இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2010  இதழ் 128  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
மகாஜனக் கல்லூரியின் கலைவிழா

- கருணா ஆனந்தன் -


தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழாவின் இரண்டாம் நாள் யூலை மாதம் 3ம் திகதி சனிக்கிழமை Chinese Cultural Centre ல் இதுவரை இருந்த இருக்கும் பழைய மாணவர் சங்கத் தலைவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் வழமை போல் நேரத்துக்கு ஆரம்பமானது.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழாவின் இரண்டாம் நாள் யூலை மாதம் 3ம் திகதி சனிக்கிழமை
Chinese Cultural Centre ல் இதுவரை இருந்த இருக்கும் பழைய மாணவர் சங்கத் தலைவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் வழமை போல் நேரத்துக்கு ஆரம்பமானது. தேசியகீதம்மும் கல்லூரிக்கீதமும் நெகிழ்ச்சியாக வேறு வகையில் ஒலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கம்சத்வதனி சிங்கராஜாவின் மாணவர்கள் வாத்தியப் பிருந்தத்தை மிக அழகாக வழங்கினர். ஆனால் இது ஒரு நூற்றாண்டு விழா, கம்சத்வதனி ஏனைய மகாஜனன்களுடன் சேர்ந்து ஒரு வாத்தியப் பிருந்தத்தை கொடுத்திருந்திருக்கக் கூடாதா அதில் மகாஜனன்களின் பாடல்கள் ஒலித்திருக்கலாமே என ஆதங்கம் எழுந்தது.

மகாஜனா கடந்து வந்த காலம் பற்றிய விவரணச் சித்திரம் திவ்வியராஜனின் இனிய குரலில் நெஞ்சைத் தொட்டது. அவர் மகாஜனன் ஆக இல்லாவிட்டாலும் தான் ஒரு பண்பட்ட நடிகர் என்பதை குரலில் கொண்டு வந்த உணர்ச்சிமூலம் அழகாகக் காட்டினார்

தரானா என்பதன் பொருள் விளங்கவில்லை அது தான் அடுத்து நிகழ்ந்த நாட்டியத்தின் பெயர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் குரல் நன்றாக இருந்தது. ஆனால் வெறுமன பெயர் வாசிப்பது மட்டும் செய்யாமல் நிகழ்ச்சி பற்றிய குறிப்புக் கொடுத்து நிகழ்ச்சிக்கு உயிர் ஊட்டியிருந்தால் ரசிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

தொடர்ந்து தலைவர் தன் தலைமையுரையில் விழாவினை ஆரம்பித்து வைத்த கலைவிழா இணைப்பாளர் சொன்ன அத்தனையும் மீட்டியது மட்டுமன்றி விவரணச்சித்திரத்தில் கல்லூரி பற்றிய சொன்ன அத்தனையையும் மீள ஒப்பித்தார். பின்னர் நூற்றாண்டுச் சிறப்புரையை மகாஜனா முன்னாள் அதிபர்களில் ஒருவரான திரு. கனகசபாபதி அவர்கள் நிகழ்த்தினார். அதை நூற்றாண்டுச் சிறப்புரை என்று சொல்வதை விட கனடாப் பழையமாணவர் சங்கம் பற்றிய பாராட்டுரை என்று சொல்லலாம்.

தோற்ற மாயை என்ற நாடகம் இளையபாரதியின் இனிய குரலுடனும் நல்ல தமிழுடனும் ரசிகர்களை தம் பக்கம் இழுத்து ஆரம்பித்த மாதிரி திவ்விய ராஜனின் இனிய குரலில் வந்த பாடலுடன் நன்கு முடிவடைந்தது. ஆனால் இடையில் எழுதியவர் தனது எழுத்தை மீள வாசித்துப் பார்த்தாரா எனக் கேள்வி எழுப்பும் வண்ணம் உரையாடல்கள் அமைந்திருந்தன. உதாரணத்துக்கு நல்ல பணக்காரர், காசின் மேல் வாழ்பவர்கள் என நாடகம் ஆரம்பிக்கிறது. பின் பிள்ளையின் சாமத்தியச் சடங்குப் பற்றிக் கதைக்கும் போது அதற்கு செலவழிக்கும் 25 ஆயிரத்தை உழைக்க அவர்கள் பல மாதங்கள் செலவிட வேண்டுமே என்றும் OSAP எடுக்காமல் அந்தக் காசுக்கு மேற்படிப்பு படிக்கலாம் என்றும் பிள்ளை புத்திமதி சொல்வதாக வருவது எவ்விதப் பொருத்தமுமின்றி ஒலித்தது. அதே போல் அடுத்ததாக வந்த மனசுக்கு மனசு நாடகமும் முன்னுக்கு பின் முரணான பல உரையாடல்களால் ( பிள்ளை உடுப்பு கூட அம்மாவின் தெரிவு என மனசு நோகிறது பின் அம்மா பிள்ளையை இது என்ன உடுப்பு என ஏசுகிறா) சொல்ல வந்த செய்தியை சொல்லத் தவறிவிட்டது. இறுதியாக வந்த யாருக்காக என்ற நாடகம் என்ன நடக்கப் போகுது என எதிர்வு கூறக்கூடிய வகையில் அமைந்திருந்தது மட்டுமன்றி தொலைக்காட்சியின் முன் இருந்து நாடகம் பார்த்து வீணாக நேரம் விரயம் செய்யும் அம்மா பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கத் தீர்வு அதை நிறுத்துவதல்ல அவ பார்க்கும் வேலையை நிறுத்துவது தான் என்ற ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வை முன் வைத்தது. ஆனால் சிறுவர்களின் நடிப்பு நன்றாக இருந்தது.

தேவகி குலோத்துங்க பாரதியின் முகிலின் குமுறல் நாட்டியம் ஒரு புது முயற்சி. பின்னால் திரையில் மழை கொட்ட முன்னுக்கு நடனம் பார்க்க இதமாக இருந்தது.

ஆனால் அன்றைய நாளில் துரையப்பா பிள்ளை, மகாகவி, சேரன் போன்ற பல பெருங்கவிஞர்களின் கவிதைகள், வர்ணராமேஸ்வரன், செந்தில்செல்வி போன்றவர்களின் பாடல், ஆடல்கள், கல்லூரிக்கு புகழ் சேர்த்த மகாஜனங்கள் பற்றிய நினைவுகள் பதியப்படும், பகிரப்படும் நூற்றாண்டு வரை கல்லூரியை வளர்த்த ஆசிரியர்களுக்கு கெளரவம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. [ கவிஞர்கள் மட்டுமல்ல ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் சேர்த்த சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள் மற்றும் இலக்கியத் திறனாய்வாளர்கள் பலரையும் நீங்கள் குறிப்பிட்டுக் கூறியிருக்க வேண்டும். ஒரு கல்லூரியின் வளர்ச்சியை அது உருவாக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை வைத்து மட்டும் மதிப்பிடுவது தவறு. முதலாளித்துவ சமுதாய அமைப்பில் கல்வியென்பதே ஒரு விற்பனைப் பொருளாகத்தான் விளங்குகின்றது. மேற்படி பட்டதாரிகளெல்லோரும் கற்பதென்பது உண்மையான கல்வி அல்ல. ஒரு குறிப்பிட்ட வேலையொன்றினைச் செய்வதற்குரிய, தங்களைச் சந்தைப் படுத்துவதற்கு உதவக் கூடியதொரு பயிற்சி மட்டுமே மேற்படி கல்வி முறையாகும். இந்நிலையில் பணத்தையே மையமாக வைத்து வாழும் புலம்பெயர் சமுதாயத்தின் ப்ழைய மாணவர் சங்கங்களின் அறியாமையின் விளைவே மேற்படி புறக்கணிப்புகளெல்லாம். ஆனால் இத்தகைய புறக்கணிப்புகளை எல்லாம் கடந்து மேற்படி படைப்பாளிகள் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்பார்களென்பது வரலாற்றின் நியதியாகும். - பதிவுகள் ]

நிர்வாக சபை இரண்டு நாள் என்று கலைவிழா என கால அளவைக் கூட்டி கலைவிழாவின் தரத்தை கோட்டை போக விட்டுவிட்டது என மனதுக்கு மிக விசனமாக இருந்த்து. ஒரு நீண்ட வார விடுமுறையின் போது கலைவிழாவை வைத்து மண்டபத்தின் பெரும் பகுதியை காலியாக வைத்துக் கொண்டு அவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளும் சோடை போகவில்லை. நன்றியுரையில் அலுப்புத் தரும் வகையில் தமக்குத் தாமே நீண்ட நன்றியுரையும் சொல்லிக் கொண்டார்கள். அத்துடன் அவர்கள் நடத்திய போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் கெளரவத்தையும் தாமே எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் செலவழித்த நேரத்துக்கும் பணத்துக்கும் பயன் உண்டா என்பது தான் இப்போதைய மகாஜனா மேல் காதல் கொண்ட அத்தனை பேரினதும் கேள்வியாக உள்ளது,

இரண்டு நாளும் வைக்க நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டாதால் போலும் ஒரிரு நிகழ்ச்சிகளைத் தவிர யாவும் இரண்டு நாட்களும் அதே நிகழ்ச்சிகள் தான். ஒரு பிள்ளைக்கு ஒரு நாளும் மற்றப் பிள்ளைக்கு மறுநாளும் பரிசளிப்பு இருந்ததால் இரண்டு நாளும் வந்த மகாஜனன் அல்லாத ஒருவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு நேற்றுக் கொடுத்த award ஐ திருப்பி வாங்கிவைத்து விட்டு இன்றும் கொடுக்கிறார்களா எனக் கேட்டார்.

எப்போதும் மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் மகாஜனா அன்னையைப் பெருமிதம் அடையச் செய்யும் வகையில் மகாஜனன்களின் சிருஷ்டிப்பில் மகாஜனாக் கலைவிழா உயர்ந்து நிற்பது தான் வழமை. அந்த எதிர்பார்ப்பில் இவ்வருடக் கலைவிழா, மகாஜனாவின் நூற்றாண்டு என்பதன் பூரிப்பு, நெகிழ்வு எல்லாம் நிறைந்த ஒரு மகுடம் வைக்கும் விழாவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் போன என் போன்ற மகாஜனன்களுக்கு அது மனம் நோகும் விழாவாக இருந்தது கவலைக்குரிய விடயமே. October ல் தான் நூற்றாண்டு நிறைவு வருகின்றது. அதையாவது உண்மையான நூற்றாண்டு விழாவாக நிகழ்த்த இனி வரப்போகும் நிர்வாக சபை முயற்சிக்க வேண்டும் என்ற எமது உண்மையான ஆதங்கம் போய்ச் சேரவேண்டிய எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பது தான் இந்தக் கட்டுரையின் முக்கியமான நோக்கமாகும். அதை விளங்கி செயற்பாட்டாளர்கள் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்போம்.

கருணா ஆனந்தன்
karuna.anandan@yahoo.com

 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்