பேராசிரியர் சொர்ணவேல்இன்றைய டிஜிற்றல் தொழில்நுட்பம் சார்ந்த உலகில், சினிமாவின் ஆத்மாவில் கண்ட யதார்த்த சாத்தியங்களிலிருந்து விலகி நாம் வெகு தொலைவில் வந்து நிற்கின்றோம். C.G .I ( Computer Generated Images) கணணியிலிருந்து  உருவாகும் விம்பங்கள் தன் கண்முன்னே யதார்த்தமாக உள்ளவற்றைப் பதிவாக்கிய கமராவிலிருந்து வெகுவாக விலகி வந்துவிட்டது. உள்ளதையும் இல்லாததையும் கற்பனையில் கண்டதையும் இணைத்துக் கட்டமைக்கும் திறனை இந்த நவீன தொழில் நுட்பம் கொண்டிருக்கிறது. ஒரு மந்திரவாதியின் மாயக்கண் போன்று டிஜிற்றல் தொழில் நுட்பத்தில் மாயச்சித்திரங்களை நாம் வடிவமைக்க முடிகிறது. இன்று வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பம் சினிமாவில் எல்லையற்ற சாத்தியங்களை ஒரு கலைஞனின் கற்பனை வீச்சுக்கு எல்லையற்ற வெளிகளை திறந்துவிட்டிருக்கிறது’ என்று லண்டனில் ஹரோ சந்தி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ‘சமகாலத் திரை உலகம்’ பற்றிய கருத்தமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமெரிக்காவின் மிச்சிக்கன் பல்கலைக்கழக திரைப்படத்துறை கலாநிதி சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றும்போது தெரிவித்தார்.

ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கில் பேராசிரியர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, ‘ஈழத்தின் யுத்த அனர்த்தங்களையும், அகதிகளாக உலகெங்கும் பரந்து வாழும் நிலைமையும் வரலாற்றில் பதிவாகவேண்டிய அழுத்தமான சுவடுகளை நிறையவே கொண்டிருக்கிறது. ஏதிலிகள்,மௌன விழித்துளிகள் போன்ற படங்கள் புனைவாக இருந்தாலும் ஈழத்தின் துயர் நிறைந்த காலகட்டத்தின் ஒரு பதிவாக விளங்குகின்றன. புனைவுகளோ, அ புனைவுகளோ அவை காலத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்பது மிக முக்கியமான அம்சமாகும். ஈழத்தின் வாழ் நிலைமையைக் களமாகக் கொண்டு எழுந்த குறும்படங்களில் மக்கள் வாழ்வில் படும் துயரின் சில கணங்கள் எப்படியோ இந்தத் திரைப்பட ஆக்கங்களில் பதிவு செய்யவே முனைகின்றன.

ஈழத்தில் திரைப்;படத் துறையில் புதிதாகப் புகுந்துள்ள இளம் கலைஞர்களின் முயற்சிகள் பாராட்டத்தக்கன என்பதில் ஐயமில்லை. முற்பது வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், காட்சிப்படுத்துதலிலும் காணப்பட்ட மிகப் பெரிய சவால்களை இன்று நாம் எதிர்நோக்க வேண்டியதில்லை. டிஜிற்றல் தொழில் நுட்பத்தின் வருகை திரைப்படத் தயாரிப்பையும் கூகிள்ää யுரியூப்; போன்ற இணைய ஊடகங்கள் காட்சிப் படுத்துதலையும் இலகுவாக்கியுள்ளது.

தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தமிழர் அல்லாத உலக மக்களுக்கு எடுத்துச் செல்வதில் திரைப்படங்கள் முக்கியம் பெற்றனவாகும். இன்று திரைப்படத்துறை தொழில் ரீதியாக பிரகாசமான வாய்ப்புக்களை வழங்குகிறது. மிகச் சிறுபாண்மையின மக்கள் திரைப்படங்கள் ஊடாக சர்வ தேசத்தின் கணிப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

இளந்தலைமுறையினர் திரைப்படத்துறையில் ஆர்வத்தோடு ஒரு கல்விநெறியாகப் பயில்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான விரிந்த வாய்ப்புக்கள் திரைப்படத் துறையில் காணப்படுகின்றன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

லண்டனில் விம்பம் நடத்திய 9ஆவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழாவிற்கு விசேட அதீதியாக லண்டன் வந்திருந்த பேராசிரியர் சொர்ணவேல் குறும்படத்தின் தனித்துவம் பற்றியும் விளக்கிக் கூறினார். ஒரு சிறுகதையைப் போல ஒருகுறும்படமும் தனக்கென்று ஒரு உள்ளடக்கத் தேவைகளை வேண்டி நிற்கின்றது.

முக்கிய சிறுகதை ஆக்கங்களில் பக்கங்களின் சுருக்கம் மட்டுமல்ல, காலவெளி சார்ந்த பிரதிபலப்பின் ஆழம் மற்றும் தனது இறுக்கமான கட்டுமானத்தின் மூலம் தனது கதையாடலின் சூழலை வெளிப்படுத்துவது போன்றவற்றால் நமது மனதில் தனித்து நிற்பவையாகும். ஒரு எதிர்பார்க்காத திருப்பம் ஒரு சிறுகதையின் அல்லது குறும்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமையலாம்.

இக்கருத்தமவர்வில் கலாநிதி இ.நித்தியானந்தன், இ.பத்மநாப ஐயர், நாழிகை மகாலிங்கசிவம், திரு சிவலீலன், திருமதி மாதவி சிவலீலன், கவிஞர் நிலா, மு.நித்தியானந்தன், சுயமரியாதை சிவா, இலக்கிய ஆர்வலர் ரகுபதி, வேலனை சிவராஜா போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஆரம்பம் முடிவு என்பதன் அழகையும் அருமையையும் கதையின் ஆன்மாவையும் அழகியலின் பொருத்தத்தையும் தீர்மானிப்பது குறும்படத்தின் நடுவிலுள்ள மையப்பாகத்தில் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் உள்ளது. விம்பம் அமைப்பு லண்டனில் நடாத்திவரும் சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழாக்கள் அதற்கான வெளியை மிகச் சிறப்பாகத் தந்திருக்கிறது. ஈழத்துக் குறுந்திரைப்படங்களில் மிகச் சிறந்த உள்ளடக்கம் கொண்ட கலைத் திறன் மிகு படைப்புக்கள் அதிகரித்து வருவது பாராட்டத்தக்கதாகும்’ என்றும் தெரிவித்தார்.

இக்கருத்தமவர்வில் கலாநிதி இ.நித்தியானந்தன், இ.பத்மநாப ஐயர், நாழிகை மகாலிங்கசிவம், திரு சிவலீலன், திருமதி மாதவி சிவலீலன், கவிஞர் நிலா, மு.நித்தியானந்தன், சுயமரியாதை சிவா, இலக்கிய ஆர்வலர் ரகுபதி, வேலனை சிவராஜா போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.