நூல் வெளியீடு: வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழாவெலிகம ரிம்ஸா முஹம்மத்வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2017 மார்ச் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறவிருக்கிறது. இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா அவர்களும், சிறப்பதிதிகளாக கொழும்புப் பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், இப்ராஹீமிய்யா கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப் இல்ஹாம் மரிக்கார், கொடகே புத்தக நிறுவனர் திரு, திருமதி சிரிசுமண கொடகே ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.
வரவேற்புரையை சட்டத்தரணி ஜீ. சேனாதிராஜாவும், வாழ்த்துரையை சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸும் நிகழ்த்த, கவி வாழ்த்தை கவிஞர் யாழ் அஸீம் வழங்குவார். கருத்துரையை கவிஞர் எம்.எஸ்.எம். ஜின்னாவும், நயவுரையை சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவும் நிகழ்த்துவார்கள். ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் வழங்குவார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை திக்வல்லை ஸும்ரி தொகுத்து வழங்கவுள்ளார் என ஏற்பாட்டாளர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கலை இலக்கியவாதிகள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். 'எரிந்த சிறகுகள்' வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 12 ஆவது நூல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியீடு: வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா