நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

தொடங்கி வைத்து திரைப்பட ரசனை குறித்து பேசுபவர்: இயக்குநர் வெற்றிமாறன் | 18-03-2018, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு. | MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். | தனி நிகழ்விற்கு: சந்தா 100 ரூபாய்.

நண்பர்களே சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் தொடக்க விழா மற்றும் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் திரையிடப்பட்டு இயக்குனர் வெற்றிமாறன் திரைப்பட ரசனை பற்றிய அறிமுக வகுப்பும் எடுக்கவிருக்கிறார். மிக முக்கியமான இந்த நிகழ்வில் இன்னும் 50 பார்வையாளர்கள் மட்டுமே இணைய முடியும். இது பொது நிகழ்வல்ல, எல்லாரும் கலந்துக்கொள்ள இயலாது. உறுப்பினர்கள் அல்லது திரைப்பட சங்க விதிமுறைப்படி சந்தா செலுத்தியே பங்கேற்க முடியும். இந்த தொடக்க விழாவிற்கு கட்டணம் நூறு ரூபாய். முன்னமே தமிழ் ஸ்டுடியோவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தனியே சந்தா செலுத்த தேவையில்லை. புதிய நண்பர்கள் பியூர் சினிமா அலுவலகத்தில் நூறு ரூபாய் சந்தா செலுத்தி உடனே உங்கள் இருக்கையை உறுதி செய்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன், இந்த நிகழ்வில் இன்னும் 50 வரை மட்டுமே கலந்துக்கொள்ள இயலும். எனவே உங்கள் இருக்கையை உறுதி செய்ய உடனே சந்தா செலுத்தி நுழைவு சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். நேரில் வந்து 100 ரூபாய் செலுத்த இயலாதவர்கள் அலைப்பேசியில் உங்கள் பெயரை பதிவு செய்து நிகழ்வு நடக்கும் அடுத்த ஞாயிறு MM திரையரங்கில் நேரில் பணம் செலுத்தி நிகழ்வில் கலந்துக்கொள்ளலாம்.

பியூர் சினிமா அலுவலக முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

தொடர்புக்கு: 044 42164630

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.