பதிவுகள்

 • Increase font size
 • Default font size
 • Decrease font size
ஆய்வு

ஆய்வு: சிறுபஞ்சமூலம் உணர்த்தும் சமுதாய நெறிகள்

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழில் தோன்றிய முதல் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும்.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.காலத்தின் கோலத்தால் அறநூல்கள் தோன்ற வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டதால் சங்க காலத்தை அடுத்து உள்ள காலமான சங்க மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்நூல்கள் அறம்,  அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு ,புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் காரியாசன்.இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.இக்கருத்தைப் பாயிரப் பாடல் கடவுள் வாழ்த்து உறுதிப்படுத்துகின்றது.இவர் சமண சமயத்தவத்தவரானாலும்இசமய சார்பற்றக் கருத்துக்களை மிகுதியாகக் கூறியுள்ளார்.சிறுபஞ்சமூலம் என்னும் சொல்லுக்கு

ஐந்துவேர்கள்என்றுபொருள்படும்அவையாவனசிறுவழுதுணைவேர்,நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர் ,பெருமல்லிவேர்,கண்டங்கத்திரிவேர் ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல் நோயைப் போக்குவது போல் இந்நூலுள் வரும் ஒவ்வொரு பாடலும் ஐந்து நீதிகளைத் தொகுத்துக் கூறுகின்றன இவை மக்களின் நோய் நீக்கும் என்பதால் இதற்குச் சிறுபஞ்சமூலம் என்று பெயர் வழங்கப்பட்டது.இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன.ஆயினும் 85 ஆம் பாடலில் தொடங்கி 89 ஆம் பாடல் வரை ஐந்து பாடல்கள் காணப்பெறவில்லை ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் புறத்திரட்டில் 85,86,87-ஆம் எண்களுக்கு உரிய பாடல்கள் உள்ளன.இதற்கு உரியசான்று முடியாதததானால் நூலின் இறுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.இந்நூல் நான்கு வரிகளில் ஐந்து பொருள்கள் சிறந்த முறையில் அமைந்துள்ளன.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Friday, 21 April 2017 06:58 Read more...
 

ஆய்வு: 'பதிவுகள்' இதழ் கவிதைகளில் மார்க்சியம்

E-mail Print PDF

கட்டுரையாளர்: - ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம்முன்னுரை
இணையத்தமிழ் இதழ்களில் இலக்கியம் சார்ந்த படைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இதழ் பதிவுகள் இதழ். இந்த இதழில் பெண்ணியமஇ; மார்க்சியம்இ தலித்தியம்இ புலம்பெயர்வு போன்ற நவீன இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றது. அக்கவிதைகளில் மார்க்சிய கவிதைகளை ஆராய்வதாக இக்கட்;டுரை அமைகின்றது.

மார்க்சியம்
சமுதாயத்தில் நிலவும் நிகழ்ச்சிகளுக்கு காரணகாரிய விளக்கம் காட்டி உண்மையைப் புரிந்து கொள்ளத் தத்துவார்த்தப் போராட்டம் நடத்துவதையே மார்க்சியப் படைப்பாளர்கள் தங்களின் இலக்கியப் பணியாக கொண்டனர். மார்க்சிய வாதிகள் இலக்கியத்தைச் சமுதாய மாற்றத்திற்கான ஒரு கருவியாகக் கையாண்டனர். சமுதாயக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோடும் விமர்சனம் செய்வதோடும் நின்றுவிடாமல் குறைகளுக்குத் தீர்வுகாண்பதே மார்க்சியத்தின் நோக்கமாகும். உலகத்தில் உள்ள வர்க்க முரண்பாடுகளை நீக்குவதற்கு வர்க்கப்போர் ஒன்றையே தீர்வாக மார்க்சிய இயக்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக அமைவது அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள்கள் தான். அப்பொருள்கள் கிடைக்கப்பெறாத மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்;துக்கொள்ள மக்கள் எல்லா வகையிலும் சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். என்பதை,

Last Updated on Friday, 14 April 2017 00:18 Read more...
 

ஆய்வு: இளையராஜவின் இலக்கியப் படைப்புகளில் அணிகள்

E-mail Print PDF

இளையராஜாஒரு படைப்பு வாசகரை எளிதில் சென்றடைவதற்கும் கவரக் கூடியதாய் அமைவதற்கும் அப்படைப்பின் கரு அடிப்படை என்றாலும் அக்கருவை வளர்த்தெடுத்து இலக்கியமாக்குவதற்குப் படைப்பாளனின் படைப்பு உத்திகள் துணை செய்கின்றன. எனவே, ஒரு செய்தி அல்லது தகவலைப் படைப்பாளன் தன் படைப்பு உத்தகளால் சிறந்த இலக்கியப் படைப்பாக வெளிக்காட்ட முடியும். இந்த அடிப்படையில் “உத்திகள்’ அடிப்படை என்பதை அறியலாம்.

இலக்கியப் படைப்பாளிகள் செலச் சொல்லும் பொருட்டுப் பல்வேறு நெறிமுறைகளைக் கையாள்வர். இந்நுவல் நெறிமுறைகளே “இலக்கிய உத்திகள்’ என்னும் குறியால் – கலைச் சொல்லால் குறிக்கப்படுவன எனலாம். (அறிவுநம்பி.அ, 2001, ப: 6)

பொதுவாக நாவல், சிறுகதை போன்ற படைப்புகளில் உவமை, வருணனை, கற்பனை, பாத்திரப் படைப்பு உத்திகள், எழுத்து உத்திகள் போன்றவை நிறைந்து காணப்படும். இளையராஜாவின் படைப்புகளில் இறையனுபவங்கள் புதுக்கவிதையாயும், வெண்பா எனும் மரபுவழி பாக்களால் பாடப்பட்டதாயும் அமைந்துள்ளன. ஆயினும் பாமரரும் புரிந்துக்‌கொள்ளும் வகையில் எளிமையாக வெண்பாக்களைப் படைத்துள்ளார் இளையராஜா. இப்புரிதலின் அடிப்படையில் உவமை, உருவகம், தொடைகள், கற்பனை போன்ற பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அவற்றுள் குறிப்பாக “அணிகள்” இவர் படைப்பில் பயின்று வந்துள்‌ளமை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

அணிகள்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். இலக்கியத்திற்கு அழகூட்டுவதன் வாயிலாக இலக்கியத்தைச் சுவையுடையாக்குவது அணி. தொல்காப்பியத்தில் அணி குறித்து இடம்பெறவில்லையெனினும் “தண்டியலங்காரம்” அணிகள் குறித்த இலக்கணத்தை விரிவாகச் சுட்டியுள்ளது.இளைராஜாவின் வெண்பா படைப்புகளில் பல்வேறு அணிகள் இடம்பெற்றுள் ளன. அவை வருமாறு

Last Updated on Sunday, 09 April 2017 01:29 Read more...
 

ஆய்வு: அகநானூற்றுப் பாடல்களில் இருவாழ் உயிரினங்கள்

E-mail Print PDF

சி.யுவராஜ்முன்னுரை
பண்டைய தமிழ் நாகரிகம் மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதாரமாகவும்  செய்தி ஊற்றாகவும் அமைவது சங்க இலக்கியம். சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூலில் ஒன்று அகநானூற்றுப்பாடல்களில் மூலம் பார்த்தால் சிறந்த சிந்தனைகள் மலர்வதையும் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தைப் பிரதிபலிப்பதையும் காணலாம். காதல். களவு, இயற்கை, விலங்கு, பண்பாடு, திருவிழா, சடங்குமுறை முதலியன செய்திகள் இருப்பினும், பல்வேறு உயிரினங்கள் பற்றி செய்திகளை புலவர்கள் பாடல்கள மூலம் அறியமுடிகின்றன. இக்கட்டுரை வாயிலாக அகநானூற்றுப்பாடல்களில் இருவாழ் உயிரினங்கள் ( நிலம், நீர்) பற்றி ஆய்ந்து நோக்கில் கொடுக்க முற்படுகின்றன.

தேரை
தேரை என்ற உயிரியைப்பற்றி உயிரியலார் கூறுவது, தகவல்கள், தவளையினத்தில் ஒன்றாகிய தேரைப்பார்ப்பதற்கு தவளை போன்று இருக்கும். இவை இரண்டுமே அருநிலை வாழ்வியல் வகுப்பைச் சேர்ந்தவை. இரவு இரைதேடும் தேரைகள் நிலத்தில் வாசிப்பவை. எனினும் இவை இருப்பிடம் சதுப்புநிலப்பகுதி அல்லது நீர் நிலைகளுக்கு அருகாமையில் தான் அமைந்திருக்கும். தேரை ஊர்ந்தும்  நகர்ந்தும் செல்லும். பொதுவாக  இவை பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருக்கும் அத்துடன் கறுப்பான வட்டங்கள் புள்ளிகள் காணப்படும். சங்க இலக்கிய நூல் அகநானூற்றில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. தேரையின் ஒலிப்பு முறைகள் ‘நீர்மிசைத்தெவுட்டும் தேரை ஒலியின்’ (அகம்.301:18) எனவும், ‘அவல்தோறு ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க’ (அகம்.364:3) எனவும் அகநானூற்றில் பாடல்கள் மூலம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன.

முல்லை நிலத்தில் மிகுதியாக மழைப்பொழிந்து ஆழமாகிய நீரினையுடைய பள்ளங்கள் இருக்கும் அதில் வாழும் திறந்த வாயினையுடைய தேரைகள் மகிழ்ந்து சிறிய பலவாகிய இசைக்கருவிகளைப்போல் ஒலிக்கும்.

Last Updated on Thursday, 06 April 2017 00:02 Read more...
 

பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்

E-mail Print PDF

பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள், முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி, அமைப்பு, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.

பொருத்தமற்ற திருமணத்தைத் தடுக்கும் சமுதாயம்
பாத்திமுத்து சித்தீக் அவர்கள் இசுலாமியச் சமுதாயக் கோணல்களை நோகாது சாடியுள்ளார். பலதாரமுறை இசுலாத்தில் இருந்தாலும் கூட மனைவியை இழந்த ஒருவனுக்கு சிறுவயது பெண்ணைக் கட்டிக் கொடுப்பது அதுவும் தகப்பன் போன்றிருக்கும் ஒருவருக்கு கட்டிக் கொடுப்பது தவறானது என்பதை இடி மின்னல் மழை சிறுகதை வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் மனைவி மும்தாஜை இழந்த நிலையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சபூரின் தாயார் வற்புறுத்தியும் திருமணமே வேண்டாம் என்றிருந்த சபூர் பலரின் வற்புறுத்தலுக்காகச் சம்மதம் சொன்னான். பக்கத்து வீட்டிலிருக்கும் அப்துல் கரீம் அவர்களுடைய மகள் ஆயிஷாவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலையில் அப்துல் கரீம் விட்டுக்குச் சென்றான்.

Last Updated on Thursday, 30 March 2017 21:13 Read more...
 

The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan

E-mail Print PDF

Abstract

- Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

Any journey in life is blissfully ever sought by human travelers across the globe. However, there are certain migrations by specific ethnic groups who are left with not much choice except for a disagreeable movement, sometimes hazardous ones too. Life and journey go hand in hand in a pleasant manner for any human being with comfortable existence. Crisis occurs only when life becomes uncertain in the homeland and to enter an alien land. Srilankan Tamil people is one such ethnic group who have been going through the crisis of existence for having born in a land that coerces cruelty upon them. The writer V.N. Giritharan was born as a blessed being like others in a Tamil family in Sri Lanka. He grew up as a writer as well as an Architecture graduate with great sensitivity towards the land and people around him. However, his state of affairs did not remain the same, as there were the chaos and brutalities of the ethnic conflict between the majority Sinhalese and the minority Tamil. The only way to survive was to leave the homeland with a heavy heart and to move towards an asylum. This journey is the most pathetic one in any man’s life. His sufferings have been portrayed vividly in the novel An immigrant in which the protagonist named Ilango lives as the replica of the writer V.N. Giritharan himself.

The paper attempts to explore the existential predicament of the protagonist of the novel An Immigrant whose personal experiences demonstrate the physical, psychological multicultural, ethnic, political and socio-economic issues of such immigrants across the globe.

Key words :  Canadian-Tamil Writer, V.N. Giritharan, forced migration, Diaspora, Tamil ethnic race, refugees, unwilling immigrant, identity crisis, political asylum.

“I remained, lost in oblivion;
My face I reclined on the Beloved.
All ceased and I abandoned myself,
Leaving my cares forgotten among the lilies.”
(St. John of the Cross)

Last Updated on Monday, 20 March 2017 00:19 Read more...
 

ஆய்வு: சித்தர் பாடல்களில் பழமொழிகள்

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்!அனுபவம் வாய்ந்தவர்களின் அனுபவ மொழிகளாக வெளிவருபவை பழமொழிகள் ஆகும். முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின்வழி கிடைத்த அனுபவத்தின் வெளிப்பாடே பழமொழிகள் என்னும் அறிவுச்சுரங்கம் ஆகும். பழமொழிக்கு சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் உண்டு. இவை மக்கள் மனதிலே ஆழமாகப் பதிந்து நற்செயலைத் தூண்டச் செய்கின்றன. பழமொழிகள் அனைத்தும் பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் வெளிக்காட்டும் கருவியாகும். இத்தகு பழமொழிகள் சித்தர்களின் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. சித்தர்கள் தமிழ்சமூகத்தின் அறிவாளிகளாகக் கருதப்பட்டனர். இத்தகு அறிவாளிகளின் பாடல்களில் வெளிப்பட்டுள்ள பழமொழிகளை எடுத்துரைப்பதாகவே இக்கட்டுரை அமைகிறது.

பழமொழி
தினந்தோறும் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களின் திரட்டே பழமொழியாகும். இவை அனுபவத்தின் அடிப்படையில் வெளிவருவனவாகும். தமிழ்மொழியில் பழமொழியை முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், சொலவடை, சொலவாந்திரம், ஒவகதை போன்ற பல சொற்களில் குறிக்கப்படுகின்றன. பழமொழிகுறித்து,

“ நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றும்
குறித்த பொருளை முடித்தற்கு வருஉம்
ஏது நுதலிய முதுமொழி   ”
( தொல்.பொரு.செய். 166)

Last Updated on Monday, 06 March 2017 22:58 Read more...
 

ஆய்வு: தமிழ் - மலையாள மொழிகளில் செயப்படுபொருள் வேற்றுமை

E-mail Print PDF

முனைவர் விஜயராஜேஸ்வரி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். -தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் ”இரண்டாம் வேற்றுமை” என்று செயப்படுபொருள் வேற்றுமை கூறப்படுகின்றது. ”செயல் படுகின்ற பொருள்” என்பார் முனை. அகத்தியலிங்கம். செயப்படுபொருள் என்பது வினைக்குத் தகுந்தபடி மாறுகின்ற ஒன்று. எனவே  செயப்படுபொருளை வரையறுப்பது கடினம் எனபார் முனை. கு.பரமசிவம். (இக்காலத்தமிழ் மரபு, 1983, பக் - 138). 

தமிழிலும் மலையாளத்திலும் செயப்படுபொருளை ஏற்கும் சொற்களாக இருப்பவை  பெயர்களும், பதிலிடு பெயர்களும் ஆகும். எனவே இதன் உருபுகள் பெயரிலும் பதிலிடு பெயரிலும் அமையும் என்பது இதனால் பெறப்படுகின்றது.

ஆங்கில மொழியில் சொல்வரிசைமூலம் செயப்படுபொருள் குறிக்கப்படுகின்றது. (Dr.K.M.George, Malayalam Grammar and Reader, 1983, page -77). ஆனால் தமிழிலும் மலையாளத்திலும் பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தி செயப்படுபொருள் சுட்டப்படுகின்றது. அதனால் தமிழிலும் மலையாளத்திலும் சொல்வரிசைக் கட்டுப்பாடு இல்லை.

தமிழில் செயப்படுபொருள் வேற்றுமை உருபு ”ஐ”.
”ஐ” யெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி என்பது தொல்காப்பியம். (தொல்.சொல்.555).
நன்னூலாரோ இரண்டாவனதனுருபு ”ஐ” யே என்பார். (நன்னூல் 299).

தமிழில் செயப்படுபொருளை உணர்த்தும் உருபாக ”ஐ” மட்டுமே உள்ளது. மலையாளத்தில் இவ்வுருபு “எ” ஆகும்.

Last Updated on Tuesday, 07 March 2017 23:50 Read more...
 

ஆய்வு: அற இலக்கியங்களில் இன்னா செய்யாமை

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் இன்னா செய்யாமை குறித்த செய்திகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்னா செய்யாமை
உலகில் வாழப்பிறந்த உயிர்கள் அனைத்தும் பிறர்க்குத் துன்பம் அடையச் செய்து விட்டு அதனால் ஒருவன் பயன்  பெற்று வாழ்வது அற நூல்களில் விலக்கப்பட்ட ஒன்றாகும்

Last Updated on Tuesday, 07 March 2017 23:58 Read more...
 

ஆய்வு: இணையமும் நவீன இலக்கியப் போக்குகளும் (மீள்பிரசுரம்: வல்லமை.காம்)

E-mail Print PDF

காட்சிகள்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும்  வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் காரணமாக இணையாத தமிழ்உள்ளங்கள் இணைந்து கரம் கோக்கும் புதுஉலகம் பிறந்துள்ளது.

சவாலே சமாளி
இருப்பினும் இணையத்தின் வளர்ச்சி ஒரு மூடுபொருளாகவே இருக்கிறது. இதற்கான காரணம் யாதென ஆராய வேண்டும். முக்கியமாக இணைய எழுத்தாளர்கள் தங்களை, தங்களின் தகவல்களை வெளியிடாமை அல்லது வெளிப்படுத்தாமை என்பது முக்கியமான காரணமாக அமைகின்றது. தம் எழுத்துகளை இணைய எழுத்தாளர்கள் கொண்டாடாமையும் ஒரு காரணம். நூல் வெளியீடு, பாராட்டுவிழா, விருதளிப்பு எதுவும் இணைய எழுத்திற்கு இல்லை என்பது மிக முக்கியமான காரணம். யாதாவது ஓர் அமைப்பு இணைய எழுத்துகளைப் பரிசளித்துப் பாராட்டி வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் இக்குறை நீங்கும். இணைய எழுத்துக்கான தனித்தன்மை எதுவும் இல்லை என்பது இன்னுமொரு குறை. இணையத்தி்ல் எழுதி அச்சாக்குவது அல்லது அச்சாக்கி இணைய எழுத்தாக்குவது என்ற நிலையில் இணைய எழுத்திற்கான தனித்தன்மை இழக்கப்பெறுகிறது. இற்றைப் படுத்தப்படாமை என்பதும் மற்றொரு குறை. வலைப்பூ, முகநூல். இணைய இதழ், என்று பல பரிணாமங்களிலும் இணைய எழுத்தாளர்கள் கால்பதிக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றை இற்றைப்படுத்துதல் மற்றதை விடுதல் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

Last Updated on Monday, 13 February 2017 21:16 Read more...
 

ஆய்வு: அகநானூற்றுப் பாலைத்திணையில் மலைக்கூறுகள்

E-mail Print PDF

சி.யுவராஜ்முன்னுரை
சங்க இலக்கியம் அகம்,புறம் எனும் இருபகுப்புகளையுடையது. அகம் சார்ந்தஎட்டுத்தொகை நூல்களில் அகநானூறு ஒன்று. அகப்பாடலுள் காதல் உணர்வும்,காதல் சார்ந்தபிறநிகழ்;வுகளும் பேசப்படும். அத்தகையஅகப்பாடல் செய்திகளைசங்கப் புலவர்கள் முதல்,கரு,உரிஎன்றஅடிப்படையில் அமைத்துப் பாடியுள்ளனர். இவற்றுள் முதற்பொருள் என்பதுஅகமாந்தர் வாழ்ந்து நிலத்தினையும், நிகழ்ச்சிநிகழும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டஅமைகின்றது. இக்கட்டுரைஅகநானூறு பாலைத்திணைப் பாடல்களின் மலைப்பற்றி கூறுகள் அமைந்துள்ளவிதம் குறித்தப் புலவர்கள் தரும் செய்திகள் இக்கட்டுரையின் மையப்பொருளாகஅமைகின்றது.

பாலைநிலக்கூறுகள்
பாலைச்சூழலின் நிலத்தியல் கூறுகள் மலை, வழி, இடைவெளி, மணல்,பாறை, காடு ,பரப்பு, அறை, வயல், கழனி, கடல், வேங்கடல், பொதினி எனப் பலவகையானபெயர்களால் இடம் பெறுகின்றன. பாலைநிலத்தின் கூறுகளுள் ஒன்றாகிய‘மலை’என்பதை அடுக்கம், கவாஅன், குன்றம், சாரல், அறை, சிமை, கோடு, வரை, வெற்பு, விடாகம், பிறங்கல் எனப்பலப் பெயர்களில் சங்கப்புலவர்கள் விவரித்துள்ளனர்.

மலைப்பகுதிகள்

மலை
பாலைச்சூழலில் உயர்ந்தமலைஎன்பதை‘கல் உயர் பிறங்கல்’ (அகம்.313:17),‘உயர்பிறங்கல்;’(அகம்.321:17) எனவும்,‘கொடியமலை’என்பதற்கு‘வெம்மலை’ (அகம்.275:13) எனவும்,‘பெரியமலை’என்பதற்கு‘மைபடுமாமலை’ (அகம்.153;:17;187:2) எனவும் அகநானூற்றுப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Last Updated on Sunday, 12 February 2017 00:12 Read more...
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

E-mail Print PDF

முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம், கோயபுத்தூர் -பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத் தமிழ் நாட்டிலுள்ள கல்வெட்டுகள் பண்டைய நாணயங்கள் பிறநாட்டார் எழுதி வைத்த நூல்கள் முதலின கருவியாக விளங்குகின்றன. இவற்றைக் காட்டிலும் பண்டைய தமிழ் மக்களின் பண்பினை அறிவதற்கு தமிழ் இலக்கியங்களே சிறந்த சான்றாக அமைகின்றன. உலகம் நல்வழியில் இயங்குவதற்கு பண்பாடு (அ) பண்புடையார் வாழ்தல் மிகவும் பயனுள்ளது.

“பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவிறெல்
மண்புக்கு மாய்வது மன்”1


என்பது வள்ளுவர் வாய்மொழி. அன்பும் அறனும் எங்கெங்கும் பரவிப் பெருகி வாழும் வாழ்க்கைப் பண்பும் பயனுமாக மிளிர்வது பண்பாட்டின் நோக்கமாகும். தனிமனிதனின் ஒழுக்கமும் பண்பும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தகையப் பண்பாட்டுப் பதிவுகளை நம் முன்னோர்கள் வடிவமைத்த சங்க இலக்கியங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதே ஆய்வின் நோக்கமாக அமைகின்றது

தனிமனிதப் பண்பாடு
பண்பாடு என்பது பண்பட்ட எண்ணமும் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து திருந்திய நிலையாகும். எல்லோருடைய இயல்புகளும் அறிந்து ஒத்த நன்னெறியில் ஒழுகுபவர் பண்பாடு உடையவர் ஆகின்றார். சங்ககாலத்தில் தனிமனித வாழ்க்கையில் நட்பும், பகையும், விருப்பும், வெறுப்பும், அன்பும், அன்பின்மையும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளும் இடம்பெற்றன. ஆனால் சங்கப் புலவர்கள் சமுதாயப் பொதுமைக்காகவும், பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காகவும்  பிறர் பழிதூற்றாமல் இருப்பதற்காகவும் தனி மனிதனின் உயர்ந்த பண்பினையே தேர்ந்தெடுத்துக்கூறியுள்ளனர். இதனையே,

“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்……”2


என்று குறிப்பிட அறியலாம். நல்வினை செய்யவில்லை என்றாலும் தீவினையைச் செய்யாதீர்கள் என்று தனிமனித பண்பாட்டை சங்க நூல் குறிப்பிடுவதனை அறியமுடிகிறது.

Last Updated on Thursday, 02 February 2017 22:46 Read more...
 

ஆய்வு: நீதி இலக்கியங்களில் ஒளவையார் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்!

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6 நூற்றாண்டு வரை இருந்து  பதினெட்டு நூல்களைத் தோற்றுவித்தது.கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர். இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் காணப்படும் கல்விப் பற்றிய சிந்தனைகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்விக்கு அகராதி தரும் விளக்கங்கள்
கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான என்பதற்குத்   EDUCATION தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி, வித்தை,சிட்சை,பழக்கம் என வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி’ விளக்கமளிக்கிறது.(ப.420)

தமிழ் - தமிழ் அகரமுதலி கல்வி என்பதற்கு  அறிவு,வித்தை,கற்கை, கற்கும் நூல்,பயிற்சி என்று பொருள் உரைக்கிறது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கல்வி என்பதற்கு படித்துப் பெறும் அறிவு,முறைப்படுத்தப்பட்ட அறிவு, நுனரஉயவழைn  என்று பொருள் கூறுகிறது.(ப.266) கௌராத மிழ்அகராதி அறிவு, கற்றல், நூல், வித்தை, கல்வியறிவு, கற்கை, பயிற்சி, உறுதி, ஊதியம்.  ஓதி,கரணம்,கலை,கேள்வி,சால்பு,தேர்ச்சி,விஞ்சை என்று கல்விக்கு பொருள் கூறுகிறது.(ப.233)

Last Updated on Friday, 27 January 2017 00:16 Read more...
 

ஆய்வு: சித்தர்களின் பாடல்களில் நிலையாமைச் செய்திகள்.

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்!உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மறைந்து போகும். இது ஒவ்வொரு உயிரினத்தின் படிநிலை வளர்ச்சியில் , தவிர்க்க முடியாததாக இயற்கை வடிவமைத்திருக்கும் கட்டமைப்பாகும். மாற்றம் ஒன்று மட்டுமே நிலையானது மற்றவையெல்லாம் மாறக் கூடியவை என்பதை சித்தர்கள் நன்கு உணர்ந்தார்கள். இதனால்தான் உடல் அழியும் , இளமை நீங்கும் , அழகு சிதையும். இன்பம், செல்வம் நிலைக்காது என்ற நிலையாமைக் கொள்கையை சித்தர்கள் தங்கள் பாடல்களில் வலியுறுத்துகின்றனர். ஆகவே சித்தர்களின் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமைக் குறித்த செய்திகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலையாமை

” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானு
நில்லா வுலகம்  புல்லிய நெறித்தே ”   (தொல். பொருள். நூற். 78)

என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று  குறிப்பிடுகின்றார்.

நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து அதன்வழி நடப்பதே சிறந்த வாழ்க்கையாகும். நிலையில்லாதவற்றை நிலையானவை என்று மயங்கி வாழ்பவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வள்ளுவர்,

“ நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை” (குறள் -331)


என்ற அடிகளில் உணர்த்துகின்றார். மேலும்,

“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ”(சிறைசெய்காதை .135.36)


என்று மணிமேகலை பாடல்அடிகள் இளமை நிலையில்லாதது, யாக்கை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது என்று குறிப்பிடுகின்றது.

Last Updated on Monday, 06 March 2017 22:57 Read more...
 

ஆய்வு: விருந்தோம்பல் பண்பும் தமிழரின் மாண்பும்

E-mail Print PDF

முன்னுரை:
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளைப் போன்றே நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட முக்கியமான பண்பு விருந்தோம்பல் ஆகும்.இந்த உலக இயக்கமே ‘பசி’ என்ற ஒற்றைச் சொல்லில் தான் உள்ளது.‘ஒரு சான் வயிறு இல்லாட்டா;உலகத்தில் ஏது கலாட்டா”  என்று ஒரு எதார்த்தமான உண்மையினைப் போகின்ற போக்கில் சொல்லிச் செல்லும் கவிஞனும் உள்ளான். இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றது. அந்த ஈடுபாட்டில் மனிதத்தை மட்டும் மறந்து வருகின்றது. அதற்கான அடையாளம் தான் ஆப்பிரிக்க தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள சோமாலியா நாடு ஆகும். இங்கு உணவு என்பது ஒரு வேளை கூட இல்லாமல் பஞ்சத்தாலும் பசியாலும் தற்பொழுதுவரை 2இலட்சத்து58 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.ஆனால் அறிவியல் வளர்ச்சியில் இன்றைய உலகம் சுருங்கிவிட்டது என்றும் மனிதன் இந்தப் பேரண்டத்தைத் தம் கைக்குள்ளே அடக்கிவிட்டான் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றோம்.

பசி:
பசி என்ற ஒற்றைச் சொல்லால் உயிர் விடுகின்ற ஒரு சக ஜீவராசியைக் கூட காப்பாற்ற முடியாத ஒருகையற்ற நிலையில் தான் நாம் இன்று உள்ளோம்.தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திட்வோம் என்றார் முண்டாசுக்கவி பாரதி. ஆனால் பசிக் கொடுமையினால் கூட்டம் கூட்டமாக,கொத்துக்கொத்தாக மனிதர் தன்இன்னுயிரை விடுகின்றனர்.என்ற கொடுமை நம் நெஞ்சினிலே ஈட்டியாகப் பாய்கின்றது. இந்த உலகில் ஏற்படும் அனைத்து நொய்களுக்கும் மருந்து தமிழனிடமே உள்ளது. அம்மருந்தின் மூலத்தினை நம் முன்னோர்கள் நம்மிடையேசொல்லிச் செல்கின்றனர். அது தான் “விருந்தோம்பல்” எனும் அருமருந்து ஆகும்.

Last Updated on Monday, 23 January 2017 22:37 Read more...
 

ஆய்வு: திருக்குறள் உணர்த்தும் புலால் உண்ணாமை

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அந்நியர் படையெடுப்பின் காரணமாக சமுதாயத்தில் மாற்றம்  ஏற்பட்டது.சங்க காலத்தில் புலால் உண்ணலை வழக்கமாக மேற்கொண்ட மக்கள் காலமாற்றத்தின் காரணமாகவும்,பிற ஆட்சியின் காரணமாகவும்,சமயத்தின் காரணமாகவும் சங்கமருவிய காலத்தில் புலால் உண்ணலை தவிர்க்கும் நெறியினை மேற்கொண்டுள்ளனர். இக்காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் புலால் உண்ணாமை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இதில் திருக்குறளில் காணப்படும் புலால்மறுத்தல் அதிகாரத்தில் இடம்பெறும் செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்.முப்பால் என்பது இதன் பெயர்.உத்திரவேதம்,தெய்வ நூல்,பொய்யா மொழி,வாயுறை வாழ்த்து,தமிழ் மறை,பொதுமறை,திருவள்ளுவப் பயன்,திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் உண்டு.இந்நூலின் ஆசிரியர் வள்ளுவநாயனார், தேவர்,முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன், மாதாநுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர்,பொய்யில் புலவன் என்ற வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.அதிகாரம்133 மொத்த குறள்கள் 1330 இவைகள் குறள் வெண்பாவால் ஆனது.அறத்துப்பால் 38 அதிகாரங்களை உடையது.(பாயிர இயல் 4,இல்லறவியல் 20 ,துறவியல் 13 ,ஊழியல் 1 என்ற 4 இயல்களையும் கொண்டுள்ளது)பொருட்பால் 70 அதிகாரங்களை உடையது.(அரசியல் 25 ,அங்கவியல் 32,குடியியல் 13,ஊழியல் 1)காமத்துப்பால் 25 அதிகாரங்களை உடையது.(களவியல் 7 ,கற்பியல் 18 )பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் நூல். மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களைத் தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

Last Updated on Tuesday, 10 January 2017 21:56 Read more...
 

ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்

E-mail Print PDF

ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்பண்டைய மனிதன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களைப் பாகுபடுத்தி இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்தான். அக்காலத்தில் பாலைவனம் என்பது குறிஞ்சி, முல்லை நிலங்களில் ஏற்படும் வறட்சியின் காரணமாக உருவாகும் நில அமைப்பின் மாற்றமாகும். இது அரிதாகவே காணப்பட்டது. இன்று பாலையைத் தவிர மற்ற நிலங்களைக் காண்பது அரிதாக உள்ளது. தொழிற்புரட்சியின் விளைவு இயற்கை, செயற்கையாக மாறியது. எனவே ஓசோனில் ஓட்டை விழும் அளவிற்கு சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இன்று பல ஆறுகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. சுப்ரபாரதிமணியன் 'சாயத்திரை" புதினத்தில் திருப்பூர் நகரத்தின் தொழில் வளர்ச்சியையும், விளைவையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எடுத்துரைக்கின்றார்.

திருப்பூர்

இந்தியாவின் 'டாலர்சிட்டி", 'பனியன் நகரம்", 'குட்டி ஜப்பான்", என்று பலவாறு அழைக்கப்படும் நகரம் திருப்பூர் ஆகும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கானக் காரணம் ஆயத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிப்பதே ஆகும். அன்றைய நாட்களில் 100-க்கும் குறைவான தொழிற்சாலைகளே இருந்தன காலமாற்றத்தின் காரணமாக '1914-ல் 22 பின்னலாடைத் தொழிற்சாலைகள் இருந்தன. 1991-ல் கணக்கெடுப்பின்படி 2800 ஆக உயர்ந்துள்ளது". (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன்இ ப.5) தற்போது இதன் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளது. '1940-களில் திருப்பூரில் சாயப்பட்டறை இல்லை. தற்போது 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் உள்ளன". (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன,; ப.5) இந்நகரம் தொழில் வளர்ச்சியின் காரணமாகப் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்தாலும் சுகாதாரத்தில் அளவுக்கு அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. 'திருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் பின்னலாடைத் தொழிற்சாலைகளின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1985-ல் ரூ.19 கோடியாக இருந்தது. 1996-ல் இது ரூ.2,000 கோடியைத் தாண்டியது (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன் , ப.5) இதனால் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பூரை நோக்கி வருகின்றனர். மக்கள் நெருக்கடி உள்ள நகரமாகவும் மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நகரமாக திருப்பூர் உள்ளது.

Last Updated on Friday, 06 January 2017 06:08 Read more...
 

ஆய்வு: பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்

E-mail Print PDF

- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -முன்னுரை:
“இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி” என்ற நிலைப்பாட்டினை மையப்படுத்தி சங்க இலக்கியத்தைக் காணும்பொழுது “சங்க காலம் பொற்காலம்” எனும் கருத்து ஏற்புடைய கருத்தாகத் தோன்றவில்லை.பண்டையத் தொன்மரபு சித்தாந்த கோட்பாட்டினை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிலர் புனைந்துரைத்த விளக்கமாகவே இதனைக் காண முடியும்.ஏனெனில் சங்க இலக்கியங்கள் அக்காலத்தையப் பதிவுகளைச் செறிவாகத் தன்னகத்தே பெற்றுள்ளன.அப்பதிவுகளின் வெளிப்பாட்டினைக் காணும் பொழுது சில உண்மைகள் உரக்கச் சொல்ல முடியும்.அவ்வகையில் புறநானூற்றுப் பாடல்களில் வெளிப்படும் கைம்மைநோன்பு நோற்கும் பழக்கவழக்கங்கள் எத்தன்மையில் வெளிப்படுகிறது என்பதை அறியும் முகமாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.

பழக்கவழக்கம் _ வரையறை:
ஒரு தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பது பழக்கம் ஆகும்.அவ்வாறு வந்தமைந்த நடத்தையானது தலைமுறை தலைமுறையாக மரபு வழி பின்பற்றபட்டு வருமாயின் அப்பழக்கம் வழக்கம் ஆகிறது.இப்படி மரபு என்ற சொல்லோடு தொடர்புடைய தன்மையதாகப் பழக்கவழக்கம் அமைகின்றது.

கற்பு - விளக்கம்:
சங்க கால மகளிர் வாழ்வில் கற்புநெறி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், கணவன் இறந்தவுடன் மனைவி தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறை அல்லது வாழ்வை இழக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே அவளுடைய கற்பொழுக்கம் அடையாளம் காணப்பட்டது. அதனைக் கொண்டே அவளின் கற்பு நெறி சோதிக்கப்பட்டது. அவ்வகையில் கணவனை இழந்த பெண்ணின் தேர்வுக்காக மூன்று வகையான கற்பு நெறிகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டன.

1. தலைக்கற்பு கணவன் இறந்தவுடனேயே தன்னுடலில் உயிர் தங்காது உடனுயிர் மாய்தல்
2. இடைக்கற்பு கணவன் இறந்ததும் ‘சான்றோர்’ முன்னிலையில் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர் விடுதல். அதாவது உடன்கட்டையேறி உயிர் விடுதல்
3. கடைக்கற்பு கணவன் மறைவுக்குப் பின்னர் உலகியல் இன்பங்களைத் துறந்து கைம்மை நோன்பு நோற்றல்.

Last Updated on Friday, 06 January 2017 00:17 Read more...
 

ஆய்வு: பழமொழிநானூறு உணர்த்தும் சமுதாய நெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுகின்றன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு
பழமொழி நூல் நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு காணப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.இந்நூல் பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்துள்ளனர்.இந்நூல் பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது.இந்நூலகத்துப் பண்டைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை,

பிண்டியின் நிழல் பெருமான் அடிவணங்கி
பண்டைப் பழமொழி நானூறும் -கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்து அமைத்தான்
இன்றுறை வெண்பா இவை (பழ.பாயி.1)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Thursday, 05 January 2017 23:47 Read more...
 

ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்

E-mail Print PDF

முன்னுரை
ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்  உலகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல. அதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது மனிதா்களே. ஏனெனில், தனது சுயநலத்திற்காகவும், தனது மகிழ்ச்சிக்காகவும் மனிதன்  இயற்கையை எப்போது தொட நினைத்தானோ அப்போதே பிரச்சனைகளும் ஆரம்பமாகத் தொடங்கின. அப்பிரச்சனைகளிலிருந்து, மனிதன் மீண்டுவர நினைத்தால்கூட அது முடியாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது.

நமது பூமி இன்று மோசமான ஒரு வானிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குளிர்காலங்களில் மழையும், வெயில் காலங்களில் பனிப்பொழிவும், மழைக்காலங்களில் வெயிலின் தாக்கமும் பார்த்தோமேயானால் இவையெல்லாம் நமக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே எச்சரிப்பதாகவே நாம் கருத வேண்டும். இன்று உலகநாடுகளின் பெரும் பிரச்சனையாக இருப்பது வெயிலும் வெப்பமும். ஏனெனில் வெயிலின் உச்சமும், வெப்பத்தின் தாக்கமும், மனிதா்கள், விலங்குகள், செடிகொடிகளை மட்டுமல்ல இந்த பூமியையும் ஆட்டிப்படைக்கிறது. வெயிலையும், வெப்பத்தையும்  குறித்த செய்திகள் நம் இலக்கியங்களில்கூட காணக்கிடைக்கின்றன. அந்த வகையில், சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை வெயிலின் தாக்கங்கள் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை வழிக் காண்போம்.

இலக்கியங்களில் வெயிலும் வெப்பமும்
முற்காலத்தில் மக்கள் வெயிலையும், வெப்பத்தின் கடுமையையும் உணா்ந்திருந்த போதிலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெினில் அக்காலத்து மக்கள் நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்து அதன் தன்மையோடு பொருந்தி வாழ்ந்துள்ளனா். குறிஞ்சியை, மலையும் மலைசார்ந்த இடமாகவும், முல்லையை, காடும் காடு சார்ந்த இடமாகவும், நெய்தலை, கடலும் கடல் சார்ந்த இடமாகவும், மருதத்தை, வயலும் வயல் சார்ந்த இடமாகவும்  பிரித்தும், பாலையை மட்டும் குறிக்குமிடத்து,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயா் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் “       ( சிலம்பு – காடு.காண். காதை  64-66 )      

Last Updated on Sunday, 01 January 2017 07:14 Read more...
 

ஆய்வு: இனவரைவியல் நோக்கில் புறநானூறு

E-mail Print PDF

- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -ஒரு சமூகத்தின் தத்துவார்த்த விழுமியங்களை அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தும் ஆக்கபூர்வ விளைவுகளில் ஒன்று ஆய்வு. அது தமிழ் அறிவுசார் மரபில் ஒரு பண்பாட்டு வடிவமாக இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுத் தொன்மை வாய்ந்த தமிழ் இனத்தின் பண்பாட்டு அசைவாக்கங்களை அத்தகைய ஆய்வுகளை துல்லியமாக புற உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்து வருகின்றன. பண்பாட்டின் அடிப்படைகளை அறிந்துக்கொள்ள வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை இலக்கியங்கள் ஆகும். அதிலும் தமிழரின் வரலாற்று ஆவணங்களாக விளங்கும் சங்க இலக்கியங்களைப் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் வழி தமிழர் தொல்கூறுகளை பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சியை அறிந்து வெளிப்படுத்த இயலும். சங்க இலக்கியம் தொடாபான அண்மைக்கால ஆய்வுகளில் பலபுதிய போக்குகள் பதிவாகியுள்ளன. மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகிய புலங்கள் சார்ந்த சிந்தனைகளை உள்வாங்கிச் சங்க இலக்கியங்களைப் பொருள்கொள்ளும் முயற்சிகள் நடந்துள்ளன. அவ்வகையில் மானுடவியல் புலங்களுள் ஒன்றான இனவரைவியல் அடிப்படையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் பொருள்கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது.

இனவரைவியல் - விளக்கம்
19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மேலைநாட்டுக் கல்விப் புலங்களில் அறியப்பட்ட மானுடவியல் துறையின் ஒரு உட்பிரிவே இனவரைவியல் அல்லது இனக்குழுவியல் எனப்படுவது ஆகும். இனக்குழு என்னும் பொருளுடைய Enthnograpy என்னும் ஆங்கிலச்சொல் ‘Ethonos’, ‘graphein’ ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. Ethnos என்பதற்கு இனம், இனக்குழு, மக்கள் என்பது பொருள். Graphein என்பதற்கு எழுதுவது அல்லது வரைதல் என்பது பொருள். ஆகவே இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுதல் என்னும் பொருளை உணர்த்துகிறது. ஒரு இனக்குழுவைப் பற்றிய முழமையான படிப்பு என்னும் வகையில் இப்பிரிவை இனக்குழுவியல் என்றும் கூறலாம்”.1

Last Updated on Sunday, 25 December 2016 20:51 Read more...
 

ஆய்வு: தஞ்சை மராட்டியர்கள் கீழ் ஆங்கிலக் கல்வியும் கிருத்து சமயக்கல்வியும்

E-mail Print PDF

கி.இரவிசங்கர்இந்தியாவில் ஆங்கில  தலைமை கவா்னராக பதவி வகிகத்த வெல்லஸ்லி பிரபு பொ.ஆ 1797 இல் சென்னை கவா்னராக நியமனம் பெற்று பொ.ஆ 1798 இல் கவா்னா் ஜென்ரலான1 ஆங்கிலேயா்கள் இந்தியாவுக்கு வந்தவுடன் இந்திய நாட்டு மொழிகள், சட்டத் திட்டங்கள், வரலாறு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பது வெல்லஸ்லியின் கருத்தாகும். கம்பெனி ஊழியா்களுக்கு அலுவல்களைப் பற்றிய கல்வியளித்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பொ.ஆ 1800 இல் கல்கத்தா வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார்.2 ஆங்கிலேயா்கள் வாணிகக் குழுவில் பணியேற்கும் முன்பு இக்கல்லூரியில் கல்வி கற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.  அக்கல்லூரியில் பல ஐரோப்பியப் பேராசிரியா்களும் 80 இந்தியப் பண்டிதா்களும் பணியாற்றி வந்தனா்.  இக்கல்லூரியில் பயின்றவா்களைவிட பயிற்றுவிக்கும் ஆசிரியா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பொ.ஆ 1802 இல் இக்கல்லூரி மூடப்பட்டது.  பொ.ஆ 1806 இல் மீண்டும் இக்கல்லூரி ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. மேலும் கீழைநாட்டு மொழிகளைக் கற்பிக்க பொ.ஆ 1806 இல் கிழக்கிந்தியக் கல்லூரி ஒன்றும்3 தொடங்கப்பட்டது. வெல்லஸ்லி பிரபு காலத்தில் தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியுடன் ஆங்கிலேயா் ஓர் உடன்படிக்கைச் செய்து கொண்டார். அதன்படி தஞ்சை கோட்டையும், சில கிராமங்களும் தவிர மற்றவற்றை ஆங்கிலேயா் எடுத்துக் கொண்டனா்.  மன்னருக்கு ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. பொ.ஆ 1833-ல் சரபோஜி மன்னா் இறக்கவே அவரது மகன் கடைசி சிவாஜி பணம் பெற்றுவந்தார். பொ.ஆ 1855 இல் சிவாஜி வாரிசு இன்றி இறக்கவே பொ.ஆ 1853இல் டல்ஹௌசி பிரபு காலத்தில் தஞ்சாவூர் ஆங்கிலேயா் வசமானது.4 ஹேஸ்டிங்ஸ் பிரபு பொ.ஆ 1813 இல் இந்தியாவின் கவா்னா் ஜெனரலானார். இவா் ஆங்கிலக் கல்வியை பரப்புவதற்குப் பல பள்ளிகளை நிறுவினார். கல்கத்தாவில் இருந்த இந்து கல்லூரிக்கு ஆதரவு அளிந்தார். அக்கல்லூரியில் ஆங்கிலமும் மேலைநாட்டு விஞ்ஞானமும் கற்பிக்கப்பட்டன.5 வில்லியம் பெண்டிங் பிரபு பொ.ஆ 1803 இல் சென்னை ஆளுநரனார். பெண்டிங் பிரபு காலத்தில்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது.  பொ.ஆ 1813 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சாசனச் சட்டப்படி அறிவியல், இலக்கியம் மற்றும் கலாச்சார கல்வியை இந்திய மக்களிடையே பரப்புவதற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.  இந்தத் தொகையை செலவிடுவது பற்றி பல சா்ச்சைகள் ஏற்பட்டன.  கீழைநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்கும், கலாச்சாரத்தைக் கற்பிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று கீழைநாட்டு ஆதரவாளா்கள் (Orientalises) கூறினா்.  இவா்கள் கருத்தை எதிர்த்து, மேலைநாட்டு கல்வி ஆதரவாளா்கள் (Occidentalises) மேலை நாட்டு அறிவியல் கல்வியை ஆங்கில மொழியின் வாயிலாகக் கற்பிக்க வேண்டும் என்றனா். H.H.வில்சன் போன்ற அறிஞா்கள் கீழைநாட்டு மொழிகளான வடமொழி, அரபிக், பாரசீகம் போன்றவற்றிற்காக இராஜாஇராம் மோகன்ராய் போன்றவா்கள் மேலைநாட்டு அறிவியல் கல்வியை ஆங்கிலம் மூலமாகக் கற்பிக்க வேண்டும் என்றனா் (Occidentalises) இதனால் பெண்டிங் பிரபு தம் அவையில் இருந்த மெக்காலே பிரபுவிடம் கருத்து கேட்டார். மெக்காலே பிரபு இந்தியா்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஆங்கிலேயா்கள் அறிந்து கொள்ளவும், ஆங்கிலேயா்களை பற்றி இந்தியா்கள் அறிந்து கொள்வதற்கும் ஒரு பொதுமொழி தேவை என்பதை வலியுறுத்தினார்.  எனவே இந்தியா்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பித்து அவா்களுக்கு மேற்கத்திய நாகரிகத்தை கற்கும்படி செய்யத் திட்டமிட்டார். இந்தியா்களுக்கு ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது என்பதை கூறி வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் கூறி 1835 இல் கல்வி அறிக்கை (Education Minute) அக்கல்வி அறிக்கை அந்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. அதுமுதல் ஆங்கிலம் இந்திய அரசின் பயிற்றுமொழியாகவும், அரசாங்க மொழியாகவும் மாறியது.  இம்மொழியை கற்றறிந்த இந்தியா்கள் குறிப்பாக உயா்தர, மத்தியதர வகுப்பினா்கள் ஆங்கில நாகரீகத்தை பின்பற்ற தொடங்கினா்.

Last Updated on Wednesday, 21 December 2016 03:04 Read more...
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் சீறூர் மன்னர்தம் குடிமைப்பண்புகள்

E-mail Print PDF

 - பி. - துரைமுருகன், முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.பாட்டும் தொகையுமெனப் பகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்தம் பல்வேறு வாழ்வியல் மரபுகளைப் பதிவு செய்துள்ள சமூக ஆவணங்களாக விளங்குகின்றன. சமூகம் உருவான தன்மை குறித்தும், அரசுகள் உருவான தன்மை குறித்தும் விளக்கும் சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கியல் போக்கை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமச்சீரற்ற சமூக வளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றன.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் அரசு எனும் அமைப்பு உருவாகி வளர்ந்ததைப் பல்வேறு ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில் சங்க கால அரசுருவாக்கம் என்பது சீறூர் மன்னர், முதுகுடிமன்னர், மன்னர், வேந்தர் எனும் படிநிலைகளைக் கொண்டதாக இருந்துள்ளமையை அறியலாம். இவ்அரசு உருவாக்கங்களில் இனக்குழுச் சமூகப்பண்புகளைக் கொண்டதாகக் காணப்படும் சீறூர் மன்னர் சமூக அரசமைப்பு முதன்மை பெறுகிறது. இத்தகைய சீறூர் மன்னர்தம் குடிக்கே உரியப் பண்புகளாகக் கூட்டுழைப்பு, கூட்டுண்ணல், விருந்தோம்பல், நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில், தண்ணடை பெறுதல், மறத்துடன் விளங்குதல் என்பனவற்றைச்  சங்கப் பனுவல்கள் சிறப்ப்பகப் பதிவு செய்துள்ளன. இக்குடிமைப் பண்புகளில் நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில்  என்பவற்றைக் குறித்து ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

இனக்குழுச் சமுதாயமும் சீறூர் மன்னரும்
'சங்கப் பாடல்கள் ஒன்றுக்கொன்று மாறான இரு வேறுபட்ட சமுதாய வாழ்வியல்புகளைக் காட்டுவனவாய் உள்ளன. சிறப்பாகப் புறநானூற்றுப் பாடல்கள் புராதன விவசாயப் பொருளாதாரத்தையும் கால்நடைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இனக்குழுச் சமுதாய எச்சங்களைத் தாங்கிய வன்புலச் சமுதாயத்தையும், மருதநிலச் சமுதாயத்தையும் சமகாலச் சமுதாயங்களாகக் காட்டுகின்றன. இவ்விருவகைச் சமுதாயங்களும் நிலம், போர்முறை, போர்நோக்கம், வழிபாட்டுமுறை, உடைமைநிலை, புலவர் மன்னர் உறவுநிலை, வள்ளண்மை, தலைவர் குடிமக்கள் உறவுநிலை எனும் பல்வேறு நிலைகளிலும் ஒன்றுக்கொன்று முரணான இயல்புடையனவாய்க் காணப்பெறுகின்றன.' 1

Last Updated on Monday, 12 December 2016 19:17 Read more...
 

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்

E-mail Print PDF

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்முன்னுரை
கவிஞர் சிற்பியின் சிந்தனைகள் பரந்த அனுபவமும் மனித வாழ்க்கை குறித்த காலத்திற்கேற்ற மதிப்பீடுகளும் கொண்டவை. தனிமனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் போக்கில் அவருடைய கவிதைகள் அமைந்துள்ளன. இவை சமூகம் சார்ந்த பல்வேறு சிந்தனைகள், வரலாறுகள், மரபுகள், தொன்மங்கள், சமயம், சமயமறுப்பு, அரசியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் தற்கால வாழ்க்கைக்கும் எதிர்கால சமூக நலனுக்கும் ஒரு தீர்வு சொல்கின்ற வகையில் அமைந்துள்ளன. அவருடைய கவிதைகளில் அவர் சார்ந்திருந்த சில இயங்கங்களின் செயல்பாடுகளும், கொள்கைகளும், தத்துவங்களும் எதிரொலிக்கின்றன. இவ்வகையில் அவ்வியக்கம் சார்;ந்து, இவர் கவிதைகளை ஆராய்வது இங்கு பொருத்தமுடையதாகிறது.

தத்துவம் - விளக்கம்
“தத்துவம் என்ற சொல் நெடுங்காலமாகவே ஆன்மீக வாதிகளால் பிரம்மத்தைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தள்ளது. சாமவோ சாந்தோக்கிய உபநிடதத்தில் வேதாந்த மகாவாக்கியமான தத்துவம்சி (தத் - இறைவன், துவம் - நீ, ஆசி – ஆகிறாய்) இறைவன் ஒருவன் உள்ளான் என்பதை வலியுறுத்துகிறது”1 மாணிக்கவாசகரும், “தாயிற் சிறந்த தயாவண தத்துவனே என்ற பிரமத்தைச் சுட்ட தத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்”.2

பழங்காலத்தில் ‘மெய்’ என்னும் சொல், உட்பொருளை உணர்த்திற்று, உட்பொருள் என்பது உண்மைப்பொருள் என்று பொருள் தருகிறது. இந்த அடிப்படையில் தத்துவம் என்ற வடசொல்லை விடுத்துத் தமிழ்ச் சொல்லான ‘மெய்ப்பொருளியல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘மெய்யியல்’ என்றும் வழங்குவர்.
மேலும் 'Philosophy’ என்னும் ஆங்கிலச் சொல் ‘பிலாஸ்’, ‘சோமியா’ என்னும் இரு கிரேக்கச் சொற்களாலானது. இதன் தமிழாக்கம் ‘பேரறிவுக்காதல்’ என்பதாகும். ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்படும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’ என்ற பெரிய புராணச் சொற்றொடரில் பேரறிவு என்னும் சொல் ஏறத்தாழ இதே பொருளைத் தாங்கி வந்துள்ளது”3.

'Philosophy’ என்னும் சொல் தத்துவம் என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தத்துவம் என்பது ‘தத்வ’ என்ற வடசொல்லின் தற்பவம் ஆகும். ‘நீயே அது’ என்பது இச்சொல்லின் உண்மைப் பொருளாகும்.

Last Updated on Wednesday, 07 December 2016 19:31 Read more...
 

ஆய்வு: விழுமியத்தை தொலைத்த தமிழர்களைத் தேடி

E-mail Print PDF

- பெ.இசக்கிராசா, முனைவர்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்தொடக்கமாக
பண்டைய தமிழனின் முற்போக்குத் தனமான தரத்தினை நாம் கண்டு கொள்ள வேண்டிய அல்லது பயணிக்கும் பாதையாக தமிழ் இலக்கியத்தினைக் காணலாம். வழக்கமாக சொல்லப்படுகின்ற மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இலக்கியங்கள் இன்றளவும் இருந்து வருகின்றன. மொழியின் இலக்கண ஒழுக்கத்தை போதித்த தொல்காப்பியம் தொடர்ந்து சங்க இலக்கிய நூல்களும், தனிப்பாடல் நூல்களும், காப்பியமான சிலம்பும், உலகம் போற்றும் வள்ளுவமும் அவை வழங்கிய வாழ்வியல் விழுமியமும் இன்னும் உயிர் கொண்டுதானிருக்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே ஞானத்தினை வளர்க்கும் விதமாக ஆத்திசூடி முதலான எண்ணிலடங்க அறநெறி இலக்கியங்கள் அதிகமே. அதனை எடுத்தியம்பும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

விழுமியம்
தனக்கு எது தேவையோ அதுவே தர்மம் என்று சொல்லப்படுகின்ற மனோபாவத்திற்கு வந்து விட்ட இன்றைய தமிழ் தலைமுறையினர் தங்களது மூதாதையர்களின் முற்போக்கான பாங்கினை மறந்து விட்டனர். காரணமின்றி முந்தையோர் அறக் கருத்துக்களை வழங்கியதன் தேவையை இன்றைய சூழலில் வாழ்கின்றவர்கள் தங்களது தனிமனித உள்ளத்தின் வழியாக நின்று சிந்திக்கும் பொழுது தமது முன்னோர்களின் ஒவ்வொரு பதிவும் முக்கியமான விழுமியங்கள் என்பது புலப்படவே செய்யும்.

அறத்தினூ உங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறந்தனன் ஊங்கில்லை கேடு

என வள்ளுவம் வழங்கும் அறம் எப்பொழுதும் எல்லாத் தலைமுறைக்கும் புரிந்து கொள்ளும் விதமாகவே படைக்கப்பட்டிருக்கிறது. அறங்கள் பற்றி நாம் சிந்தனை செய்கின்ற தருணங்களில் உள்மனக்கிடக்கையில் புதைந்திருக்கும் சுயநல தர்மங்கள் உடைந்தே போகும். உள்ளமே கோயில் என்ற சொற்பதத்திற்கு மூலவிதையான ஆரம்பத் தமிழனின் இன்றைய வாரிசுகளின் பாதைகளும் பயணிக்கும் தடங்களும் எவ்வழியான அறத்தினைச் செய்து கொண்டிருக்கின்றன. இன்று கௌரமாக வாழ்ந்து  கொணடிருக்கின்றவர்கள் அறமற்ற விழுமியங்களைச் சுமந்து செல்கின்ற தோடு மட்டுமின்றி அது தான் சரியென தவறான வழித்தடங்களை பின்வருகின்ற தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாதிகள் மண்ணுயிர் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில

Last Updated on Tuesday, 29 November 2016 05:30 Read more...
 

ஆய்வு: முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் சமுதாய நெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக்காஞ்சியில் இடம் பெறும் சமுதாயநெறிகளை ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் முதுமொழிக்காஞ்சி
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.முதுமொழி,முதுசொல் என்பன பழமொழியைக் குறிக்கும்.”காஞ்சி தானே பெருந்திணைப் புறனே” (தொல்.பொருள் புறம்.22) என்பது தொல்காப்பியம்;.இவ்விரு சொற்களால் குறிப்பிடப்படும் இந்நூல் நிலையாமை குறித்தோ,பழமொழியைப் பெற்றோ அமையவில்லை.மாறாக உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.புறப்பொருள் வெண்பாமாலையில் மூதுரைப் பொருந்திய முதுமொழிக்காஞ்சி எனச் சுட்டும் ஆசிரியர்,

“பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடிவு உணரக் கூறின்று”

என்று விளக்குகிறார்.அதாவது உலகியல் உண்மைகளைப் புலவர் பெருமமக்கள் எடுத்துயம்புவது என்பது இந்நூற்பாவிற்குரிய விளக்கமாகும்.

Last Updated on Tuesday, 29 November 2016 05:09 Read more...
 

ஆய்வு: திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது ( உ.வே.சா நூலகச்சுவடி)

E-mail Print PDF

 பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -முன்னுரை
உலகின் எந்த மொழி இலக்கியமானலும் அது தோன்றிய சமகாலநிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் அது அமையும் எனலாம். ஆனால், நாம் இன்று அனுபவிக்கும்; எந்தவொரு நவீனக் கண்டுபிடிப்பும் தோன்றாத காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமுதாய பின்னனிகளையும், அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், அவர்களை வழிநடத்திய அரசர்களையும், அவர்கள் கால வரலாறுகளையும், இன்னபிற பதிவுகளையும் ஏடுகளில் அடுத்த தலைமுறையினருக்கு எழுத்து வடிவத்தில் எடுத்துச்செல்லும் அற்புதப் பணியில் ஈடுபட்ட நம் முன்னோர்களின் முயற்சி உண்மையில் வியந்து பாராட்டத்தகும். அந்த வகையில் தமிழுலகம் இதுவரை எத்தனையோ இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே வளர்த்து வந்துள்ளது. அவற்றில் தமிழுக்குக் கிடைத்த தூது என்னும் சிற்றிலக்கியம் அகவாழ்விலும் புறவாழ்விலும் மன்னர்களுக்கும் மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணி தமிழிலக்கியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது என்பதை கற்றோர் யாவரும் அறிவோம். உ.வே.சாமிநாதையர் நூலகச்சுவடியில் பதிப்பாசிரியர் மு.சண்முகம்பிள்ளை மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர் இரா.நாகசாமி முயற்சியால் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்ட திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது என்னும் நூலின் உட்கருத்துக்களை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூது பொருள் விளக்கம்
ஒருவர் தன்னுடைய கருத்தினை மற்றொருவருக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிப்பதற்கு தன் நம்பிக்கைக்குரிய உயிரினத்தின் வாயிலாகவோ அல்லது ஒரு நபரின் வாயிலாகவோ ஒலிவடிவிலோ வரிவடிவிலோ பொருள்வடிவிலோ தெரிவிப்பதனை தூது எனலாம். தூது என்பது சொல்லியனுப்பப்படும் செய்தியையும் சென்று சேர்ப்பவனின் செயலையும் குறிக்கும். இச்செயலினைச் செய்பவன் ‘தூதன்’ எனப்படுவான். இந்நிலை உயர்திணை அஃறிணையாகிய இரண்டிற்கும் பொருந்தும்.

மகளிர் தம் மனங்கவர்ந்த மனாளனுக்கு தன்நிலையை தோழியின் வாயிலாகத் தூதாகச் சொல்லியனுப்பும் மரபு நம் தமிழ் சமுதாயத்தில் காலந்தோறும் இருந்து வந்துள்ளதனை இலக்கண இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. மேலும், பிரிவுக்காலங்களில் தலைவன் தலைவியின் மனமாற்றத்தினை நீக்குவதற்கு தோழி உள்ளிட்ட பலரும் தூதாக சென்றுள்ளனர். இவ்வாறு தலைவன் தலைவி பொருட்டு தூது செல்பவளை ‘தூதி’ என்பர். தலைவன் தலைவியின் காதல் பொருட்டு செல்லும் தூதினை ‘வாயில்’ என்னும் பெயரால் தொல்காப்பியர் குறிப்பிடுவர். இதனையே,

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”        ( தொல்.பொருள்.கற்பியல்.52 )

Last Updated on Monday, 28 November 2016 02:50 Read more...
 

ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’ மெல்ல அவல் தேடும் மேற்குலக ஊடகங்களின் வாய்களுக்குள் அகப்பட்டு, அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது, வெர்மான்ற் (Vermont) பல்கலைக்கழகம்! அமெரிக்காவின் வடகிழக்கே, இயற்கையழகு கொஞ்சும் வெர்மான்ற் மாநிலத்துப் பல்கலைக்கழக வளாகத்தின் மத்தியில் பறந்துகொண்டிருந்த கொடி ஒன்று, இந்தவார இறுதியில் (செப்ரெம்பர் 24-25) களவாடப்பட்டமையே அதற்கான காரணம். அது ‘Black lives Matter’ என அழைக்கப்படும் ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கத்தின் கொடி. கடந்த வாரம் சார்லெற் (Charlotte) நகரிலும், அதற்கு முன்னர் வேறுபல நகர்களிலும் கறுப்பு இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஏற்றப்பட்ட கொடி. ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், நீதியின் தேடல், வன்முறைக்கெதிரான போராட்டம் போன்ற இலட்சியங்களின் அடையாளச் சின்னமாகப் பறக்க விடப்பட்ட கொடி. பல்கலைக்கழக நிர்வாகத்தின் பூரண அங்கீகாரத்துடன், தேசியக் கொடியுடனும் மாநிலக் கொடியுடனும் சம உயரத்தில், சமாந்தரமாகப் பறக்க விடப்பட்ட கொடி. இனவாதிகள் அதனை இரவோடிரவாகக் களவாடியமை, எரிகின்ற இனவெறுப்புச் சூளையினுள் எண்ணெயை ஊற்றிவிட்டிருக்கின்றது!

அமெரிக்கக் காவற் துறையினரின் கடும் போக்கும், அதன் விளைவாக  இனவுறவில் ஏற்பட்டு வரும் விரிசல்களும் சமூகத்தில் ஆழ ஊடுருவியுள்ள இத்தருணத்தில் இடம்பெற்றுள்ள, வெர்மான்ற் பல்கலைகழகக் கொடியகற்றற் சம்பவம், இனப் பதற்றத்திற்கு மென்மேலும் ஊட்டம் அளித்துள்ளது. ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் குறித்த புதிய சர்ச்சைகளுக்கும், வாதப் பிரதிவாதங்களுக்கும் வழி திறந்துள்ளது. நல்ல நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை, வெவ்வேறானோர் வெவ்வேறு விதங்களில் அர்த்தம் கொள்ள வகைசெய்துள்ளது.

‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் (BLM) வன்முறையை ஊக்குவிப்பதாகவும், அதுவே ஒரு இனவெறுப்பு இயக்கமென்றும், வெர்மான்ற் பல்கலைகழக நிர்வாகம் இவ்வியக்கத்தின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவும், பண்பாட்டு மோதலொன்றின்போது பல்கலைகழகம் பக்கச்சார்புநிலை எடுத்துவிட்டதாகவும், இனிவருங் காலங்களில் தீவிரவாதக் குழுவொன்றின் கொடியையும் ஏற்றிவைக்கப் பல்கலைகழக நிர்வாகம் சம்மதிக்கக் கூடும் என்பதாகவும் வெள்ளையின அடிப்படைவாதிகளும் பழமைவாதிகளும் குற்றம் சாட்டத் துவங்கியுள்ளனர். இக்குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் BLM இயக்கத்தின் மூலகர்த்தாக்களோ, இதற்கு முற்றிலும் முரணான வாதத்தை முன்வைத்துள்ளனர். கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பாகுபாடுகளையும் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் உணர்ந்தவர்கள் இவ்வாறான குற்றச் சாட்டுகளைச் சொல்லத் துணிய மாட்டார்கள் எனவும், BLM பற்றி இத்தகைய தவறான பரப்புரையை அவர்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Last Updated on Saturday, 26 November 2016 19:15 Read more...
 

ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் விருந்தோம்பல் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பதற்கு தமிழ் தமிழ் அகர முதலி புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் போற்றுதல் என்று பொருள் உரைக்கிறது.கௌரா தமிழ் அகராதி வேளாண்மை,புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை.

சென்னை பல்கலைக் கழகத் தமிழ் ஆங்கில அகராதி புதிதாக வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை;( welcoming and entertaining guest) என்று பொருள் கூறுகிறது.
இத்தகைய விருந்தோம்பல் சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட பேரறமாக விளங்கியது.எந்நாட்டவராயினும்,எம்மொழியினராயினும் நட்புக் கொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு தேடி வருவார்களாயின் அவர்களை வரவேற்று புதியவராக கொண்டனர்.தொல்காப்பியர் இதனை,

“விருந்தே தானும் புகுவது கிளந்த யாப்பின் மேற்றே”

என்ற நூற்பாவால் குறிப்பிடுகிறார்.மேலும் அக்கால மக்கள் விருந்தோம்பலைக் கடமையாக கொண்டனர் என்பதை,

“ விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவும் அன்ன”


என்ற நூற்பா அடிகள் குறிப்பிடுகின்றன.

Last Updated on Tuesday, 15 November 2016 23:38 Read more...
 

ஆய்வு: சித்தர் இலக்கியத்தில் தன்னையறிதல்

E-mail Print PDF

ஆய்வு: சித்தர் இலக்கியத்தில் தன்னையறிதல்- இல.சவுரிராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுபேட்டை, புதுச்சேரி-08. முன்னுரைஆன்மீக உலகிலத்தில் நான் யார் என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்;ள ஒன்றாகும். எத்தனையோ அணுகுமுறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் நான் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக்  கூறியிருப்பினும் அடிப்படை உண்மை ஒன்றுதான். இவற்றை சித்தர்கள் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.    

நான் தற்காலிகமானது
உண்மையில் அனுபவத்தையும்,அனுபவிப்பவனையும் பிரிக்க இயலாது. “கணந்தோறும் புதிது புதிதாக வரக்கூடிய அமசம் உடையது தான் சிந்தனை. ஊதுவத்தியிலிருந்து வெளிவரும் புகை புதிது புதிதாக எப்படி வந்து கொண்டிருக்கிதோ,அப்படிதான் நமது சிந்தனையும் புதிது புதிதுதாக வந்து கொண்டிருக்கிறது. சிந்தனை எப்படி ஒவ்வொரு கணந்தோறும் புதியதோ, அப்படித்தான்  அதனால் உருவாக்கப்படும் அனுபவிப்பவனும் ஒவ்வொரு கணந்தோறும் புதியவன். அனுபவமும் ஒவ்வொரு கணந்தோறும் புதியது. அனுபவிப்பவனாகிய நாம் நிரந்தரமாக இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் உண்மையன்று”(ஸ்ரீ பகவத் கவலைகள் அனைத்திற்கும் தீர்வு பக் 99-100).
எனவே அனுபவிப்பவனாகிய ‘சின்ன நான்’ தற்காலிகமானதே: நிலையானதன்று: காணப்படும் ஒவ்வொரும் பேற்றோரைப் பார்க்கும் போது பிள்ளையாக, பிள்ளையைப் பார்க்கும் போது தாயாக, தந்தையாக, வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் போது கணவராக, மனைவியாக அனுபவிப்பலனாகிய ‘நான்’ தோன்றுகிறது.

நான் அற்ற நிலை
நான் அற்ற நிலை வேண்டும் என்று நாம்; கூறிக்கொள்ளலாம். அனுபவிப்பவன் இல்லாத அனுபவம் வேண்டும் என்று நாம் கூறிக்கொள்ளலாம் ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லாத வெறும் கனவே ஆகும். சிந்தனை இருக்கும் வரை காண்பவன் - கணப்படும் பொருள், அனுபவிப்பவன் - அனுபவம் என்னும் இரட்டை நிலை நிரந்தரமாகவே இருந்துகொண்டுதான் இருக்கும். இவற்றுள் எதையாவது ஒன்றை நீக்குவதற்கு சாத்தியமே இல்லை. ஆனால் இப்படி ஓர் இரட்டைநிலை இருந்தாலும்கூட, அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

Last Updated on Tuesday, 15 November 2016 23:27 Read more...
 

ஆய்வு: தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

E-mail Print PDF

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -ஆய்வு முன்னுரை
தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரசியல் சார்ந்த அறநெறிகளை ஆராய்ந்தோமானால் உலக நாடுகள் முழுவதற்கும் இலக்கியப் பேராறு மூலம் ஒரு நாட்டையாளும் அரசனுக்குரிய அறங்களை மிக நேர்த்தியோடு எடுத்துச்சொன்ன பெருமை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் தமிழ் மண்ணில் ஏற்பட்ட பல்வேறு போர்களாலும், பூசலாலும் காலந்தோறும் வெவ்வேறு ஆட்சிமுறைகள் வழக்கத்தில் இருந்து மக்களாட்சி முறையே இன்று நிலைத்துள்ளது. அரசன் என்பவன் அரச பரம்பரை அல்லது வாரிசுரிமையின் காரணமாகவோ, கணக்கற்ற படைவலிமையின் காரணமாகவோ, மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்ட வரலாறுகளின் அனுபங்களிலிருந்தே இன்றைய அரசியல்வாதிகள் அறநெறிகளை கற்றுக்கொண்டு மேடை தோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என மோசிகீரனாரும், ‘குடியுயரக் கோன் உயர்வான்’ என்றுரைத்த ஓளவையார் போன்ற தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் காலந்தோறும் ஆய்ந்தறிந்து தமிழக அரசியல் அறங்களை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர். அதன்வழி நின்று அரசனுடைய அங்கங்களாகத் திகழும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவைக்குழுவின் வழிகாட்டுதல்களையும், செயற்பாட்டம்சங்களையும் தமிழிலக்கியங்கள் வாயிலாக எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஐம்பெருங்குழு எண்பேராயம்
“ஐம்பெருங்குழு அமைப்பில், ‘அமைச்சர் (Chief Minister)> புரோகிதர் (Priest)> சேனாபதியர் (Commender - in - Chief)> தாவாத் தொழில் தூதுவர் (Ambassador)> சாரணர் (Intelligence Officer) ஆகியவர் அடங்கிய குழுவே ஐம்பெருங்குழு எனப்படும். இவ்வைந்து கூட்டத்தை பஞ்சாயம் என்றும் அழைப்பர். கரணத்தியலவர் (Chief Executive Officer)> கருமகாரர் (Priests)> கனகச் சுற்றம் (Treasury Officials)> கடைகாப்பாளர் (Guards)> நகரமாந்தர் (Great Men of the City)> படைத்தலைவர் (Captains of Troops)> யானைவீரர் (Elephant -Warriors )> இவுளிமறவர் (Cavalry - Officers) ஆகிய இவர்கள் எண்பேராயத்தில் இடம்பெற்றிருப்பார்கள்’ என்பர் அ.கி.பரந்தாமன்.” (வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும். ப.101) அரசியலில் அரசனுக்குத் துணையாக அமைவன ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் என்பதனை,

“ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர் தம்மொரு குழிஇ” 
(சிலம்பு.வஞ்சிக்காண்டம் கால்கோள்காதை.2-3)

Last Updated on Tuesday, 15 November 2016 20:58 Read more...
 

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்

E-mail Print PDF

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்முன்னுரை:
தமிழர்பண்பாட்டின் கருவூலமாகத் திகழ்வது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகும் பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்களுல் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் இந்நூலின் கடையேழு வள்ளல்களைப் பற்றிய வரலாறு பதிவு செய்யப் பட்டுள்ளது. பேகன் பாரி காரி ஓரி ஆய் அதியமான் நள்ளி எனும் இவ்வள்ளல்களின் வரலாறு கொடைத்திறத்தைக் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மயிலுக்குப் போர்வை தந்த பேகன்:
பேகன் என்பவன் ஆவியர் குடியின்கண் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அப்பேகன் மலை வளம் உலா வரும்போது பருவத்தே பெய்த மழையால் வளம் மிகுந்த பக்கத்தே வாழும் காட்டு மயில் இயல்பாக அகவியது. ஆனால் அது குளிரால் நடுங்கியது என்று எண்ணி தான் அணிந்திருந்த நுட்பமான வேலைப்பாடுகளுடைய விலை உயர்ந்த போர்வையை அதற்குப் போர்த்தி அதன் குளிரை நீக்கினான் இதனை

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய     அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்” (சிறுபாண் 85-87)

எனும் பாடல் வரி விளக்குகிறது.

முல்லைக் கொடி படர தேர் தந்த பாரி:
பறம்பு மலையின் குறுநில மன்னன் பாரிபற்றி புறநானூறு அகநானூறு நற்றிணை குறுந்தொகை போன்ற தொகை நூல்கள் மட்டுமின்றி சிறுபாணாற்றுப்படையும் சிறப்புற எடுத்தியம்புகிறது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளல் பெருமான் போல
கருணை உள்ளம் கொண்டவன் பாரி

Last Updated on Monday, 07 November 2016 00:06 Read more...
 

ஆய்வு: ஒரு நாள் போதுமா? நாவல் உணர்த்தும் மனிதநேயம்

E-mail Print PDF

ஆய்வு: ஒரு நாள் போதுமா? நாவல் உணர்த்தும் மனிதநேயம்ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை	திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123.முன்னுரை:
ஒரு நாள் போதுமா? என்ற தலைப்பில் அமைந்த சு. சமுத்திரம் அவர்களின் குறுநாவல் கட்டிடத்தொழிலாளர்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் ஒரு சமூக நாவல் ஆகும். சமூக நாவலில் மனிதநேயம் என்பது தவிர்க்கமுடியாததொன்று எனலாம். அந்த வகையில் இந்நாவலில் காணக்கிடக்கும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

நாவலும் நாவலாசிரியரும்:
வேலு-அன்னவடிவு இருவரும் கணவன் மனைவியர். விவசாயத்தொழில் செய்துவந்த இவர்கள் சிறு சிக்கல் காரணமாக ஊரைவிட்டு வந்து சென்னையில் செய்வதறியாது நின்ற போது தாயம்மாள், பெயிண்டர் பெருமாள் இன்னபிற கட்டிடத்தொழிலாளர்களின் ஆதரவோடு வாழ்க்கையை நகர்த்துகின்றனர். முதலாளியின் தூண்டுதலால் அதிகமான பளுவைச் சுமந்த வேலு கீழே விழுந்து இறந்து விட இயற்கை மரணம் என்று மூடி மறைக்கின்றான் முதலாளி. அவனை எதிர்த்து நஷ்ட ஈடு கேட்டுச் சங்க உறுப்பினர்களோடும் தொழிலாளர்கள் ஆதரவோடும் வெற்றி இலக்கோடு அன்னவடிவு போராடத் துவங்குவதாகக் கதை முடிகிறது.

சு. சமுத்திரம் அவர்கள் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள திப்பண்ணம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர். அகில இந்திய வானொலியிலும் தூதர்சனிலும் பணிபுரிந்தவர். 1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்துலகில் வலம் வந்தவர். 15 நாவல்களும் 8 குறுநாவல்களும் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 2 கட்டுரைகளும் ‘லியோடால்ஸ்டாய்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்றும் எழுதியுள்ளார். சோசியலிசவாதி. அடிமட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர். இவரது படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1990இல் வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தவிர தமிழக அரசின் விருது, இலக்கியச் சிந்தனை விருது, தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். தன்னுடைய 63ஆவது வயதில் 3.4.2003 அன்று வாகன விபத்தில் காலமானார். வேரில் பழுத்த பலா, வாடாமல்லி, பாலைப்புறா, ஊறுக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, கடித உறவுகள், மண்சுமை, தலைப்பாகை, வெளிச்சத்தை நோக்கி, வளர்ப்பு மகள், தராசு, சத்திய ஆவேசம், இல்லம்தோறும் இதயங்கள், நிழல் முகங்கள் ஆகியன சமுத்திரம் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.

மனிதநேயம்:
உயிரினங்களில் உயர்ந்த இனம் மனித இனமாகும். இம்மனித  இனத்தின் உயர்ந்த பண்பே மனிதநேயமாகும். உயர்ந்த பண்பெனப்படுவது அன்பு, கருணை, அருள், நட்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்து கொள்ளுதல், சூழ்நிலைக்கேற்றவாறு நடந்துகொள்ளுதல் போன்றனவாகும். இப்பண்புகளின் ஒட்டு மொத்த வடிவமே மனிதநேயமாகும் எனலாம்.

Last Updated on Sunday, 06 November 2016 00:52 Read more...
 

ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை

E-mail Print PDF

ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை	திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123.முன்னுரை
வீரர்களின் புறவாழ்க்கையில் மிக இன்றியமையாதப் பணி போர் புரிவதாகும். வீரர்கள் போர்த் தொழிலில் விருப்பத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் உயிரின் மீது சிறிதும் பற்று இல்லாதவர்களாய் செயல்பட்டுள்ளனர். போர்ப்பறை கேட்டவுடன் வீறுகொண்டு எழும் வீரர்கள் போர்க்களத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பதைத் தொல்காப்பியப் புறத்திணையியல் மற்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்துள்ளன.

போரில் வீரர்களின் வலிமை
வலிமை காரணமாகச் செய்யப்படும் போர் தும்மைப் போராகும். இப்போரில் ஈடுபடக்கூடிய வீரர்கள் மிகுந்த ஆவேசத்தோடும் ஆக்ரோ~மாகவும் செயல்படுவதுண்டு. இப்போரில் இருநாட்டு வேந்தர்களும் களம் புகுவதுண்டு.

பகைவர்களால் சூழ்ந்து கொள்ளப்பட்ட, வேற்படை மிக்க மன்னனைக் காப்பாற்ற விரும்பிய முன்னனணிப் படையில் இருக்கக் கூடிய வீரன் ஒருவன் மட்டும் தப்பித்து பகைவர்களை வெட்டி வீழ்த்துகின்றான்.

“    வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான் மீண்டு எறிந்த தார்நிலை ”        (தொல்.புறத்.1018:3-4)

பகைவர் முன் தோற்று ஓடிவரும் படையில் உள்ள வீரன் ஒருவன், பகைவர் படையில் தனி ஒருவனாகப் புகுந்து பகைவர்களை வெற்றி கொள்வதோடு அடுத்து வரக்கூடிய கூழைப் படையையும்(பின்னணிப்படை)தடுத்து நிறுத்துகின்றான்.

இன்னொரு வீரன் தன் மீது பகைவர்கள் படைக்கலன்களை வீசியதால் புண்பட்ட நிலையில் இருக்கின்றான். இருந்தாலும் அவற்றை அறுத்து எறிந்துவிட்டு, தன் உடல்வலிமையால் மட்டுமே போரிடுகின்றான்.

“    கூழை தாங்கிய எருமையும் படைஅறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும் ”        (தொல்.புறத்.1018:7-8)

என்பதன் மூலம் போர்க்களத்திலே வீரர்கள் துடிப்போடு செயல்பட்டதை அறிய முடிகின்றது.

போரில் தன் மன்னன் இறந்து வீழ்ந்தான் என்றவுடன் கோபங் கொண்ட வீரனொருவன் தனி ஒருவனாகப் போரில் புகுந்து போரிடுவதுண்டு; தன் படைகள் தோற்று ஓடுகின்ற நிலையில் வீரன் ஒருவன் மட்டும் போர்க்களத்திலே தன் வாளைச் சுழற்றி ஆடுவதும் உண்டு. இதனை,

“    செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசய நூழிலும் ”        (தொல்.புறத்.1018:14-17)

Last Updated on Saturday, 05 November 2016 19:19 Read more...
 

ஆய்வு: அற இலக்கியங்களில் செய்ந்நன்றியுணர்வு

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே  (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

Last Updated on Tuesday, 15 November 2016 23:35 Read more...
 

ஆய்வு: அழகியல் நோக்கில் கல்யாண்ஜி கவிதைகள்

E-mail Print PDF

கல்யாண்ஜி மனிதன் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைக் கண்டு மகிழத் தொடங்கிய அன்றே அழகுணர்ச்சியும் அரும்பியது எனலாம்.    அழகு என்ற சொல்லாட்சியின் வீச்சும், பயன்பாடும் பரந்துபட்டது. அழகு என்ற சொல், பொருள் வரையறைக்கு உட்படாதது. ""அழகு என்பது காண்டலும் கற்பனை அனுபவமுமே''1 என்று அழகியல் கொள்கையாளர் கூறுவர். (அப்ப் க்ஷங்ஹன்ற்ஹ் ண்ள் ண்ய் ல்ங்ழ்ஸ்ரீங்ல்ற்ண்ர்ய் ர்ழ் ண்ம்ஹஞ்ண்ய்ஹற்ண்ர்ய்) இந்த அடிப்படைக் கருத்தை இடைக்கால உரையாசிரியரான "பேராசிரியர்' மிகவும் தெளிவாய்க் கூறியுள்ளார் அவர், ""திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை, நோக்கம் என்றது அழகு''2 ஆகும் என்று கூறுகின்றார்.    அழகியல் என்ற சொல் அழகான பொருளை மட்டும் குறிப்பதன்று. ஒவ்வொருவரின் பார்வையிலும் அழகு வேறுபடலாம். ""அழகு என்பது ஆழந்த பொருளில் இல்லை; ஆழந்த உள்ளத்தில் இருக்கிறது'' 3என்று வாழ்வியல் களஞ்சியம் பொருள் தருகிறது.  மேலும்,    ""அழகு என்பது அனுபவமே அல்லாது அநுபவிக்கப்படும் பொருள் அன்று. அது காணப்படும் பொருளில் இல்லை. காண்பவர் தம் கருத்தில் இருக்கிறது...''4 என்பர். அழகியல் இன்பமயமான உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துவது. புனையப்படும் பொருளின் அழகையோ, அழகின்மையையோ சார்ந்ததன்று; தனிப்பட்ட மனிதனின் உள்ளத்தைச் சார்ந்தது. அத்தகையவனைக் கலைஞன் என்று கூறுவர்.

அழகின் நிலைக்களன்கள்:
அழகினை வேண்டுவோர் இயற்கை வாழ்வு வாழ வேண்டும் என்ற விளக்கத்தை அடிப்படையாகக் கொள்வர் என்று கூறலாம். அழகின் தன்மையையும் பயனையும், ""உள்ளதை உள்ளவாறு கூறுவதும் உள்ளதை உள்ளவாறே ஏற்பதுவம் அழகியன் அடிப்படை. இங்கே உள்ளது, உள்ளவாறு எனப்படுபவை உணர்த்தும், உணர்ந்தவாறும் ஆகும். எனவே அழகு என்பது உண்மை; உண்மை நன்மையே தரும். நன்மை இன்பம் தரும். இன்புறுத்துவது அழகாகும்'' 5என்பர்.

அழகியல் இருவகைக் கண்ணோட்டங்களை நிலைக்களன்களாகக் கொண்டுள்ளது. அவை, வாழ்வியற் கண்ணோட்டம், கலைக்கண்ணோட்டம் என்பனவாகும்.

Last Updated on Tuesday, 01 November 2016 06:17 Read more...
 

ஆய்வு: திரிகடுகம் உணர்த்தும் கல்வி நெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.இந்நூல் குறித்து விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே      (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.   

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகமும் ஒன்றாகும். திரிகடுகம் என்பது மருந்தின் பெயராகும்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் கலந்து செய்யப்படுகிற மருந்திற்கு திரிகடுக சூரணம் என்று பெயர்.இம்மருந்து போல101 செய்யுள் தோறும் மூன்று கருத்துக்களை அமைத்து இந்நூலாசிரியரான நல்லாதனார் பாடியுள்ளார்.இந்நூலாசிரியர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலில் இடம்பெறும் கல்வி நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Wednesday, 19 October 2016 05:28 Read more...
 

ஆய்வு: வாழும் தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா - (தமிழ்நேயம் இதழை முன்வைத்து)

E-mail Print PDF

கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர் அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி) கோயம்புத்தூர் - 18. -தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர்; ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர் இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் 'ஷெல்லி', கீட்ஸ், வோர்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன.

இயற்கை நலம்:

இவரது பாடல்களில் இயற்கை, தமிழர்நலம், சுற்றுச்சூழல், வாழ்வுநலம், விழிப்புணர்வு, மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இவரது இயற்கை ஈடுபாட்டிற்குச் சான்றாக ஒரு பாடல்,எளிமையும், இனிமையும் இயற்கையழகும் பயின்று வருவதைக் காணலாம். (த.நே.45,g.4,5)

“விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே.”- (ப.66)

இயற்கையோடு இயைந்த வாழ்வே உயரியவாழ்வு என்பது இவர் கருத்து. மாணவர்களுக்கு இயற்கை அழகையும், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலையும் உணர்த்தும் முறையில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் மாணவர்களோடு பயணம் மேற்கொண்டார்.

Last Updated on Sunday, 16 October 2016 21:00 Read more...
 

ஆய்வு: தீவிரவாதமும் தீக்கோழி மனோபாவமும்

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்“அழுதேன்….! அவனையும் அவனது தாய் தந்தையரையும் நினைத்து, உண்மையில்…. நான் வாய்விட்டு அழுதேன்!”
ஒன்ராறியோவின் ஸ்றத்றோய் (Strathroy) என்னுமிடத்தில், ஆரன் ட்றைவர் (Aaran Driver)  என்னும் வாலிபன் காவல் துறையினரால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு, தற்போது பிரான்ஸில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் கனடியக் குடிமகளான கிறிஸ்ரியான் ப்பூட்ரோ (Christianne Boudreau)  இப்படித்தான் சொல்லியழுதாள்! ஆரன் ட்றைவரின் கொலையின் மூலம் பெருந்தொகையிலான உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டமை கனடியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஆனால் இருவருடங்களுக்கு முன்னர், சிரியாவில் இஸ்லாமியதேச தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து போராடி உயிரிழந்த, தனது 22 வயது மகனான டேமியன் கிளயமனைப் (Damian Clairmont) பறிகொடுத்த தாயான கிறிஸ்ரியான் ப்பூட்ரோவைப் பொறுத்தவரை, ஆரன் ட்றைவரின் கொலை அவளுக்கு இன்னொரு அவலச் செய்தி! “என்னையும், எனது மகனையும் குடும்பத்தையும் போலவே, ஆரன் ட்றைவரையும் அவனது குடும்பத்தையும் கனடிய அரசு அனாதரவாகக் கைவிட்டுவிட்டது!” வளரிளம் பருவத்துச் செல்வங்கள் பலவும், வழி தவறிப்போய் மாண்டழிவதற்குக் கனடிய அரசின் கையாலாகாத்தனமும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் ஒருவகையில் காரணங்கள் என அத்தாயானவள் முன்வைக்கும் வாதங்கள் வெறுமனே அலட்சியம் செய்யப்படக் கூடியனவல்ல!

24 வயதுடைய ஆரன் ட்றைவரது தந்தையார் ஒரு வான்படை அலுவலராகப் பணியாற்றியவர். தந்தையாரது பணியின் நிமித்தம் ஆரன் ட்றைவர் ஒன்ராறியோ, அல்பேர்ற்ரா ஆகிய மாகாணங்களில் வசித்தவர். 2014இல் கனடியப் பாராளுமன்றில் தாக்குதல் நடத்திய மைக்கல் ஸேய்ஹஃப் ப்பிப்போவையும் (Michael Zehaf-Bibeauv) பயங்கரவாத நடவடிக்கைகளையும் சமூக ஊடகங்களில் விதந்து பாராட்டியவர். தம்மை ஓர் இஸ்லாமியராகச் சுய பிரகடனம் செய்தவர். இஸ்லாமியதேச தீவிரவாதிகளை ஆதரித்து, அவர்களோடு தொடர்பில் இருந்தவர். விளைவாக, 2015இல் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர், கணினியோ கைத்தொலைபேசியோ பாவிக்கக்கூடாதென்ற நீதிமன்ற உத்தரவுடன், கண்காணிப்பின் கீழ் காலம் கழித்தவர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்றத்றோயிலுள்ள தமது இருப்பிடத்தின் நிலக்கீழறையில் இரகசியமாக வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்து, சனசந்தடி மிக்க ஒன்ராறியோ நகர் ஒன்றில் அதனை வெடிக்க வைக்கவென ஆரன் ட்றைவர் ஆயத்தமாயிருந்தார். தனது நோக்கத்தை வெளியிடும் காணொளி ஒன்றையும் பதிவுசெய்தார். இத்தகவலை அறிந்த அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினர் (FBI), கனடிய ஆர்சியெம்பியினருக்கு (RCMP) இதனைத் தெரியப்படுத்தினர். ஆகஸ்ட் 10, 2016 புதன்கிழமை ஆரன் ட்றைவர் தமது குண்டுத் தாக்குதற் திட்டத்தை நிறைவேற்றப் புறப்பட்ட தருணம், ஒன்ராறியோ காவல் துறையினருடன் இடம்பெற்ற மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Last Updated on Friday, 14 October 2016 23:06 Read more...
 

ஆய்வு: கேடாகிப் போன கேலிச்சித்திரம்!

E-mail Print PDF

“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்ததுஎழுத்தாளர் க.நவம்“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ  “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. அவுஸ்திரேலியாக் கண்டம் இன்று அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிக்க, இந்தச் சின்னஞ்சிறு கேலிச் சித்திரம் காரணமாகிவிட்டது! சர்ச்சைக்குரிய இந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவர் ப்பில் லீக் (Bill Leak) என்பவர். இதனால் ஒரு புறத்தில் கோபத்துடன் கிளர்ந்தெழுந்து, ஆர்ப்பரித்து நிற்பவர்கள் அவுஸ்திரேலியப் பழங்குடியினர். அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்புபவர்கள் சில அரசியல்வாதிகள், நடுநிலை ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், உள்ளூர் - வெளியூர் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்கான அமைப்பினர் - முகவர் நிலையத்தினர் எனப் பலதரப்பட்டவர்கள். இனவெறுப்பாளர்களுடன் மறுதரப்பில் கைகோர்த்து நின்று கள்ள மௌனம் காப்பவர்கள் வெள்ளை நிறப் பெரும்பான்மையினர். இடையில் நின்று இருபக்க மத்தளம் போல அடிபடுவோர் அரசயந்திரச் சாரதிகளும் சங்கூதிகளுமான அரசாங்கத்தினர்!

Cartoons எனப்படும் கேலிச் சித்திரங்கள் அதன் ஆரம்ப காலங்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்த வர்ணனைகளையும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தும் வரைபடங்களாக இருந்து வந்துள்ளன. அங்கதத்துடனும் நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும் நுட்பமான விமர்சனங்களை மிகுந்த புத்தி சாதுரியத்துடன் அவை முன்வைத்து வந்துள்ளன.

இந்த வகையில், மேற்கூறப்பட்ட கேலிச்சித்திரத்தை வரைந்த ப்பில் லீக், தனது கேலிச்சித்திரத்தைக் கண்டு, ‘புனிதமான இனிய பறவைகள் வீறிட்டெழுந்துள்ளன’ என்று குறிப்பிட்டிருப்பதுடன், இதன் விளைவாக ஆத்திரம் கொண்ட சமூக ஊடகப் பாவனையாளரிடம், காவல் துறையினர் தம்மைக் கையளிப்பது போன்ற ஒரு புதிய கேலிச்சித்திரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், பிரச்சினைக்குரிய அந்தக் கேலிச்சித்திரத்தைப் பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியர், தமது செயலை நியாயப்படுத்தி இருக்கின்றார். பழங்குடி இனத்தவரின் அலுவல்களுக்கெனத் தமது பத்திரிகை கணிசமான மூலவளங்களை ஏற்கனவே அர்ப்பணித்துள்ளது எனவும், இந்தக் கேலிச்சித்திரம் அவர்களை இழிவுபடுத்தும் ஒன்றல்ல எனவும் அவர் வாதிட்டிருக்கின்றார்.

Last Updated on Thursday, 06 October 2016 19:00 Read more...
 

ஆய்வு: முனைவர். சூ. இன்னாசியின் திருத்தொண்டர் காப்பியத்தில் “பெண்ணலம்”

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை வாசிப்போம்!முன்னுரை:
இலக்கியமென்பது அறிவுறுத்தல், இன்புறுத்தல் ஆகிய இருபெரும் பணிகளைச் செய்யவேண்டும். இவ்விருபெரும் பணிகளைச் செய்யும் இலக்கியங்கள்தாம் வாழ்வாங்கு வாழ்கின்றன. பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் எழுதிய “திருத்தொண்டர் காப்பியம்” என்ற இலக்கியமும் அங்ஙனமே வாழ்வாங்கு வாழும் வகையில் உள்ளது. அவரது இக்காப்பியத்தில் பல இடங்களில் பெண்ணியம் சிறப்பிக்கப் பெறுகிறது. பெண் சிறந்தால் நாடு சிறக்கும். பெண்மையை சிறப்பு செய்ய தமிழ்க்கவிஞர்கள் பலர் பா இயற்றியிருந்தாலும், பெண்மை பெருமைப்பட வேண்டும் என்ற நன்நோக்கில், பேராசிரியர் முனைவர்.   சூ. இன்னாசி அவர்கள், “திருத்தொண்டர் காப்பியம்” என்னும் தம் காப்பியத்தில் “பெண்ணலம்” பீடுற்ற நிலையை அரிய பல உண்மைகள் வாயிலாக அழகாக, நயம்பட எடுத்துரைக்கின்றார்.

முனைவர் சூ. இன்னாசியின் பிறப்பு:
பேராசிரியர் சூ.இன்னாசி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சூசைபிள்ளை, லூர்தம்மாள் இணையருக்கு 1934 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 13ஆம் நாள் பிறந்தார். திருமயம், தேவகோட்டை ஆகிய ஊர்களின் பள்ளிகளில் பயின்று 1951இல் பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றார். பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியையும் முடித்து 1953இல் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். பணியாற்றிக் கொண்டே வித்துவான், தமிழ் இளங்கலை, முதுகலை போன்ற பட்டங்களையும் பெற்றார்.

கல்லூரிப்பணி:
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணி நியமனம் பெற்று முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1983ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர்-தலைவராகப் பணியமர்த்தப் பெற்றார். 1993 வரை அங்குப் பணிபுரிந்தார். ஆசிரியர், ஆய்வாளர், படைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர். சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமைகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பேராசிரியர் தமிழ்ப் புலத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் (டி.லிட்) பட்டமும் பெற்றார்.

Last Updated on Thursday, 06 October 2016 18:46 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: தமிழ் மெய்யியல் ஓர் அறிமுகம்

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை: தமிழ் மெய்யியல் ஓர் அறிமுகம்நான் ஏன் பிறந்தேன்? என்னைப் படைத்தது யார்? இப்படிப் படைப்பதற்கான காரணம் என்ன? இறைவன் உண்டா? இல்லையா? இறைவன் தான் என்னைப் படைத்தான் என்றால் இத்தனைத் துன்பங்களை ஏன் படைக்கவேண்டும்? இவ்வாறாக வாழ்க்கைக்கு அடிப்படையான கேள்விகளை உள்ளடக்கியது மெய்யியல்.

தத்துவம் என்ற சொல் மெய்யியல் என்பதற்கு நிகரான சொல் இல்லை. தத்துவம் என்பது அது நீ, நீயே பிரம்மம். என்று பொருள் தரும் வடசொல். மெய்யியல் என்பது இதிலிருந்து வேறுபட்டது. வாழ்வின் அடிப்படை என்ன? மனித துயரங்களுக்கு எது காரணம்? என்று ஆராய்வது.  வள்ளுவர் கூறுவது போல 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும்' (355) – 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது' (423) - மெய்யியல். மெய்ப்பொருளியல் என்பதன் சுருக்கம் மெய்யியலாகும்.

மேற்கத்திய  மெய்யியலாளர்  மெய்யியல் என்பதை   நான்கு  கூறுகளாகப்  பகுக்கின்றனர். 1.   நுண்பொருளியல்    (meta pshyics),  2.  அளவையியல்   (logic),   3. அறவியல் (ethics),      4. அழகியல் (esthetics) என்பனவாகும். வாழ்வின் அடிப்படை எது என்று ஆராய்வது நுண்பொருளியல். ஆய்வுக்கான தர்க்கம் பற்றியது அளவையியல். அறவியலும், அழகியலும் வாழ்வின் பிற கூறுகள். மேற்கத்திய மெய்யியல் கூறுகள் இவை என்றால் இந்திய மெய்யியலையும் இதே கூறுகளை உள்ளடக்கி ஆய்வு செய்யமுடியும். இவ்வகையில் தமிழ் மெய்யியலையும் ஆய்வுசெய்யலாம்.

தமிழ் மெய்யியல் கருத்துகள் பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் உலகாய்த சிந்தனைகளைக் கொண்டுள்ளதை இனங்காணமுடியும். உலகாய்தமாவது 'கடவுள், மாயை, பிறவிசுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாய்தம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், உலக உடன்பாட்டுச் சிந்தனையும் கொண்டது.  இந்தச் சிந்தனை வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது' (உலகாய்தம், வீக்கிப்பிடியா).   இவற்றை முன்வைத்து இவ் ஆய்வு அமைகிறது.

Last Updated on Tuesday, 04 October 2016 19:11 Read more...
 

ஆய்வு: இன்னா நாற்பது காட்டும் அரசியல் நெறிகள்!

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் கபிலர். இவர் சிவன், திருமால், பிரம்மன் முருகன் முதலிய நால்வரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது. இந்நூலில் அமைந்துள்ள நாற்பது பாடல்களிலும் 160  கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இந்நூலில் இடம்பெறும் அரசியல் நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

அரசன்
இன்னா நாற்பதில் அரசியல் நெறி அரசனையே மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அரசன் என்னும் சொல்லிற்கு  தமிழ் மொழி அகராதி இராசன் எப்பொருட்கு மிறைவன்,எழுத்து தானம் ஐந்தினொன்று,கார் முகிற் பா~hனம்,துருசு,பாணகெந்தகம்,முக்குவர் தலைவன்,வியாழன் என்று பொருள் கூறுகிறது.(பக்.113)
அரசன் என்பதற்கு க்ரியா அகராதி பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையை பெற்றவர் என்றும் மiபெ என்றும் பொருள் கூறுகிறது.மேலும் அரசன் செய்யும் அரசாட்சியை ஆளுகை,நிர்வாகம் சரடந ழச சநபைn ழக ய மiபெ என்று பொருள் உரைக்கிறது. (ப.38)

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி.இதற்கு காரணம் மன்னது  நீதி ஆட்சி முறையில் தான்  மக்களது நல்வாழ்வு அடங்கும்.ஆட்சியின் உயர்வும் தாழ்வும் மக்களை நேரிடையாகப் பாதிக்கும் என்பதை மோசிகீரனார்,

நெல்லும் உயிரென்றே நீரும் உயிரென்றே
மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்ப தற்கை
வேல்மிகு தானே வேந்தற்குக் கடனே      (புறம்.186)

என்ற பாடலின் மூலம் மக்கள் மகிழ்ச்சியுடனும்,செழுமையுடனும் வாழ்வதும,; பகை,பஞ்சம்,பிணி போன்றவற்றிலிருந்து காப்பதும் மன்னன் ஆகையால் நெல்லும் நீரும் உயிரன்று மன்னனே மக்களுக்கு உயிர் போன்றவன் என்கிறது.மேலும் புலி தன் குருளைகளை பேணுவதைப் போல அரசன் மக்களைப் பேணி காத்தான் என்பதை,

புலி புறங்காங்கும் குறளை போல
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப  (புறம்.42:10-11)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

Last Updated on Thursday, 06 October 2016 18:20 Read more...
 

ஆய்வு: ஞானக்கூத்தன் கவிதைகளில் படிமங்களும் பிற உத்திகளும்

E-mail Print PDF

ஆய்வு: ஞானக்கூத்தன் கவிதைகளில் படிமங்களும் பிற உத்திகளும்புதுக்கவிதைகளின் படைப்பு முறை உத்திகளில் படிமம் ஒன்றாகும்.  ‘Image’ என்னும் சொல்லில் இருந்து உருவெடுத்தது இதுவாகும். கவிஞர் எஸ்ரா பவுண்டு புனைவியக்கக் கொள்கையினை எதிர்த்த இளம் கவிஞர்களை ஒன்று திரட்டி ஒரு அமைப்பை நிறுவினார். பிற கவிஞர்களிடமிருந்து அவர்களை பிரித்துக் காட்டுவதற்காக படிமக் கவிஞர்கள் (Imagist) எனப் பெயர் சூட்டினார். படிமக் கவிஞர்களின் கொள்கையாக பின்வருவனவற்றை வெளியிட்டார். இக்கொள்கை படிமத்தின் இயல்பினை வரையறைகளை விளக்கும் வகையில் அமைகின்றது.

“1. பேச்சு வழக்குச் சொற்களும் கவிதையில் இடம்பெற வேண்டும், கவிதைக்கு அலங்கார சொல்லைவிட சரியான சொல்லே தேவை.
2. ஒரு கவிஞன் தனது தனித்தன்மையை மரபைவிடக் கட்டற்ற கவிதையில்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே, யாப்பிலக்கண அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களைவிட கருத்துத் தொனியின் அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களே சிறந்தவை. அவையே கவிஞனின் மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
3. கடினமாக இருந்தாலும், சரியாக எழுதப்படும் கவிதையில் தெளிவின்மையோ, கருத்துறுதியற்ற தன்மையோ இருக்காது”

என்பது படிம இயக்கத்தின் முக்கியமான கோட்பாடுகள் ஆகும். தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமம், அங்கத உத்திகளுக்கு அடுத்து அதிகமாக கையாளப்படும் உத்தியாக அமைகின்றது. ஞானக்கூத்தன் கவிதைகளில் இடம்பெறும் படிமங்களை பின்வரும் நிலையில் பிரிக்கலாம்.

1.இயற்கைப் படிமங்கள்
2.செயற்கைப் படிமங்கள்
3.காட்சிப் படிமங்கள்
4.சர்ரியலிசப் படிமங்கள்


என்று வகைப்படுத்தி ஆராயலாம். பிற உத்திகளாக குறியீடும், முரண்களும், இருத்தலியமும் அமைந்திடுகின்றன.

Last Updated on Tuesday, 04 October 2016 18:39 Read more...
 

ஆய்வு: நாலடியார் உணர்த்தும் ஈகைநெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. சங்க மருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் இடம்பெறும் ஈகை நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் நாலடியார்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் சமணமுனிவர்கள்.திருக்குறளுக்கு அடுத்த பெருமை வாய்ந்த நீதி நூல் “நாலடியார்” ஆகும் நான்கு அடிகளைப் பெற்று ‘ஆர்’எனும் சிறப்பு விகுதி பெற்றதால் நாலடியார் என்று அழைக்கப்படுகிறது.இந்நூல் கூறும் கருத்துக்கள் பொருட் செறிவுடையனவாகவும் அறிவிற்கு இன்பம் பயப்பனவாகவும் அமைகின்றன.40 அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் 10 பாடல்கள்; வீதம் நானூறு பாடல்களையும் திருக்குறளைப் போலவே அறம்,பொருள்,இன்பம் எனும் உறுதிப்பொருள்களையும்  கொண்டுள்ளது.அறத்துப்பால் 13 அதிகாரங்களையும், பொருட்பால் 24 அதிகாரங்களையும் காமத்துப்பால் 3 மூன்று அதிகாரங்களையும் கொண்டு அமைந்துள்ளது.மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களை தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல்அமைந்துள்ளது.

Last Updated on Tuesday, 27 September 2016 17:35 Read more...
 

ஆய்வு: சங்க இலக்கியம் காட்டும் கற்பு வாழ்வு

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது  நாம் வாழும் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். சங்க இலக்கியத்தின் மூலம் சங்க காலமக்களின் வாழ்வியல், சமூகம், பண்பாடு, கலாச்சாரம், முதலானவற்றை அறியலாம். சங்க காலமக்கள் வாழ்வு அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்தனர். அகவாழ்வு களவு, கற்பு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தன. திருமணத்திற்கு முந்தைய வாழ்வினை களவு என்றும், திருமணத்திற்கு பின் அமையும் வாழ்வினை கற்பு வாழ்வு என காரணத்தின் பெயர்கொண்டு பிரித்திருந்தனர். ஒழுக்க நெறி என்பது சங்க கால மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்து விட்ட நிலையினை சங்க இலக்கியம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இல்லறம்
இல் + அறம் = இல்லறம். இல்லத்தில் இருந்து கொண்டு அறச் செயல்கலைச் செய்வது இல்லறம் எனப்பட்டது. திருமணவாழ்விற்கு பின் வாழும் கற்பு வாழ்வினை இல்லற வாழ்வு என அழைத்தனர். தொல்காப்பியர் இல்லறம் பற்றி

“ மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது
மலிவும் புலவியும் ஊலலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே” (செய்யுளியல் 179)

என்று குறிப்பிடுகின்றார். களவு வெளிப்பட்ட பின் தமர் கொடுப்பக் கொள்ளும் மணவினை நிறைவேறிய பின் மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு ஆகிய ஐந்து கூறுகளும் அடங்கிய பகுதியே கற்பென வழங்கப் பெறும். கற்பு என்ற ஒன்றையே இல்லற ஒழுக்கமாக கொண்டு இருந்தனர். வள்ளுவரும் அறம் பற்றி கூறுகையில்

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற” (குறள் 34)

Last Updated on Monday, 26 September 2016 23:24 Read more...
 

ஆய்வு: பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ் - பகுப்பாய்வு

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரைகள்!பாட்டியல் நூல்களால் வரையறுத்துக் கூறப்பட்ட சிற்றிலக்கிய வகைகளுள்  பிள்ளைத்தமிழும் ஒன்று.

“குழவி மருங்கினும் கிழவதாகும்”1 (தொல்.1030)

என்னும் தொல்காப்பிய நூற்பாவானது, தாம் விரும்பும் கடவுளையோ, பெரியோரையோ, குழந்தையாகப் பாவித்து அவர்தம் சிறப்புகளை எடுத்துரைப்பது பிள்ளைத்தமிழாகும் என்று இலக்கணம் கூறுகிறது. பாட்டுடைத் தலைமக்களின் பெருமைகளைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்களால் பாடப்படுவது மரபாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான ஏழு பருவங்களாகவும், சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பன ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், கழங்கு (அம்மானை), நீராடல், ஊசல் என்பன பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் இறுதியில் அமையும் மூன்று பருவங்களாகவும் அமைகின்றன.

நூலமைப்பு
கர்மவீரர், கிங் மேக்கர் என்று புகழப்படும் காமராசரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு புலவர் செந்தமிழ்ச் செல்வன் அவர்களால் இயற்றப்பட்டதே ‘பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழாகும்’. இந்நூலானது பிள்ளைத்தமிழ் மரபன் படியும், நூற்காப்பாக மூன்று பாக்களையும், இறுதியில் ஒரு வாழ்த்துப்பாவையும் கொண்டு மொத்தம் 104 பாக்களால் இயற்றப்பட்டுள்ளது. இத்துடன் காமராசரின் அரசியல் குருவான தீரர் சத்தியமூர்த்தியின் பெருமைகளை எடுத்துரைக்கும் பஞ்சகத்துடன் இந்நூல் தொடங்குகிறது. பஞ்சகம் என்பது ஒரு ‘பொருள் பற்றி ஐந்து பாடல்கள்’ பாடுவதாகும்.

Last Updated on Monday, 26 September 2016 22:31 Read more...
 

ஆய்வு: சங்கப் பாலைத்திணைக் கவிதைகளில் தொல்காப்பியரின் பயன் கோட்பாடு

E-mail Print PDF

கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105. -சங்க காலத்தில் மாந்தர்களிடையே நிலவிய அகப்புற உணர்வுகளை உணர்த்துவதற்குத் தேவையான புலப்பாட்டு முறைகளையும் கொள்கைகளையும் வரையறை செய்துகொண்டு அவற்றிற்கிணங்க இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய மரபினை எடுத்துரைக்கும் பகுதி பொருளிலக்கணமாகும். இப்பொருளிலக்கணத்தில் தொல்காப்பியர் தன் காலத்தில் நிலவிய இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு செய்யுளியலில் இலக்கியத்தின் வடிவம், உள்ளடக்கம், உத்திகள், வகைமை ஆகியவற்றைப் படைத்துள்ளார் எனலாம். பிற்காலத்தில் இவைகள் அனைத்தும் இலக்கியக் கோட்பாடுகளாகத் தோற்றம் பெற்றன. செய்யுளியலின் உறுப்புகள் இலக்கியக் கோட்பாடுகளாகத் திகழ உரையாசிரியர்களின் உரைகள் நமக்கு ஏதுவாக அமைகின்றன. தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க காலச் சமூக இயங்கியல் தளத்தில் தலைவன், தலைவி காதல் வாழ்வில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் சமுதாயத்திற்குத் தேவையான நற்பயன்களை இலக்கியம் படிக்கும் வாசகனைச் சென்றடையும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இன்றைய நவீன இலக்கியங்களான நாவல், கவிதை, சிறுகதை போன்றவைகளிலும் தொல்காப்பியரின் பயன் கோட்பாட்டினைப் பொருத்திப் பார்க்கலாம் என்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓவ்வொரு இலக்கிய வகையும் ஏதோ ஒரு பயனைச் சமுதாயத்திற்கு விட்டுச்செல்கிறது  அவற்றினை இனம்கண்டு வெளிக்கொண்டு வரலாம்.

தொல்காப்பியரின் பயன் கோட்பாடு
தமிழில் தோற்றம் பெற்ற படைப்புகள் அனைத்தும் வாசிக்கும் வாசகனுக்கு ஏதாவதொரு பயன் நல்குமாறு அமைகின்றன. அப்படைப்பினைச் சமூக இயங்கியல் தளத்தோடு பொருத்தும் போது ஏதாவதொரு நற்பயனை விட்டுச் செல்லும். இதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் படைத்துள்ளார். இதனை,

“இதுநனி பயக்கு மிதனா னென்னுந்
தொகைநிலைக் கிளவி பயனெனப் படுமே”  (தொல்.பொருள்.பேரா.நூ.515)


என்ற நூற்பாவில் ஒவ்வொரு படைப்பினையும் தொகுத்துரைத்தால் ஏதாவதொரு பயனை நல்கும் என்று தொல்காப்பியர் பயன் என்னும் உறுப்பினை திறம்படக் கையாண்டுள்ளார் எனலாம். இதற்கு “யாதானும் ஒரு பொருளைப் பற்றிக் கூறியவழி இதனாற் போந்த பயன் இதுவென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினாலே தொகுத்துணர வைத்தல் பயன் என்னும் உறுப்பாம்.”1 என்று க.வெள்ளைவாரணன் தனது ஆய்வுரையாகக் கொடுத்துள்ளார்.

Last Updated on Monday, 26 September 2016 22:34 Read more...
 

ஆய்வு: அற இலக்கியங்களின் அமைப்பு

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே  (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.

Last Updated on Wednesday, 07 September 2016 20:15 Read more...
 

ஆய்வு: நான்மணிக்கடிகை உணர்த்தும் பெண் நெறிகள்

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள்; அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் உள்ள அறநூல்களில் ஒன்றாக நான்மணிக்கடிகை அமைந்துள்ளது.இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களிலும் நான்கு விதமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.இந்நூலை இயற்றியவர் விளம்பிநாகனார்.இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட 106 பாடல்களைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் பெண்ணுக்கான வரையறுக்கப்பட்ட நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண் இயற்கையின் ஆற்றல்மிகு படைப்பாக விளங்குகிறாள்.அவளால் தான் அன்பையும் இனிமையையும் பெற முடியும்.மாதர் என்ற சொல்லிற்குக் காதல் என்ற பொருள் உண்டு.மாதர் முகமே எனது புத்தகம் என்று ரூசோ கூறியுள்ளது நோக்கத்தக்கது.பெண்ணைவிட பெருமையுடையது யாதொன்றுமில்லை எனவே தான் வள்ளுவரும் ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’என்று போற்றியுள்ளார்.

பெண் என்னும் தமிழ் சொல்லுக்கு அழகு என்பது பொருள். அது பெண்ணை உணர்த்தும் மாதர் என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள் என்று திரு.வி.க அவர்கள் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை என்ற நூலில் கூறியிருக்கிறார்.(ப.3) நான்மணிக்கடிகையில் பெண்கள் குறித்த செய்திகள் 34 பாடல்களில்  (11, 14, 15, 20 ,22, 24 ,26 ,34 ,35, 38 ,39 ,43, 45, 47 ,55, 56 ,57 ,65 ,67 ,73 ,81, 85 ,87, 90, 91 ,92 ,93 ,95 ,97, 99, 101, 102, 105 );நாற்பது கருத்துக்களாக இடம்பெறுகின்றன.

Last Updated on Wednesday, 07 September 2016 20:17 Read more...
 

ஆய்வு: சங்கஇலக்கியத்தில் காதல் போர்ப்பண்பாடு (இயைபுகளும் முரண்பாடுகளும் )

E-mail Print PDF

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக இலக்கியம் விளங்குகிறது என்பர். இக்கூற்றிற்கு ஏற்ப, பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள பழைய இலக்கியங்களே நமக்குத் துணைபுரிகின்றன. எனவே, இலக்கியம் என்பது மொழி வழி நின்று சமுதாய வாழ்க்கையை விளக்குகிறது எனலாம். தமிழர் தம் சமுதாய வாழ்க்கையின் வளர்ச்சி நிலைகளைப் பதிவு செய்து நிற்கும் தொன்மையான நூல்கள் தொல்காப்பியமும், சங்க இலக்கியமுமே ஆகும். தொல்காப்பியப் பொருளதிகாரமும், சங்கஇலக்கியமும் பழந்தமிழ் நாட்டின் சமூகநிலையினை அக்காலத்திற்கேற்ப பதிவுசெய்துள்ளது. உலக வாழ்வையும் வரலாற்றையும் ஏதேனும் இரு சொற்களில் சுருக்கிச் சொல்வதாயின், அவை காதலும், போரும்தான். மனிதவாழ்வின் இரு சக்கரங்களாகச் சுழலும் இவைதாம், வாழ்வின் விளக்கமான இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகளாகவும் அமைகின்றன. வாழ்வியல் இலக்கியத்திற்கும் இலக்கிய வாழ்விற்கும் முதன்முதலில் இலக்கணம் வகுத்த முத்தமிழ் நாகரிகம் இவ்விலக்கியப்பொருளை அகப்பொருளாகக் காதலையும், புறப்பொருளாகப் பெரும்பகுதி வீரத்தையும் குறிப்பிடுவது புதிய செய்தியன்று. தமிழிலக்கண இலக்கியத்திறனாய்வுக்கு முன்னோடியாக அல்லது பெருமளவில் தொல்காப்பியத்தைத் தொட்டே இன்றுவரை எழுந்துள்ள ஆய்வுப்போக்குகள் அமைந்துள்ளன. விளக்கமுறை, விதிப்புமுறை என்ற பாகுபாட்டில் அமைந்துள்ள இலக்கணநூல்களின் அடிப்படையை  ஆராயும்பொழுது, தொல்காப்பியம் என்பது ஒரு விளக்கமுறை இலக்கணம் என்பர். இது தமிழின் இயல்பான இலக்கண வழக்கை எடுத்துச்சொல்கின்றதே தவிர, இன்னென்ன மாதிரியில்தான் இருக்கவேண்டும் எனப் பெரும்பாலும் வரையறுத்துக் கூறவில்லை. இதுகூறும் சமுதாயம் என்பது அக்காலத்தில் எப்படியெப்படி இருந்ததோ அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது எனலாம். ஆதலின் தொல்காப்பியம் என்பது கற்பனை நிலையில் நின்று ஒரு சமுதாயத்தை உருவாக்கவில்லை. இலக்கணநூல் வழியாக ஒரு சமுதாயத்தைக் காட்டுவது என்பது அரியசெயலாகும் எனினும், இலக்கணம் பல இலக்கிய நூல்களின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டமையால், இலக்கண நூல்வழிக் காணும் சமுதாயம், கற்பனைச் சமுதாயமாக இல்லாது, உண்மையும், கருத்து வலிமையும் உடைய ஒன்றாகவே அமையும் எனலாம். அதனடிப்படையில் அணுகும்பொழுது தொல்காப்பியமும், அதனை விவரிக்கும் சங்கஇலக்கிய சமுதாயமும், காப்பியக் கதைநகர்வுகளும், தமிழில் தோன்றிய மற்ற இலக்கியங்களும் ஆண், பெண்ணை மையமிட்ட அகப்புறப் பாகுபாட்டையும் அவற்றில் தோன்றும் காதல், போர் இயைபுகளையும், முரண்பாடுகளையும் தமிழிலக்கண இலக்கியப் பதிவுகளில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிந்து தமிழிலக்கியத் திறனாய்வுக்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 06 September 2016 19:42 Read more...
 

ஆய்வு: : வள்ளுவர் வகுத்த வணிகவியலும் நிதிமேலாண்மைக் கொள்கையும்

E-mail Print PDF

 பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -உலகமொழிகள் எல்லாம், வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருந்த பொழுது நம் தமிழ் மொழியானது இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே உருவாக்கி செழிப்புற்றிருந்தது. அதில், குறிப்பாக உலகப்பொதுமறை எனப்போற்றப்படும் திருக்குறள் எல்லா துறைகள் பற்றிய உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் உலகநாடுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வெற்றிக்குரிய தொழிலாக போற்றப்படும் வணிகம், வர்த்தகம், நிர்வாகம், நிதிமேலாண்மை போன்றவற்றின் அடிப்படைக்கொள்கைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.        

வணிகம் அல்லது தொழில் தொடங்கும் முறை
எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் தொடங்குவது பயனற்றதாகும். அதிலும் வர்த்தகம் செய்ய விரும்பினால் மிகுந்த கவனத்தோடு கள ஆய்வுப்பணி செய்து தான் தொடங்க வேண்டும். ஏனெனில், நாம் எதை வணிகம் செய்யப் போகிறோம், எப்படிச் செய்யப் போகிறோம், எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம், வரவு செலவு எவ்வாறு அமையும் என்பது பற்றிய தீர்மானத்திற்குப் பிறகு தான் வணிகம் செய்ய தொடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனையே,

“அழிவதுவும் ஆவதுவும் ஆகி வழிபயக்கும்
ஊழியமும் சூழ்ந்து செயல்”             ( குறள் : 461 )

என்ற குறட்பாவில் எடுத்துரைக்கிறார். மேலும், எந்தத் தொழிலையும் செய்யத் தொடங்கும் பொழுது அதற்கு முதலில் ஏற்படும் செலவையும், செலவுக்குப் பின் உண்டாகும் வரவையும், எதிர்காலத்தில் அத்தொழில் கொடுக்கும் இலாபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந்து ஏற்புடையதாக இருந்தால் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிதி மேலாண்மையின் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இக்குறளின் கருத்தாகும்.

Last Updated on Tuesday, 06 September 2016 19:43 Read more...
 

