இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் - இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்!

- லதா ராமகிருஷ்ணன் -

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முன்முயற்சி காரணமாக ''மொழிபெயர்ப்புக் கலை - இன்று என்ற நூல் தமிழின் ஏறத்தாழ இருபது மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளோடு மொழிபெயர்ப்பாளர்களின் விவரக் குறிப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகங்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய அளவில் வெளியாகியதுதமிழ் மொழிபெயர்ப்பாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய நலன்களைப் பேணவும், தரமான மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கவும் 2004ம் ஆண்டு சென்னையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு நடந்தேறி, அதன் விளைவாய் 2005ல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் உருவாகி பதிவு பெற்ற அமைப்பாக இன்று இயங்கி வருகிறது. இதன் தலைவர் பேராசிரியரும்- மொழிபெயர்ப்பாளருமான திரு. கோச்சடை இந்த வருடம் பேராசிரியர்.ஆர்.சிவகுமார், மொழிபெயர்ப்பாளர்-தமிழ் சிறுபத்திரிகையுலகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருபவர்- தலைவராகவும், திரு.மயிலை பாலு, தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர், சிற்றிதழாசிரியராக இயங்கி வருபவர்.). தமிழின் குறிப்பிடத்தக்கமொழிபெயர்ப்பாளர் களில் ஒருவரான அமரந்த்தா. காரல் மார்க்ஸின் காலத்திற்குமான அரிய படைப்பை தமிழில் மூலதனமாக மொழிபெயர்த்திருக்கும் தியாகு முதலிய பலர் இந்தச் சங்கம் தோன்றியதிலிருந்து இதில் முனைப்பாக அங்கம் வகித்து வருகிறார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முன்முயற்சி காரணமாக ''மொழிபெயர்ப்புக் கலை - இன்று என்ற நூல் தமிழின் ஏறத்தாழ இருபது மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளோடு மொழிபெயர்ப்பாளர்களின் விவரக் குறிப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகங்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய அளவில் வெளியாகியது. பாவை பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு உதவியது. தமிழின் மூத்த மொழிபெயர்ப்பாளர்களைக் கௌரவிப்பதையும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.

கோவை ஞானி , ஆர் சிவகுமார்

இந்த வருடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தனது மூன்றாவது ஆண்டு விழாக் கூட்டத்தையும், பொதுக்குழுக் கூட்டத்தையும் ஜீன் 1ம் தேதியன்று சென்னை எழும்பூரிலுள்ள இக்ஸா மையத்தில்ஏற்பாடு செய்திருந்தது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திரு கோவை ஞானி வருகை தந்திருந்தார். கடந்த வருடம் இந்தச் சங்கத்தால் சிறப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகள் அடங்கிய நூல் மொழிபெயர்ப்ப்பியல் - தற்காலப் பார்வைகள் என்ற தலைப்பில் இந்தச் சங்கம் உருவாக முக்கியக் காரணமாகத் திகழும் , தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அமரந்த்தாவின் பெருமுயற்சியால். என்.சி.பி.ஹெச். நிறுவன வெளியீடாக விழாவில் வெளியிடப்பட்டது.

