கவிதை வாசிப்போம் வாருங்கள்!க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை) கவிதைகள்!

இயற்கையின் வெற்றி

விளைநிலம் பல்பொருள் விளையிடம்
அறுவடையோ சந்தைக்கு
விளைநிலம் விலைநிலமாக
விற்பனை சதுரக்கணக்கில் – விண்ணுயர்
கட்டட அறுவடையோ இயற்கைக்கே!

பொருளாதாரச் சிந்தனை

கல்விக்கலைக்கு மொழி தேவையா
மொழியாளுமை நல்லறிவாம்
நல்லறிவை விலை பேசலாம்
சாதி மதம் மொழி கல்வி – அடிப்படை
பொருளாதாரம்! பொருளாதாரம்!

தமிழன்னை!

தமிழன்னை சிலை
தமிழுக்குக் கலை
கலையின் உயிரோட்டம்
தாய்மொழியை உயிரூட்டும்
அழகின் வடிவே! அன்பே!
அமைதி, பாசம், பரிவு,
எண்ணம், செயல், மூச்சு
அனைத்தும் நீயே!
அகிலமும் நீயே!
      
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பிரியமான தூண்டில் காரிக்கு.
 
- ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.= -

கவிதை வாசிப்போம் வாருங்கள்!காயத்தை தருவதிலே உந்தன் பங்கு
கனிசமாய் ஆனதனால் நானோ நொந்து
மாயத்தை விளங்காமல் அனுதினமும்
மன்றாடி தோற்கின்றேன் உந்தன் முன்பு
 
பேசாமல் வார்த்தை யொன்றை இதழ்களிடை
பிசைகின்ற படிமத்தை சொல்வதென்றால்
நாளொன்று போதாது ஆரணங்கே-உன்
நளினத்தில் பதிலின்றி திரும்புகின்றேன்
 
சாமத்துக் கனவுகளில் அருகில் வந்து
சரிபாதி நானென்று பீத்துகின்றாய்
நாயத்தை கேற்கின்றேன் சொல்லாமல் நீ
நழுவி தான் போகின்றாய் நியாயம் தானா?
 
பாவத்தை செய்து விட்ட பரம்பரைக்கு
பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடா
கோபத்தை கண்களிலே கொப்பளித்து
கொல்கின்றாய் பெண்ணே இது பாவம் தானே?
 
மோகத்தில் உன் பின்னே பருவ காலம்
முடிவின்றி போயிற்று என்பதாலே
விடிவின்றி யாக்காது எந்தன் வாழ்வை
விடை கூறி,இணையாகி வாழ வா நீ.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


சேயோன் ஈழவேந்தன் கவிதைகள்!

ஒரு கேள்வி

கவிதை வாசிப்போம் வாருங்கள்!எப்படியும் மிதிப்பான்
இவ்வேதனை எதற்கென்று
தானே கல்லானேன்,
என்னை மிதித்து
எவன் மிதிக்க
பெண்ணாக்கினாய்?

இன்னொரு கேள்வி

காற்றும் வேண்டும்
காகிதம் வேண்டும்
நூலும் வேண்டும்
வாலும் வேண்டும்
கையும் வேண்டும்
பறக்கவைக்க திறமை வேண்டும்
எதுவும் புரியாமல்
எழுதவும் தெரியாமல்
எளிதாய் வாங்க
இது என்ன
கவிஞன் என்ற பட்டமா என்ன?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இறைவா தந்தைக்கும் வாழ்த்துச் சொல்லு!

- வே.ம.அருச்சுணன் – மலேசியா -

கவிதை வாசிப்போம் வாருங்கள்!பத்து மாதம் சுமந்து பெற்ற
தாய்
கோவில் என்றால்
தந்தை
கலசம் என்போம்
அன்பை ஊட்டியவர் தாய் என்றால்
அறிவை வளர்த்தார் தகப்பன் என்போம்.
 
உலகில்
இருவரும் நமது கண்கள்
மனிதம் வாழ்வதற்கும்
மனிதனாய் வாழ்வதற்கும்
இரு தெய்வங்களின் அருள் கொடை
யாம் பெற்ற பேரின்பம்
பெற்றோர் திருவடி இறைவனின் இல்லம்
திருவடி வணங்கி உயர்கொள்வோம்.
 
தந்தை நமது உலகம்
வாழக் கற்றுக் கொடுத்தப் பேருள்ளம்
தந்தைச்  சொல்
மந்திரத்தை வெல்லும்
உணர்ந்தால் வெற்றியே நீளும்.
 
நாம் பார்த்த முதல்
பேரழகன்,பேரறிவாளன்

உயிர் தோழன்
உன்னை நினைக்கின்றேன்
உன் வியர்வைத் துளிகள்
உயர்ந்த கல்வி தந்தது
மதிப்புமிக்கத் தொழில்
கை நிறைய செல்வம்
வசந்தம் வீசும் வாழ்வு
போற்றிப் புகழும் சொந்த பந்தம்
மாறா அன்பு நெஞ்சங்கள்
ஆபத்தில் உதவும் நண்பர்கள்
இவை உனது வழியால் வந்தவை.
 
தந்தையே நீங்கள் வடித்த
சித்திரம் நான்
நீங்கள் கண்ட கனவு நான்
இன்று
உலகில் கொடிகட்டிப்பறக்கிறேன்
நல்ல மனிதன் என்றே
சென்ற இடமெல்லாம் என்னை
வாழ்த்துகின்றனர்
உங்கள் புண்ணியத்தால்
இப்பிறப்பில் நலமாய் வாழ்கிறேன்.
 
புனித நாட்கள் பல இருப்பினும்
தந்தையர் தினத்தில்
உங்களை மகிழ்விப்பது
பெற்ற பேறாய்க் கருதுகிறேன்.

தந்தையே........!
நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்
உற்ற தோழனாய் என்னைத்
தொடர வேண்டும்
யாருக்கும் தீங்கு செய்யா
பிறவியாய் ஆயுள் மட்டும் வாழ்வேண்டும்
உன்னை வாழ்த்துவதிலே
என் ஆயுள் முடிய வேண்டும்
தந்தையே  நீங்கள் இருக்கும்
நொடி வரையில் கெடுமதியாளர்கள்
நெருங்காமல் என்னைக் காக்க வேண்டும்
இந்த நன்னாளில்
இறைவா என் தந்தைக்கும்
வாழ்த்துச் சொல்லு!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி(இலங்கை) கவிதைகள் இரண்டு!

1. கால மாற்றம் !

கவிதை வாசிப்போம் வாருங்கள்!உரிமை தந்த
பெற்றோர்கள் இல்லை.

உறவு தந்த
உடன் பிறப்புக்கள் இல்லை.
 

இன்று
இரவுக்கு பகல்
பகலுக்கு இரவு

எனும் மாற்றத்தில்
வாழ்வின் மூச்சு
அடங்கியிருக்க .
 
எந்த நேரத்திலும்
சுவாசத்தினுடே 
மரணம் தடவி
மண்ணறை நோக்க ,

இனி வரப்போகும்
காலம்- 
சூரியன் மறைந்து
மேகம் உருகி வடியத் திட்டம் வகுத்து
வெயில்-
சுட்டெரித்துக்கொண்டிருக்கி​றது !

கால மாற்றத்தில்
நாமும்
சுழலும் சக்கரமாய் !

2. காற்றில் பறக்கும் தூசுகளாக்கி விடுவதா ?

தாயின் கருவறைகுள்ளேயிருந்தே  
இன்னொரு
பிறப்பு....,  
வளர்ப்பு  ...,
இறப்பு ...,!

தாய்மையின்  பிரசவம்
மண்ணறையின் இருளினை
காண்பித்துக் கொண்டிருக்கிறது. !

பிஞ்சுக்கால்கள்  உதைக்கும்   போதே
சுவாசமாய்  வருகின்றது மூச்சு !

அன்பு நெஞ்சில் 
சிறு துளி பாசம் உரசும் போதே
பற்றினை  வடிக்கும்
வியர்வை துளி வடிந்து
உடம்பை கழுவிக் கொண்டிருக்கிறது. !

தொப்புள் கொடி உறவுகளென்று
ஒட்டிக் கொள்வதற்குள்
அடம்பன் கொடியாய் சிக்கிக் கொள்கின்றது
வாழ்க்கை !

