கருணாகரனின் “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – புதிய கவிதை நூல் வெளியீடு

கருணாகரனின் புதிய கவிதை நூல் – “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – வெளியீடும் விமர்சனமும் எதிர்வரும் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப.300 மணிக்கு நடைபெறவுள்ளது. சு. ஸ்ரீகுமரன் (இயல்வாணன்) தலைமையில், யாழ்ப்பாணம் புதிய உயர்கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கவிஞர் ந. சத்தியபாலன், தாயகம் இதழின் ஆசிரியர் க. தணிகாசலம், விமர்சகர் சி. ரமேஸ், சத்தியன், ஞானசக்தி ஸ்ரீதரன், வேல் நந்தகுமார் மற்றும் கருணாகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இலங்கையில் 2009 இல் ஏற்பட்ட போரழிவுக்குப் பின்னான மீந்து போன மனிதர்களின் வாழ்வைக்குறித்துப் பேசும் இந்தக் கவிதைகளில் விட்டுப்போன காலத்தில் காட்சிகள் அல்லது தவிர்க்கப்பட்ட கதைகள் பேசப்படுகின்றன.

அத்துடன் படுவான்கரைக்குறிப்புகள் REMACKS ON PADUVANKARAI என்ற நீள் கவிதையும் உள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.