 ஒரு வழக்காற்றைத்தான் மரபு என்ற சொற்பதத்தால் பெரிதும் குறிப்பிடப்படுகின்றது. வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. வழமையாக ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டில் இருந்து வந்த ஓரின, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள், சமயத்தைப் பின்பற்றும் மக்களால் மேற்கொள்ளப்படும் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டுவந்த அதேமுறையில் பின்பற்றப்படுமானால் அதனை ‘வழக்காற்று முறை’ என்று குறிப்பிடலாம்.
எனவே பண்பாட்டையும் வழக்காற்றையும் தனித்தனியாகப் பிரித்துவிடமுடியாது. வழக்காறு அல்லது மரபு என்பது மக்கள் வாழ்வியலைக் குறித்து நிற்பதாகும். மக்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி வாழும் முறைமை மரபுகளைப் பின்பற்றி வாழுவதாகக் கொள்ளலாம். வழக்காறு அல்லது மரபு என்பதற்கு ஆங்கிலத்தில் 'Custom’ என்ற பதம் அல்லது 'Tradition’ என்றப பதம் பயன்படுத்தப்படுகின்றது. Custom can also mean changed to suit better: altered in order to fit somebody's requirements. வழக்காறு என்பது ஒன்றிற்குப் பொருந்தும் வகையில் மாற்றப்படக்கூடியது என்ற பொருளையும் நடைமுறையையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. வழக்காறுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன அல்ல காலும், நேரம், இடம் கருதி மாற்றம் பெற்றே வருகின்றன என்பது வெளிப்படை. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
வழக்காறுகள் அல்லது மரபுகள் மாற்றம் பெறுகின்றன என்றால் புதிய அல்லது வேறுமரபுகள் வந்து சேருகின்றன என்பது பொருளாக அமைகின்றன. எனவே நடைமுறையில் இருந்துவந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் நடைமுறியில் இருந்து விலகிப்போவதனைத் கட்டி இழுத்துப பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை. பண்டய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப்பிடித்துக்கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, சாதிய மரபு முறைகள் எம்மத்தியில் இருந்து அகற்றப்பட நீண்டகாலப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்வியறிவு வளர்ச்சியின் பயனாக சாதியத்தைப் பேணும் மரபுகள் மருவி அல்லது அருகி வருகின்றன என்பதனை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பண்டைத் தமிழகத்தில் இருந்த அல்லது பேணப்பட்டுவந்து பழந்தமிழர் மரபுகள் அருகி அல்லது மங்கிப்போனதற்கு அவற்றைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை சமூகவளர்ச்சியின் காரணமாக இல்லாதொழிந்து போனது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம்.
Last Updated on Sunday, 31 January 2016 11:07
Read more...
தமிழர் பண்பாடு உலகில் உள்ள ஏனைய பண்பாடுகளோடு ஒப்புநோக்கும்போது காலத்தால் முந்தியது எனக்கொள்ள பல்வேறு சான்றுகளை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். ஐயாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்து எனக்கருதப்படும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப்படுகின்றது. அதற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவ தெய்வ வழிபாடு, கொம்புகளை உடைய மாட்டின் முகத்தினைக் கொண்ட நந்தி ஈஸ்வரர் வழிபாடு என்பன நடைமுறையில் இருந்துள்ளன என்பனவற்றிற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சங்க காலத்தை கி.மு. 2000 ஆண்டுகள் தொடக்கம் கி.பி. 600 ஆண்டுகள் வரையும் எனக் கணிப்பீடு செய்வோரும். அதற்கு முந்திய நெடுங்காத்திற்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன என்ற கருத்தினைக் கூறுவோரும் உள்ளன. முச்சங்கம் எனப்படும் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பன இருந்துள்ளன. கடல்கோள் கொண்ட தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் இச்சங்கள் இருந்துள்ளன. இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பே தலைச்சங்கம் எனப்படும் முதற்சங்கம் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நிறுவுகின்றனர் ஆய்வாளர்கள். அவற்றில் ஆயிரக்கணக்கான புலவர்கள் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. சங்க இலக்கியத்தில் பல்வேறு தெய்வங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. புத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களில் இறைவணக்கம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று தொல்காப்பியம் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கை முறைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. மக்கள் வாழும் இயற்கைக்கேற்ப அவர்களின்வாழ்வியல் மாறுபட்டுக் காணப்பட்டதை தங்கள் பாடல்களின் மூலம் புலவர்கள் கையாண்டுள்ளனர். அக்காலத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்னும் ஐவகை இயற்கைப் பிரிவுகள் இருந்தன. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த பகுதியாகும். முல்லை காடும் காடு சார்ந்த பகுதியாகும். மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதி. நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி. பாலை, மணலும் மணல் சார்ந்த நிலப்பரப்பு. அந்தந்த நிலத்து மக்கள் அவரவருக்குரிய தெய்வங்களை வழிபாடு செய்து வந்தனர் என்பதனை பண்டைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாகவும் அவற்றிற்கு இலக்கணமாக விளங்கும் தொல்காப்பியம் வாயிலாகவும் அறியக்கிடக்கின்றது. குறிஞ்சிக்கடவுளாக முருகப்பெருமானும், மருதநிலத்துக் கடவுளாக இந்திரனும், நெய்தலில் வருணனையும், பாலை நிலத்தில் கொற்றவையையும், முல்லை நிலத்தில் திருமால் எனப்படும் மாயோனையும் வழிபாடு செய்யப்பட்டுள்ளமை சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு பயின்று வந்துள்ளமையை காணமுடிகின்றது.
Last Updated on Wednesday, 13 January 2016 23:15
Read more...

திருமுறைகளுள் தொகுக்கப்பட்ட தேவாரங்கைள ஒத்தவையாக கவிநாயகர் வி. கந்தவனம் அர்களால் யாக்கப்பட்ட பாவாரப் பனுவலில் பாடப்பட்டுள்ள பாக்கள் அனைத்துமே இறையியல் போற்றி, ஏற்றிச் சாற்றப்பட்ட சாற்று கவிகளாகவே அமைந்துள்ளமையை இறையியலை நன்கு அறிந்து சாந்தலிங்க அடியார் தொடக்கம் புகழந்தும் பாராட்டியும் உரை தந்துள்ளமை அதற்குச் சான்றாக அமைகின்றன.
எப்பொரள் யார் யார்வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் உறுதுணையாக அமைய வேண்டும் என்னும் இல்வாழ்;வின் மெய்மையை உணர்ந்து அதன்வழி வாழ்ந்து இறையியலைத் தன்சென்னியில் வைத்து மக்களை நல்வழிப்படுத்தி வருபவர் கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள்.
நான் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்ற பெரும் பண்பினைக் கொண்டு ஒழுகும் வழக்கலாறு எம்மவர்களிடையே பண்டுதொட்டு நிலவிவரும் வழக்கலாறு. “இறைதொண்டு செய்வதல்லால் யாமொன்றும் அறியோம் பராபரமே’ என இறைவனிடம் தம்மை அர்ப்பணித்து செயற்படுபவர்கள் இவ்வுலவில் அருகிவிட்டனர் என்றேகொள்ளலாம். அத்தகைய அருமையான மக்கள் மத்தியிலே தான் தெரிந்தெடுத்தக்கொண்டு தனிவழியாகச் சென்று இறைமார்க்கத்தை தன்சென்னியில் நிலைபெறுமாறு எண்ணுதியேல் அன்றி வேறு ஏம் அறியாராக இறையியலைத் தன்னை பின்பற்றிவரும் சிவ அடியவர்களைப் பக்குவப்படுத்தி தான் தெளிந்து கொண்ட மார்க்கத்திலே மற்றவர்களையும் ஆற்றுப்படுத்துகின்ற பெரும் பணியினை இன்று கனடாவில் செய்துகொண்டிருக்கக்ககூடியவர்களுள் கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் முதன்மையானவர் என்று துணிந்துகூறலாம். சமயத்தொண்டு சமூகத்தொண்டு எனத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருவதினை நாம் தினந்தினம் காண்கின்றோம்.
Last Updated on Monday, 28 December 2015 07:33
Read more...
நீண்ட பெரும் முயற்சி, உழைப்பு, பணச்செலவு, நேர அர்ப்பணம் எனத் தன்னியல்பின் வழி நின்று அர்ப்பண சிந்தையோடு செயற்பட்டதன் விளைவாக எமது கைகளில் இன்று வன்னியபற்றிய தாக்கம் மிக்க ஆவணத்திரட்டு ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது. இந்த முயற்சியைச் செய்தவர் நோர்வேயில் வாழ்ந்துவரும் வவுனிக்குளத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம். வவுனிக்குளம் 2ம் படிவத்தைச் சேர்ந்தவர். அங்கு கிராமசேவையாளராகப் பணியாற்றியதோடு திடீர்மரண விசாரணை அதிகாரியாகவும் சமாதான நிதவானாகவும் கடமையாற்றிய பெரிய தந்தையாரின் மகன் கந்தையா பரமநாதனுக்கும் வவுனிக்குளத்தில் 1958ம் ஆண்டு குடியேறியதிலிருந்து அப்பிரதேச மக்களின் அனைத்து நலன்களிலும் அயராது உழைத்த தனது தாயார் திருமதி கந்தையா வள்ளியம்மைக்கும் இந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணையும் மக்களையும் ஆத்ம சுத்தியோடு நேசிக்கும் ஒருவராலேயே இத்தகைய ஒரு ஆக்கத்தைச் செய்த தரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் கந்தையா சுந்தரலிங்கம். “நாம் வாழும் வன்னிமண் ஒரு நீண்ட பாரம்பரியத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் தன்னுள் புதைத்துக் கொண்டு அடுத்த சந்ததிகளையும் வாழவைப்பதற்காக பரந்து விரிந்கிடக்;கிற, புதைந்து கிடக்கும் அந்த மண்ணின் வரலாற்றையும் வாழவைப்பாதற்காக அடுத்த சந்ததிகளுக்காகச் சொல்லவேண்டிய கடமையுணர்வை ஏநோ நாம் அடிக்கடி மறந்துவிடுகின்றோம். ஒரு பெரம் நீண்ட வரலாற்றின் வாரிசுகள் கதைபேசி உறவாடிய வாழ்க்ககை ஒன்றும் ஒரு குறுநிலத்தின் கதையல்ல. ஒவ்வொரு வீட்டு முற்றத்தின் கதையும் கூட. இது ஐரோப்பய காலனிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான வன்னியரின் போராட்டக்களம். விருந்து படைத்த மருதம், நெய்தல், முல்லை மண்கள் கூடிக்கலந்த பண்பாடு துளித்த தாய் மண்வன்னி” எனத்தனது பதிப்புரைக்கு முத்தாரம் இடும் அவர், “அநதத் தாய் மண்ணும் மரபும் ‘சார்ந்து நாம் முன்னோர்கள் சந்தித்த எழுச்சிகளும் வீழ்சசிகளுட், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு சிலிப்பபான புதிய அனுபவத்தைத் தரக்கூடும், வயல், காடு, குளம், கடல் பறவை, விலங்குகள் என எங்கள் முன்னோர்கள்சந்தித்த இயற்கைச் சூழல் நம்கண் மன்னே விடைபெறுகின்றது. மரபுகளிலும் சூழல்களிலும் நாம் கொண்டிருக்கும் உணர்ச்ியற்ற போக்கு எதிர்காலச் சந்ததியினரை மேலும் மண்ணில் இருந்து அந்நியப்படுத்திவுடும். வரலாறு கிழித்துப்போடப்பட்ட இந்நொரு ஓவியமாகவே இன்று வன்னியைப்ப ◌ார்க்கமுடிகிறது. வரலாற்றின் நிகழ்வகளையும் மரபுகளையும் மாத்திரமின்றிகூழலையும் சேர்த்து கோர்வைப்படுத்துவது ஒரு சமூக வழிப்புணர்வனை உருவாக்கும். அது ஒரு மிக அமைதியான, அறிவுபூர்வமான சந்ததிகளின் வளர்ச்சிக்கு உதவும்” எனக்குறிப்பிட்டுள்ள அவர்என தனது பதிப்புரையில் மண்ணின் பெருமையையும், அங்கு புதையுண்டுள்ள தொன்மை வரலாற்றையும் வெளியே கொண்டுவரவேண்டும் என்னும் ஆதங்கத்தையும் தன்னுள்ளத்துள் கொண்டதன் பயனாக பதிவாக்கப்பட்டதே இந்த ஏடு.
Last Updated on Wednesday, 16 December 2015 11:55
Read more...
Last Updated on Wednesday, 16 December 2015 02:57
Read more...
"நான் கருப்பொருட்களைக் தேர்ந்துகொள்ள எனது உள்உணர்வுகளிலேயே நம்பிக்கை வைத்துள்ளதோடு என் உள்ளத்து உணர்வுகளுடனேயே எழுதுகின்றேன்" , "நானே எனது புத்தகங்களின் ஒட்டு மொத்தம்" எனவும் குறிப்பிடும் இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தா திரு. வி. எஸ். நேப்போல் அவர்கள், (Trinidad) ரினினாட் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தனது இலக்கியப்படைப்பால் உயர்ந்து நிற்கின்றார். உலகில் காணப்படும் ஒரே ஒரு இந்துமத அரசாகக் காணப்படும்; நேபாள தேசத்தின் பரம்பரையில் உதித்தவர்தான் இன்று உலகளாவிய புகழ் படைத்த நாவல் படைப்பிலக்கிய மேதையாகக் கருதப்பட்டு உயர்விருதினைப் பெற்றுக்கொண்ட சிவா நேப்போல் அவர்கள். தனது பாட்டியார் இந்தியாவிலிருந்து வரும்போது பல இந்துமத நூல்களையும், சாத்திரங்களையும் கொண்டு வந்திருந்தார். அவர்கள் சமய அனுட்டானங்களைத் தொடர்ந்தார்கள் நாமும் பின்பற்றினோம் ஆனால் எமக்கு மொழியை யாரும் கற்றுத்தரவில்லை. இந்தி எழுத்துக்களை இளமையில் யாரோ சொல்லித்தந்ததாக ஞாபகம் ஆனால் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அத்தோடு எமது மொழியின் இடத்தில் ஆங்கிலம் திணிக்கப்பட்டதால் நாம் எமது மொழியை மறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தமது ஆதங்கத்தை நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்ரக்கோம் சென்றவேளை குறிப்பிட்டிருந்தார். எனது புத்தகங்களின் கூட்டு மொத்தம் நானே என்று கூறும் அவர் தனது தாயாரின் ஊர் நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் என்கின்றார்.
Last Updated on Wednesday, 16 December 2015 03:04
Read more...
தமிழ் எழுத்தாளர்களுள் நீண்டகால வரலாற்றில் ஆண்களே முதன்மை வகித்து வந்துள்ளனர். ஆனால் சில பெண் எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தாற்றலால் தமது நிலையை இலக்கிய உலகில் தக்க வைத்துள்ளனர். பெண்களை இரண்டாம் படியில் வைத்துப் பார்ப்பவர்கள் இந்திய மரபுவாதிகள். இந்தியப் பாரம்பரியத்தின் விளைவாக பெண்கள் இயல்பு வாழ்க்கையில் காலடியெடுத்துவைத்தால் தானுண்டு தன் குடும்பம் உண்டு என வாழப் பழகிக் கொள்வார்கள். கணவன். பிள்ளைகள், பெற்றோர் என அவர்களின் நலன் சார்ந்து வாழவேண்டியவர்களால் ஆக்கப்பட்ட சமுதாய கட்டுக்கோப்பை மீறமுடியாதவர்களாக குடும்பத்தோடு இணைந்து விடுவார்கள். இந்தியரில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் தமிழ் எழுத்தாளர்களே இருந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையின் மத்தியில் சடங்கு, சம்பிரதாயம் என அவற்றிற்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களின் மத்தியில் ஒரு சிலர் அந்த நிலைமைகளை மீறிக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.
Last Updated on Wednesday, 16 December 2015 03:04
Read more...
 யூன் மாதம் 20ம் நாள் 1682ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்தவர் பத்தலோமயுஸ் சீகன்பால்க் என்னும் புரட்டஸ்தாந்த மத போதகர். துந்தை உணவுத்தானிய வியாபாரியாக விளங்கியவர். சீகன்பால்க் நான்கு மூத்த சகோதரிகளுக்கு இளையவராகப் பிறந்தார். நலிந்த உடலும் பலவீனமானவராகவும் இளமைக்காலத்தில் காணப்பட்டார். இளமையில் தாயையும் பின்னர் தந்தையையும் இழந்தார். புல்ஸனிட்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர் 12வது வயதில் யோர்லிட்ஸ் என்னும் இடத்திலுள்ள இடைநிலைப் பள்ளியில் சேர்ந்து உயர்கல்வியைப் பெற்றார். பாடசாலைப் பதிவேட்டில் அவரது பெயருக்குக் கீழே உடலிலும், உள்ளத்தாலும் வளர்ச்சியடையாத மாணவன் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது அவரது இளமைக்காலத்தில் அவர் எத்தககைய நிலையல் இருந்துள்ளார் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. வாலிபப்பருவத்தை அடைந்தும் ஜேர்மனியல் பிரபலமாக விளங்கிய ஜேக்கப் பௌஃமி இன் அறிந்துகொள்ளமுடியாத பரவச மனநிலையில் ஆன்மீக வழிபாடு செய்து இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தத்துவக் கொள்ளையின் பால் ஈர்க்கப்பட்டு அதிலிருந்து விடுபடமுடியாதவராக பெரும் உளப்போராட்டத்திற்கு உள்ளானார். பின்பு அதிலிருந்து விடுபட்டு 1702ல் உயர்கல்விக்காக பெர்லின் நகருக்குச் சென்றார். சுகவீனமுற்றிருந்தமையால் அவரால் கல்வியைத் தொடர்வதில் தடங்கல்கள் காணப்பட்டன. 1703ல் இறையியில் கல்வி கற்பதற்காக ஹலே என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமுற்றிருந்தார். “நான் எங்குசென்றாலும் சிலுவை என்னைப் பின்தொடரகின்றது” என அவர் தனது துன்பத்தை வெளியிட்டுள்ளார். அங்கு எரேபிய மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
Last Updated on Wednesday, 16 December 2015 03:05
Read more...
- பதிவுகள் நவம்பர் 2009 இதழ் 119இல் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் கட்டுரைத் தொகுதி நூல் வெளியீடு பற்றி வெளியான இக்கட்டுரை எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரத்தின் மறைவையொட்டி, அவர் நினைவாக மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -
பிரேம்ஜி ஞானசுந்தரம் இடதுசாரிக்கருத்துகளால் கவரப்பட்ட ஒரு முற்போக்காளர். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழிநடத்தி வந்தவர். 1954 தொடக்கம் அதன் செயலாளராக இருந்துவருகின்றார். அவர் 1950களில் இருந்து எழுதி வந்த கட்டுரைகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு நூல் கடந்த 27.09.2009 மாலை 'ஸ்காபுரோ விலேச்' சனசமூக நிலையத்தில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை திரு. வி.என். மதியழகன் தொகுத்து நெறிப்படுத்தினார். செல்வி ஆதிரை விமலநாதன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், கனடிய தேசிய கீதத்தையும் இசைத்தார். தொடர்ந்து த.சிவபாலு அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து தலைமையுரையாற்றினார் அதிபர் கனகசபாபதி அவர்கள். தலைமையுரையில் 'பிரேம்ஜீ அவர்கள் இலைமறை காயாக இருந்து செயலாற்றிய ஒருவர்; ஆரம்பத்திலவர் பரமேஸ்வராக்கல்லூரியில் கற்றபோது அவரைப் பரீட்சைக்குத்தோற்றுமாறு அவரது ஆசிரியர் கேட்டபோது அவர் நான் பரீட்டைஎடுக்கவரவில்லை அறிவுக்குப் படிக்கவே வந்தேன் என்றபோது அப்படியானால் இது உனக்கு உகந்த இடமல்ல என்று பாடசாலையில் இருந்துவெளியேற்றப்பட்டபோது, அவரது பெற்றோரும் அதனை ஒரு சவாலாக எடுத்து அவரை வேறு பாடசாலையில் சேர்ந்து படிக்கவைத்துள்ளனர் என்றால் பிரேம்ஜிக்குப் பெற்றோர் தந்த ஒத்துழைப்பு எத்தகையது என்பது எனக்க வியப்பைத்தருகின்றது. அது மட்டுமல்லாது கொழும்பில் நாமக்கல் கவிஞரைக் கண்டு நான் ஆங்கிலத்தை அல்ல தமிழைத்தான் கற்க விரும்புகின்றேன் என்று கூறி அவருடைய அனுமதியைப் பெற்று இந்தியாவிற்குச் சென்று தமிழைப் படித்துள்ளார் என்றால் அவரது மொழிப்பற்று, தேசப்பற்று என்பன பற்றிச் சொல்லத்தேவையில்லை. சென்னையில் வி.க. வ.ரா. சுவாமிநாத சர்மா ஆகியோருடன் பழகும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். அது மட்டுமன்றி சுவாமிநாத சர்மாவின் ஆலோசனைப்படி கொம்யூனிசக்கட்சியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக 1954 தொடக்கம் இயங்கி வருவதோடு மட்டுமன்றி பல்வேறுபட்டி பிரிவினரையும் இணைத்துப் பாலமாகச் செயற்பட்டவர். சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டி பல வெளிநாட்டு எழுத்தாளர்களும் இணைத்து பெரிய ஒரு மகாநாட்டைக் கூட்டியவர்' என்று அவரைப்பற்றிய சிறப்புக்களை எடுத்துரைத்தார்.
Last Updated on Wednesday, 16 December 2015 03:05
Read more...
|