வியத்தகு விட்னி கூஸ்ரன்…

[அண்மையில் மறைந்த பிரபல பாடகி விட்னி கூஸ்டன் நினைவாக...]

துடிக்கும் ஜீவன் ததும்புமிசை.
நொடியும் மறக்கவியலா இசை
அடி!..அந்த .”யூ…ஊ…உ..ஊ..”
பொடி காட் பாடல்..   ஆம்!
(” I will always  love you…u….uu!..” -Body gard song )
விட்னிகூஸ்ரன்  தன் குரலால்
கட்டினாள் மனங்களை! – தனக்குக்
கிட்டிய சுயதிறன் நம்பாது
கட்டப்பட்டாள் பய உணர்வால்.

உறுதியற்ற மனதால், பயந்தாள்.
மறுகினாள் சுயதிறன் போதாதென.
இறுகினாள் போதை துணையென.
அறுதிப் பரிசானது மரணம்.

 யோன் ரூசெல் கூஸ்ரன்- சிசி புதல்வி.
(John Russel Houston – cissy)
நாற்பத் தெட்டில் மறைந்தாள்.
பதினெட்டில் விட்னி மகள்
பதுமை பொபி கிறிஸ்ரினா பிறவுண்.
(Boby kiristina Brown)

 வெள்ளிப் பேழையுள் விட்னியுடல்
துள்ளியதிறுதிச் சடங்கிலவளிசை.
கொள்ளையிட்ட தன்னிசையோடு – மீளாப்
பள்ளி கொள்ள அவளிறுதியூர்வலம்.

தந்தையருகிலவள் தன்னை அழுத்திய
எந்தக் கொம்பனுக்கும் பயமற்றுத்துயிலட்டும்!
பன்னீராக அவளாத்ம சாந்திக்காய்
கண்ணீர் மலர்கள் தூவப்படுகிறது.

26-2-2012.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.