கோவை ஞானி , ஆர் சிவகுமார், குளச்சல் எம் யூசுஃப் கூட்டத்தின் முதல் அமர்வாக நடந்தேறிய பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டறிக்கை, செயல்பாடுகள், வரவு-செலவு கணக்கு முதலியவை உறுப்பினர்களின் பார்விஅக்கு சமர்ப்பிகப்பட்டு அவற்றின் மீது விவாதங்கள் நடந்தேறின. தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை இன்னும் என்னென்ன வழிகளில் மேம்படுத்தலாம் என்று வந்திருந்த பலரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கினார்கள்.சங்கத்தின் இருப்பு, செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பரவலாக்கப்பட வேண்டும், தமிழ் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் கிளைகள் உருவாக்கினால் நல்லது, ஒரு வருடத்தில் வெளியாகும் முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களின் பெயர்களையும், அவை குறித்த முக்கிய விவரங்களையும் உறுப்பினர்களும், மற்றவர்களும் சங்கத்திற்கு தொடர்ந்த ரீதியில் தெரிவித்தால் உதவியாக இருக்கும், மொழிபெயர்ப்பு நூல்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவை குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டும் என பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பதிப்பாளர்கள் தான் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவரக் காரணமாக இருக்கிறார்கள் என்பதால் அவர்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று திரு. கோவை ஞானி தெரிவித்தார். மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித் தனி ஆளுமை கொண்டவர்கள், மொழிபெயர்ப்பு குறித்த வெவ்வேறு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள், எனவே, தொழிற்சங்கம் போன்றதொரு அமைப்பாக இந்தச் சங்கம் திகழாது என்று குறிப்பிட்ட திரு தியாகு, மொழிபெயர்ப்பாளருக்கும், பதிப்பாளருக்கும் இடையே நிலவும் நல்லிணக்கம் மொழிபெயர்ப்புப் பணி வளர முக்கியப் பங்காற்றுகிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவரும், பல வருடங்களாக தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவருமான திரு. ஆர்.சிவகுமார் தலைவராகவும், பல வருடங்களாக சீரிய மொழிபெயர்ப்புப் பணியில் முனைப்புடன் இயங்கிவரும் திரு. மயிலை பாலு துணைத்தலைவராகவும் லதா ரமகிருஷ்ணன் செயலராகவும், அமரந்த்தா பொருளாளராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விழாவின் நிறைவு அமர்வில் மொழிபெயர்ப்பாளர்கள் திரு. பாமயன்( இயற்கை-வேளாண்மை குறித்த பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருப்பவர்), திரு, குளச்சல் மு.யூசு·ப், திரு. இரா.முருகவேள், திரு.மயிலை பாலு, திரு.ஆர்.சிவகுமார் ஆகிய ஐந்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவர்களுடைய மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி மரியாதை செய்யும் விதமாக தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்க நினைவுக் கேடயங்களும், சந்தியா பதிப்பகம், என்.சி.பி.ஹெச் நிறுவனம், புதுமலர்பதிப்பகம் ஆகியோர் மனமுவந்து அளித்திருந்த நூல்களும் வழங்கப்பட்டன.அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் நூல்களைப் பற்றியும் செறிவான தகவல்களும், விவரக் குறிப்புகளும் அவையோருக்கு சிறு கட்டுரைகளின் வடிவில் படித்துக் காண்பிக்கப்பட்டன. தமிழின் தரமான மொழிபெயர்ப்பாளர்கள் நிறைந்த அவையில் தமக்குக் கிடைக்கும் இந்த மரியாதை தங்களை பெரிதும் ஊக்கப்படுத்துவதாகக் குறிப்பிட்ட ¡ந்த விருதுக்குரிய மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய ஏற்புரையில் தங்களுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆர் சிவகுமார் உரையாற்றுகிறார்

திரு.பாமயன் தனது ஏற்புரையில் "தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் உழவர் களோடு பணிபுரிந்து கொண்டிருப்பவன் நான். புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் எடுத்துரைக்க எளிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறேன். பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பை உருவாக்கி 130 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட தோழர் நெடுஞ்செழியன் தான் என்னை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்தியது "என்று நெகிழ்வோடு நினைவுகூர்ந்தார்."திரு. குளச்சல் மு. யூசு· தோலுரித்துக் காட்டும் வாக்குமூலங்கள் வகை நூல்களை மொழிபெயர்த்தவர்" என்று அறிமுகப்படுத்தினார் அமரந்த்தா.விளிம்பு மனிதர்களைப் பற்றிய படைப்புகளையே தான் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்திருப்பதாக திரு. யூசு· தெரிவித்தார். திரு. மயிலை பாலு தனது ஏற்புரையில் முதலில் தான் கட்டுரைகளை மட்டுமே மொழிபெயர்த்து வந்ததாகவும், அலைகள் சிவம் தான் தன்னை புத்தக மொழிபெயர்ப்பில் ஈடுபடச் செய்ததாகவும் நன்றியோடு நினைவுகூர்ந்தார். திரு. சிவகுமார் தனது ஏற்புரையில் திரு.கோவை ஞானி கீழை மார்க்கசியத்திற்கு ப்ரும் பங்களிப்பு நல்கியவர் என்று ஞானி நடத்தி வந்த சிறுபத்திரிகைகள் பற்றியும், அவை எழுப்பிய விவாதங்களையும், சச்சரவுகளையும் பற்றி நினைவுகூர்ந்தார். திரு.இரா.முருகவேள் "ரெட் டீ" என்ற புதினத்தைப் படித்த போது அதை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று தனது மனதில் உத்வேகம் தோன்றியதால் மொழிபெயர்ப்பாளராக தான் உருவெடுத்ததாகவும் , நல்ல புத்தகங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் விழைவும் ஒருவரை மொழிபெயர்ப்பாளராக உருவெடுக்கச் செய்ய வல்லது என்றும் கூறினார்.

திரு. கோவை ஞானி தனது சிறப்புரையில் சம்பந்தப்பட்ட இரண்டு மொழிகளிலும் தேர்ச்சியில்லாமல் ஒரு பிரதியை மொழிபெயர்க்கப் புகுவது சரியல்ல என்றார்.

தி ஸ்டோரி ஆ· ·பிலாஸ·பி' போன்ற நூல்கள் தமிழில் இன்று வரை வெளிவராதது குறித்த தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். காலை முதல் மாலை வரை கூட்டத்தில் பங்கேற்ற தோழியர் ஒருவர் 'திண்ணையில் வெளிவந்திருந்த தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விழா அழைப்பிதழைப் பார்த்த பிறகு தான் தனக்கு அப்படியொரு அமைப்பு இருப்பதே தெரியும் என்று கூறி, தான் தெலுங்கு மொழியிலிருந்து 36 புதினங்களை தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகக் கூறினார். தெலுன்கிலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழுக்கு வரும் கதைகளில் உயிர்ப்பு குறைவாக இருப்பதாக உணர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டும் தெரிந்த தான் மொழிபெயர்ப்பில் இறங்கியதாகத் தெரிவித்த அவர் நல்ல விஷயங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் விழைவே தான் மொழிபெயர்ப்பாளரானதற்கு அடிப்படைக் காரணம் என்றார்.

லதா ராமகிருஷ்ணன்பொதுவாக, இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்களே கவனம் பெறுவதும், விருது வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. பல தரமான மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்கப்படாத நிலையே நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் வருடக்கணக்காக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை எளிய முறையிலாவது மரியாதை செய்ய வேண்டும் என்ற விழைவிலும், தமிழின் மொழிபெயர்ப்பாளர்களை ஒரு குடையின் கீழ் திரட்ட வேண்டும் என்ற விழைவிலுமாய் உருவானது தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம். மொழிபெயர்ப்பின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் வாழ்வு நல மேம்பாட்டிற்காகவும் தேவையான முன்முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு உருவாகியுள்ள அமைப்பு. இதன் முயற்சிகள் வெற்றி பெற தமிழ் ஆர்வலர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. இந்த சங்கத்தில் சேர விரும்பும் மொழிபெயர்ப்பாளர்கள் எங்களை இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம். அவரவர் படித்த, அந்தந்த ஆண்டுகளில் வெளியாகும் தரமான மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றிய விவரங்களை எங்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மொழிபெயர்ப்பாளர்களும் தங்களுடைய மொழிபெயர்ப்புநூல்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.

ramakrishnanlatha@yahoo.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner