- வாசகர் கடிதங்கள் -

From: Kalaiarasy
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, September 29, 2013 11:29 AM
Subject: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கட்டுரைகள்!

வணக்கம், நீங்கள் உங்கள் தளத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தீர்கள். தமிழ் விக்கிப்பிடியர்களில் ஒருவர் என்ற முறையில் மகிழ்ச்சியும், உங்களுக்கு எமது நன்றிகளும்.

கலையரசி


From: subramaniam kuneswaran
To: Navaratnam Giritharan
Sent: Friday, September 06, 2013 2:20 PM
Subject: new kaddurai - kuneswaran

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, எனது கட்டுரைகளை 'குணேஸ்வரன் பக்கம் ' என்ற புதிய பக்கத்தில் தாங்கள் இணைத்திருந்தது கண்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். 

அன்புடன்
சு. குணேஸ்வரன்


From: Nadarajah Selvarajah
Sent: Sunday, September 08, 2013 2:12 PM
Subject: Eelanadu: History of a Regional Newspaper

அன்புடையீர், ஈழநாடு பத்திரிகையின் வரலாற்று ஆவணமொன்றின் தொகுப்பு முயற்சியில் கடந்த சிலகாலமாக ஈடுபட்டு வருகின்றேன். அதற்கு உலகெங்கிலுமுள்ள ஈழநாடு வளர்த்தெடுத்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளைக் கோரியிருக்கிறேன். இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையின் இறுதியில் அச்செய்தி உள்ளது. தயவுசெய்த இக்கட்டுரையை பிரசுரித்து எனது தேடலை எளிதாக்கி உதவவும்

அன்புடன்
என்.செல்வராஜா

N.Selvarajah
Bibliographer
Compiler, Noolthettam: Bibliography of Sri Lankan Tamils Worldwide
Postal Address: 48 Hallwicks Road, Luton, LU2 9BH, United Kingdom
Telephone: (0044) 7817402704
E-Mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
website: Noolthettam.com


From: THENDRAL MELLISAI
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, September 08, 2013 9:24 AM
Subject: சிறுகதை

அன்புள்ள பதிவுகள் பொறுப்பாளர்களுக்கு, மின் இதழ்களில் இதுவரை பிறரின் படைப்புகளை வாசித்த அனுபவம் மட்டுமே உண்டு. இன்று என் படைப்பையும்  அனுப்ப ஆசையும் ஆவலும் மேலிட்டதில் ஒரு சிறுகதையை அனுப்பியுள்ளேன்.

நன்றி, வணக்கம்.
சிதனா

மலேசியா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 

From: Elanko M
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ; Giritharan
Sent: Wednesday, April 17, 2013 6:53 PM
Subject: புத்தக வெளியீட்டு அழைப்பிதழ்

அன்புடன் கிரிதரன், எனது கதைகளின் தொகுப்பான 'சாம்பல் வானத்தில் வைரவர்'  - இம்மாதம் 27 ந் திகதி மாலை 3.00 மணிக்கு வெளியிட இருக்கின்றேன் (Sat, Apr 27, between 3.00 -6.00 p.m. ). நீங்களும் கலந்துகொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும். இத்துடன் பதிவுகள் தளத்தில் பிரசுரிப்பதாய் நிகழ்வு பற்றிய ப்ளையர்ஸை அனுப்புகின்றேன். அதை பதிவுகள் தளத்தில் வெளியிட்டு உதவ முடியுமா? நன்றி.

இளங்கோ.

[உங்கள் நூல் வெளியீடு வெற்றிபெற வாழ்த்துகள். பதிவுகளில் அதுபற்றிய விபரத்தினைப் பிரசுரித்துள்ளோம். - ஆசிரியர், பதிவுகள். -]


From: PROFESSOR KOPAN MAHADEVA
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Friday, May 24, 2013 4:26 PM

கனம் பதிவுகள்.கொம் ஆசிரியர் அவர்கட்கு, தனது 85வது அகவை நிறைவேற்றத்தைக் கொண்டாடும் எம் ஈழத்து மூத்த ஊடகவியலாளர் கலாநிதி பொன். பாலசுந்தரம் அவர்களின் சேவைகளை ஆவணப்படுத்த நான் எழுதியுள்ள சிறு கட்டுரையைத் தங்களுக்கு அனுப்பவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தங்களில் அன்பு கொண்ட,
பேராசிரியர் கோபன் மகாதேவா, LONDON.


From: Albert Fernando
To: Giritharan Navaratnam
Sent: Thursday, May 30, 2013 8:24 PM

அன்பினிய ஆசிரியர் நண்.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். இத்துடன் சீனாவில் சீன வானொலியில் தமிழ் பிரிவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி ஆவதை முன்னிட்டு பொன்விழா கொண்டாடுகின்றனர். சீனா-இந்தியா-தமிழகம் பல பிரச்னைகள் இருக்கலாம்.
ஈழத்தமிழருக்கான போரில் இலங்கையரசுக்கு துணை நின்றிருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி அவர்களின் வானொலியில் நம் தமிழ் வாழ்கிறது. அதற்காகவே இந்தக் கட்டுரை.

மிக்க அன்புடன்,
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.


From: Kandaya Sothithasan
To: Navaratnam Giritharan
Sent: Thursday, June 06, 2013 1:33 AM

அன்புடையீர்,  தமிழ் இலக்கிய உலகில் பதிவுகளின் பணி மகத்தானது.

அன்புடன்
வேலணையூர் -தாஸ்