பாரதியார்எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் இரண்டிலொன்று மகாகவி பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதை. எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று மகாகவி பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதை.

டிசம்பர் 11 மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். அதனையொட்டி அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதையினயும் கேட்க விரும்பியதன் விளைவு இந்தப்பதிவு. திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல் கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்னைக் குடையுது காற்று
சட்டச்சடசட சட்டச்சட டட்டா-என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய –மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

அண்டம் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்

டிசம்பர் 11 மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். அதனையொட்டி அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதையினைப் பகிர்ந்துகொள்கின்றேன்..