி வந்திருக்கிறதென்றால் 
இலங்கைக்கு போர்க் கருவிகளை வழங்குவதில்லை என்ற முடிவுக்கு மாறாக இந்தியஅரசு 
தற்போது ஆயுதங்களை வழங் கியுள்ளது என்று செய்தி வந் திருக்கின்றது.
 
 இதை படிக்கின்ற யாரும் நம்முடைய மணி துடித்தது போல, பதைத்தது போல பதறியதிலே 
எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால் இது உண்மைதானா என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அந்த 
வாய்ப்பை நாம் உருவாக்கிகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். அந்த வாய்ப்பு நமக்குக் 
கிடைத்தது உண்மைதான் என்றால் நாம் மத்திய அரசுக்கு, இதிலே இன்னும் ஒற்றுமையோடு 
இருந்து நம்முடைய அழுத்தமான வேண் டு கோளை விடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.
 
 நீங்கள் தமிழர்களை வதைக்க இலங்கையிலே உள்ள சிங்கள ராணுவத்தினருக்கு ஆயுதம் 
உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் 
கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கின்ற உரிமை நமக்கு இருக்கின்றது, 
பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்று மாத்திரம் சொல்லி இந்த அவையில் அமைகிறேன். 
இவ்வாறு சட்டசபையில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
 
 நன்றி: மாலைமலர்.காம்.
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |