இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2007 இதழ் 85 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!
தட்ஸ்தமிழ்.காம் டிசம்பர் 15, 2006!
பிரபாகரன் உருக்கம்! கருணாநிதி அஞ்சலி!

விடுதலைப் புலிகளின் தலைவருடன் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம்..தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி...கிளிநொச்சி: ஆண்டன் பாலசிங்கம் மறைவின் மூலம் ஈழத்தின் ஒளி அணைந்து விட்டது என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார். பாலசிங்கம் மறைவு குறித்து பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் வலிமையில் பாலசிங்கத்தின் பங்கு மகத்தானது. நமது மூத்த உறுப்பினர் அவர். சிறந்த சிந்தனையாளர். தத்துவஞானி. எல்லாவற்றையும் விட எனக்கு உற்ற தோழராக விளங்கியவர். எனக்கு சக்தியையும், ஆற்றலையும் கொடுத்தவர். எனது துயரங்கள், வேதனைகளை பகிர்ந்து கொண்டவர். புலிகள் அமைப்புக்காக அரசியல் மற்றும் தூதரக ரீதியில் பலம் வாய்ந்த குரலாக ஒலித்தவர். யாரிடமிருந்து நான் அறிவுரைகள், ஆதரவுகளைப் பெற்றேனோ அவர் இப்போது நம்மிடம் இல்லை. அவரது இழப்பு எனக்கும், எனது மக்களுக்கும் ஈடு கட்ட முடியாத இழப்பாகும். அவரது வாழ்க்கை மிகவும் குறைந்த ஆயுளைக் கொண்டதாக இருக்கலாம். நமக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் மறைந்துள்ளார். இந்த துயரத்தை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் வரவில்லை. புலிகள் அமைப்பின் போராட்டம் தொடங்கியபோது முதல் முறையாக நான் அவரை சந்தித்தபோது அவருக்கும் எனக்கும் இடையே பரஸ்பர புரிதல் உணர்வு இருந்தது. அது பின்னர் நல்ல நட்பாக மாறியது. இருவரும் இணைந்தே சிந்தித்தோம், செயல்பட்டோம்.

தினசரி அனுபவங்கள் எங்களை நல்ல நண்பர்களாக மாற்றின. சாதாரண மனித உறவுகளுக்கு அப்பாற்பட்டது எங்களது நட்புறவு. நான் பாலசிங்கம் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தேன். ஒரே குடும்பமாக நமது இயக்கத்தினரோடு சேர்ந்து வாழ்ந்தவர் பாலசிங்கம். அவர் சாதாரண மனிதர் அல்ல. மிகப் பெ>ய துயரம் சூழ்ந்தாலும் கலங்காத சித்தத்தை உடையவர். உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதும் கூட அவர் கலங்காமல் இருந்தார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வந்தபோதும் பயப்படாமல் இருந்தார். அவரது ஆன்மாவின் பலம்தான் எனக்கு மிகுந்த உந்து சக்தியாக இருந்தது. விடுதலைப் புலிகள் வரலாற்றில் பாலா அண்ணனுக்கு முக்கிய இடம் உண்டு. நமது தூதரக ரீதியிலான முயற்சிகளுக்கு துணையாக நின்றவர். அவரது சேவைகளுக்கு நான் தலை வணங்குகிறேன். உலக அரங்கில் நமது தாயக மக்களை கௌவரத்துடன் நடமாட வைத்தவர் பாலா. பாலசிங்கத்திற்கு 'நாட்டின் குரல்' என்ற பட்டத்தை நான் அளிக்கிறேன். பாலசிங்கம் மறைந்து விட்டாலும் நமது சிந்தனையில் அவர் என்றும் வாழ்வார் என்று கூறியுள்ளார் பிரபாகரன். இந் நிலையில் பாலசிங்கம் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் 3 நாள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள புலிகள் இயக்க அலுவலகங்களில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

கருணாநிதி இரங்கல்:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவரும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரும், இலங்கையில் அமைதியை விரும்பியவரும், நார்வே நாட்டினரிடமும் நட்புணர்வு கொண்டு, நாளும் உழைத்தவரும், அறிவிற் சிறந்தவரும், ஆற்றலாளரும், அன்பின் உருவமாகத் திகழ்ந்தவரும், இறுதியாக இமைக் கதவுகள் மூடும் வரையில் ஈழத்தின் சுயமரியாதை சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என் இனிய நண்பர் பாலசிங்கம். அவரது மறைவுச் செய்தியை பல காலம் அவருடன் பழகிய என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை இழந்து தவிக்கும் நண்பர்களுக்கும் அவரது அன்புத் துணைவியாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

நெடுமாறன், வீரமணி இரங்கல்:
ஆண்டன் மறைவு குறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழருமான பேராசிரியர் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கம் முதல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தன்னலமற்ற பணிபுரிந்தவர். விடுதலைப் புலிகளின் சார்பில் அனைத்து சமரசப் பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்று ஈழத் தமிழர்களுக்காக உறுதியாக வாதாடியவர். அவரின் மறைவு மூலம் உருவான வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த காலத்திலும் கொஞ்சமும் கலங்காது இறுதி மூச்சு வரை கடமையாற்றியவர் அவர். அவருடைய மறைவினால் வருந்தும் அவருடைய துணைவியார் ஏடேல் அம்மையார் அவர்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கி.வீரமணி இரங்கல்:
இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், ஈழப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு நெருங்கிக் கொண்டுள்ள நிலையில் பாலசிங்கத்தின் மறைவு நிகழ்ந்திருப்பது, ஈழத் தமிழர்களின் துயரத்தை மேலும் இரு மடங்காக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

வைகோ இரங்கல்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் பயணத்தின் மிக முக்கிய காலகட்டத்தில் விடுதலைக் குயிலை மரணக் கழுகு கொத்திப் பறித்து விட்டது. தமிழினம் தனது பொக்கிழத்தை இழந்து விட்டது. தமிழீழம் தனது வீரமகனை இழந்து விட்டது என்று கூறியுள்ளார்.

திருமாவளவன் இரங்கல்:
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மனித நேய அடிப்படையிலான ஜனநாயக பாதுகாப்புக்கானது என்று சர்வதேச அரங்கில் நிலை நாட்டிய வல்லமை வாய்ந்த பாலசிங்கத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கு எமது வீர வணக்கம் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த் இரங்கல்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண நீண்ட காலமாக உழைத்த ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவு இலங்கைத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும். பாலசிங்கத்தை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெ>வித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

உதயன்.காமிலிருந்து சில பகுதிகள்!
சாவை வரவேற்ற சாமன்யர் பாலா!
- ந.வித்தியாதரன்

அண்டன் பாலசிங்கம் தன் துணைவியார் அடெலுடன்.."சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணியவேண்டும். அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக அமையும்'' என்று தாம் முன்னர் உரைத்தபடியே சாவை அரவணைத்தவர் தத்து வாசிரியர் பாலசிங்கம். தமது சாவை நிதர்சனத்தோடு எதிர்கொண்டவர் மதியுரைஞர் பாலசிங்கம். கடந்த மூன்றுவார காலமாக சாவுத் தேவனை வரவேற்க அவர் திடத்தோடும், தெளிவோடும், முழுப் பிரக்ஞையுடனும் தயாராக இருந்தமையை அக்கால கட்டத்தில் அவரது லண்டன் இல்லத்தில் அவருக்கு அருகில் மிக நெருக்கமாக அமர்ந்திருந்து மனம்விட்டு அவ்வப்போது நீண்ட நேரம் அவருடன் உரையாடியதன் மூலம் நிதர்சனமாக என்னால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. அவரது வாழ்வின் எஞ்சிய காலம் நான்கு வாரங்கள் முதல் ஆறு வாரங்கள் வரைதான் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவலை புன்முறுவலோடு என்னுடன் அவர் பகிர்ந்த போதும்கூட சாவின் பயம் அவரை எட்டியதில்லை.

""சாவுக்கு நான் பயப்படவில்லை. அதன் பாதையில் வரும் நோவுக்குத்தான் அஞ்சுகிறேன்'' என்று தனக்கே உரிய சொல்லாடலோடு அவர் கூறிச் சிரித்ததை என்னால் சகித்துக்கொள்ளமுடிய வில்லை. சாவுபற்றி அவரது கருத்தை "விடுதலை' என்ற தமது நூலில் அவர் பதித்துள்ளதை நான் நினைப்பூட்டியபோது அந்தக் கருத்தை ஆங்காங்கே தொட்டு மீண்டும் அவர் வலியுறுத்தினார்.

அவரின் தத்துவக் கட்டுரைகள் அடங்கிய "விடுதலை' நூலில் தத்துவாசிரியரான கைகேடகரை மேற்கோள்காட்டி பாலா எடுத்துரைக்கின்றார். அதையே தமது சாவுப் படுக்கையிலும் அவர் பகிர்ந்துகொண்டார். தமது மறைவுக்கு முன்னர் சாவுபற்றி அவர் குறிப்பிட்ட அம்சங்கள் சாவுவேளையிலும் அவரது கருத்தில் நிலைத்திருந்ததை என்னால் ஆழமாக உணரமுடிந்தது.
"விடுதலை' நூல் ஊடாக அவர் பிரதி பலித்த சாவின் நிதர்சனம் இதுதான்: காலத்தில் முகிழ்கிறது வாழ்வு. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே விரியும் காலத்தில் நிலைக்கிறது வாழ்வு. இந்தக் காலம்தான் மனித இருப்பின் எல்லைக் கோட்டை இடுகிறது. இருத்தலின் எல்லைக்கு அப்பால் இல்லாமை இருக்கிறது. இல்லாமையை, அதாவது இருத்தலிலிருந்து இல்லாமல் போவதை, சாவு என்று சொல்கிறான் மனிதன். காலமும், நிலையாமையும், சாவும் மனித இருத்தலின் மெய்யுண்மைகள். இருப்பு என்பது காலத்தின் பாதையால் நடைபெறும் பயணம். இந்தப் பயணதில் நான் ஒரு கணமும் தரித்து நிற்கமுடியாதவாறு காலம் என்னை நகர்த்திச் செல்கிறது. நான் காலத்தில் மிதந்துகொண்டு பயணிக் கிறேன். நடந்து முடிந்தது இறந் தகாலமாகவும், நடக்கப்போவது எதிர்காலமாகவும், நடந்துகொண்டிருப்பது நிகழ்காலமாகவும் எனக்குத் தென்படுகின்றன. இறந்தகாலம் செத்துப்போனாலும், எனது அனுபவத்தின் நிழலாக அது என்னை சதா பின்தொடர்கிறது. எனது வாழ்வனுபவம் எப்பொழுதுமே நிகழ்காலமாகவே கட்டவிழ்கிறது. எதிர்காலமானது, இறந்தகாலமாக மாறும் நொடிப் பொழுதுகளாக நான் நிகழ்காலத்தை அனுபவிக்றேன். நிகழ்கால அனுபவமே நிதர்சமானது; மெய்மையானது. ஆனால், மனிதன் நிகழ்காலத்தில் வாழாமல், எதிர்காலம் பற்றியே சிந்திக்கிறான். மனித ஆசைகளும், எதிர்பார்ப்புகளும், திட்டங்களும் எதிர்காலத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால், மனித மனமானது எதிர்காலத்தை நோக்கியதாக, எதிர் காலத்தில் நிலைத்துப் போகிறது. செத்துப்போன காலத்தில் புதையுண்டுபோகாமலும், எதிர்காலத்தையே சதா எண்ணிக் கிடக்காமலும், நிகழ்காலத்தில் வாழ்வதுதான் அர்த்தபூர்வ மானது. காலத்தில் நிகழும் எனது பயணம் சாவுடன் முடிவடைகின்றது. நிலையற்ற இந்த உலகில், நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு. எனது உயிர்ப்பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன் பிறப்பு எடுத்திருக்கிறது. எனது இருத்தலின் ஒவ் வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர் கொண்டு வாழ்கிறேன். எனது சாவை நான் பட்டறிந்துகொள்ள முடியாது. இந்த உலகில் அதுமட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது. எனது அனுபவத்தின் முடிவாக, எனது இருத்தலின் முடிவாக, நான் இல்லாமல் போகும் இறுதிக்கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது.

என்னைச் சூழ எங்கும் சாவு நிகழ்கிறது. மற்றவர்களது சாவை நான் நித்தமும் சந்திக்கிறேன். எனக்கு வேண்டியவர்கள், நான் பற்றுக்கொண்டவர்கள் மடியும்போது, துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. மனித இருப்பின் மிகவும் சோ மான, துன்பமான நிகழ்வாக சாவு சம்பவிக்கிறது. எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் சற்றும் எதிர்பாராத சந்தர்ப் பத்தில், சாவு எனது கதவைத் தட்டலாம். திடீரென, இருப்பிலிருந்து இல்லாமையென்ற சூன்யத்துக்குள் நான் தூக்கிவீசப்படலாம். எனது இருப்பின் நிலையாமை எனக்குத் தெரிந்தும் சாவின் நிச்சயத்து வத்தை நான் உணர்ந்தும் நான் அதுபற்றிச் சிந் திக்கத் துணிவதில்லை. மனித பயங்கள் எல்லாவற்றிற்கும் மூலபயமாக, தலையான பயமாக, மரண பயம் எனது ஆழ் மனக்குகைக்குள் ஒளிந்து கிடக்கிறது. நான் அதை அடக்கி, ஒடுக்கி, என் நனவு மனதிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறேன். சாவு என்பது மனித இருப்பு நிலையின் தவிர்க்கமுடியாத உண்மை என்கிறார் கைகேடகர். அதை மறுப்பதும், அதற்கு அஞ்சுவதும், அதிலிருந்து ஓடி ஒளிந்துகொள்ளமுயல்வதும் அபத்தமானவை. சாவின் பிடியிலிருந்து எவருமே தப்பிவிட முடியாது. அது வாழ்வின் ஒரு நிகழ்வாக என்றோ ஒரு நாள் எதிர்கொள்ளப்படவேண்டியது. சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணியவேண்டும். அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக அமையும். என்று குறிப்பிட்டிருக்கின்றார் பாலா.

ஏனைய இணைப்புகள்:

Anton Balasingham: The Early Years of Life
December 15th, 2006 By D.B.S. Jeyaraj
Praba dubs Bala Annai as Voice of the Nation (Thesathin Kural)
Anton Balasingham

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner