இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல் / சினிமா!
எம்ஜியார்! - ராஜ்மோகன் -
எம்ஜியார் ['படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு .... ராஜ்மோகன்' வலைப்பதிவிலிருந்து சில பகுதிகள் ] சினிமாவை கனவுத் தொழிற்சாலை என்பார்கள். அது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகச் சரியாகப் பொருந்தும். ஏனென்றால் , தமிழர்களுக்கு சினிமாதான் எல்லாம். அவர்கள் தங்களுடைய பாச உணர்வுகளின் திரை பிம்பமாக சிவாஜி கணேசனைக் கண்டார்கள். காதலுக்கும் , கனவுகளுக்குமான பிம்பம் எம்ஜியாராக இருந்தார். தமிழர்களின் அரசியல் , சமூகவியல் , ஆன்மீகம் , காமம் என்று வாழ்வின் அத்தனைப் பகுதிகளையும் சினிமாவும் , சினிமா நடிகர்களுமே பிடித்துக் கொண்டனர். இதை அவர்களாகத் தேடிப் போகவில்லை. தமிழ்ச் சமூகமே அவர்களுக்கு வழங்கிய கொடை அது. அரசியலுக்கு எம்ஜியாரிலிருந்து சரத்குமார் , கார்த்திக் வரை ; சமூகவியலுக்கு நாம் அணுக வேண்டிய முகவரி மணி ரத்னம் மற்றும் குஷ்பு. ஆன்மீகம் ரஜினி. காமம் ? தமிழ் சினிமாவின் அடிப்படையே காமம்தான் என்று சொல்ல வேண்டும். ஒரு இருட்டறையில் கட்டப்பட்ட படுதாதான் தமிழர் வாழ்வின் காமத்துப் பாலின் ப்ராக்ஸியாக விளங்கி வருகிறது.

இப்படிப் பட்ட
hyperreal உலகின் ஆரம்ப கால ப்ராக்ஸிகளில் ஒருவர் எம்ஜியார். எம்ஜியாரின் தந்தை பெயர் கோபால மேனன். அவருக்கு
மூன்று மனைவியர். (ஆனால் எம்ஜியாரின் தாத்தா அங்காரத்த சங்குண்ணி மன்றாடியாருக்கு நான்கு மனைவியர் இருந்திருக்கிறார்கள்). கோபால மேனனின் முதல் மனைவி மாதவி அம்மாள். எர்ணாகுளத்திலிருந்து காயலைக் கடந்தால் வரும் மொளகுக் காடு என்ற ஊரில் உள்ள வெளுத்தன் வீட்டைச் சேர்ந்தவர் இந்த அம்மாள். இரண்டாவது மனைவி மீனாட்சியின் ஊர் இரிஞ்ஞாலக்குடா , வட்டம்பரத்தே வீடு. மூன்றாவது மனைவியான சத்யபாமாதான் எம்ஜியாரின் தாயார். இவர் கொல்லங்கோட்டை அடுத்துள்ள வடவனூரில் உள்ள மருதூர் வீட்டைச் சேர்ந்தவர். அதனால்தான் எம்ஜியாரின் பெயர் மருதூர் கோபால ராமச்சந்திரன் என்று ஆனது.

கோபால மேனன் நீதிபதியாக பதவி வகித்தவர். குந்நங்குளம் , அரூர் , இரிஞ்ஞாலக்குடா , திருச்சூர் , கரூர் , சிற்றூர் , எர்ணாகுளம் போன்ற ஊர்களில் நீதிபதியாக இருந்திருக்கிறார். அவர் நீதிபதியாக இருக்கும் போது செய்த செயல்களைப் பற்றி எம்ஜியார் தன் அம்மாவிடமும் , உறவினர் மூலமும் கேட்ட கதைகள்தான் ' நாடோடி மன்னன் ' போன்ற படங்களில் அவர் செய்த பராக்கிரம செயல்களுக்கும் , பேசிய புரட்சி வசனங்களுக்கும் உந்துதலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அத்தகைய ஒரு நியாயவானாக இருந்திருக்கிறார் கோபால மேனன்.

எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜியார் நம்பியாரை சாட்டையால் வெளுத்ததற்கு இதுதான் முன்னோடியாக இருந்திருக்குமோ சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் நம்பூதிரிகளின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது என்பது வரலாறு. அவர்களைக் கேட்பார் யாரும் இல்லை. ஒருநாள் இரிஞ்ஞாலக்குடாவில் ஒரு நம்பூதிரி குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு நிர்வாணமாகவே வந்து கொண்டிருந்திருக்கிறார். பஞ்சகச்சம் வைத்த வேட்டிதான் இடுப்பில் இருந்திருக்கிறது. ஆனாலும் இடுப்புக்குக் கீழே தொங்கவேண்டிய வேட்டி தோளில் கிடந்திருக்கிறது. இது எதற்கு என்றால் , எதிரே யாரும் நாயர் பெண் வந்தால் அவளை நிறுத்தி வைத்து ஏதாவது பேசி விட்டுத் தான் அனுப்புவார்களாம் சில நம்பூதிரிகள். அப்படி ஒரு கொழுப்பு பிடித்த நம்பூதிரி ஒரு நாயர் பெண்ணை வலுக்கட்டாயமாக நிறுத்தி வைத்து வம்பளந்து கொண்டிருந்த போது , அதைப் பார்த்து விட்ட கோபால மேனன் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் அந்த நம்பூதிரியின் புட்டத்தை வெளு வெளு என்று வெளுத்து வாங்கியிருக்கிறார். (எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜியார் நம்பியாரை சாட்டையால் வெளுத்ததற்கு இதுதான் முன்னோடியாக இருந்திருக்குமோ ?)

இப்படி ஒரு நியாயமான ஆளை விட்டு வைப்பார்களா ? ஊருக்கு ஊர் மாற்றி அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் கோபால மேனனுக்கே இது அலுத்துப் போய் நீதிபதி வேலையை ராஜினாமா செய்து விட்டு கல்லுரி முதல்வராகத் தன் உத்தியோகத்தை மாற்றிக் கொண்டார். பின்னர் கண்டியில் உள்ள ஒரு கல்லூரியின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றார். அப்போதுதான் கோபால மேனனின் ஐந்தாவது குழந்தையாக எம்ஜியார் பிறந்தார். எம்ஜியாருக்கு இரண்டரை வயது இருக்கும் போது கோபால மேனன் இறந்தார்.

***

இவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் எம்ஜியார் சிறு பிராயத்திலிருந்து சுமார் நாற்பது வயது வரை கடுமையான வறுமையில் இருந்திருக்கறார். காரணம் , அப்போது கேரளத்தில் வழக்கத்தில் இருந்த ' மருமக்கள் தாயம் '. ஒரு குடும்பத் தலைவர் இறந்து விட்டால் அவருடைய சொத்தில் அவருடைய குழந்தைகளுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் , அச் சொத்தின் உரிமை முழுவதும் இறந்து போனவரின் உடன் பிறந்த சகோரதரிகளின் மக்களுக்குத்தான் போகும். இந்தச் சட்டத்தின் காரணமாகவே எம்ஜியாரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது. ஆனால் , இப்படி ஒரு வழக்கம் கேரளத்தில் இருந்திருக்காவிட்டால் எம்ஜியார் தமிழ்நாட்டுப் பக்கமே வந்திருக்க வாய்ப்பில்லை. இங்கேயே ராமச்சந்திர மேனன் என்ற பெயரில் ஒரு தொழிலதிபராகவோ அல்லது தன் தந்தையைப் போல் ஒரு நீதிபதியாகவோதான் இருந்திருப்பார்.

எம்ஜியார் பிறந்த பிறகே அவரது தந்தை இறந்து குடும்பம் நசித்துப் போனதால் " ' முடிகாலன் பிறந்து வீட்டினெத் தன்னெ முடிச்சு! ' என்று அடிக்கடி திட்டுவார்கள் என் அம்மா" என்று தன் இளமைப் பிராயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் எம்ஜியார். இலங்கையிலிருந்து கும்பகோணத்துக்குக் குடி பெயர்ந்தார் எம்ஜியாரின் தாயார் சத்யபாமா. கும்பகோணத்திலும் தொடர்ந்தது வறுமை. பசியினாலேயே எம்ஜியாரும் , அவரது அண்ணன் சக்ரபாணியும் தவிர மற்ற மூன்று சகோதர சகோதரிகளும் இறந்து போனார்கள். ஒருநாள் எம்ஜியாரின் அம்மா பட்டினியால் மெலிந்து கிடந்த தன் மகன் ராமச்சந்திரனைப் பார்த்து " பொழைக்கிற புள்ளையா இருந்தா பொறந்ததுமே செத்து இருக்காது ?" என்று பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் கேட்டிருக்கிறார். கணவனை இழந்த சத்யபாமாவினால் தன்னுடைய இரண்டு மகன்களையும் இரண்டு வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. "அண்ணன் சக்ரபாணிக்கும் , எனக்கும் சோறு பொங்கிக் கொடுத்து விட்டு அம்மா பட்டினியாகவே காலம் கழிப்பார்கள். இப்போது நான் எவ்வளவோ நல்ல நிலையில் இருக்கிறேன். அதைப் பார்க்க அம்மாதான் இல்லை" என்று கூறஇந்தக் கால கட்டம் பற்றி எம்ஜியார் பெரும் நட்சத்திரமாக உயர்ந்த பிறகு பல முறை நினைவு கூர்கிறார்.

எம்ஜியாரும் , சக்ரபாணியும் கும்பகோணத்தில் இருந்த பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விடப் பட்டார்கள். சம்பளம் என்று எதுவும் கிடையாது. நன்றாக நடித்தால் வாரத்துக்கு நாலு அணா கிடைக்கும். மற்றபடி மூன்று வேளையும் சாப்பாடு உண்டு. உயிர் பிழைத்துக் கொள்ளலாம்.கம்பெனியில் எம்ஜியார் , சாரங்கபாணி இருவரின் வேட்டிகளைத் துவைத்துக் கொடுப்பவர் நாராயணன் நாயர். ஆனால் வேட்டியை எடுத்து பிரித்துப் பார்த்தால் எம்ஜியாரின் வேட்டியில் மட்டும் நடுப்பகுதியில் அழுக்காக இருக்கும். இது அங்கே எம்ஜியாரைப் பிடிக்காத மற்றொரு பையனின் வேலை. அதனால் மறுநாள் வேட்டி துவைக்கப் படும்போது எம்ஜியாருக்கு நாராயணன் நாயரிடமிருந்து உதை கிடைக்கும். ஆனால் அதற்குப் பிறகும் அந்த அழுக்கு அப்படியே தொடர்ந்து கொண்டிருந்ததும் "இனிமேல் கீழே உட்காரும்போது துணியைத் தூக்கிக் கொண்டு உட்கார வேண்டும் ; வேஷ்டியில் அழுக்குப் படக் கூடாது" என்று சொல்லி விடுகிறார் நாயர். ஒருநாள் ரத்னாவளி நாடகம். இதில் எம்ஜியார் ஒரு சேடி. வசந்த உற்சவக் காட்சியில் மன்மதனுக்குப் பூசை செய்யும் கட்டம். சேடிகளுக்கு வேஷ்டிகளுக்குப் பதிலாக கவுன்கள். சேடிகள் தரையில் உட்கார வேண்டும். நாயர் சொல்லிக் கொடுத்திருந்த படி சேடி வேஷ்டியைத் தூக்கிக் கொண்டு உட்காருவது போல் கவுனைத் தூக்கிக் கொண்டு உட்கார , ரசிகர்களிடையே பெருத்த சிரிப்பு. இப்படியே பனிரண்டு ஆண்டுகள் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார் எம்ஜியார். எல்லாம் ஸ்திரி பார்ட் தான். பின்னாளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பி.யு. சின்னப்பா ராஜபார்ட்.

தமிழ் சினிமாவை பரம பத விளையாட்டோடு ஒப்பிட்டுச் சொல்வதுண்டு. சில உதாரணங்களைப் பார்க்கலாம். சாலிவாகனன் என்ற படத்தில் ரஞ்சன் ஹீரோ. வில்லன் எம்ஜியார். "இந்த ஆள் என்னை விட நன்றாக வாள் வீசுகிறார் ; இது சரிப்பட்டு வராது ?" என்று டைரக்டரிடம் புகார் செய்திருக்கிறார் ரஞ்சன். ரஞ்சன் யார் ? அந்தக் காலத்திலேயே இந்திப் படத்திலெல்லாம் ஹீரோவாக நடித்த சூப்பர் ஸ்டார். ஏரோப்ளேன் எல்லாம் ஓட்டுவார். சகலகலா வல்லவர். ஆனால் என்ன ஆனார் ? யாருக்குமே தெரியாது. சதி லீலாவதியில் எம்.கே. ராதா ஹீரோ. எம்ஜியாருக்கோ ஒரு சாதாரண போலீஸ் வேஷம். இரண்டு பேரில் யார் மேலே வந்தது ? பாய்ஸ் கம்பெனியில் சின்னப்பாவும் , எம்ஜியாரும் நடித்துக் கொண்டிருந்த போது எம்ஜியாருக்கு மகரக் கட்டு (குரல் உடைந்து போவது) வந்து விட்டதால் இனிமேல் ஸ்திரி பார்ட் போட முடியாது என்றுதான்கத்திச் சண்டை எல்லாம் பழகினார். சின்னப்பா , எம்ஜியார் இரண்டு பேருக்குமே குருவாக இருந்தவர் காளி என். ரத்தினம். இந்த ரத்தினம் பிற்காலத்தில் காமெடி ரோல் பண்ணியவர். என்.எஸ். கிருஷ்ணனுக்கும் சீனியர். இவர்தான் எம்ஜியாருக்கு சின்ன வயதில் நாடகக் கம்பெனியிலும் , பிறகு சினிமாவிலும் சான்ஸ் வாங்கிக் கொடுத்தவர்.

இவர்களெல்லாம் ஒரு பக்கம் இருக்க , தமிழ் சினிமாவின் முதல் ஹீரோவும் , முதல் சூப்பர் ஸ்டாருமான எம்.கே. தியாகராஜ பாகவதர் , கடைசியில் மொட்டை அடித்துக் கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உட்கார்ந்து விட்டார். கண் பார்வையும் இல்லாததால் அவரை யாரோ பிச்சைக்காரர் என்றே நினைத்து விட்டனர் மக்கள்.

இப்படிப் பட்ட பரமபத விளையாட்டில் , சதி லீலாவதி ( 1936) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் எம்ஜியார். அப்போது அவருக்கு வயது 19. இதில் அவர் ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார். பின்னர் தொடர்ந்து மாயா மச்சீந்திரா , பிரஹலாதா , வேதவதி அல்லது சீதா ஜனனம் , தமிழ் அறியும் பெருமாள் என்று பல படங்களில் பல ஆண்டுகள் துணை நடிகராகவே நடித்துக் கொண்டிருந்தார் எம்ஜியார். இந்தக் கால கட்டத்தில் பஸ்ஸில் செல்வதற்குக் கூட காசு இல்லாமல் சென்னை நகரம் முழுக்கவும் நடந்தே சென்றது பற்றிக் குறிப்பிடுகிறார். (சினிமாவுக்கு முன் நாடகத்தில் நான் பட்ட கஷ்டம் , சினிமாவுக்கு வந்த பின் அனுபவித்த கஷ்டம் , வேலை கிடைக்காமல் மாடிப்படிகளில் ஏறி இறங்கிய அனுபவம் , காசு இல்லாமல் சென்னை முழுவதும் தினமும் பல காலம் நடந்து சென்ற அனுபவம் - இது எல்லாம்தான் என்னை மனிதாபிமானமுள்ளவனாக ஆக்கியது.

***

எம்ஜியார் சினிமாவில் சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். கொல்லங்கோடு , பாலக்காடு ஆகிய ஊர்களில் நடந்த தசாவதாரம் நாடகத்தில் சக்ரபாணி ராமராகவும் , எம்ஜியார் லட்சுமணனாகவும் நடித்திருப்பதை வடவனூர் வாசிகள் போய்ப் பார்த்திருக்கிறார்கள். (பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாலக்காட்டிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள வடவனூர் சத்ய பாமாவின் சொந்த ஊர் ; அந்த ஊரில் சத்யபாமா கண்ணச்சி அம்மா என்றே அழைக்கப் பட்டிருக்கிறார்). வடவனூரில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் வாசுதேவ மேனன் எம்ஜியாரின் இளமைக்கால நண்பர். அவர் கூறியிருக்கும் தகவல்:

" அப்போது தியாகராஜ பாகவதர் நடித்த ' சத்திய சீலன் ' படம் கொல்லங்கோட்டில் திரையிடப் பட்டிருந்தது. ' அந்தப் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் ; வாருங்கள் போய்ப் பார்க்கலாம் ' என்று எம்ஜியார் என்னையும் அழைத்தார். கூடவே எங்களுடம் நாராயணன் நாயர் என்பவரும் சேர்ந்து கொண்டார்.

மூவருக்கும் எம்ஜியார் வெற்றிலைப் பாக்கு வாங்கித் தர , அதை மென்று கொண்டே தியேட்டருக்குச் சென்றோம். அப்போது வாகன வசதிகள் எதுவும் இல்லாத காலம். அதனால் மூன்று மைல் தூரமுள்ள தியேட்டருக்கு நடந்தே சென்று படம் பார்த்து விட்டு நடந்தே வீடு திரும்பினோம்."

தனது தாயாரின் பூர்வீக ஊரான வடவனூரில் ஒரு வீடு வாங்க வேண்டுமென்று எண்ணிய எம்ஜியார் , தனக்குக் கொஞ்சம் வசதி வந்த போது கவுண்டத்தரா என்ற இடத்தில் ஒரு பழைய வீட்டை வாங்கிப் புதுப்பித்து ' சத்ய விலாஸ் ' என்று மலையாளத்தில் பெயரும் பொறித்திருக்கிறார். (இப்போது அந்த வீடு யார் வசம் இருக்கிறது என்று தெரியவில்லை).

***

எம்ஜியாருக்கு அவரது 23- ஆவது வயதில் சேகரிபுரத்தைச் சேர்ந்த லட்சுமி குட்டி-விஸ்வநாத அய்யர் தம்பதியின் மகளான தங்கமணி என்ற பெண்ணுடன் 1940- இல் திருமணம் நடந்தது. அப்போது தங்கமணியின் வயது 18. எம்ஜியார் அப்போது மிகக் கொடிய வறுமையில் இருந்த காலம். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் எம்ஜியார் தங்கமணியின் நகைகளை விற்று வாழ வேண்டியிருந்தது. குழந்தையும் இல்லை. தங்கமணியின் நிலைமையைக் கண்டு அவரது பெற்றோர் சென்னை வந்து தங்கள் மகளை சேகரிபுரம் அழைத்துச் சென்றனர். ஆனால் தங்கள் கையில் இருந்ததையெல்லாம் விற்றுத்தான் தங்கள் மகளுக்கு அவர்கள் திருமணம் செய்திருந்ததால் அவர்களின் நிலையும் எம்ஜியாரின் நிலைமையைப் போலவேதான் இருந்தது. சரியான சாப்பாடு இல்லாமலேயே சேகரிபுரம் வந்த 20- ஆவது நாளில் இறந்து போனார் தங்கமணி. அப்போது அவர் வயது 20.

முதல் மனைவி இறந்ததும் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முனைந்தார் சத்யபாமா. பாலக்காட்டில் இருந்து பத்து மைல் தூரமுள்ள குழல் மன்னம் என்ற இடத்தில் எரகாட் குடும்பத்தைச் சேர்ந்த சதானந்தவதியுடன் 1942- இல் எம்ஜியாரின் இரண்டாம் திருமணம் நடந்தது. சதானந்தவதியின் வயது அப்போது 14. எம்ஜியாரின் வயது 26. சதானந்தவதி நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சதானந்தவதியை சென்னைக்கு அழைத்து வந்த பிறகுதான் தன் முதல் மனைவி இறந்து போன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் எம்ஜியார்.தங்கமணி இறந்த விபரம் எம்ஜியாருக்குத் தந்தி மூலம் தெரிந்து அவர் பாலக்காடு வந்து அங்கிருந்து சேகரிபுரம் சேர்வதற்குள் தங்கமணி புதைக்கப் பட்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கின்றன. தங்கமணியின் முகத்தைக் கடைசியாக ஒரு முறை பார்க்க விரும்பி , புதைக்கப் பட்ட இடத்தைத் தோண்டச் சொல்லியிருக்கிறார் எம்ஜியார். ஆனால் அதற்கு நகரசபையில் அனுமதிக்க மாட்டார்கள் என்று சொல்லி அவரைத் தேற்றியிருக்கின்றனர். தங்கமணி இறந்த 30- ஆவது நாளில் சக்ரபாணியின் முதல் மனைவி நாணிக்குட்டியும் இறந்து போனார். நாணிக்குட்டியின் ஊர் பாலக்காட்டில் இருந்து பத்து மைல் தொலைவில் உள்ள கொடுவாயூரை அடுத்த எத்தனூர். தன் மகனின் முதல் மனைவி இறந்ததும் இரண்டாம் திருமணம் செய்து வைக்க முனைந்தார் சத்யபாமா. பாலக்காட்டில் இருந்து பத்து மைல் தூரமுள்ள குழல் மன்னம் என்ற இடத்தில் எரகாட் குடும்பத்தைச் சேர்ந்த சதானந்தவதியுடன் 1942- இல் எம்ஜியாரின் இரண்டாம் திருமணம் நடந்தது. சதானந்தவதியின் வயது அப்போது 14. எம்ஜியாரின் வயது 26. சதானந்தவதி நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சதானந்தவதியை சென்னைக்கு அழைத்து வந்த பிறகுதான் தன் முதல் மனைவி இறந்து போன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் எம்ஜியார்.

சென்னை வந்ததும் சதானந்தவதிக்குக் காச நோய் தாக்கியது. அந்தக் காலத்தில் அது ஒரு உயிர்க்கொல்லி நோய். எம்ஜியாருக்கும் சரியான வருமானம் இல்லை. பிறகு , 1950- இல் சதானந்தவதிக்கு குறைப்பிரசவம் நடந்து அதன் காரணமாகவும் பலகீனமானார். அது மட்டுமல்லாமல் அவருக்கு இதயக் கோளாறும் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே கிடந்து 1962- இல் காலமானார் சதானந்தவதி. அவர் படுக்கையில் கிடந்த போதெல்லாம் அவருக்குப் பல் தேய்த்து விடுவதிலிருந்து குளிப்பாட்டி விடுவது வரை பக்கத்தில் இருந்து எம்ஜியாரே செய்திருக்கிறார். சதானந்தவதியை மிகவும் நேசித்த எம்ஜியார் அவருக்கு நினைவுச் சின்னமாக குழல் மன்னத்தில் ஒரு வீடு கட்டியிருக்கிறார்.

எம்ஜியாரின் மூன்றாவது மனைவியான ஜானகி வேலைக்காரி , ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி போன்றவை உட்பட 25 பிரபலமான படங்களில் நடித்தவர். அவரது கணவர் பெயர் கணபதி பட். அவர்களுக்கு சுரேந்திரன் என்று ஒரு மகனும் இருந்தான். 1950- இல் வெளிவந்த ' மந்திரி குமாரி ' என்ற படத்தில் வ்.என். ஜானகியின் கணவர் கணேஷ் பட்டும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் படப் பிடிப்பின் போதுதான் எம்ஜியாருக்கும் ஜானகிக்கும் காதல் உண்டாகியிருக்கிறது. உடனே , கணபதி பட்டை விவாக ரத்து செய்து விட்டு எம்ஜியாருடன் வாழத் தொடங்கினார் ஜானகி. இந்த விவகாரமெல்லாம் காதல் மற்றும் வீரத்துக்கு எம்ஜியாரை ப்ராக்ஸியாக வைத்திருந்த தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிந்திருக்குமா என்றே தெரியவில்லை. எம்ஜியாரின் மூன்றாவது மனைவியான ஜானகி வேலைக்காரி , ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி போன்றவை உட்பட 25 பிரபலமான படங்களில் நடித்தவர். அவரது கணவர் பெயர் கணபதி பட். அவர்களுக்கு சுரேந்திரன் என்று ஒரு மகனும் இருந்தான். 1950- இல் வெளிவந்த ' மந்திரி குமாரி ' என்ற படத்தில் வ்.என். ஜானகியின் கணவர் கணேஷ் பட்டும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் படப் பிடிப்பின் போதுதான் எம்ஜியாருக்கும் ஜானகிக்கும் காதல் உண்டாகியிருக்கிறது. உடனே , கணபதி பட்டை விவாக ரத்து செய்து விட்டு எம்ஜியாருடன் வாழத் தொடங்கினார் ஜானகி. இந்த விவகாரமெல்லாம் காதல் மற்றும் வீரத்துக்கு எம்ஜியாரை ப்ராக்ஸியாக வைத்திருந்த தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிந்திருக்குமா என்றே தெரியவில்லை.

எம்ஜியாரின் குடும்ப வாழ்வில் அவருக்கு இவ்வளவு கேரளத் தொடர்பு இருந்தாலும் அவர் தன்னை முழுக்க முழுக்க ஒரு தமிழனாகவே உணர்ந்தவர். இலங்கை கண்டியில் பிறந்ததனாலோ என்னவோ அவர் இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கு மிகப் பெரும் ஆதரவாளராக விளங்கினார். இந்திய அரசே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாத நேரத்திலும் எம்ஜியார் மிக வெளிப்படையாக அவர்களை ஆதரித்தார். அவர் முதலமைச்சராக இருந்த போது 1987- இல் ஒரு முறை 15 கோடி ரூபாயை ஈழத் தமிழர்களின் உணவு , உடை , மருந்துச் செலவுக்காகக் கொடுத்தார். இப்படிப் பட்டவரை சில பத்திரிகைகள் ' மலையாளி ' என்று எழுதிய போது மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார் எம்ஜியார். மன்னத் பத்மநாபன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு கேரளாவுக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார் எம்ஜியார். அடுத்த நாள் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் ' மலையாளி எம்ஜியார் மலையாளி மன்னத் பத்பநாபனுக்கு அஞ்சலி ' என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுவாவது பரவாயில்லை. இன்னொரு சம்பவம். ஒருநாள் எம்ஜியார் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது சிக்னலில் அவர் கார் நிற்கிறது. கடுமையான மழை. எதிரே ஒரு ரிக்ஷாக்காரார் மழையில் நனைந்தபடி நிற்பதைக் கண்ட மறுநாளே தன் செலவில் 5000 மழைக் கோட்டுகளை வாங்கி சென்னையிலுள்ள ரிக்ஷாக்காரர்கள் அனைவருக்கும் கொடுத்தார். அதே சமயத்தில் திருவனந்தபுரம் , பெங்களூர் இரண்டு நகரங்களிலுள்ள ரிக்ஷாக்காரர்களுக்கும் கூட தனித்தனியே 1000 மழைக் கோட்டுகளை அனுப்பினார். மறுநாள் தினசரியில் வந்த செய்தி என்ன தெரியுமா ? ' எம்ஜியார் கேரள ரிக்ஷாக்காரர்களுக்கு உதவி! ' படித்து விட்டு கிட்டத்தட்ட எம்ஜியார் அழுதே விட்டார் என்று அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள்.

***

தமிழர்களுக்கு வழிபாட்டு உணர்ச்சி அதிகம். எதையும் சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்காமல் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர்களும் கூட. இந்திரா காந்தியை வடநாடு பூராவும் இந்திராஜி என்று அழைத்தால் தமிழர்கள் ' அன்னை இந்திரா ' என்று அழைத்தனர். இப்படிப் பட்டவர்களை எம்ஜியாரின் தயாள குணம் மிக எளிதில் வசீகரித்தது. திரையில் மட்டும் அல்லாமல் அவர் நிஜ வாழ்விலும் ஏழைப் பங்காளராக இருந்தார். 24 மணி நேரமும் எத்தனை பேர் வந்தாலும் அவர் வீட்டில் சைவ உணவும் , அசைவ உணவும் பரிமாறப் பட்டது. சிறு வயதில் அவர் அனுபவித்த கஷ்டமும் , பட்டினியுமே அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். 

நன்றி: http://rkrajmohan.blogspot.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்