திரைப்படம்: அமெரிக்க பூதமும்,  கம்யூனிச பிணமும்! - சுப்ரபாரதிமணியன் - 
 
சுப்ரபாரதிமணியன்[எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 'பதிவுக'ளில் அவ்வப்போது எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகளில் சில ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. - பதிவுகள்] போலந்து திரைப்படம் ஒன்று . ஸ்டாலின் காலம் பற்றினதில் கம்ய்யூனிசத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு சிறுவன் ஒரு படத்தை பாதுகாத்து வருகிறான். அவனை வேறொரு   கம்யூனுக்கு மாற்றுகிறார்கள். கம்யூன் தலைவன்  கெடுபிடியான ஆசாமி. குரூரமானவன். சிறுவன் வேறொரு கம்யூனுக்குப் போவதற்காக் தனது பொருட்களை தேடி எடுத்து அவசர கதியில் புறப்படுகிறான். அவன் பாதுகாத்து வைத்திருந்த படம் எதெச்சையாய் கீழே விழுகிறது.  கம்யூன் தலைவன் கால் ப்ட்டு கிழிகிறது. கம்யூன் தலைவன் கேட்கிறான். " யார் இந்த வயதானவன் " பையன்  அதிர்ந்து போய் சொல்கிறான்.  " லெனின்" லெனின் படம் கிழிவுறுவது அவனை வெகுவாக பாதிக்கிறது.  கம்யூனிசத்தில்  அக்கறை கொண்ட அய்ம்பது வயது பெண் ஒருத்தி இதே போல் லெனின் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைவதை "குட்பை லெனின் " என்ற செர்மன் படத்தில் பார்க்கலாம். " லெனின் பிறப்பு ரஸ்யாவிற்கு ஏற்ப்பட்ட  துர்பாக்கியம்.  அந்த நாட்டின் அடுத்த துர்பாக்கியம் அவர் மரணம் " என்று சர்சில் எழுதினாராம். ஸ்டாலின்  ஆட்சியின் கொடுமைகள் சர்ச்சிலின் கருத்திற்கு முன்னுரையாக இருந்திருக்கிறது.

" குட்பை லெனின் " படத்தில் அலெக்ஸ் என்ற இளயவனின் அம்மா கோமாவில் கிடக்கிறாள்.சோசலிச கட்சி உறுப்பினர் அவள். பெர்லின்  சுவர் வீழ்ச்சி அதன்  தொடர்பான நிகழ்வுகளும் அவன் அம்மாவை வெகுவாக பாதிக்கும் என எட்டு மாதங்களுக்கு பின்னால் கோமாவில் இருந்து அவள் தப்பிக்கிறபோது அலெக்ஸ் நினைக்கிறான். நினைவு திரும்பி விட்ட்து. . ஆனால் நடமாட முடிவதில்லை. இந்நிலையில் பெர்லின் சுவர் வீழ்ச்சி மற்றும் கிழக்கு செர்மனியில்  கம்யூனிசத்திற்கு நேர்ந்துள்ள சரிவு பற்றி அவள் அறிந்து கொள்ளக்கூடாது என்ற் அலெக்ஸ் நினைக்கிறான். இறக்குமதியாகும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் சாதாரணமாக வீட்டில் இருக்கின்றன. அம்மா அதை அறியக்கூடாது என்பதற்காக் அவற்றின் சுவடு  தெரியாமல் அழிக்கிறான். இறக்குமதிப் பொருட்களை மறைத்து வைக்கிறான் அம்மா ஆசைப்படும்  கம்யூனிச அரசாங்க  கால உணவுப்பொருட்கள் இப்போதும்  விநியோகத்தில் இருப்பவை என்ற எண்ணத்தை நிலைநிறுத்த முயல்கிறான். தொலைக் காட்சிகளில் சமீபத்தியவை இடம் பெற்றுவிடக்கூடாது  என்று பழய செய்திக் கோப்புகளை வீடியோவில் தொகுத்து அம்மாவின் அறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறான். 

அவளின் பிறந்த தினத்திற்கு பழய காம்ரேடுகளை அழைத்து வந்து வாழ்த்து சொல்வதும், கட்சியின் நிலை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதும் நட்க்கிறது. கோக்கோலா விளம்பரம் கண்ணில் படுகிறபோது அவ்ள் அந்நிய் முதலீடு, பன்னாட்டு  நிறுவனங்களின் ஆதிக்கம் ப்ற்றி வினா எழுப்புகிறாள். அவ்ன் சமாளிக்கிறான். ஒரு சிறு அதிர்ச்சி கூட அவளின் உயிரைப் பறித்து விடும் என்ற் மருத்துவரின் அறிவுரை அவனை அதிர்ச்சியடையச் செய்து கொண்டே இருக்கிறது. அவளின் உடல் நலத்தை மீட்டெடுப்பது அவனின் அக்கறையாக இருக்கிறது. ஒரு நாள் சிறு சுற்றுலாவிற்காக  வெளியெ செல்லும் போது வீதிகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும்  அலெக்ஸ் மறைத்தே நகரின் ஒதுக்குப்புறத்திற்கு கூட்டிச் செல்கிறான். லெனின் சிலை உடைக்கப்பட்டு கிரெனில் லெனின் தூக்கி எறியப்படும் காட்சியை  அலக்ஸின் அம்மா எதேச்சையாய் பார்க்கிறாள். பெர்லின் சுவரின் வீழ்ச்சி மற்றும்  கம்யூனிசத்தின் தகர்வைப் புரிந்து கொள்கிறாள்.  நெடு நாளைய கம்யூனிஸ்ட் உறுப்பினர் அவள். அலெக்ஸின் தடுமாற்றங்கள்  முடிவுக்கு வருகின்றன். அதிர்ச்சியில் மரணம் அடைக்கிறாள்.

கிழிபடுகிற லெனின் படமும்,  தூக்கி எறியப்படும் லெனின் சிலையும் அந்தத் தத்துவங்களின் மீதான காலம் காலமாக நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் கனவுகளைச் சிதைப்பவைதான். அலெக்ஸின் அம்மாவின் கனவை சிதைத்தவர்களில்  முக்கியமானவர் அவரின் கணவர். அவர் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல. அதுவே அவளுக்கு பிளவுகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கிழக்கு மேற்கு செர்மனியின் பிளவின் போது குழந்தைகளுடன் அவள் கிழக்கு செர்மனிக்கு வந்து விடுகிறள். பல் கடிதங்கள் எழுதுகிறான். ஆனால் அவள் எதற்கும் பதில் எழுதுவதில்லை. அவள் பதில் எழுதாத கடிதங்கள் அலெக்ஸ்ற்கு கிடைக்கின்றன். அப்பாவைத் தேடி கண்டு பிடிக்கிறான்.அப்பா இன்னொரு  குடும்பத்தோடு  வாழ்கிறார். உலகமயமாக்கல் செர்மன் எல்லைகளை விரித்து கோடுகள்  இல்லாமல் செய்து விட்டது.அதில்  நொறுங்கிப்போனக் கனவுகள் ஏராளம்.

கியூபா பற்றினக் கனவுகளும் வீரக்கதைகளும்  நமக்குக் கிடைத்துக்கொண்டெ இருக்கின்றன். சமீபத்தில் சேகுவாரா பற்றின ஏராளமானப்  புத்தகங்கள் தமிழில்  வந்து சேகுவாரா பற்றின பிம்பக் கட்டமைப்பை உயர்த்திபிடித்திருக்கின்றன். கியூபா புரட்சிக்குப் பின் அமெரிக்காவில் வந்து குடியேறிய  திரைப்பட இயக்குனருக்கு அமெரிக்க தாக்கம் இருப்பதில் ஆச்சர்யமில்லை. படத்தை விவரிக்கும் முறையிலும் , கியூபா அரசியல் சூழலைச் சொல்லும் முறையிலும் இயக்குனர் செரிராடு  " கியூபா லிபரே " என்ற படத்தில் அமெரிக்கப் பார்வையையே முதன்மைப்படுத்தியிருக்கிறார்.

அம்பதுகளின் இறுதி இப்படத்திற்கு களனாகியிருக்கிறது. புரட்சியைப் பின்னணியாகவும் கொண்டிருக்கிறது. கியூபா  மாணவன் ஒருவனுக்கு திரைப்படங்களை தொடர்ந்து பார்ப்பது பொழுது போக்காகிறது. அந்த ஊரில் இருக்கும் மின்  நிலையம்   " தீவிரவதிகளால் "  அழிக்கப்பட்டு ஊர் இருளாகிறது.அப்பையனுக்கு திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. மின்சாரம் இல்லத இருட்டுலகில் வாழ்ப்பழகிக் கொள்கிறார்கள். அப்பகுதியில் ஸ¤லியா என்ற அமெரிக்கப் பெண் வாழ்ந்து வருகிறாள். பையனுக்கு அவளுடன் நட்பு   ஏற்படுகிறது.

(செரிராடுவின் முதல் படத்தின் பெயர் டிரிமிங் ஸ¤லியா)._ ஸ¤லியா பற்றினக் கனவுகளில் மூழ்குகிறான். இயல்பான பாலியல் உணர்ச்சிகளால் தூண்டப்படுகிறான், போராளி ஒருவனின் காதலும் இணையாக்ச் சொல்லப்ப்ட்டிருக்கிற்து. போராளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. காவல் துறையினருடனான   மோதலில் அவன் கொல்லப்படுகிறான். பையனின் தாத்தா  "சே" ஸ¤லியாவுடன் உறவு வைத்திருக்கிறார் என்பது பையனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.ஆனால் ஸ¤லியாவின்  உலகமும் வெகுளித்தனமும் , துரோகமும்  என்ற குழப்பமாய் அவளைப் பார்க்கிறான். திறந்த வெளி திரைப்பட அரங்கம் ஒன்று  திறக்கப்படுகிறது. பையன் பெருமூச்சு விடுகிறான்.

"கசபிளங்கா " படம் அதில் திரையிடப்படுகிறது.தனது முதிர்ந்த  சிநேகிதி, காதலி ஸ¤லியாவின் பிம்பங்களை அதில் வரும் பெண்ணோடு பொருத்திப் பார்த்துக் கொள்கிறான். மனச்சாட்சியின் குரல் போல் ஒருவன் படம் முழுக்க  வந்து போகிறான். போராளிகள் அவனுக்கு அதிர்ச்சியாகவே இருக்கின்றனர். இந்த மனச்சாட்சியாக  செரிராடு இருக்கிறார். புரட்சி  பற்றின  கட்டமைப்புகளுக்கு மத்தியில் அதை தீவிரவாத கேலிக்குறியாகப் பார்ப்பது   அவருக்கு  உகந்ததாக இருக்கிறது.

பதிவுகள் டிசம்பர் 2005; இதழ் 72.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


திரைப்படம்: வங்காளிகளின் தேடல்கள்! 2005ம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன் வைத்து...  - சுப்ரபாரதிமணியன் -

" என்னைப் பெற்றது நான்தான் "

சுப்ரபாரதிமணியன்நகுலனை சந்தித்த போது இதைச் சொல்லி அவரைப்படம் பிடித்துக் கொண்டிருந்த இயக்குனர் அருண்மொழியிடம் அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டார். அருண் மொழி சொன்ன விளக்கம் அவருக்குத் திருப்தி தராதது போல பார்த்துக் கொண்டிருந்தார். நான்கு நாள் இடைவெளிக்குப் பின் "செவ்வகம்" ஆசிரியர் விஸ்வாமித்திரனுடன் சந்தித்தபோது நகுலன் விஸ்வாமித்திரனிடம் அதே கவிதையைச் சொல்லி இதற்கு அர்த்தம் என்ன என்றார். அவர் ஒருவனின் ஆளுமையும், வாழ்மனச் சூழலும் அவனின் வாசிப்பு, அவனைச்சுற்றி உள்ல்ளவர்களால் உருவாக்கப்படுவது பற்றிச் சொன்னார். நகுலன் ஓரளவு திருப்தி அடைந்தவர் போல் புன்னகைத்தார். அதைத் தொடர்ந்து அவர் கோள்விகளை கேட்டார். பெரும்பாலும் பதில்களாக அவை அமையாமல் கேள்விகளாகவே அமைந்திருந்தன. " இது ஒரு வகை ஜென் தன்மையானது கேட்கிற கேள்விகளுக்கு பதில்களை சொல்லாமல் அதனை ஒட்டி கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பது " என்றார் விஸ்வாமித்திரன்.

நகுலன் குறிப்பிடும் "தன்னை" உருவாக்கும் தன்மைகள் மனிதர்களுக்கு மனிதர் வேறுபடுகிறார்கள். நகுலனின் இவ்விரண்டு சந்திப்பு இடைவேளையில் பார்த்த சில வங்காளப் படங்கள் நகுலனின் தேடுதலின் ஒரு அம்சமாகத் தென்பட்டது. இயக்குனர் சுமன் மகோபாத்யாய் இயக்கிருக்கும் "ஹெர்பர்ட்" படத்தில் இடம் பெறும் ஹெர்பர்ட் சர்கார் நாற்பது வயதில் வளர்ந்து நிற்கும் ஒரு மனிதன் என்றாலும் அவன் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவன் தான். நபருன் பட்டாச்சாரியாவின் நாவலில் சர்க்கார் இப்படித்தான் விசுவரூபித்து நிற்கிறான்.கல்கத்தா நகரத்தின் பிரமாண்டமும் , அரசியல் போராட்ட்ங்களும், சித்தாந்த வெடிப்புகளூம் அவனை பெரிதாய் பாதிப்பதில்லை. பாலியல் ரீதியாகவும், காதல் போன்றவற்றின் ஈர்ப்பாகவும் பெண்ணொருத்தி பாதிப்பது கூட தற்செயலாக நடந்து கானல் நீராகத்த'ன் போய் விடுகிறது.எப்படியோ கிடைக்கிற புத்தகமொன்றில் தென்படும் இறந்தவர்களோடு பேசுதல் அவனுக்கு ஈர்ப்பாகிறது. அவனின் அறையில் வந்து தங்கும் பொதுவுடமை சித்தாந்தத்திலும் தீவிரவாதத்திலும் அக்கறை கொண்டவன் பரப்பி வைக்கும் மார்க்சிய சித்தாந்த நூலகளும் , கொடிகளும் , பிரச்சார பிரசுரங்களும் பாதிக்கவில்லை. அனதை போல அவன் இருக்கும் கட்டிடத்தில் இருக்கும் மற்றவர்கள் அவனுக்கு தரும் உணவு மற்றும் உபச்சாரங்கள் அவனை நாற்பது வயது மனிதனாக உருவாக்கி இருக்கிறது. ஒருவகையில் எடுப்பார் கைப்பைபிள்ளையாக இருக்கிறான்.இறந்தவர்களோடு பேசுவதில் அவனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் பரிமாற்றமும் வேறுஎவறோடுடனான பரிமாற்றத்தை விட உன்னதமாகப்படுகிறது. ஆவிகளோடு பேசுவது புகழ் தரும் ஒரு விசயமாகி அவனின் புகழை வியாபாரமாக்குபவர்களிடம் அவன் சிக்குகிற'ன். அவன் அலைக்களிக்கப்படுகிறான். அவனது மரணமும் ஒரு கலவரம் போலவும், திருவிழா போலவும் கொண்டாடப்படுகிறது.தான் யார் என்பது நிர்ணயக்கப்படாமலே இறந்து போகும் ஒருவனின் அடையாளம் மற்றவர்களால் சுட்டப்படுவதில் நிரந்தரமாக்கப்படுகிறது. மார்க்சிய சித்தாந்தத்தால் உருவாக்கப்படும் ஒருவன் தன்னை அந்த சித்தாந்தத்திற்காக பலி கொடுப்பதும் சாதாரணமாக நிகழ்வதை சேகர் தாஸ’ன் " கிராந்திக்கால் " படத்தில் காண முடிகிறது, சேகர் தாஸ’ன் முந்தையப்படம் "மலைகளின் பாடல்" சந்தால் ஆதிவாசிகளின் மாறி வரும் போராட்ட வாழ்க்கையை சித்தரித்த படம்.மார்சிய தீவிரவாதி தன்னை யார் என்று அடையாளம் கண்டு கொள்வதற்கும் அவன் ஜக்கியப்படுத்திக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாய் அவன் தலைமறைவாகி ஒரு வீட்டில் புகுவதில் இருக்கிறது. மன்னர் பரம்பரையினர் ஒருவரின் வீடு அது. முந்தைய பரம்பரையின் எல்லா கீரீடங்களையும் இழந்து விட்டு அக்குடும்பம் வாழ்ந்து வருகிறது.முதியவரின் வயதான மகன் படுக்கையோடு இருப்பவன். விவாகரத்தான மருமகள் . அந்த பழைய அரண்மனையின் ஒரு பகுதி அடக்கலமிலாத சிலருக்கு புகலிடமாகியிருக்கிறது. அடைக்கலமாகியிருக்கும் பெண்கள் கைவிடப்பட்டவர்கள். அழுகை மட்டும் அவர்களை ஆசுவாசப்படிடுத்துகிறது. மருமகள் கல்லூரி உத்யோகம் தவிர அப்பெண்களையும், வயதான மாமனாரையும் பார்த்துக் கொள்வதே அவளின் நேரத்தை தின்று விடுவதாக இருக்கிறது. அடைக்கலமாகும் தீவிரவாத போராளி அவர்களின் மத்தியில் தன்னை அந்நியனாகவே உணர்ந்து கொள்கிறான். அடைக்கலமாகியிருக்கும் பெண்களில் ஒருத்தி காவல் துறையின் உளவாளியாக இருப்பாளோ என்ற சந்தேகமும் அவனுக்கு வருகிறது. வீட்டிற்கு வருகிறவர்களிடமோ, தொலைபேசி அழைப்புகளோ அவனை அடையாளம் காட்டத்தவறுவதில்லை. அவனை அடையாளம் கண்டு கொள்கிறவர்களிடம் தத்துவ விசாரங்களும், சர்ச்சைகளூம், அவனின் ஆயுதம் தாங்கியப்போராட்டத்திற்கான நியாயங்களும் காணபடுகின்றன. தேடி வரும் காவல் துறையினருடன் போரிட்டு அவன் சாக வேண்டி இருக்கிறது. அவன் என்னவாக அவனை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கிறானோ அதுவாக அவனின் வாழ்ககையை முடித்துக் கொள்கிறான். ஹெர்பர்ட் சர்காருக்கு ஏற்படும் சிக்கல் போராளிக்கில்லை. தன்னைப் பொருத்த அளவில் என்னவாக ஆக ஆசைப்படுகிற கணமோ அது நிகழ்ந்து விடுகிறது. அவனின் லட்சியப்பாதையின் மைல் கல்லாக அவன் முன் நிறுத்தப்படுகிறான் என்பதை சேகர் தாஸ் நிருபிக்கிறார். எல்லா காலங்களிலும் இவவ்வகைப்போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அது மன்னர் பரம்பரை குடும்பத்திற்குள் ஊடுருவும் போது அவர்களுக்குள் ஏற்படும் அதிர்ச்சி மற்ற சமூகங்களுக்குள் குறைவகவே ஏற்படுகிறது. அந்த அதிர்ச்சி பரவ வேண்டும் என்பதில் சேகர் தாஸ“ற்கு அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையின் வெளிப்பாடாகவே இவ்வகைப்படங்கள் அவரிடமிருந்து தொடர்ந்து வெளிவருகிறது.

அப்ர்ணாசென்னின் 15, பார்க் அவன்யூ படத்தில் இடம் பெறும் மீத்திக்கு (கொன்கொனா சென் சர்மா) அவள் என்னவாக இருக்கிறாள் என்பதை அவள் உணர்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே நிகழ்கின்றன. பிளவுபட்ட மனநிலை மற்றும் இன்னொரு உலகத்தில் யதார்த்தத்தை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருப்பதும் சாதாரணமாகவே இருக்கிறது அவளின் உலகம் எல்லோரையும் புயமுறுத்திக்கொண்டிருப்பது. அந்த உலகத்தை தரிசிக்க வீட்டில் உள்ளவர்களூக்கு கிடைக்கும் சில நிமிடங்களில் அவர்கள் மரணத்தை தரிசித்து விட்டு திரும்பி உடல் நடுங்க மீதியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நோய் என்று அறிந்து கொள்ள பிறர் மறுக்கிறார்கள். ( ஹெர்பர்ட் சர்க்கார் போல ஒருவன் தன் மகளின் மனச்சிதைவு நோயை போக்கிவிட முடியும் என்று ஒரு தாய் -வஹ’தா ரகுமான் - பேய் ஓட்ட ஒருவனை அழைத்து வந்து பேயை விளக்குமாற்றால் அடித்து ஓட்டும் சடங்கை தன் வீட்டில் நிகழ்த்தி கண்இர் வடிக்கிறாள்.).கல்லூரிப்பேராசிரியை மூத்த மகள் அஞ்சலி ( சப்னா ஆஸ்மி)வைத்திய முறைகளும், மருந்தும்தான் தீர்வு என்று நம்பி மீத்திக்கு ஆறுதலாக இருப்பவள். ஆனால் மீத்தீயால் தன் வாழ்க்கை தேங்கிப்போய் விட்டதை உணரும் போது உடைந்து போகிறவளாகவும் இருக்கிறாள்.திருமணத்தை தள்ளி வைத்துக் கொண்டே போய் பிறகொரு எல்லையில் நிற்கிறாள். தன் காதலன் வெளிநாடு போகும் வேலை மற்றும் பிரிவு அவளை வெகுவாக பாதிக்கிறது. மீத்திக்காக வைத்தியம் பார்க்கும் மனநல மருத்துவர் மீது அஞ்சலிக்கு ஏற்படும் ஈர்ப்பு கூட தற்காலிகமானதாவும் அம்மாவால் கண்டிக்கப்படுவதாகவும் இருக்கிறது. மீத்தி சிறு வயதிலிருந்து தனிமையில் வேறொரு உலகத்தில் இருப்பவள். பத்திரிக்கையாளனாக அவள் பணி புரியும்போது அரசியல் குண்டர்களால் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுநிலை குலைவது மனநோயின் அழுத்தத்திற்கு முக்கியமான காரணமாகிறது. ஓரளவு சம நிலைக்கு வரும் போது திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திடுமென கிளம்பும் மனச்சிதைவு ஒத்தி வைக்கிறது. இளைஞன் ஜோஜோவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பத்து ஆண்டுகள் கழித்து மீத்தியை அவன் சந்திக்கிறான். ஒரு விடுமுறை வாசஸ்தலத்தில் தன் மனைவி, இரு குழந்தைகளுடன் வந்திருப்பவன் மீத்தியை சந்திக்கிறான். மீத்திக்கு அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை.ஆனால் அவனுடனான உலகத்தில் அவனுடன் பெற்றெடுத்த ஜந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறவளின் இருப்பு அவளுக்கு ஆறுதல் தருகிறது. ஆறுதலும், அன்பும், அரவணைப்பும் நோய்க்கு மருந்தாக இருக்கும் என்பதை நம்புகிறான். தன் மனைவியின் வருத்தங்களும், அஞ்சலியின் உபதேசங்களையும் மீறி மீத்தியுடன் பழகுகிறாள். 15, பார்க் அவன்யூவில் மீத்தி ஜோஜோவுடன் இருக்கும் அவள் உலகத்தைத் தேடி அவள் வீதிகளில் அலைந்து மறந்து போகிறாள். வீட்டில் உள்ளவர்கள் மீத்தியைத் தேடுகிறார்கள். அவள் விரும்பும் உலகத்தில் அவள் ஜய்க்கியமாவது அவளுக்கு ஆறுதல் தரும். ஆனால் அவள் அவளின் யதார்த்த உலகிற்கு வெகு žக்கிரம் வந்து விடுவாள். மீண்டும் மீண்டும் அவளினுலகத்திற்கு அவள் அலைந்து கொண்டும் இருப்பாள்.

சத்யஜித்ரேயின் மகன் சந்திப்ரேய் , சத்யஜித்ரேயடன் பல படங்களில் பணிபுரிந்தவர். அவரின் மூன்று படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். அவரின் திரைக்கதையை மையாமாகக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கு முன் டார்ஜெட் என்ற படத்தையும் எடுத்திருப்பவர்.அவரின் ஜந்தாவது படம் சமீபத்தில் வந்திருக்கிறது. மனிதர்கள் தங்களை எடை போட்டுக் கொள்வதத்ற்கும், தங்களைபற்றின பரிசிலனையை செய்து கொள்வதற்கும் இயற்கை தரும் அதிர்ச்சிகள் உதவுகின்றன..பிமல் தாஸ் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு ஹ’மலாயாவின் ஒரு கோடியில் தனிமையை அனுபவித்து வாழ்ந்து வருபவர். ஆற்றின் மேல் ஊசலாடும் ஒரு பாலம் வெளி உறவுக்கு துணையாக இருக்கிறது. குளிர் கால்மொன்றில் அவரின் குடும்பத்தினர் அங்கு வந்து அவருக்கு ஆறுதல் அளிக்கின்றனர், திடுமென கிளம்பும் நில அதிர்ச்சி எல்லோரையும் பிரித்துப் போடுகிறது. அரசாங்க உதவிக் குழு வருவது ஆசுவாசப்படுத்துகிறது. இந்த இடைவெளியில் தங்களின் தனிமை, கையறு நிலை மற்றும் முன்பு விசுபரூபித்த தன்னகங்காரம் குறித்த பரிžலனைகள் மனிதர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், என்னவாக இருக்க ஆசைப்பட்டார்கள் என்ற பரிசீலனையையும் முன் வைக்கிறது.

ரிதுபர்ன்னோ கோஸ்ஸ’ன் முந்திய படமான ரெயின் கோட்டின் பாத்திர விவரிப்பும், உள்ளார்ந்த காதலின் மேன்மையும் வெளிப்படுத்தும் தன்மைக்கு எதிர்மாறான குரூரமான சூழலும் வக்கிரத்தன்மையும் வெளிப்படும் படம் " அந்தர்மஹால்" "சொக்கர் பாலி" போன்ற காலப்படங்கள்களில் வெகுவாக அக்கறை கொண்டவர் ரிதுபர்னோ கோஸ் என்பதும் வெளிப்படுகிறது. தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்ட படம் இது. 19ம் நூற்றாண்டின் ஜமிந்த்தாரின் ஆதிக்கத்தையும் வெள்ளைகாரனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் தன்மையையும் இப்படம் விவரிக்கிறது. ஜமிந்தாருக்கு இளைய மனைவியின் மீது புது மோகம். அவள் கர்ப்பமுற்றிருப்பது அறிந்து படுக்கை அறையிலேயே புரோகிதர்களை வைத்து மந்திரங்கள் ஓதச் செய்து உடல் உறவின் போது அந்த மந்திரங்கள் கேட்டு உருவாகும் கரு உயர்ந்த அறிவாளியாக இருப்பான் என்று நம்புகிறவன். காளி பூஜையின் போது காளி சிலை செய்ய இளைஞன் ஒருவன் அழைக்கப்படுகிறான். அவனின் தோசத்தால் தடைபடப்போகும் சில காரியங்களுக்காக முதல் மனைவி பிராமணர்களுடன் படுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தப்படுகிறது. சிற்பி உருவாக்கும் காளி சிலையின் முகம் விக்டோரியா இளவரசி முகமாக வடிமைக்கச்செய்கிறான். அதன் மூலம் ஆங்கிலேயர்களை மனம் மகிழச் செய்வதும் லாபங்களைப் பெறுவதும், அரசாட்சியை தெடரச்செய்வதும் அவனின் நோக்க்கமாக இருக்கிறது. ஜமிந்தாரின் இளைய மனைவி மேல் கொண்ட ஈர்ப்பு காரணமாக காளியின் முகத்திற்கு பதிலாக இளைய மனைவியின் முகமாக அது அமைந்து விடுகிறது. ஜமிந்தார் அவளைக் கொல்ல விரைவதற்கு முன்பாக அவளே தற்கொலை செய்து கொள்கிறாள்.பாலியலும், அதிகாரத்தின் வன்முறையும் பிராமணர்களின் சூழ்ச்சியும் கொண்ட உலகத்தை விரிவாக கோஸ் காட்டுகிறார். குரூரங்கள் புதைந்திருக்கும் மனித மனங்களின் விசித்திரம் பல பரிமாணங்களைக் கொண்டது. பாலியலையும் அதிகாரத்தையும் முழுமையாக அனுபவிக்கும் ஜமிந்தாரின் முகம் குரூரமானது. ஆங்கிலேயர்களை திருப்திப்படுத்த அவன் எடுக்கிற முயற்சிகளில் தலையாயது காளியின் சிலை முகம் விக்டோரியா இளவரசியுடயதாக அமைக்கிற ஆசையில் முதிய சிற்பிகளை நிராகரிப்பதும் இளைஞனை தேர்வு செய்வதும். இளைய மனைவியின் கர்ப்பம் தவிர்க்க முதல் மனைவி தன் உடம்பைக்காட்டி புரோகிதர்களிடம் சரசமாடுவதும், அவளே தன் பாலியல் ஆசைகளை இளைய சிற்பியிடம் வெளிப்படுத்தி தோல்வியுறுவதும், புரோகிதர்களின் தந்திர நடவடிக்கைகளும் அதனதன் குரூரங்களுடனே வெளிப்பட்டிருக்கின்றன. குரூரங்களின் மொத்த வடிவமாக நிலப்பிரப்புத்துவ ஆட்சியில் அதிகாரத்துவம் சார்ந்தவர்கள் செயல்படுவது சரியாகவே காட்டப்பட்டிருக்கிறது. இந்த குரூரங்களே கோஸ் போன்றக் கலைஞர்களை வேறொரு பரிமாணத்தில் பார்க்க ஏதுவாகிறது. அதை நிராகரிக்கவும் கூட முயலலாம். குரூரங்களை குரூரங்களாகவே சொல்லத்தான் கலைஞர்களால் முடியும். அதை பூசி மழுப்புவது சிரமம்தான்.

ஒரு தெருக்கூத்து பெண் தன் மனதை வெளிக்காட்டிவிட்டதன் மர்மத்தால் ஒரு மருத்துவரின் வாழ்க்கை தடும்மறிப் போவதை "'கால்புருஸ் " படத்தில் காட்டுகிறார் புத்த தேஸ் தாஸ் குப்தா. தெருக்கூத்துப் பெண்ணிற்கு அது சாதாரண நிகழ்வாகக் கூட இருக்கலாம். அவளின் தெருக்கூத்தின் ஒரு நாடகமாகக் கூட இருக்கலாம். ஆனால் குடும்ப அமைப்பைக் கைகட்டி காக்க ஆசைப்படும் சராசரிப் பெண்ணிற்கு அது வாழ்க்கையையே சிதைக்கிறதாக அமைந்துவிடுகிறது.இந்த சிதைவின் சுமையை வாழ்நாள் முழுவதும் மருத்துவர் அஸ்வினி சுமக்க வேண்டி இருக்கிறது.மகனையும் , மனைவியையும் பிரிந்து வாழும் துயரத்தின் கொடுமையை அனுபவிக்க வேண்டி இருக்குகிறது. வளர்ந்து பெரியவனாகி இரு குழந்தைகளுடன் இருக்கும் அவன் மகனும் இதே போன்ற சுமையைத்தாங்கிக் கொண்டிருக்கிறான் என்பது அஸ்வினிக்கு தெரியாது. மகன் தந்தையை குரூரமானவனாகவே வரித்துக் கொண்டிருக்கிறான். தன் மனைவியுடனான இடைவெளி என்பது நீண்டு கொண்டே இருக்கிறது. வேறுஒருவனுடனானத் தொடர்பும் அமெரிக்கா சென்று விட்டு வந்தவள் பயணக்கட்டுரை எழுதி பிரபலமாகி அவனை விட்டுச் செல்வதும் இயல்பாகவே நடக்கிறது. அவனின் இரு குழந்தைகளுக்கும் தந்தை அவனல்ல என்பதாய் அவள் சொல்லும் போது அது அவனுக்கும் தெரியும் என்கிறான்.( அவனின் இயல்பே எல்லாவற்றையும் சாதாரணமாக ஏற்றுக் கொள்வதே என்பதாய்தான் தோன்றுகிறது. மனைவியின் அந்நியமான நடவடிக்கைகளுக்கு அவன் உணர்வுரீதியாக எந்த எதிர்வினையையும் காட்டுவதிலை. அவன் குடியிருப்பு வீதியில் நடைபெறும் ஒரு கொலைக்குக் காரணமானவனை பூங்காவெவொன்றில் பார்க்கிறான். அப்போதும் அவனின் எதிர்வினை பதட்டத்திற்குள்ளாக்குவதாக இல்லை.) தந்தையுடனான அபூர்வ சந்திப்பு அவனுக்கு வேறொரு உலகத்தைக் காட்டுகிறது. நெகிழ்ந்து போகிறான். இழந்து போன பால்ய வாழ்க்கையை மீட்டெடுக்கிற முயற்சியில் ஈடுபடுகிறான். புத்ததேவ் தாஸ் குப்தாவின் இயக்கத்திலும்,மிதுன் சக்கரவர்த்தி, ராகுல் போஸ் போன்றோரின் பிரதான கதா பாத்திர நடிப்பிலும் வெளிவந்திருக்கும் இப்படத்தின் தலைப்பு " பனியினூடே நினைவுகள்" தந்தையும் மகனும் சிலுவைகளை களைந்து விட்டு தங்களைக் கண்டடைகிற முயற்சியில் ஈடுபடும் தருணங்கள் அபூர்வமானவை. அதில் தங்களைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் தங்களைத் தேடும் அபூர்வமுயற்சிகள் அவர்களுக்கு வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.குரூரங்களுக்கு மத்தியில் அவர்கள் தங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.இந்த சந்தர்ப்பங்கள் புத்ததேவ் தாஸ் குப்தாவின் சென்ற படத்தின் ( திரும்புதல் ) மனிதர்களுக்கு நேராதது. எல்லையை நோக்கி திரும்பும் கர்ப்பிணி பெண் தன் கணவன் மதக்கலவரத்தில் இறந்து அநாதையாகி நின்றாலும் எல்லைக்குத் திரும்பி விட்டால் அதுவே ஆறுதலானது என்பதை மனதில் கொண்டுவிட்டவள். ஆனால் விளம்பரபடங்கள் திரையிடும் அரசு ஊழியன் மற்றும் அவனது வாகன ஓட்டிக்கு குரூரங்கள் தேச எல்லைக்கு தேவையில்லாமல் அப்பெண்ணுடன் துரத்துகிறது. சாவு தங்களைத் துரத்துகிறது என்பதை அறியாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

தன்னைத் தேடுகிற மனிதர்களை வங்காள இயக்குனர்கள் அடையாளம் காட்டுகிறார்கள். இதற்காய் அவர்கள் எடுத்துக் கொள்ளும் வெவ்வேறு விதமான மனிதர்களின் வகைப்பாடும் வாழ்க்கைப்பின்னணிகளும் சுவாரஸ்யமானவை. பல் வேறு காலகட்டங்களையும், நிகழ்வுகளையும் உள்ளடக்கியவை.நீண்ட வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளாக விளங்குபவை. மனிதர்கள் தங்களைக் கண்டடைகிற முயற்சிகளை முன் வைப்பவை.அல்லது தங்கள் இருப்பை உணராமலே வாழ்க்கையைக் கழித்து விடுபவர்கள் பற்றியவை. மனித மனத்தின் ஆழங்காண முடியாத புரிதலுக்கு ரகசிய வழிகளைத் திறந்து வைப்பவை. மனிதர்களை உருவாக்கும் சூழல்கள் பற்றி விவரிப்பவை.

பதிவுகள் ஜூன் 2006; இதழ் 78
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


கவிஞர்களும் தடை செய்யப்பட்ட இசைக்குறிப்புகளூம்!
- சுப்ரபாரதிமணியன் - 
 
சுப்ரபாரதிமணியன்அய்யப்பமாதவனின் கவிதைகளில் உள்ள படிமங்களை திரைக் காட்சிகளாகப் பார்க்கிறபோது ஒரு கவிஞன் ஊடுருவிச் செல்லும் நிலைகளை அறிந்து கொள்ளலாம். நகரம் சார்ந்த அவரின் சித்திரங்கள் கவிதையில் தரும் அழுத்தம் திரைச் சித்திரங்களாகவும் நீள்கின்றன.தொழில் நுட்ப நேர்த்தி அய்யப்பமாதவனின் "இன்று "கவிதையை குறிப்பிடத்தக்க குறும் படமாக்கியிருக்கிறது. இயக்குனர் பாண்டிய ராஜன், ஒளிப்பதிவாளர் செழியன் ஈடுபாட்டால் ரவிசுப்ரமணியனின் கவிதை வாசிப்புப் பின்னணியில் இந்தக் குறும்படம் சாத்தியமாகி உள்ளது. எனது கவிதை ஒன்றை நான் வாசிக்க திரைப்பட கல்லூரியில் பயின்ற பேரெழில் குமரன்  குறும்படமாக்கி இருந்தார்.  மலையாளக் கவிஞர் கடம்னிட்டராம்கிருஸ்ணன் பற்றின ஒரு குறும்படத்தில் அவர் கவிதை வாசிக்கிற இயல்பு அவரை உணர்ச்சி மேலீடானவராக காட்டியது. " ஏ பொயட் " என்னை பாதித்த ஒரு கவிஞனைப்பற்றின படம்.

இப்ராஹிம் சுதிர் என்ற இந்தோனிசியக் கவிஞனின் நீண்ட கவிதை வாசிப்புகளோடு அவனின் இருண்ட இருபத்திரண்டு தின வாழ்க்கை சொல்லப்படுகிற
படம். " ஏ பொயட் " கவிதையின் வாசிப்பு தரும் இசை அதிர்வுகளோடு படம்  துணுக்காய் விரிகிறது. ஜகார்த்தாவில் ஏழு ராணுவ ஜெனரல்கள் கொல்லப்பட்டனர் 1965ல். இந்தோனிசிய அரசாங்கம் பொதுவுடமை இயக்கம் சார்ந்தவர்கள் மேல் அரசு துரோக குற்றம் சுமத்தி லட்சக்கணக்கானவர்களை கைது செய்தது.  அவர்கள் கொல்லப்பட்டார்கள்.இபராஹிம் சுதிர் எந்த விசாரணயும் இன்றி கைது செய்யப்பட்டார். இருபத்திரண்டு தினங்கள்  முகாமில் வைக்கப்பட்டார்.  அப்போதைய சிறை வாழ்க்கை அனுபவங்கள் இப்படத்தில்  பதிவாகியிருக்கின்றன. சுதிரே தன் பாத்திரத்தில் நடித்திருப்பதும் நீண்ட கவிதை வாசிப்போடு தன் சிறை வாழ்க்கையை  இதில் பகிர்ந்து கொள்கிறார்.
 
கைதிகள் சட்டென பெயர் சொல்லி அழைக்கப்பட்டு சாக்குகளால் முகம் மறைக்கப்பட்டு  கொலைக்களத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.எந்த நிமிடத்தில் தாங்கள் அழைக்கப்படுவோமோ என்ற பயம்  அவ்ர்களை நிலை குலையச் செய்கிறது.கை விரல்களால்  தாளமிட்டு பாட்டுப்பாடுகிறவன்  கதவு தட்டப்படும் சப்தத்தால் நிலை குலைந்து போகிறான். தாளமிடும் கை விரல்களை சிதைத்துக் கொள்கிறான். மனநோயாளியாகிறார்கள். பெயர்கள் அழைக்கப்படுவதும் கதவு தட்டப்படுவதும் தொடர்ந்து காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சிகிச்சையற்ற மன நோயாளி இவ்வகை ஒலிகளைக் கேட்கச் சகிக்காமல் காதுகளைப் பொத்திக் கொள்வது போல் சப்தங்களும் அழைப்புகளும் இம்சை என்றாகிவிடுகிறது. பயம் தங்களை விட்டு விலகுவதற்காக அறுவடை கால அனுபவங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். தங்களின்  காதல் அனுபவங்களைச் சொல்லிச் சிரித்துக் கொள்கிறார்கள். முகாமின் அடுத்தத தடுப்பிற்கு பின் இருக்கும் பெண்கள் தங்கள் கணவர்கள், மகன்கள் அங்கிருக்கின்றனரா என்று ஆயாசத்துடன் கேட்டுக் கொள்கிறார்கள். தினமும் கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லும் கைதிகளுக்காக   சமையல் செய்யும் பெண் யாரும் சாப்பிடாத உணவை சமைத்து எனன் பயன் எனப் புலம்புகிறாள். தன்னைக் கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லும் போது சாக்குகளால் முகத்தை மூடாமலிருக்க  வேண்டுகோள் விடுக்கிறாள். கொல்ல அழைத்துச் செல்லப்படுகிற போது  தலை சீவி முக அலங்காரம் செய்து கொள்கிறாள். குழந்தையின் அழுகுரல்கள் முகாமைச் சிதைவுற வைக்கிறது. சிறு சிறு துவாரங்கள் மூலம் அடுத்த அறையைப் பார்த்துக் கொள்வதுதான் அவர்களின் ஆசுவாசமாக இருக்கிறது. கைகள் கட்டப்பட்டு சாக்குகளால் முகங்கள் மறைக்கப்படுகிற வேலையை சில சமயங்களில் சுதிர் மேல் சுமத்தப்படுவது சாவை எதிகொள்கிற மனோபாவத்துடன் அவர் அதை செய்கிறார். மன நோயாளியாக இருந்து சாவை எதிகொள்ளும்  கைதிகளின் அவலம் படம் முழுக்க நிறைகிறது. சுதிரோடு முகாமில் இருந்த சிலரும் இப்படத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்பது இப்படப் பார்வையாளர்களை நேரடியாகப் பாதிக்கிறது. கவிதை வெளிப்பாடு இந்தோனிசியாவின் மரபு ரீதியாக சம்பந்தப்பட்டிருப்பது வலுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏழு நாட்களில் எடுக்கப்பட்ட இப்படம் 22 தின முகாம் சித்திரவதைகளை வெளிப்படுத்துகிறது. தவறுதலாக சுதிர் கைது செய்யப்பட்டதாக தகவல் தரப்பட்டு வெளியேற்றப்படுகிறார். முகாமின் ஓலங்கள் கவிதைகளாக படம் முழுக்க நிறைந்திருக்கிறது. 

"கறுப்பு  ஞாயிறு" என்ற ஹங்கேரியப்படம் தரும் இஅசை அழுத்தம் சித்திரவதை முகாமிலைருந்து கொல்ல  வெளியேற்றபடுவதானதாகவே இருக்கிறது. இசை மனிதர்களை ஒருங்கிணைப்பது, கரைந்து போக வைப்பது  அதே சமயம் இன , நிற வெறி எல்லாவற்றையும் குறுக்கீடாக்குவது பற்றினது இப்படம். புடாபெஸ்டில் உணவு விடுதியொன்றில் பணிபுரியும் ஒரு காதலர் பற்றி கதை தொடங்குகிறது. அந்தரஸ் என்ற பியானா கலைஞன் அந்த உணவு விடுதியில்  பியானோ வாசிக்க வந்து சேர்கிறான். இலோனோவின் இசை ஆளுமை அவனையும் காதல் வலைக்குள் தக்க வைத்துக் கொள்கிறது. முக்கோணக்காதல்  சிக்கல் சுலபமாகிறது. இலோனோவின் பிறந்த நாளன்று அவளுக்காய் தயாரிக்கப்பட்ட இசைக்குறிப்பை ஆந்தர்ஸ் வாசிக்கிறான். அதற்கு  " கறுப்பு ஞாயிறு'  எனப் பெயரிடுகிறான். தினந்தோறும் இசை வாசிப்பின்  உச்சகட்டத்தில் அதன் அமுத்தம் பலரை தற்கொலைக்கு தூண்டிவிடுகிறது. நூற்றுக்கணக்கானோர் வெவ்வேறு வகைகளில் தற்கொலை செய்து  கொள்கின்றனர்.  அது "தற்கொலை கீதம்" என்றப் பெயரையும் பெற்று விடுகிறது. 

நாஜிகளின் அதிகாரத்துவம் எல்லோரின் மீது படிகிறது.  ஆந்தரஸ் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிறான். ஜெனரல் ஒருவன் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள இலோனோ பலியாகிறாள்.தன் காதலனை கைதியிலிருந்து மீட்க அவளுக்கு வேறு உபாயம் தெரிவதிலை. தற்கொலை கீதத்தால் தற்கொலைகள் தொடர்வது  ஆந்தரஸ்க்கு உறுத்தலாகிறது. இலோனோ தான் கேட்டும் பாட இசையாத போது மேஜர் ஜெனரலின் வேண்டுகோளுக்காய் பாடுவது அவனை பாதிக்கிறது. ஆந்தரஸ் தற்கொலை செய்து கொள்கிறான்.அகதி முகாம்களுக்கு கைது செய்யப்பட்டவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். தன் காதலனை மீட்க இலோனோவால்  முடிவதில்லை.

ஹங்கேரியின்  "கறுப்பு ஞாயிறு"  பிபிசி, அமெரிக்க ஒலிபரப்புச் சாதனங்களில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டிருந்தது. இன்னும் பிபிசி அதற்கானத் தடையை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகள் மே 2006; இதழ் 77
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்

- சுப்ரபாரதிமணியன் -

சுப்ரபாரதிமணியன்திரைப்பட ரசனை என்பது அதன் கருத்து, வடிவம், சொல்லும் தன்மை என்று வெவ்வேறு வகையாய் அறியப்படுகிற பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. நல்ல கதையமைப்பு மட்டுமே சிறந்த படப்பாகி விடுமா. மனதை அள்ளும் ஒவ்வொரு பிரேமும் சில சமயங்களில் அவையே உயர்ந்தவை என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடும். சில சமயம் சிறுகதையின் முடிவு போல படத்தின் முடிவு ரசனையை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்று விடும். திரைப்படத்தின் ஒவ்வொரு கேமரா பிரேமிலும் நல்ல திரைப்படத்தின் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு பிரேமைத்தாண்டி இன்னொரு பிரேமிக்குள் நுழைகிற எத்தனத்திலும் அதன் அழகு இருக்கிறது.அதன் ஒழுங்கமைப்போ ஒழுங்கமைப்பு இல்லாதத் தன்மையோ எடிட்டிங் என்ற கோர்வைக்குள் பல ரகசிய இயக்கங்களை உருவாக்குகிறது .அவற்றை உணர வைக்கிறது. உணர்வை அனுபவங்களாக மாற்றிக் கொள்ள முடிகிறது. அந்த அனுபவங்கள் அலைக்கழிந்து தேடுதலாய் அமைந்து விடுகின்றன. ஓர் அனுபவம் அற்புதம் என்று மெய்சிலிர்க்க வைக்கிறது.உடனடிப் பாராட்டும் உணர்வித்தலும் தள்ளிப் போக மனதில் வைத்து மதிப்பீடு செய்து கொள்வதும் அதன் மூலம் மனித ஆன்மத் தேடலைக் கைக்கொள்வதும் பின்பு சாதாரணமாகிப் போகிறது. இந்த சாதாரணம் கவிதைப் படிமமாய் நிற்கிறது சில படங்களில்.

பூட்டான் போன்ற சிறு நாடுகளிலிருந்து வரும் படங்கள் நம் தமிழ் படங்களை முன்னிருத்தி தாழ்வு மனப்பான்மையை உருவாக்குபவை. இளம் தலை முறையிலிருந்து வந்திருக்கிற இயக்குனர் நோர்புவின் படங்கள் நூறு வருட தமிழ் திரைப்படத்தை சில விடயங்களில் கேள்விக்குள்ளாக்குபவை. நிதானமும் அழகும் புதுத்திரைப்பட மொழியும் உயர்ந்த படங்களை உருவாக்கும் சாத்தியங்களை காட்டுகின்றன். நோர்புவின் இந்த நேர்த்தி அழகிற்குக் காரணம் அவரின் முந்தைய ஈடுபாடுகள்தான்.கவிஞர்களும், யோகிகளும் கலந்த குடும்பம் அவருடையது. புத்த மடங்களும் புத்த மதம் சார்ந்த வெவ்வேறு வகையான நிறுவனங்களும் அவரின் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவை. பத்தொன்பது வயது வரை புத்த பிட்சுவாக இருந்தபோது முதல் திரைப்பட அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இந்தியாவில் ரெய்மண்ட் ஸ்டெயினர் குழந்தைகள் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அவரிடம் புகைப்படம் மற்றும் கேமிரா சார்ந்த பால பாடத்தை கற்றார். தொண்ணூறில் பெர்னாடோ பெர்ட்லூசியின் " லிட்டில் புத்தா"வின் தயாரிப்பு அவருக்குத் தந்த அனுபவங்கள் தனது நாட்டுத் திரைப்படத்தை இயக்கும் உந்துதல்களை அளித்திருக்கிறது. "கப்" என்ற படம் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து " டிராவலர்ஸ் அண்டு மாசிசியன்ஸ் " என்ற படமும் பூட்டானிலிருந்து வெளியாகியிருக்கிறது.

புத்த மடத்தில் வேலையில் இருக்கும் டான்னப்பிற்கு தினமும் எதிர்பார்க்கும் கடிதங்கள் அங்கிருந்து அவன் இன்னும் வளமையான நாட்டிற்கு செல்லும் கனவுகளைக் கொண்டிருக்கின்றன. மடத்தின் ஒழுங்கு, இயற்கை சூழல் என்பதெல்லாம் அவனை ஆகர்சிப்பதில்லை. அவனின் ஆசை அமெரிக்காவிற்குப் போவது. ஆப்பிள் பொறுக்கும் வேலையாக இருந்தாலும் அதை அமெரிக்காவில் சென்று நிறையப் பணத்தைக் கண்களால் பார்த்து ஆனந்திக்கிற கனவுகள் அவனை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. வரும் ஒரு கடிதத்தை நம்பி கிளம்பி விடுகிறான். அவசர கதிப்பயணம், பேருந்திற்காகக் காத்திருக்கிறான். வந்து சேராத பேருந்திற்காகக் காத்திருப்பவர்கள் அறிமுகமாகிறார்கள். ஆப்பிள் விற்பவன், சாமியார், தாள் தயாரிப்பவனும் அவனது இளம் மகள் சோனமும்.

புத்த சாமியார், டாண்டப்பின் திமிறிக் கொண்டிருக்கும் எண்ணங்களும் அலைபாய்தலும் அறிந்து ஒரு கதை சொல்கிறார். அது இரண்டு சகோதரர்கள் குறித்தது. ஒருவனின் செயலும் எண்ணங்களும் கூர்மையானதாக அமைந்திருக்கின்றன். மந்திரவாதியாகிற எண்ணமும் அவனுக்கிருக்கிறது. அவனின் சகோதரனுக்கு மந்திரத்தில் ஆர்வம் இல்லை. கட்டுக்கடங்காமல் ஓடும் குதைதிரையாய் அடர்ந்தக் காட்டிற்குள் செல்கிறான். ஒரு கிழவனையும் இளம் பெண்ணெருத்தியையும் சந்திக்கிறான். கிழவனைக் கொன்று விடுவது அவசியமாகிறது. விசமூலிகைகளைக் கொடுத்து கொல்ல முயல்கிறான். பிறகு பயந்து அடர்ந்தக் காட்டிலிருந்து வெளிவர முயன்று அலறுகிறான்.

அடர்ந்தக் காட்டின் அழகும் இளமையின் பாலியல் உணர்வுகளும் இளம்பெண்ணை அடைவதற்கான அவனின் போராட்டங்களும் மந்திரவாதியாக விரும்பாதவனின் உலகமாக் மாறி விடுகிறது. ஆனால் மந்திரம் கற்றுக் கொள்ளும் இன்னொரு சகோதரனுக்கு வாழ்க்கை இயல்பாய் இருக்கிறது.

புத்த சாமியார் இக்கதையை பல்வேறு பிரிவுகளாய் சொல்கிறார். பேருந்து கிடைக்காமல் காத்திருக்கும் போதும், லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்யும் போதும், இரவில் தீ மூட்டி ஏகாந்தத்தை அனுபவிக்கிற போதும், நடந்து கொண்டே பயணப்பாதையைக் கடக்கிற போதும் ஓய்வெடுக்கிற போதும் என்ற வகையில். சோனம் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாதவள். அவளின் இளமை அழகு அவனை கவருகிறது. புத்த சாமியாரின் கதையும் சோனாவின் அழகும் அவனைக் குழப்பத்திலாழ்த்துகிறது.

மலைப்பகுதியின் அபரிமிதமான அழகும், அதன் இன்னொரு புறமாய் அடர்ந்தக் காட்டின் விசித்திரங்களும் இப்படத்தை வசிகரமாக்குகின்றன. வாழ்ககையின் நிலையில்லாதத தன்மையின் மத்தியில் நிலையான இயற்கை ஆறுதலும், நிம்மதியும் தரும் கணங்களை அனுபவப்படுத்துகிறவை ஒவ்வொரு காட்சியும். ஜென் கவிதைகள் தரும் பூடகமாயும், படிமங்களாயும் இப்படம் அமைந்திருக்கிறது.

நோர்புவின் முதல் படமான " கப் " வெளிவந்த போது ஏற்படுத்தின பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. பூட்டானிலிருந்து முதல் படம் என்ற அளவில் புத்த மடாலயங்களை மையமாகக் கொண்ட கட்டுடைத்தலாகவும் அமைந்து விட்டிருந்தது. துறவும் தத்துவமும் மட்டுமல்ல குதூகலமும் வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக்குகிறவை மடாலயங்கள் என்றக் கருத்து சுலபமாக நிலை கொள்ள ஆரம்பித்தது. வணிகமும், சீரழிவும் சாதாரணமாகிப் போன வல்லரசு நாடுகளின் திரைப்படங்களுக்கு சவால் விடுகிற வகையிலும் "கோப்பை" அமைந்திருந்தது. மடாலயங்களோ மத நிறுவனங்களோ நவீன வாழ்க்கையின் பாதிப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் தனித்து இயங்க முடியாது என்பதை சாட்சியாக்கியது.

1998 உலகக் கோப்பைக்கான கால் பந்துப் போட்டி நடந்து கொண்டிருந்த போது உலகம் ஒரு வகை காய்ச்சலால் பீடித்திருந்தது. செய்தித்தள்களும் பொதுவான ரசிகர்களின் பகிர்வில் உலகக் கோப்பை பற்றினச் செய்திகளும் சாதாரணமாகியிருந்த காலம். தர்மச்சாலாவில் இருக்கும் புத்த மடாலாயத்திற்கு இரண்டு திபேத்திய அகதிகள் வந்து சேர்கிறார்கள். இவர்கள உலகக் கோப்பையை தொலைக்காட்சியில் பார்த்து விடுகிற தீர்மானத்துடன் பக்கத்து கிராமத்திற்கு தொலைக்காட்சி பார்க்க செல்கிற செயல்கள் திருப்தியளிக்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியொன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வர வைப்புத்தொகை கட்ட சிரமப்பட வேண்டியிருக்கிறது. உலகக்கோப்பை ஜீரம் மற்ற புத்தத் துறவிகளுக்கும் பரவவே மாடாலயத்தின் மரபு ரீதியான சம்பிராதயங்கள் உடைந்து நொறுங்கும் சந்தர்ப்பங்களை மெளனமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியாவின் அருகாமையிலிருந்து இவ்வளவு நேர்த்தியான படம் என்ற அளவிலும் இந்திய திரைப்படத்திற்கான சவாலாகவும், வெற்றுத் தூண்கள் நொறுங்கும் சந்தர்ப்பங்களை வெளிக்காட்டுகிற தருணங்களாகவும் பூட்டானின் படங்களின் வருகை அமைந்திருக்கிறது.

பதிவுகள் அக்டோபர் 2006; இதழ் 82
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம்! மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்....

- சுப்ரபாரதிமணியன் -

சுப்ரபாரதிமணியன்இவ்வாண்டில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்பட விழாக்களில் இடம் பெற்ற தமிழ் திரைப்படங்கள், சிம்மாசனங்களுக்கு மத்தியில் உடைந்த நாற்காலிகளையே ஞாபகப்படுத்துகின்றன. கோவாவில் நடைபெற்ற சர்வதேசத்திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் 21 இந்திய மொழிப்படங்களில் மூன்றில் ஒரு பங்காய் ஏழு படங்கள் மலையாளிகளுடையது. தமிழில் இடம் பெற்றிருந்தது அமீரின் இயக்கத்திலான ராம். மன சிதைவு நோய் கநாயகர்களின் பாத்திரத்தன்மையில் வன்முறைக்காட்சிகளுக்கும், திகில் சூழலுக்கும் குறைவு வைப்பதில்லை என்பதை கடந்த ஆண்டுகளில் தமிழில் வந்திருக்கும் இவ்வகைப் படங்கள் காட்டுகின்றன. ஓரளவு நேர்த்தியுடன் இப்படங்கள் வெளிவருவதே தமிழர்களின் பாக்கியம் என்றாகி விட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்தாவது கேரளா சர்வதேசத்திரைப்பட விழாவில் கோவாவில் இடம் பெற்றிருந்த ஏழு மலையாளப் படங்களும் இடம் பெற்றன. இதுவரை கா¡ணாத அளவு 4500 பிரதிநிதிகள். அதில் 50 சதவீதம் இளைஞர்கள். கல்லூரி மாணவர்கள். 7 தியேட்டர்களில் படங்கள். மலையாளிகளின் அக்கறை எல்லா விடங்களிலும் மிளிர்ந்து கொண்டிருந்தது. தமிழில் சாரதா ராமனாதனின் இயக்கத்திலான "சிருங்காரம்" படம் இடம் பெற்றது. தேவாதாசிகளை மையமாகக் கொண்டது என்பதும் , லால்குடி ஜெயராமனின் இசை , தோட்டத்தாரணியின் கலை இயக்கம் போன்றவற்றின் தன்மையாலும் எதிர்பார்புகளை ஏற்படுத்தி இருந்தது.

1940களை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம்.தேவதாசிகளின் பொட்டுகட்டும் பழக்கத்தை இது விவரிக்கிறது. 40 வருடங்களாய் தேவதாசியாய் இருந்தவள் வயது முதுமை காரணமாக தனது மகளுக்கு அப்பட்டத்தை எந்த வித மன சிக்கலும் இன்றி பெரும் சடங்குடன் ஒப்படைக்கிறாள். மிராசுவின் பாலியலுக்குத் தீனி போடுகிறாள். நாட்டியமும் ஊர் பஞ்சாயத்தில் அவளுக்கு தரப்படும் முன்னிலை நாற்காலியும் பெருமையாகப்படுகிறது. அதே சமயம் ஊர் காவலாளி கோவில் நாட்டியத்தை வேடிக்கை பார்ப்பது குறித்து பாவச் செயல் என ஊரிலிருந்து விலக்கப்படுவது குறித்த முணுமுணுப்பு கூட பலனில்லாததாகிறது. தேவதாசிக்கு இளம் கோவில் காவலாளியின் நாட்டிய ரசனை மற்றும் சிறு உதவிகள் உவப்பாக இருக்கின்றன. அவள் ஆடும் போது கால் சலங்கையிலிருந்து நழுவுபவற்றை எடுத்து அவன் எடுத்து வைத்து காட்டுவது கூட ஊர் மக்களின் பேச்சில் அவலாகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போராளிகளாக அந்த கிராமத்தில் தென்படும் நாலைந்து பேர் உள்ளூர் மிராசுவை கொலை செய்யத்திட்டமிட்டிருப்பதை அறிந்து இளம் காவலாளி தகவல் தரப்படுவதை மிராசு ஊர்காவலாளி கிளப்பி விட்ட புரளி என குற்றம் சுமத்தி அவனை ஊரிலிருந்து விலக்கி வைக்கிறார். மிராசு சீமையில் படித்தவர் என்ற ¡லும் அவரின் இவ்வகை செயல்கள் தேவதாசி, இளம் கோவில் குருக்கள் உட்பட சிலரின் முணுமுணுப்பினால் எந்த எதிர் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.இளம் கோவில் காவலாளி ஊரிலிருந்து விலக்கப்பட்டு காட்டிற்குள் இருக்க வேண்டியாகிறது. தேவதாசி மீதான தனது ஈடுபாட்டின் காரணமாக மிராசுவால் தான் கொல்லப்படலாம் என்ற பயம் ஏற்படுகிறது. சுதந்திரப்போராட்ட போராளிகளூடன் சேர்ந்து கொள்கிறான். அந்த கிராமத்திற்கு வரும் கலெக்டருக்கு தேவதாசி இணங்க வேண்டும் என்பதை மறுத்து கோவில் பொட்டினை சன்னதியில் சமர்ப்பித்து விட்டு வெளியேறும் தாசி சுதந்திரப்போராளிகளுடன் சேர்ந்து கொள்கிறாள். தாசிப் பொட்டு திருடு போகிறது.ஊர் காவலாளியும், சுதந்திரப்போராளிகளும் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார்கள். மிரசுவால் கர்பமாகியிருக்கும் தாசி குழந்தையைப் பெற்றெடுத்து விட்டு மரணமடைகிறாள். அக்குழந்தை பெரியவளாகி பிராமணர் ஒருவரின் பராமரிப்பில் வளர்ந்து குடியரசு தின விழாவில் நாட்டியமாட அழைக்கப்படும் போது அவளுக்கு அவளின் பூர்வீகம் சொல்லப்படுகிறது.

தந்சைப்பின்னணியில் கதை சொல்லப்பட்டுருக்கும் விதமும், லால்குடி ஜெயராமனின் இசையும், தோட்டத்தாரணியின் கலை நயமும், இவ்வகை படங்களுக்கேயான குறைந்த பட்ஜெட் என்ற குறை இல்லாமல் எடுக்கப்பட்டிருப்பதும், கதை நாயகியின் மிகச்சிறந்த நாட்டியமும், சதிரின் ஆதாரங்களும் இப்படத்¢தை பார்க்க ஏதுவாக்குகின்றன. ஆனால் படத்தின் இறுதிப்பகுதியின் குழறுபடிகள் இப்படக்கலைநர்களின் ஈடுபாட்டை வீணாக்கி விட்டது.

தாலிப்பொட்டை திருடும் போராளி ஊர்காவலன் அதை கோவில் மண்டபத்தில் புதைத்து வைத்ததை அறிந்து தாசி அதை தோண்டிஎடுத்து அணிந்து கொண்டு மெய்மறப்பதும், அவளின் விருப்பமான கோவில் தீப்பந்தத்திலிருந்து தீ கொண்டு வந்து தனது பிணம் எறிக்கப்பட வேண்டும் என்பதை அவள் மகள் நிறைவேற்ற தீப்பந்தத்தை எடுத்து வந்து கல்லறை தீ வைத்து வழிபடுவதும், ஊர்க்காவலாளி தூக்கிலிடப்படும் கணத்தில் தாசியின் குழந்தை பிறபப்பதும், மிராசுவின் பாலியல் மற்றும் பணத்திற்காக தாசி மெய் மறந்து அனுபவிப்பவளாக இருப்பதும், கலைக்டருடன் படுக்க வேண்டும் என்பதே அவளின் உறுத்தலாக அமைந்து அவள் பொட்டை கழற்றி கோவிலுக்கு சமர்ப்பிப்பதும், தாசி பொட்டு கட்டும் முறை பற்றின உறுத்தலோ அருவருப்போ படத்தின் எந்த கணத்திலும் வெளிப்படாமல் தாலி என்னும் புனிதம் பற்றின வெளிப்பாடுகளும் அதை காப்பதற்கான அக்கறையும் வெளிப்பட்டிருப்பதும் இப்படத்தின் நோக்கத்தை சந்தேகப்படுத்துபவனாக இருக்கின்றன.இந்திரா செளந்திர ராஜனின் வசனங்கள் இயல்பான சூழலுக்கு பொருந்தி வருபவையாக அமைகிற முயற்சிகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. உரையாடலின் ஒரு பகுதி பேச்சு முறையிலும், இன்னொரு பகுதி உரைநடையாகவும் முரணாக அமைக்கப்பட்டிருப்பதில் செயற்கைத்தனம் வழிகிறது. பல சம்பவங்கள் அதன் தர்க்கத்திற்கு முரணாக பல கேள்விகளை எழுப்புகின்றன.

சாரதா ராமனாதனின் முதல் முயற்சி என்ற முறையிலும், அதை வெளிப்படுத்த அக்கறை கொண்டிருப்பதும் ஆறுதல் தருபவை. பெண்ணியத்தில் அக்கறை கொண்டவையாக அவரின் பேச்சு வெளிப்படும் நிலையில் பெண்ணியம் பற்றின புரிதலை சந்தேகத்திற்குள்ளாக்குவதாக இப்படம் அமைந்து விட்டிருக்கிறது.

பதிவுகள் ஆகஸ்ட் 2006; இதழ் 80
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்!    _ சுப்ரபாரதிமணியன் -

சுப்ரபாரதிமணியன்வீட்டு முற்றத்தில் சாயம் தோய்த்த துணிகளைப் பெண்கள் காயப் போடுகிறார்கள். திருமண ஊர்வலம் ஒன்று கடந்து போகிறது. ஒரு பெண்மணி வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு அவ்வப்போது கடந்து போகிறாள்.ஒரு குழந்தை தடுமாறி தாயைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது தன்னை அலங்கரித்துக்கொள்ளும் பெண் முற்றத்தை அலட்சியமாக பார்த்துக் கிடக்கிறாள். அந்த முற்றத்தில் ஒரு நீதிமன்றம் கூடியிருக்கிறது. இரண்டு தரப்பிலான வழக்கறிஞர்கள் அங்கு நீதிமன்றப் பணியில் இருக்கிறார்கள். உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களின் மேல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. சில வழக்கறிஞர்களால் ஆப்ரிக்காவின் சுய தன்மையைப் பாழாக்கி அதை ஒரு நவகாலனிய நாடாக்குவதில் இந்த் நிறுவனங்கள் நிணுக்கமாக எப்படிச் செயல்படுகின்றன என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்த நிறுவனங்களின் சார்பிலும் சில வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். புலம்பெயர்தல் ஆப்ரிக்காவில் சாதாரணமாகி விட்டது. சகாராவில் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கல்வி, உடல் நலத்திற்கு நிறைய நிதிகள். அரசு கல்வி கொடுத்தபின் எதற்கு வெளிநாடு போகிறாய் என்ற கேள்விகள். உலகமயமாக்கலின் நாகரீகம் உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருவன் பாட்டு மூலம் தனது மனக் குறையை வெளிப்படுத்துகிறான். இன்னொருவன் விசாரணைக்கு வந்து நின்று பேச எதுவுமில்லாததாக மௌனமாகவே இருக்கிறான். அதீத மனிதத் தன்மையில் பல விடங்கள் நடப்பதாய் தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன. உயர்ந்தபட்ச தங்கம் கிடைக்கும் நாடு. ஆனால்யாரும் தங்கம் அணிவதில்லை. நீக்ரோக்கள் சோம்பேறிகள் என்றி குற்றம் சாட்டப்படுகிறார்கள். நீதிமன்றம் நடக்கும் முற்றத்தை தாண்டி சுற்றுச்சுவருக்கு வெளியே இந்த வாதங்களைக் கேட்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சாவகாசமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மதப்பிரச்சாரம் நடக்கிறது. வžகரமான வாதங்கள். மரங்கள் முக்யம் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தை நடத்த மரங்கள் எதற்கு . உற்பத்திப் பொருள்போதும். உடையின் பின்புற ஊக்கை போடச்சொல்லி ஒருபெண் நீதிமன்றத்தில் இருப்பவனிடம் கேட்கிறாள். பொருளாதார மேம்பாடு யார்பொருட்டு என்ற விவாதம் கிளம்புகிறது. திருவ ஜஸ்கட்டிகள் உருகுகின்றது என்பதும் விவாதமாகிறது. எய்ட்ஸ் வியாதிக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. கடன் நாட்டைச் சீரழித்துவிட்டது. ஆப்ரிக்கா அடிமை தேசமாகிக் கொண்டிருக்கிறது. உலகவங்கியின் மேல்குற்றம் சட்டப்படுகிறது. அவர்கள் இல்லாவிட்டால் எல்லோரும் பிச்சைக்காரர்களாகி இருப்பார்கள் என்கிறது ஒரு குழு. இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வது பிசாசிடம் வாழ்க்கையை ஒப்படைப்பது போன்றது. கடன் பிசாசிடம் நாடு திணறுகிறது. இருப்புப்பாதை மூடப்படுவதால் தோடர்பற்றுப் போவிட்ட
ஒரு கிராமத்தைப் பற்றி ஒரு பெண் சொல்கிறாள். ஆப்ரிக்காவில் திட்டமிடப்பட்டு இருப்புப் பாதைகள் அழிக்கப்படுவது மக்களை அந்நியமாக்குகிறது என்ற வேதனை ஒரு பெண் பிரதானமாய் பகிர்ந்து கொள்கிறாள். அப்ரிக்காவின் வறுமைத்தோய்ந்த நிலை அவசரப்பட்டு உலகவங்கி போன்றவை குற்றவாளிகளாக்கப் படுகின்றன. மாலி புறநகர் பகுதியின் ஒரு வீட்டு முற்றத்தில் நடக்கும் இந்த நீதிமன்றம் சாதாரண மனிதர்களின் நடமாட்டங்களுக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்ட நாடகமாகிறது. இவை ஆப்ரிக்க திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குனராக ஆப்டெர்ராஹ்மனே சிஸ்ஸாகோவின் சமீபத்திய "பமாகோ" என்றத் திரைப்படத்தில் இடம்பெறும் அம்சங்களாகும். திரைப்படத்தின் புதிய மொழியை அவர் படங்களில் காணலாம் என்பதற்கு அத்தாட்சியாக 'பமாகோ' படம் வெளிப்பட்டிருக்கிறது. கதைசொல்லியின் தன்மையினூடே அவரின் அரசியல் கடமை குறித்த அக்கரையிலிருந்து அவர் விலகாமல் இருப்பதை அவர் படங்கள் காட்டுகின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளால் மரபுக்கும், புதுமைக்கு இடையில் நடக்கும் போராட்டம் இவரின் சமீபத்திய படைப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. நவீன உலகத்தின் தொழில்நுட்ப அம்சங்களும், உபகரணங்களும் மனிதனை ஆத்மாவைத் தொடாமல் விலகி நின்று வேடிக்கை பார்ப்பதை வெளிப்படுத்தியது. ஆப்ரிக்க அரசியல் குறித்த விடயங்களைச் சொல்வதற்காக அவர் எடுக்கும் தளம் ஆப்ரிக்க கிராமங்களாக இருக்கிறது. "பமாகோ"வில் மெலே என்ற பாடகியின் கணவனுடனான முறிந்து போகிற தாம்பத்ய உறவை சொல்ல அரம்பிக்கிற படம் வெவ்வேறு தளங்களுக்கு படரசிகனை இழுத்துச் செல்கிறது. ஆப்ரிக்காவின் வறட்சியான கிராம புழுதியும் வெயிலும் வறுமையும் தரும் சித்திரங்களூடே 'கௌபாய் மற்றும் இந்தியர்களின்' வீரதீர செயல்களின் விமர்சனமும் நீதிமன்றஅலசல் போலவே இன்னொரு தளத்தில் இப்படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. முரணான சமூகங்களை அதன் மூலம் முன் வைக்கிறார். பழங்குடி சமூகத்தின் கதை சொல்லும் மனத்தினன் ஆக அவரின் படங்களில் சிஸ்ஸாகோ வெளிப்பட்டிருக்கிறார். நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் எந்தவிதத் தொடர்பும் அற்று அந்நியமாகிப்போய் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கும் மனிதர்களை சிஸ்ஸாகோவின் படங்களில் பார்க்க முடிகிறது.

"எல்லாம் இழந்து போனதான உணர்வும் இறந்த காலமும் என்னைப் படம் எடுக்க வைத்தது. எல்லா சொத்துக்களையும் இழந்திருந்தேன். பம்பாரா என்ற என் மொழி தொலைந்து போயிருந்தது. குழந்தைப்பருவ நண்பர்கள் இல்லை. எனவே என்னைச் சுற்றி இருப்பவர்களை, இருப்பவற்றை ஆழமாகக் கவனிக்கவும் கற்றுக் கொண்டேன். என் மனதில் ஆழப் பதிந்திருப்பவற்றை மீட்டெடுக்க நான் படம் எடுக்க வேண்டியிருந்தது. என் அம்மாவின் மூத்த மகனை அவளின் அல்ஜ“ரியத் தகப்பன் கட்டாயப்படுத்தி பிரித்திருந்தது என்னை மிகவும் பாதித்தது. என் அம்மாவையும் அது மிகவும் பாதித்தது. அவனைப் பற்றி நிறைய போசுவார்கள். இரண்டு தடவைதான் அவனை நான் சந்தித்திருக்கிறேன். ரஷ்யாவிற்கு சென்று படமெடுக்க கற்பதற்காகச் சென்றபோது ஒருமுறை வந்தான். அவனை நான் மிகவும் நேசித்தேன். மிகுந்த அன்பால் அவனைப்பற்றி என் அம்மா நிறையப் பேசினாள். அவனி ஆதர்சமாகக் கொண்டேன். அவனைக் கதாநாயகனாக மனதில் கொண்டு நான் படமெடுக்கிறவனானேன். அதற்கு முன்னால் திரைப்படங்கள் என்னை நெகிழ வைத்ததில்லை. எனது மங்கலான நினைவுகளில் இரண்டு மூன்று சார்லி சாப்ளின் படங்கள் மட்டுமே இருந்தன.எனது குடும்ப சூழல் பின்னணியும், அரசியல் அக்கறையும் என் படங்களின் வெளிப்பாட்டு வடிவமாக்கிக் கொண்டேன்" என்கிறார் சிஸ்ஸாகோ.

ஆப்ரிக்க சமூகத்தின் அரசியல் தீண்டாமையை இன்னொரு வடிவத்தில் சொல்லும் படம் "சராபினா" பாடல்கள், நடனங்கள் மூலம் கதை சொல்லும் உத்தியை இப்படம் கையாண்டிருக்கிறது. அதுவும் மாணவர்களின் துள்ளல் மிகுந்த பாடல்களும், ஆட்டமும் இப்படத்தை வேறொரு நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இந்த உணர்வெழுச்சியின் மறுபுறமாய் அவர்களுக்கு நேர்கிற அரசியல் அனுபவங்கள் அவர்களை செயலற்றவர்களாக ஆக்குகிறது. ஆனால் அந்தப் பாடல்களை அதிகாரம் அடக்கிவிட முடியாது. எல்லோர் வாய்களிலும் அவை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் என்பதை இப்படம் காட்டுகிறது. 1976ல் நடந்த அரசியல் கிளர்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றதை நாடமாக்கி பரவலானது. இது நாடகத்திலிருந்து திரைப்படமாகியிருப்பதால் by2 வடிவத்திற்கு ஒத்திசைவான பாடல்களும், நடனங்களும் திரைப்படத்திலும் அதே வடிவமாக அமைந்துவிட்டிருக்கிறது. சரபினாவிற்கு பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அவளின் கனவை அடிக்கடி நெல்சன் மண்டேலாவின் படத்திற்கு முன் நின்று அவரோடு போசுகிற இயல்பில் பகிர்ந்து கொள்கிறாள். அவளுக்கு ஆதர்சமாக இருப்பவள் கோல்டுபர்க் என்ற சரித்திரம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியை. மறுக்கப்பட்ட நீதியையும், மீட்டெடுக்கப்பட வேண்டிய மனித உரிமைகளைப் பற்றியும் வகுப்பில் மாணவர்களிடம் கோல்டுபெர்க் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். சரித்திரம் கற்பிக்கும் சாக்கில் பொதுவுடைமை, புரட்சி பற்றி போதிக்கிறாள் என்றக் குற்றச்சாட்டும் கண்காணிப்பும் அவளின் மீது உண்டு. காவல்துறை அவளது நோட்டமிடுவதும், அவள் வகுப்பெடுக்கும்போது கூர்ந்து கவனிப்பதும் சாதாரணம். சராபினாவின் வகுப்புத்தோழியொருத்தி அரசியலில் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடுவதும் அவளின் வகுப்பையும் பாதிக்கிறது. ஆப்ரிக்க சமுக எழுச்சிக்கான மாணவ்ர்களின் எண்ணமாய் அது விரிகிறது. பள்ளியில் காவல்துறையின் அத்துமீறலும், அதை எதிர்த்த மாணவர்களின் போராட்டங்களும் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்ந்த கலவரங்களுக்கும் இட்டுச் செல்கிறது. பினாவும் அவளது
வகுப்பினரும் மிகவும் மோசமான சிறைசித்ரவதைகளுக்குள்ளும் கொடுமைக்கும் ஆளாகிறார்கள். கோல்டுபர்க்கும் சிறை பிடிக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாகிறார். மாணவர்களின் எழுச்சி சிதைக்கப்படுகிறது. மாணவர்கள் உயிரற்ற பிணங்களாய் சிறையிலிருந்து வெளிவருகிறார்கள். தங்கள் வகுப்பினரைத் தேடுகிறார்கள். ஜோகன்ஸ்பர்க்கில் ஒரு வெள்ளைக்காரன் வீட்டில் வேலை செய்யும்
சரபினாவின் அம்மா அவளுக்கு ஆறுதலாய் அமைகிறாள். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் விதைகளை மனதில் ஆழமாகப் பதிக்கிறார்கள். மாணவ்ர்களின் எழுச்சியும் போராட்டமும் வெளிப்படும் தீவிரத்தை படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆழமாக்குகின்றன. பாடல்களும் அதனூடனான ஆடல்களும் மாணவர்கள் போராட்டங்களை உணர்வு பூர்வமிக்கதாக ஆக்குவதாய்
அமைக்கப்பட்டிருப்பதில் மாலை சமூக எழுச்சியின் சுயம் வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு உட்பட்ட பல மாணவர்களின் போராட்டங்களை இப்படச்சூழலில் வைத்துபார்க்கலாம். தமிழில், இந்தி எதிர்ப்பி போராட்டச் சூழல்களில் மாணவர்களைக் கொண்டு இது போன்ற படங்களின் தேவையை இப்படம் வலியுருத்துகிறது. இது போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பாவது மாணவர்களை தங்களின் அரசியல் உணர்வு குறித்து விழிப்படையச்செய்யும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் சக்தியும் போராட்ட உணர்வும் தட்டி எழுப்பப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தை இப்படம் உணரச் செய்கிறது. அதற்குப் பயன்பட்டிற்கும் பாடல், நடனம் சார்ந்து கதை சொல்லும் இயல்பில் வழக்கமான பாணி தகர்ந்துபோய் திரைப்படம் பார்ப்பதை உணர்வெழுச்சி கொண்டதாக்குகிறது. ஆப்ரிக்க சமூகம் பற்றின பலவர்ண யதார்த்தத்தை வெளிப்படுத்தும் இந்த துண்டு வளையல்கள் ஒரு கோணத்தில் கலைடாஸ்கோப்பின் பல வர்ண ஜாலத்தை வெளிப்படுத்துபவை. கறுப்பு சமூக மக்களிடம் மிஞ்சியிருக்கும் புன்னகையையும் வெளிப்படுத்துபவை.

பதிவுகள் டிசம்பர் 2007; இதழ் 96


இலக்கிய ரசிகைகளின் தனிமை வாழ்க்கை!
- சுப்ரபாரதிமணியன் -

சுப்ரபாரதிமணியன்சேரன் நடித்த " ஆடும் கூத்து" திரைப்படத்தில் நாயகி பின் நோக்கிய காலத்திற்குச் சென்று தன் வாழ்க்கையைத் தேடிப்பார்க்கிறவளாக இருக்கிறாள்.மனபிராந்தி போன்ற அவளின் வியாதியை அலசும் வைத்தியரும் வீட்டில் உள்ளோரும் அவள் படிக்கும் புத்தகங்களும் அதன் ஆசிரியர்களும் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அந்தப் புத்தகங்களை எழுதியவர்களின் பட்டியலில் புதுமைப்பித்தன், மௌனி, தி.ஜானகிராமன் போன்றோர் இருக்கிறார்கள். இந்தப் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் டி வி சந்திரன். இவர் இயக்கிய இன்னொருப் படத்தில் கூட இலக்கிய வாசிப்புக்கு உள்ளாகும் பட நாயகியின் வாழ்க்கை துன்பகரமானதாகவே இருக்கிறது.  (சென்றாண்டின் இந்திய தேசிய அரசாங்கத்தின் திரைப்பட விருதுப்பட்டியலில் "ஆடும் கூத்து" இடம் பெற்றிருப்பது " மாயக்கண்ணாடி" தோல்வியில் துவண்டிருக்கும் சேரனுக்கு ஆறுதல் பரிசு.)

சென்றாண்டு கேரள அரசின் சிறந்தத்திரைப்படங்களுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அப்பட்டியல் பெரும்பான்மையான தமிழ் தினசரிகளில் வெளியாகியிருந்தது. பட்டியலில் இடம் பெற்றிருந்த சிறந்த படங்களுக்கான பரிசைப் பற்றினத் தகவல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, சிறந்த குழந்தை நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டிருந்தவர் முன்னணி படுத்தப்பட்டிருந்தார். அந்தக் குழந்தை நடிகர் ஜெயராமின் மகனாவார். ஜெயராமின் மகனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது என்றுதான் பெரும்பான்மையான தமிழ் தினத்தாள்களில் செய்தித்
தலைப்புகள் இருந்தன. பிரபலமானவர்களை முன் வைத்துதான் எல்லா மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துவது என்பது தமிழ் சூழலின் நியதி என்கிற மாதிரியாகிவிட்டது. பரிசுப்பட்டியலில் சிலாகிக்க வேண்டிய பல முக்கிய விஷயங்கள் இருக்கும்போது ஒரு பிரபல நடிகரின் மகன் பரிசுபெற்ற செய்தி மட்டும் பிரதானப்படுத்தப்படுகிறது இங்கு. மற்றைய விடயங்கள் மூன்றாம் நான்காம் நிலைக்குத் தள்ளப்படும்போது முன்னணிப் படுத்த வேண்டியவை நிராகரிக்கப்படுகின்றன.

தமிழில் இப்படி நிராகரிக்கப்பட்ட அல்லது கவனிப்பாரற்ற ஒரு இயக்குனர் மலையாளத்தில் மிக முக்கியமானக் கஞைராக இன்று விளங்குகிறார் என்பது சாதாரண விடயம்.அவரின் சமீபத்திய படம் சிறந்த படத்திற்கான பல்வேறு விருதுகளை இவ்வாண்டின் பட்டியலில் கொண்டிருந்தது.

அப்படி தமிழில் நிராகரிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் டி.வி.சந்திரன். இவரின் முதல் படம் தமிழில் அமைந்திருந்தது. "ஹேமாவின் காதலர்கள்" என்றத் தலைப்பில் எண்பதுகளின் இறுதியில் இவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அப்போது பிரபலமாய் இருந்த அனுராதா என்ற கவர்ச்சி நடிகையைக் கதாநாயகியாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த படம். சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகைக்கு முன்பு வெகு பிரபலமாய் இருந்தவர் அனுராதா. அந்தப்படம் தமிழில் கண்டு கொள்ளப்படவில்லை. அனுராதவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் அன்றைக்கு இருந்தது. அனுராதாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒரு தடவை அந்தப் படத்தைப் பார்த்தால் போதும். நூறு நாள் ஓடியிருக்கும் என்று அப்படத்தைப்பற்றி அது வெளிவந்தபோது அசோகமித்திரன் கணையாழியில் எழுதியிருந்தார். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் ஹேமாவின் காதலர்கள் உட்பட ஏழு படங்களை மட்டும் எடுத்திருக்கிறார். ஆனால் எல்லாப்படங்களும் மிகச் சிறந்தவை என்ற பட்டியலுக்குள் வந்தவை. சமீபத்திய அவரின் திரைப்பட பட்டியலில்"ஹேமாவின் காதலர்கள்" காண்ப்படவில்லை. அவர் இயக்கின வேறு ஆறு படங்கள்தான் இருக்கின்றன. தமிழ்ப்படத்தை அவரின் பட்டியலில் இருந்து விலக்கிவிட்டாரா அல்லது மலையாளப்படங்களின் பட்டியலில் தொடக்கமாய் ஒரு தமிழ்ப்படம் இருப்பது அகௌரவம் என்று அது நீக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் மலையாளத்தின் சிறந்த திரைப்பட இயக்குனர்களின் பட்டியலில் நிரந்தரமானவராய் தனக்கான இடத்தைப் படித்துக் கொண்டவராகிறார் டி.வி.சந்திரன்.

அவரின் சென்றாண்டு படம் "பாடம் ஒண்ணு: ஒரு விலாபம்" இந்தப் படம் கேரளா மலப்புறம் பகுதியில் இளம்வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகிற பெண்களைப் பற்றினது. இதற்கு முந்தின இவரின் படங்களில் ஒன்றான "சூசனம்மா" ஒரு பெண்ணின் 5 ஆண் சிநேகிதர்கள் பற்றினது. அவளின் நடுத்தர வயதிற்கு இணையான நடுத்தர வயது ஆண் சிநேகிதர்களின் மனோபாவங்களும், விசித்திரங்களும் அவர்களை ஒருநாள் ஒரே இடத்தில் அழைத்து அவள் பலவித நினைவுகளை கிளறிக் கொள்வதுமான படம். ஒரு பெண் குறித்த ஆண்களின் பார்வை மற்றும் அவளின் உடலை மீறி சிநேகிதத்திற்கான அனுபவங்களை விவரித்துக் கொண்டு போகிற படம்.

"பாடம் ஒண்ணு: ஒருவிலாபம்" கேரள மலப்புறம் பகுதியில் குறிப்பாக முஸ்லீம் சமூகத்தில் வெகு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகிற பெண்களின் அவலம்பற்றினது. பெண்களின் வயது என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அவர்களின் விருப்பங்களோ, படிப்பு பற்றின அக்கறையோ நிராகரிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையிலேயே திருமணம் நடந்து விடுகிறது. பெண்களின் படிப்பு உரிமைக்கான விருப்பங்கள் நிராகரிக்கப்படுவது மனித உரிமை மீறலாகவே தொடர்கிறது. முஸ்லீம் சமூகப் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற சுலபமான ஒரு படமாக இது அமைந்திருந்தால் இப்படம் வெற்றி பெற்றது என்பதும் சிறந்தத் திரைப்படம் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறது என்பதும் முக்கியமானது. இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பவர் மீராஜாஸ்மின். தமிழின் சமீபத்திய பல வெகுஜன வெற்றிப்படங்களின் நாயகியாவர் சகீனா என்ற பாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்

சகீனா 15வயது உயர்நிலைப்பள்ளி படிக்கும் பெண். பžர் போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு குழந்தைத் தனமான கனவுலகத்தில் இருப்பவள். வெகுளித்தனமும், சக வயதினரும், இயற்கையும் அவளுக்கு வாழ்க்கையை என்றென்றும் புதிதாகவே காட்டிக் கொண்டிருக்கிறவளுக்கு திடுமென திருமணம் நிச்சயக்கப்படுகிறது. ரசாக் முன்பே திருமணமானவன். அவனுக்கு இன்னொரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு இன்னொரு உடலை அனுபவிப்பது என்பது தவிர வேறு எந்த உத்வேகமும் இல்லை. வளைகுடா நாட்டிற்கு செல்வதற்கு முன் திருமணத்தை முடித்துக் கொண்டு செல்வதில் ஆயத்தப்பட்டு திருமணம் முடிகிறது. சகீனாவுக்கு பள்ளிப்படிப்பை தவற விடுவதும், திருமண சடங்குகளும் பிடிப்பதில்லை. பžரின் உலகத்துக்குள்ளேயே இருக்க விரும்புகிறாள். முதலிரவு அவள் மீதான வன்முறையாகிற போது எதிர்க்கிறாள். இந்த எதிர்ப்பை தொடர்ந்த இரவுகளிலும் காட்டிக்கொண்டிருக்கிறாள். ரசாக் தன் முதல் மனைவி மூலம் மயக்க மருந்து கொடுத்து அவனின் பாலியல் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறான். இச்சூழலில் முதல்மனைவியின் வேதனைகள் கொடுமையானவை. சகீனா தான் ஏமாற்றப்பட்டு பலவந்தப்பட்டிருப்பது தெரிகிறபோது எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள். பிறந்த வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள். கணவன் 'தலாக்' சொல்லி நிராகரிக்கின்றான். வேறு கிழட்டு மாப்பிள்ளையை தரகர் அவளுக்காய் சிபாரிசு செய்கிறார்கள். அவள் கர்ப்பமாகிறாள். 'தலாக்' சொல்லப்பட்டபெண் கர்ப்பமாவது குடும்பத்தில் பல குழப்பங்களை தோற்றுவிக்கிறது. அவளின் படிப்பு ஆசைக்கு உதவிவரும் ஆசிரியரும் வீணான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார். தனித்து விடப்படுகிறவள் குழந்தையை பெற்றுக்கொள்கிறாள். அக்கிராமத்தில் ஓடும் சிற்றாற்றில் துணி துகைக்க போகிறதாக இறுதிக்காட்சி அமைந்திருக்கிறது. சகீனா போலவே பலபெண்கள் இளம் வயது திருமணத்தால் முதுமையையும் சோர்வையும் எட்டி இருப்பவர்கள். குழந்தைகளை கரையில்விட்டு துணி துவைக்கிறார்கள். அக்குழந்தைகளின் அழுகைகளும் விளையாட்டும் காற்றுவெளியை நிறைக்கிறது.

பள்ளிவயதில் திருமணம் செய்து முப்பது வயதிற்குள் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்து பாட்டியாகிவிடும் பெண்கள் முஸ்லீம் சமூகத்தில் மலிந்திருப்பதை இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

மீராஜாஸ்மினுக்கு இப்படத்தில் நடித்ததற்காய் சிறந்த நடிகை விருது ( கேரள அரசின் ) கிடைத்திருக்கிறது. வெகுஜன தமிழ்திரைப்படங்களில் மீராஜாஸ்மின் நடித்திருப்பதற்காய் எக்ஸ்பிரஸ் விருது. பிலிம்பேர் என்று பலவும் அவருக்கு கிட்டின. கேரள விருதை விட பின் விருதுகளால் அவருக்கு அதிக பிரபல்யம் கிட்டலாம். ஆனால் தீவிரமான படம் குறித்த யோசிப்பில் டி.வி.சந்திரனின் படம் குறிப்பிடப்பட்டதாக இருக்கும். (மீரா ஜாஸ்மினின் திறமை வெளிப்பாட்டிற்கு லோகிதாஸ’ன் படங்களைப் பார்க்கலாம். மீரா ஜாஸ்மின் இல்லாமல் லோகிதாஸ் எடுக்கும் படங்கள் சமீபத்தில் எடுபடுவதில்லை. லோகிதாஸ’ன் சமீபத்திய நிவேத்யா படம் அப்படிப் பட்ட படங்களில் ஒன்று. சாதாரண காதல் கதை " கஸ்தூரிமான் " நிகழ் மையத்தில் இப்படமும்.) சூசனமில்லாமல் வரும் பெண் ஏகதேசம் விலைமாதுவாக அலைக்கழிக்கப்படுவற்கும், தன் விருப்பமில்லாமல் கணவனுடன் உறவுகொள்ள அனுமதிக்காத காரணத்தால் நிராகரிக்கப்பட்ட சகீனா மனோதைரியத்தையோ உறுதியையோ இழந்திருந்தால் இன்னொரு சூசனம்மாவாக ஆக முஸ்லீம் சமுதாயத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வெறுமையாய்த் தொடரும் வாழ்க்கைக்கு அவள் சபிக்கப்பட்டிருக்கலாம். அவர்களின் பட்டியல்களுக்கு குறைவில்லை என்பதாகிவிடுகிறது.

பதிவுகள் அக்டோபர் 2007; இதழ் 94

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


புதிய படிமங்களைத் தேடினக் கலைஞன் வெர்னர் ஹெர்ஸாக்!

- சுப்ரபாரதிமணியன் -

சுப்ரபாரதிமணியன்வெர்னர் ஹெர்ஸாக்கிற்கு அப்போது பதினாறு வயது உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை வெல்டிங் நடக்கும் ஒரு இடத்தில் வேலை. பள்ளி நேரங்களில் தூக்கம். மதிய நேரங்களில் படங்களை உருவாக்கும் முயற்சி. திரைப்படக் கம்பெனி ஒன்றுக்கு ஒரு கதையை எழுதி சமர்ப்பித்திருந்தார். அவர்களுக்கும் அக்கதை பிடித்துப் போய் விட்டது. கடிதத் தொடர்பு கொண்டு ஒரு உடன்படிக்கையும் எழுதியாயிற்று. சாவகாசமாய் ஒரு நாள் நேரில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டார் ஹெர்ஸாக். இளம்வயதும், திரைக்கதையும் கம்பெனிகாரர்களை குழப்பிற்று. நாற்பது வயதாவது இருக்கும் என்று நினைத்திருப்பார்கள் போலும். ஏமாற்றம் சற்று அவநம்பிக்கை. கடைசியில் ஒப்பந்தம் முறிந்து போய்விட்டது.

தொடர்ந்து பல அவமானங்கள், வேதனைகள். தோல்விகள் மட்டுமே உருவாக்கிய மனிதனாய் ஹெர்ஸாக் வளர்ந்தார். அவரின் முதல் படத்திற்கு பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி பரிசு கிடைத்தது. THE SIGNS OF LIFE என்ற அப்படம் அவருக்கான அங்கீகாரத்தை தேடித்தந்தது. அப்படத்திற்குக் கிடைத்த பரிசு அடுத்த படமான DWARFS எடுக்க பயன்பட்டது.

தீவொன்றுக்கு அனுப்பப்படுகிற ஜெர்மன் ராணுவ வீரன் ஒருவனுக்கு பழைய கோட்டையையும் தேவையற்ற ஆயுதங்களைக் கொண்ட கிடங்கொன்றையும் காவல் காக்கிற வேலை. அவனுடைய மனைவியும் மற்ற இரண்டு ராணுவ வீரர்களும் அந்தத் தீவில் அவனுக்குத் துணை. பழைய கிரேக்க எழுத்துக்களுடனான அவனின் பரிச்சயம் பொழுது போக்க உதவுகிறது.அதுவும் žக்கிரம் அலுப்படைந்து விடுகிறது.
இந்த படத்தில் மூலப் பிரதியை பார்க்கவும் அவ்வப்போது வந்து போகும் நாடோடி சற்று சுவாரஸ்யம் தருகிறான். அந்த நாடோடி தன்னை ஒரு ராஜாவாக சொல்லிக் கொள்கிறான். ராணுவ வீரன் அலுப்பான வாழ்க்கையைப் பற்றி கேப்டனிடம் சொல்ல மலைப்பகுதிக்கு ரோந்து செல்ல அனுப்பப்படுகிறான். அந்தச் சூழலும் அவனுக்கு சோர்வைத் தருகிறது. எரிச்சலையும் அவன் கூட இருப்பவர்களை கொல்வதாக மிரட்டி துரத்துகிறான். ஆயுதங்களை வெடித்து பக்கத்து டவுனுக்கு சேதம் விளைவிக்கப் போவதாக மிரட்டுகிறான். அவனை யாரும் நெருங்கக்கூடாது என்று எச்சரிக்கிறான். சில ராக்கெட்டுகளை வெடிக்கிறான். பயப்படுகிறார்கள் டவுன் மக்கள். அவனைப் பிடிக்க சில ராணுவ வீரர்கள் முயல்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். தீவிலிருந்து வெளியேற்றப் படுகிறான். மனிதர்களின் விசித்திர மனநிலை
பற்றிய கனவை அவரின் முதல் படத்தில் விரித்திருந்தார். ஆழ் மன ஏக்கங்களை இனம் காணும் முயற்சியாக இவருடைய படங்கள் அமைந்திருந்தன.

"நான் சினிமாவில் புதிய புதிய படிமங்களைத் தேடினேன். பத்திரிக்கைகள் தரும் படிமங்கள் சலிப்பூட்டுகின்றன. அஞ்சல் அட்டைகளும் சலிப்பூட்டுகின்றன. டிராவல் ஏஜென்சியின் போஸ்டர் கூட சலிப்பாகிறது. இவையெல்லாம் நைந்து போன வீணான படிமங்கள். தொடுவனத்தின் விளிம்பில் தெரியும் தொலைதூரத் துண்டு நிலம் போல எனக்கு புதிய படிமங்களை பற்றின அறிவு இருக்கிறது. நான் புதுப்புது படிமங்களை பார்த்து அவற்றை வடிவமைக்க முயற்சிக்கிறேன். என் படங்களின் கனவுக் காட்சிகளில் இதை நான் முயற்சித்திருக்கின்றேன்" என்றார்.

தனக்குள்ளாக இருக்கும் உள்நோக்கை புரிந்து கொள்வதற்கு படங்கள் உதவி பண்ணியதாக நம்பியவர் வெர்னர் ஹெர்ஸாக். நவீன உலகத்தின் இயக்கமும், இயற்கையோடான உணர்வுப்பூர்வமான வாழ்க்கையிலிருந்து பிரிந்து விட்டது என்று மனம் நொந்து போனவர்,  தற்கால வாழ்க்கையைப் பற்றியும் அவரின் படங்கள் எவ்வித அணுகுமுறையை கொண்டதல்ல. அதைத் தாண்டியும் வெவ்வேறு கால அளவிலும், அனுபவக் களனிலும் பயணம் செய்கிறவை.

ஹெர்ஸாக்கிற்கு சாதாரண சமூகம் பற்றின அக்கறை வேறுவகையானதாக இருந்திருக்கிறது. உலகின் மிக சாதாரணப் பிரஜைகள், ஒதுக்கப்பட்டவர்கள், வாழ்க்கையில் காயம் பட்டவர்கள் இவரின் பார்வைக்குள்ளாகிறார்கள். சமூகம் நிராகரித்தவர்களை இவர் படங்களில் அங்கீகரித்தார். இந்த வகையில் EVEN DWARFS STARTED SMALL என்ற படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படமும் கட்டுப்பாடற்ற மனித மனநிலை பற்றி விவரிக்கிறது. டைரக்டரை ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் வெளியே போக சிலர், தாங்கள் சுதந்திர உணர்வு பெற்றவர்களாய் உணர்கிறார்கள். டைரக்டரை எதிர்த்து நீண்ட உரைகளை நிகழ்த்துகிறார்கள். அவரின் பிரியமான மரங்களை வெட்டிச் சாய்க்கிறார்கள். டெலிபோனைச் சிதைக்கிறார்கள். டைரக்டரின் படுக்கையில் விஷமங்களைச் செய்கிறார்கள்.இரண்டு குருடர்களை இம்சிக்கிறார்கள். அந்த அலுவலகத்தை தீயிட்டு கொளுத்துவதாக ( நம் பார்வைத்திறனை டெலிவிஷனால், டெலிவிஷன் ஒளிபரப்பும் வர்தகப் படங்களாய் இழந்து வருகிறோம். பத்து அல்லது பதினைந்து நொடிகளில் அதில் தமது செய்தியை அடக்கி விடுகிறார்கள். விளைவு பெரும் நாசம். அந்த நாச விளைவுகளை மணிக்கணக்காக டெலிவிஷன் பார்க்கும் குழந்தைகளிடம் காணலாம். அவர்கள் தமது கற்பனைத் திறனை இழக்கிறார்கள். தனிமையும் சோகமும் அவர்களை பீடிக்கிறது. நீண்ட நேரம் டெலிவிஷன் பார்த்தால் நாம் எல்லோருமே தனிமையிலும் சோகத்திலும் ஆழ்ந்து விடுகிறோம். நாம் ஏன் டெலிவிஷனுக்கு எதிராக போரிடக்கூடாது. கணக்கில்லாத வியாபாரப் படங்களை காட்டுவதற்காக

டி.வி. நிலையங்களை ஏன் தாக்கக்கூடாது? வியாபாரப்படங்களைக் காட்டும் டி.வி.நிலையங்களில் கைக்குண்டுகளை வீசி தாக்காத காரணத்துக்காக நமது பேரக்குழந்தைகள் நம்மைக் குற்றம் சாட்டப் போகிறார்கள். ) பயமுறுத்துகிறார்கள். பன்றியொன்றைக் கொல்கிறார்கள். குரங்கைச் சிலுவையில் அறைந்து ஊர்வலம் போகிறார்கள். தங்களின் மனம் போன போக்கில் எதை எதையோ செய்து திருப்தி கொள்கிறார்கள். அடிமைப்படுத்தப்படுபவர்கள் சட்டென விழித்துக்கொண்டு எக்காளமிடுகிற மனநிலையோ, அல்லது தங்களை விடுவித்துக் கொள்கிற வழிமுறைகளைத் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள். தங்களின் உள்நோக்கைத் திரும்பிப்பார்த்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையின் தரிசனம் இது தான் என்று சொல்லிக்கொள்கிற மனநிலை.

THE VAMPYRE(1979) படத்தில் வரும் குரூரமானவர்கள் கூட இரக்கம் கொள்ளத்தக்க வகையில் இருப்பதைக் காட்டுகிறார். ENGINE OF KASPAR HOUSE(1975) படக் கதாநாயகன் அடிக்கடி மனதை மாற்றிக் கொள்பவன். மாற்றி மாற்றி அமைக்கப்படுகிற உலகத்தின் கோரத்தை ஏற்றுக் கொண்டவன். இயற்கையோடான ரசனையை விரும்புபவன்.

நாகரீக வாழ்க்கையின் சகிக்க இயலாத சிதைவையும், தினசரி வாழ்வின் நிராகரிப்பின் கோணங்களையும் இவர் படங்கள் காட்டுகின்றன. அவருடைய நடிகர்களை பெரும் சமயங்களில் அதிசயப்படும்படியான தீர்மானங்களுக்குக் கொண்டு சென்று விட்டிருக்கிறார். மக்களின் விசித்திர மன்க்கூறுகள் சிதறுவதைத் திரையில் விரிவுபடுத்துவது ஹெர்ஸாக்கை மிகவும் ஈடுபாடுகொள்ள செய்திருகிறது. மனதுக்குள் கொந்தளிக்கும் போராட்டங்களை இந்த வகையில் வெளிக்காட்டுகிறார். மனக் கொந்தளிப்பு குறித்த தீர்வுக்கோ, காரணங்களுக்குகோ செல்வதில்லை " இனிமேல் சிங்கங்கள் இருக்க முடியாத உலகிலும், அல்லது சிங்கங்களைப் போன்ற மனிதர்கள் இல்லாத உலகிலும் என்னால் இருக்க முடியாது " என்கிறார்.

எழுபதுகளில் ஜெர்மன் சினிமாவின் வெற்றியை டி.வி.யி தயாரிப்புகள் பெரிதும் பாதித்திருக்கின்றன. இளைஞர்களின் படைப்புகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. அந்தச் சமயத்தில் பாஸ்பைண்டர், வெண்டர்ஸ் ஆகியோரின் முயற்சிகளுடன் ஹெர்ஸாக்கின் முயற்சி புதிய தலைமுறைப் படங்களுடனான உற்சாகத்திற்கு வித்திட்டிருக்கிறது.

இந்த வகையில் EVERYONE FOR HIMSELF AND GOD AGAINST ALL என்ற படம் ஜெர்மானிய புது சினிமாவில் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. இது ஹெர்ஸாக்கின் முக்கிய படங்களில் ஒன்றாகும். பதினெட்டாம் நூற்றாண்டை இப்படத்தின் மையமாக எடுத்துக்கொள்கிறார். ஒரு நகரத்தின் முக்கியமான சதுக்கமொன்றில் நிற்கும் பதினாறு வயதுப் பையன். அவன் கையில் பிரார்த்தனை நூல். ஒரு கடிதம். உள்ளூரின்முக்கிய குதிரைலாய அதிகாரிக்கான விண்ணப்பம் அக்கடிதம். கையெழுத்திடப்படாமல் எழுதப்பட்டிருந்தது.

ஒரு விவசாயி அந்தப் பையனை அது நாள் வரை தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தார். வைத்துக் கொள்ள முடியாத நிலையில் கைவிடுவதாய் கடிதத்தில் சொல்கிறார்.அவனின் தந்தையைப் போலவே நல்ல சவாரிக்காரனாகப் பழக்க வேண்டும் என்பது விவசாயின் விருப்பம். தற்காலிகமாக ஜெயிலில் அடைக்கப்படுகிறான். சிலருக்கு விசித்திர பொருளாகிறான். ஜெயிலரின் மகன் ஒருவகையில் ஆறுதலாக இருக்கிறான். அவன் சில விஷயங்களைப் படிப்பிக்கிறான். பியானோ கற்றுக்கொள்கிறான். கடவுள் பற்றிய கதைகளை கேட்கிறான். புரிந்து கொள்வதற்கு முன் குருட்டு நம்பிக்கையே அவசியம் என்று வற்புறுத்துகிறான். அவனுடைய கேள்வியை பரிலிக்கிறவர்கள் சிலர். அவனை அவமானப்படுத்துகிறார்கள் சிலர். அவனுடைய உலகின் விசித்திரதன்மையை அறிந்து கொள்கிறான். நகைப்பிற்கிடமாக இருக்கின்றன விசித்திரங்கள். அவனைக் கைவிட்ட விவசாயி அடிக்கிறான். படுக்கையில் வீழ்கிறான். சாவுப்படுக்கையில் கதைகளைச் சொல்கிறான். பாலை வனத்தில் செல்லும் ஒருவனைப் பற்றிய கதை அது. கதையின் ஆரம்பம் மட்டுமே அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

உலகின் குரூரத்தன்மையை காட்டுகிறார். வாழ ஆசைப்படுகிறவன் ஜெயிலுக்குள் அடைபடுகிறான். இறுதியில் அவனைக் கைவிடுபவனே அவனைத் தாக்குகிற நிலை . அவனுடைய கனவும், கேள்விகளும் முதல்நிலைத் தாண்டிச் செல்லாமல் அடைபட்டுவிடுகின்றன. இப்படத்தில் ஆன்மாவும் மனசாட்சியும் அற்ற சமூகத்தின் அவலத்திற்கு எதிரான ஒருவகை எதிர்ப்பும்.

இப்பட நாயகன் புரூனோவை வைத்து 1977ல் "strogele" என்ற படத்தை ஹெர்ஸாக் எடுத்தார். ஒருவகையில் 18ம் நூற்றாண்டின் மையத்தை மாற்றி இந்த நூற்றாண்டின் பிரச்சனைகளுக்குள் அதே நாயகனை உலவவிட்டிருந்தது போலிருந்தது. நவீன உலகின் பிரச்சனைகளின் மத்தியில் கதை கனவு காணும் ஒருவனை இதில் காட்டி இருந்தார்.

புரூனோ சிறைக்கொடுமைகளை அனுபவித்துவிட்டு வெளியே வருகிறான். மகாக்குடியன். தெரு இசையமைப்பாளனாக ஒரு விலைமாதுவுடன் வாழ்க்கையைத் தொடர்கிறான். விலைமாதுவின் முந்தின சகவாசங்களால் நிம்மதியற்ற வாழ்க்கையாகிறது. இந்த பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவிற்குச் செல்ல முடிவெடுக்கிறார்கள். வேலையும் கிடைக்கிறது. வீட்டிற்காக வாங்கும் சாமான்களிலிருந்து தவணைத்தொகையைக்கூட கட்ட முடியாமல் திணறுகிறார்கள். அவள் உடம்பை விற்கிற தன் பழைய வாழ்க்கையை மீண்டும் மேற்கொள்கிறாள். புரூனோவின் சாதாரணக் கனவுகளும் அங்கே நிறைவேறுவதில்லை.

சினிமாப்படம் எடுப்பதென்று ஒருவகையான ஹ’ஸ்டீரியாத்தனம் என்பதைத் திரும்பத்திரும்ப எண்ணிப்பார்த்திருக்கிறார். விசித்திர மனநிலை கொண்ட மனிதர்களைப் படங்களில் சொல்லும்போது தன்னையும் அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார். விசித்திர மனநிலையைப் புதுப் படிமங்கள் மூலம் முன் வைக்கிறார்கள். நமது பொது மனநிலையை விளக்கவும் அவை முயற்சிக்கின்றன. ஆனால் அறிவு சார்ந்த படங்களில் தோல்வி, சினிமா, இம்மாதிரி முயற்சிகளுக்கு இடம் தராத அம்சத்தை பற்றிப் பல சமயங்களில் குறிப்பிடுகிறார்.

திட்டமிடாமல் எதேச்சையாகத் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் வலுவானவையாக அமைவதாக நினைக்கிறார். உள்ளுணர்வு படத்தின் நாடியாக அமைகிறது. தொழில்நுட்ப விஷயங்கள் தெரிந்ததையெல்லாம் உபயோகிக்காமல் கட்டுப்படுத்திக் கொள்கிற தன்மை இவருக்கு இருந்திருக்கிறது. ஒரே சமயத்தில் தொடர்ச்சியாக பல படங்களை உருவாக்குவது என்பது அவரின் செயல்முறையாக இருந்திருக்கிறது.
ஒரு பெரும் கட்டிடத்தை அமைப்பதை போல பல படங்களை உருவாக்குவது அவருக்கு இருந்திருக்கிறது. ஒரு படம் அஸ்திவாரமாகவும்,  இன்னொரு படம் மேல் பாகமாகவும் தொடர்பாக இருந்திருக்கிறதை அவரின் பல படங்களை ஒருநிலைப்படுத்தி பார்க்கிறபோது தெரிந்துகொள்ள முடிகிறது.

சிரமங்களான ஆபூர்வமான இடங்களைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது இவருக்கு சாகசமாக இருந்திருக்கிறது. Auquire படத்தில் தங்கம் தேடும் படலத்தில் மிகுந்த சிரமங்களை நடிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ஒருவீட்டை நிமாணித்து படபடப்பை நடத்தியிருக்கிறார். அவரின் முக்கிய கதாநாயகரான சிகஸ்சியை ஒரு தரம் துப்பாக்கி காட்டி மிரட்டி தொடர்ந்து நடிக்க செய்திருக்கிறார். தண்ணிரில் மூங்கில்களைச் சேர்ந்தமைந்த படகு போன்றதில் நடிகர்கனை காட்டுப்பகுதிகளுக்கு கூட்டிச்சென்று படமாக்கியுள்ளார்.nosferatu படத்தில் எலிகளின் கடும் தக்குதலைக் காட்ட ஆயிரம் எலிகளுக்கு வெள்ளைச் சாயம் அடிக்க வைத்திருக்கிறார்.Heart of Glass என்ற படத்தில் அதன் நடிகர்களை மனோவசியத்திற்கு உட்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார். இன்னோரு படத்திற்கு நானூரு குரங்குகளை ஒரிடத்திலிருந்து திருட்டுத் தனமாய் கடத்திவந்து படம் எடுத்திருக்கிறார். கோழி ஒன்றை வசியப்படுத்தி அதன் விசித்திர நிலையை ஒரு படத்தில் காட்டியுள்ளார்.

நமக்கு தர்சனம் பற்றிய போதுமான அறிவு இல்லை. மிகச்சொற்பமாக நாம் அதைப்பற்றி தெரிந்துகொண்டிருக்கிறோம் என்கிறார். இதைஅவரின் பரிசோதனை படைப்புகள் ஓரளவில் வெளிப்படுத்துகின்றன. இம்மாதிரி அறிவு மிகமுக்கியமாக படுகிறது. போதுமான படிமங்கள் இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால் இது மிக அவசரமான ஒரு தேவையாக இருக்கிறது. வேண்டிய அளவு படிமங்களும், நமது நாகரீகத்திற்கு அவற்றை வெளிப்படுத்துவதற்கு தேவையான மொழியையும் நாம் உருவாக்காவிட்டால் டைனோசர் போன்ற கற்கால விலங்குகளின் அழிவை நாமும் சந்திக்க வேண்டியிருக்கும். எரிபொருள் பற்றாக்குறை, மக்கள் தொகைப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல் போன்ற பிரச்சனைகள் நமது மனிதகுலத்திற்கும் நாகரீகத்திற்கும் பெரும் அபாயங்கள் என்பதை உணர்ந்துவிட்டோம். ஆனால் நமக்கு புதிய படிமங்களும் மிக அவசியமாகத் தேவைபடுகின்றன என்பதைப் பரவலாக இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லை என்கிற ஹெர்ஸாக் அவரின் படங்கள் மூலம் நம் உள்மன இயல்புகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார். நமது வாழ்க்கை பற்றிய புது படிமங்களைத் தேடுவதாக அவற்றை அமைத்திருக்கிறார்.

இனி ஹெர்ஸாக்கின் சில கூற்றுகள்:

" சினிமா வெறும் சினிமாதான் . அதில் அதிகமாக எதையும் காண்பதோ பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டு இருப்பதோ தவறுதான். சமூகத்தின் எந்தப் பிரச்சனையையும் சினிமாவினால் தீர்த்து விட முடியாது. "

" என்னை ஒரு கலைஞன் என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை, மைக்கல் ஏன்ஜலோவின் காலத்துக்கு முன்னால் சிற்பிகள் தம்மை மரவேலை செய்பவர்களாகவும், ஓவியர்கள் தம் உதவியாளர்களுடன் தொழிற்கூடங்கள் வைத்திருப்பவர்களாகவும் தன்னை கருதிக்கொண்டது போல நானும் என்னை ஒரு தொழில்நுட்ப வல்லுநராகத் தான் நினைத்துக்கொள்கிறேன்" என்கிறார் ஹெர்ஸாக்.

" எதிர்காலத்தில் மிகவும் அண்மையில் புதிய தர்மமும் புதிய மதமும் உருவாகி வருவதை என்னால் மிக நிச்சயமாக உணரமுடிகிறது. நான்கு குழந்தைகளுக்கு மேல் பெறுதல், பூமியின் வளங்களை வீணடிப்பது போன்றவை எல்லாம் பாவச் செயல்களாகி விடும். ஏற்கனவே இது பற்றின உணர்வு நம்மிடம் இருக்கிறது. தேவையின் கரணமாய் நாம் உருவாக்கியுள்ள சூழலின் தேவைக்காகவே ஒரு புதிய நெறியையும், ஒரு புதிய மதத்தையும் உருவாக்க வேண்டும். நான் தொடுவானத்தில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கூட சிலதை பார்க்கிறேன். எனவே சொந்த கால்களால் நடப்பதென்பது எதிர்கால நம்பிக்கைக்கான ஒரு செயல் தான் என்று தீர்மானமாக நம்புகிறேன்."

பதிவுகள் ஆகஸ்ட் 2007; இதழ் 92

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.