விடுதலைப்போரில் நேதாஜி
- முனைவர் சி. சேதுராமன் , இணைப் பேராசிரியர் ,மா. மன்னர்
கல்லூரி , புதுக்கோட்டை -
பாரதத்தாய் ஆங்கிலேயர் கையில் சிக்கித் தவித்த காலம்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால் பாரத மக்கள் சொல்லொணாத்
துயரடைந்தனர்.
வெள்ளையர்களை நாட்டில் இருந்து விரட்டுவதற்காக இந்திய
விடுதலைப்போர் தொடங்கிய காலம்.
அந்த எழுச்சி மிக்க சூழ்நிலையில்தான் இந்திய
விடுதலைப் போராட்டத்தின் விடிவெள்ளியாகிய நேத்தாஜி 1897-ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் 23
-ஆம் நாள் கட்டக்கில் பிறந்தார். இநதிய அன்னை தன் கைவிலங்குகளை
அகற்றத் தவப்புதல்வன் ஒருவன் தோன்றிவிட்டான் என்று பேருவகை
கொண்டாள்.
‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு‘ என்று கருதிய நேத்தாஜி 1921-ஆம்
ஆண்டு ஸீ.ஆர்.தாஸை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு
விடுதலைப்போரில் குதித்தார். வங்காளத்தில் சத்தியாகிரக கிளர்ச்சி
தோஜியின் வருகையால் தீவிரம் அடைந்த்து. வங்காள தேசம் முழுவதும்
சுதந்திரக்கனலை பரப்பினார். அதனால் ஆங்கில அரசு 1921-ஆம் ஆண்டு
டிசம்பர் மாத்த்தில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸை கைது செய்த்து.
நேதாஜிக்கு
ஐந்து மாதம் கடுங்காவல் தண்டனை வித்திக்கப்பட்டது. தேசத்திற்காகச்
செய்யும் தொண்டையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாக்க் கொண்ட நேதாஜி
மகாத்மா காந்தி, நேருஜி ஆகியாரைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன்
சிறைசென்றார்.
“என்று தணியும் இநத சுதந்திர தாகம்
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்“
என்ற பாரதியின் கூற்றிற்கு இணங்க நேதாஜி நாடு விரைவில் விடுதலைகாண
வேண்டும் என்று துடித்தார். 1922-ஆம் ஆண்டிலேயே ‘இளைஞர்
கட்சியை‘த் துவக்கி மக்களுக்குத் தேசீய உணர்வைஊட்டி வந்தார்.
1940-ஆம் ஆண்டில் திரிபுரா காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு நேத்தாஜி
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரிபுரா காங்கிரஸ் கூடியபோது ஆறுமாத்திற்குள் பிரிட்டன்
இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கவேண்டும். இல்லையேல்
பிரிட்டனுக்கு எதிராக
மக்களைத் தயாரிக்க வேண்டும் என்று நேத்தாஜி கூறினார்.
பெருந்தலைவர்கள் யாரும் இதற்கு ஒத்துழைக்காத்தால் நேதாஜி
தலைமைப்பதவியை
உதறினார்.
கல்ககத்தாவில் ஹால்வெல் என்ற ஆங்கிலேயனின் சிலையை அகற்ற வேண்டும்
என்று நேதாஜி போராடியதால் ஆங்கில அரசு அவரைக் கைது
செய்த்து. நேதாஜி சிறையில் இருந்த போது வெளிநாடுகளுக்குச் சென்று
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டு ம் என்று
கருதினார்.
சிறையிலிருந்து விடுதலையானதும் 1941-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள்
ஜெர்மனிக்குப் புறப்பட்டு மார்ச் 28-ஆம் நாள் ஜெர்மனிக்கு வந்து
சேர்ந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் நேதாஜிக்கு மிகுந்த மரியாதை
அளித்தார்.
இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காக ஜெர்மனி,
இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு
ஜெர்மனியிலேயே இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார்.
அச்சமயத்தில் ஜப்பானியருக்கும், பிரிட்டிஷாருக்கும் போர்
நடந்துகொண்டிருந்த்து. இப்போரில் பிரிட்டிஷார் தோற்று இந்திய
வீர்ர்களை யுத்த
கைதிகளாகச் ஜப்பானியரிடம் ஒப்படைத்தனர்.
இதனை அறிந்த நேதாஜி 1943-ஆம் ஆண்டு டோக்கியோவிற்குச் சென்று இந்திய
ராணுவ்வீர்ர்களை ஒன்று திரட்டினார். அங்கு சுதந்திர இந்திய
அரசாங்கத்தை அமைத்துத் தாமே பிரதம மந்திரிப் பொறுப்பையும் ஏற்றார்.
சர்காரின் தலைமை அலுவலகம் முதலில் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு
மாற்றப்பட்டது.
நேதாஜியால் நிறுவப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களும்,
சிறுவர்களும்இடம்பெற்றிருந்தனர். மகளிர் பகுதி, ‘ஜான்சி ராணிப்
படை‘
எனப்பட்டது. படைகளுக்குமகாத்மா, ஆஸாத் போன்ற தலைவர்களின்
பெயர்கள்இடப்பட்டன. “ ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் மென்று ஆடுவோமே“ என்ற பாரதியின்
தீர்க்கதரிசனத்தைப்போல சுதந்திரம் அடைழவதற்கு முன்பே 1941-ஆம்
ஆண்டு ஜனவரி
26-ஆம் நாள் சுதந்திர தினத்தன்று நேதாஜி இந்திய தேசியபடையைக்
கொண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார்.
மார்ச் மாதம் ராணுவம் தாய்நாட்டுக்குள் புகுந்து ‘தாயே உனது
அடிமைவிலங்குகளை உடைத்தெறியும் வரைஉறங்க மாட்டோம் என்று
சூளுரைத்த்து.
தேசியராணுவத்திற்கும், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திற்கும் நடந்த
போரில் பிரிட்டிஷ் இந்திய படை படுதோல்வி அடைந்த்து. மார்ச் 21-ஆம்
நாள்
ஜான்சி ராணிப்படையினரின் எதிரிபாராத தாக்குதலால் பிரிட்டிஷ் படைகள்
எல்லோரும் சரணடைந்தார்கள். மார்ச் 31-ஆம் நாள் தேசிய ராணுவம் மணிபுரிசமஸ்தானத்தில் புகுந்து தென் பாகம் முழுவதையும்
கைப்பற்றியது. மே 10-ஆம் நாள் கோஹிமா நகரில் தேசிய ராணுவம்
புகுந்த்து.
1944-ஆம் ஆண்டு ஜுன்மாதம் 25-ஆம் நாள் பிரிட்டிஷ் படை கோஹிமாவை
மீட்டுக் கொண்டன. பின்பு நேதாஜியின் உத்தரவாலும்இயற்கையின்
சதியாலும் தேசிய ராணுவம் பின்வாங்க நேரிட்டது.1945-ஆம் ஆண்டு
ஏப்ரல் 24-ஆம் நாள் இந்திய தேசிய ராணுவத்தின் தளபதி நேத்தாஜி
ரங்கூனிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறுமுன், “வெளிச்சம்
பிறப்பதற்குமுன் இருட்டடைகின்றது என்பதைநம்பும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா கட்டாயம் சுதந்திரம் அடையும். அதனை உங்களுக்கு
உரித்தாக்குகிறேன். நேதாஜி போன பிறகும் இந்திய ராணுவ வீர்ர்கள்
பர்மாவில்
போர்புரிந்து இறுதியில் ரசணடைந்தார்கள். பர்மாவில் இருந்து நேதாஜி
வெளியேறிய பின்னரும் சைகோன் வானொலி மூலம் இந்திய மக்களுக்கு
உரைநிகழ்த்தினார்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 16-ஆம் நாள் நேதாஜி ஜப்பானிய அரசாங்கத்துடன்
பேச்சு நடத்துவதற்காக விமானத்தில் செல்லும்போது விமானம்
விபத்துக்குள்ளாகியது. அதில் நேத்தாஜி படுகாயமடைந்தார். உடனே அவர்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப்
பலனிளிக்காத்தால்
அவர்இறந்த்தாக்க் கூறப்படுகின்றது. நாட்டுக்குழைத்த நல்லவர்,
வீரத்தின் விளைநிலம், எளிமையின் இருப்பிடம், இந்தியத்தாய்
பெற்றெடுத்த
ரத்திருமகன் நேத்தாஜி அவர்கள் வைத்துள் வாழ்வாங்குவாழ்ந்து
வானுறையும் தெய்வங்கள்ள் ஒனாறாகிவிட்டார்.
E. Mail: Malar.sethu@gmail.com