 நவம்பர் 
              13, 2006 அன்று 'டொராண்டோ', மார்க்கம், மிசிசாகா ஆகிய நகரங்களில் 
              நடைபெற்ற நகரசபை, பிரதேசபை மற்றும் கல்விச்சபைக்கான தேர்தல்களில் பல 
              ஈழத்தமிழர்கள் போட்டியிருந்தார்கள். அவர்களில் மார்க்கம் நகரசபை 
              உறுப்பினராக 7ஆம் வட்டாரத்திலிருந்து லோகன் கணபதியும், 7/8ஆம் 
              வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட நீதன் 
              சண்முகராஜாவும் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பிரதேசத்திலுள்ள 
              யோர்க் பிரதேச சபையில், பிரதேசசபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட 
              கலாநிதி இலகு இலகுப்பிள்ளை 16,246 வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக 
              வந்துள்ளார். 'டொராண்டோ' நகரசபைக்குரிய வட்டாரம் 42இல் நகரசபை 
              உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட குமார் நடராஜா 26 சதவீத 
              வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் வட்டாரம் 21இல் 
              கல்விச்சபைக்குப் போட்டியிட்ட சண் தயாபரன் ஆறாயிரத்துக்கும் அதிகமான 
              வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.

நடைபெற்ற இத்தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் லோகன் கணபதியும், நீதன் சண்முகராஜாவும் கனேடிய அரசியலில் நுழையும் தமிழர்களில் முதலிரு வெற்றியாளர்களென்ற பெருமையினைப் பெறுகின்றனர். மேலும் பலர் கனேடிய அரசியலில் ஈடுபடுவதற்கு இவர்களது இந்த வெற்றி தூண்டுகோலாக அமையும். 300,000ற்கும் அதிகமாகத் தமிழர்கள் வாழும் 'டொராண்டோ' மாநகரில் தமிழர்களுக்குப் போதிய அரசியல் பிரதிநிதித்துவமில்லை. அந்தக் குறையினை நீக்கும் வகையில் இவர்களது வெற்றியும், போட்டியிட்ட ஏனைய தமிழர்களின் பங்களிப்பும் பெற்ற வாக்குகளும் உறுதியான அடித்தளத்தை அளித்துள்ளன. வாழ்த்துகிறோம்.

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991