| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| இலக்கியம்! |  
| திருக்குறளும் இணையமும்! - சு.துரைக்குமரன் , புதுக்கோட்டை -
 
 
  தமிழ் 
தொன்மை வாய்ந்த செம்மொழி. இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கிய வரலாற்றை உடையது. அன்றும் 
இன்றும் என்றும் மக்களின் வாழ்வியலை நெறிப்படுத்தும் இலக்கியங்களைக் கொண்டதால் 
கன்னித்தன்மையுடன் திகழ்வது. அத்தகைய தமிழையும் தமிழனையும் உலகறியச் செய்த இலக்கிய 
நூற்களுள் முதன்மையானது திருக்குறள். தம்மகத்தே கொண்ட கருத்துகளால் தமிழனால் 
உலகப்பொதுமறை என்று போற்றப்படும் நூல். உலக அற இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கப்படும் 
பெருமை வாய்ந்தது. 
 அச்சுக்கலையின் அறிமுகத்தாலும், பிற நாட்டவர் திருக்குறளை மொழிபெயர்த்ததாலும் 
உலகெங்கும் இதன் சிறப்பு அறியப்பட்டது. நுட்பமான தொலைநோக்குப் பார்வையும் 
பரந்துபட்ட வாழ்வியல் சிந்தனையும் கொண்டு இன்றும் உலகத்தோர் பின்பற்றத்தக்க 
கருத்துவளம் உடையதாக அமைவது. திருக்குறளின் நுட்பமறிந்து அதன் சிறப்பைக் கூறிப் 
போற்றும் தமிழன் அந்நூலின் கருத்துகளைப் பின்பற்றி வாழத்தவறியவன் என்று கருத்து 
பன்னாட்டு ஆய்வாளர்களிடையே உண்டு.சமூக, மானிடவியல் மற்றும் வரலாற்று அடிப்படை 
கொண்டு ஆய்வு நோக்கில் அணுகும்போது திருக்குறள் கருத்துகள் இன்றும் தமிழரால் 
பின்பற்றப் படவில்லை என்பது உணரப்படும்.
 
 இன்று வெகுன ஊடகமாக விளங்கும் இணையத்தின்வழி திருக்குறள் பற்றி அனைவரும் அறியவும், 
திருக்குறள் பற்றி விவாதிக்கவும் வழியேற்பட்டுள்ளது. இளைய தலைமுறையின் தகவல்தொடர்பு 
சாதனமாகவும், பயனுள்ள பொழுது போக்காகவும் விளங்கும் இணையத்தில் உலகெங்கும் வாழும் 
தமிழர்களும், தமிழக அரசும், தன்னார்வ அமைப்புகளும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் 
பலர் அறியச்செய்யும் நோக்கில் பல இணைய தளங்களை அமைத்துள்ளன. சங்ககாலத்தில் 
புலவர்களும், அரசர்களும் கூடித் தமிழாய்ந்தது போல, இன்று உலகெங்கும் வாழும் 
தமிழர்களும் இணைய வழித் தமிழாய்வும் விவாதங்களும் நிகழ்த்துகின்றனர்.அவ்வகையில் 
திருக்குறள் இணையத்தில் இடம்பெறுவது குறித்து ஆய்கிறது இக்கட்டுரை.
 
 திருவள்ளுவர் இயற்றிய குறட்பாக்களையும் அதற்கு தமிழ்நாடு மற்றும் பிறநாட்டு 
அறிஞர்கள் எழுதிய உரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் பல இணையதளங்கள் மின்நூலாக 
(ebook) முற்றிலும் இலவசமாக வழங்குகின்றன. அதுபோலவே இணையத்தில் வெளிவரும் தமிழ் 
இதழ்கள் பலவும் திருக்குறள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள், அறிஞர்தம் நேர்காணல்கள் 
போன்றவற்றை வெளியிடுகின்றன. பொழுதுபோக்குக் களமாகவும், படைப்பு மற்றும் எண்ணங்களை 
வெளியிடும் தளமாகவும் அமைந்துள்ள வலைப்பூக்களில் (weblogs) திருக்குறளின் 
சிறப்பும், நுட்பமும் விவாதிக்கப் படுகின்றன.
 
 இணையதளங்கள் போன்று வலைப்பூக்களிலும் திருக்குறள் மற்றும் அதன் உரைகளைக் காணும் 
சேவையும் வழங்குகின்றனர். அத்துடன் திருக்குறள் பற்றிய செய்திகள் அமைந்துள்ள 
இணையதளங்களுக்கான இணைப்பையும் (inner links) வழங்குகின்றனர். அவ்வழியில் அமையும் 
இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள் பற்றிக் காணலாம்.
 
 மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (www.tamil.net/project madurai.com).
 
 இது உலகளாவிய தமிழர் இணையவழி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி 
இலவசமாகப் பெற வழிசெய்யும் திட்டம். திரு.K.கல்யாணசுந்தரம் என்பவரைத் தலைவராகக் 
கொண்டு உலகெங்கும் உள்ள தமிழர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் முந்நூறுக்கும் 
மேற்பட்டோர் இணைந்து நடத்தும் திட்டம். அரசு, தனியார் உதவியின்றித் தன்னார்வ 
முயற்சியாக 1998 ஆம் ஆண்டு தை முதல் தேதியிலிருந்து இத்திட்டம் செயல்பட்டு 
வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் மின்நூலாக இத்தளத்தில் 
வெளியிடப்பட்டுள்ளது. காப்புரிமை இல்லாத நூல்களும், காப்புரிமை உள்ளவை உரியவர் 
அனுமதியுடனும் வெளியிடப் படுகின்றன. தொடக்கத்தில் இணைமதி, மயிலை 
எழுத்துருக்களிலும், 1999 முதல் திகி எழுத்துருக்களிலும், 2003 முதல் யுனிகோடு 
(ஒருங்குறி) எழுத்துருவிலும் வெளியிடப்படுகிறது.
 
 இத்தளத்தில் 1330 குறட்பாக்களும் கவியோகி சுத்தானந்த பாரதி, ¢.யு.போப் மற்றும் 
பலரது மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளன. www.mozhi.org என்ற தளத்திலிருந்து 
உரையும், www.tamilnation.org என்ற தளத்திலிருந்து திருவள்ளுவரைப் பற்றிய 
அறிமுகமும் வெளியிடப்பட்டுள்ளன. பரிமேலழகரின் அதிகாரப் பகுப்புமுறை 
பின்பற்றப்பட்டுள்ளது.
 
 விக்கிபீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் (www.wikipedia.com) :
 
 ஆங்கிலத்திலும் ஏனைய பலமொழிகளிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏராளமான தகவல்களைக் 
கொண்டுள்ள இத்தளத்தின் தமிழ்பதிப்பு 2003 - இல் தொடங்கப்பட்டுள்ளது. இத்தளமும் 
பலரது முயற்சியால் தொகுக்கப்பட்டு இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்மொழிக் கலைக் 
களஞ்சியத் திட்டத்தில் அமைந்தது. இத்தளத்தில் திருக்குறள் பற்றிய பொருளடக்கம் 
கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது.
 
 1. பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்.
 
 2. திருக்குறளின் பால்களும், இயல்களும், அதிகாரங்களும்.
 
 3. திருக்குறள் விக்கிபுத்தகம் (www.wikibooks.com).
 
 4. திருக்குறள் புகழுரைகள்.
 
 5. திருவள்ளுவரும் கன்பூசிய
¤ம்
 
 6. வெளி இணைப்புகள்.
 
 மேற்கண்ட பொருளடக்கத்தின் வழி பழந்தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்வதுடன் 
திருக்குறள் பற்றிய செய்திகள் இடம்பெறுகிறது. பரிமேலழகரின் அதிகாரப் 
பகுப்புமுறையில் இயல்களும், அதிகாரங்களும் அமைகின்றன. திருக்குறள் முழுத்தொகுப்பும் 
விக்கிபுத்தகம் என்ற இதன் இணைப்புத்தளத்தில் காணுமாறு அமைந்துள்ளது. அத்துடன் 
பதினெட்டுக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் திருக்குறள் பற்றிக் 
கூறியுள்ள கருத்துகள் தொகுப்பாக அமைகிறது. திருவள்ளுவர் கருத்துகளை ஒத்த 
கன்பூசிய
¢ன் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பின்வரும் வெளி இணைப்புகள் 
அமைந்துள்ளன.
 
 1. மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருக்குறள் தொகுப்பு.
 
 2. கலைஞர் மு.கருணாநிதியின் திருக்குறள் உரை.
 
 3. சென்னை IIT வழங்கும் தமிழில் குறள்களுடன் ¢.யு.போப்பின் திருக்குறள் ஆங்கில 
மொழிபெயர்ப்பும் உரையும்.
 
 4. பல்வேறு சொற்செயலிகளுடன் கூடிய ஆங்கில மொழிபெயர்ப்பும் உரையும்.
 
 5. இந்தி, அரபு, மலையாளம், இரயன், பிரெஞ்சு ஆகிய பிறமொழிகளில் திருக்குறள்.
 
 சென்னை நூலகம் (www.chennailaibrary.com) :
 
 சென்னை நெட்வொர்க்.காம் இணையதளத்தின் ஒருபகுதியாக இயங்கி வந்த தமிழ்சேவைகள் 
அனைத்தும் சென்னை நூலகம் என்னும் புதிய இணையதளத்தில் வழங்கப்படுகிறது. 25.10.06 
முதல் தொடங்கி இயங்கிவரும் இத்தளத்தை திரு.கோ.சந்திரசேகரன் என்பவர் அமைத்துள்ளார். 
இத்தளத்தின் சேவைகள் அனைத்தும் இலவசம். சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், 
ஐம்பெரும் காப்பியங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், இலக்கண நூல்கள் மற்றும் 
அவ்வையார், கம்பர், ஞானசம்பந்தர், திரிகூட ராசப்பக் கவிராயர், குமரகுருபரர், 
பாரதியார், பாரதிதாசன், மு.வ, அண்ணா, ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கல்கி 
ஆகியோரது படைப்புகள் இத்தளத்தில் காணக்கிடைக்கின்றன. திருக்குறளைப் பொறுத்தவரை 
மூலம் மட்டும் மின்நூலாக இத்தளத்தில் காணக்கிடைக்கிறது.
 
 தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (www.tamilvu.org) :
 
 தமிழக அரசு சார்பில் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் அமைந்துள்ள 
நூலகத்தில் பழந்தமிழ் நூல்கள் அனைத்தும் மின்நூல்களாகக் காணக்கிடைக்கின்றன. 
திருக்குறள் பல்வேறு உரைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளுடன் கிடைக்கிறது.
 
 தமிழ்நாடு இணையதளம் (www.tamilnation.org) :
 
 இவ்விணையதளத்தில் திருவள்ளுவர் பற்றிய செய்திகள் அறிமுகக் கட்டுரையாக அமைந்துள்ளது. 
பல்வேறு செய்திகளுடன் திருக்குறள் மற்றும் உரைகள் காணக்கிடைக்கின்றன.
 
 தமிழி நூலகம் இணையதளம் (www.tamilelibrary.org) :
 
 இவ்விணையதளத்தில் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின் இணையதளத்திற்கான 
இணைப்புடன் கவியோகி சுத்தானந்த பாரதி, ¢.யு.போப்பின் மொழிபெயர்ப்புகள் 
வெளியிடப்பட்டுள்ளன.
 
 www.excite.co.uk :
 
 இவ்விணையதளத்திலும் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் தளத்திற்கும், விக்கிபீடியா 
தளத்திற்கும் செல்லும் வசதியும், கலைஞர் மு.கருணாநிதியின் உரையும் 
வெளியிடப்பட்டுள்ளன.
 
 தமிழம்.நெட் (www.tamizam.net) :
 
 இத்தளத்தில் திருக்குறள் பற்றிய அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன.
 
 1. அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை பைபிள் போன்ற 
பதிப்பில் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் கட்டுரைகள், அதிகாரங்களுக்கான கோட்டுப் 
படங்களுடன் தங்கமுலாம் பூசப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளது.
 
 2. 1979 - ¥லை மாதம் சைதாப்பேட்டை திருக்குறள் பாடசாலை மாணவர்களால் தமிழ் 
எழுத்துருவில் நரிக்குறவரின் வாக்ரிபோலி மொழியில் அமைந்த திருக்குறள் 
வெளியிடப்பட்டுள்ளது.
 
 3. குறளின் நுட்பமும் சிறப்பும் உலகறிய மலேசியா சி.சுப்பிரமனியம் என்பார் வெளியிட்ட 
உள்ளங்கை (41/4 cm) அளவிலான திருக்குறள்.
 
 4. ஈரோடு குறளாயம் இரா.இளங்குமரனைக் கொண்டு வெளியிட்டுள்ள 108 திருக்குறள் போற்றி 
நூல்.
 
 5. வள்ளுவர் பற்றிய அரிய செய்திகளுடன் சிவகங்கையிலிருந்து வெளிவரும் அணு அஞ்சலட்டை 
இதழ் தினமும் நான்கு திருக்குறளுடன் வெளியிட்டுள்ள 1/2 அங்குல நாள்காட்டி
 
 ஆகிய செய்திகளை வழங்குகிறது.
 
 இவற்றுடன் www.muthu.org, www.worldlit.in, www.thirukkural.com, www.c.s.utk.edu, 
www.ibiblio.org, போன்ற தளங்களிலும் திருக்குறள் செய்திகளும், மின்நூலும், உரைகளும் 
கிடைக்கின்றன.
 
 இவைதவிர www.thinnai.com, (www.nilacharal.com) www.aaramthinai.com, 
www.keetru.com ஆகிய இணையத்தமிழ் இதழ்களில் திருக்குறள் பற்றிய விவாதங்கள், 
கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவை காணக்கிடைக்கின்றன.
 
 www.blogger.com என்ற வலைப்பூவிற்கான இணையதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட 
வலைப்பூக்களில் திருக்குறள் கருத்துகள் பற்றிய விவாதங்கள், கட்டுரைகள், அமைகின்றன. 
சாலமன் பாப்பையா, பேரா.நாகரா செல்லையா, தி.ச.வரதராசன் ஆகியோரது திருக்குறள் 
உரைகளும் காணக்கிடைக்கின்றன.
 
 இணையச் சேவைகளில் திருக்குறள் மின்நூலின் தரம் :
 
 தன்னார்வ முயற்சியாக உலகத்தமிழர் ஒன்றுபட்டு அமைக்கும் இச்சேவைகளின் முயற்சி 
பாராட்டத்தக்கது. இம்மின்நூல்களின் தரம் ஆராயத் தக்கது. பல இணையதளங்களையும் 
ஒருங்குகூட்டிப் பார்க்கும்போது மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டச்சேவை 
பலராலும் பரிந்துரைக்கப்படும் தளமாக அமைகிறது. இத்தளத்தில் அமைந்துள்ள மின்னூலை 
நோக்கும்போது ஒருசில எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன.
 
 கடவுள் வாழ்த்து என்பது கடல்வாழ்த்து என்று அமைந்துள்ளது.
 
 அழுக்காற்றின் உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
 
 வழுக்க§யும் கேட£ன் பது. (165) என்பது போன்ற எழுத்துப்பிழைகள் உள்ளன. ஆயினும், 
இதுபோன்ற பிழைகளைப் படிப்போர் திருத்துவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு 
திருத்தும்போதும், வலையேற்றம் செய்யும் போதும் எடுத்துக் கொண்ட மூலநூல், பதிப்பு, 
உரையாசிரியர் போன்ற விவரங்களைத் தெரிவிக்கும்படி இச்சேவைகள் கோருகின்றன. 
இச்சேவைகளில் நாமும் பங்கெடுப்பதன்மூலம் பிழைதிருத்தப்பட்டு இச்சேவைகளின் தரம் 
மேம்படுத்தப்படும்.
 
 பொதுவாக இணைய விவாதங்களைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த 
புலமையுடையவர்களைவிட கணினியறிவு உடையவர் மட்டுமே ஈடுபடுவதைக் காணமுடிகிறது. மேலும் 
கணினியில் மட்டுமே எழுதுபவர்களாகவும் உள்ளனர். ஆயினும், திருக்குறள் விவாதங்களில் 
பங்கெடுப்பவர்களும், கட்டுரைகள் வழங்குபவர்கள் பெரும்பாலும் தமிழ் ஆய்வாளர்களாக, 
கல்லூரி ஆசிரியர்களாக, இலக்கிய ஆய்வில் ஈடுபடுவோராக அமைகின்றனர்.
 
 இணையத்தால் இளைய தலைமுறையினரிடம் இலக்கியங்கள் குறித்த அறிமுகம், விழிப்புணர்ச்சி 
மற்றும் ஆய்வுநோக்கு வளர வழியேற்படுகிறது. திருக்குறள் பற்றிய விவாத களங்கள் 
அமையும்போது புதிய பார்வைகள் தோன்ற வாய்ப்பு ஏற்படுகிறது. இணையத்தில் உடனடியாக 
கருத்துகள் பரிமாறப்படுவது மற்ற அச்சிதழ்களில் இல்லாத சிறப்பு.
 
 திருக்குறளும் இணையமும் :
 
 தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு அகப்புறத் தாக்குதல்களுக்கு 
உள்ளாகி வந்தபோதிலும், அதன் மொழி வளத்தாலும், எளிமையாலும், ஏற்றுக்கொள்ளும் 
பாங்கிலும் மேலும் மேலும் தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டு வந்துள்ளது. அவ்வகையில் 
தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும், தகவல் தொடர்பு வசதியையும் மொழி வளர்ச்சிக்கும், 
தமிழ் ஆய்விற்கும் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் இணையப் பயன்பாடு 
குறிப்பிடத்தக்கது.
 
 அறிவியல், தகவல் தொடர்பு குறைவான காலத்திலேயே தமிழ் இலக்கியங்கள் குறிப்பாகத் 
திருக்குறள் பன்னாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. அவர்கள் யாவரும் 
திருக்குறள் ஓர் ஒப்பற்ற படைப்பு என்பதைக் கண்டுகொள்ளத் தவறவில்லை. அவ்வாறே 
தமிழரும் அறிந்து போற்றினர் ஆயினும், திருக்குறள் கருத்துகளைப் பின்பற்றுவதில் 
குறிப்பிடும் படி இல்லை என்பர் ஆய்வாளர். தனிமனித ஒழுக்கமும், சமூகப்பொறுப்பு 
உணர்வும் கேள்விக்குறியாகி வரும் இக்காலச்சூழலில் திருக்குறள் குறித்த வாழ்வியல் 
சிந்தனைகளை உலகெங்கும் ஓர் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டியது திருக்குறள் 
சிறப்புணர்ந்தோர் கடமையாகிறது. அக்கடமையைச் செவ்வனே செய்ய இணையப் பயன்பாடு 
வழிவகுக்கும்.
 
 duraiaadav@yahoo.co.in
 |  
| © காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |