இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2009 இதழ் 114  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

மீள்பிரசுரம்: தினக்குரல் மார்ச் 25, 2009
அ.ந.க. என்ற ஆய்வறிவாளர்
- கே.எஸ்.சிவகுமாரன் -
அ.ந.க. என்ற ஆய்வறிவாளர் INTELLECTUAL என்றொரு ஆங்கில வார்த்தை உண்டு. அகராதியொன்றின் படி "" AN INTELLECTUAL IS ONE WHO THINKS AND ACTS PREDOMINANTLY TO SERVE THE PURSUIT OF KNOWLEDGE AND APPRECIATION OF FINE THINGS IN LITERATURE AND THE ARTS, AND IS LESS CONCERNED WITH THE MUNDANE AND MATERIAL ASPECTS OF LIFE'

தமிழிலே, இந்தப் பதத்திற்குக் கொடுக்கப்பட்ட அகராதியொன்றின் விளக்கம்:  - " அறிவுத் திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர்' மேலும் INTELLECTUALISM என்பதனை விளக்குகையில் அவ்வகராதி இவ்வாறு விளக்குகிறது.

அறிவுத்திறம் வாய்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறன் நோக்கிய ஒருவரின் ஆய்வறிவுக் கோட்பாடு எல்லா அறிவும் ஆய்வுத் திறத்தின் விளைவே எனுங்கொள்கை'.

இவைதான் உண்மையான விளக்கம் என்றிருக்க ஈழத்து இதழியலாளர் பலரும் ஏனையோரும் தப்பும் தவறுமாக இன்டலெக்ஷ?வல் என்பதனை ""புத்திஜீவிகள்' என்றே எழுதிவிடுகிறார்கள். அர்த்தம் தெரியாமல் ஆங்கிலமொழிப் பரிச்சயம் இல்லாததால் தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர் சிலர் ""புத்திஜீவிகள் என்று எழுதிவிட கண்மூடித்தனமாக நமது பத்திரிகையாளர்கள் சிலரும் ""புத்திஜீவிகள்' என்றே எழுதிவிடுகின்றனர். தமிழ்நாட்டு வெகுசனங்களிடையே பிரபல்யம் பெறும் சொற்கள் சிலவற்றை நாமும் பின்பற்றுவது நமது தராதரத்தை கீழிறக்கி விடுவது போலாகிவிடும்.புத்தியை மாத்திரமே முதலாகக்கொண்டு ஜீவிப்பவர்கள் தான் ""புத்திஜீவிகள்' ஆனால் அதுவல்ல INTELLECTUAL என்ற வார்த்தையின் உட்பொருள் ""ஆய்வறிவுடன் கூடிய அறிஞர்களே "" ஆய்வறிவாளர்' ஆவர்.

***

அ.ந.க.

அமரர் அ.ந.கந்தசாமி நாம் பெருமைப்படக்கூடிய நமது மார்க்சியத் திறனாய்வாளர்/படைப்பாளி ஆவர். அவர் உண்மையிலேயே ஓர் ஆய்வறிவாளராவர்.

இற்றைக்கு 48 வருடங்களுக்கு முன்னர் அ.ந.கந்தசாமி அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். மறைந்துபோன தீவிர மார்க்சிய இலக்கியவாதியான எம்.எஸ்.எம். இக்பால், அ.ந.க.வை அறிமுகப்படுத்திவைத்தார். அந்நாட்களில் இப்பொழுது இல்லாமலே போய்விட்ட அன்றைய உள்ளூராட்சிச்சேவை அதிகாரசபையின் அலுவலகத்திலே நான் தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தொழில் பார்த்து வந்தேன். அந்த அலுவலகம் கொழும்பு கோட்டை கபூர் கட்டிடத்தில் செயற்பட்டது.எனது அலுவலகத்திற்கு பக்கத்தில் எம்.எஸ்.எம். இக்பால் பணிபுரிந்த அலுவலகம் இருந்தது. அக் கட்டிடத்தின் மேல் மாடியிலே மறைந்துபோன "ரெயின்போ' கனகரத்தினம் ஓர் அலுவலகத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்துவந்தார்.

