இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2009 இதழ் 113  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா1
பிரன்சுத் திரைப்படம்: ஒரே இனத்திற்குளான காலாசார முரண்களைப் பேசும் திரைப்படம்!

- எம்.கே.முருகானந்தன்
-

பிரன்சுத் திரைப்படம்: ஒரே இனத்திற்குளான காலாசார முரண்களைப் பேசும் திரைப்படம்.எம்.கே.முருகானந்தன்அண்மையில் ஒரு வித்தியாசமான திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ஞாயிறு 22.3.2009ல் கொழும்பு பண்டாரநாயக நினைவு சர்வதேச மண்டபத்தின் தியேட்டரில், பிரன்சுத் திரைப்பட விழாவிற்காகக் காட்டப்பட்
Sans Maison .. படமே பார்க்கக் கிடைத்தது. இளம் கலைஞரான Maryanne Zehil நெறிப்படுத்திய திரைப்படம். கனடாவில் தயாரிக்கப்பட்ட பிரென்சு மொழித் திடைப்படம் இது. ஆங்கிலத் தலைப்புகள் இடப்பட்டிருந்தது.

போரில் சிக்கியிருந்த நாடான லெபனானைச் சார்ந்த பெண் சனா. இவள் கனடாவின் மொன்றியலுக்கு புலம் பெயர்கிறாள். தான் பிறந்த தாய் நாட்டை விட்டு, தனது சொந்த பந்தங்களைத் துறந்து, தாய் என்ற கடமையையும் புறக்கணித்து, விட்டுச் செல்கிறாள். தனது 4  வயதுக் குழந்தையை தனது தாயுடன்; விட்டு விட்டுச் செல்கிறாள..

சனா ஏன் புலம் பெயர்கிறாள். போரின் அச்சுறதலா? உயிரின் மீதான ஆசையா? இல்லை!

நெருக்கடிகள் நிறைந்த வாழ்விலிருந்து விடுபட வேண்டும் என்பதே அவளது நோக்கம். ஆனால் இது வேறு வகையான விடுபடுதல். குண்டு வீச்சுகள், துப்பாக்கிச் சூடுகள், ஆகாயத் தாக்குதல்கள், கடத்தல், கொலை இவற்றிலிருந்து தப்புவது அல்ல அவளது குறிக்கோள். லெபனானின் நீண்ட பாரம்பரியம் மிக்க இறுக்கமான கலாசாரம், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, சமூகக் கட்டுப்பாடுகள் இவற்றிலிருந்து தப்ப வேண்டும் என்பதே அவளது ஒரே நோக்கம்.

கனடாவில் அவளுக்கு எந்தவித தடைகளும் கிடையாது. விரும்பிய தொழிலைத் தேர்ந்து கொள்ளலாம்.(உண்மையில் புலம்பெயர்தல் விடயம் சார்ந்த புகழ் பெற்ற சட்டத்தரணி ஆகிறாள்.) புதிய பூமியில் தனது நண்பர்களையும் உறவுகளையும் தானே நிர்ணயிக்கும் உரிமை அவளுக்கு இப்பொழுது கிட்டுகிறது. மகிழ்ச்சியோடு திருப்தியாக வாழ்கிறாள். ஆனால் குற்ற உணர்வு, மன வலி ஆகியவை இடையிடையே தலைதூக்க, அவற்றிலிருந்து விடுபட தனது பழைய வாழ்வின் நினைவுகளையே எரித்துவிட முயல்கிறாள். ஆனாலும் ஏதோ ஒரு உந்துதலில் 17 வருடங்களுக்குப் பின்னர் தனது மகளை தன்னிடம் அழைக்கிறாள். இதன் பின்னர்தான் முக்கியமான கதை நகர்கிறது.

கட்டுபாடுகளிலிருந்து விடுபட்டு எல்லையற்ற சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தாய்க்கும், லெபனானின் பாரம்பரிய கலாசார, பழக்கவழக்கங்களை மட்டுமே அறிந்து அதிலேயே முழ்கியிருக்கும் மகளான துனியாவிற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள், வேறுபாடான உணர்வுகள், மன உரசல்கள் எனக் காட்சிகள் நகர்கின்றன.

தாய் வீட்டிற்கு வந்த தானியா தனது பயணப் பைகளை வைத்துவிட்டு உடை மாற்றுகிறாள். அவளது வாளிப்பான தொடைகளை, நேர்த்தியான உடல் வளைவுகள் என ஒவ்வொன்றாக ரசனையோடு பாரக்கிறாள். மகளின் கழுத்தின் இடது பக்கத்தில் ஒரு தழும்பு இருக்கிறது. அதைப் பற்றி விசாரிக்கிறாள். குண்டு வெடிப்பின் போது பட்ட காயத்தின் தழும்பு என மகள் சொல்கிறாள். “அது கூட ஏதோ ஒரு விதத்தில் உன் உடலுக்கு கவர்ச்சியைக் கொடுக்கிறது” என்கிறாள் சனா.

குண்டு வெடிப்பு, காயம் என்பன போர் நடக்கும் நாட்டிலிருப்பவர்கள் நிதம் காண்பது, அதனால் பயமும் ஊட்டக் கூடியது. சிலருக்கு நாளாந்தம் பார்த்து மனம் மரத்துவிடுவதும் உண்டு. ஆனால் இவற்றிலிருந்து விடுபட்ட சனாவிற்கு அந்தத் தழும்பிலும் அழகுதான் தெரிகிறது. ஆம் அவளது வாழ்வு ரசனையும் இன்பமும் மட்டுமே கொண்டது.

அவள் எவ்வளவு பாக்கியம் செய்தவள். இதனைப் பார்த்தபோது எனக்கு ஏக்கம்தான் வந்தது. போரற்ற அமைதியான வாழ்வு எமக்கு
எப்போதாவது கிடைக்குமா. இழப்புகளையும், மரணங்களையும் பார்க்காது, கேட்காது, பேசாதிருக்கும் வாழ்வு என்றாவது சாத்தியமா? இது என் மன உழைச்சல். படம் அதைப்பற்றிப் பேசவே இல்லை.

இன்னொரு காட்சி. துனியா நீர்த்தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது சோப் நுரைகளுடாத் தெரியும் மகளது குவிந்த மார்புகளையும் பார்த்துப் பூரிக்கிறாள். தனது மகளின் அழகில் பெருமையுறுகிறாள். இவற்றையெல்லாம் தனது தாயே பார்த்துக் கொண்டிருப்பது மகளுக்கு இக்கட்டாக இருக்கிறது. அவள் வளர்ந்த சூழலில் இது கேவலமானது, அசிங்கமானது. ஆனால் தாயின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. அழகு, கேளிக்கை. பொழுதுபோக்கு, உல்லாசம், ஆட்டம், பாட்டம் என நகர்வது. சிந்தனைச் சுதந்திரம் கொண்டது. ஒழுக்கம் பற்றிய அளவுகோல்கள் விரிவானது. எனவே தாய் இன்னும் ஒரு படி மேலே சென்று “உனது போய் பிரண்ட் உன் அழகு பற்றி என்ன சொன்னான்” எனச் மிகச் சாதரணமாகக் கேட்கிறாள்.

இத்தகைய பேச்சால் திடுக்கிட்ட மகள் “எனக்கு போய் பிரண்ட் கிடையாது” என சினத்தோடு வெடுக்கெனச் சொல்கிறாள். “ஓ
அப்படியானால் உனக்கு பெண்கள் மேல்தான் பிடித்தமா” எனக் கேட்கிறாள். ஓரினப் புணர்ச்சி பற்றிய நாசூக்கான கேள்வி. தாயைப்
பொறுத்தவரையில் அது கூடத் தவறானது அல்ல. இது மகளை மேலும் அதிர்சிக்குள்ளாக்குகிறது. சினமூட்டுகிறது.

வேறொரு சம்பவம். ஒரு பார்ட்டி நடக்கிறது. தாயின் ஆண், பெண் நண்பர்களுடன். மகளும் கலந்து கொள்கிறாள்.. அவர்களது
வெளிப்படையான பாலியல் பேச்சுக்களும் செய்கைகளும் மகளுக்கு பிடிக்கவில்லை. மற்றவர்கள் மனம் புண்படும்படியாக வார்தைகளை உதிர்த்து விடுகிறாள். மற்றவர்களுடன் பண்பாக நடக்கவில்லை எனத் தாய் கண்டித்தபோது “நாளுக்கு ஒருவனைக் கட்டிப்பிடிப்பதும், குலாவுவதும், கூடப் படுத்து எழும்புவதும்தான் நாகரீகமா” என வெடுக்கெனக் கேட்கிறாள். அம்மா முகமும் கூட இருந்தவர்கள் முகமும் கறுத்துவிடுகிறது. நறுக்கெனத் தெறிக்கும் உரையாடல்கள் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

ஆம் தாய்க்கும் மகளுக்கும் இடையே ஒரு இணைக்க முடியாத பாரிய இடைவெளி இருக்கிறது. நிரப்பவே முடியாத இடைவெளி.
பொறுக்க முடியாத துனியா தனது ஊருக்கு திரும்பிவிடுகிறாள். ஆனாலும் கனடா வாழ்க்கை அவளிலும் சில சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. அவள் அங்கு பாட்டியுடன் மீண்டும் வாழும்போது ஒரு முரண்பாடு. பாட்டியுடன் காரமான வார்த்தையாடல் வெடிக்கிறது.. இவளின் பேச்சைப் பொறுக்க முடியாத பாட்டி சட்டென அறைந்துவிடுகிறாள். பின் மனம் நொந்து அரவணைக்கிறாள். ஆனால் தான் வாழும் கலாசரத்தின் இறுங்குப் பிடியை துனியாவும் சற்று உணர்ந்து கொள்வதை இக் காட்சி மிக நாசூக்கக் காட்டுகிறது. இதற்கு முன்பே கனடாவில் இருக்கும் போது தாயிடமிருந்து மனதால் விலகும் நேரத்தில் கிட்டும் ஒரு நண்பி. அவள் வீட்டில் ஒரு சந்திப்பில் கலந்து கொள்கிறாள். மதுவும் அருந்துகிறாள். நடனமும் ஆடுகிறாள். சற்று அதிகமாக மது அருந்திய நிலையில் தனது மேல் சட்டையைக் கழற்றி எறிகிறாள். சற்று போதை ஏற தனது மார்புக் கச்சையையும் கழற்ற முற்படுகிறாள். நண்பி தடுத்துவிடுகிறாள்.
எத்தகைய கட்டுப்பாடான பண்பாட்டுக் கோலத்திலிருந்து வந்தாலும் மனித மனத்தின் அடி மூலையில் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சுதந்திரமாக மிருகங்கள் போல வாழும் இச்சை ஒளிந்திருப்பதை இக் காட்சி காட்ட முயல்கிறதா?

பாட்டி இறந்துவிட லெபனானக்கு சனா வருகிறாள். மறந்துபோன தனது பழைய வாழ்வின் பக்கங்களைப் புரட்ட முடிகிறது. அவளது
கணவன் பற்றியும் மேலோட்டமாக அறிய முடிகிறது. ஞாபகங்கள் வருகின்றன. அதற்கு மேலாக அங்கு தாய்க்கு தினமும் பழம் கொண்டு வரும் தோட்டக்காரனை சந்திக்க நேர்கிறது. அத் தேசத்தின் கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காதலால் தனது தாயின் உணர்வுகளும் அடக்கப்பட்டு திணறடிக்கப்பட்டதை இத் தருணத்தில் சனாவினால் உணர முடிகிறது. பெண்களின் உணர்வுகள் எப்பொழுதுமே ஆண் மேலாதிக்க சமுதாயத்தால் அடக்கப்படவே செய்கிறது.

சனா, அவளது தாய், மகளான துனியா ஆகிய மூன்று தலைமுறைப் பொண்களின் வாழ்வு பற்றிய படமாயினும் இது தலைமுறை இடைவெளி பற்றியது அல்ல. பெண் சாரந்த கலாசார, பண்பாட்டு முரண்பாடுகள் பற்றியது. இந்த மூவருமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். துனியாவும், பாட்டியும் கட்டுப்பாடுகளை ஏற்று வாழ்கிறார்கள். அடங்கிப் போகிறார்கள்;. ஆதற்குள்ளேயே நிறைவு காணவும் முணல்கிறார்கள். தாய் சனா அடங்க மறுக்கிறாள். அவ்வாழ்வைப் புறக்கணித்து விடுபட ஓடுகிறாள். மற்றவர் பார்வையில் புரட்சி செய்கிறாள.; அதனால் துடுக்குத்தனமானவள் எனப் பெயர் பெறுகிறாள். ஆனால் குற்ற உணர்வினால் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முயல்கிறாள். முடியவில்லை. மகளை அவளது போக்கில் விட்டுவிட்டு தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு மீளுகிறாள்.

அவர்களது உணர்வுகளை விமர்சனம் செய்யாது, நிகழ்வுகளை மட்டும் வெளிப்டையாகக் காட்டி எம்மைச் சிந்திக்க வைக்கிறது
திரைப்படம். எமது தமிழ்ச் சூழலில் பெண்கள் கற்பு, தாய்மை, தெய்வாம்சம் போன்ற துதி வார்த்தைகளால் நயமாக அடக்கப்படுகிறார்கள். மாசத்துடக்கு., பேற்றுத் தீட்டு போன்ற வார்தைகள் இழிமைப்படுகிறாள். இன்னும் நாளாந்தம் சில்லறைத் தேவைகளுக்கும் சுதந்திரம் இன்றி கலாசாரச் சிறைக்குள் திணறலுக்கு ஆளாகிறார்கள் என்பதை யோசிக்க வைக்கிறது.

வாய்ப் புணர்தல் (Oral Sex) காட்டப்படுவதால் சிறுவர்களுக்கு ஏற்றது அல்ல.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தேசத்திலிருந்து புலம் பெயர்தல் இலங்கைத் தமிழர்களுக்கு புதியதல்ல. கடந்த 2-3 தசாப்தங்களாக இது நிதமும் நடைபெறுகிறது. புலம் பெயர்தலால் கிடைக்கும் உயிர்ப் பாதுகாப்பு, அதனால் கிடைக்கும் நிம்மதி, பொருளாதார நன்மைகள் யாவும் அறிந்ததே. நெருக்கடிகள் நிறைந்த வாழ்விலிருந்து நிம்மதியான சூழலுக்கு நகர்வது எத்தகைய ஆறுதலைத் தரும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆயினும் புலம்பெயர்தலின் மற்றொரு பக்கமும் உண்டென்பதை இப்படம் உணர்த்துகிறது.
உண்மையில் இந்த திரைப்படத்தை நீங்கள் எதற்காகப் பாரக்க வேண்டும். அதில் கிடைக்கும் அழகான கட்புலக் காட்சிகளுக்கு மேலாக அது எமது மனத்தில் எழுப்பும் சலனங்களுக்காகப் பார்க்க வேண்டிய படம். கலை, கலாசாரம், பண்பாடு பற்றிய எமது நிலைப்பாடுகளை மீள்பார்வை செய்யத் தூண்டுகிறது. அந்த விதத்தில் மிகவும் நிறைவான படம்.

துனியாவாக நடிக்கும் ரெனி தோமஸின் Renée Thomas கடுப்பான முகமும், சுட்டெரிக்கும்; வார்தைகளும் பல இடங்களில்
பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றன. அதுவே அவரது வெற்றியாகும். தாய் சனாவாக Louise Portal வருகிறார். மிகவும் பண்பட்ட நடிப்பு

நம்பத்தக்க வகையில் மனத்தைத் தொடும் வண்ணம் ஆழ்துயரம் கொண்ட கதையை படமாக்கிய நெறியாளர் பாராட்டுக்குரியவர்.
கனடாவில் வாழும் லெபெனிய பெண் என்பதால்தான் இத்தகைய உயிரோட்டம் கொண்ட படைப்பைத் தர முடிந்திருக்கிறது.
இப் படத்தின கதையைப் பற்றிச் சொல்வதாயின் “இப் படத்துடன் நான் முழுமையாக ஒன்றிவிட்டேன். ஏனெனில் அது ஒரு
உணர்ச்சிகரமான அற்புதமான கதை. ஒரு கணம் அது என் கதையோ எனவும் எண்ணினேன். ஆயினும் இது என் கதை மட்டுமல்ல ஒவ்வொரு அரபுப் பெண்ணின் கதையும் கூட என்பதை உணர்ந்தேன்.”
(“Then I have realized that this film was not only the story of my life, but as well the story of each and every Arab woman...”) அரபுப் பெண்களின் கதை மட்டுமல்ல ஒடுக்கப்படும் ஒவ்வொரு பெண்கனின் கதையும் கூட என்பேன்.
( http://www.imdb.com/title/tt0810822/usercomments).

kathirmuruga@hotmail.com

© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner