பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ : திரைக்கலைஞர் ரோகிணியுடன் கலந்துரையாடல்

05-02-2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணிக்கு

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

நண்பர்களே, தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தமிழ் ஸ்டுடியோ சிறப்பாக கொண்டாடி வருகிறது. நூறு திரைக்கலைஞர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வை ஒருங்கிணைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் ஞாயிறு மாலை திரைக்கலைஞர் ரோகினி அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. தமிழ் சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் முதல் பெண் திரைக்கலைஞர் ரோகிணி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பெண்களின் பங்கு, அல்லது ஒரு கலைத்துறையில் பாலினம் அடையாளங்கள் தேவையா என்பது போன்ற விவாதங்களை முன்வைத்து நண்பர்கள் கலந்துரையாடலாம். இந்நிகழ்விற்கு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு: 9840698236

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.