கொழும்பு கோட்டையிலேயே இப்போதைய கொமர்ஷல் வங்கிக்கருகிலுள்ள ஓர் சிறிய அலுவலகத்தில் அமரர் சில்லையூர் செல்வராசன் "copy writers' என்றொரு தனியார் விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இவர்களும் மற்றொரு மார்க்சியவாதியான மறைந்த இராமநாதன் ஸ்டனிஸிலோஸ்' சிவதாசன் போன்றோரும் எனக்கு மார்க்சியம் சார்ந்த தமிழ் எழுத்துகளை அறிமுகப்படுத்திவந்தனர். மதியபோசன இடைவேளைகளில் நாம் அடிக்கடி சந்தித்து உரையாடுவதுண்டு.

அந்நாட்களில் (25 வயது இருக்கும்) எனக்கு ஈழத்துதமிழ் எழுத்து பற்றியொன்றுமே தெரியாமல் இருந்தது. முற்கூறப்பட்டவர்களே நவீன ஈழத்து/ தமிழ்நாட்டு மார்க்சிய எழுத்துகளை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

தமிழ் இலக்கியத்தை விட ஆங்கில/ உலக இலக்கியங்கள் பற்றியே நான் அதிகம் அறிந்து வைத்திருந்தேன். அந்நாட்களில் புறக்கோட்டை FRONT வீதியில் ""பாரதி' புத்தகசாலை இருந்தது. அது இப்பொழுதில்லை.அங்கே நிறைய மார்க்சியம் சார்ந்த தமிழ் புத்தகங்கள் இருந்தன. அவற்றை வாங்கி ஆர்வத்துடன் படித்து வந்தேன்.

மேற்சொன்ன நண்பர்களுடன் நா.மு. குமாரசிங்கம்,முத்துராசன், மானாமாக்கீன், பாலுமகேந்திரா போன்ற மாற்றுக் கருத்துகளைச் கொண்ட நண்பர்களுடனும் பழகிவந்தேன்.

இந்த உறவுகள் தவிர ஆய்வறிவாளர்கள், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, பிரேம்ஜி போன்றவர்களின் வழிகாட்டல்களும் எனக்கு ஆரம்பகாலத்தில் உதவின.

அமரர் கனசபாபதி கைலாசபதி மூலம் மறைந்த சிறந்த படைப்பாளி "இளங்கீர' னுடன் (சுபைர்) தொடர்பு ஏற்பட்டு வந்தது. 1960/61 வாக்கிலே மடிந்துபோன இதழான "மரகதம்' சஞ்சிகையை இளங்கீரன் வெளியிட்டு வந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய நாவலாசிரியர்கள் சிலரை""மரகதத்தில் அறிமுகஞ் செய்து வைத்தேன். அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் மறைந்துபோன பிரென்சு எழுத்தாளரும் ஆய்வறிவாளருமான அல்(ரு)பேர் கெமு ( ALBERT CAMUS) ஆவார்.

இக்கட்டுரையைப் பார்த்த அ.ந.க. ""மரகதம் ' தொடர்பாக ஒரு மதிப்புரையை இலங்கை தகவற் திணைக்களம் நடத்திய ""ஸ்ரீலங்கா என்ற தமிழ் ஏற்பாட்டிலே எழுதியிருந்ததுடன் எனது ""மரகதம்' கட்டுரையையும் விசேஷமாகக் குறிப்பிட்டிருந்தார். அ.ந.க.வும் இன்னும் சிலரும் மறைந்துபோன முதலியார் குல சபாநாதனை பிரதம ஆசிரியராகக் கொண்ட " ஸ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அ.ந.க. என்னைச் சந்திக்க விரும்பி, எம்.எஸ்.எம். இக்பாலிடம் அது பற்றிக் குறிப்பிட அன்று "அறியாப்பிள்ளை' யாக இருந்த இளைஞனான என்னை அ.ந.க. வின் அலுவலகத்துக்கு (கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் இருந்தது) இழுத்துச்சென்று அ.ந.க.விடம் அறிமுகஞ் செய்துவைத்தார்.

அவரைப் பார்த்தவுடனேயே அவருடைய ஆளுமை எனக்கும் பளிச்சென்று உணர்த்திநின்றது.சிரித்த முகம்,முத்துபல்வரிசை, கரியநிற மும், yankee bump தலைமுடியும் smart dress வயது வித்தியாசம்பாராமல் என்போன்றவர்களையும் சரிசமமாகப் பாவித்து சகஜமாக உரையாடல் யாவுமே என மனத்திரையில் பதிவாகின.

பின்னர் அவருடைய ""மதமாற்றம்' நாடகம் பற்றி ஆங்கில வானொலியில் மதிப்பீடு செய்ததுடன் TRIBUNE (எஸ்.பி. அமரசிங்கம் நடத்தியது) என்ற ஆங்கில வார அரசியற் சஞ்சிகையிலும் அந்நாடகம் பற்றி எழுதினேன். குறிப்பிட்ட அந்த இதழும் மார்க்சியச் சார்பு கொண்டதாகவே இருந்தது.

***

"அ.ந.க. ஒரு சகாப்தம்' என்றொரு சிறு நூல் இப்பொழுது வெளியாகியிருக்கிறது. அதனை எழுதியிருப்பவர் சுயதேடல் மூலம் அறிஞராக விளக்கிவரும் படைப்பாளியும் நாடகக்கலைஞரும் பத்தி நூலாசிரியரும் எழுத்தாளருமான உற்சாகம் மிகுந்த

நமது அந்தனி ஜீவா தான், அவருடைய புத்தகத்தைப் படிக்கும் முன்னர், அ.ந.க.வை மீண்டும் நினைவுறுத்திப் பார்த்ததன் விளைவுதான் இக்கட்டுரையின் முற்பகுதியில் இடம்பெற்ற நான் சம்பந்தப்பட்ட தகவல்கள். இவை கூட வரலாற்றுச் செய்திகளடங்கியவைதான்.

***

மலையக வெளியீட்டகத்தினரின் அ.ந.க. ஒரு சகாப்தம் என்ற சிறு நூலின் ஆசிரியர் அந்தனி ஜீவா முன்னர் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் என்ற தொடர்கட்டுரைகளின் தொகுப்பு இது 48 பக்கங்களைக் கொண்டது.

"உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசை கொண்ட காலத்தில்' வாழ்ந்த அ.ந.க. பல பரிமாணங்களை கொண்டிருந்தார் என்பதனை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

தனது பேச்சின் மூலமும் எழுத்தின் மூலமும் நாடகங்கள் மூலமும் நூல்கள் சஞ்சிகை மூலமும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வரும் அந்தனி ஜீவா ஒரு சிறந்த இதழியலாளர் என்பதற்கு நிரூபணமாக இந்த புத்தகத்தின் எழுத்து நடை அமைகிறது.

அ.ந.க.வை இன்றைய வாசகர்களுக்கு சிறந்த முறையில் அறிமுகப்படுத்தும் வகையில் தமது நூலில் பின்வரும் தலைப்புகளில் ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர் .

இலக்கிய வானில் சுடர் நட்சத்திரம் துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம் எழுத்துத்துறையின் ஆரம்பகாலம் தொழிலாளர் நலனில் அக்கறை, தகவற் பகுதி, பத்திரிகைத் துறை முதல் சந்திப்பு, கவிதையும் கந்தசாமியும், இலக்கிய மலடர் சிறுகதைத் துறையில் நாவல் துறை நாடகத்துறை இலக்கிய விமர்சனம் , சீர்திருத்தத்துறை வெற்றியின் இரகசியம் அ.ந.க.ஒரு சகாப்தம். அந்தனி ஜீவா அமரர் அ.ந.க.வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். உள்ளார்த்த நட்பு அவர்களிடையே இருந்தது. அதன் வெளிப்பாடாக இந்தக் கட்டுரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான
non -academic ரீதியான நூல்கள் தான் மக்களிடையே பிரபல்யம் பெறுகின்றன. சகலருக்கும் பயனளிக்கின்றன. அந்த விதத்திலே ஆற்றல் மிகு அந்தனி ஜீவா பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் . 4348 பக்கங்களில் நூலாசிரியர் பற்றிய பல விபரங்கள் நேர்த்தியாக தரப்பட்டுள்ளன.

கலாபூஷணம் புன்னியாமீன் இவ்விபரங்களை எழுதியுள்ளார்.

அ.ந.க.வை மறந்துவிட்ட நாம் அவருடைய ஆய்வறிவுப் பங்களிப்புக்களை நினைவுகூர இச்சிறு நூல் பெரிதும் உதவுகிறது.

நன்றி: தினக்குரல் மார்ச் 25, 2009


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner