-ஆல்பர்ட்
(அமெரிக்கா) -
விடுதலைப்புலிகளின்
தத்துவாசிரியரும் ஆலோசகருமாய் செயல்பட்டுவந்த திரு.அன்ரன்
பாலசிங்கம் லண்டனில் இன்று காலாமானார். புற்றுநோயால்
பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த
நிலையில் இலண்டனில் நியூமோல்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
சுமார் 35 வருடகால நீரிழிவு நோய், இரண்டு சீர்கெட்ட
சிறுநீரகங்களுக்குப் பதிலாகத் தானமாகப் பெற்ற மாற்று சிறுநீர கம்,
இரத்த அழுத்தம், இருதய நோய் என்று பல்வேறு மருத்துவ நெருக்கடிகளை
எதிர் கொண்டிருந்த பாலசிங்கத்தை திடீரெனத் தாக்கி உடல் எங்கும்
பரவியிருக்கும் புற்றுநோய் மோசமாகப் பாதிப்பை ஏற்படுத்தியது.
புற்றுநோய்ப் பாதிப்புக்கு சிகிச்சை பெறு வதில்லை, நோவுத் தடுப்பு
மருந்து மட்டும் பயன்படுத்துவது என பாலசிங்கம் தீர்மானித்துள்ள
நிலையில் அவரது உடல்நிலை தேறுவதற்கு இனி வாய்ப்பேயில்லை என மருத்துவ
வட்டாரங்கள் கைவிட்டு விட்ட நிலையில் தனது விதியை மனநிறை வோடும்,
மனத் துணிவோடும் எதிர்கொள்ளும் தயார் நிலையில் அவர் இருந்ததை அவ
ருடன் உரையாடிய நண்பர்கள் உணர்ந்திருந்தனர். தன்னைவிட தனது
தமிழ்த்தேச மக்களின் எதிர்காலம் பற்றிய ஏக்கமே அவரது பேச்சில்
வார்த்தைக்கு வார்த்தை பிரதி பலிப்பதையும் எப்போதும் அவதானிக்க
முடிந்தது.
மருந்து, மயக்கம், தூக்கம் என்று அவரது நேரத்தில் பெரும்பகுதி
கழிந்ததால் தினசரி தாம் சந்தித்து உரையாடும் ஓரிருவருடனான
கலந்துரையாடல்களையும் அவர் மெல்லமெல்லக் குறைத்துவந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது
அன்ரன் பாலசிங்கத்தின் வயிற்றிலும் ஏனைய உடற்பகுதிகளிலும் புற்றுநோய்
வேகமாகப் பரவி வருவதனால் அடிக்கடி தொடர் உபாதைக்கு அவர் உள்ளாகி வந்த
நிலையில் தொடர்ந்து பேச முடியாமல் மூச்சிரைத்து சிரமப்படுகின்ற
சூழலில் கடந்த சில வாரங்களாக பெரிதும் அவதிப்பட்டு
வந்தார். அச்சமயங்களில் நோவு தடுப்புக்கான மயக்க மருந்துகள் மட்டும்
அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் சில மணி நேரம் தொடர்ந்து அவர்
மயக்கத்திலும் தூக்கத்திலும் ஆழ்ந்து இருந்தார்.இந்தச் சிரமங்களுக்கு
மத்தியிலேயே சுமார் மூன்று மணிநேரம் எரிக் சொல்ஹெய் முடன் அவர்
மனம்விட்டுப் பேசியிருக்கிறார்.
இலங்கையில் தற்போதைய இனமோதல் பதற்றம், அமைதி முயற்சிகளுக்கான
வாய்ப்பு, களநிலைவரங்கள், சர்வதேச கருத்து நிலைப் பாடு போன்ற
இன்னோரன்ன விடயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை கலந்தனர் எனத்
தெரிகின்றது. இதுதான் அவரது நீண்ட கடைசி உரையாடலாக இருந்தது.
albertgi@gmail.com