நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!பேசா மொழி: பியூர் சினிமா - நூலகம் - புத்தகங்கள் தேவை.

நண்பர்களே பியூர் சினிமா புத்தக அங்காடியில் நூலகம் என்றொரு தனிப்பிரிவு இருக்கிறது. இதில் இலக்கியம், அரசியல், சினிமா, ஓவியம், காமிக்ஸ், சங்க இலக்கியம் என எல்லா வகையான நூல்களும் இருக்கிறது. ஆனாலும் நூலகத்திற்கு இன்னும் நிறைய புத்தகங்கள் தேவைப்படுகிறது. எனவே நண்பர்கள் தங்களிடம் என்ன வகையான நூல்கள் இருந்தாலும் அவற்றை பியூர் சினிமா நூலகத்திற்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலவசமாக கொடுக்க இயலாது என்றால், குறைந்த அளவு பணம் கொடுத்து கூட வாங்கிக்கொள்கிறோம். ஆனால் பெரும் தொகை கொடுக்க இயலாது. புத்தகங்களை நூலகத்திற்கு கொடுக்க விரும்பும் நண்பர்கள் வடபழனியில் உள்ள பியூர் சினிமா அலுவலகத்தில் கொடுக்கலாம். வெளியூரில் உள்ள நண்பர்கள் கொரியர் அல்லது தபாலில் அனுப்பலாம். நிறைய புத்தகங்கள் இருந்தால் KPN போன்ற டிராவல்ஸ் பார்ஸல் சேவை மூலம் அனுப்பலாம். அல்லது உங்களால்  வரமுடியாது என்றால் பியூர் சினிமா அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்களே வந்து எடுத்து செல்கிறோம். உங்களுக்கு தேவையில்லை என்கிற புத்தகங்களை அல்லது நூலகத்திற்கு கொடுத்து உதவலாம் என்று நீங்கள் நினைக்கும் புத்தகங்களை எங்களுக்கு கொடுத்து உதவலாம்.

முகவரி:
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். தொடர்புக்கு: 044 42164630 Mobile: 9840698236

இணைய முகவரி: http://www.purecinemabookshop.com/index.php
அன்புடன்

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.