நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

09-09-2018, ஞாயிறு,  மாலை 6 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம்.

திறந்து வைப்பவர்: ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

இந்தியாவில் செயல்படும் நிலையில் இருக்கும் முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களுக்காகவே செயல்படும் இந்தியாவின் ஒரே சினிமா புத்தக அங்காடியான பியூர் சினிமா புத்தக அங்காடி சென்னையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இன்னும் சீரிய முறையில் செயல்படும் வகையிலும், பல்வேறு கிரியேட்டிவ் செயல்பாடுகள் கொண்ட இடமாகவும் மாற்றியமைக்கப்பட்டு எதிர்வரும் ஞாயிறு அதாவது செப்டம்பர் 9 ஆம் தேதி, மாலை 6 மணியளவில் திறக்கப்படுகிறது. இதனை இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக, பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் கேமராமேன் திரு. ரவிவர்மன் அவர்கள் திறந்து வைக்கிறார். ஒளிப்பதிவு, ஓவியங்கள், லைட்டிங் குறித்தும் மிக முக்கிய உரையொன்றையும் நிகழ்த்த இருக்கிறார்.

என்னவெல்லாம் சிறப்பம்சங்கள்?

தமிழில் வெளியாகி, பதிப்பில் இருக்கும் அத்தனை சினிமா சார்ந்த புத்தகங்களும் ஒருங்கே இங்கு விற்பனைக்கு கிடைக்கும். சினிமா தொழில்நுட்பங்களான திரைக்கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு தவிர சினிமா ரசனை, வரலாறு, ஆவணங்கள் உள்ளிட்ட எல்லா வகையான புத்தகங்களும் இங்கே விற்பனைக்கு கிடைக்கும். புத்தக அங்காடி தவிர நல்ல ஒளி-ஒலி அமைப்போடு கூடிய மினி திரையரங்கமும் செயல்படவிருக்கிறது. இதுநாள் வரை புத்தகங்களை விற்பனைக்கு மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும். இனி நூலகமாகவும் பியூர் சினிமா செயல்படப்போகிறது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் நூலகத்திற்கான சந்தாதாரர் சேர்க்கை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. நண்பர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு பியூர் சினிமாவில் உறுப்பினராகுங்கள். உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஞாயிறு நடைபெறும் திறப்பு விழாவில் நண்பர்கள் பெருந்திரளாக பங்கேற்று விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: 9840644916

புத்தகங்களை இணையத்தின் மூலமும் வாங்கலாம்.

www.purecinemabookshop.com

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.