இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2009 இதழ் 120  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
தோழர் மு.கார்த்திகேசன் நினைவுப் பேருரையும் நூல் வெளியீடும்

= எம்.கே.முருகானந்தன்
-

தோழர் மு.கார்த்திகேசன்இலங்கையின் அரசியலைத் தெரிந்த, அதிலும் முக்கியமாக வட பகுதியின் இடதுசாரி அரசியலைத் தெரிந்த எவரும் கார்த்திகேசன் மாஸ்டரைத் தெரியாது இருக்க முடியாது. தமிழ் மக்களிடையே இடதுசாரி சிந்தனைகள் உருவாவதற்கு அவரும் ஒரு முக்கிய நபராவார். இலங்கை இடதுசாரி இயக்கதின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய தோழர் மு.கார்த்திகேசன் அவர்களது 32 வருட நினைவுப் பேருரையும், பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதிய ‘இலங்கையில் உயர் கல்வி: பல்கலைக்கழக வளர்ச்சியும் பிரச்சினைகளும்’ என்ற நூல் வெளியீடும் சென்ற 27.09.2009 ஞாயிறு அன்று கொழும்பு 06ல் 58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடலில் நடைபெற்றது.

தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு சிவா சுப்பிரமணியம் தலைமையில் கூட்டம் சரியாக மாலை 4.30 ற்கு ஆரம்பமாகியது.
தலைமையுரை “வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்த ஆரம்பகர்த்தாக்களில் கார்த்திகேசன் மாஸ்டர் முக்கியமானவர். அரசியலில் முழு ஈடுபாடு கொண்ட போதும் ஆசிரியராக இருந்த அவர் தனது ஆசிரியர் பணிக்கு தொய்வு ஏற்படாதவாறு கல்விப் பணியைத் தொடர்ந்தார். அவரிடம் கல்வி பெற்ற ஒரு சிலர் பின்னாட்களில் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத போதும் அவரில் பெரு மதிப்பு வைத்திருந்தனர். வார்த்தை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிலம்பாட்டங்கள் இன்றி நாசூக்கான சிந்தனைகள் ஊடாக அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார். எளிமையான சொற்களும், நகைச்சுவை நயமும் சேர்ந்திருப்பதால் அவரது கருத்துக்கள் சுலபமாக விளங்கப்பட்டன. இன்று தமிழ் அரசியலில் உள்ள பலரும் அவரூடாகவே வந்தவர்களாகும்.”

“சொந்த வாழ்வுக்கும் அரசியலுக்குமிடையே எந்த வித்தியாசமும் காட்டாதவர் அவர். போஸ்டர் ஒட்டுவதாயின் தொண்டர்களுடன் களம் இறங்கிவிடுவார். ராமசாமி ஐயர், பூபாலசிங்கம், ஆ.ஊ.சுப்பிரமணியம் ஆகியோரும் இணைந்து செல்வதுண்டு. எனது வீட்டுப் படலையில்தான் முதல் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்பாராம். ஒரு முறை அவ்வாறு நோட்டீஸ் ஒட்டும்போது பொலிஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டது. பொலிஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வந்து விடயத்தை அறிந்தபோது இது சிறிய குற்றம் விட்டு விடுங்கள் என்றாராம். கார்த்திகேசு மாஸ்டர் கதிரையை விட்டு அசையவில்லை. நாங்கள் குற்றம் அற்றவர்கள். எங்கு பிடித்தீர்களோ அங்கு கொண்டு போய் விட்டு விடும்படி சொன்னார்” எனப் பழைய நிகழ்வுகளை சுவையாக எடுத்துரைத்தார்.

“தமிழ் ஈழம் பற்றி முதல் முதலில் பேச்சு வந்தபோது, ஈழம் ஈழம் என்று சொன்னால் சிங்களம் நீளம் நீளமாக வளரும்” என அன்றே தீர்க்கதரிசனமாகச் சொன்னதை நினைவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய சிவா சுப்பிரமணியம் அவரது ஆங்கிலப் புலமை பற்றியும் குறிப்படத் தவறவில்லை. பல துறைகளிலும் மாணவர்களை வளர்த்து எடுத்துள்ளார். உதாரணமாக SLAS பரீட்சைக்கு தோற்றும் பலருக்கு ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதற்கு பழக்கியிருக்கிறார்.

பல துறைகளிலும் கார்த்திகேசு மாஸ்டருக்கு திறமை இருந்த போதும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்தார் தனது கடைசி மூச்சு வரை அவ்வாறே உறுதியாக வாழ்ந்த பெருமைக்கு உரியவர்.

நூல் வெளியீடு
இதைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதிய ‘இலங்கையில் உயர் கல்வி: பல்கலைக்கழக வளர்ச்சியும் பிரச்சினைகளும்’ என்ற நூலின் வெளியீட்டுரையை ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரான திரு.தி.ஸ்ரீவிசாகராசா ஆற்றினார். ஏராளமான புள்ளிவிபரங்களைத் தேடி எடுத்து மிக ஆழமாக எழுதப்பட்ட நூல். மிக நல்ல முயற்சி என்றார். தமிழ் பெற்றோர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். தமது குழந்தைகளின் கல்வியில் ஆர்வமுள்ள பெற்றோர்கள் அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்றார். முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து இந்நூலின் ஏக விநியோகஸ்தர் ஆன பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதியை பேராசிரியர் சபா ஜெயராசா நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நினைவுப் பேருரை ஆற்ற இருந்த பேராசிரியர்.இரா.சிவச்சந்திரன் விமானசேவை அன்று திடீரென தடைப்பட்டதால் வரமுடியாது போயிற்று.

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் உரை
அதை ஈடுசெய்யும் முகமாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ‘அறிவுசார் பொருளாதாரமும் கல்வியறிவும்;’ என்ற பொருளில் மிகவும் பயனுள்ள ஒரு உரையை ஆற்றினார். “உலகளாவிய ரீதியில் இப்பொழுது இரண்டு சித்தாந்தங்கள் முன்னிலையில் இருக்கின்றன. 1990 களில் ‘கோளமயமாக்கல்’ முன்வைக்கப்பட்டது. இப்பொழுது ‘அறிவுசார் பொருளாதாரம்’ முக்கியமாகப் பேசப்படுகிறது.
உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகிய இரண்டும் இக்கருத்துக்களை முன் வைக்கின்றன. உலகவங்கியானது உலகளாவிய ரீதியில் நிதி சார்ந்த ஆதிக்கம் செய்வதுடன் கல்வி சார்ந்த சித்தாந்தத்தையும் முன்நிலைப்படுத்துகிறது. இதற்காக அதன் கொள்கை வகுப்போர் குழுவைச் சார்ந்த கல்வியாளர்கள் இங்கு வந்து கல்வி அமைச்சில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டங்களை நடாத்துகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தங்களது கல்விச் சிந்தனைகள் இலங்கைப் பாடசாலைகளில் இடம் பெறுகிறதா என்பது பற்றிய தரவுகளைப் பெற்று அறிக்கையாக எழுதுகிறார்கள். அதனை உலக வங்கியின் ஆய்வு மையம் பகுந்தாய்ந்து முடிவுகளை எடுக்கிறது என்றார்.அறிவியலோடு சேர்ந்த சில ஆங்கிலச் சொற்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள் மிகத் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருந்தது.“அறிவின் அடிப்படை Data ஆகும். இதனைத் தரவு எனச் சொல்லலாம். தரவை வழங்குபவர் தரவாளர் ஆவார். தரவுகளைப் பெற்று ஆய்ந்து தரும் போது அது தகவல் (Information) ஆக மாறுகிறது. அத்தகைய தகவல்கள் நிறைய உள்ளவரை அறிவுள்ளவர் அதாவது அறிஞர் எனலாம். அறிவின் உச்சநிலையை ஞானம் என்பர். ஞானத்தின் உறைவிடமாக விளங்குபவர் ஞானி” என விளக்கினார். “அறிவு முகாமைத்துவம் என்பது ஒரு மேலைத்தேசக் கோட்பாடு. ஆனால் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. மேலைத்தேச நாடுகளுக்கானது மட்டுமல்ல. ஏனைய நாடுகளும் அதற்கு மாற வேண்டும். இந்தியா, கொரியா போன்ற பல நாடுகளும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இலங்கையிலும் அறிவியல் பொருளாதாரம் வளர வேண்டும்”; என்றார். “பொருள் உற்பத்தி ஒன்றே பொருளாதார வளத்தின் முக்கிய அம்சம் என ஏற்றுக் கொள்ளப்பட்டு;ள்ளது. ஆனால் எல்லா உற்பத்திக்கும் அறிவியல் தேவை. விவசாயம் திறம்படச் செய்ய அறிவியல் தேவை. மீன் பிடித் தொழிலுக்கும் அதற்கான அறிவியல் தேவை. அவ்வாறே எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதன் முன்னேற்றத்திற்கு அத்துறை சார்ந்த ஆழ்ந்த அறிவும் தேவை என்பது மறுக்க முடியாதது” என்றார் பேராசிரியர்.

இலங்கையைப் பொறுத்த வரையில் உலகளாவிய ரீதியில் கிடைக்கப் பெற்ற விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை உள்வாங்க வேண்டும். அதற்கேற்ற கல்வி முறை தேவை. பழைய கால முறைகள் பயனற்றது. உதாரணம் Assesment of knowledge என்றார். அறிவு, ஞானம் போன்றவை யாவும் பல்கலைக்கழக சமூகம் மட்டும் பெற்றால் போதாது. ஏனையோருக்கும் பரப்ப வேண்டும் என்றார்.
இன்றைய பல்கலைக் கழகங்கள் உலகளாவிய ரீதியில் கிடைக்கும் அறிவை

1. உள்வாங்க வேண்டும்
2. சமூகத்தில் பரப்ப வேண்டும்
3. புதிய அறிவை உருவாக்க வேண்டும், அல்லது மேம்படுத்தவும் கூர்மையாக்கவும் வேண்டும்
4. அதை நடைமுறைப்படுத்தவும் பயன் பயன்பாடு உடையதாக மாற்ற வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்துவதற்காக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழமையான கல்விக் கூடங்களுக்கு மாற்றாக Thinking Schools உருவாக்கியுள்ளார்கள். மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதற்கான கல்வி அங்கு கிடைக்கிறது. இலங்கையில் 40 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள். 10 வருடங்களில் இவர்கள் கல்வியை முடித்து வெளியேறும்போது வேலை செய்ய வேண்டும். அப்பொழுது அரசதுறைகளில் 15 சதவிகிதத்தினரையே உள்வாங்க முடியும். 35 சதவிகிதத்தினர் தனியார் துறையில் இறங்குவர். மிகுதி 35 சதவிகிதம் சுயதொழில் புரிய வேண்டியிருக்கும். எனவே தனியார் துறையின் தேவை கருதி அதற்கேற்ற கல்வியைக் கொடுக்க வேண்டும். இன்று தனியார் துறையினர் எதிர்பார்ப்பது என்ன?

1. ஆங்கிலம் தெரிய வேண்டும்
2. தொடர்பாடல் திறன் (Communication Skill) வேண்டும்.

இன்று சராசரியாக இலங்கை மாணவர்களின் கல்வித் தகமை 9ம் வகுப்பு மட்டுமே. இது போதாது. உயர வேண்டும்.
ஒரு காலத்தில் இலங்கையில் சுயமொழிக் கல்வியும், இலவசக் கல்வியும் முக்கியமாகக் கருதப்பட்டன. பெயர் பெற்று இருந்தன. அது ஒரு நேரத்தில் முக்கியமாக இருந்தது. ஆனால் இன்று ஆங்கிலக் கல்வியின் அவசியம் உணரப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தனியார் கல்வி முறை முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு இன்றைய கல்வி பற்றி ஒரு பயனுறு சொற்பொழிவை நடாத்தினார். திடீரென பேச அழைத்தபோதும் மிகவம் சரளமாகவும், தரவுகள் நிநை;ததாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. மறைந்த ஆசான் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் மறைந்து வருடங்கள் பல ஆயின போதும் அவர் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிக்கு நன்றி கூறும் வண்ணம் மண்டபம் நிறைய அறிஞர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டனர். பேராசிரியர் சபா.ஜெயராசா, விரிவுரையாளர்களான ரவீந்திரன், தனராஜ், சட்டத்தரணி சோ.தேவராசா, வீரகேசரி ஆசிரியர் வீ.தேவராஜ், போன்ற பலரும் கலந்து கொண்டனர். சிலர் தமக்கும் அவருக்கும் இடையேயான உறவை நினைவு கூர்ந்து கருத்துரைத்தனர். அவரது மகள், மருமகன், பேரக் குழந்தைகள் உட்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டதும் நிகழ்ச்சிக்கு பெறுமதி சேர்த்தது.

.
Dr.M.K.Muruganandan
Family Physician

Visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html

kathirmuruga@hotmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்