'புதுசு' நா.சபேசனுடன் ஒரு மாலைப்பொழுது!

இன்று மாலை தற்போது கனடா விஜயம் செய்திருக்கும் 'புதுசு' சஞ்சிகையின் ஆசிரியர்களிலொருவரான கவிஞர் நா.சபேசனுடன் கழிந்தது.  நண்பர் எல்லாளனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். '5ஸ்பைஸ்' உணவகத்தில் எம் சந்திப்பு நிகழ்ந்தது. கள்ளங்கபடமற்ற புன்னகையுடன் கூடிய முகத்தோற்றம் மிக்க நா.சபேசனுடன் உரையாடுவதும்  இனியதோர் அனுபவம்தான். கலை, இலக்கியம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துகளும், நனவிடை தோய்தல்களுமாக நேரம் கழிந்தது. நண்பர் எல்லாளன் எண்பதுகளில் தமிழகத்தில் கழிந்த தன் நினவுகளையும் நினைவு கூர்ந்தார்.

அண்மையில் வெளியான 'புதுசு' சஞ்சிகைகளின் தொகுப்பினையும் சபேசன் வழங்கினார். இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் சிறந்த தொகுப்பிது. அ.மாற்கு அவர்களின் அட்டைப்படத்துடன் சிறப்புற வெளிவந்துள்ளது  சிறுகதை, கவிதை, கட்டுரை என ஒரு காலத்தின் பதிவாக அமைந்துள்ள 'புதுசு' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவினர் (நா.சபேசன், இளவாலை விஜயேந்திரன், அ.இரவி & பாலசூரியன் ) நிச்சயம் பெருமைப்படக்கூடிய தொகுப்பிது. வாழ்த்துகள்.  நானும் என் 'குடிவரவாளன்' நாவலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினேன்.

 

இனியதொரு, நினைவில் நிற்கத்தக்கதோர் அனுபவமாக இந்நிகழ்வு எம் இதயத்தில் நிலைத்து நின்றுவிட்டது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.