அன்னை ஆயிஷா  நாயகியும் 
அன்னை பாத்திமா நாயகியும்  தந்த
அழகிய வாழ்க்கை வரலாற்றினைக் கூட ,
பொத்தி பிடிக்க முடியாமல்
காற்றில் பறக்கும் தூசுகளாக்கி  விடுவதா ?

தென்றல் தடவும்
ஒரு சுகந்தமான உள்ளத்து உணர்வில்
வாசம் நுகர்ந்து
உயிர் சுவாசித்துக் கொண்டிருக்கிறது.

வாழ்ந்து காட்டுவதை விட ,
வாழ முடியாமல்  தவிப்போருக்கு
திசை காட்டுவதே
நமக்கு வேண்டியகடமையுணர்வு !

இங்கு -
அன்பான அரவணைப்பும்
ஆழமான பாசமும் .
நேர்மையான வழி காட்டலும் 
அழகியவாழ்க்கை வரலாறும்
அதோ
அல்லாஹ்வினால் படைக்கப்படாமல், இறக்கப்பட்ட,
அருள் மறை திருமறை( அல் -குர்ஆன் )
அழகாய் விபரித்து (விளக்கம்) சொல்லிக் கொண்டிருக்கிறது.!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


புடமிடு

- மெய்யன் நடராஜ் -

கவிதை வாசிப்போம் வாருங்கள்!திரண்டுவரும் ஆசைகளின் தெருவுக்குள் நுழைந்து
  திருவிழாவாம் வாழ்வென்னும் தேரதனை இழுக்க
வரங்கேட்டுத் தவமிருக்கும் வனிதையர்கள் தொழுது
  வாசல்படித் தாண்டாத விரதங்கள் பூண்டு
சிரத்தையுடன் செய்கின்ற சிவபூஜைக் காண
  சிறப்பாக வருகின்ற சிருங்காரக் கரடி
மிரண்டுவிடும் வகையினிலே மெல்லிதழைத் திறத்து
  மெதுவாகக் கேட்பானே சீர்வரிசை விருந்து.

விருந்தாகக் கேட்டவனின் விருப்பங்கள் கண்டு
  வெயிலோடும் மழையோடும் போராடி உழைத்து
அரும்பாடு பட்டப்பன் சேமித்த தெல்லாம்
  அவனுக்கு வழங்கிட முன்வந்து பெண்ணைத்
திருமண கோலத்தில் கண்டுவிடத் துடித்து
  தேய்வானே செருப்பாக தெருவோடு நாளும்.
கரும்புண்ணத்  தேனள்ளிப் போகின்றக் குரங்குக்
  கைக்குள்ளே பூமாலை யாவாலே கன்னி.

மாமனெனும் மாமரத்தில் மாங்காய்கள் பறித்து
  மணவாழ்க்கை சந்தையிலே மலிவாக விற்றே
சாமத்திலும் ஏமத்திலும் சாத்தானின் உறவாய்
  சாராய போத்தலுடன் சரசங்கள் கொண்டு
காமத்துக்கு வேறொருத்திக் கைபிடிக்கும் பொல்லாக்
  காதகர்கள் கத்தியின்றிக் கழுத்தறுத்துக் கொல்லும்
ஊமைத்தன நாடகத்தை அரங்கேற்றிப் பிழைக்கும்
  உயிரிருந்தும் ஜடமாகித் திரிகின்றார் மண்ணில்  

செய்வதற்குத் தொழிலென்று எதுவுமற்றப் போதும் 
  செயலாளர் பதவியிலே இருப்பதுபோல் தங்கள் 
மெய்யுருக  மேலோர்போல் பாவனைகள் காட்டி 
  மினுக்குகின்ற மின்மினியை நிலவென்று நம்பி
தெய்வமது பிள்ளைக்கு தேர்ந்தெடுத்துத் தந்த 
  தேவனெனக் கொள்கின்ற தீர்மானம் தவிர்த்து
பொய்யர்களை இனங்கண்டு பெண்பிள்ளை வாழ்க்கை 
  பூஞ்சோலை காவலனை புடமிடுவீர் நன்றே! 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.