| 
23 May, Saturday 2009  Munk center, 1 
Deronshire place, Toronto University அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள்! அ.முத்துலிங்கம் இலக்கியப்பணி- ஒரு 
நிகழ்வு
 
  உலகத் 
தமிழ்ர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் அ.முத்துலிங்கம். 
அறுபதுகளிலிருந்து ஈழத்து இலக்கியத்தில் கவனம் பெற்ற படைப்பாளியான இவர், பணி 
நிமித்தம் புலம்பெயர்ந்து பல நாடுகளில் பணியாற்றியபின், மீண்டும் முழுமூச்சுடன் , 
உத்வேகத்துடன் எழுதத் தொடங்கி மிகுந்த கவனத்தைப் பெற்ற படைப்பாளியாகத் 
திகழ்கின்றார். தனது கதை சொல்லும் பாணியினால் அனைவரது கவனத்தையும் பெற்ற எழுத்தாளர் 
அ.முத்துலிங்கத்தின் ஐம்பதாண்டு கால இலக்கியப் பணியினைக் கெளரவிக்கும் முகமாகக் 
காலம் சஞ்சிகை விழாவொன்றினை எதிர்வரும் 23ந் திகதி எடுக்கின்றது. அதன் விபரங்கள் 
வருமாறு: 
 23 May, Saturday 2009 (5pm- 7pm)
 Munk center, 1 Deronshire place, Toronto University
 
 சிறப்பு பேச்சாளர்: கருணாகர மூர்த்தி (எழுத்தாளர்)
 சிறப்பு விருந்தினர்: எம்.ஏ. நுஃமான் (தமிழ்துறைத் தலைவர், பேராதனை 
பல்கலைக்கழகம்). வாழும் தமிழ் 
புத்தகங்களின்; கண்காட்சியும் இடம் பெறும் (12pm-7pm)
 காலம் / kalam@tamilbook.com/ 416-7311752
 
 தகவல்: கவிஞர் செழியன்
 chelians@gmail.com
 
 எழுத்தாளர் அ.முத்துலிங்கம் - ஓர் அறிமுகம்
 -  ஹரன் பிரசன்னா -
 
  'மகாராஜாவின் 
இரயில்வண்டி' அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு. அந்தப் புத்தகத்தை 
வாசித்தபோது அதன் "சமர்ப்பணம்" என் நினைவுக்கு வருகிறது. "நான் எழுதிக்கொண்டே 
இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர், 
காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழிதேடி அவரிடம் 
போய்ச்சேர்ந்துவிடும். அப்படி நம்பிக்கை. இந்த நூல் அந்த வாசகருக்கு; அந்த 
உலகுக்கு" என்கிறார் அ. முத்துலிங்கம். தன் எழுத்தைப் பற்றிய தெளிவான அறிதலும், 
அது, அதை உரியவர்களுக்குப் போய்ச்சேருமென்ற திடமான நம்பிக்கையும் நம்மைக் 
கவர்கின்றன. அதன் முன்னுரையில் "வார்த்தைகளே என் கதைக்கு ஆரம்பம்" என்கிறார். 
சிக்கல்கள் மிகுந்த கதையோ பெரும் விவாதங்களைக் கொண்ட களமோ இல்லாமல் தெளிந்த 
நீரோட்டம் போன்ற நடையில் வழியெங்கும் நகைச்சுவைப் பூக்களைத் தூவிக்கொண்டு 
யதார்த்தமாக நிகழ்கின்றன இவரது கதைகள். 
 அம்பை, "அ.முத்துலிங்கத்தின் கதைகள் நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத 
பாதைகளில் இட்டுச்செல்பவை. நாம் அறியாத உலகங்களின் கதவுகளையும், சாளரங்களையும், 
காதல்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவை" என்கிறார். நிஜம்தான். அறியாத 
உலகங்களை அந்த உலகத்து மனிதர்களை அவர்களின் இரத்தத்தோடும் உணர்வோடும் கொண்டு வந்து 
சேர்த்துவிடுகின்றன இவரது கதைகள்.
 
 இவரது கதைகளில் வரும் வெவ்வேறு மனிதர்களும் வெவ்வேறு கலாசாரமும் நமக்கு 
அந்நியப்பட்டுவிடாமல் நம்மோடு கரைந்துகொள்ள முயல்கின்றன.
 
 ஜெயமோகன் இவரைப் பற்றிச் சொல்லும்போது "நவீன உலகம் ஓர் ஒற்றைப் பிராந்தியமாக 
சுருங்கி வருகிறது. மானுடம் ஒற்றை இனமாக ஆகலாம்- இன்று ஒரு கனவாக இருப்பினும். நவீன 
வாழ்வு தன் அபரிமிதமான வசதிகள் மூலம் உலகையே நாடாகக் கொண்ட ஒரு கதைபாடிக் குலத்தை 
உருவாக்கலாம். மண்ணெல்லாம் அலைந்து அவர்கள் மானுடத்தின் கதையைப் பாடலாம். இன்று 
நாம் அதற்குப் போகவேண்டிய தூரம் மிக அதிகம்தான். ஆயினும் அதற்கு முதற்கட்ட 
முன்னுதாரணமாக ஆகும் சில எழுத்தாளர்களையாவது இன்று நாம் உலக இலக்கியத்தில் இருந்து 
காட்டமுடியும். தமிழில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தில் அதற்கான கூறுகள் உள்ளன என்று 
படுகிறது. அதுவே அவரது முதல் சிறப்பாகும்" என்கிறார்.
 
 வெளியிட்ட புத்தகங்கள்:
 ----------------------
 1) அக்கா - 1964
 2) திகடசக்கரம் - 1995
 3) வம்சவிருத்தி - 1996
 4) வடக்குவீதி - 1998
 5) மகாராஜாவின் ரயில்வண்டி - 2001
 6) அ.முத்துலிங்கம் கதைகள்- 2003
 
 வென்ற பரிசுகள்:
 ----------------
 தினகரன் தமிழ் விழா சிறுகதைப் போட்டி முதல் பரிசு
 கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
 திகடசக்கரம் - லில்லி தேவசிகாமணி பரிசு
 வம்சவிருத்தி - தமிழ்நாடு அரசு - முதல் பரிசு
 வம்சவிருத்தி - ஸ்டேட் பாங் ஒவ் இந்தியா - முதல் பரிசு
 வடக்கு வீதி - இலங்கை அரசு இலக்கியப் பரிசு (சாஹித்தியப் பரிசு)
 
 வாழ்க்கைக் குறிப்பு:
 ------------------
 இலங்கை, கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்ட அ. முத்துலிங்கம் ஒரு அறிவியல் பட்டதாரி. 
இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டண்டாகவும், இங்கிலாந்தில் மனேஜ்மண்ட் 
அக்கவுண்டண்டாகவும் பட்டம் பெற்றவர். இருபது வருடங்களாக உலக வங்கியிலும், ஐக்கிய 
நாடுகள் சபையின் அதிகாரியாகவும் பல நாடுகளில் பணி புரிந்தவர். தற்சமயம் ஓய்வில் 
மனைவியுடன் கனடாவில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும்
 
 நன்றி: http://www.maraththadi.com/article.asp?id=1399
 |