பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம்! |
பழந்தமிழ் இலக்கியங்களில் புதையலைத் தேடுவோம்!
- முனைவர் செ. அ. வீரபாண்டியன் (தமிழ்நாடு) -
இசை அறிவியல் அடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களை
நான் ஆராயத் தொடங்கிய காலத்தில், தமிழில் ஆழ்ந்த புலமையிருந்தால் மட்டுமே பழந்தமிழ்
இலக்கியங்களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்று நான் எண்ணியிருந்தேன். பள்ளியில்,
கல்லூரியில் தமிழ் படித்தபோதேல்லாம் இலக்கணம் என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு
வேப்பங்காயாகக் கசந்தது. அவர்களில் நானும் ஒருவன். எனவே இசை அறிவியல் நோக்கில்
சிலப்பதிகாரத்தை, மணிமேகலையை, தொல்காப்பியத்தை, மற்ற சங்க இலக்கியங்களை நான்
புரட்டியபோது, அவற்றில் பல சொற்கள் "லத்தீனாக"ப் பயமுறுத்தின. பகுத்தறிவு, திறந்த
மனது ஆகிய இரண்டு விளக்குகளின் துணையுடன் ஆர்வமாக உழைத்தேன். உழைப்பு வீண்
போகவில்லை.
"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளியிட்ட "சங்க
இலக்கியங்கள் தொகுப்பை' எப்போதாவது பயன்படும் என்ற நோக்கில் நான் வாங்கி
வைத்திருந்தேன். (நமது இயல்புக்கு தோன்றுவதை புள்ளிகள் போன்று செய்து வைத்தால்,
பின்னால் நம்மையறியாமலேயே அப்புள்ளிகள் கோலங்களை உருவாக்கும் என்ற மேற்கத்திய
எழுத்தாளரின் கருத்தை தொல்காப்பியன் அனுப்பியது நினைவிற்கு வருகிறது.)
அத்தொகுப்பில் உரைகள் இன்றி மூலம் (ற்ங்ஷ்ற்) மட்டுமே இருந்தது எனது ஆய்வுக்கு
பலமாக (உரைகளுக்கு மன அடிமையாகாமல் நேரடியாக பாடல் வரிகளை ஆராய வாய்ப்பாக) அமையும்
என்பதும் அப்போது எனக்கு தெரியாது. அதில் உள்ள "பாட்டும் தொகையும்' என்ற ஒரு
புத்தகம் இன்றும் எனக்கு அதிகம் பயன்படுகின்ற ஒன்றாகும். அப்புத்தகத்தில் உள்ள
"சொல்þதொடர் விளக்கம்' மிகவும் அருமையாகவும், எளிமையாகவும் தொகுக்கப்பட்ட
ஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழகம் 1982þஇல் மறுபதிப்பிட்ட
சேர்க்கை(ள்ன்ல்ல்ப்ங்ம்ங்ய்ற்) உள்ளிட்ட 7 பெரும் தொகுதிகளில்(ஸ்ர்ப்ன்ம்ங்ள்)
இல்லாத சில சொற்களுக்குக் கூட இந்த சிறிய புத்தகத்தில் எனக்கு விளக்கம் கிடைத்தது.
உண்மையில் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள வரிகள்(ற்ங்ஷ்ற்) என்பவை
பல்துறை(ஸ்ரீழ்ர்ள்ள்-க்ண்ள்ஸ்ரீண்ல்ப்ண்ய்ஹழ்ஹ்) ஆய்வு மூலம் அரிய தகவல்களை
முத்துக்களாக வெளிப்படுத்தக் காத்திருக்கும் புதையலாகும். உரைகளுக்கு மன அடிமையாகி
இவற்றைப் படித்தால் பல அரிய தகவல்களை இழந்து, தவறான புரிதலுடன் வெளிப்பட வேண்டும்
என்பதற்கு எனது ஆய்வே சான்றாகும். நம்புவதற்கு கடினமான இந்த உண்மையை
எடுத்துக்காட்டுகளுடன் விளக்க விழைகிறேன். இவ்விளக்கமே ஒரு புதையலைத் தேடும்
அனுபவத்தை உங்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் முயல்கிறேன்.
முதலில் சிலப்பதிகாரத்தினுள் நுழைவோம்.
'' ஏற்றிய குரல் இளி என்றிரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி,
பண் அமை முதல்வன் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி''
þ அரங்கேற்றுக்காதை: வரிகள் 59þ62
மேற்சொன்ன பகுதியில் வரும் ' குரல் இளி என்றிரு நரம்பின்' என்ற சொற்கள் இசையில் "ச'
மற்றும் "ப' என்ற சுரங்களைக் குறிக்கும் என்பது எனக்குத் தெரியும். தமிழிசையில்
ச,ரி,க,ம,ப,த,நி என்ற 7 சுர எழுத்துக்களின் சுரப்பெயர்கள் முறையே குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று அழைக்கப்படும். இதனை முதலில் மறைந்த இசை
அறிஞர் ப..தண்டபாணியின் "தமிழன் கண்ட இசை' என்ற சிறு நூலில் படித்திருந்தேன்.
பின்னர் வீ.ப.கா.சுந்தரம் உள்ளிட்ட பல இசை அறிஞர்களின் நூல்களில் இதனை
உறுதிப்படுத்திக் கொண்டேன்.
"ச' மற்றும் "ப' என்ற இரண்டு சுரங்களும் இசையில் இனிமை தரும் உறவு
(ஸ்ரீர்ய்ள்ர்ய்ஹய்ஸ்ரீங்) கொண்டவை என்பதையும், காதால் கேட்டே இதை உணரமுடியும்
என்பதையும் அலெக்ஸôண்டர் வுட் (அப்ங்ஷ்ஹய்க்ங்ழ் ரர்ர்க்) எழுதிய "இசையின்
இயற்பியல்' (டட்ஹ்ள்ண்ஸ்ரீள் ர்ச் ஙன்ள்ண்ஸ்ரீ) என்ற ஆங்கிலப் புத்தகத்தில் நான்
எற்கனவே படித்திருந்தேன். எனவே "ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி,' என்ற சொற்கள்
மேற்சொன்னதையேக் குறிக்கும் என்பது எனக்குத் தெளிவானது. இந்தத் தெளிவுடன் உ.வெ.சா
வெளியிட்ட சிலப்பதிகார நூலில் மேற்சொன்ன பகுதிக்கான உரையைப் படிப்போம். அதில் குறை
இருப்பது உங்களுக்கே புலனாகும்.
''பதினாற் கோவையினிடத்துக் குரல் நரம்பு இரட்டிக்க வரும் அரும்பாலையும், இளி
நரம்பு இரட்டிக்க வரும் மேற்செம்பாலையும், இவை போல அல்லாத பாலைகளையும் இசை நூல்
வழக்காலே இணை நரம்பு தொடுத்து பாடும் அறிவினையு முடை யனாயென்க.''
மேலே குறிப்பிட்ட சிலப்பதிகார வரிகளுக்கு இந்த உரை சரியல்ல என்பது எனக்குத்
தெளிவானது. இதைச் சரியென்று ஏற்றுக்கொண்டுள்ள தமிழறிஞர்களிடம் இது சரியல்ல என்று
சாமான்யனான நான் சொல்ல முடியுமா? அறிவியல் துறையைச் சார்ந்த என் போன்றோர்
இம்முயற்சியில் ஈடுபடுவது அத்துமீறிய பிரவேசம் (பழ்ங்ள்ள்ல்ஹள்ள்) என்று
தமிழறிஞர்கள் கருதுவதை நான் அனுபவித்துள்ளேன். எனவே ஏன் இந்த உரை சரியல்ல? எது
சரியான உரை? என்ற கேள்விகளுக்கு அவர்களில் திறந்து மனதுடையவர்கள்
ஏற்றுக்கொள்ளும்படியான விடைகளைத் தேடத் தொடங்கினேன்.
மேலே சொன்ன சிலப்பதிகார மூல வரிகளில் "ஏற்றிய குரல் இளி' என்ற சொற்கள் உள்ளன.
"ஏற்றிய' என்றால் என்ன பொருள்? இசை தொடர்பாக "ஏற்றிய' என்றால் என்ன பொருள் என்பதை
சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய்þஉம் விளக்கவில்லை,
டழ்ங் டஹப்ப்ஹஸ்ஹய் பஹம்ண்ப் ஐய்க்ங்ஷ் -உம் விளக்கவில்லை. (இது போல இசை தொடர்பான
பல சொற்களுக்கு இத்தகைய நூல்களில் விளக்கம் இல்லை. சில சொற்களுக்குத் தவறான
விளக்கங்களும் உள்ளன.) இந்த இடத்தில் சோர்ந்து விடாமல், தேடல் உடனே பலனளிக்க
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், (புதையல் தேடலில் வெற்றி பெறும் இரகசியம்
இது) இசை தொடர்பான நூல்களையும், பழந்தமிழ் இலக்கியங்களையும் புரிந்தும் புரியாமலும்
படிக்கத் தொடாங்கினேன். (கிடார், ஹார்மேனியம் வாசிக்கக் கற்றுக்கொண்ட பின் தான் சுர
இசை பற்றிய நூல்களும், மிருதங்கம் கற்றுக்கொண்ட பின் தான் தாள இசை பற்றிய நூல்களும்
எனக்கு விளங்கத் தொடங்கின,)
தெய்வசிகாமணிக் கவுண்டர் என்ற "புகழ் பெறாத உ.வெ.சா.' 1970þகளில்
தேடிக்கண்டுபிடித்தச் சுவடியிலிருந்து "பஞ்ச மரபு' என்னும், சிலப்பதிகார
உரையாசிரியர்கள் தமது உரையில் மேற்க்கோள் காட்டிய, இசை நூல் வெளியானது. அந்நூலில்
"ஏற்றிய' என்பதன் இசை தொடர்பான பொருள் எனக்குக் கிடைத்தது. அவருக்குக் கிடைத்த "இசை
நுணுக்கம்' என்ற அரிய இசை நூல் சுவடி பணவசதியின்றி அச்சிட தாமதமானதால் அழிந்து
போனது. இத்தகைய புதையல் வேட்டையில் இது போன்ற சீரணிக்க முடியாத சோகங்களைச்
சந்திப்பது தவிர்க்க இயலாது.
"ஏற்றிய குரல் இளி' என்றால் "சரியாக சுருதி சேர்க்கப்பட்ட (ல்ழ்ர்ல்ங்ழ்ப்ஹ்
ற்ன்ய்ங்க்) ச மற்றும் ப ஆகிய சுரங்கள்' என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகம்
வெளியிட்ட பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய்þஉம் டழ்ங் டஹப்ப்ஹஸ்ஹய் பஹம்ண்ப் ஐய்க்ங்ஷ்þஉம்
விளக்காத ஒரு சொல்லின் பொருளை நாம் கண்டுபிடித்து விட்டோம். ஆர்வம் குறையாமல் நீண்ட
காலம் தேடியபின் கிடைக்கும் "புதையல்' தரும் இத்தகைய இன்பம் அனுபவித்தால் மட்டுமே
விளங்கும்.
ஏற்றிய குரல் இளி' என்பது "சரியாக சுருதி சேர்க்கப்பட்ட (ல்ழ்ர்ல்ங்ழ்ப்ஹ்
ற்ன்ய்ங்க்) ச மற்றும் ப ஆகிய சுரங்கள்' என்று கண்டுபிடித்தாகிவிட்டது. இந்த
இரண்டையும் ஒரே நேரத்தில் வயலின் போன்ற இசைக்கருவிகளில் மீட்டி காதால் "ஒப்பக்
கேட்டு' உணரமுடியும் என்பதை அலெக்ஸôண்டர் வுட் எழுதிய புத்தகத்தில்
படித்தாகிவிட்டது. எனக்குத் தெரிந்த இசைக் கலைஞர்களிடம் கேட்டு இது சரி என உறுதி
செய்துகொண்டேன். பின் முறையாக இசை பயின்ற பின் நானே இத்திறமையை வளர்த்துக்
கொண்டேன்.
இந்தப் புரிதலுடன் மீண்டும் மேலே குறிப்பிட்ட சிலப்பதிகார உரையை மீண்டும்
படியுங்கள். உங்களுக்கே அது நெருடலாகத் தெரியும்.
மேலே குறிப்பிட்ட சிலப்பதிகார மூல வரிகளில் வரும் "தண்ணுமை' என்பது மிருதங்கம்
போன்ற தாள இசைக்கருவியைக் குறிக்கும் என தமிழ் இசை பற்றிய நூல்களிலிருந்து தெரிந்து
கொண்டேன். மேலும் சிறிது காலம் கழிகிறது. ஏன் இந்த உரை சரியல்ல? எது சரியான உரை?
என்ற கேள்விகளுக்கு முழு விடை இன்னும் கிடைக்கவில்லை.
புரிந்தும் புரியாமலும் சீவக சிந்தாமணியைப் படித்தேன். அதில் 675 வரிக்கான உரையில்
"இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய் நடப்பது தோலியற் கருவியாகும்'
என்ற சூத்திரத்தை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியிருந்தார்.
அதாவது தாள இசைக்கருவியின் இடது பக்கம் "ப' என்ற இசைச்சுரமும், வலது பக்கம் "ச'
என்ற இசைச்சுரமும் ஒலிக்க வேண்டும். இதுவே சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரைக்
குறிப்பிட்ட சூத்திரத்தின் பொருளாகும். இதைப் படித்தவுடன் சர்.சி.வி.ராமன் இசை
தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளில் இதே தகவலை வெளிப்படுத்தியிருந்தது எனக்கு
ஞாபகத்திற்கு வந்தது.
இப்போது மீண்டும் சிலப்பதிகார வரிகளைப் படித்து பொருள் காண முற்படுவோம். ""ஏற்றிய
குரல் இளி என்றிரு நரம்பின்'' என்பது யாழில் சரியாக சுருதி சேர்க்கப்பட்ட ச மற்றும்
ப இசை நரம்புகளைக் குறிக்கிறது. இந்த இரண்டு நரம்புகளின் இசைச்சுர ஒலிகளையும்
காதால் ""ஒப்பக் கேட்கும் உணர்வினன்'' ஆக தண்ணுமை என்னும் தாள இசைக் கருவியை
வாசிப்பவன் இருக்கிறான். இவருக்கு பாடலுக்குப் பொருத்தமான ("பண் அமை முழவின்') தாள
இசையை தாள இசைக்கருவியில் எங்கு,எப்படி எழுப்புவது ('"கண்ணெறி அறிந்து'') என்பது
தெரியும். இவர் யாழில் எழுப்பப்படும் ச மற்றும் ப இசைச்சுர ஒலிகளை, ஒப்பக் கேட்டு
உணர்ந்து, தனது தண்ணுமையில் இடது பக்கம் "ப' இசைச்சுர ஒலியையும், வலது பக்கம் "ச'
இசைச்சுர ஒலியையும் எழுப்பி யாழிசைக்கு தமது தாள இசையைப் ("தண்ணுமை முதல்வன்
தன்னொடும் பொருந்தி') பொருந்தச் செய்கிறார்.
இப்போது முன்பு குறிப்பிட்ட சிலப்பதிகார உரையை மீண்டும் படியுங்கள். ஏன் அந்த உரை
சரியல்ல? எது சரியான உரை? என்ற கேள்விகளுக்கு முழு விடை நமக்கு கிடைத்து விட்டது.
இதனால் அந்த உரையை நாம் புறக்கணித்து விட முடியாது. நமது புதையல் வேட்டையில் இந்த
புரிதல் அவசியமாகும்.
அந்த உரை ஓர் இசைத்தகவலை வெளிப்படுத்தியுள்ளது என்பதும், அந்த தகவல் மேற்சொன்ன
சிலப்பதிகார மூல வரிகளுக்குப் பொருந்தவில்லை என்பதும் இந்தப் புரிதலில் அடங்கும்.
அது மட்டுமல்ல, சிலப்பதிகார வரிகளுக்கு அந்த உரை பொருந்தவில்லை என்றாலும், சரியான
விளக்கத்தைப் பெற சீவக சிந்தாமணி உரையில் நச்சினார்க்கினியர் பயன்படுத்திய
சூத்திரம் துணை புரிந்துள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எனவே உரை
எப்போதும் தவறு என்றோ, சரி என்றோ முன்கூட்டியே முடிவு செய்துவிடக் கூடாது. மாறாக,
உரை எந்த இடத்தில் சரியாக இருக்கிறது?, எங்கு சரியாக இல்லை?, ஒரு இடத்தில் சரியாக
இலலாத உரையின் தகவல் வேறொரு இடத்தில் சரியான விளக்கம் பெற துணை புரிகிறாதா? போன்ற
கேள்விகளை பகுத்தறிவுடனும், திறந்த மனதுடனும் அணுகுவது இந்த புதையல் வேட்டையில்
வெற்றி பெறுவதற்கான இரகசியங்களாகும். இதே அணுகுமுறையை பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய்,
டழ்ங் டஹப்ப்ஹஸ்ஹய் பஹம்ண்ப் ஐய்க்ங்ஷ் உள்ளிட்ட எல்லா விளக்க அகராதிகளிலும்
பின்பற்ற வேண்டும்.
இந்தப் புதையல் வேட்டையில் நாம் அடுத்தக் கட்டத்திற்கு நுழையப் போகிறோம்.
இசை அறிவியல் அடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களில் நாம் தொடங்கிய புதையல்
வேட்டையில் இசை தொடர்பற்ற சில சொற்களைப் பற்றிய புதிய தகவல்களும் கிடைக்கப்
போகின்றன.
இதற்காக முதலில் நாம் நுழைய இருக்கும் பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு ஆகும்.
'' பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிர்'' þ புறநானூறு 246: வரிகள் 9þ10
"உயவல் பெண்டிர்' பற்றி எனது இசை ஆய்வில் ஏன் தேடினேன் என்பதைப் பின்னர்
பார்க்கலாம். முதலில் "உயவல் பெண்டிர்' யார் என்று பார்ப்போம்.
அதற்கு பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய்þஇல் "கைம்மை நோன்பினால் வருந்தும் மகளிர்'' என்று
தமிழிலும், " ரர்ம்ங்ய் ஜ்ட்ர் ள்ன்ச்ச்ங்ழ் ன்ய்க்ங்ழ் ஸ்ங்ழ்ஹ் ற்ழ்ஹ்ண்ய்ஞ்
ஹன்ள்ற்ங்ழ்ண்ற்ண்ங்ள் ங்ய்த்ர்ண்ய்ங்க் ன்ல்ர்ய் ஜ்ண்க்ர்ஜ்ட்ர்ர்க்" என்று
ஆங்கிலத்திலும் விளக்கம் உள்ளது. இவ்வாறு பொருள் கொள்வதற்கான சான்றாக மேற்சொன்ன
புறநானூறு பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்து "பரல்' என்றால் என்ன என்று தேடுவோம். பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய்þஇல் அதற்கு
"பருக்கைக் கல்' என்று பொருள் உள்ளது. அவ்வாறு பொருள் கொள்வதற்குச் சான்றாகக்
கீழ்வரும் பொருநர் ஆற்றுப்படைப் பாடல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
''பரற்பகை யுழந்த நோயொடு சிவணி''þ பொருநர் ஆற்றுப்படைப் பாடல் 44
புறநானூறு சான்றில் வரும் ' பரற்பெய் பள்ளிப்பாய் ' என்பது பஹம்ண்ப்
கங்ஷ்ண்ஸ்ரீர்ய்þஇல் உள்ள பொருளின்படி பருக்கைக் கற்களாலானப் பாயைக் குறிக்கும்.
அதில் படுத்து விதவைப் பெண்டிர் துன்பம் அனுபவித்தனர். மேலே குறிப்பிட்ட புறநானூறு
மற்றும் பொருநர் ஆற்றுப்படை வரிகளுக்கு இவ்வாறே உரையாசிரியர்கள் விளக்கம்
அளித்துள்ளனர்.
'பரல்' என்பது மேற்சொன்ன வரிகளில் பருக்கைக் கல்லைக் குறிக்காது என்று எனக்குத்
தோன்றியது. இந்த இடத்தில் "உயவல் பெண்டிர்' பற்றி எனது இசை ஆய்வில் ஏன் தேடினேன்
என்பதை விளக்கினால் உங்களுக்கும் இதே சந்தேகம் வரக்கூடும்.
இசை தொடர்பாக நான் பழந்தமிழ் இலக்கியங்களில் தேடியபோது, காம நோயால் அவதியுறும்
யானையை "உயவல் யானை ' என்று குறிப்பிடும் சான்று கிடைத்தது. அதன்பின் "உயவல்' பற்றி
தேடிய போது தான் மேலே சொன்ன புறநானூறு மற்றும் பொருநர் ஆற்றுப்படை வரிகள் என்
கண்களில் பட்டன. 'பரல்' என்பது மேற்சொன்ன வரிகளில் பருக்கைக் கல்லைக் குறிக்காது
என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், "பரல்' பற்றி வெளிச்சம் தரும் வரிகளை பழந்தமிழ்
இலக்கியங்களில் நாம் தேடுவோம்.
'பரத்தமை' என்ற சொல்லிற்கு 'வேசைகளுடன் கூடும் ஒழுக்கம்' என்ற பொருளை பஹம்ண்ப்
கங்ஷ்ண்ஸ்ரீர்ய் தருகிறது இதற்குச் சான்றாக,
''பண்பில் காதலன் பரத்தமை நோனாது '' þ மணிமேகலை பாடல் 7 வரி 50
கொடுக்கப்பட்டுள்ளது.
'பரதாரி' என்ற சொல்லிற்கு ""பிறன் மனை விழைவோன்'' என்ற பொருளை பஹம்ண்ப்
கங்ஷ்ண்ஸ்ரீர்ய் தருகிறது இதற்குச் சான்றாக,
''பரிவுடைய பரதாரி '' þசிவதருமோத்தரம்þ மறைஞானசம்பந்தர்þசுவ.149
கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது "பர' என்ற எழுத்துக்கள் ஆண்þபெண் உடலுறவு சம்பந்தப்பட்ட பொருளில் மேற்சொன்ன
வரிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது ''பரற்பகை யுழந்த நோயொடு சிவணி'' என்ற பொருநர் ஆற்றுப்படைப் பாடல் வரிகளை
மீண்டும் பார்ப்போம்.
'பரல்' என்பது பருக்கைக் கல்லைக் குறித்தால், 'பரற்பகை யுழந்த' என்பது பருக்கைக்
கற்களாலானப் பாயில் படுத்து அனுபவிக்கும் துன்பத்தைத் தானே குறிக்க வேண்டும்.
பருக்கைக் கற்களாலானப் பாயில் யார் படுத்தாலும் துன்பத்தை அனுபவித்து தானே ஆக
வெண்டும். உயவல் பெண்டிருக்கு மட்டும் தான் இந்த துன்பம் என்பது போல் விளக்கம்
கொடுப்பது சரியா? அல்லது வேறு எதனைக் குறிக்கும்? இதற்கு விடை காண "உழந்த ' என்றால்
என்ன பொருள் என்று தேடுவோம்.
பருகுவதற்கு நீர் இன்றி கடலில் தவிப்பவனை, ''அருந்துதல் இன்றி அலைக்கடல் உழந்தோன்'
þமணிமேகலை பாடல் 16: வரி 74 என்ற வரி நம் கண்களில் படுகிறது. மனிதரின் புலன்
உணர்த்தும் தாகம் என்ற தேவை நிறைவு செய்யப்படாமல் துன்பப்படுபவனை மணிமேகலை
'உழந்தோன்' என்று குறிப்பிடுகின்றது.
அடுத்துள்ள "சிவணி' என்ற சொல் தொல்காப்பியம் உள்ளிட்ட பல பழந்தமிழ் இலக்கியங்களில்
எனக்கு பழக்கமான சொல் ஆகும். இப்போது வழக்கில் இல்லை. ' நோயொடு சிவணி' என்றால்
நோயுடன் இணைந்து அல்லது பொருந்தி என்று பொருள்படும்.
அடுத்து 'பரற்பெய் பள்ளிப்பாய்' என்ற புறநானூறு சான்றில் வரும் வரிகளைப்
பார்ப்போம். "பெய்' என்ற சொல் 'பரல்' என்ற பருக்கைக் கல்லை "பள்ளிப் பாய்' உடன்
தொடர்பு கொள்ளச் செய்யுமா? இதற்கு விடை காண "பெய்' என்றால் என்ன பொருள் என்று
தேடுவொம். "பெய்தல்' என்பதற்கு 'பொழிதல், வார்த்தல், இடுதல், கொடுத்தல், அணிதல்,'
உள்ளிட்ட பல விளக்கங்களை பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய் தருகிறது. "பெய்யெனப் பெய்யு
மழை' என்ற திருக்குறள் (55) வரிகள் நமக்கு பழக்கமான வரிகளே. எனவே "பெய்' என்ற சொல்
பற்றி நமக்கு வந்துள்ள ஐயம் சரியே.
"உயவல் பெண்டிர்' பற்றி எனது இசை ஆய்வில் ஏன் தேடினேன் என்பதை இங்கு நான்
விளக்குவது சரியாக இருக்கும்.
இசை தொடர்பான எனது தேடலில், 'உயவல் யானை' என்ற சொற்கள் என் கண்களில் பட்டன. ' உயவல்
பெண்டிர்' என்பது பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய் குறிப்பிடுவது போல் விதவையைக்
குறிக்கும் என்றால், 'உயவல் யானை' எதைக் குறிக்கும்? யானைகளில் ஆண் யானை, பெண் யானை
என்ற பிரிவுகள் உண்டு. விதவை யானை என்று ஒன்று கிடையாதே. அப்படியென்றால் 'உயவல்
யானை' எதைக் குறிக்கும்? இதற்கு விடை காண 'உயவல் யானை' பற்றிய சான்றுகளைப்
பார்ப்போம்.
''நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்''þ
ஐங்குறுநூறு பா377: வ 1þ2
இதில் இரண்டாவது வரி புரிந்தால் தான் முதல் வரியின் பொருள் தெளிவாகும். இரண்டாவது
வரியின் புரிதலுக்கு நாம் ஏற்கனவே மேற்கொண்ட முதல் கட்ட புதையல் வேட்டை துணை
புரியும். அதில்
''ஏற்றிய குரல் இளி என்றிரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி,''
என்ற சிலப்பதிகார வரிகளுக்கான பொருளைத் தேடி கண்டுபிடித்தோம்.
யாழ் நரம்பில் சரியாகச் சுருதி சேர்க்கப்பட்ட "ச' (குரல்) இசைச்சுர ஒலியை எழுப்பி,
அதனை ஆதாரமாகக் கொண்டு, அடுத்த நரம்பின் இழுவிசையை (பங்ய்ள்ண்ர்ய்) சரி செய்து, "ப'
(இளி) என்னும் இசைச்சுர ஒலியைச் சரியாக எழுப்ப முடியும். இப்பணியை காதால் "ஒப்பக்
கேட்டு' உணர்ந்தே செய்ய முடியும்.
இதே கருத்தை அகநானூறு கீழ்வரும் வரிகளில் விளக்குகிறது.
''இளி தேர் தீம்குரல் இசைக்கும் அத்தம் '' பாடல் 33: வரி 7
'தேர்தல்' என்பது "ஆராய்தல், தேடுதல்' என்பதைக் குறிக்கும். இதனை பஹம்ண்ப்
கங்ஷ்ண்ஸ்ரீர்ய் நல்ல சான்றுகளுடன் விளக்கியுள்ளது. தீம்குரல் என்பது இனிமையுடன்
ஒலிக்கும் "ச' இசைச்சுர ஒலியைக் குறிக்கும். அப்படியென்றால் "அத்தம்' என்பது சரியாக
சுருதி சேர்க்கப்பட்ட இசைச் சுரத்தை, அதன் சுருதியைக் குறிக்கும். சுருதி என்ற சொல்
பரிபாடலுக்கு முந்தைய பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை.
சுருதி என்ற பொருளில் "அத்தம்' என்ற சொல் பயன் படுத்தப்பட்டது என்பதற்கான சான்று
நமக்கு கிடைத்துள்ளது. இந்த விளக்கம் பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய், டழ்ங் டஹப்ப்ஹஸ்ஹய்
பஹம்ண்ப் ஐய்க்ங்ஷ் உள்ளிட்ட எந்த விளக்க அகராதியிலும் இல்லை. நமது இரண்டாம் கட்ட
புதையல் வேட்டையில் இது கிடைத்துள்ளது. "பரல்' என்ற சொல்லின் பொருளைத் தேடியபோது
இது கிடைத்துள்ளது. அதற்காக "பரல்' வேட்டையை விட முடியுமா? அதனை நாம் தொடர்வோம்.
ஐங்குறுநூறு பாடலில் இரண்டாவது வரி 'இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்'
என்பதாகும். இசை ஒலிக்கும்போது சுரத்தில் ஒலிப்பது கிடையாது. சுருதியில் தான்
ஒலிக்கும். அதாவது இசைச்சுரமானது சுருதியில் ஒலிக்கும்போது தான் இசை உயிர்
பெறுகின்றது. இயம் என்பது யாழ் போன்ற இசைக் கருவியையும், தூம்பு என்பது குழல் வகை
இசைக் கருவியையும் குறிப்பன ஆகும். குழல் வகை இசைக் கருவியில் எழுப்பப்படும்
இசையொலியைப் புணர்ந்து யாழில் எழுப்பப்படும் இசையொலி உயிர் பெற்று ஒலித்தது என்பதே
அந்த இரண்டாவது வரியின் பொருளாகும்.
இப்போது 'நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை' என்ற முதல் வரியின் பொருளைத் தேடுவோம்.
நீர் என்பது தண்ணீரை மட்டும் குறிக்காது. இசை உள்ளிட்ட பல துறைகளில் சம்பந்தப்பட்ட
"பண்பை, தன்மையை"க் குறிக்கும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. மேற்சொன்ன முதல் வரி
தொடர்பாக, "நீர்' என்பது காதல் அன்பின் தன்மையைக் குறிக்கும் என்பதைத் திருக்குறள்
காமத்துப்பால் (1093) விளக்கியுள்ளது. அடுத்து "நசை' என்பது காதலரின் அன்பைக்
குறிக்கும் என்பதைத் திருக்குறள் காமத்துப்பால் (1199) விளக்கியுள்ளது. இதனை
பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய்þஉம் சுட்டிக்காட்டியுள்ளது. "ஊக்குதல்' என்பதன் பொருளாக
"ஆட்டுதல், அசைத்தல், முயலுதல்' ஆகிய விளக்கத்தை பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய் பல
சான்றுகளுடன் விளக்கியுள்ளது. எனவே "உயவல் யானை' என்பது காம உணர்வுக்கு உள்ளான
யானையைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது.
நமது தேடலில் இசையில் சுருதி சேர்த்து உயிர் பெறும் நிகழ்வானது யானையின்
புணர்தலுக்கு ஏன் ஒப்பிடப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பான தேடலில்
கீழ்வரும் சான்று நம் கண்களில் படுகிறது.
"செறிநடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப''þஅகநானூறு பா301:வ 16þ17
'செறிதல்' என்பது புணர்தலைக் குறிக்கும் என்பதைத் திருக்குறள் காமத்துப்பால் (1110)
விளக்கியுள்ளது. 'பிடி' என்பது பெண் யானையையும், "களிறு' என்பது ஆண் யானையையும்
குறிப்பன ஆகும். 'குறுநெடுந் தூம்பு ' என்பது ஒரு குழல் வகை இசைக்கருவியாகும்.
அதில் எழும் இசையொலியை அடிப்படையாகக் கொண்டு 'முழவு ' என்னும் தாள இசைக்கருவி
சுருதி சேர்த்து ஒலித்தது (புணர்ந்து இசைப்ப) என்பது இதன் பொருளாகும். குழலை
அடிப்படையாகக் கொண்டு முழவு போன்ற தாள இசைக்கருவிகளும் சுருதி சேர்த்து இசைத்ததற்கு
பழந்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளதை, வெளியிடப்பட்ட எனது ஆய்வுக்
கட்டுரைகளில் நான் சுட்டிக் காட்டியுள்ளேன்.
மேற்கத்திய இசையில் சுருதி சேர்க்க "சுருதிக் குழல் '(டண்ற்ஸ்ரீட் டண்ல்ங்) என்னும்
குழல் வகை இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. இப்போது ஐங்குறுநூறு பாடலின் 'இயம்
புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்' என்ற இரண்டாவது வரியைப் பார்ப்போம். தூம்பு
என்னும் மூங்கிலாலான குழல் வகை இசைக்கருவி (பஹம்ண்ப் கங்ஷ்ண்ஸ்ரீர்ய்) எழுப்பும்
இசையொலியை அடிப்படையாகக் கொண்டு, யாழில் சுருதி சேர்க்கப்பட்டு இசை உயிர் பெற்று
ஒலித்தது என்பதே இதன் பொருளாகும்.
இசையில் சுருதி சேர்த்து உயிர் பெறும் நிகழ்வானது யானையின் புணர்தலுக்கு ஏன்
ஒப்பிடப்பட்டது என்ற கேள்விக்கான விடையைக் காண, மேலே குறிப்பிட்ட சுருதி சேர்த்தல்
பற்றிய கீழ்வரும் தகவல் துணை புரியும்.
குழல் இசையை அடிப்படையாகக் கொண்டு யாழில் சுருதி சேர்க்கும் புணர்தல் நிகழ்வானது
மிகவும் நுணுக்கமான செயலாகும். யாழ் நரம்பினை மீட்டி, எழும் ஒலியை, குழலின்
இசையொலியுடன் காதால் கேட்டு, ஒப்பிட்டு நரம்பின் இழுவிசையை (பங்ய்ள்ண்ர்ய்) சரி
செய்ய வேண்டும். சரியான சுருதியில் யாழ் நரம்பின் இசையொலி ஒலிக்கும் முன்,
இனிமையற்ற (ஈண்ள்ள்ர்ய்ஹய்ஸ்ரீங்) ஒலிகளைக் கேட்டு, அதனைக் குறைக்கும் வகையில்
இழுவிசையை (பங்ய்ள்ண்ர்ய்) சரி செய்து இனிமையான (இர்ய்ள்ர்ய்ஹய்ஸ்ரீங்) இசை ஒலியைப்
பெற வேண்டும். இதில் குழல் செயல் குறைவான (டஹள்ள்ண்ஸ்ங்) பணியையும், யாழ்
செயல்மிக்க (அஸ்ரீற்ண்ஸ்ங்) பணியையும் செய்கின்றன. இச்செயல் ஆண் யானை, பெண் யானைப்
புணர்தலுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
காமத்திற்குள்ளான ஆண் யானையும் பெண் யானையும் உடனே புணர்தலில் ஈடுபடாது. இரண்டும்
அருகருகே நடந்து, தத்தம் துதிக்கைகளால் ஒன்றுடன் இன்னொன்று முறுக்கிக் கொள்ளும்.
தொடர்ந்து இரு யானைகளும் ஒன்றையொன்று நுகர்ந்து கொள்ளும். இது நீண்ட நேரம் நடந்து
முடிந்த பின்னரே
, பெண் யானை முதுகின் மீது ஆண் யானை தனது முன்னிரண்டு கால்களைத் தூக்கி வைத்து,
மிகவும் கவனமாகப் புணர்தலில் ஈடுபடும். குழலைப் போல் பெண் யானைச் செயல் குறைவான
(டஹள்ள்ண்ஸ்ங்) பணியையும், ஆண் யானைச் செயல்மிக்க (அஸ்ரீற்ண்ஸ்ங்) பணியையும்
இப்புணர்தலில் செய்கின்றன. (கூடுதல் தகவலுக்கு
ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ல்ட்ஹய்ற்ஞ்ஹப்ப்ங்ழ்ஹ்.ஸ்ரீர்ம்).
குழல் எழுப்பும் இசைச்சுர ஒலியை அடிப்படையாகக் கொண்டு, யாழில் அல்லது முழவில்
சுருதி சேர்க்கும் செயல் இசையில் "நிறுத்தல்' என்று அழைக்கப் பட்டதற்கு பல
சான்றுகள் உள்ளன. அதில் ஒன்று வருமாறு.
''பண் யாழ் நிறுமின்: கண் விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின்''
þ புறநானூறு பா 152: வ 14þ15
துளைகள் கொண்ட குழலே கண் விடு தூம்பு ஆகும். அதன் இசையொலியை அடிப்படையாகக் கொண்டு,
யாழில் எழுப்பப்படும் பண்ணிற்கான இசைச்சுரங்களைச் சுருதி சேர்த்து இசை எழுப்பும்
செயலானது "களிற்றுயிர் தொடுமின் ' என்ற நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
இப்போது நாம் புதையல் வேட்டையின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம்.
காமத்திற்குள்ளான உயவல் யானையைப் பார்த்தோம். புறநானுறு சான்றில் 'பரற் பெய்
பள்ளிப்பாய் இன்று வதியும் உயவல் பெண்டிர்' பற்றியும் நாம் பார்த்தோம். 'பரல்'
என்பது பருக்கைக் கல்லைக் குறித்தால், பருக்கைக் கற்களாலானப் பாயில் யார்
படுத்தாலும் துன்பத்தை அனுபவித்து தானே ஆக வெண்டும். உயவல் பெண்டிருக்கு மட்டும்
தான் இந்த துன்பம் என்பது சரியல்ல என்பதையும் பார்த்தோம்.
"பரத்தனம்' மற்றும் "பரதாரி' என்ற சொற்கள் தெரிவிக்கும் பொருளுடன் ஒப்பிட்டு
பார்க்கும் போது "பரல்' என்பது புணர்தலோடு தொடர்புடையச் சொல்லாக இருக்க வேண்டும்
என்பது தெரிகிறது. பொருநர் ஆற்றுப்படைச் சான்றில் வரும் 'பரற்பகை யுழந்த நோயொடு
சிவணி'' என்பதில் உள்ள "உழந்த' என்ற சொல் மனிதரின் புலன் உணர்த்தும் தாகம் என்ற
தேவை நிறைவு செய்யப்படாமல் துன்பப்படுதலைக் குறிக்கும் என்பதையும் நாம் பார்த்தோம்.
காமம் என்பதும் புலன் உணர்த்தும் ஒரு வகை தாகம் ஆகும். புணர்தலுக்கு வழியின்றி
(பரற்பகை) தவிப்பதையே (உழந்த) இச்சான்று உணர்த்துகிறது.
எனவே புறநானூறு சான்றில் வரும் 'பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும் உயவல்
பெண்டிர்' என்பதில் உள்ள "பரல்' என்ற சொல் பருக்கைக் கல்லைக் குறிக்காது என்பதும்,
அச்சொல் புணர்தலோடு தொடர்புடைய சொல் என்பதும் இந்த புதையல் வேட்டையில் தெளிவானது,
இசை அறிவியல் அடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களில் நாம் தொடங்கிய புதையல்
வேட்டையில் இசை தொடர்பற்ற "பரல்' என்ற சொல் பற்றிய புதிய தகவலைப் பெற்றோம். இடையில்
சுருதி என்ற பொருளில் அத்தம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதையும் கண்டுபிடித்தோம்.
இத்தகைய புதையல் வேட்டையைத் தொடங்குவதற்கு நமக்கு இருக்கும் தமிழ்ப் புலமையின்
அளவைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. பகுத்தறிவு, திறந்த மனது ஆகிய இரண்டு
விளக்குகளின் துணையுடன் புதையல் தேடலில் எந்தக் கட்டத்திலும் ஆர்வம் இழக்காமல்
உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எனது ஆய்வுகளே சாட்சியமாகும். தமிழின்
எதிர்காலம் இத்தகைய புதையல் வேட்டை முயற்சிகளில் அடங்கியிருப்பதாக நான்
கருதுகிறேன்.
இந்த இடத்தில் ஒன்றை நான் வலியுறுத்த விழைகிறேன். அறிவியல், பொறியியல், மருத்துவம்,
உயிரியல், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஏதாவது ஒன்றில் உங்களுக்கு
ஆர்வமும் ஏற்கனவே போதுமான அறிவும் (Knowledge ) இருந்து அதை குவியப்படுத்தி
பழந்தமிழ் இலக்கியங்களில் உங்களின் புதையல் வேட்டையைத் தொடங்கினால் தான், அந்தத்
துறைக்கான ஆழ்ந்த தமிழ்ப்புலமை (அத்தகைய தமிழ்ப்புலமை தமிழ்
மொழிப்புலமையுள்ளவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை) நீங்கள் அறியாமலேயே உங்களிடம்
வளரும். அவ்வப்போது உங்களுக்கு கிடைக்கும் புதையலானது, சொற்களால் விளக்கமுடியாத
இன்பத்தை உங்களுக்கு கொடுத்து, உங்களின் ஆர்வத்தையும் உழைப்பையும் அதிகப்படுத்தும்.
வெல்க உங்களின் புதையல் தேடும் முயற்சி.
pannpandi@yahoo.co.in
Vembian.Tholkappiyan@edfenergy.com |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|