புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்யும் இலவச பயிற்சிப் பட்டறைகள்!25 – 12 - 2017. - தமிழகத்தைச்சேர்ந்த சிறந்த உளநலம் சார்ந்த பேச்சாளரான பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்து சுமார் 18 நிலையங்களில் போரால் பாதிக்கப்படட மக்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஆற்றுப்படுத்தும் வகையிலான உரைகளை ஆற்றி அவர்களின் உளநல மேம்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருந்தார். புதிய வெளிச்சம் இந்த செயற்பாடுகளை ஒழுங்குசெய்திருந்தது. அந்த வகையில் எதிர்வரும் தைமாதம், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு மூன்று பிரிவுகளில் இலவச பயிற்சிப் பட்டறைகளை புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்கிறது. இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையிலான வளவாளர்களுடன், தமிழ் நாட்டிலிருந்து பயிற்றினர் விவசாயிகள் ஐக்கிய ராச்சியம் மற்றும் கனடாவில் இருந்தும் வளவாளர்கள் வருகை தர உள்ளார்கள். இவர்களுடன் யாழ்ப்பாணத்ததை சேர்ந்த துறைசார் வல்லுனர்களையும் இணைத்தே இந்த பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்கிறோம்.

கீழ்வரும் பிரிவுகளில் பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற உள்ளன,

1. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான   பயிற்சிப் பட்டறை.
2. ஆசிரியர்களுக்கான கற்பித்தல்  பயிற்சிப் பட்டறை.
3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய பயிற்சிப் பட்டறை.- இதன் மூலம் ஜனவரி 8ஆம் திகதிமுதல் ஜனவரி 14ஆம் திகதிவரை “இயற்கை விவசாய விழிப்புணர்வு வாரம்” ஆக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு முழுவதும் தொடர் கருத்தரங்குகளை நடத்தவுள்ளோம்

ஒவ்வொரு பிரிவுகளிலும் நூறு பேர் பங்குபற்ற கூடியவாறு, ஜனவரி 2ஆம் திககி முதல் 12ஆம் திகதிவரை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் புதியவெளிச்சம் ஒழுங்குசெய்யும் இந்த பயிற்சிப்பட்டறைகள் சரியான வழியில், பயன்பெற வேண்டியவர்களை சென்றடைவதில் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், வடமாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களங்கள், பாடசாலைகள், யாழ்ப்பல்கலைக்கழக விவசாய பீடம் என்பவற்றின் ஒத்துழைப்பை பெற்றுள்ளோம்.

கீழ் உள்ள ஒழுங்கில் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற உள்ளன,

1.  ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில், ஜனவரி 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரைஇ மூன்று நாட்கள், காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெறும்.

A. யாழ்ப்பாண மாவட்டம் - யாழ்ப்பாணம் புனித மரியாள் ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்..
B. கிளிநொச்சி மாவட்டம் - திறன் விருத்தி நிலையம், மாவட்ட செயலகம், கிளிநொச்சி.
C. முல்லைத்தீவு மாவட்டம் -  முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிமனை  மண்டபம்.

மேலதிகமாக,
D. வடமராட்சி கல்வி வலயத்தில் அதிபர்களுக்கான செயலமர்வு - 2ஆம் திகதி மாலை 3மணி முதல் 5 மணிவரை.

2. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில், ஜனவரி 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள், காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெறும்.
A.    யாழ்ப்பாண மாவட்டம் - யாழ் கச்சேரி மாநாட்டு மண்டபம்.
B.    கிளிநொச்சி மாவட்டம் - திறன் விருத்தி நிலையம், மாவட்ட செயலகம், கிளிநொச்சி.
C.    முல்லைத்தீவு மாவட்டம்

3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை ஒரு நாள் பயிற்சிப் பட்டறைகள் வெவ்வேறு தினங்களில் நறைபெற உள்ளது.

A. யாழ்ப்பாண மாவட்டம்  -  இரண்டு நிலையங்களில் ஜனவரி 4ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
1.    பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம், கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
2.    மானிடம் விவசாயப் பண்ணை, தெல்லிப்பளை.

B. கிளிநொச்சி மாவட்டம்   -     இரண்டு நிலையங்களில் ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
1.    யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீட மண்டபம், கிளிநொச்சி.
2.    யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட ஒருங்கிணைத்த பண்ணை மற்றும் பயிற்சி மையம், கனகராயன்குளம்.

C. மன்னார் மாவட்டம் - தட்சணாமருதமடு மகா வித்தியாலயத்தில் 10ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

D. முல்லைத்தீவு மாவட்டம் - மல்லாவி சிவன் ஆலயதில் 11ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

E. வவுனியா மாவட்டம்  -  11ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

4. 13ஆம் திகதி - அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் பங்குபற்றும் ஒரு நாள் கருத்தரங்கு.
5. 13ஆம் திகதி - யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் உரை, நுழைவுச்சீட்டு விற்கப்படும்.
6. இறுதி நாள் நிகழ்வுகள் - 14ஆம் திகதி பொங்கல் விழா - கிளிநொச்சி.

ஒத்துழைப்பு    :
நவஜீவன் அனந்தராஜ்
புதிய வெளிச்சம்
www.puthiyavelicham.com

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.