ஆய்வு: இன்னா நாற்பது உணர்த்தும் சமுதாயநெறிகள்

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழகத்தில் சங்க மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.இந்நுல்களை அற நூல்கள், நீதி நூல்கள் எனவும் குறிப்பிடலாம்.இக்காலக் கட்டத்தில் களப்பிரர்கள் ஆட்சி செய்தனர் அதனால் இக்காலம் இருண்டக் காலம் என வழங்கப்படுகிறது.இதற்கு இருண்ட கால இலக்கியங்கள் என்ற பெயரும் உண்டு.இந்நூல்கள் அறம்,அகம்,புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அற நூல் பதினொன்று,புற நூல் ஒன்று,அக நூல் ஆறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக இன்னா நாற்பது விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் கபிலர்.கடவுள் வாழ்த்து உட்பட மொத்தம் 41 பாடல்கள் இயற்றியுள்ளார்.சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இச்செயல்களை செய்தால் துன்பம் தரும் என இந்நூல் எடுத்துரைக்கிறது.இதில் 164 இன்னாச் செயல்கள் உள்ளன.இந்நூலில் இடம் பெறும் சமுதாய நெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
மதுரை தமிழ் அகராதி சமுதாயம் என்பதற்கு கூட்டம்,சங்கம்,பின்னணி,ஊர்ப் பொது,மக்களின்திரள்,பொருளின்திரள்,பொதுவானது,பொதுவாகவேனும்,அவ்வவர்க்குப் பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச் சொத்து,சபை,அவைக்களம்  என்று பொருள் விளக்கம் அளிக்கிறது.மேலும் செந்தமிழ் அகராதி மக்களின் திரள்,பொதுவானது எனப் பொருள் உரைக்கிறது.பேராசிரியர் காளிமுத்து அவர்கள் வளர்தமிழில் அறிவியல் அறிவியலும் சமுதாயம் என்ற நூலில் சமுதாயம் என்பது உறவுடன் கூடிய மக்களின் வாழ்க்கைத்தளம் என்றும் உலகில் தோன்றிய இனங்களில் ஒன்று மனித இனம் இவ்வினம் ஆறாவது அறிவைப் பெற்று தனக்காக சிலவற்றைத் தேடி அவற்றுடன் சார்ந்து வாழும் நிலையே சமுதாயம் என்று குறிப்பிடுகிறார்.

கல்வி
கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’என்பதாகும்.கல்லுதல் என்றால் தோண்டுதல் மனத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்ப வல்லது கல்வி. இக்கல்வியின் பயனாக ஒருவன் இயைந்த முழுவளர்ச்சியினையும் பெறுகிறான் இன்னாநாற்பதில் கல்விப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

Last Updated on Tuesday, 06 September 2016 19:43 Read more...
 

ஆய்வு: விஜயம் நாவலில் பொருளாதார மேம்பாடு

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
பொருளாதார மேம்பாடு என்பது வறுமை நிலையில் உள்ள மக்களை முன்னேற செய்யும் வழிமுறைகளை உள்ளடக்கியது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தொழிலாளி, முதலாளி எனும் வர்க்க வேறுபாடு வலுப்பெற்று வந்தது. அதன் அடிப்படையில் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி உழைப்பிற்கேற்ற ஊதியமும், கூலியும் கொடுக்க மறுக்கின்ற சமூகநிலை உருவாயிற்று. இவை தொடர்பான பதிவுகளும் நாவலில் இடம் பெற்றுள்ளன. இவற்றை எடுத்து விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

பொருளாதாரம்
பொருளாதாரம் பகுத்தறிவுச் சிந்தனையின்றிச் செயல்படும் தன்மையினை விஜயம் நாவல், தீமையைப் பழிப்பதற்கும், நன்மையைப் புகழுவதற்கும் ஓர் எல்லை உண்டு. நல்ல கொள்கை என்றாலும் அதைக் தவறான பாதையில், பகுத்தறிவின்றி உபயோகப்படுத்தத் துணிந்தால், அதனால் கேடுதான் விளையும். சோம்பி வாழ்பவன் சுகவாசி ஆவானா? உழைப்பது கவுரவக் குறைவு என்று நினைத்து, சுகவாசி வாழ்வை நாடிய நம் நாட்டார் எல்லாத் தொழில்களையும் பறிகொடுத்துவிட்டு, சாப்பாட்டுக்குப் போதுமான தானியங்களைப் பயிராக்க முடியாத இங்கிலீஷ்காரரின் தேசத்தைக் கைத்தூக்கி விட்டுவிட்டார்கள்.1 இவ்வாறான செய்தியினை எடுத்துரைக்கின்றது. மேலும், வருமானத்திற்கு மீறிச் செலவு செய்யும் நிலையினைப் பற்றி விஜயம் நாவல், வாழ்க்கையைத் துண்டு துண்டாக நோக்குவது கூடாது. வாழ்வை ஒன்று சேர்த்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கையின் பல பகுதிகள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு கிடக்கையில், ஒன்றிரண்டு பகுதிகளைமட்டும் மாற்றிக்கொள்ளுவது முடியாத காரியம். ஏனைய பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் போய்ப் பாதிக்கும். சிறிய புதுப் பழக்கமான காபியை எடுத்துக் கொள்ளுவோம். பழையது சாப்பிடப் பணம் வேண்டாம். காபிக்கு அதிகமான பணம் தேவை. அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும். மேலும், ஒருவர் வீட்டில் காபி சாப்பிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் யாவரும், காலக்கிரமத்தால் காபிக் குடியர்கள் ஆகிறார்கள். எல்லோருக்கும் நவ நாகரிக ஆசை தோன்றுகிறது. இதனால், அந்தக் குடும்பத்தின் போக்கே, விரைவில் மாற்றம் அடைகிறது. கல்யாணம் என்பது மதச் சடங்காக இருந்ததுபோக, அது இப்பொழுது வியாபாரத் தொழிலாக ஆகிவிட்டது‚ இந்த நிலைமையை, நம் முன்னோர் பொறுப்பார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா? 2 என்று எடுத்துரைக்கின்றது. பகுத்தறிவுவாதி என்பவன் தனது வாழ்வில் சராசரி வாழ்க்கைத்தரம் என்னவோ அதன்படி நடந்து கொள்வதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். பெரியார் வருமானத்திற்கு மீறிய செலவினைப் பற்றி, தேவைக்கு மட்டுமே செலவு செய்வது சிக்கனம். தேவை மேல் செலவு செய்வது ஊதாரித்தனம். தேவைக்கே செலவு செய்யாமலிருப்பது கருமித்தனம்.3 என்று சிக்கனம், ஊதாரித்தனம், கருமித்தனம் போன்றவற்றிற்குத் தெளிவாகப் விளக்கம் அளித்துள்ளார்.

Last Updated on Friday, 02 September 2016 18:33 Read more...
 

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவு

E-mail Print PDF

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுமுன்னுரை:
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி’ எனப் புகழப்படும் தமிழினம் பண்டைய காலத்திலேயே அறிவாலும் ஆற்றலாலும் உயர்ந்து நின்றுள்ளது.இன்றைய தொழில்நுட்பத் திறனும் அறிவு சார்ந்த செயலும் அன்றைய நாளிலேயே பெற்றிருந்த வியத்தகு கூட்டம் இக்கூட்டமாகும்.இன்று அறிவியல் துறை என்பது கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் என்று தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றது.இத்துறைகள் யாவும் ஏதோ மேனாட்டார் மட்டுமே இவ்வுலகிற்கு வழங்கிய புதிய கொடை போன்றதொரு மாயத் தோற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.ஆனால் இவையாவற்றினையும் தன்னகத்தே ஒருங்கே அடக்கி செயல்பட்டு வந்த,வருகின்ற அறிவுசார் இனமாகத் தமிழினம் இருந்து வந்துள்ளது.இவ்வினத்தில் பிறந்த நாம் இதனை உணர்ந்து மீண்டும் செம்மைப்படுத்தி உலகிற்குத் தர வேண்டிய கடமையை மறந்து செயல்பட்டு வருகின்றோம்.அதிலும் குறிப்பாக உலக அளவில் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் வளர்ந்துள்ள வானியல் அறிவினைத் தமிழன் பழங்காலத்திலேயே வெற்றுள்ளான் என்பதை உலகம் உணரச் செய்வது நம் கடமையாகும்.

தொடக்க கால மனிதன்:
பழைய மனிதன் தொடக்கத்தில் தன் உறுப்புகளைப் பயன்படுத்தி பசியைப் போக்கியிருக்கின்றான்.தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க,உணவுப் பொருள்களை எடுக்கவும் தோண்டவும் பறிக்கவும் கற்கருவி மற்றும் மரக் கருவி எனப் பல கருவிகளைப் பயன்படுத்தியுள்ளான்.பிறகு ‘சிக்கிமுக்கி’ கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டான்.அதன்வழி வேட்டையாடிய பொருட்களை வேக வைத்துத் திண்ணத் தொடங்கியுள்ளான்.இதனை அடுத்து வில்,அம்பு எனப் பல கருவிகளைச் செய்துள்ளான்.வேட்டைச் சமூகத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி வேளாண்மைச் சமூகத்திற்குப் பயணிக்கத் தொடங்குகிறான்.இப்படிக் குன்றுகளிலும் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ வீடுகளைக் கட்டத் தொடங்கினான்.ஒரு நிலயிலிருந்து மற்றொரு நிலைக்குப் படிப்படியாக மாறிய மனிதன் இயற்கையினைக் கண்டு அஞ்சியிருக்கலாம்;அதன் மீது புரியாத பார்வைகளை வீசியிருக்கலாம்.அப்படிப் பல காலங்கள் அதன் மீது வீசிய பார்வை,அச்சம்,ஆச்சர்யம் அவனை சிந்திக்கத் தூண்டியிருக்கும்.சிந்தனையிலும் செயல்பாட்டிலும் எப்பொழுதும் முன்னிற்கும் தமிழினம் எப்படிப்பட்ட தீர்வினை இவ்வுலகிற்குத் தந்துள்ளது என்பதை அறிவது தேவையானதாகும்.அதன்வழியாக வானிலே உலாவுகின்ற பலவகையான பொருட்கள் பற்றி தன் எழுத்துகளில் குறிப்பிட்டுள்ள சிறப்பினை இங்குக் கருதுவது ஏற்புடையதாகும்.

Last Updated on Thursday, 01 September 2016 18:10 Read more...
 

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்

E-mail Print PDF

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்சுரேஷ் அகணிஅறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களின் சில படைப்புக்களால் ஈர்க்கப்பட்டு அவரைப் பற்றிய எனது தேடலின் விளைவாக நான் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். இந்தப் பதிவைச் சக எழுத்தாளர்களுடனும் தமிழ் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் முகமாக எழுதிய இந்தக் கட்டுரை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு மலரில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதெனக் கருதுகின்றேன். 

ஈழத்து இலக்கியவானில் ஓளிவீசிப் பிரகாசித்த அ.ந.க 1968ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி  இவ்வுலகைவிட்டுச் சென்றார். ஈழத்தில் சிறந்த சிறுகதை ஆசிரியராக நாவலாசிரியராக படைப்பாளியாக விளங்கினார். ஏழை பணக்கார பேதம் சாதி சமய வேறுபாடுகள் முதலாளி தொழிலாளிப் பிரச்சினைகள் போன்ற விடயங்களில் நடுநிலைக் கருத்தை மூலக் கருவாகக் கொண்டு அதிக யதார்த்த இலக்கியப் படைப்புக்களைச் செய்தார். இவரின் இலக்கியச் சாதனைகள் கவிதை சிறுகதை நாவல் கட்டுரை நாடகம் மொழிபெயர்ப்பு எனப் பல வடிவங்களில் மிளிர்ந்தன. இவரின் பங்களிப்புக்கள் பத்திரிகைத் துறையையும் வானொலித் துறையையும் வலுவூட்டின. இவரின் அறிவூட்டல்கள் பலருக்கும் படிக்கற்களாக அமைந்தன. இவரின் எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது “அ.ந.க ஒரு சகாப்தம்” என்ற நூலில் “ அ.ந.க வின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுது அவரது துள்ளும் தமிழும் துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டுழ் படிக்கத் தூண்டும்” என்று கூறுகின்றார்.  அ.ந.க சிறுவயதில் தனது பெற்றாரை இழந்ததால் பாட்டியாருடன் வாழ்ந்திருக்கின்றார். இவர் பதினேழாவது வயதில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து தனிமையாக வாழ்ந்திருக்கின்றார். கண்டதைக் கற்றுப் புலமை தேடியவர். மறுமலர்ச்சிக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். இவரும் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்டவரே. அச்சகத் தொழிலாளருக்காகப் போராடினார். அச்சக முதலாளிகளின் வெறுப்பைச் சம்பாதித்தார். “சுதந்திரன்” போன்ற சில  பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றார். அரசாங்க தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். எமிலிஸோலாவின் “நானா” என்ற நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் ஆய்வினை பண்டிதர் திருமலைராயர் என்ற புனைபெயரில் எழுதினார். “மதமாற்றம்” என்ற நாடகத்தையும் “மனக்கண்” நாவலையும் எழுதியவர். இவர் ஆரம்ப காலத்தில் “கவீந்திரன்” என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். “எதிர்காலச் சித்தன் பாடல்”  “சத்திய தரிசனம்” “கடவுள் என் சோர நாயகன்” என்பவை இவர் எழுதிப் பாடிய பாக்களில் சில. “கசையடிக் கவிராயர்” என்ற புனைபெயரிலும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகளில் மலையகத் தொழிலாளரின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு எழுதிய “நாயினும் கடையர்” “இரத்த உறவு” போன்ற படைப்புக்கள் முக்கியமானவை.

Last Updated on Sunday, 09 October 2016 06:20 Read more...
 

ஆய்வு: ஞானதூதன் இதழில் கருத்துப்படங்கள்

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
செய்தித் தாள்களின் ஒரு புதிய சகாப்தத்தைக் கருத்துப்படங்கள் தோற்றுவித்து வருகின்றன. தலையங்கத்திற்;கு இணையான வகையில் இவை விளக்குகின்றன. பொது மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக இவை அமைகின்றன.

கருத்துப்படங்கள்
“கருத்துப்படங்கள் ஒரு மையக் கருத்தை எடுத்துரைக்கும், எளிமையான படங்களைக் கொண்டவைகளாக இருக்கும். குறைவான சொற்களிலோ, சொற்களே இல்லாமலோ விளக்கப்பட்டிருக்கும். கருத்துப்படங்கள் நேற்றோ, இன்றோ தோன்றியவை அல்ல அச்சகங்கள் தோன்றி இதழ்களாக வெளிவரத் தொடங்கிய காலம் முதலே கருத்துப்படங்கள் ஒவ்வொரு இதழ்களிலுமே இடம் பெற்றிருக்கின்றன.”1

ஒரு இதழ் கூற விரும்பும் முக்கியமான கருத்தை மிகச் சுலபமாக அறிய வைத்துவிடும். பல பக்கங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தை ஒரு கருத்துப்படம் எளிதில் விளக்கிவிடும்.

ஞானதூதனில் கருத்துப்படங்கள்
தேச ஒற்றுமை, முன்னேற்றம், கல்வி, எளிமை, வறுமை ஒழிப்பு, சுற்றுச் சூழல் முதலிய பிற நோக்கோடு இதழில் கருத்துப்படங்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நாட்டின் மேல் கொண்டுள்ள அக்கறையும் நாட்டில் நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிந்து அதற்கேற்ப நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளை கருத்துப் படங்களின் வாயிலாக  வெளியிட்டுச் சேவை புரிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துப்படத்திற்குரிய அனைத்துக் கூறுகளும் ஞானதூதன் இதழிலும் இடம் பெற்றிருக்கின்றன. சிறுபான்மைச் சமூகத்திற்குப் பாதிப்பு ஏற்படும் பொழுதெல்லாம் அதை அரசுக்குச் சுட்டிக்காட்டி தேவையானால் விமர்சனங்கள் எழுதவும் தவறியதில்லை.

பசுமைப் புரட்சி
“பசுமைப் புரட்சி” – என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டு ஜீன் மாத இதழில் இயற்கையைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் தொலை நோக்கு பார்வையில் நாடு மற்றும்  மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட கருத்துப்படமாகும். கி.பி. 1700 வரையில் உலகில் உணவுப்பொருட்களை மனிதன் கைகளாலேயே உற்பத்தி செய்தான். ஒவ்வொரு நாட்டு மக்களின் மக்கள் தொகைக்கேற்பத் தானியங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை பற்றாக்குறையே இருந்தது. எனவே உலகில் ஒவ்வொரு நாடும் உணவு உற்பத்தி மூலம் தன்னிறைவு அடைய முயல்கின்றன.”2

Last Updated on Tuesday, 23 August 2016 22:43 Read more...
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்

E-mail Print PDF

அறிமுகம்
 சு. குணேஸ்வரன் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க இலக்கியங்கள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அவற்றில் எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் தனித்துவமானதாக அமைந்துள்ளது. அகமும் புறவும் விரவிய இவ்விலக்கியத்தில் வையைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கால சமூகநிலையை நோக்கமுடியும்.

பரிபாடல் - சொற்பொருளும் அமைப்பும்
பரிபாடல் என்பது ஒரு யாப்பு வகை என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது ‘பரிந்த பாடல்’ எனப்படுகிறது. அதாவது பாடல் கலவையாக ஏற்று வருதல். “பரிபாடல்  என்பது பரிந்து வருவது. அது கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் பல வடிவும் வருமாறு நிற்குமென்றுணர்க” (தொல். செய். 118) என்று நச்சினார்க்கினியார் உரைப்பார். இதற்கு தொல்காப்பிய செய்யுளியலில் பின்வருமாறு சூத்திரம் வகுக்கப்பட்டுள்ளது.

“ பரிபாட் டெல்லை
நாலீ ரைம்ப துயர்படி யாக
வையைந் தாகு மிழிபடிக் கெல்லை”  (தொல்.செய். 474)

சிற்றெல்லையாக 25 அடியும் பேரெல்லையாக 400 அடிவரையும் வரும் என பரிபாட்டில் வரும் வெண்பாவுக்கு தொல்காப்பியம் அளவு கூறுகின்றது. பரிபாடல் இசைப்பாடலாகும். இது இன்பத்தை அடிப்படையாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனலாடல் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டமைந்துள்ளது.

பரிபாடல் கிளப்பும் பிரச்சினை
பரிபாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தனவென்று அறியப்படுகிறது. ஆனால் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் முழுமையாகக் கிடைத்த 22 பாடல்களோடு சிதைவடைந்த வையைக்குரிய ஒரு பாடலும், மேலும் தொல்காப்பிய உரையாசிரியர்களின் மேற்கோட் செய்யுள்களில் காட்டப்பட்ட 13 பாடல்களின் திரட்டுக்களும் உள்ளடங்கலாக தற்போது 24 பாடல்களே பரிபாடல் நூலில் உள்ளடங்கியுள்ளன.

“திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொரு பாட்டு காடுகிழாட் கொன்று மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்”

என்ற பழஞ்செய்யுளால் பரிபாடலில் முழுமையாக இருந்த பாடல்கள் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றது.

Last Updated on Tuesday, 23 August 2016 21:30 Read more...
 

ஆய்வு: கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலில் பெண் சித்திரிப்புகள்

E-mail Print PDF

முன்னுரை
ஆய்வுக் கட்டுரைகள்!சங்க காலம் முதற்கொண்டே பாலியல் அடிப்படையில் பெண்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். இடைக் காலங்களில் தோற்றமெடுத்த சாதி, சமய பூசல்களும், சமூக மாற்றங்களும் அடிமை முறையைத் தோற்றுவித்தன. அதன் காரணமாகப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய பொதுவான சமூக உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன.
இதுபோன்ற துன்பங்களிலிருந்து பெண் விடுதலை பெறவேண்டும். ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று பெண் விடுதலைக்காகப் பலர் போராடியிருக்கிறார்கள். பெண் விடுதலைக்குத் தேவையான ஆரம்பப்படிகள் சிலவற்றைப் பட்டியலாகப் பாரதியார் தருகிறார். அவை வருமாறு:

பெண்களுக்கு விடுதலைக் கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப்படிகள் எவையென்றால்,

1.    பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக்கூடாது.
2.    அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி   வற்புறுத்தக்கூடாது.
3.    விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமான படுத்தக்கூடாது.

Last Updated on Monday, 22 August 2016 20:19 Read more...
 

ஆய்வு: புதுக்கவிதைகளில் நில மாசுபாடு

E-mail Print PDF

நிஆய்வுக் கட்டுரைகள்!லமென்பது மண், நீர், காற்று மண்ணில் உள்ள தாதுப்பொருட்கள் தட்வெப்பம் முதலிய இயற்கை வளங்கள் எல்லாம் நிறைந்த இயற்கைச் செல்வம். இவ்வியற்கைச் செல்வங்கள் மனிதனுக்கு உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றைத் தருகின்றன. சுற்றுச்சூழலில் நிலம் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாக உள்ளது. பூமியின் மேற்பரப்பானது வேளாண்மைப்பயிற்சி. கனிம வளங்களை வெளிக்கொண்டு வரச் சுரங்கம் தோண்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் வெளியேறுதல், நகரத் கழிவுகளைக் கண் மூடித்தனமாக அகற்றுதல் முதலிய அனைத்துக் காரணிகளாலும் மாசுபடுகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடுகளினாலும், நிலத்தில் நீர் தேங்கிவிடுவதாலும் உவர்ப்புத் தன்மையினாலும், அளவுக்கதிகமாக ஆடு, மாடுகள் மேய்வதாலும், பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்காத காரணத்தினாலும் மண் வள பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கரித்துகள், புகை, தூசி, கதிரியக்க, வீழ்பொருள் போன்றவை காற்றின் மூலம் நிலத்தில் படிகின்றன. இவை மழை நீரால் அடித்துச்  செல்லப்படுவதும் உண். இதனால் நிலம் மாசடைகின்றது. இதனை

“நிலத்தின் மாசு மற்றும் மாசாக்கிகளின்
மூலங்கள் பற்றிய ஒரு பொதுக் கண்ணோட்டம்”
(சுற்றுச் சூழலியல், ப. 32)

நிலம்:

1. திடக்கழிவு, சாக்கடை - வீடுகள்
2. திடக்கழிவு    - உள்ளுர் ஆட்சி
3. தொழிலகக் கழிவு நீர் - தொழிலகங்கள்
4. தீங்குயிரிக் கொல்லிகள,;       
வேதிய உரங்கள்- வேளாண்மை
5. உலேகாகக் கழிவுப் பொருட்கள்
தூசி, எண்ணெய் - போக்குவரத்து
6.கதிரியக்கப் பொருட்கள் பயனற்ற வெப்பம்-    அணுக்கதிர்  நிலையங்கள், அணுக்குண்டு சோதனை

என்று சியாமளா தங்கமணி சுற்றுச் சூழலியல் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு காரணிகளால் நிலம் மாசு அடையும் படிநிலைகளை கீழேக் காண்போம்.

Last Updated on Wednesday, 17 August 2016 05:46 Read more...
 

ஆய்வு: கேரள மாநிலத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் வேளாண்மை

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரைகள்!முதல் நான்கு வகுப்புகளிலும் வேளாண்மை குறித்துள்ள கருத்தாக்கங்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

தை...தை...விதை    -    வகுப்பு ஒன்று
நாற்று நட வாரீர்    -    வகுப்பு இரண்டு
கனவு பூக்கும் வயல்    -    வகுப்பு மூன்று
கழனி பூக்கும் காலம்    -    வகுப்பு நான்கு

வேளாண்மையைப் பாதுகாப்போம் என்ற கருத்தாக்கம் பதினேழு கருத்தலகுகளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.\

1.    செடி வந்த வரலாறு
2.    பயிர் தொழிலின் படிநிலை வளர்ச்சிகள்
3.    விதைகாத்தல்
4.    பழங்களும் சுவைகளும்
5.    செடிகொடி மரம்
6.    உழவுக்காலம்
7.    ஏர் உழும் காளை
8.    வேளாண் சங்கம்
9.    நாற்று நடுதல் ஒரு வேளாண் கலை
10.    பூசணிப்பயிர்

Last Updated on Tuesday, 16 August 2016 05:31 Read more...
 

ஆய்வு: காரை.இறையடியானின் ‘தமிழமுதம்’

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ள அறிஞர்கள் பலராவர். அவர்களுள் காரை.இறையடியான் தனித்திறன் பெற்றவராக விளங்கியவர். எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தமிழ்ப்பணி புரிவதையே முழு நோக்கமாகக் கொண்டு அயராது பணியாற்றியவர். இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் படைத்த சான்றோர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டவர். காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை. இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். 17.11.1935-ல் புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்த காரை.இறையடியான் பத்து நூல்களைச் செதுக்கியுள்ள இந்தச் செந்தமிழ்ச் சிற்பியை அவரின் படைப்புகள் வாயிலாக அடையாளம் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

“தமிழிலக்கிய வரலாற்றில் தம் எழுத்துக்களால் தமக்கென
ஓரிடத்தைப் பெற்றவர் காரை.இறையடியான்’’1

என்று அறிவுநம்பியும்,

“இனிய தமிழில் இசுலாத்தின் கருத்துக்களை எடுத்துரைக்கும்
பாவலர் இறையடியானுக்குத்  தமிழ் இலக்கிய வரலாற்றில்
தனியிடமுண்டு’’ 2


என்று திருமுருகனும் இலக்கிய வரலாற்றில் இடம்பெறத் தகுதி உடையவராய் மதிப்புரைக்கும் இறையடியானின் வரலாறு அறிய வேண்டியுள்ளது.
தமிழமுதமும் வாழ்வியலும்

Last Updated on Thursday, 11 August 2016 19:12 Read more...
 

ஆய்வு: பால், நிறம், வெள்ளை!

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்“முரட்டுத்தனம் மிக்க சட்டத்தரணி, மரியாதையீனம் தொடர்பான, தமது மேன்முறையீட்டு முயற்சியில் தோல்வியுற்றார்.” ஜூன் 15, 2016 ‘ரொறன்ரோ ஸ்ரார்’ பத்திரிகை இப்படியொரு தலையங்கத்துடன் செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதில் சம்பந்தப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான Joseph Groia என்பவர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, எதிர்த் தரப்பினருக்காக வாதாடிய இவர், வழக்குத்தொடுநர் குறித்துத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதுவே இவர் மீதான குற்றச்சாட்டு.

தாம் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கு எடுத்த முதல் இரு முயற்சிகளும் தோற்றுப் போகவே, மூன்றாவது முயற்சியாக, ஒன்ராறியோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தமது முறையீட்டை Joseph Groia சமர்ப்பித்திருந்தார். அதுவும் தற்போது தோல்வியில் வந்து முடிந்துள்ளது! இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவரது தகாத நடத்தை!

1974 ஜனவரி பத்தாம் திகதி, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் கடைசி நாள் நிகழ்ச்சியின்போது, 9 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். அது தொடர்பான விசாரணை யாழ். நீதவான் மன்றில் நடைபெறுகிறது. அந்நாளைய யாழ். பொலிஸ் அதிபர் ஆரியசிங்க, இன்ஸ்பெக்ரர் பத்மநாதனிடம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறார், “இவர்தான் பிரச்சினைக்குக் காரணம். இவரைக் கவனிக்க வேண்டும்.” இவ்வார்த்தைகள் அமிர்தலிங்கத்தின் காதில் விழவே அவர் எழுந்து, நீதிபதி பாலகிட்ணரிடம் முறைப்பாடு செய்கிறார். ஆனால் நீதிபதியோ முறைப்பாட்டாளரையே நீதிமன்றை விட்டு வெளியேற்றுகிறார். இதனை அவதானித்துக்கொண்டிருந்த முன்னாள் மாவட்ட நீதிபதி தம்பித்துரை, “திரு. அமிர்தலிங்கம் அவர்கள் மதிப்புக்குரிய, ஆற்றல் மிக்க, ஒரு சிறந்த சட்டத்தரணி மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சுமார் இரண்டரை மில்லியன் தமிழரது மரியாதைக்கும் உரிய ஒரு தலைவர். அத்தகைய ஒருவரை இவ்வாறு நீதிமன்றை விட்டு வெளியேற்றி அவமதிப்பது, முறையற்ற செயல்” எனக் கூறித் தமது ஆட்சேபனையை முன் வைக்கிறார். நீதிபதி பாலகிட்ணர் தமது தவறை உணர்ந்து, அமிர்தலிங்கத்தை மீள அழைத்து, மன்னிப்புக் கோரி, ஆசனத்தில் அமர வைக்கிறார். இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, அவரது அரசியல்!

Last Updated on Thursday, 04 August 2016 19:48 Read more...
 

ஆய்வு: சிலம்பில் வஞ்சினம்!

E-mail Print PDF

ஆய்வு: சிலம்பில் வஞ்சினம் - முனைவா் பா.பொன்னி , உதவிப்பேராசிரியர்மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -சிலப்பதிகாரம் சங்க காலத்தைத் தொடா்ந்து எழுந்த காப்பியம் ஆதலால் சிலம்பில் சங்க இலக்கியச் சாயல்கள் சில தொடா்ந்தும் சில மாற்றம் பெற்றும் அமைந்து வரக் காணஇயலுகின்றது.வஞ்சினம் என்பது புறப்பாடல்களில் காணக் கூடிய ஒன்று.சிலம்பில் வஞ்சினம் இடம்பெறக் கூடிய பல சூழல்களை நாம் அறிமுடிகிறது.சிலம்பில் கண்ணகி சேர மன்னன் ஆகியோரது வஞ்சின மொழிகள் தாண்டி வஞ்சினம் வெளிப்படக் கூடிய சில இடங்களும் காணப்படுகின்றன.

வஞ்சினம்
போருக்குச் செல்லக் கூடிய அரசன் ஓா் இலக்கை முன்மொழிந்து அதனை அடையாத நிலையில் தான் பெறவிருக்கும் கெடுதலையும் உடன்மொழிவது வஞ்சினம் ஆகும்.இந்த வஞ்சினத்தைத் தொல்காப்பியர் காஞ்சித்திணையுடன் பொருத்தி வஞ்சினக்காஞ்சி என்னும் துறையாக அமைத்துள்ளார்.

காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும்.போரில் தனக்கோ அல்லது தம்மை எதிர்த்து வரும் பகைவருக்கோ ஏதோ ஒரு புறம் அழிவு உண்டு என்னும் நிலையாமையை உணா்த்துவதால் இத்துறை காஞ்சித் திணையின் கீழ் அடங்குகிறது.வஞ்சினக் காஞ்சி குறித்து

இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்
( தொல்.பொருள்.புறத்.நூ – 19 )


என்று தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார்.வஞ்சினம் குறித்து “வீரயுகத் தலைவனின் ஆளுமைத்திறனை ( personality )  விரித்துரைக்கப் பாடல்களில் பாணா்களால் பயன்படுத்தப்படுகிறது.மறத்தின் அதன் ஆற்றலில் வெளிப்படும் வெஞ்சினத்தின் அடிப்படையே வஞ்சினம் என்றும் கூறுவா்” (ந.கடிகாசலம் ச.சிவகாமி சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு சிந்தனைப் பின்புல மதிப்பீடு ப.361 )என்று குறிப்பிடுவா்.

Last Updated on Monday, 01 August 2016 02:00 Read more...
 

மாஸ்ரர் படும் பாடு!

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்ஊரில் ஒரு கொஞ்சக் காலம் நான் ஒரு வாத்தியாராக வாழ்ந்திருந்தேன். அந்த மரியாதையின் நிமித்தமோ தெரியாது, இப்போதும் என் கண்முன்னே சிலர் என்னை ’மாஸ்ரர்’ என்று கூப்பிடுவர். கண்காணாத் தருணங்களில் சிலர் ‘வாத்தி’ என்றும், வேறு சிலர் ’சட்டம்பி’ என்றும் குறிப்பிடுதல் சாத்தியம்! என்னைப் பொறுத்தவரை, என் சொந்தப் பெயரைவிட இனிமையான வேறெந்த சொல்லையும் நான் இதுவரை கேட்டதில்லை! ஆகையால் மாஸ்ரர் என்ற அடைமொழி எனக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை. நான் எதிலும், எவர்க்கும், எப்போதும் ஒரு மாஸ்ரராக இருந்ததில்லை என்பதுடன் - இருப்பதில் எனக்கு விருப்பும் இல்லை என்பது பிடிப்பின்மைக்கான பிரதான காரணங்களுள் ஒன்று. இதேவேளை, இந்த மாஸ்ரர் எனும் வார்த்தைக்குப் பின்னால், வரலாற்று அடிப்படையில் இன்னொரு மாசு படிந்த பக்கமும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் தோற்றுவாயையும், சமகால சமூகத்தில் அது தோற்றுவித்துவரும் தொல்லை-தொந்தரவுகளையும் தொட்டுக்காட்டுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

‘உண்மை’ எனப் பொருளுணர்த்தும் Veritas என்ற இலத்தீன் வார்த்தையை, குறிக்கோள் வாக்காக வைத்துக்கொண்டுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஆகப் பழையதோர் உயர் கல்வி நிலையமாகும். 1636இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், உலகின் மிகச்சிறந்த 5 பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 32 நாடுகளின் தலைவர்களையும், 47 நோபல் பரிசு பெற்ற மேதைகளையும், 48 புலிற்ஸர் பரிசுபெற்ற பத்திரிகையாளர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கியது. சுமார் 18.9 மில்லியன் நூல்களடங்கிய நூலகத்தைக் கொண்டது. இத்தகைய சிறப்புக்கள் மிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனது கல்விசார் பதவிப் பெயர்கள், சிறப்புப் பெயர்கள், தொழிற் பெயர்கள் மற்றும் தலைப்புக்கள் (titles) என்பவற்றிலிருந்து Master என்ற சொல்லை அகற்றிவிட, கடந்த மாதம் (பெப். 2016) தீர்மானம் எடுத்திருக்கிறது.

மாஸ்ரர் எனும் சொல்லானது அடிமை முறைமையின் கொடூரங்களையும் அவலங்களையும் எதிரொலிப்பதாகவும், அது உயர்கல்வி நிலையங்களிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் மாணவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையே இம்முடிவுக்கான காரணமாகும். அறிஞர், ஆசிரியர் போன்ற பொருட்களை உள்ளடக்கிய Magister எனும் இலத்தீன் சொல்லின் வழிவந்த Master என்னும் பதத்தில், அடிமைத்துவத்தின் அடையாளம் எதுவுமில்லை என ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் வாதிட்டுவந்தது. ஆயினும் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அடிபணிய வேண்டிய நிலைமைக்குள் இப்போது பல்கலைக்கழகம் தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, முதுமாணிப் பட்டத்தினைக் குறிக்கும் Master எனும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர, House Master என்ற விடுதிப் பொறுப்பாளரின் பதவிப் பெயர் போன்ற ஏனைய சுமார் 24 பதவிப் பெயர்களும் தலைப்புக்களும் அகற்றப்பட உள்ளன. இனவாத ஆதரவாளரான, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Woodrow Wilson பெயரில் உள்ள முக்கிய கட்டடம் ஒன்றின் பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றும் ஹார்வார்ட் பல்கலைகழக நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 04 August 2016 19:42 Read more...
 

ஆய்வு: கலிப்பாவும் தமிழரின் இசைப்பாடல் வடிவங்களும் - ஒரு வரலாற்றுக்குறிப்பு

E-mail Print PDF

தோற்றுவாய்

கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் தமிழில் தோன்றிய பாவடிவங்களை யாப்பிலக்கணமரபின் அடிப்படையில் நால்வகைப்படுத்தி நோக்கலாம். இந்நால்வகைப் பாவடிவங்களில் ஒன்று கலிப்பாவாகும். இப்பாவடிவமானது ‘துள்ளல்’ என்ற ஓசைப்பண்பிலிருந்து உருவானதாகும். ஏனைய மூன்று பாவடிவங்களான ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகியவற்றைவிட தமிழரின் இசைமரபுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள பா வடிவம் கலிப்பாவாகும். குறிப்பாகத் தமிழின் பண்டைய இசைமரபு நூல்கள் பெரும்பான்மையும் அழிந்துபட்ட நிலையில் அக்காலத்தய இசைமரபின் இயல்புகளைத் தெரிந்து தெளிவதற்குத் துணையாக நிற்கும் முக்கிய பா வடிவம் இதுவாகும். அத்துடன் தமிழில் காலந்தோறும் தோன்றிய இசைவடிவங்கள் பலவற்றின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது இப்பாவடிவம் ஆகும் என்பதும் தமிழரின் இசைவரலாற்றினூடாக அறிந்து கொள்ளக்கூடிய முக்கிய செய்தியாகும். இவ்வாறான இப்பாவடிவத்தின் இசையியல் முக்கியத்துவத்தை தமிழ் இலக்கணநூல்களின் துணைகொண்டு எடுத்துரைக்கும் முயற்சியாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

1. கலிப்பாவின் இயல்பும் அதன் இசைச்சார் அடிப்படைகளும்

கலிப்பாவின் இயல்பு மற்றும் அதன் இசைச்சார் அடிப்படைகள் என்பவற்றை அறிந்து  கொள்வதற்கு முதற்கண் ஏனைய மூவகைப்பாக்களோடும் அதனைத் தொடர்புபடுத்தி நோக்குவது அவசியமாகிறது. மேற்கூறிய நால்வகைப் பாவடிபவங்களில் வெண்பா தவிர்ந்த ஏனைய மூன்றும்;; தொன்மையான வாய்மொழிப் பாடல்களில் தோற்றங்கொண்ட இயல்பான வளர்ச்சிகளாகக் கருதப்படுவன. இவற்றில் வெண்பாவானது புலவர்களால் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளப்பட்ட பா வடிவமாகும் என்பதே ஆய்வாளர்களது கருத்தாகும்.1 ஏனைய மூன்றில் ஆசிரியப்பா பண்டைய ‘வெறியாட்டுப் பாடல்களிலிருந்தும் வஞ்சிப்பா, கலிப்பா என்பன முறையே ‘துணங்கை’, ‘குரவை’ ஆகிய கூத்துக்களிற் பயின்ற பாடல்களிலிருந்தும் உருவானவையாகும்.2

இந்நால்வகைப் பாக்களுக்குமுரிய ஓசைகளை யாப்பிலக்கணநூல்கள் எடுத்துப் பேசியுள்ளன. ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகிய நான்கும் ‘அகவல்’, ‘துள்ளல்’, ‘தூங்கல்’, ‘செப்பல்’ ஆகிய ஓசைகளைக் கொண்டவை. கலிப்பாவிற்குரிய ‘துள்ளலோசை’ என்பதற்குப் தொல்காப்பிய, உரைகாரரான பேராசிரியர்,  

“வழக்கியலாற் சொல்லாது முரற்கைப்;படுமாற்றால் துள்ளச் செல்லும் ஓர் ஓசை”3

Last Updated on Sunday, 31 July 2016 20:38 Read more...
 

ஆய்வு: கனடாவில் தமிழ் இலக்கியம்

E-mail Print PDF

- அகில் -

ஈழத்து இலக்கியப் பரம்பலின் முக்கிய வகிபாகமாக விளங்குவது புலம்பெயர் இலக்கியம். அதன் வகை தொகையற்ற பெருக்கம்;; அவற்றை நாடுகள் ரீதியாகப்  பிரித்துப் பார்க்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. புலம்பெயர் இலக்கியத்தின் ஆழ்ந்தகன்ற வெளிப்பாடு மட்டுமன்றி அவற்றின் களம், பேசுபொருள் ஆகியவையும் அவை பற்றிய தனித்தனியான பார்வையின்  அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் கனடா தமிழ் இலக்கியம், அவுஸ்ரேலியா தமிழ் இலக்கியம், நோர்வே தமிழ் இலக்கியம், இங்கிலாந்து தமிழ் இலக்கியம், பிரான்ஸ் தமிழ் இலக்கியம்; என நாடுகளை எல்லையாகக் கொண்டு புலம்பெயர் படைப்பிலக்கியம் வகுக்கப்படுகிறது.

கனடா புலம்பெயர் படைப்பிலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கனடாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களுடன் புதிய இளம் எழுத்தாளர்களும் கைகோர்த்து பெரும் படைப்பிலக்கியத் துறையாக கனடா தமிழ் இலக்கியம் விரிவுகண்டிருக்கிறது. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, நாடகம், கூத்து, திரைப்படம், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து என பல்வேறு வடிவங்களில் படைப்பாளிகள் தமது பங்களிப்பை வழங்கிவருகிறார்கள்.

கனடா தமிழ் இலக்கியம் பற்றிய ஆரம்பக் கட்டுரையாக, என்னால் முடிந்தவரை கனடாவில் படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கின்ற சகலரையும், சகல படைப்புக்களையும் பதிவுசெய்யும் ஒரு முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.

கவிதை:
மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனகவிதை, ஹைக்கூகவிதை எனப் பல பரிணாமங்கள் கண்ட கவிதை வரலாறு புகலிடக் கவிதை என்னும் புதியகவிதைக் களத்தில் சர்வதேசத் தன்மையோடு முற்றிலும் மாறுபட்ட புத்துலகக்கவிதையாய் இன்று நெடிதுயர்ந்து நிற்கிறது. இழப்புக்கள், வேதனைகள், விசும்பல்கள், விரக்தி, பெருமூச்சுக்கள், பொருமல்கள், காணாமல்போதல்கள், அகதிப்பயணம், கடத்தல்கள், எல்லைதாண்டிய பதுங்கல்கள், அந்நியதேசம், புரியாதமொழி, புதுக்கலாச்சாரம், பழக்கப்படாத காலநிலை என்று புலம்பெயர் ஈழத்தமிழனின் வாழ்வின் பல்வேறு அனுபவ அங்கங்களும் அவனுடைய இலக்கியத்தின் கச்சாப்பொருளாகவும் வெளிப்படுகின்றன. கவிதை அதற்கு அனுசரணையான வடிவமாக பெரும்பாலும் கையாளப்பட்டிருக்கிறது. மதுக்கோப்பையில் மிதந்தோடும் மதுவைப் போல புலம்பெயர் படைப்பாளிகளின் கவிதைகளின் உணர்வுகளும் பொங்கிப் பிரவாகிப்பன.

கனடாவின் இலக்கிய, சமய விழாக்களில் பெரிதும் களைகட்டி நிற்பது கவியரங்க நிகழ்வுகள்தான். புலம்பெயர் வாழ்வின் அவதியில் கிடைக்கின்ற சிறுபொழுதுக்குள் கவியரங்கக் கவிதைகள் படைப்பதும் இலகுவாகவே இருக்கிறது. கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர்கள் இணைந்து கவிதை வகுப்புக்கள், கவிதை எழுதுவது எப்படி என்பது தொடர்பான கருத்தரங்குகள் என்பனவும் அவ்வப்போது நடாத்துவார்கள். வானொலி நிகழ்வுகளிலும் கவிதைக்குத் தனியிடம் இருக்கிறது. கனடாவில் வாழும் கவிஞர்களின் தொகையும் அதிகம்தான். அந்தவகையில் கவிஞர் வி.கந்தவனம், தீவகம் வே.இராஜலிங்கம், அனலை ஆறு இராசேந்திரம், சேரன், செழியன், திருமாவளவன், சக்கரவர்த்தி, இரா. சம்பந்தன், இராஜமீரா இராசையா, சபா அருள்சுப்பிரமணியம், மா.சித்திவினாயகம், வீணைமைந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

Last Updated on Friday, 29 July 2016 00:41 Read more...
 

ஆய்வு: பாத்திமுத்து சித்தீக்கின் மல்லிகை மொட்டுகள் சிறுகதை வழி அறியலாகும் சமூக நிலைகள்

E-mail Print PDF

ஆய்வு: பாத்திமுத்து சித்தீக்கின் மல்லிகை மொட்டுகள் சிறுகதை வழி அறியலாகும் சமூக நிலைகள்சமுதாயம்,, சமூகம் - விளக்கம்
சமுதாயம்,, சமூகம் என்ற இரு சொற்களின் பொருள்கள் ஒன்றுபட்டதாக கருதப்பட்டாலும்,, கலைக்களஞ்சியத்தின் மூலம் இவை இரண்டிற்குமுள்ள நுட்பமான வேறுபாட்டைக் காணமுடிகிறது.

“ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொதுவாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கூட்டாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் (ஊழஅஅரnவைல) எனப்படும். இது மக்கள் ஒன்று கூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் ஓரிடத்தில் வாழும் அமைப்பைக் குறிக்கும்.”1 “சமூகம் என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அமைப்பாகும்.”2 தம்மைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றாக இணைந்துள்ள ஒரு மானிடக்குழு சமூகம் எனப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சமுதாயம் என்பதற்கு ‘மக்கள் திரள்’ என்றும் சமூகம் என்பதற்கு ‘திரள்’ என்றும் பொருள் விளக்கம் தந்துள்ளது. இதே பொருளில் சங்க காலத்தில் ‘பைஞ்ஞிலம்’இ ‘மன்பதை’ என்னும் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி,, அமைப்பு,, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.

காதல் திருமணத்தை எதிர்க்கும் சமுதாயம்
இசுலாமியச் சமுதாயம் வேற்று மதத்தினரோடு காதல் திருமணம் செய்வதை விரும்புவதில்லை என்பதை ‘மல்லிகை மொட்டுகள்’ சிறுகதை வாயிலாக சமுதாயத்தின் நிலைப்பாட்டை ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கின்றார்.

“பழிகாரி... மானத்தை வாங்கிட்டாளே…! தலையில் துண்டைப் போட்டுகிட்டு எங்கேயாச்சும் கண்காணாத பிரதேசம் போக வேண்டியதுதான்” நடுஹாலில் பிதற்றிக் கொண்டிருந்தார் அத்தா!”3 என்ற கூற்றும்

“இப்படி வேற்று மதத்துக் காரனோட ஓடிப்போனதோட தன்னைத்தேட வேணாம்னு வேறு எழுதி வச்சிருக்காளே,, மானங்கெட்டவ. குடும்ப கௌரவத்தையே சின்னாபின்னப் படுத்திட்டாளே இந்தக் கோடாலிக் காம்பு… அவ மட்டும் இப்ப எங்கையிலே அகப்பட்டாள்னா கூழாக்கிடுவேன். இந்த ரீதியில் எரிமலையாய் கத்திக் கொண்டிருந்தார் வயதான மாமா.”4 என்ற இக்கூற்றுகளின்; வாயிலாக வேற்று மதத்தினரோடு காதல் திருமணம் செய்வதை இச்சமுதாயம் விரும்புவதில்லை என்பது புலப்படுத்தப்படுகிறது.

குழந்தைகள் இல்லாத வாழ்க்கையும் இறை நம்பிக்கையும்
திருமணமாகி ஓராண்டு ஈராண்டுகளில் குழந்தை பிறந்துவிட வேண்டும். அப்படி பிறக்கவில்லையென்றால் பலரின் பலவாறான பேச்சுக்கு இடமாகிவிடும். வாழ்க்கையே வெறுமை போல் தோன்றும். வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இருக்காது. சில நேரங்களில் அது மிகுந்த மனநோயை உண்டாக்கி உடல் ஆரோக்கியத்திற்கே கேடு விளைவிக்கும் என்பதை பின்வரும் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகிறது.

Last Updated on Tuesday, 26 July 2016 00:17 Read more...
 

ஆய்வு: வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்

E-mail Print PDF

முனைவர் ம. பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – மனித வாழ்வியல் நெறிகளுள் முதன்மையானது அறம். அறமே நிலையற்ற வாழ்க்கையை நிலைபேறுடையதாக மாற்றும் கருவி. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் 11 அறநூல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையாக விளங்கும் சிறப்புடையது திருக்குறள். திருக்குறளைப் பாகுபடுத்திய வள்ளுவப் பெருமான் அறத்துப்பாலை முதலில் வைத்து பொருட்பாலையும் காமத்துப்பாலையும் அதற்கு அடுத்து கூறியிருப்பதிலிருந்து அறத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. அறத்தின் பல்வேறு வடிவாக்க நிலைகளை ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

செல்வம்
‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது நிதர்சனமான உண்மை. மனித சமூகம் உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு செல்வம் இன்றியமையாதது. இதனைத் ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ (தொல்காப்பியம்) என்ற முன்னோரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. செல்வம் உடைய மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் கிட்டும். இவ்விரண்டினையும் அறத்தினால் மட்டுமே அடைய முடியும் என்பதை

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.1

என்னும் குறள் தெளிவுப்படுத்துகின்றது.

‘அறம் செய விரும்பு’ என்னும் ஒளவையாரின் ஆத்திச்சூடி இதனை வழிமொழிகின்றது. மேலும்,
அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்றுப் பேணாரைத் தெறுதலும்2

Last Updated on Sunday, 24 July 2016 20:52 Read more...
 

ஆய்வு: இலக்கியம்: புதுக்கவிதையில் அங்கதம்

E-mail Print PDF

ஆய்வு: இலக்கியம்: புதுக்கவிதையில் அங்கதம்முன்னுரை:
தமிழ்க்கவிதை வரலாற்றில் சங்கக் கவிதைகளுக்குப் பிறகு புதுக் கவிதைகளில்தான் உணர்வுகளை முன்னிறுத்தி சமூகத்தை வெளிக்காட்டும் முயற்சி அழுத்தமாக இடம்பெறுகிறது எனலாம். புதுக்கவிதைகள் இன்றைய மனித மனத்தைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி. மீராவின் “ஊசிகள்” கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள அங்கதம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

புதுக்கவிதையில் அங்கதம்:

அங்கதம்
தொல்காப்பியத்தில் அங்கதம்
அங்கதத்தின் தன்மை
அரசியல் அங்கதம்
சமுதாய அங்கதம்
தனி மனித அங்கதம்

என்ற பகுப்புகளின் கீழ் இக்கட்டுரையில் அங்கதம் குறித்த கருத்துக்களைக் காண்போம்.

அங்கதம் (Satire))
அங்கதம் என்பது ஒருவகை கேலியாகும். இது தீங்கையும், அறிவின்மையையும் கண்டணம் செய்வதாக அமையும். சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக் கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது. தமிழ்ப்புதுக்கவிதை தனியொரு இலக்கிய வகையாக நிலைபெற்றமைக்குப் படிமம், குறியீடு, அங்கதம் போன்ற இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி கருத்துச் செறிவும், கற்பனைச் செழுமையும் கூட்டிய கவிஞர்களின் முயற்சிகளே காரணமாகும். அங்கதம் சமுதாய உணர்வுடை கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டு புதுக்கவிதையைப் பொருட் சிறப்புடைய தாக்கியது என்பார் டாக்டர் சி.இ.மறைமலை.

Last Updated on Saturday, 09 July 2016 22:48 Read more...
 

ஆய்வு: பெண்ணியக் கவிஞர்களின் ‘பாலியப்பெண்ணியம்’

E-mail Print PDF

 - முனைவர் மா. பத்ம பிரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண்விடுதலைக்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் - பெண் அந்தரங்கம் பாடுபொருளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தந்தை வழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிளைந்துள்ளனர்.

பாலியப்2பெண்ணியம்
‘பாலியப்பெண்ணியம்’ என்பது பெண்; நுகர் பொருளாதலை விமர்சிப்பது ஆகும். மேலும் இப்பெண்ணியவாதிகள் பின்வரும் கூறுகளில் பாலியப் பெண்ணிய இலக்கியம் படைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெண் உடல் பற்றி பெண் நோக்கில் எழுதுவது  (Writing on the female body) என்பார் கேட்டிகான்ப்ரை (Katie  Conbry))
எழுத்து வரம்புகளைத் தகர்த்தெறிதல் (Breaking the bounds of writing) என்பார் டிம்பிள்காடிவாலா (dimple Godiwala)
இலக்கியப் பழமைச் சட்டவேலி எல்லையைக் கடந்து பயணித்தல் என்பார் சிரிஸ்வீடன் (Chrisweedon)
தனக்கான புதுவெளியைத் தோற்றுவித்துக் கொள்ளுதல் என்பார் எமிலிகே.பாரடைஸ் (Emily K. Paradise)

ஒரு படைப்பில் இத்தகு பண்புகள் இடம் பெற்றால் அது பாலியப் பெண்ணிய இலக்கியமாக (Sexist Feminist Literature) ஆகிறது. இத்தகைய கொள்கைகளை உள்வாங்கியது தான் குட்டிரேவதி, சுகிர்தாராணி, சல்மா, மாலதி மைத்ரி, லீனாமணிமேகலை போன்றோர் எழுதிய பாலுறவுக் கவிதைகள் ஆகும்.

உடல்அரசியல் போராட்டம்
உடலே ஆயுதம் எனும் கருதுகோளின் படி பெண் மொழி அவள் உடலில் இருந்து தொடங்குகின்றது. தந்தையின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட தன் உடல் இன்பத்தை மீட்டெடுப்பதற்கு புதுமொழி தேவையானது. இதனைத்தான் ‘உடற் கூற்றுப் பெண்ணியத்திறனாய்வு’ என்பர். இத்திறனாய்வு பெண் உடலை எழுத்தின் மூலமாகக் காண்கிறது. இதனையே உடல் மொழி என்பர். பிரெஞ்சு பெண்ணியவாதிகள் உடல் மொழி என்பதற்கு 'எக்ரிடியூர் பெமினைன்' (நுஉவசவைரசந குநஅiniநெ)  எனும் தொடரைப் பயன்படுத்துவர். இத்தொடருக்கு ' உடலை எழுதுவது ' என்பது பொருள். ஷொவால்டர் இதனை " மொழியிலும் நூலிலும் பெண் உடலையும் பெண்ணின் வேறுபாட்டையும் பொறிப்;பது "  என்று விளக்குவார்.  முன்னைய மரபுகள்  பெண்களின் பாலியல் அனுபவத்தை மொழியில் அனுமதிக்கவில்லை. இன்றோ இந்நிலை பெண்ணியவாதிகளால் மாறியுள்ளது.

Last Updated on Tuesday, 21 June 2016 06:06 Read more...
 

ஆய்வு: சிவசம்புப்புலவர் - கால ஆராய்ச்சி

E-mail Print PDF

ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான சிவசம்புப் புலவர் காலம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. புலவரது நூல்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து, அச்சாகி வெளிவந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எழுத்துக்களில் புலவரது காலம் பற்றிய பல்வேறுபட்ட கணிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. புலவரின் செய்யுட்களை அவர் வாழ்ந்த காலப்பின்புலத்தில் வைத்து ஆராய்வதற்கு அவரது காலம் பற்றிய சரியான கணிப்பு அவசியமாகும். இத்தேவை கருதியே புலவரின் காலம் தொடர்பாக இச்சிறுகட்டுரை ஆராய முனைகிறது.

சிவசம்புப் புலவரின் காலம்பற்றிய சிக்கல் தொடர்பாக 1981 ஆம் ஆண்டு, பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட இளங்கதிரில், வெளியாகிய பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் “உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்” என்னும் கட்டுரையில் வரும் பின்வரும் பகுதி இங்கு நோக்கத்தக்கது.

“உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் தமிழ்ப் பணியை மதிப்பிட முன்பு அவர் வாழ்ந்த காலத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்ககாலம் வரையில் வாழ்ந்த சிவசம்புப் புலவரின் காலமும் சுலபமாக அறிந்து கொள்ளமுடியாமல், வரையறுத்து அறியவேண்டிய சிக்கலை உடையதா எனச் சிலர் கேட்கலாம். ஆங்காங்கு காணப்படும் வெகுசில மைல்கற்கள்தவிர கால ஆராய்ச்சி பிரச்சனைக்குரியதாகவே காணப்படுகின்றது. சிவசம்புப் புலவர் காலம் பற்றி இத்தகைய பிரச்சினை தோன்றுகிறது." 1

Last Updated on Friday, 17 June 2016 22:16 Read more...
 

ஆய்வு: சமூகமாற்றமும் சாதீயத்தேய்வும் - புதியசுவடுகளை முன்வைத்துச் சில குறிப்புகள்

E-mail Print PDF

தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள்சின்னராசா குருபரநாத்“தமிழில் மாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு சுவை பொருந்தியதாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தமிழுக்குப் புதிய உரைநடை நவீனமான நாவலெனும் இலக்கிய வடிவம் வேதநாயகம்பிள்ளையினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதிலிருந்து. நாவல் எனும் இலக்கிய வடிவம் பல்வேறு வளர்ச்சிக்கு உட்பட்டு இந்நூற்றாண்டிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகவும் மிளிர்கின்றது.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பாரிய இலக்கியப் புரட்சியின் விளைவாக பல புதிய இலக்கிய வடிவங்கள் தமிழுக்குள் அறிமுகமாயின. இவ் இலக்கிய வடிவங்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் வெவ்வேறு பொருள் நிலைகளில் வெளிப்படுத்தின. இவ் இலக்கிய வடிவங்களுள் நாவலும் சிறுகதையும் தனிமனித உணர்வுப் பிரச்சினைகளை மிகச் சிறப்பாக, உணர்ச்சிப் பூர்வமாக புதியதோர் தளத்தில் வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக ஈழத்தில் தோற்றம் பெற்ற நாவல்கள் ஈழத்திற்கே உரித்தான அரசியல், பொருளாதார, சமுதாய, சமயப் பிரச்சினைகளை கருவூலமாகக் கொண்டு தோற்றம் பெற்றன. தமிழகச் செல்வாக்கும், மேலைத்தேய பிரக்ஞையும், படித்த மத்தியத்தர வர்க்கத்தின் தோற்றமும் ஈழத்தில் சிறந்த நாவல் இலக்கியத் தோற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்தன. குறிப்பாக ஈழத்தில் 1950, 60 களில் ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இலக்கிய இயக்கங்களின் தோற்றங்களும் 1970களில் சிறந்த சமுதாயச் சிந்தை கொண்ட நாவல்கள் தோற்றம் பெறுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.

ஈழத்து நாவல் இலக்கியப் பரப்பில் 1960, 1970 காலப்பகுதியில் சிறந்த பொற்காலம் என்நு கூறலாம். இக்காலப் பகுதியில் நாவல் பல்வேறு நோக்கங் கருதி பல்வேறுபட்ட சமுதாய பார்வையோடு சமூக பிரக்ஞையோடு படைக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் செ. கணேசலிங்கன், கே. டேனியல்,தி. ஞானசேகரன் போன்றோர் பல்;வேறு சிந்தை கொண்ட ஈழத்து சமுதாயப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நாவல்களை வேறுபட்ட நிலைகளில் நின்று வெளிப்படுத்தி இருந்தனர். அந்தவகையில், தி. ஞானசேகரன் குறிப்பிடத்தக்க இடத்தினை பெற்றவராக விளங்குகின்றார்.

Last Updated on Monday, 13 June 2016 06:08 Read more...
 

ஆய்வு: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலை!

E-mail Print PDF

நூல் அறிமுகம்: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலைதே.கஜீபன்முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.

இந்நாவலின் கதைச்சுருக்கத்தை நோக்கின் கதிராமனும் கற்பகமும் திருமணம் செய்து கொள்கின்றனர். கதிராமனது அண்ணி அனைத்து பாத்திரங்களுக்கும் எதிர்ப்பாத்திரமாகக் காணப்படுவதோடு கற்பகத்தை வீட்டைவிட்டு துரத்த தன் கணவனுடன் இணைத்து சந்தேகப்பட்டம் கட்டுகிறாள். அதனை யாருக்கும் வெளிப்படுத்தாது கணவன் கதிராமனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய கற்பகம் சிறிதுகாலம் தன் தாய் தந்தையருடன் இருந்துவிட்டு தனிக்குடித்தனம்  போகிறார்கள். கதிராமனின் தந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் அக்குடும்பத்தினர் பெரும் வறுமைக்கு உட்படுகின்றனர். சீதனம் மூலமாக கதிராமனுக்கு கிடைத்த கமுகஞ்சோலை நல்ல விளைச்சலைக் கொடுத்ததால் குடும்பம் செழிப்பாகவே இருந்தது. தனது மாமா, மாமியின் நிலையினைக் கேள்வியுற்ற கற்பகம் வண்டி நிறையப் பொருட்களோடு அவர்களுக்கு உதவுவதற்காகச் செல்கிறாள். மறைந்து போன சந்தோசம் மீண்டும் அக்குடும்பத்தினரிடம் துளிர்விடுகின்றது.

இதற்கிடையில் கற்பகத்தின் திருமணத்திற்கு முன்னரான காலப்பகுதியில் செந்தில் என்பவனிடம் அவள் காதல் வயப்படுகின்றாள். ஆனால் அவன் ஆசை வார்த்தைகளைக் கூறி பல பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவன். அவனது குழந்தை கமலத்தின் வயிற்றில் வளர்வதை அறிந்த கற்பகம் தன்னை காத்துக் கொண்டதோடு அவனை அவமதித்தாள். இவ் அவமானத்திற்கு பழிதீர்க்க எண்ணிய செந்தில் கற்பகத்தை கடத்துவதற்கும், திருமணத்தை குழப்புவதற்கும் போட்ட சூழ்ச்சிகள் எவையும் நிறைவேறாமல் போகவே நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சிரமமாக இருப்பதோடு ஆங்கிலேயர்களுக்கு அதன் மூலம் எந்த வருமானமும் இல்லை எனவும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கதிராமனின் கமுகஞ்சோலையை அழிப்பதற்கான சூழ்ச்சியை மேற்கொள்கின்றான். அதிகாரியின் கட்டளை கிடைத்தததும் கமுகஞ்சோலை அழிக்கப்படுகின்றது. மக்கள் எவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டும் அவர்களது முயற்சி பயனின்றியே போனது. ஆனால் செந்தில் ஒரு பைத்தியக்காரியின் கத்தி குத்திற்கு இலக்காகி உயிரை விடுகின்றான். அவள்தான் இவனால் ஏமாற்றப்பட்ட கமலம். கதிராமன் பழுத்த பாக்குகளை அள்ளிக்கொண்டு ஏதோ ஒரு காலத்தில் அவற்றை பயிரிடப்போவதாக கூறிக்கொண்டு செல்கின்றான். இவ்வாறாக இந்நாவலின் கதை அமைந்து விடுகின்றது.

Last Updated on Monday, 13 June 2016 21:42 Read more...
 

ஆய்வு: சிலம்பில் சங்க இலக்கியச் சுவடுகளும் சுவடுமாற்றங்களும்!

E-mail Print PDF

பொன்னிமனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) நோக்கி வளா்ந்த ஒரு வளா்ச்சிக் கட்டத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவா்.இச்சங்க கால வாழ்க்கை முறைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் பதிவுகள் சில இடங்களில் அவ்வாறேயும் சில இடங்களில் மாற்றம் பெற்றும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருமணநிகழ்வு
திருமணம் என்பதனை “திருமணம் என்பது சமூகத்திலுள்ள ஒரு வகை வழக்கமாகும். இது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்- பெண் உறவுநிலையைக் குறிக்கிறது” என்பா். (முனைவா் கே.பி.அழகம்மை சமூக நோக்கில் சங்க மகளிர் ப-44 )

“திருமணம் இரண்டு தனிப்பட்டவா்களுக்கிடையே நடைபெறும் உடன்படிக்கையன்று.இரண்டு குழுக்களிடையே இணைப்பை நெருக்கத்தை ஏற்படுத்தும் உறவுத்தளை நியதி ” ( சசிவல்லி தமிழா் திருமணம் ப- 8 ) என்று குறிப்பிடுவா். சங்க இலக்கியங்கள் களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையினையே பெரிதும் பதிவு செயதுள்ளன.இருப்பினும் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் பெண் கேட்டு நிச்சயிக்கும் முறையும் வழக்கில் இருந்தமையைக் காணமுடிகிறது.

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே ( தொல்.கற் – 1 )

என்று தொல்காப்பியரும் இதனை விளக்குவார்.

அம்மவாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணா்ப்போ ரிருந்தனா் கொல்லோ
தண்டுடைக் கையா் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்னு மாக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே ( குறு – 146 )


என்ற பாடல் பெரியவா்கள் கூடிப் பேசி திருமணம் செய்யும் முறையினைப் புலப்படுத்துகின்றது எனலாம்.

Last Updated on Monday, 06 June 2016 20:46 Read more...
 

ஆய்வு: இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் நெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. சங்க காலத்தில் போட்டி, பூசல், மது அருந்துதல் ஆகிய நிலைபாடுகளை ஒழிப்பதற்காக சங்க மருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இனியவை நாற்பதில் இடம்பெறும் மனித வாழ்க்கைக்கு உகந்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் இனியவை நாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன, திருமால், பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் ஆவார். இந்நூல் நான்கு இனிய பொருட்களை எடுத்துக்கூறும் பாடல்கள் நான்கு மட்டுமே (ஒன்று, மூன்று, நான்கு, ஐந்து ) எஞ்சியவை மும்மூன்று இனிய பொருட்களையே சுட்டியுள்ளன. கடவுள் வாழ்த்து உட்பட நாற்பத்தொரு பாடல்களை கொண்டுள்ளன. மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களை தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

Last Updated on Monday, 06 June 2016 19:42 Read more...
 

ஆய்வு: சங்ககால அரசாதிக்கமும் காவல்மர அழிப்பும்

E-mail Print PDF

- பா.சிவக்குமார்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -காவல்மரம் அல்லது கடிமரம் என்பது பண்டைய தமிழர்களின் குலமரபுச் சின்னம். கடி (காவல்) உடைய மரமாதலால் அதனைக் ‘கடிமரம்’ என்றழைத்துள்ளனர். முதன்முதலாகப் பூமியில் மரம் முப்பத்தியெட்டு (38) கோடி ஆண்டுகளுக்கு முன் டெவோனியன் காலக்கட்டத்தில் (Devonian Period) பாலியோஜிக் ஊழிக் காலத்தில் (Paleozicera) தோன்றியது என அறிவியல் விளம்புகிறது. ஆனால், குலமரபுச் சின்னமாகக் காவல்மரம் எப்பொழுது தோற்றம் பெற்றது ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனியே காவல்மரம் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது என்பது குறித்து அறியமுடியாத அளவிற்குப் பழமைமிக்க ஒன்றாக இக்காவல்மரம் பழந்தமிழரிடையே இருந்துள்ளது. காவல்மரமாகக் கடம்பு, வேம்பு, மா, வாகை, புன்னை போன்றவற்றைச் சங்கத் தமிழர் கொண்டிருந்தனர். தற்காலத்தில் மாநில, தேசிய மரங்கள் (தமிழ்நாடு - பனைமரம், இந்தியா - ஆலமரம்) என்பது சங்ககாலத்தின் எச்சமாகக் கொள்ளப்படுகிறது.

காவல்மரம் என்பது ஒரே ஒரு மரத்தை மட்டும் குறிப்பதாகப் பல பாடல்களில் பதிவுகள் இருக்கச் சோலைகளில் பல மரங்கள் காவல்மரங்களாகப் போற்றப்பட்டுள்ளமையை,

“…………………காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்”            (புறம்.36:8-9)

என்னும் புறப்பாடல் வெளிப்படுத்துகின்றது. எனவே, ஓரினத்தைச் சேர்ந்த பல மரங்களைச் சோலைகளில் காவல்மரங்களாகப் போற்றியிருக்க வேண்டும். அல்லது, பலஇனத்தைச் சேர்ந்த மரங்கள் காவல் மரங்களாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். சேர அரச மரபானது பல குடிகளைக் கொண்டிருந்தது. இதனைச் சேரர்கள், “உதியன், கடுங்கோ, குடக்கோ, குட்டுவன், கோதை, சேரலன், சேரல், சேரமான், பூழியர் முதலிய குடிப்பெயர்களைக் கொண்டிருந்தனர்” என்று               ஆ. தனஞ்செயன் குறிப்பிடுவார். எனவே, ஒவ்வொரு குடிக்கும் உரிய காவல்மரங்களையும் ஒரே சோலையில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என அவதானிக்கலாம். சங்ககாலத்தில் காவல்மரம் குறித்த மக்களின் நம்பிக்கையும் அரசாதிக்கத்தின் பொருட்டு அக்காவல் மரம் அழிக்கப்பட்டமை குறித்தும் இக்கட்டுரை ஆய்கிறது.

காவல்மரமும் மக்களின் நம்பிக்கையும்
காவல்மரத்தினைச் சங்ககால மக்கள் அவர்களின் குலக்குறியாகப் போற்றியுள்ளனர். ஒரு இனக்குழு தம் மூதாதையருடன் உறவு வைத்துக் கொள்ளும் அஃறிணை யாவும் குலக்குறியாகக் கருதப்படும். “குலக்குறியியல் பற்றி விளக்கம் அளிப்போர், ‘தாவரங்கள்,விலங்குகள், சடப்பொருட்கள் ஆகியவற்றோடு தனிமனிதரோ ஒரு வர்க்கத்தினரோ கொண்டிருக்கும் குறியீட்டுத் தொடர்பினைக் குறிக்கும் சொல்தான் குலக்குறியியல்’ என்றும், ‘உறவுமுறையின் அடிப்படையில் கூட்டம் கூட்டமாக வாழும் மக்களுக்கும், தாவர வகைகள், விலங்கினங்கள், இயற்கை பொருட்கள் போன்றவற்றிற்கும் இடையில் ஒருவகைப் புதிரான தொடர்பு நிலவுகிறது என்பது பற்றிய நம்பிக்கையே குலக்குறியியல்’ என்றும் விளக்குவர் (ஆ. தனஞ்செயன்,1996:2)” இத்தகைய குலக்குறியாகக் காவல்மரம் விளங்கியுள்ளது. எனவேதான், அம்மரங்களை வீரர்கள் இரவு, பகல் என்று இருவேளைகளிலும் காவல் காத்துள்ளனர்.

Last Updated on Monday, 23 May 2016 23:33 Read more...
 

ஆய்வு: ஏலாதி உணர்த்தும் ஈகை

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
சங்க மருவிய கால இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.அடிநிமிர்பு இல்லாச் செய்யுட் தொகுதியால் அறம்,பொருள்,இன்பத்தைப் பாடுவது கீழ்க்கணக்கு என்று பன்னிருபாட்டியல் இலக்கணம் பகர்கிறது.பதினெட்டு நூல்கள் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் ஆனவை.அறநூல் பதினொன்றில் ஒன்றாக ஏலாதி என்ற நூல் விளங்குகிறது. மருந்தால் பெயர் பெற்ற நூல் ஆகும்.ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம், நாககேசரம்) சுக்கு,  மிளகு, திப்பிலி என்ற ஆறும் ஏலாதி எனப்படும்.மொத்தம் 80 பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் ஆவார்.இந்நூலில் இடம்பெறும் ஈகை செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஈகை என்பதன் பொருள்
தமிழ் - தமிழ்  அகர முதலி ஈகை என்பதற்கு கொடை,பொன்,இண்டு,புலி தொடக்கி,காடை,காற்று,கற்பக மரம்,இல்லாமை,ஈதல்,கொடுத்தல் என்று பல்வேறு விளக்கமளிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி ஈகை என்பதற்கு கொடை,பொன்,கற்பகம்,ஈங்கை,காடை என்று பல்வேறு பொருள் தருகிறது.

ஈகையே அழகு
ஈகை என்ற இயல்பு உயர்குடியில் பிறந்த நான்கு வேதங்களிலும் வழிநடப்பவர்களுக்கு எக்காலத்திலும் அழகைத் தரக்கூடியதாகும்.இதனை,

…………………………வள்ளன்மை – என்றும்
அளிவந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு   (ஏலம்.1)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.மேலும் மற்றொரு (ஏலம்.3)பாடலில் ஈகை செய்தல் அரிது என்று  (தானம் அரிது)  எடுத்துரைக்கிறது.

Last Updated on Monday, 23 May 2016 23:27 Read more...
 

ஆய்வு: அற இலக்கியங்களில் - தாய்மை

E-mail Print PDF

ஆய்வு: அற இலக்கியங்களில் - தாய்மை

முன்னுரை
தமிழ்மொழி மிக பழமைவாய்ந்த மொழியாகும். திராவிட மொழிகளில் தலைமையானது தமிழ்மொழி. தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் யாவும் அந்தந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தமிழில் முதன்மை இலக்கியமாக கருதப்படும் சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் இரண்டு கண்களாக கொண்டு இயற்றப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட சங்க மருவிய இலக்கியங்கள் அறகருத்துகளை கூறும் நோக்கில் இற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் மனிதனை அறநெறியில் வாழ வலிவகுக்கிறது. இவை பதினெட்டு நூல்களை கொண்டவை. அவற்றுள்  அறநூல்கள் பதினொன்றும் அக நூல்கள் ஆறும் புறநூல் ஒன்றும் அமைந்துள்ளன. அறநூல்களில் காணப்படும் தாய்மை குறித்த செய்திகளை ஆராய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க மருவிய இலக்கியத்தில் அற நூல்கள்
திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, சிறுபஞ்சமூலம், நான்மணிக்கடிகை, திரிகடும், ஏலாதி, ஆசாரக்கோவை என்ற பதினொறு நூல்களும் அறநூல்கள் எனப்படுகின்றன.

தாய்மை – விளக்கம்
தாய்மை என்பதற்கு, செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி, ‘அருகுபோல் தழைத்து ஆல்போல் வேரூன்றி, பல்கிப் பெருகி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாயுள்ள, முதல்நிதி’1 (396) என்று பொருள் தருகிறது. தாய் என்ற சொல்லுக்கு ‘முதன்மை’ என்று பொருள் தருகிறது கௌரா தமிழ் அகராதி’2 (410). தமிழ் அகராதி அண்ணன்றேவி, ‘அரசன்றேவி, ஊட்டுந்தாய், குருவிறேவி, கைத்தாய், செவிலித்தாய், தன்றேவயையின்றாள், நற்றாய், பாராட்டுந்தாய், மாதாவின் சகோதரி, முதல் முதற்றாம் முதன்மை’3 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.
மெய்யப்பன் தமிழ் அகராதி ‘குழந்தைபெறும் நிலை, கருப்பம்’4 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.

தாய்மையின் சிறப்பு
மனித வாழ்வு உறவுகளால் சூழப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. இவற்றில் எல்லா உறவுகளும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இருப்பினும் தாயின் உறவு தனிச் சிறப்பு வாய்ந்தவை. அதனை அற இலக்கியம் பதிவுச் செய்துள்ளது.

Last Updated on Saturday, 14 May 2016 17:50 Read more...
 

ஆய்வு: பின் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைக் கதையாடல்

E-mail Print PDF

ஆய்வு: பின் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைக் கதையாடல்

இலக்கிய பரிணாம வளர்ச்சியின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக விளிம்புநிலைக் கதையாடல்கள் அமைகின்றன. விளிம்புநிலை குறித்த கருத்தாடல்கள் வரலாறுகளில் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்த சூழலில், அவற்றை தைரியமாக வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்திய பெருமை புனைவுலகையே சாரும். இருப்பினும் விளிம்புநிலை குறித்த பதிவுகள் ஆரம்பத்தில் போதுமான அளவு இலக்கிய கவனிப்பைப் பெறவில்லை. ஆனால் இந்நூற்றாண்டில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் தனிக்கவனம் பெறுவது இலக்கிய பரிணாமத்தில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதற்கு முன்னும் விளிம்புநிலைக் கதையாடல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றாலும் அதன் பலம் மற்றும் பலவீனத்துடன் நோக்கும் பார்வை புதிய நூற்றாண்டைச் சார்ந்தது. குறிப்பாக விளிம்புநிலை மக்கள் வாழ்வு பின் நவீனத்துவ காலகட்டத்தில்தான் அதற்கே உரிய தன்மையில் யதார்த்தமாக தன்னை இனங்காட்டியுள்ளது.

பின் நவீனத்துவத்தின் கட்டவிழ்ப்பு
பின் நவீனத்துவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிறப்பு என்பது, 1966ல் ழாக் தெரிதா ‘கட்டவிழ்ப்பு’ சிந்தனையை முன்வைத்த போதுதான் தோன்றியது எனலாம். அந்த வகையில் பின் நவீனத்துவம் என்பது இந்த நிமிடம் வரை முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளையும், தத்துவங்களையும், கட்டுப்பாடுகளையும் மறுவிசாரணை செய்ய வந்த கலாச்சார இயக்கமாகக் கொள்ளலாம்.

பின் நவீனத்துவ காலகட்டத்தில் விளிம்புநிலை மக்கள் தனிக்கவனம் பெறுவதற்கு முக்கியமான ஒன்றாக தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாட்டைக் குறிப்பிட இயலும். கட்டவிழ்ப்பு என்பது எந்த ஒரு பொருளும் காலத்திற்கேற்றாற்போல் தன்னுடைய கருத்தியல்களில் மாற்றங்களை ஏற்று வாங்குவதாக உள்ளது. அத்தகைய மாற்றங்களின் விளைவாக அப்பொருளில் தோன்றும் புதுபுது அர்த்த தளங்களைத் தேடிக் கண்டடைதலே கட்டவிழ்ப்பு எனலாம். இது பற்றிக் கூறும் போது,

”கட்டுமானம் பெற்ற அமைப்பு, கட்டுமான அமைப்புகளிலிருந்து திமிறி – முரண்பட்டு – தனது எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள முயலுகிறதாகக் கருத்திற் கொண்டு, கட்டுமானத்தை அவிழ்த்து உள்ளும் புறமும் ஒளிதேடுகிற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கட்டவிழ்ப்பு என்பர்”  (திறனாய்வுக்கலை, ப.146)

என்று ஜேக்கு டெர்ரிடா ஒரு கொள்கையாக முன்மொழிகிறார். அதாவது மையத்தில் இருக்க விரும்பும் ஒரு சக்தி இன்னொரு சக்தியை விளிம்பு நிலைக்குத் தள்ளி விடுகிறது. இதனால் இரட்டை எதிர்நிலைகள் உருவாகின்றன. இவ்வுருவாக்கம் இதோடு நின்றுவிடாமல் மீண்டும் நிகழ ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் ஒரு பொருளைப் பற்றிய நமது பார்வை நிச்சயமின்மை கொண்டதாக இருக்கின்றது. இந்த நிச்சயமின்மை கோட்பாட்டைத்தான் தெரிதா, தனதுக் கட்டவிழ்ப்பு செயல்பாட்டின் மூலம் நிறுவுகின்றார்.

Last Updated on Saturday, 14 May 2016 17:46 Read more...
 

ஆய்வு: தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

E-mail Print PDF

ஆய்வு: தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

இலக்கண இலக்கியங்களுக்கு உரை என்பது காலத்தின் தேவை. அவை வாசிப்புத் தளத்தை விரிவாக்குவதோடல்லாமல், ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்றாற் போல் அவற்றை நகர்த்தவும் செய்கின்றன. ஆகவேதான் தி.சு. நடராசன்அவர்கள், “அவை ஒன்றில்லாது இன்னொன்று இயங்கா” (உரையும் உரையாசிரியர்களும்) என்னும் தன்மையில் உரைகளின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கின்றார். தமிழ் இலக்கண, இலக்கிய மரபில் ஒரு காலகட்டம் வரை உரையின்றி சூத்திரத்தாலேயே பொருள் விளக்கம் பெறும் நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. இதனை,  ”உரையின்றி சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டு” (தொல். மரபியல், உரைவளம், ப.154) என்று பேராசிரியர் மரபியலுக்குக் கூறும் உரை வாயிலாக அறிய இயலுகின்றது. ஆனால் கால இடைவெளி அச்செயல்பாடு தொடர்ந்து நிகழ்வதற்குத் துணை நிற்கவில்லை. ஆகவே பழைய இலக்கண, இலக்கியங்கள் குறிப்பாக 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லை என்றே கூறலாம். இதன் காரணமாக 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்த ஆசிரியர்கள் பழைய இலக்கண இலக்கியங்களுக்கு உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆகவே இக்கால கட்டத்தில் மிகுதியான உரை நூல்கள் தோன்றலாயின. ஆயினும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலத்தை “உரையாசிரியர்களின் காலம்” என ஆய்வாளர்களால் அடையாளப்படுத்துவது நோக்கத்தக்கது. காரணம் ஆரம்பத்தில் அரும்பத உரை என்ற தன்மையில் தோன்றிய உரையின் செல்வாக்கு, பின் குறிப்புரை, விளக்கவுரை என்ற தன்மையில் வளர்ச்சி பெற்று வளர்ந்த வரலாற்றை நமக்குக் கிடைத்த உரைகளின் வரலாறுகள்  தெளிவுபடுத்துகின்றன. அத்தகைய வளர்ச்சியின் உச்சகட்ட நிலையினையே ”உரையாசிரியர்களின் காலம்” என அடையாளப்படுத்தப்படுகிறது.

நமக்கு இன்று கிடைக்கின்ற தொன்மையான இலக்கணப் பிரதி தொல்காப்பியம். இது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரபுக் கூறுகளை உள்ளடக்கிய ஒன்று. ஆயினும் அது பல்வேறு வளர்ச்சிக் கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக நம்மிடையே உலவி வர முக்கிய காரணமாக இருப்பது எது? ஒன்று பல்வேறு கருத்துப் புலப்பாட்டு முறைக்கு இடம் தரும் அதன் விரிந்த தன்மையும், மற்றொன்று கோட்பாட்டடிப்படையிலான கல்வி வளர்ச்சிக்கு இடம் தரும் அதன் புத்தாக்கத் தன்மையுமேயாகும். இந்த அடிப்படையில் அதற்கு எழுதப்பட்ட உரைகள் பற்றி குறிப்பிடும் போது, ”தொல்காப்பியருக்குப் பின் மொழி வளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை பிற்காலத்தவருக்குத் தொல்காப்பிய நூற்பாக்களுக்குப் பொருள் அறிவதில் இடர்பாட்டை உண்டாக்கின. இந்த இடர்பாட்டினைக் களையும் வகையில் தொல்காப்பிய நூற்பாக்களின் பொருளைத் தெளிவுபடுத்தும் முறையிலும், அதனுள் கூறப்படும் இலக்கணக் கூறுகளை இலக்கிய, வழக்கு மேற்கோளைக் கொண்டு விளக்கும் நோக்கிலும் உரைகள் எழுந்தன”(தொல்காப்பிய ஆய்வின் வரலாறு,ப.3) என்று கோ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் அதன் நோக்கத்தையும், காரணத்தையும் தெளிவுபடுத்துகின்றார்.

Last Updated on Thursday, 12 May 2016 20:54 Read more...
 

ஆய்வு: சங்க காலப்போரில் கழுதை உழவும் பின்புலமும்

E-mail Print PDF

- பா.சிவக்குமார்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -சங்ககாலப் போரில் நீர் நிலைகளை அழித்தல், வயல்வெளிகள் மற்றும் ஊரை நெருப்பிட்டு அழித்தல், காவல்மரங்களை அழித்தல், அரண்களை அழித்தல், வழித்தடங்களை அழித்தல், ஊர்மன்றங்களை அழித்தல், விளை நிலங்களைக் கொள்ளையிடுதல், பகையரசரின் உரிமை மகளிரின் கூந்தலை மழித்தல் மற்றும் கவர்ந்து வருதல் போன்ற செயல்களில் சங்ககால அரசர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற அரசன் பகையரசரின் நாட்டில் உள்ள வயல்கள், ஊர்மன்றம், வழித்தடங்களில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளனர். இக்கழுதை உழவு, வன்புலப் பயிர்களின் விதைப்பு   மற்றும் அதன் பின்புலம் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கழுதை உழவும் வன்புலப் பயிர்களின் விதைப்பும்
தன் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்துத் திறை செலுத்தாத பகைவர் புலத்தை அழித்து அவர்களின் நிலத்தில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளதை,

“……………………………………….கொடாஅ
உருகெழு மன்ன  ராரெயில் கடந்து
நிணம்படு குருதி பெரும்பாட்டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்           (புறம்.392: 5-8)1
என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது.

பல்யானை செல்கெழு குட்டுவனின் அரசாதிக்கத்தால் அவனின் காலாட்படைகள் ஊர் மன்றங்களை அழித்தும் கழுதை ஏர்பூட்டியும் பாழ்செய்யப்பட்டுள்ளதை,“நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி” (ப.ப.25:4)  என்ற பாடலடி மூலம் அறியமுடிகின்றது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைப் பகைத்துக் கொண்ட மன்னர்களின் நாட்டிலுள்ள தேரோடும் வீதிகளை அழித்துக் கீழ்த்தன்மை விலங்கெனக் கருதப்பட்ட கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கும் வன்செயலில் ஈடுபட்டுள்ளமையை,

Last Updated on Saturday, 07 May 2016 20:46 Read more...
 

ஆய்வு: வள்ளுவர் உணர்த்தும் கள் உண்ணாமை

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமா பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் கள்குடிப்பதால் அதாவது மதுஅருந்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கள் உண்ணாமை
கள் உண்ணாமை என்ற அதிகாரம் திருக்குறளில் 93 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.ஒழுக்கமும்,உணர்வும் அழித்தற்கண் பரத்தையர் உறவுடன் ஒத்த தீங்கினை உடையது.இப்பழக்கம்,சங்ககாலத் தமிழரிடம் மிகுதியாகப் பரவியிருந்தது.சங்க காலத்தை அடுத்துத் தமிழ் அரசரும்,மக்களும் பகைவரிடம் தோற்றுப் போனமைக்கு இப்பழக்கம் ஒரு பெரும் காரணம் ஆகும்.ஏனெனில்,மது குடிக்கும் பழக்கம் உடையவர், தம் அறிவை இழந்து விடுவர்.உடல் நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.உள்ள நலமும் கெடுகிறது.அவர்,வைத்திருக்கும் பொருள் நலனும் கெடுகிறது. அனைத்தும் கெடுவதால் அவரை நம்பி இருக்கும் குடும்பமும் கெடுகிறது.இதனைச் சமூக மேதையாகிய திருவள்ளுவரும் கண்டறிந்து தம் சமகால மக்களிடம் பரவியிருக்கும் ஒழுக்கத்தைக் கண்டித்துக் கூறியுள்ளார்.குடித்தல்,அருந்துதல் முதலாய சொற்களுக்கு மாற்றாக அளவறிந்து குடித்தலைச் சுட்டுதற்காக ‘உண்ணாமை’என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

Last Updated on Tuesday, 03 May 2016 21:35 Read more...
 

ஆய்வு: சீகன்பால்கு பார்வையில் தமிழ் எழுத்திலக்கணம்

E-mail Print PDF

- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் -ஒவ்வொரு காலகட்ட சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடே இலக்கண நூல்களை உருப்பெறச் செய்கின்றன. இலக்கணம் சமூகத்தின் உற்பத்திப் பொருளாக உள்ளது. சமூகத்தின் அடையாளப்படுத்தும் தன்மை இதில் வெளிப்படும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் கருத்தாக்கத்தை யதார்த்த நிலையில் காணும் பொழுது கட்டுடைத்தலுக்கு உள்ளாகின்றது. தமிழ் இலக்கண மரபில் தோன்றிய தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோக விவேகம் போன்றவை அந்த நூல்கள் எழுந்த காலகட்டத்தின் சமூக நிலையையே பிரதிபலிக்கின்றன. மரபை ஒட்டிய இலக்கணப் பெருக்கத்தில் ஐரோப்பியர் வருகையினால் உருப்பெற்ற இலக்கணங்கள் வேறொரு புரிதலுக்குள் கொண்டு சென்றன. இலக்கணநூல் உருவாக்கத்தில் எளிமையாக்கமும் புதுமையாக்கமும் செயல்படுத்தப்பட்டது. பதினெழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மரபை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் இலக்கண நூல்கள் உருப்பெற்ற அதே காலகட்டத்தில் ஐரோப்பியரால் மரபை மீறிய இலக்கண நூல்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பிய சிந்தனையில் இலக்கணம் படைக்க விழைந்த கிறித்துவ பாதிரிமார்களுக்கு தமிழின் நீண்ட இலக்கணமரபை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் இலக்கண மரபின் முன்னோடிகளான அகத்தியர், தொல்காப்பியர், பவணந்தியாரின் துணை தேவையாக இருந்துள்ளதை ஐரோப்பியர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்களின் முகவுரையின் வழி அறியலாகின்றது.

ஐரோப்பியர் வருகையும் இலக்கண உருவாக்கமும்
பதினெட்டு மற்றும் அதற்கு பின்னான காலகட்டங்களில் ஐரோப்பியர் எழுதிய தமிழ் இலக்கணநூல்கள் நெடிய ஒரு வரலாற்றினைக் கொண்டுள்ளன. தமிழ் இலக்கண வரலாற்றினை எழுத முற்பட்ட இளவரசு (1965), இளங்குமரன் (1988) ஆகியோரின் நூல்களில் இந்நூல்கள் பற்றிய குறிப்பினைக் காணமுடியவில்லை. ஐரோப்பியரால் எழுதப்பட்ட ஆரம்பகால இலக்கண நூல்கள் போர்த்துகீசிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அதற்குப் பிறகான இலக்கணநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பிய மொழியில் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூலாக சீகன்பால்குவின் Grammatica Damulica (1716) என்னும் நூல் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பே சில இலக்கணநூல்கள் உருப்பெற்றுள்ளன.

Last Updated on Tuesday, 03 May 2016 20:19 Read more...
 

ஆய்வு: ஒரு மனித இனத்தின் மரபணு DNA - M130

E-mail Print PDF

மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் திராவிட மூதாதையர்களின் ஆதிக்குடிகளின் படம்.

ஆய்வு: ஒரு மனித இனத்தின் மரபணு DNA - M130

DNA என்பது Deoxyribonucleic Acid என்பதன் சுருக்கமாகும்(;(Abbreviation).). இது மனிதனது மரபணுவினை (DNA) உயிரியல் நோக்கில் கண்ணடறியும் விஞ்ஞான ரீதியான ஒரு ஆய்வின் முடியாகும். M130 என்பது ஒரு மனிதனதோ அன்றி ஒரு இனக்குழுமத்தினதோ அன்றி பல இனக்குழுமங்களைத் தொடர்பு படுத்திய மரபணுவுக்கு இடப்பட்ட விஞ்ஞானரீதியான குறியீடாகும். மேலே குறிப்பிட்ட DNA -M130 என்பது 70,000 ஆண்டுகளுக்கு முந்தி வாழ்ந்த உலகின் நவீன மூத்த குடியாகிய ஒரு பகுதி  மனிதனினதோ அன்றி ஒரு மக்கள் கூட்டத்தினதோ பொது மரபணு என்று தற்போது அறியப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியில் விஞ்ஞான பீடத்தின் தலைவரான பேராசிரியர் ஆர்.எம்.பச்சப்பன் அவர்கள் உலகளாவிய அமைப்பான தேசிய புவியியல் (National Geographic) என்ற அமைப்பின் சார்பாக மனித மரபணுவியல் (Genology) பற்றிய ஆய்வினை இந்தியாவில் செய்வதற்காக நியமிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டில் தனது ஆய்வினை ஆரம்பித்தார். இவ்வாய்வின் நோக்கமானது நவீன மனித இனம் எங்கிருந்து தோற்றம் பெற்றது என்றும் அந்த மனித இனங்களின் பொதுவான தொடர்புகள் என்ன என்பதனைக் கண்டறிய டி.என்.ஏ பகுப்பாய்வு செய்து மனித இனத்தின் தோற்றம் அதன் பரம்பல் பற்றி நிறுவுவதாகும். இவ்வாறாக அவரும் அவரது குழுவினரும் செய்த ஆய்வுகளில் பல வியத்தகு முடிவுகள் வெளிப்பட்டன.

பேராசிரியர் பச்சப்பனின் ஆய்வு மதுரையிலும், ஆதித் திராவிடர்கள் வாழும் மலைப்பகுதிகளிலும் வடஇந்தியாவின் குஜராத், ஒரிசா, ஹிமாசல்பிரதேஷ், ஜம்முகாஷ்மீர், கார்கில் ஆகிய பகுதிகளிலும் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு பொதுவான மரபணுவே எங்கும் காணப்பட்டது. இம்மரபணுவை எம்-130 என்னும் பெயரிடப்பட்ட மரபணு என்ற முடிவு பெறப்பட்டது. இதில் குறிப்பாக மதுரையில் உள்ள குக்கிராமமான “ஜோதிமாணிகம்” என்னும் கிராமத்தில் பெறப்பட்ட டி.என.;ஏ மாதிரிகள் 700 பேரிடம் பெறப்பட்டு அதில் நடைபெற்ற ஆய்வு முடிபுகளும் எம்-130 என்ற ஆய்வு முடிவினையே காட்டடியது. இங்கு முதன் முதலில் விருமாண்டி ஆண்டித்தேவர் என்னும் 30 வயதுடைய முன்னணி கணணி நிறுவன  நிர்வாகியிடம் பெறப்பட்ட முடிவின் பிரகாரம் அவரிடம் பெறப்பட்ட டீ.என்.ஏ மாதிரி 70,000 வருடங்களுக்கு முந்திய ஆபிரிக்க மனிதனின் டி.என்.ஏ மாதிரியுடனும் இன்றும் வடமேற்கு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பல வகையான ஆதிக்குடிகளிலும் பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் யாவும் எம்-130 என்ற முடிவினையே கொடுத்தன. இந்த ஆய்வு முடிவுகளைப்பெற 5 ஆண்டுகள் எடுத்ததாக பேரசிரியர் பச்சப்பன் குறிப்பிடுகின்றார். ஆகவே இதிலிருந்து அறிப்படுவது இந்த மூன்று இனக்குழுமங்களும் ஒரு மனித இனத்தின் வேர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகின்றது. இந்த ஜோதிமாணிக்கம் கிராமத்து மக்களே இந்தியாவின் ஆதிக்குடிகளாகும். இவ்வாறாகவே மலைவாழ் ஆதித்திராவிடர்களும் இவ்வாறான ஆதிக் குடிகளேயாவர். அத்தோடு திருமலை கள்வர் இனம், யாதவர், சௌராஷ்டர் ஆகியோரிடை 5மூ வீதமானவர்களிடம் இவ்வாய்வினை மேற்கொண்டபோதும் டி.என.ஏ எம்130 என்ற முடிவே பெறப்பட்டுள்ளது. ஆனால் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பெறப்பட்ட முடிவுகளின் பிரகாரம் அவர்களது டி.என்.ஏ எம்60 என்றும் அறிப்பட்டு உள்ளது. இது வேறொரு இனக்குழுமத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும். 160,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும். இக்காலப்பகுதியில் பல இனங்கள் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியதனால் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

Last Updated on Wednesday, 11 May 2016 05:17 Read more...
 

ஆய்வு: திணைச்சமூகப் பண்பாட்டில் சூழல் பொருத்தம் - நில ஒப்பாய்வு!

E-mail Print PDF

- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.

சங்க மரபுகள் அவை தோன்றிய காலகட்டத்தில் தளப்பார்வை (நிலம்) கொண்டு இயங்கின. ஆனால் இன்றைய நிலையில் வரலாற்றுச் சான்றுகளகாவும், தொல்லியல் ஆவணமாகவும் காலப்பார்வை சார்ந்து வெளிப்பட்டு நிற்கிறது. இத்தகையப் பொதுத்தன்மையில் இயங்கிவரும் சங்கப் பனுவல்களை நிலத்தோடு மக்கள் வாழ்வியலாகப் பண்பாடாக வெளிப்படுத்துவதற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் தேவையான ஒன்றாகிறது. இம்மூன்றையும் ஒருமித்த தன்மையில் வெளிக்காட்டுகிறது சங்கப்பாடல்கள். இருந்தபோதிலும் முப்பொருள் செயற்பாடு ஐந்து நிலமக்களின் வாழ்வியலில் ஒரே தன்மையில் வெளிப்படவில்லை. சுற்றுச்சூழல் மாற்றம், நிலஅமைப்பு, மக்கள்வாழ்வு என வெவவேறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிசெய்யப்பட்டத் திணைச்சமூக மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்குச் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழலை ஒட்டிய தனிமனிதசூழல், குடும்பச்சூழல், வாழிடச்சூழல், சமூகச்சூழல் ஆகிய அனைத்தும் இடத்திற்கேற்பத் தேவையாகிறது. அதனை உள்வாங்கி சங்கப் பாடல்கள் வாயிலாகச் சூழல் படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

திணைக்குடி மக்களின் வாழ்விற்கு ‘இடம்’ தேவையான ஒன்றாக இருப்பின் அவை நிலத்தோடு, சமூகக் குழுக்களோடு, சுற்றுச்சூழலோடு என இணைந்து செயல்புரிய வேண்டியிருக்கிறது. நிலம் - மக்கள் இருகூறுகளும் தனித்தனியே இருப்பினும் அவை செயலாற்றுவதற்கு சூழல், பொழுது (காலம்) இரண்டும் தேவையாகின்றது. இவை சுற்றுச்சூழலோடு இணைந்து “உள்ளீட்டுத் தொடர்புகள், பண்பாட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்கள்,  வேலைப்பிரிவு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைகள் மற்றும் இயற்கை வளங்களை அடைய விரும்புவோரும் பயன்படுத்துவோரும் அவற்றைப் பங்கீட்டுக் கொள்ளுதல்”1 என அனைத்துச் செயல்பாடுகளிலும் சூழல் செயலாற்றுகிறது. ஒரு படைப்பாக்கப் பனுவலில் சூழல் தன்மையில்லை என்றால் அப்பனுவல் வெறும் படிமமாகவே பொருளற்றுக் கிடக்கும். அதற்கு உயிரோட்டம் கொடுத்து இயங்கச் செய்வது சூழலே ஆகும்.

Last Updated on Tuesday, 19 April 2016 22:04 Read more...
 

ஆய்வு: ஆசாரக்கோவை உணர்த்தும் சமுதாய நெறிகள்!

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கருதப்படும் நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு ஆகும்.இந்நூல்கள் எவை என்பதை பற்றி

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் ஆசாரக்கோவை
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார்.ஆசாரம் என்பது வாழ்க்கையில் மக்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளைக் குறிப்பதாகும்.வடமொழியில் ஆரிடம் என்னும் நூலைத் தழுவி இந்நூலாசிரியர் 100 பாடல்களைப் பாடியுள்ளார்.இவை வெண்பா வகையில் அமைந்தனவாகும்.இவருடைய காலம் 5 ஆம் நூற்றாண்டு ஆகும்.

சமுதாயம் என்பதன் விளக்கம்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

Last Updated on Monday, 18 April 2016 21:25 Read more...
 

ஆய்வு: தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு

E-mail Print PDF

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.

அய்யனார் விளக்கம்
அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்துவருகின்றனர். அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும். பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு  வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்துச் சுட்டுச் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.(நன்றி-வலைத்தளம்)

சைவமும்,வைணவமும் ஒருங்கிணைந்ததுபோல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது. அய்யப்பனே அய்யனார் எனவும், சாஸ்தா எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது.   காப்பியச் சிலம்பில் சாஸ்தாவைப் பற்றிப் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

Last Updated on Thursday, 14 April 2016 01:21 Read more...
 

ஆய்வு: சிலம்பு ஒரு குறியீடு!

E-mail Print PDF

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகளும் வழிபாடுகளும் இரண்டறக் கலந்தவையாக இருக்கின்றன. இயற்கையைச் சரிவர உணராத தொன்மைச் சமுதாயத்தில் வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் தனித்ததொரு இடமிருந்ததை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. சடங்குகள் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை சமுதாயத்தைக்கட்டமைக்கும் உறுப்பினர்களின் கடமைகளை அவர்தம் நிலைப்பாட்டை உணர்த்துவனவாகவும் உள்ளன. ஆடை, அணிகள் குறித்து விவாதம் ஏற்படும் இன்றைய சூழலில் மனிதனை அடையாளப்படுத்தும் ஆடை அணிகலன் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆணுக்குக் கழல் அணியப்பட்ட நிலையில் பெண்ணுக்குச் சிலம்பு ஏன்?  திருமணத்திற்கு முன் காலில் அணியப்பட்ட  சிலம்பு வதுவைச்சடங்குக்கு முன் கழியப்படுவது ஏன்? என்ற வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.சிலம்பு குறித்த பதிவுகளை நோக்க அகநானூற்றுப்பாடல்கள் மூலமாக அமைகின்றன.

சிலம்பு ஒரு குறியீடு

கயமனாரின் செவிலித்தாய் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்ட தன் மகளைக் குறித்து, ‘ஏதிலாளனது நெஞ்சு தனக்கேயுரித்தாகப் பெற்ற எனது சிறிய மூதறிவுடையவளது சிலம்புபொருந்திய சிறிய அடிகள் மேகங்கள் பொருந்திய பெரியமலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியில் செல்லுதற்கு வல்லுநவோ’ என்றுகூறி வருந்துகிறாள்1. வண்ணப்புறக்கந்தரத்தனாரின் பாடலிலும் செவிலி, ‘மானின் கூட்டம் வற்றிய மரச்செடியினைச் சுவைத்துப் பார்க்கும் காட்டில் வலிமைமிக்க பெருந்தகையாய தலைவன் இவளைப் பலபடியாகப் பாரட்டி உலர்ந்த நிழலிலே தங்கி இவளை உடன்கொண்டு கழிதலை அறியின் இவள் தந்தையது தங்கும் உணவுமிகுந்துள்ள காவல் பொருந்தியப் பெரியமனையில் செல்லும் இடம்தொறும் இடந்தொறும் உடம்பின் நிழலைப் போலச் சென்று கோதையையுடைய ஆயத்தாரொடு விளையாடும் விளையாட்டினை மேற்கொண்டு தொகுதிவாய்ந்த பரலினையுடைய சிலம்பு ஒலிக்க அவள் விளையாடும் இடந்தொறும் அகலாதிருப்பேன் அது கழிந்ததே என வருந்துகிறாள்2.

Last Updated on Saturday, 09 April 2016 21:03 Read more...
 

ஆய்வு: சமூகத்தின் பெண்ணிண அடையாளம் : சிலம்பும் சிலம்பு கழீ நோன்பும்

E-mail Print PDF

- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -மனித வளர்ச்சியினால் பண்பாட்டில் ஆண் x பெண் உருவாக்கம், சமூக உருவாக்கம், சமுதாய வளர்ச்சி என அனைத்தும் சுழற்சி முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி இனப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அடித்தளமாக நிலைகொண்டிருப்பவள் ஒரு பெண். இப்பெண் மனித தோற்றத்திற்கான உயிராகவும்  ஆயுதமாகவும் இருந்து வருகிறாள். தொடக்க காலத்தில் உயிர் உற்பத்திக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்ட பெண் பின்பு விவசாய உற்பத்திக்கான தொடக்கம், பொருளாதார உற்பத்தியில் உபரியைப் பெருக்குதல், விற்பனை செய்தல் எனத் தன்னைப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் உயர்த்திக்கொண்டாள். இது சங்க காலத்தில் தொடர்ந்து  நிகழ்ந்து வந்தாலும் சமூக வயத்தளத்தில் குடும்பமென்ற ஒடுக்கு நிலைக்குள்ளும் பெண் ஆழாக்கப்பட்டாள். இதனால் குறிப்பிட்ட இயங்கு தளத்திலே தன்னை தகவமைத்துக்கொண்டு வாழமுற்படவும் செய்தாள். ஓவ்வொரு வயத்திலும் ஓர் அடையாளமாகப் பரிணமித்த பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் உடல்தோற்றத்தில் மட்டுமின்றி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தச் செய்ததுடன் சமூக அடையாளமாகவும் சில அணிகலன்களையும் மரபாக அணிந்தனர். அதில் ஒன்று தான் சிலம்பு.

இச்சிலம்போடு தொல்தமிழர்கள் திணைச்சமுதாய வாழ்வில் பெண்களுக்கென்று பண்பாட்டில் சில வாழ்க்கை வட்டச் சடங்குகளைக் நிகழ்த்தி வந்தனர். அச்சடங்குகள் திணைச்சமுதாயத்திற்கே உரித்தான பண்பாட்டு அடையாளமாக வளம் வந்தது. அதில் சிலம்பு கழீஇ நோன்பும் அடங்கும். இச்சடங்கைத் திருமணத்திற்கு முன்பாகக் கடைப்பிடித்து வந்ததாகவும் திருமண காலத்தில் அதனை மீண்டும் நீக்கியதாகவும் திணைச்சமுதாயப் பண்பாடு எடுத்துரைக்கிறது. சிலம்புகழீஇ நோன்பின் தொடர் மரபுகளைத் திணைச்சமூக முதுகுடிகள், முதுபெண்டிர்கள் கடைப்பிடித்ததுடன் இளமகளிர்களின் (தலைவியின்) கற்பு வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும்,  இனக்குழு மரபிற்கு உட்பட்டும் இதனைச் செய்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக களவு (காதல்) வயப்பாட்டில் இளமகளிர் (குமரிகள்) தன்னுடைய காதலனுடன் உடன்போக்கு செல்லத் துணிவதும் உடன்போக்கு செல்லும் காலத்தில் காலில் அணியப்பட்ட சிலம்பினைக் கழற்றி கைகளில் எடுத்துக்கொண்டு நிலம்பெயர்ந்து செல்வதும் மரபாக்கப்பட்டுள்ளது. பின்னர் வளர்ச்சி பெற்ற காலங்களில் கற்பின் அடையாளமாகவும் மாறத்தொடங்கியது. ஆனால்,  இன்றைய சூழலில் சிலம்பு பல்வேறு வடிவங்களில் திரிகிறது. அவ்வாறு திரிவதற்கான காரணம், சூழல் மாற்றம் இவைகள் குறித்து வரலாற்றுக் கண்ணோட்டத்தில்  இக்கட்டுரை ஆராயப்படுகிறது.

Last Updated on Friday, 08 April 2016 22:18 Read more...
 

ஆய்வு: கொன்றைவேந்தன் காட்டும் அறநெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான கொன்றை வேந்தனில் இடம்பெறும் அறநெறிகளை எடுத்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ,ஈகை, புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)

கொன்றைவேந்தனில் இடம்பெறும் அறநெறிகள்

“கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே”

என இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.கொன்றை மாலை அணிந்தவன் சிவபெருமான்.கொன்றைவேந்தன் - சிவபெருமான்,அவன் செல்வன் விநாயகன்,எனவே இது வினாயகர் வணக்கத்துடன் தொடங்குகிறது என்பார் நா.மு.வேங்கடசாமி நாட்டார்.கொன்றை வேந்தன் என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர் பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் 91 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஓர் அடியில் நாற்சீர்கள் உள்ளன.எளிமை,ஓசை நயம்,பொருள் ஆழம் உடைய நூல் ஆகும்.

Last Updated on Friday, 08 April 2016 20:55 Read more...
 

ஆய்வு: சங்ககாலப் போரில் அரசர்களின் கூட்டணியும், முறிவும்!

E-mail Print PDF

- பா.சிவக்குமார்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -தற்காலத்தில் சனநாயகத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுதல் வேண்டி பிற கட்சிகளோடு கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. மேலும், இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த போது தமக்கு அடிபணிய மறுத்த மன்னர்களை அடக்கி அடிபணிய வைப்பதற்கு தம் படையுடன் தனக்குக் கீழிருந்த பிற மன்னர்களின் படையையும் கூட்டுச்சேர்த்துக் கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்றனர். இது போன்ற கூட்டணி சங்ககாலச் சமூகத்திலும் நிலவியிருந்துள்ளமையையும் அக்கூட்டணியுள் சில முறிவு ஏற்பட்டுள்ளமையையும் வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

சங்ககாலப் போரில்  அரசர்களின் கூட்டணி
சங்ககால அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தினைப் பிறநாட்டின் மீது திணிக்கும் பொருட்டும் அவர்களின் மண்ணைக் கொள்ளுதல் பொருட்டும், வலிமைமிக்க அரசர்கள் இருவர் அல்லது பலர் கூட்டுச்சேர்ந்து பொதுவான பகைநாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டினைக் கைப்பற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இப்போர்க் கூட்டணியை சங்கப் பாடல்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்
2.    வேந்தர் மற்றும் குறுநில மன்னர்  கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத்             தாக்குதல்
3.    வேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
4.    வேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து குறுநில மன்னனைத் தாக்குதல்
5.    இருவேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்

என்பவையாகும்.

Last Updated on Friday, 08 April 2016 20:22 Read more...
 

ஆய்வு: பொ.வே. சோமசுந்தரனாரின் மேற்கோள் திறன் (பெரும்பாணாற்றுப்படை)

E-mail Print PDF

பொ.வே. சோமசுந்தரனாரின் மேற்கோள் திறன் (பெரும்பாணாற்றுப்படை)  --திருமதி ம.மோ.கீதா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி), மன்னம்பந்தல்-609 305. -முன்னுரை:
சங்க இலக்கியம் முழுமைக்கும் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரை எழுதியுள்ளார்.ஆற்றுப்படை நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையானது இவரது உரையின் மேற்கோள் திறத்தினால் சிறப்பினை அடைந்தது என்றே கூறலாம்.எனவே,இவரின் மேற்கோள் திறத்தினைப் பற்றி இக்கட்டுரையின்மூலம் அறியலாம்.

மேற்கோள்:
மேற்கோள் என்பது சுருக்கமாகவும் சிந்திக்கக் கூடியதாகவும்,கருத்துடன் உறவினையுடையதாகவும் இருக்க வேண்டும். மேற்கோளினை நாம் அளவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.உரையாசிரியர்கள் தங்களின் புலமையினைக் காட்டுவதற்கு மேற்கோள்கள் உதவிபுரிகின்றன.

”உப்புபோல் இருக்க வேண்டுமே தவிர
அதுவே உணவாகி விடுதல் கூடாது”1

என்பார் இலக்குவனார்.குறியீடுகள்,மேற்கோள்கள் ஆய்வு நிகழ்த்தும் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. அறிஞர்கள் மேற்கோளினை இரண்டு நிலையாகக் குறிப்பிடுகின்றனர்.அவை ஒற்றை மேற்கோள்,இரட்டை மேற்கோள் என இரு வகைப்படும்.

மேற்கோளின் தேவை:
ஒரு நூலிற்கு மேற்கோள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒன்றிற்கு மேற்பட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் கூறலாம்.எளிதில் விளக்கந் தர வேண்டிய இடங்களில், எடுத்துக்காட்டுத் தேவைப்படும் இடங்களிலும் மேற்கோள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.மேற்கோளின்மூலம் கருத்துச் சிக்கல் என்பது இல்லாமல் இருக்கின்றது.எல்லா இடங்களுக்கும் மேற்கோள்கள் தேவைப்படுவதில்லை.சில இடங்களுக்கு மட்டுமே மேற்கோள்கள் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன.

Last Updated on Sunday, 03 April 2016 23:37 Read more...
 

ஆய்வு: திருக்குறள் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்   சங்கம் மருவிய  காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண்  கீழ்க்கணக்கு நூல்கள் என  வழங்கப்படுகின்றன. இந்நூல்கள்  அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் இடம் பெறும் கல்விச் சிந்தனைகளை ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 குறள்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.கல்வி தொடர்பானக் கருத்துக்கள் கல்வி,கல்லாமை,கேள்வி போன்ற அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

Last Updated on Friday, 08 April 2016 20:32 Read more...
 

ஆய்வு: இசையறிவியலும் இராகங்களும்

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்இசை என்பது ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இனிமையான ஒலிவடிவமாகும். மனித இனம் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் இசைய வைக்கும் ஆற்றல் இதனிடம் பொதிந்து கிடப்பதனாலேயே இசை என்ற காரணப் பெயரை இது பெற்றதாகப் பொருள் கூறுவாரும் உளர். ’இசை கேட்டுப் புவி அசைந்தாடும்’ என்றும், ’என் இசை கேட்டு எழுந்தோடி வருவாரன்றோ’ என்றும் திரையிசைப் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கின்றோமல்லவா? இவையும் இசை பற்றிய இவையொத்த பல பாடல் வரிகளும் கவிதையழகுக்கென வரையப்பட்ட வெற்றுக் கற்பனை வார்த்தைகளல்ல. மாறாக, இசையின் வரலாற்று வழிவந்த உண்மை அனுபவங்களின் வெளிப்பாடுகளே என்பதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் உள.

இத்தகைய வல்லமை வாய்ந்த, இசை தோற்றம் பெற்ற காலம் தொடர்பாக ஏராளம் எடுகோள்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அறுதியான முடிபுகள் இன்னமும் எட்டப்படாமல் அவை யாவும் அனுமானங்களாகவே  இருந்து வருகின்றன. ஆதிமனிதனின் முதல் ஆயுதம் கோடரி எனவும், அதன் ஆயுள் 1.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் எனவும், அடுத்த ஆயுதமான ஈட்டியின் வயது 500,000 ஆண்டுகளாக இருக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள், முதலாவது இசைக்கருவி இற்றைக்கு 40,000 ஆண்டளவில் தோன்றியதாகத் தெரிவிக்கின்றன.  ஆனால் தொடர்பாடலின் முதல் வழிமுறையான இசையானது இவை அனைத்திற்கும் முன்னதாகவே தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்றும்,  பறவைகள், மிருகங்களிடமிருந்தே மனிதன் இந்த இசையெனும் தொடர்பாடல் ஊடகத்தைப் பெற்றிருக்கின்றான் என்றும் இன்னொரு ஆய்வு கூறுகின்றது. இதன் விளைவாக, மனிதனிடமிருந்து முதன் முதலாகத் தோன்றிய இசைவடிவம் கைதட்டல் எனவும், பின்னர் தடிதண்டுகளைக் கொண்டு தட்டுதல் ஊடாக அது மேலும் பயணித்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்துதான் மனிதன் தன் குரலை இசையின் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னரான காலத்தில் வந்த கற்காலத்தில், கல்லாலான கருவிகளால் தானியங்கள், கிழங்குகள், வேர்களை இடித்தும் துவைத்தும் உணவாக்க முற்பட்டபோது தாளலயம் அந்நாளைய மனிதனால் அவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Last Updated on Monday, 28 March 2016 20:32 Read more...
 

ஆய்வு: நான்மணிக்கடிகை உணர்த்தும் தனிமனித நெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.நான்மணிக்கடிகை அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் நூற்று ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் தனிமனிதன்; நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தனிமனிதன் என்பதன் விளக்கம்

சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி  தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உயர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு,மெய்க்காவலர், பீடிகை நீங்கியபத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

Last Updated on Friday, 08 April 2016 20:32 Read more...
 

ஆய்வு: ‘செடல்’ பாத்திரப் படைப்பு - ஆய்வு நோக்கில் ஒரு பார்வை

E-mail Print PDF

 - ஞா. ஜீலியட் மரிய ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -சிறு வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்டு, தாசியாக வாழ மறுத்து, பெரும் போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து தீர்க்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையே ‘செடல்’ புதினமாகும். இப்புதினத்தின் முதன்மைக் கதை மாந்தர் செடல். நட்டுவன் குலம், கூத்தாடிச் சாதியைச் சேர்ந்த இவள், அக்குடும்பத்தின்  எட்டாவது பெண்பிள்ளை. மழை பெய்ய வேண்டும் என்ற ஊர் நன்மையைக் காரணம் காட்டி, பழைய பஞ்சாங்கத்தை நம்பிக் கொண்டு, ஊரிளுள்ளோரின் வற்புறுத்தலினாலும், மேல் குடியினரின் அதிகாரத்தினாலும் செடல் பொட்டுக்கட்டி விடப்படுகி றாள். 

வாழ்வு நிலையைக் கூறவந்த ஆசிரியர் இமையம், பாத்திரத்தின் பண்புகளை ஒரு உத்தியாக பயன்படுத்திள்ளார். செடல் தன் நிலைக்கேற்ப தன்னுடைய பண்புகளை மாற்றி வாழப் பழகிக் கொள்கிறாள். பொட்டுகட்டியபின் தன் வீட்டிற்குச் செல்கையில் அவள் திருப்பி அனுப்பப்படுவதும், வறுமையின் காரணமாக அவளுடைய குடும்பம் கண்டிக்குக் கப்பலேறுவதும் அவள் தனிமைப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றன.

வயதுக்கு வந்த அன்று மழைக் கொட்ட, இரவில் வீடு இடிந்து விழ, உடல் நோவுடன், துணைக்கு யாருமற்ற தனித்த சூழலில் ‘உயிரோடு ஏன் இருக்க வேண்டும்?’ என்ற வினா எழ, கதறி அழுகிறாள்.  ஆழ்மனத்தின் வெளிப்பாடான வாழ்வு உந்துதல், அழிவு (சாவு) உந்துதல் என்ற இரு நிலைகளில, அவள் அழிவு உந்துதல் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். “அதிர்ச்சி தரத்தக்க துன்பமான நிகழ்வுகளை உள்ளம் மீட்டுருவாக்கம் செய்கின்றது. நடந்த முடிந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பொழுது உள்ளம் தாங்கும் சக்தியினை இழந்து சாவினை நோக்கிச் செல்கிறது.” 1 என்ற ப்ராய்டின் உளவியல் கொள்கை இங்கு செடலின் சூழலுக்குப் பொருந்தி நிற்கிறது.

Last Updated on Tuesday, 29 March 2016 23:44 Read more...
 

ஆய்வு: திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்கு

E-mail Print PDF

 சு. குணேஸ்வரன் -அறிமுகம்
சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிப்படுத்தும் பண்பினை ஆற்றுப்படை இலக்கியங்கள் கொண்டிருக்கின்றன. இக்காலத்தில் தோற்றம்பெற்ற ஆற்றுப்படை நூல்களாகிய பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவற்றுக்கு கடவுள் வாழ்த்தாகக்  கொள்ளக்கூடியதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கிறது.

ஆற்றுப்படை என்பது ‘ஆற்றுப்படுத்தல்’ எனப் பொருள்படும். ‘ஆறு’ என்பது வழி; ‘படுத்தல்’ என்பது செலுத்துவது;  அதாவது ஒருவர் செல்லவேண்டிய வழியைத் தெரிவித்தலாகும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்;
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”
1

என்று தொல்காப்பிய புறத்திணையியலில் ஆற்றுப்படையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. ஒரு புரவலனிடம் சென்று பரிசில் பெற்ற பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் ஆகியோருள் ஒருவர்; பரிசில் பெறவிழைகின்ற ஒருவருக்குத் தாம் பெற்ற பெருவளத்தைக் கூறி அப்பொருள் நல்கியவரிடத்தே செல்லவேண்டிய வழி வகைகளையும் அவரின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வழிப்படுத்துவதாகும். இவ்வகையில் மேலே கூறப்பட்ட ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களும் பொருளை வேண்டி ஆற்றுப்படுத்தப்படுபவரின் பெயரோடு சார்ந்து அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை இறைவனிடம் அருளை வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமைந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த வேறுபாடு திருமுருகாற்றுப்படையை  ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களில் இருந்து தனித்துவமானதாக எடுத்துக்காட்டுகிறது.

திருமுருகாற்றுப்படை
முருகு எனவும் புலவராற்றுப்படை எனவும் அழைக்கப்படும் திருமுருகாற்றுப்படை 317 அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார். திருமுருகாற்றுப்படை என்பது திரு -  முருகு -  ஆற்றுப்படை என அமையும். திரு என்றால் அழகிய, முருகு என்பது முருகன், ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது. அதாவது அழகிய முருகனிடம் செல்வதற்கு ஆற்றுப்படுத்துவது எனப் பொருள்படும். “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது” 2 என்று திருமுருகாற்றுப்படைக்குப் பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர். “திருமுருகாற்றுப்படை யென்பதற்கு முத்தியைப் பெற்றானொருவன் பெறுவதற்குப் பக்குவனாகிய ஓரிரவலனைப் பெறும்பொருட்டு ஸ்ரீசுப்பிரமண்ணியசுவாமி யிடத்தே வழிப்படுத்தலையுடைய பிரபந்தமெனப் பொருள் கூறுக” 3 என்று ஆறுமுகநாவலர் குறிப்பிடுவார்.

Last Updated on Tuesday, 15 March 2016 21:29 Read more...
 

ஆய்வு: அற இலக்கியம் நாற்பது உணர்த்தும் தனிமனித நட்பு நெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அறநூல் பதினொன்று, அகநூல் ஆறு, புறநூல் ஒன்று என்ற முறையில்அமைந்துள்ளன.இந்நூல்கள் பதினொன்றில் நாற்பது என்று முடியும் இரண்டு நூல்களாக இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் விளங்குகின்றன.இந்நூல்களின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார், கபிலர் ஆவார். இவர்களின் கடவுள் வாழ்த்து செய்யுள் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரைப் பாடியிருப்பதால் சமயப்பொது நோக்குடையவர் என்பதை அறியமுடிகிறது.இந்நூல்களில் காணப்படும் தனிமனித நட்பு நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தனிமனிதன் என்பதன் விளக்கம்
சென்னைப் பல்கலை ஆங்கில அகராதி தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொது நோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு,உயர் நிலையாளரின் பின்னணிக்குழு,வழித்துணைக்குழு,மெய்க்காவலர்,பீடிகைநீங்கியபத்திரம்,பெரும்பான்மையளவு, உருவம்அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தனிமனிதன் என்பதற்கு one among the person> மக்களில் ஒருவர், தனியன், தனியொருவன், துணையிலி, ஆதரவற்றவன் என்று பொருள் விளக்கம் தருகிறது.

நட்பு என்பதன் விளக்கம்
நட்பு என்பதற்கு அகராதிகள் பல சொற்களை வகைப்படுத்திக் கூறியுள்ளன. நண்பன்-தோழன்,கணவன் என்று கழகத் தமிழ் அகராதி (ப.592) சுட்டுகின்றது.இதன் மூலம் கணவனும் தன் மனைவியிடம் நண்பனாக இருக்கிறான் என்பது தெளிவாகிறது.

Last Updated on Friday, 08 April 2016 20:33 Read more...
 

ஆய்வு: உரைநடை எனும் சிந்தனை மாற்றம்

E-mail Print PDF

- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி ,கோயமுத்தூர் -தமிழ் மொழியின் இன்றைய வளர்ச்சி என்பது பல்வேறு ஊடக மாற்றங்களைக் கடந்து வந்த ஒன்று. கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான வளர்ச்சிப் பாதையில் தமிழ்மொழி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் காலத்திற்கேற்ற சிந்தனை மாற்றம் என்பது இன்றியமையாததாக இருந்துள்ளது. இன்றளவும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மொழி அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கு உரைநடை ஒரு அடிப்படை சிந்தனைமாற்றமாக இருந்துவருகின்றது. இலக்கண உலகில் இதன் தோற்றுவாய் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

தொடர் அல்லது வாக்கியத்தின் இலக்கணத்தைக் கட்டமைப்பது தொடரிலக்கணம். சொல்லிலக்கணக் கூறுகளே தொடரிலக்கணத்திற்கு வடிவம் தருகின்றன. எழுவாய், பயனிலை ஆகிய இரண்டும் இணைந்த வடிவமே வாக்கியம் எனும் அமைப்பைத் தருகின்றன. பெயர், வினை இவற்றோடு இணையும் உருபுகளே வாக்கியத்தின் முழுமையானப் பொருளைத் தீர்மானிக்கின்றன. “முன்பும், பின்பும் எதுவும் வருதல் வேண்டாம் என்ற அடிப்படையில் முன்பும் பின்பும் வருகின்ற விட்டிசையும், குறிப்பிட்ட குரலிசைகளையும் உடையன வாக்கியம்”1 என்று வாக்கியத்திற்கான விளக்கம் தருகிறார் டாக்டர் முத்து சண்முகன். ஆரம்ப காலத்தில் கிரேக்க இலக்கணத்தில் தொடரிலக்கணம் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. சொல்லிலக்கணக் கூறுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. டயோனிசியஸ் த்ராக்ஸ் (Dionysius Thrax) என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முதலாவது கிரேக்க மொழி இலக்கணம் எழுதப்பட்டது. இந்நூல் ஸ்டாயிக் மற்றும் அலெக்ஸாண்டிரிய இலக்கண அறிஞர்களைக் கடந்து வினையடை, மூவிடப்பெயர், முன்னுருபு என்னும் இலக்கணக் கூறுகளை விளக்கியது. இந்நூலில் சொற்றொடர், வாக்கியம் பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடரியல் (Syntax) பற்றிய சிந்தனை கிரேக்க இலக்கண மரபில் தோற்றம் பெற்றுள்ளது.

கிரேக்க இலக்கணத்தில் காணப்பட்ட தொடரியல் பற்றிய இலக்கணத்தை இந்திய இலக்கணமரபு கொண்டிருக்கவில்லை. குறிப்பாகத் தமிழ் இலக்கணத்தில் அத்தகைய நிலையைப் பார்க்க முடிகின்றது. ஆனால் தொடர் பற்றிய சிந்தனை தமிழ் இலக்கண அறிவாண்மையாளர்களுக்கு இருந்துள்ளது. தொடரிலக்கணம் பற்றி தனித்துப் பேசப்படவில்லை எனினும் அதற்கானக் கூறுகளைச் சொல்லிலக்கணத்தில் காணமுடிகின்றது. “சொல்லாக்கத்திற்கும் சொற்றொடராக்கத்திற்கும் காரணமாக அமையும் ஓரெழுத்து ஒருமொழி முதலாய மூவகை மொழிகளையும் தொடராக்க அடிப்படையில் பிரித்துணர இலக்கண நோக்கில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்றும், பாட்டு உரை நூல் முதலாய எழுவகைச் செய்யுளிடத்தும் அமைந்து பொருள் தரும் நோக்கில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொன்னூல் வழி நின்று தொல்காப்பியம் பாகுபாடு செய்து உணர்த்துகின்றது.”2 சொல்லிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதில் தொடரிலக்கணத்திற்கான கூறுகளைத் தமிழ் மரபிலக்கணங்கள் அமைத்துக் கொண்டுள்ளதை இக்கூற்று தெளிவாக்குகின்றது.

Last Updated on Saturday, 12 March 2016 21:28 Read more...
 

தொல்காப்பியரும் அறிவியலும்! -

E-mail Print PDF

ஆய்வு! தொல்காப்பியரும் அறிவியலும்! -              தொல்காப்பியர் அறிமுகம்
இன்று தமிழில் கிடைக்கக்கூடிய மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்பதே அறிஞர்களின் முடிபாகும். தொல் - கா - பியம் என்பதே அதன் விரிவாகும். தொல் என்பது தொன்மை, கா என்பது காட்சி, இயம் என்பது இயம்புதல் அல்லது சொல்லுதல் என்று கௌ;ளமுடியும். இதனை அடிப்படையாக வைத்தே தொன்மையான மொழிசார்ந்த காட்சிகளை அழகுறக் கூறியுள்ளார் என்று கொள்ள முடியும். தொல்காப்பியம் என்ற பெயரினை அடியொற்றியே அதனை எழுதியவர் தொல்காப்பியர் என்றே குறித்தனர். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பிய தொன்மையும் திண்மையும் வாய்ந்த செந்தமிழ் எமது தமிழ் மொழியாகும். தொல்காப்பியமே தற்போதைய தொன்மையான நூலெனின் அதற்கு முன்பு எவ்வளவோ இலக்கியங்கள் கால, இயற்கை, செயற்கை அழிவுகளால் எமது கைக்குக் கிடைக்காமற் போயிற்று என்பதற்கு தொல்காப்பியமே சான்றாகும். அதில் ஏறத்தாள 280 ற்கு மேட்பட்ட இடங்களிலே என்ப என்றும், என்மனார் புலவர் என்றும் தனக்கு முந்திய புலவர்களால் கூறப்பட்டுள்ளதாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தனை இன்றைய தமிழ் மொழியின் வித்து எனலாம்.

தொல்காப்பியத்தின் காலம்

தொலகாப்பியத்தின் காலத்தினைப் பல அறிஞர்கள் பலவாறாகக குறிப்பிட்டுள்ளனர். சிலர் கிமு 10,000; ஆண்டிற்கு பலகாலத்திற முற்பட்டது என்றும,. பொள்ளாச்சி மகாலிங்கம் கிமு.10,676 என்றும், நாவலர் சோமசுந்தர பாரதியார் கிமு 10ஆம் நூற்றாண்டு, மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் கி.மு 7ஆம் நூற்றாண்டு என்றும், பேராசிரியர் வெள்ளைவாரணர் மற்றும் வி.ஆர்,ஆர்.தீட்சிதர் கி.மு 5ஆம் நூற்றாண்டு என்றும், மறைமலை அடிகள் கிமு.3ஆம் நூற்றாண்டு, சீனிவாச ஐயங்கார் கிமு 4ஆம் நூற்றாண்டு, பி.டி.சீனிவாச ஐயங்கார் கிபி இரண்டாம் நூற்றாண்டென்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி 4ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டென்றும் கூறியுள்ளார்கள். தொல்காப்பியத்தின் அகப், புறச் சான்றுகளை வைத்தே காலத்தினைக் கணிப்பர். இந்தவகையில் தேவநேயப் பாவாணர் கூறிய கி.மு. 7ஆம் நூற்றாண்டினை அல்லது 5ஆம் நூற்றாண்டினை அண்ணளவாகக் கொள்ளமுடியும் என்று பொதுவாக அறிஞாகளால் ஏற்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 29 February 2016 02:33 Read more...
 

ஆய்வு: புறநானூறு கூறும் கொடைச்சிறப்பும் மன்னர்களும்!

E-mail Print PDF

-பிரகாஷ் லக்ஸ்மணன் -சங்ககால நூல்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற புறநானூறு நூலானது அக்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சங்க கால மன்னர்கள் தங்களது சிறப்பகளாக பெரிதும் கொண்டிருந்த கொடைத்தன்மையானது மிக முக்கியமானதாக கருதிவந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக பல இடங்களை ஆய்வு செய்கிறபொழுது அவர்களது கொடைத்தன்மையின் பண்பை சில புலவர்கள் ஏற்றியும் கூறியுள்ளனர். மேலும் கடையெழு வள்ளல்கள் அவர்களது ஈகைப் தன்மை பற்றி இங்கே ஆய்வு செய்யபடுகிறது.

பாண்டியர்:

“தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!”(புறம்-6)
பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைத் தன்மையை புலவர் காரிகிழார் குறிப்பிடுகிறார். மேலும்
“-----------வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த”
(புறம்-9)

என்பதன் மூலம் முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைச்சிறப்பு பற்றி முக்கிய ஆதாரமாக நமக்குகிடைக்கிறது. பாண்டியன் பெருவழுதி பாணர்களுக்கு பரிசாக யானையை தந்தமையை

“பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றுஇது விறல்மாண் குடுமி!”(
புறம்-12) ல் குறிப்பிடப்படுகிறது.

Last Updated on Monday, 29 February 2016 00:32 Read more...
 

ஆய்வு: தமிழரின் சமூக ஊடாட்டங்களில் உடல் பற்றிய கருத்தியல்

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்ஒரு குறிப்பிட்ட பிரதேச எல்லைக்குள் வாழ்கின்றவர்கள் என்ற வகையிலும், அவ்வாறு வாழும்பொழுது, பொதுமைப்பாடுடைய பல்வேறு தொடர்புகளையும், உறவுகளையும், ஊடாட்டங்களையும் தமக்கிடையே மேற்கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும், அக்குழுமத்தினரை 'ஒரு சமூகம்' என அழைத்தல் மரபு. பாரம்பரிய தமிழ்ச் சமூகத்தில், மிக நீண்ட காலமாக, இந்த மனித உறவுகளையும் தொடர்புகளையும் ஊடாட்டங்களையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக, உடல் இருந்து வந்துள்ளது.

இவ்வாறான சமூக நடத்தைகளின்போது, உடலை மையமாக வைத்து, சமூக உறுப்பினர்கள் ஒருசாரார்மீது, 'பாகுபாடு' பேணப்பட்டு வந்துள்ளமைக்கு, ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள. ஒரு மனிதனின் உடல், இன்னொரு மனிதனால் தீண்டப்படுதலை, தடுத்து நிறுத்துவதற்கு வழிவகுத்த, இந்தப் பாகுபாட்டுக்கு, குறிப்பாகப் பெண்களும், இயற்கையாகவே உடலில் குறிப்பிட்ட குணாம்சங்களையோ அல்லது குறைபாடுகளையோ கொண்டவர்களும், சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்டவர்களும் இலக்காகி வந்துள்ளனர்.

மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு, உடல் வலுவின் அடிப்படையில், பெண்ணினத்திலும் வலுவான சக்தியாகக் கணிக்கப்பெற்ற ஆணினமானது, சமூகத்தின் சகல மட்டங்களிலும், தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்டது. பெண்ணினத்தை இரண்டாந்தர சக்தியாக, அடையாளப்படுத்திக்கொண்டது. இது போதாதென்று, கற்பு என்ற பொன் விலங்கை, பெண்களின் கரங்களில் பூட்டிக்கொண்ட தமிழ்க் கலாசாரம், 'மாதவிலக்கு' என்ற இயற்கையான உடலியல் செயற்பாட்டின்போதும், 'தீட்டு' என்ற பெயருடன் பெண்களின்மீது தீண்டாமையைத் திணித்துக்கொண்டது.

அடுத்து, இயற்கையாகவே உடலியல் மாற்றங்களுக்குள்ளாகி, அண்மைக் காலம்வரை அரவாணிகள் எனும் அருவெருக்கத்தக்க பெயரால் அழைக்கப்பட்டு வந்த திருநங்கையரை, சங்க இலக்கியங்களும், அறநூல்களும், பக்தி இலக்கியங்களும், காப்பியங்களும் 'அச்சுமாறிகள்' என்றும், 'ஆண் பெண்ணாகிகள்' என்றும், 'பரத்தையருக்கு ஒப்பானோர்' என்றும், 'அலிகள் - ஊனங்கள் - பேடிகள்' என்றும் குறிப்பிட்டு, அவர்களை இழிவானவர்களாகவும் கேள்விக்குரியவர்களாகவும் ஒதுக்கிய வரலாறு இற்றைவரை தொடர்கிறது. அனைத்து மாற்றுத் திறனாளிகளது நிலைமையும் எமது சமூகத்தில் இவ்வகைப்பட்டதே! மேலும், கறுப்பு நிறமுடையவர்களாகப் பிறந்த தமிழ்ச் சமூகத்தினர், அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னங்களாகவும் கருதப்பட்டு வருகின்றமைக்கான ஆரம்ப விதை, தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதியிலேயே நாட்டப்பட்டுவிட்டது.

Last Updated on Sunday, 21 February 2016 19:33 Read more...
 

ஆய்வு: வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்?

E-mail Print PDF

ஆய்வு: வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்?[ 'சிறகு' இணைய இதழில் வெளியான இக்கட்டுரையினை,இதன் பயன் கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்- ]

சில இனவெறிச்செயல்கள் அதிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தாததாகவும், மறைமுகமானதாகவும் இருப்பதுண்டு. அதைச் செய்பவருக்கும் தன்னால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்பது தெரியாது; பாதிக்கப்படுபவருக்கும் தன் மனதை அது வருத்தும் காரணம் தெளிவாகப் புரியாத அளவுக்கு நுட்பமான செயலாக அது அமைந்திருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆசிய அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருவது. அது சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கிழக்காசிய வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி அல்லது இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற தெற்காசிய நாடுகளின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி; புலம் பெயர்ந்த தங்களது முன்னோர்கள் எதிர்கொண்ட “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற அதே கேள்வியையே அமெரிக்க நாட்டில் பிறந்து அமெரிக்க குடிமக்களாகவே தங்களைக் கருதி வாழ்ந்து வரும் பிற்காலத் தலைமுறையினரும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் அயல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய பெற்றோர்களுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்த “முதல் தலைமுறை அமெரிக்கர்கள்” (The first generation Americans) ஆக இருந்தாலும், முதல் தலைமுறை அமெரிக்கர்களுக்குப் பிறந்த தொடர்ந்து வரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, விதிவிலக்கின்றி அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்’ என்றக் கேள்வியை எதிர் கொள்வார்கள். அதற்குக் காரணம் வெளிப்படையாகத் தெரியும் அவர்களது ஆசிய இனத்தைக் குறிக்கும் தோற்றம்.

இதனைப் புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. வ.ந. கிரிதரன் அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்? என்ற தனது கதையிலும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புலம் பெயர்ந்து வருபவர்கள் இக்கேள்வியை முதலில் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏனெனில் அதுதான் உண்மையும் என்பதால் அவர்களுக்கு அக்கேள்வி முதலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் தன்னை அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆக்கிக் கொண்டு, அவ்வாறே வாழத் துவங்கியதும், அக்கேள்வியின் அடிப்படை இனபேதம் கொண்டதாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் நேரங்களும் உண்டு. ‘உன்நாட்டிற்குத் திரும்பிப் போ’ அல்லது ‘நீ எங்களில் ஒருவர் அல்ல’ போன்ற மறைமுகப் பொருள் பொதிந்திருப்பதாகக் கூட கருதும் நிலையும் சில மோசமான சூழ்நிலைகளில் ஏற்படக் கூடும். தனது பணி வாய்ப்பு, அதில் முன்னேற்றம் போன்றவற்றில் தாங்கள் தட்டிக்கழிக்கப்பட நேர்ந்தால் தங்களது புலம் பெயர்ந்த பின்னணி அதற்குக் காரணமாக இருப்பதாகவும் ஐயுறுவதுண்டு.

Last Updated on Sunday, 21 February 2016 05:36 Read more...
 

ஆய்வு: நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே!

E-mail Print PDF

ஆய்வு: நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே!முன்னுரை
தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் குறித்த கவிதைகள் விரவிக் கிடக்கின்றன. அறிவியல் வளர்ச்சி விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்து வருகின்றது. அந்நிலையைக் கண்டு பெருமைப்படுகின்றோம். அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு, நீர்நிலைகள், காற்று மண்டலம் அனைத்தும் மாசுபட்டு காணப்படுகின்றது.

இம்மாசினைக் கண்டு சமூக நலனில் அக்கறை கொண்ட கவிஞர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வைகைச் செல்வியின் ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள சூழலோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளைப் பார்ப்போம்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. சுற்றுச்சூழலில் நீர் ஒரு முக்கிய அங்கம். மனிதன் இருக்கும் வரை நீரின் தேவை அவசியம். அதனைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது சமூகத்தின் கடமை, நாகரிகம் வளராத காலத்தில் நீர்நிலைகள் தூய்மையாக இருந்தன. இன்று நாகரிக வளர்ச்சியின் உச்ச நிலையைத் தொட்டு விட்டது. நீர்நிலைகள் நரகமாகக் காட்சியளிக்கின்றன. தொழில் வளர்ச்சி என்ற புரட்சியால் நதிகளின் நிலைமாறியதைக் கவிஞர் வைரமுத்து,

Last Updated on Tuesday, 16 February 2016 05:49 Read more...
 

ஆய்வு: இணையமும் தமிழும்

E-mail Print PDF

ஆய்வு!கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி என போற்றப்படும் தமிழ் மொழியானது ஓலைச்சுவடு காலம் தொடங்கி பல்வேறு விதமான கால கட்டங்களை கடந்து இணையம் வரை வளா்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளா்ச்சியடைந்துவிட்டது.

காலந்தோறும் மரபு வழிச் சாதனங்களால் பேச்சு வழக்கில் செய்தி பரிமாற்றம் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது. மனித சமூகத்திற்கு இசைச் சொற்பொழிவுகள், கலைகள், பாடல்கள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என எல்லாம் மக்களின் வாழ்வு சிறப்புற அமைய அறிவுரை கூறி வழிகாட்டியாக அமைந்திருந்தன. இதில் இருந்து மாறுபட்டு புதிய தொழில் நுட்பங்களாகிய தகவல் தொடா்பு வளா்ச்சிக்கு அடிப்படைக் காரணமான இணையம், தகவல் தொடார் புச் சாதனங்கள், மின் வழிச் சாதனங்கள், மின்னணுச் சாதனங்கள், அச்சு வழிச் சாதனங்கள், மின் இதழ்கள் போன்றவை மேம்படுத்தி வருகின்றன.  புதுப்புதுக் கோணங்களில் தகவல் தொடா்பினை மின்னணுச் சாதனங்களான ஒலிப்பதிவு கருவி, ஒளிப்படக் கருவி, ஆகிய சாதனங்களைக் குறிப்பிடுகின்றனா்.  களப்பணியைப் பொறுத்தவரை தொழில்நுட்பக் கருவிகள் தகவல்களை நுட்பமாகவும் நுணுக்கமாகவும் பெற்றுத் தருவதிலும் தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Last Updated on Tuesday, 16 February 2016 05:12 Read more...
 

ஆய்வு: இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடு

E-mail Print PDF

ஆய்வு: இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடுபழந்தமிழ் நூல்களில் சிறப்பிடம்பெற்ற நூலாக திருகுறள் விளங்குகின்றது. அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூலாக விளங்கும் திருக்குறள் மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்,  தர்மம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பற்றி நுவலுகின்றது. பழந்தமிழ் நூல்களிலும் நான்கு பெரும் பகுப்புகள் கொண்டள்ளன.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு, பதினென்மேல்கணக்கு
பதினென்கீழ்கணக்கு
ஐம்பெருங்காப்பியங்கள்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்

அவற்றில் பதினென்கீழ்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் முப்பால் என்னும் பெயரோடு இந்நுல் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம், ஆகிய  மூன்றும் பால்களும் கொண்டமையால் முப்பால் எனப் பெயர்பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் இயல் என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது, ஒவ்வொரு அதிகாரமும் பத்துப்பாடல்களைக் தன்னுள் அடக்கியது.

Last Updated on Tuesday, 16 February 2016 05:24 Read more...
 

ஆய்வு: சங்க நூல்கள் சாதியத்தின் ஊற்றுக்கால்களா?

E-mail Print PDF

ஆய்வு: சங்க நூல்கள்; சாதியத்தின் ஊற்றுக்காலா?அறிமுகம்: சங்க நூலகள் யாவை?
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர், மூவேந்தர்களும் சங்கச் சான்றோராகிய புலவர்களுமாகும். மூன்று சங்கங்கள்; தமிழ்கூறு நல்லுலகில் இருந்ததாகவும் அதனை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று காலவகையில் அடக்கியிருந்தார்கள் முதற் சங்கத்தில் 4440 புலவர்களும் அது 4449 ஆண்டுகள் இருந்ததாகவும், இடைச்சங்கத்தில் 3700 புலவர்களிடம் 3700 புலவர்கள் வாழ்ந்தாகவும் மூன்றாவது சங்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டென்றும் கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற தமிழ்க்கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களாக உள்ளதனால் அவ்வெழுத்து வளர சில நூற்றாண்டு காலம் சென்றிருக்கும் என்பதனால் கி;பி 1ஆம் நூற்றாண்டில் கடைச்சங்கம் இருந்திருக்கலாம் என்று நீலகண்ட சாஸ்திரிகள் கூறுவா.; பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி 5ஆம் நூற்றாண்டென்றும் வாதிடுவர். இங்கு எமது கட்டுரைக்கு கால ஆராய்ச்சி என்பது முக்கியமல்ல. முச்சங்கக் கருத்தினை ஏற்போராக ஊ.வே.சாமிநாதையர், கே.எஸ்.சீனிவாசகபிள்னை, கா.சு.பிள்ளை, தேவநேயப்பாவாணர், மா.இராசமாணிக்கனார் ஆகியோர் இருந்துள்ளனர்.

தற்போது கிடைக்கும் சங்க நூல்கள் என்று நோக்கும் போது தொல்காப்பியமே தற்போது நமக்குக் கிடைக்கக்கூடிய முதல் நூலாகப் போற்றப்படுகின்றது. இதனை இடைச்சங்கத்து நூல் என்று வகைப்படுத்துவர். தற்போது கிடைக்கக்கூடிய ஏனைய சங்க நூல்களாக எட்டுத்தொகை நூல்களையும் பத்துப்பாட்டு நூல்களையும் குறிபிடலாம். இந்த ஆய்வுக்கட்டுடையில் சங்கநூல்களாகிய தொல்காப்பியத்திலிருந்தும், எட்டுத் தொகை நூல்களிலும் காணப்படும் சில கருத்துக்களும் சொற் பயன்பாடு;;களும், எதிர் காலத்தில் தோன்றி இன்று வரை தலைவிரித்தாடும் சாதியத்திற்கு வித்திட்டதா என்பதனை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Sunday, 14 February 2016 22:19 Read more...
 

ஆய்வு: பண்பாட்டு அபகரிப்பு

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்ஆங்கிலேய அரசியல்வாதிகள் பட்டு வேட்டி, நஷனல், சால்வை சகிதம் தமிழர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் காட்சிகளை அண்மைக் காலங்களில் கனடாவில் கண்டிருக்கின்றோம். அப்போதெல்லாம் இவர்களுள் பலரும் ‘வனக்கம்’ என்று பேசத் துவங்கி, ’நான்றி’ என்று பேசி முடிக்கக் கேட்டிருக்கின்றோம். 2012இல் ஓப்ரா வின்ஃப்றி நெற்றியில் பொட்டுடன் மும்பாய் வீதிவழியே நடந்து சென்றதை அறிந்திருக்கின்றோம். சாறியும் பொட்டும் அணிந்தவராய் மடோனா இசை நிகழ்ச்சியில் பங்குகொண்டதைப் பார்த்திருக்கின்றோம். இவையும் இவைபோன்ற இன்னபிறவும் சமூக, அரசியல், பொருளாதார பலாபலன்களை உள்நோக்காகக் கொண்ட பண்பாட்டுப் பகடைக்காய் நகர்த்தல்கள் மட்டுமே என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும் எருமைச் சருமத்தில் மழைத்துளி விழுந்தாற்போல, இவை குறித்து அக்கறை ஏதுமற்றவராய் ஏனோதானோவென்று வாழாதிருப்பதை விடுத்து, இவற்றின் பின்னணியில் தோன்றாப் பொருளாய் மறைந்திருக்கும் அதிகார அரசியலையும் – அதன் பெறுபேறாக வரலாற்று வழிவந்த வலிகள், வேதனைகள், அவமானங்கள் ஆகியவற்றைப் புதைபண்புகளாகக் கொண்ட ‘பண்பாட்டு அபகரிப்பு’ (Cultural Appropriation) எனும் எண்ணக்கருவையும் - நாம் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

‘ஒரு பண்பாட்டினரின் கூறு ஒன்றினை அல்லது கூறுகள் பலவற்றினைப் பிறிதொரு பண்பாட்டினர் தமதாக்கிக் கொள்ளல் ‘பண்பாட்டு அபகரிப்பு’ என்பது ஓர் எளிய, இலகுவான வரைவிலக்கணம். அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்களின் பாரம்பரிய உணவான ’பிற்ஸா’ இப்போது அமெரிக்கரது பாரம்பரிய உணவாகிவிட்டமையை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். ஆனால் பண்பாட்டு அபகரிப்பு என்பது இத்தகையதோர் இலகுவான விடயமல்ல. ‘ஒரு பண்பாட்டின் சில குறிப்பிட்ட மூலக்கூறுகளை அப்பண்பாட்டினரின் சம்மதமின்றி அல்லது விருப்பின்றி பிறிதொரு பண்பாட்டினர் தம்வசப்படுத்துதலே ’பண்பாட்டு அகரிப்பு’ என இன்னொரு வரைவிலக்கணம் கூறுகின்றது.

Last Updated on Monday, 08 February 2016 22:00 Read more...
 

ஆய்வு: சங்க காலத்தில் புலம் பெயர்வு

E-mail Print PDF

புலம் பெயரும் மானுட சமுதாயம் ...- பா.சிவக்குமார்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -மக்கள் தொன்று தொட்டு தங்கள் வசித்து வந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லுதல் புலம் பெயர்வு எனப்படும். இயற்கை பேரிடர்களாலோ, மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்ற போர் முதலான செயற்கைப் பேரிடர்களாலோ, தங்களுக்கு (மக்களுக்கு) வாழக்கூடிய சூழல் நிலவாத பொழுதோ, உயிர்க்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் பொழுதோ, மக்கள் தங்கள் வசித்த புலங்களை விட்டு வேறு இடத்திற்குச் செல்கின்றனர். தற்காலத்தில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போரின்போது பல இலட்சம் தமிழ் மக்கள் தங்களின் நாட்டை விட்டு பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். இவை போன்ற புலம் பெயர்வு சங்ககாலத் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. சங்க காலத்தில் புலம் பெயர்வு சங்ககால  மக்களின் புலம் பெயர்வானது, இயற்கைப் பேரிடர், ஆறலைக் கள்வரால் உயிர்க்கும் உடைமைக்கும் ஏற்பட்ட பாதிப்பு, அரசாதிக்கப் போரால் ஏற்பட்ட அழிவுகள் போன்றவற்றின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இயற்கைப் பேரிடரால்  புலம் பெயர்ந்த மக்கள்
நிலம், நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தன் நிலையிலிருந்து திரியும் பொழுது இயற்கைப் பேரிடர் ஏற்படுகின்றது. தொடர்ந்து பெய்யும் பெருமழையால் உருவான வெள்ளத்தினால் தம் கால்நடைகள் மற்றும் தமக்கு ஏற்படும் துன்பத்தினைக் கண்டு அஞ்சிய கோவலர்கள் தங்கள் பழகிய நிலத்தை விட்டு, வேறிடம் நோக்கிப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் பொழுது தங்கள் நிலத்தை விட்டுப் பிரிய மனமின்றி உள்ளம் கலங்கியதை,

“புலம்பெயர் புலம்பொடு கலங்கி”                                             (நெடுநல். 5)

என்ற நெடுநல்வாடை வரி புலப்படுத்துகிறது. இவ்வாறு இயற்கைப் பேரிடர் ஏற்படும் சூழல்களில் சங்ககால மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். ஆறலைக் கள்வரால் ஏற்பட்ட அழிவுக்கு அஞ்சி புலம் பெயர்ந்த மக்கள் ஆறலைக் கள்வர்கள் வழிப்போவாரைக் கொன்று பொருள் கொள்வதோடு மட்டுமன்றி ஆயர் புலத்திற்குச் சென்று ஆநிரைகளையும் களவாடிச் சென்றுள்ளனர். தீக்கொள்ளியையும் நீண்டு திரண்ட அம்புகளையும் கையிற் கொண்டவராய், இரவு நேரத்தில் ஆயர்களின் ஊரினுள் புகுந்து, அவர்களைத் தாக்கி அழித்து, அங்கிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து வருகின்றபொழுது, எழுந்த ஆரவார ஒலி கொடிய சுரவழி எங்கும் மாறிமாறி ஒலித்தது என்பதனை, அகம். 239ஆம் பாடல் வழி அறியமுடிகிறது. இரவில் யாரும் அறியாமல் ஆநிரை கவர்ந்து வருகின்றபோது, அதை அறிந்த ஆயர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஆரவாரத்துடன் அக்கள்வரின் பின்னே ஓடிச்சென்று பசுக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை,

Last Updated on Saturday, 06 February 2016 07:06 Read more...
 

ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!

E-mail Print PDF

- பா.சிவக்குமார்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!உளமொத்த காதலர்கள் களவு வாழ்வில் இருந்து திருமண வாழ்வில் இணைதல் வேண்டித் தலைவனும் தலைவியும் சுற்றத்தார் யாரும் அறியாவண்ணம் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லுதல் உடன்போக்கு என்பர். இவ்வுடன்போக்கின் போது, தலைவனும் தலைவியும் தலைவியின் வீட்டார் சார்ந்த சூழல், இயற்கை சார்ந்த சூழல் என இருவகை சூழல்களின் தாக்குதலுக்கு உட்படவேண்டியுள்ளது. இத்தாக்குதலில் தலைவியின் வீட்டார் நிகழ்த்திய வன்முறைப் பதிவுகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

உடன்போக்கு

அலர், இற்செறிப்பு, நொதுமலர் வரைவு, வரைவு கொடாமை போன்ற இடையூறுகள் ஏற்படும் பொழுது, தோழியின் உதவியுடன் தலைவியின் உறவினர் யாரும் அறியாவண்ணம் இல்லறவாழ்வை மேற்கொள்ளும் பொருட்டுத் தலைவியைத் தலைவன் தன்னுடன் அழைத்துச் செல்வது உடன்போக்கு எனப்படும். அதாவது, களவுவாழ்வில் ஈடுபட்டிருந்த தலைவனும் தலைவியும் கற்பு வாழ்வை (திருமணவாழ்வு) மேற்கொள்ளுதல். இவ்வுடன்போக்கு எல்லாக் காலத்தும் நிகழும். இதற்கு, “ஒருவழித் தணத்தற்குப் பருவங் கூறார்” (அகப்பொருள் விளக்கம், நூ.40)  என்று அகப்பொருள் விளக்கம் சான்று பகர்கின்றது.

சங்க இலக்கியத்தில் உடன்போக்குக் குறித்த பாடல்களாக, நற்றிணையில் 21 பாடல்களும், குறுந்தொகையில் 19 பாடல்களும், ஐங்குறுநூற்றில் 40 பாடல்களும், அகநானூற்றில் 36 பாடல்களும், கலித்தொகையில்  ஒரு பாடலும்  என மொத்தம் 117 பாடல்கள் உள்ளன.

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் செவிலித்தாய், நற்றாய் மற்றும் உறவினர்கள் (தந்தை, தமையன்) சென்றதாக மட்டுமே பதிவுகள் காணப்படுகின்றன. ‘தோழி’ தேடிச் சென்றதாகப் பதிவுகள் இல்லை.

Last Updated on Friday, 22 January 2016 02:45 Read more...
 

ஆய்வு: தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!

E-mail Print PDF

தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்! - சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை - தமிழர்கள் செவ்விய வாழ்வியலை உடையவர்கள். அவர்களின் செம்மார்ந்த வாழ்வுக்கு சான்றுகள் பல உண்டு. சங்கத்தமிழர் வாழ்க்கை முறையும் கடவுட் கோட்பாட்டு  கட்டமைப்பும்  இயல்புநிலைச் சார்ந்த வழிமுறையின் பின்னணியை உணர்த்தி நிற்கிறது.  வழிபாட்டு அமைப்பு முறை உலகளாவிய தன்மையில்  எந்தத் தடத்தில் தொடங்குகிறதோ  அவ்வழி இங்கும் உள்ளதென்பது புலப்படுகிறது.  வைதீக அமைப்பு முறையும் தொல் தமிழர் கடவுட்கொட்பாட்டு வழித்தடமும் எந்த நிலையில் ஒத்துப் போகிறதென்றும் எங்கு வேறுபடுகிறது என்றும் மானிட வளர்நிலை அமைப்பில் பார்க்கிறபோது தமிழர்க் கடவுட்கோட்பாட்டு  அமைப்பின் அடித்தளத்தை உணரமுடியும்.

வழிபடுதல்:
வழிபாடு என்பது ஒன்றின் மையப்பொருளில் ஒன்றித்து பயணப்படுதல். இலக்கை மையமாகக் கொண்ட தமிழர் வாழ்வில் கடவுள் என்னும் கோட்பாடு இழைந்து காணப்படுகிறது. பதுக்கையும் நடுகல்லும் சான்றாய் நின்று விளங்கும்.

“விழுத்தொடை மறவர; வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துஉடை நடுகல் அன்ன’’ 1

தொல்லியலார் கல்திட்டைகளையும் பதுக்கைகளையும் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளனர். சங்க காலத்தில் இத்தகைய கல் பதுக்கைகள் இருந்தன. தரையைத் தோண்டிச் சிறிது நிலத்திற்கடியில் இருக்குமாறோ அல்லது முழுவதும் அடியிலிருக்குமாறோ பிணக் குழியை அமைப்பர். நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் பட்டைகளை இதற்குப் பயன்படுத்தனர். இக்குழியைச் சுற்றிலும் ஒன்றிரண்டு வரிரசைகளில் கல்சுவர்கள் எடுப்பர். ஈமப் பொருளைக் குழியிற் போட்டபின் ஒரு கல்லால் மூடிவிடுவர். அதற்குப் பிறகு மேலே கூழாங்கற்கள் பரப்பப்பட்டன. இது புதைபொருள் ஆய்வாளர் கண்டுள்ள பதுக்கைகளின் அமைப்பாகும்.

‘‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை’’2

Last Updated on Saturday, 16 January 2016 21:10 Read more...
 

ஆய்வு: மூலப்பாட இனவரைவியலாக்கத்தில் முல்லைப்பாட்டின் சூழமைவு!

E-mail Print PDF

- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -முல்லைப்பாட்டினை நப்பூதனார் எனும் நல்லிசைப் புலவர் ‘முல்லை’ப்பூவை, திணையாகவும் நிலமாகவும் கொண்டு அக ஒழுக்கத்தினை விரித்துரைத்து செய்யுளாக இயற்றியுள்ளார். ஒரு நிலத்தை தெரிந்து கொள்ள முற்பட்டால் முதலில் அந்நிலத்தில் வாழக்கூடிய கருப்பொருளான உயிரினங்களை உள்வாங்க வேண்டும். பின்பு நிலத்தில் வாழும் தெய்வம் தொடங்கி, மக்கள் புள், பறை, செய்தி, யாழ், பறை என இன்னபிற இனங்களையும் உள்வாங்கி இனங்கான வேண்டும். அவ்வகையில் முல்லைப்பாட்டு  அகமாக இருப்பினும் இரண்டு வகையான கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. அகவாழ்கையில் தலைவனைப் பிரிந்து தனிமையில் வாழும் தலைவி, அவளது ஊர் வாழ்க்கையும், அதற்கு நேராக போர்க்களத்தில் பாசறையின்கண் நிகழும் போர்ச்செயல்பாடு, அதனைச் சுற்றி நிகழும் வாழ்க்கை எனக் கட்டமைக்கிறது முல்லைப்பாட்டு.

தொல்காப்பியர் இதனை ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ (தொல்.1007)  என்பர். போர்களத்தில் போர்க்காகச் சென்ற தலைவன் முல்லை அகத்திணையின் புறத்திணையை ஒட்டியே வாழ்வதையும், தலைவி வீட்டில் தலைவனுக்காக ஆற்றியிருத்தலும், தலைவன் தலைவிக்காகப் போர்வினை முடிவுக்குக் காத்திருத்தல் என்ற இருமையும் முன்னின்று ‘முல்லை’க்கான இருத்தல் நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறது.
இனவரைவியல் ‘Ethnography’  விளக்கம்

இனவரைவியல் மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்பாட்டு நிலைகளை விளக்கமாக அமைக்கும் ஒரு வகை எழுத்தாக்கம். இது சமுதாயப்பண்பாட்டு மானிடவியலுக்கு ஊன்று கோலாகச் சுழல்வது. இப்பதம் ‘Ethnography’  என்னும் ஆங்கிலச்சொல். ‘ethnos’ ‘graphin’ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. ‘ethnos’ என்பதற்கு இனம் (race)  இனக்குழு (ethnic group)> மக்கள் (People) என்று பொருள். ‘graphinenin’ என்பதற்கு ‘எழுதுவது’ அல்லது ‘வரைதல்’  என்பது பொருள்” ஆகையால் தான் இனவரைவியல் தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி வரைவாக்கம் செய்வதாகும்.

Last Updated on Monday, 28 December 2015 01:28 Read more...
 

ஆய்வு: தொல்காப்பியரின் திணைக் கோட்பாடும் - பிற்கால இலக்கண நூல்களில் அதன் வளர்ச்சியும்

E-mail Print PDF

 - கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -தமிழரின்  தொன்மைமிக்க வாழ்வியல் முறையினை எடுத்துரைக்கும் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரமாகும். தமிழர்கள் மலைகளில் வாழ்ந்து உடைமைகளைப் பேணிக்காக்கக் காடுசார்ந்த பகுதியில் வாழ்ந்து பின்பு நாகரிக வளர்ச்சியடைந்து நிலமும் நீரும் வளமும் பெருகி இருந்த வயல்சார் மருதநிலத்தில் வாழ்ந்து,  வாணிகம் பொருட்டு கடல்சார்ந்த நெய்தல் பகுதியில் குடியேறி ஒப்பற்ற வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர். மேலும் அவர்கள் மலைச்சாரல் பகுதிகளிலும்,  அழகிய புல்வெளி சார்ந்த காடுகளும் வறட்சியுற்ற போது பாலை என்ற நிலம் உருவானது. அங்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாழ்க்கை முறையினை உணர்ந்த தொல்காப்பியர் அக வாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை என இரண்டாகப் பகுத்துள்ளார். அதில் ‘அகம்’ காதல் சார்ந்த வாழ்க்கையினையும்,‘புறம்’ நாடு சார்ந்த போர், வீரம் போன்ற வாழ்வியல் சூழலையும் எடுத்துரைத்துள்ளது. தொல்காப்பியர் திணையை ஒழுக்கம் என்னும் பொருளில் கையாண்டு அக ஒழுக்கம் ஏழினையும் புறஒழுக்கம் ஏழினையும் பிரித்தறிகின்றார்.
இதனை,

“கைக்கிளை முதலா ஏழ் பெருந்திணையும்
முற்கிளந்த தனவே முறைவயினான்”1

என்ற நூற்பாவில் சுட்டுகிறார். அதாவது கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என அகத்திணைகள் ஏழு என்கிறார். இத்திணைகளின் நெறிமுறைகளைப் பொருளதிகாரத்தின் அகத்திணையியல் முதல் நூற்பாவில் (தொல்.அகத்.நூ.1)கூறப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர்,“திணையாவது கைக்கிளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு”2 என்பார். அதாவது இந்நூற்பாவில் கைக்கிளை முதலா ஏழ்பெருந்திணையும் அகத்திணை என்றும் அவற்றின் முறையே என்பதற்கு புறமாகிய  பாடாண், வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை, காஞ்சி என்றும் புறத்திணை ஏழும் சேர்ந்து பதினான்கு திணை என வரையறுக்கிறார் இளம்பூரணர். பேராசிரியர்,“கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய். எழும் முன்னர்க் கிளக்கப்பட்டன”3 என்பார். மேலும் நச்சினார்க்கினியர்,“கைக்கிளை  முதலா  எழுபெருந்திணையும்  கைக்கிளை  முதலாக முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்ற  எழு நிலனும், முறைநெறி வகையின் - அவற்றிற்கு முறைமை வழியிற் புறமென அடைத்த வெட்சி முதற் பாடாண் பகுதியீறாகிய எழுபகுதியோடே கூட்ட, முற்கிளந்தனவே-முன்னர்க் கிளக்கப்பட்டனவேயாகச் செய்யுட்குறுப்பாய் நிற்கும்”4 என்பர். இளம்பூரணர் நூற்பாவில் வரும் “முறைமையினான்” என்ற பாடத்தை மாற்றி “முறை நெறிவகையின்” என  பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டுள்ளனர். இத்திணை என்னும் உறுப்பு செய்யுட்குரிய உறுப்பாக அமைந்துள்ளது. ஒரு செய்யுளில் முதல், கரு, உரிப்பொருள் மூன்று சேர்ந்து வந்தால் தான் அச்செய்யுள் அகப்பாட்டுறுப்பாக அமையும் என்பது தொல்காப்பியரின் திணைக்கோட்பாடாகும். இத்திணைக் கோட்பாடு செய்யுளில் பாடப்பெறும் ஒழுகலாறுகளை அகமும் புறமும் எனப் பாகுப்படுத்தி அறிவதற்கான கருவியாகும்.

Last Updated on Saturday, 12 December 2015 19:14 Read more...
 

ஈழத்தமிழா்களின் வலியினை எழுதிச்செல்லும் தீபச்செல்வன் கவிதைகள்

E-mail Print PDF

எழுத்தாளர் வ,ந,கிரிதரன் -

கவிதை கவிஞனின் அகத் தேடலில் விழைவது. கவிதை கவிஞனுக்குள் நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட முடியாத ஒரு மையத்திலிருந்து உருவாக்கம் பெறுவது. கவிதை  உருவாக்கப்படுபவை அல்ல, மனித உணா்வினில் உருவாவது. காட்டிடை வைக்கப்பட்ட சிறுகனல் காடெங்கும் பரவுவது போல மனிதனின் உணர்வினைத் தாக்கிய சிறுவடு கவிதையெனும் தீயாய் பற்றிப் படர்கிறது. அந்த சிறுவடுவே கவிதைக்கான தொடக்கப்புள்ளி. அந்த வடு இல்லாமல் கவிதையும் இல்லை. கவிஞனும் இல்லை. கவிஞனை உரசி காயப்படுத்திய அந்த நிகழ்வே கவிஞனுக்கான முகமும், அவனது அடையாளமும் கூட. இவ்வாறாக கவிதைக்கு ஆயிரம் விளக்கங்களை அவரவர் அனுபவத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கலாம்.

ஈழத்துப் போர்ச்சூழலில் கவிதையின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும்  பெண்கவிஞர் கவிதா,

“ஒரு சமூகத்தின்
சோகம் சுமந்த பாரத்தில்
கூனிமுடமாகி
உருக்குலைந்து
கண்களைக் குருடாக்கிய
கொலைக் களத்திலிருந்து
உயிர் தப்பிய கவிதை இது”
(முள்ளிவாய்க்காலுக்குப்பின், ப-37)

என்று குறிப்பிடுகின்றார். இப்பதிவு ஈழத்தமிழர்களின் கவிதைகளை ஒரு சமூகத்தின் வலிநிறைந்த வரலாற்று ஆவணமாக நம்மை நோக்கச் செய்கின்றது. இது போன்ற அழுத்தமும் அடர்த்தியும் நிறைந்த பதிவுகள் இன்னும் வேறுபட்ட நிலைகளில் வெவ்வேறு படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும்.

Last Updated on Tuesday, 01 December 2015 22:48 Read more...
 

திருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொகுதியை மையப்படுத்திய ஒரு பார்வை.

E-mail Print PDF

கவிஞர் திருமாவளவன்dr_n_subramaniyan.jpg - 12.37 Kb(05-10-2013 அன்று ஸ்காபரோ ஸிவிக் சென்டர் மண்டபத்தில் திரு. க. நவம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த கவிஞரின் முதுவேனில் பதிக அறிமுகவிழாவில்  என்னால்  நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் இது. கவிஞர் நீண்டநாள்கள் வாழ்ந்து  எமது நெஞ்சை நிறைவிப்பார் என்பதான ஆர்வத்துடன் மேற்படி உரை  நிகழ்த்தப்பட்டது. அதனைஇன்று அவர் நம்மைப் பிரிந்துவிட்ட சோகச் சூழலில் அவரது நினைவைப் பதிவுசெய்யும் நோக்கில் வாசகர்கள் பார்வைக்கு முன்வைத்து எனது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

தோற்றுவாய்

கனகசிங்கம் கருணாகரன் என்ற இயற்பெயர் தாங்கியவரான  திருமாவளவன் அவர்கள் தமிழ்க் கலை இலக்கியத் துறைகளில்  கடந்த ஏறத்தாழ  இருபதாண்டுகளாக  தொடர்ந்து இயங்கிவருபவர். பனிவயல் உழவு (2000)அஃதே இரவு அஃதே பகல் (2003)இருள்- யாழி (2008) மற்றும் முதுவேனில்  பதிகம் (2013) ஆகிய தொகுதிகள் ஊடாக தமது கவித்துவ ஆளுமையை நமது கவனத்துக்கு  இட்டுவந்துள்ள இவர், சேரன், சி.சிவசேகரம், வெங்கட்சாமிநாதன் , மோகனரங்கன், இராஜமார்த்தாண்டன் மற்றும் கருணாகரன் ஆகிய சமகால இலக்கிய வாதிகளால் தரமான ஒரு கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவருமாவார்.  கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருதை 2010இல் இருள் யாழி தொகுதிக்காக இவர் பெற்றுக்கொண்டவர். ஒரு படைப்பாளியாக மட்டுமன்றி இதழியலாளராகவும் நாடகக்கலைஞராகவும்கூடத்  திகழ்பவரான திருமாவளவன் அவர்கள் (1995—1997காலப்பகுதியில்) கனடா  எழுத்தாளர் இணையத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்தியவருமாவார். இவ்வாறு கடந்த ஏறத்தாழ  இருபதாண்டுகளாக கலை இலக்கியத் துறைகளில் செயற்பட்டுநிற்கும் திருமாவளவனின் ‘கவித்துவப் ஆளுமை’ தொடர்பான எனது அவதானிப்பு இங்கே முன்வைக்கப்படவுள்ளது. அவரது அண்மை வெளியீடாக இங்கு அறிமுகமாகும் ‘முதுவேனில் பதிகம்’ (2013) என்ற தொகுதியை முன்னிறுத்தி அமையும் இவ்வுரையானதுஅவரது ஒட்டுமொத்த கவித்துவப் பயணத்தையும் கருத்துட்கொண்டதாகும் .

Last Updated on Wednesday, 07 October 2015 19:49 Read more...
 

வன்னிப் பிரதேசத் தமிழ் இலக்கியம்: ஈழத்தின் வன்னி மண்ணின் பண்டைய இலக்கியங்கள் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு

E-mail Print PDF

(நோர்வேயில் வதியும் ஈழத்தமிழரான  திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் என்பாரின்  பதிப்பு முயற்சியில் 2014இல்  வெளிவந்ததான வன்னி வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பிலான பெருந் தொகுப்பில் (675 பக்கங்கள்) இடம்பெற்ற கட்டுரை. எழுதியனுப்பிய நாள் 29-03-2014)

தோற்றுவாய்
dr_n_subramaniyan.jpg - 12.37 Kbஈழத்திலே தமிழர் பெருந்தொகையினராக  வாழும் நிலப்பரப்புகளிலொன்றாகத் திகழ்வது வன்னிப் பிரதேசம் ஆகும். இப்பிரதேசமானது  பண்டைக்காலம் முதலே தமிழரின் கலைகள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைச் சிறப்புற வளர்த்துவந்துள்ளது. இன்றும் வளர்த்துவருகின்றது.    ஈழத்தின் ஒட்டுமொத்த  தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலே வன்னிப்பிரதேசத்திற்;கு  ஒரு தனி இடம் உளது என்பது அழுத்திப் பேசப்படவேண்டிய முக்கிய அம்சமாகும்.  இவ்வகையில் இம்மண்ணின் இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான ஆய்வுப் பார்வையானது  தனியாக ஒருநூலாக விரிவுபெறக்கூடிய பொருட்பரப்புடையதாகும். இத்தொகுப்புநூலின்   இடச்சுருக்கம் கருதி பண்டைய இலக்கியங்களின் தோற்றம் தொடர்ச்சி என்பன தொடர்பான  மிக முக்கிய செய்திகளை மையப்படுத்திய ஒரு வரலாற்றுக் குறிப்பாக மட்டுமே  எனது இக் கட்டுரை முயற்சி அமைகிறது.1

1. வன்னி என்ற நிலப்பரப்பும் அதன் இலக்கிய வளமும்
வன்னிப் பிரதேசம் என்று இன்று நாம் குறிப்பிடும் நிலப்பரப்பானது, வடக்கில் யாழ்ப்பாணக் கடலேரியையும் தெற்கில்  வடமத்திய மாகாணப்பகுதி மற்றம் அருவியாறு ஆகியவற்றையும் கிழக்கிலும் மேற்கிலும் முறையே திருக்கோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டதாகும்.  ஏறத்தாழ 2000சதுரமைல் பரப்பளவுடையதான  இந்நிலப்பரப்பில் பெரும்பகுதி இன்றைய ‘வன்னி’ மற்றும்   ‘முல்லை’ மாவட்டங்களுள் அடங்கியதாகும்.

ஆயினும்,  கடந்தசில நூற்றாண்டுகளுக்கு முன்வரை-குறிப்பாக 12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்காலப்பகுதிகளில்- ‘வன்னி’ என்ற அடையாளச் சுட்டானது மேற்சுட்டிய எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து பரந்ததாக அமைந்திருந்தது என்பது இங்கு நினைவிற் கொள்ளப்படவேண்டியதாகிறது. குறிப்பாக மன்னார் மற்றம் திருக்கோணமலை மாவட்டப் பகுதிகளையும் உள்ளடக்கி , தெற்கே புத்தளம் மற்றும்  மட்டக்களப்பு ஆகிய   மாவங்கள் வரை  விரிந்து பரந்த நிலப்பரப்புகளும்   ‘வன்னி’ என்ற  அடையாளம் அக்காலப்பகுதிகளில் பெற்றிருந்தன. வன்னிபம் அல்லது வன்னிமை எனப் பெயர்தாங்கிய குறுநில ஆட்சியாளர்களின் ஆட்சிப்பிரதேசங்களாக  இந்நிலப்பரப்புகள் திகழ்ந்துவந்துள்ளன. எனவே ஈழத்தின் வன்னிப் பிரதேசமானது பண்டைய நிலையில்  பரந்து விரிந்ததாகத் திகழ்ந்தது என்பதையும்  நாளடைவில் அதன் எல்லைகள் சுருங்கிவந்துள்ளன  என்பதையும் இங்கு கருத்துட்கொள்வது அவசியமாகும்.

Last Updated on Wednesday, 18 November 2015 08:17 Read more...
 

ஆய்வு: காமத்துப்பாலில் கண்களின் அழகியல் வெளிப்பாடு

E-mail Print PDF

ஆய்வு: காமத்துப்பாலில் கண்களின் அழகியல் வெளிப்பாடுமனித வாழ்வில் கண்கள் தனியொருவனின் சொத்தாகும். இது இன்பம், துன்பம் சார்ந்த அழகியல்களை உடலியலால் சிலிர்க்கச் செய்கிறது. நல் நிமித்தக் காட்சிகளைக் கண்டு இன்பம் கொள்வதற்கும், துன்பக்காட்சிகளைக்கான விரைந்து செல்வதற்கும் கருவியாகப் பயன்படுகிறது. காட்சிப்படுத்துகிறது; நினைவூட்டுகிறது; என அனைத்துச் செயல்களிலும் உடலியல்பு கொண்டு இயங்குகிறது கண். ஆகையால் என்னவே! ஐம்புலங்களில் ஒன்றான கண்ணைப்பற்றி, ‘கண்விதுப்பிழிதல்’ எனக் கூறி ‘குறிப்பறிதலை’ இரண்டு முறை அதிகாரப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.

“காமத்துப்பாலில் அறக்கருத்துக்களை தொகைவகைப் படுத்திக் கூறும் அறங்கூறும் ஆசானாகக் காட்சித் தரவில்லை, கலையுணர்வு மிக்க கலைஞனாகத் தோன்றுகிறரர்.” என்று கு. மோகனராசு கூறுகிறர். கண்கள் மனிதனின் உடல் சார்ந்த அழகியல் வெளிப்பாடு. தனியொருவனின் அடையாளம், குடும்பம், சமூகம் என அனைத்துப் பகிர்வுகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி இயங்கச் செய்கிறது. வள்ளுவர் காலச் சமூக சூழல்களில் இத்தகைய பின்அமைவு நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு இனைப்புற வாழ்ந்ததால் குறிப்பறிந்து கண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். முக்கியத்துவம் கொடுக்கப்ட்ட கண்களின் அழகியல் வெளிப்பாடு தனிநிலையிலே பெரிதும் இன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்திருக்கிறது. மேலும் களவு கற்பு வாழ்க்கையில் கண்ணின் வெளிப்பாடு எவ்வாறு வெளிப்பட்டுள்ளது. கண்ணை எந்தளவிற்கு ஆண்கள் பெண்கள் பயன்பாட்டுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்? குடும்பம், சமூக வாழ்வில் எந்தளவிற்கு கண்ணின் ஈடுபாடு இருந்துள்ளது என்பதைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Last Updated on Thursday, 08 October 2015 18:42 Read more...
 

வள்ளுவரின் உறவு மேம்பாட்டுச் சிந்தனை

E-mail Print PDF

முன்னுரை
செ.ரவிசங்கர்திருக்குறள் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது, யார் எழுதினார், எந்த சமயத்தைச் சார்ந்தவர் எழுதினார், யாருக்காக எழுதப்பட்டது, இது போன்ற பல கேள்விகள் பல நூற்றாண்டுகளாக எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அனைவராலும் ஏற்றுக் கொண்ட கருத்தின் அடிப்படையில் திருவள்ளுவர் இயற்றினார் சங்கம் மருவிய காலத்து நூல், சமண சமயத்தவர் எழுதியது, உலக மக்களுக்காக பொதுவாக எழுதப்பட்டது போன்றவற்றை மையமாகக் கொண்டு அதில் உள்ள கருத்துக்களை இன்று போற்றி வருகிறோம் எனவே தான் மு.வ அவர்கள் சமயங்களின் அடிப்படை உண்மையும் ஒன்றே என்ற தெளிவு பெற்றுவிட்ட காரணத்தால் எல்லாச் சமயங்களையும் ஊடுருவிட பார்த்து அடிப்படை உண்மையை மட்டும் உணர்த்தும் பான்மையைத் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் காண்கிறோம்.

மிக முன்னேனறியுள்ள இந்த இருபதாம் நூற்றாண்டிலும் காணமுடியாத அரசியல் பொதுமையை - தேசியம் முதலியவற்றையும் கடந்த அரசியல் பொதுமையைத் திருவள்ளுவர் அன்றே உணர்ந்திருந்தார், எல்லாக் காலத்து மக்களுக்கும் பொதுவாக அமைந்துள்ள பான்மையை காலங் கடந்து வாழும் பொதுமையை திருக்குறளில் காண்கிறோம். இதற்குக் காரணம் திருவள்ளுவர் தாம் வாழுங் காலத்து மக்களை மட்டுமில்லாமல் வருங்காலத்து மக்களையும் தம் உள்ளத்தால் உணர்ந்து தழுவிய உயர்ந்த நோக்கமே ஆகும். உயர்ந்த நோக்கமும் தெளிவும் இருந்த காரணத்ததல் என்றும் உள்ள வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளை மட்டும் உணர்த்தியுள்ளார். திருக்குறள் உணர்த்தும் கருத்துக்கள் குறைந்து நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து விழுக்காடு எதிர்காலமும், எதிர்கால உலகமும் ஏற்கத்தக்க பொதுமை வாய்த்தனவாக உள்ளன என்பார். (கலைக்கதிர் - 1969. ப.24-27) இக்கூற்றுக்கேற்ப வள்ளுவரின் கருத்துக்கள் எல்லோருக்கும் பொதுவானவையாக அமைந்துள்ளன. அதில் மனித சமுதாயம் மேம்பட தேவையான கருத்தினைக் கொண்டு வள்ளுவரின் உறவு மேம்பாட்டுச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது.

Last Updated on Wednesday, 07 October 2015 23:07 Read more...
 

ஆய்வு: பள்ளியெழுச்சி வளர்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனாரின் பங்களிப்பு

E-mail Print PDF

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்பண்டைய காலகட்டங்களில் ‘துயிலுணர்பாட்டு’ என்றும், ‘துயிலெழுப்பு பாட்டு’என்றும் பாணர்மரபில் வழங்கி வந்த இவை வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்தவையாகும். அதுவே, பிற்காலத்தில் புலவர்மரபில் தனிப்பாடல்களாக உருவெடுத்தன. தொல்காப்பியர் காலத்தில் ஒரு துறையாகக் குறிப்பிடப்படுகின்றது. பக்தி இயக்ககாலத்தில்  தனித்த ஒரு வகைமையாக இனங்காணப்பட்டது. மேலும், இது சிற்றிலக்கியங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையினை பன்னிருபாட்டியல், தொன்னூல் விளக்கம், பிரபந்த தீபம் முதலான பாட்டியல் நூல்களின் வாயிலாக அறிய இயலுகின்றது. ஆக, தொன்றுதொட்டு வழங்கிவந்த இப்பாட்டு மரபானது பல்வேறு  நிலைகளில், பல்வேறு பொருண்மை நிலையில் பாடப்பட்ட நிலைபாடுகளின் தன்மைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக சுந்தரனாரின் பொதுப்பள்ளியெழுச்சியில் காணப்படும் மாறுபட்ட நிலைபாடுகளை இனங்காண முயன்றுள்ளது.   

இலக்கண மரபில் பள்ளியெழுச்சி
பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும்  நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும்.  இலக்கணமரபில் இது துயிலெடைநிலை எனக் குறிப்பிடப்படுகின்றது. இது உறங்குகின்ற மன்னனை உறக்கத்தினின்று எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவதாகும். இது துயிலுணர், துயிலெடுத்தல், துயிலெடுப்பு, துயிலெடைநிலை என பல்வேறு சொல்லாடல் நிலையில் தொன்றுதொட்டு வழங்கி வந்திருக்கின்றது. இது கண்ணுறங்கும் வேந்தன் குன்றாத புகழோடு இன்னும் நன்றாக வாழ்ந்தோங்க  வேண்டும் என்றெண்ணி வேந்தனைச் சுற்றி நின்று, அவனை வாழ்த்துவது போன்ற நிலையில் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இதை,

Last Updated on Saturday, 03 October 2015 22:22 Read more...
 

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்

E-mail Print PDF

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒளவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். சங்க காலம், நாயன்மார்காலம், கம்பர்காலம், இக்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சங்க கால ஒளவையார் இலக்கியப் புலமை, சமயோகித அறிவுமிக்கவர்களுள் அதியமான் அவைக்களப் புலவர்களுள் நட்பாற்றலும், தன்முனைப்பும், பேரன்பும் கொண்டவர். இவர் இன்தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமது பாடல்கள் மூலம் அருந்தொண்டாற்றியவர். பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர். தமிழகத்தின் முதல் பெண் தூதுவர் - கிரேக்கப் பெண்பாற்புலவர் சாப்போவுடன் ஒப்பிடத்தக்கவர்.

ஒளவையார் சங்க இலக்கியத்துள் 59 பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் அகப்பாடல்கள் 26. புறப்பாடல்கள் 33. அகப்பாடல்களுள் குறுந்தொகை 15. நற்றிணை 7. அகநானூறு 4. இவற்றுள் 'நல்ல குறுந்தொகை' என்று போற்றப்படும் குறுந்தொகைப் பாடல்களுள் ஒளவையாரின் பாடல்கள் தலைவிக் கூற்றுப் பாடல்களாகவே அமைந்துள்ளன. புறப்பாடல்களுள் அதியமான் மகன் பொகுட்டெழினி குறித்தும் நாஞ்சில் வள்ளுவனைப்; பற்றி ஒரு பாடலும் மூவேந்தர்கள் பற்றி ஒரு பாடலும் பிற பாடல்கள் ஆறு என அப்பாடல்கள் அமைந்துள்ளன.

அகப்பாடல்களில்...
அகமாந்தர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தருணத்தில் உரையாடுகின்றனர். அந்த உரையாடல் தனித்தோ மற்றவர்களுடனோ அமைகிறது. இதனைத் தொல்காப்பியர் களவியலிலும் கற்பியலிலும் பொருளியலிலும் விளக்குகின்றார். அந்தவகையில் தலைவிக் கூற்று நிகழும் சூழல்கள் பலவாகும். குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல்களில் தலைவிக் கூற்றுப் பாடல்கள் இங்குக் களமாக்கப்படுகிறது. குறுந்தொகையின் 15 பாடல்களை 4 வகைப்படுத்தலாம். அவை,

Last Updated on Saturday, 03 October 2015 22:18 Read more...
 

பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி” – வாழ்வியல் சிந்தனைகள்

E-mail Print PDF

முன்னுரை

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-'இந்திய தேசியக் கவிஞர்களுக்கு இடையில் திலகம் போன்றவர் பாரதியார்' என்று வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர் பாரதியார். தமிழ் இலக்கிய உலகில் சக்திதாசன் காளிதாசன் ஷெல்லிதாசன் சாவித்திரி என்ற நிருபநேயர் ஒரு உத்தம தேசாபிமானி நித்தியதீரர் போன்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் பாரதியார் மட்டும் என்றால் மிகையல்ல தான் வாழ்ந்த காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தவன் பாரதி எனவே தான்

'எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்'

என்று தனது கடைசிப் பாடலாக இவற்றை எழுதியுள்ளான் ஆம் இது பாரதியின் இறுதிப்பாடல் 'இப்போது 1921 ஆம் ஆண்டு பாரதி தனது இறுதிக் காலத்தில் ஒரு கவிதை எழுதுகிறான் அது ஒரு வாழ்த்துக் கவிதை வாழ்த்து வழக்கம் போல நாட்டிற்காக? அல்லது பாரத நாட்டு மக்களுக்கா? என்று கேட்டால் வாழ்த்து பாரத சமுதாயத்திற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பாரத சமுதாய வாழ்த்தே பாரதியின் கடைசிப்பபடல் என பாரதியின் நண்பர் ஸ்ரீ சக்கரை செட்டியர் கூறுகிறார்.' என்று முத்துக்கிருஷ்ணன் பதிவு செய்கிறார். இவ்வாறாக எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்த்த பாரதியார் தமது ஆத்திச்சூடியில் மக்கள் வாழ்ககைக்குத் தேவையான பல்வேறான சிந்தனைகளைக் கூறியுள்ளார். இக்கட்டுரை புதிய ஆத்திச்சூடியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதாக அமைகிறது.

Last Updated on Wednesday, 02 September 2015 19:43 Read more...
 

ஆய்வு: இரட்டைக்காப்பியங்களில் பெண் துணைமை மாந்தர்களின் பங்களிப்பு

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை!முன்னுரை
 பண்டைக் காலத்தில் தமிழில் நூல்கள் பல எழுந்தன. அந்நூல்களில் காப்பியமும் ஒன்று. பழங் காப்பியமாகக் கருதப்படுவது சிலப்பதிகாரமாகும். இந்நூலினைத் தொடர்ந்து எழுந்தது மணிமேகலை. சிலப்பதிக்காரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையிலும் காணப்படுவதால் இவை ‘இரட்டைக்காப்பியம’; என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரட்டைக்காப்பியங்களில் படைக்கப்பட்டுள்ள பெண் துணைமை மாந்தர்களின் பங்களிப்பை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

துணைமை மாந்தர்கள் - விளக்கம்
 காப்பியம் என்பது தனியொருவரின் கதையினைக் கூறி முடிப்பதல்ல. அது ஒரு சமுதாயத்தையே காட்டக்கூடியது. பலர்கூடி வாழும் கூட்டுறவு வாழ்வாகிய உலக வாழ்வில் சமுதாயம் என்பது பல்வேறுபட்ட மக்கள் கூடிவாழும் அமைப்பாகக் காணப்படுகிறது.

 உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட தலைவன் அல்லது தலைவியைச் சுற்றி அக்குறிக்கோளை அடையப் பல நிலைகளில் துணை செய்வார்கள் துணை மாந்தர்கள்.

 இலக்கியத்தில் தலைவன் தலைவி ஆகிய இருவரும் தலைமை மாந்தராக இருப்பதற்கும் அவர்களின் சிறப்பை விளக்கிக் காட்டுவதற்கும் காப்பிய நிகழ்வுகள் படைக்கப்படுகின்றன. துணைமை மாந்தர்களை காப்பியத்தில் அமைத்து அவற்றின் இயல்புக்கேற்றவாறு ஒழுகிப் படிப்பவர் மனதைக் கவர வேண்டும். இம்மாந்தர்கள் காப்பியத்தில் கதை நிகழ்வோடு தொடர்புள்ளவர்களாகவும் தலைமை மாந்தரை மேம்படுத்துபவர்களாகவும்ää பண்பினை வெளிப்படுத்துபவர்களாகவும் அமைத்துக் காட்டப்படுகின்றன. இரட்டைக்காப்பியத்தில் பெண் துணைமை மாந்தர்களை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 24 July 2015 04:43 Read more...
 

"தறிநாடா" நாவலில் பாத்திரப்படைப்பு

E-mail Print PDF

முன்னுரை:
ஆய்வுக்கட்டுரை!     இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வுகளையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.  அவ்வகையில் “தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, பரமேஸ்வரன், காசி, ரங்கசாமி, நாகமணி, அருணாச்சலம், தர்மன், ராஜாமணி, போன்ற பாத்திரப் பண்புகளை இக்கட்டுரையில் காண்போம்.

பொன்னு:
     தறிநாடா காட்டும் நெசவாளர்கள் வாழ்வியலில் எதிர்காலமாகப் பொன்னு விளங்குகிறாள். ரங்கசாமிக்கும், நாகமணிக்கும் மகனாகப் பிறந்த இவன் நெசவாளர் சமுகத்தில் முதன்முதலில் பட்டப்படிப்பு படித்தவனாகத் திகழ்கிறான் நெசவானர் அனைவரும் தறிக்குள்ளேயே தங்களுடைய காலத்தை முடித்து விடுகின்றன. இருப்பினும் பொன்னு மட்டும் சற்று உயர்ந்த நிலையில் படித்துப் பொதுவுடைமை கட்சியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை உலக மக்களின் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்பினான். நுடிப்பதில் ஆர்வமிக்க பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். ஏப்பொழுதும் படித்துக்கொண்டேஇருப்பவன், இருப்பினும் அவனுக்கு வேலை எளிதாக கிடைக்கவில்லை அதனால் தன்னுடைய வாழ்க்கையைக் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் அடக்கிக்கொள்ளாமல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பாடுபட்டான்.

Last Updated on Friday, 24 July 2015 04:49 Read more...
 

ஆய்வு: சிலப்பதிகாரத்தில் அறம் - மீள் பார்வை

E-mail Print PDF

முன்னுரை
 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்' என்னும் தத்துவம் சிலம்பில் உள்ள மூன்று உண்மைகளில் ஒன்று. அதாவது அரசியல் கற்பு ஊழ் கூற்று என்கிற மூன்று பொருள்களை மையமாகக் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரம். அவற்றுள் ஊழ் கற்பு ஆகிய சொற்கள் உள்ளே வந்துள்ளன. ஆனால் அரசியல் என்னும் சொல் பாயிரத்தில் மட்டும்தான் வந்துள்ளன. ஆனால் அரசு என்பதன் செயல்பாடுகள் குறித்து நூலில் பல இடங்களில் செயதி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக 'கொலைக்களக் காதை வழக்குரை காதை காட்சிக் காதை கால்கோள் காதை நீர்படைக் காதை நடுகற் காதை முதலிய காதைகள் அரசனை மையமாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்நூலில் அரசியல் தொடர்பு கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. எனவே சிலப்பதிகாரத்தில் 'அரசாடசி' 'அறம்' என்னும் பொருண்மையில் இக்கட்டுரை அமைகிறது.

மன்னர்களும் அறமும்
 பொதுவாக அனைத்து அறநூல்களும் அரசன் செய்யவேண்டிய செயல்களை அறமாகக் கூறிச் செல்கின்றன. அந்தவகையில் சுக்கிரநீதி அரசன் நீதியோடு இருக்கவேண்டும் என்பதை கூறுகிறது.

'அரசவைக்கு எப்பொழுதும் நன்மக்களைக் காத்தலும் கொடியவர்களை யொறுத்தலம் சிறந்த அறங்களாகும். இவ்விரண்டும் நீதியுணர்வின்றி உண்டாகா'. மேலும் நீதியுடைய அரசனை யாவரும் போற்றுவர்ளூ அல்லாதவனை யாரும் போற்றார். 'எவன்மாட்டு நீதியும் பலமும் உள்ளனவோ அவன்பால் திருமகள் பல்லாற்றானும் வந்தெய்துவள். அரசன் தன் நாட்டிலுள்ளாரனைவரும் ஏவப்படாமலே நல்லன புரியும்படி நீதியைத் தன் நலங்குறித்து மேற்கொள்ளற்பாலன்' என்று மன்னன் நீதியுள்ளவனாக இருக்க வேண்டும் என்கிறது. அது போலவே நீதி தவறிய மன்னன் எவ்வாறான நிலையை அடைவான் என்பதையும் சுக்கிரநீதி விளக்கியுள்ளது.

Last Updated on Wednesday, 08 July 2015 21:55 Read more...
 

ஆய்வு: திராவிட மொழி வளர்ச்சியில் ஓரெழுத்தொரு மொழி

E-mail Print PDF

- மு.முத்துமாறன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – திராவிட மொழிகள் எல்லாம் ஒரு மூலமொழியிலிருந்து வளர்ந்தது அவை இன்னதென்று தெரியவில்லை. இருப்பினும் அம்மொழிகளனைத்தும்  மொழிக்குடும்பமாக இருந்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து கால மாற்றம், இடத்திற்கேற்ப பிரியத் தொடங்கியது. அவ்வாறாக பிரிந்த மொழிகள் தான் மொழிகளின் தொகுதியாக உள்ளது. அப்படிப்பட்ட தொகுதிக்குள் பல்வேறு மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியானது தனிப் பெருந்தன்மை பெற்று விளங்குகிறது. குறிப்பாக தமிழ்மொழி திராவிட மொழிகளின் ஆணிவேராக உள்ளது என்பதே சரியாகும். அவ்வாறு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஓரெழுத்தொருமொழியின் பங்கு பெரிதும் உள்ளது.

திராவிட மொழியும் தமிழும்

 திராவிட மொழி பல்வேறு குழுக்களாக அமைந்த அமைப்பாகும். அதில் பல்வேறு மொழிகள் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறமைந்த மொழிகளை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்றாகப் பகுத்துக் கூறுவர். இவற்றில் தென்திராவிட மொழியின் வரிசையில் முதன்மையாகவும், முக்கிய இடம் உள்ளதாகவும் குறிப்பிடுவது தமிழ்மொழியே ஆகும்.

Last Updated on Thursday, 25 June 2015 19:38 Read more...
 

ஆய்வு: திணைக்கோட்பாடு நோக்கில் புறத்திணையியல் புறநானூறு

E-mail Print PDF

முன்னுரை :

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-தொல்காப்பியம் தமிழ் மொழிக்கும், கவிதைக்குமான இலக்கண நூல், இதில் பொருளதிகாரம் திணைக்கு முக்கியம் கொடுத்து எழுதப்பட்டுள்ள பகுதி. திணைகள் மொத்தம் ஐந்து அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இதனொடு கைக்கிளை, பெருந்திணை சேர்ந்து 7 என்று கூறப்படுகின்றன. இவற்றில் அகத்திணைக்குரிய திணைகள் 5 ஆகும். அவற்றில்

  மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
  சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்
 (தொல். 1000)

என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறியுள்ளது. ஆகமொத்தத்தில் தமிழர்களின் முதன்மையான திணை 5 மட்டுமே. இந்த திணையை, நிலப்பகுதிகள் என்பது பொருத்தமாக அமையும். அந்த வகையில் தமிழர்கள் ஐவகையான நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அகமாகவும் புறமாகவும் பாகுபடுத்தியுள்ளனர் முன்னோர்கள். அந்த வகையில் இக்கட்டுரை புறத்திணையியல் கொண்டு புறநானூற்றுப் பாடல்களை திணை இலக்கணத்தில் ஆராய்கிறது.

Last Updated on Thursday, 25 June 2015 19:00 Read more...
 

ஆய்வு: காப்பியங்களில் வினைக் கோட்பாடு

E-mail Print PDF

ஆய்வு: காப்பியங்களில் வினைக் கோட்பாடுசமூக வரலாற்றினைக் காட்டும் பெட்டகமாகவும் மானிடசமூகத்தினை உயிரோட்டமாகக் காட்டும் அரிய சான்றாகவும் காப்பியங்கள் திகழ்கின்றன. எனவே தான், இக்காப்பியங்களை  இலக்கிய வளர்ச்சியின் உச்சநிலை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்றைய சமூகத்தில் பல்வகையான நம்பிக்கைகள் நிலவியிருந்தமையை காப்பியங்களின் வழியாக அறியமுடிகிறது. அவற்றில், மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையும் ஒன்றாக உள்ளது. இம்மறுபிறப்பிற்கு அடிநாதமாக விளங்குவது  வினையாகும். எனவே இவ்வினையில் காணப்படும் இன்ப, துன்பங்கள் குறித்து ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.

வினைக்கோட்பாடு - விளக்கம்

வினை என்பது ஒருசெயல், தொழில் என்ற பொருளைக் குறிக்கின்றது. இதனை நல்வினைத் தீவினை என்று இருவகைப்படுத்தலாம். வினைப்பயன் என்பதற்குச் செயலின் விளைவு, தொழிலின் பயன் என்று பொருள் கொள்ளலாம். இதனையும் நல்வினைப்பயன், தீவினைப்பயன் அல்லது நற்பயன், தீப்பயன் என்று இருவகைப்படுத்தலாம். ஒருவன் செய்யும் செயல் நல்ல செயலாக இருந்தால் அதன் பயனாய் நன்மையும், தீய செயலாக இருந்தால் அதன் பயனாய் தீமையும் விளையும் இந்த வினை விளையும் காலம் அதாவது, பயனளிக்கும் காலம் மனிதனுடைய நிகழ்காலத்திலோ, மறுபிறவியிலோ நிகழும். இந்தக் கருத்தை இந்தியச்சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நிகழ்வே கர்மா என்று வடமொழியாளர்களால் வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினை என்று குறிப்பிடுகின்றன. சமயங்கள் வினைக்கோட்பாடு என்றும் விதிக்கோட்பாடு என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றினை, இந்து சமயத்தில் விதி, சமண மதத்தில் ஊழ், ஆசிவகத்தில் நியதி எல்லாம் தமிழ் இலக்கிய இலக்கண ஒழுக்க நூல்களில் பிவாகித்திருந்த கர்மம் என்ற அடிப்படைக் கருத்துடன் நெருங்கியத் தொடர்புடையனவாக இருந்தன என்று நா.வானமாமலை கூறுகிறார். எனவே கர்மா என்பது வினையும் அதன் செயல்பாட்டு முறையும் சேர்ந்து நிகழ்வு என்று கூறலாம். இந்த நிகழ்வு மனித நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த ஒரு கோட்பாடாகவே எண்ணப்படுகிறது.

Last Updated on Sunday, 14 June 2015 17:49 Read more...
 

ஆய்வு: சாரு நிவேதிதாவின் மொழிநடை

E-mail Print PDF

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-மொழி என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வரும். மாற்றத்தைப் படைப்பாளிகள் தமது படைப்பில் பதிந்து படைப்பாக்குவர். தமிழ் மொழி பற்றியச் சிந்தனை தொல்காப்பியர் காலம் முதல் தொடங்கி வந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழி மூவழக்கு நிலையாக இருந்தது.

அதாவது செய்யுள் வழக்கு, உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு என்ற நிலையில் மொழி விளங்கியது. இந்த நிலை ஐரோப்பியர் காலத்திற்குப் பின் மாறிவிட்டது. காரணம் பா வகையும் (செய்யுள் வழக்கு) உரைநடையும் இலக்கியப் படைப்பிற்குரிய இருவகைகளாக மாறின. பொதுப் பேச்சு வழக்கும் தமக்குரிய எழுதும் சூழல்களைப் பெருக்கிக் கொண்டது. காலப்போக்கில் உயர் வழக்கு என்று ஒன்றும் பேச்சு வழக்கு என்று ஒன்றும் உரைநடையில் உருவாகி தனித்தனிச் சூழல்களைத் தத்தமது பயன்பாட்டிற்கு அமைத்துக் கொண்டன. இதன் பயனாய் தமிழில் இரட்டை வழக்கு நிலை உருவாகியது என்று ஆரோக்கியநாதன் கூறுகிறார்.

Last Updated on Wednesday, 10 June 2015 23:30 Read more...
 

ஆய்வு: சங்க மகளிர்தம் பாலியல் வெளிப்பாட்டு உணர்வில் வண்ணக்குறியீடு

E-mail Print PDF

முன்னுரை

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்சங்ககால மக்களின் வாழ்க்கை முழுவதும் பண்பாட்டு மயமாக்கப்பட்டச் சூழல். அதனால் அவர்கள் பண்பாடு கருதியே குறிப்பால் நிறங்கள் வழி தங்களது பாலியல் செய்திகளை உணர்த்தி வந்தனர். சங்க இலக்கியத்தில் பாலியல் புனைவுகளை வெளிப்படையாகச் சுட்டும் மரபு இல்லை. அவற்றை நிறங்கள் வழிக் கூற முற்பட்டுள்ளனர். சமூகத்தில் படைக்கப்பட்ட நிறம் மொழியமைப்பில் ஓர் ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறங்கள் சமூகக் கட்டமைப்பில் குறியீடாகவும், சமுதாயத்தினரின் எண்ணங்களை உள்ளடக்கியதாகவும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வண்ணக்குறியீட்டின் வழியாக சங்க மகளிர் தம் பாலியல் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.

நிறக்குறியீடு

மனிதன் தனது கருத்துகளைப் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மொழியைப் பயன்படுத்துகிறான். இம்மொழியினை நாம் இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று சைகைமொழி அல்லது குறியீட்டு மொழி, மற்றொன்று பேச்சுமொழி. மேற்கூறியவற்றுள் குறியீட்டு மொழியினை நோக்கும்பொழுது அதில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்றாக நிறத்தைக் (வண்ணம்) குறிப்பிடலாம். நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு ஆதிகாலம் முதல் இன்று வரை மிக நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறங்களைக் குறியீடாகப் பயன்படுத்தும் பொழுது அதற்குரிய தன்மை அல்லது பொருண்மையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Last Updated on Monday, 01 June 2015 00:32 Read more...
 

ஆய்வு: தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்

E-mail Print PDF

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்தொல்காப்பியம் இலக்கியநிலையிலும் வழக்குநிலையினையும் எடுத்து இயம்பும் ஒப்பற்ற இலக்கணமாக விளங்குகின்றது. இத்தகைய இலக்கணத்தினை மக்களிடம் பரவவிட்டவர்கள் உரையாசிரியர்கள் எனலாம். இதற்கு அவர்கள் மேற்கொண்ட உரைமுறைகளும் ஒன்றாகும். அவ்வாறு உரைகூறும் பொழுது, உரையாசிரியர்கள் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகின்றனர். இவ்வாறான விளக்கத்தின் மூலம் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளியினை உரையாசிரியர்கள் வளர்த்துள்ளனர். இத்தகையப் பணியில் குறிப்பிடத்தகுந்தவர் தெய்வச்சிலையார். இவரின் உரையினைத் தொடரியல் நோக்கில் அமைத்துள்ளார். எனவே, இவர் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களில் தொடரியல் சிந்தனையைக் காணும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

எச்சங்கள்

எஞ்சி நிற்பன எல்லாம் எச்சம் எனலாம். வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம். வினையியலில் கூறப்படும் எச்சங்கள் வினையெச்சம் என்றும் பெயரெச்சம் என்றும் இருவகைப்படும். வினையைக்கொண்டு முடிவன எல்லாம் வினையெச்சம் இல்லை. குறிப்பிட்ட இலக்க அமைப்பிற்கு உட்பட்டுவருவன மட்டும் வினையெச்சம் எனப்படும்.

Last Updated on Monday, 01 June 2015 00:31 Read more...
 

ஆய்வு: சித்தேரிப் பகுதியின் ஏர்க்கருவியும் பயன்பாடும்

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி -வட்டத்திற்கு உட்பட்ட பகுதியே சித்தேரியாகும். இப்பகுதியானது. அருரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியாகும். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலைக் கொண்டுள்ளனர். உழவுத்தொழில் செய்யும் பொழுது மரத்தினால் செய்யப்பட்ட ‘ஏர்’ கருவியை, காளை மாடுகளில் பூட்டி உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனார். அவ்வகையில், அப்பகுதியின் நில அமைப்பு, வேளாண்மை செயல்பாடுகள், காலத்திற்கேற்ப பயிரிடும் முறைகள், உழவுத்தொழிலில்  பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நில அமைப்பு

சித்தேரி மலைவாழ் பழங்குடியினர் இரண்டு வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளனர்.  அவை,    நிலஅமைப்பு உழவுக்காடு (நீர் பாயக்கூடியது) ,  கொத்துக்காடு  களைக்கொத்து(வானம் பார்த்த பூமி)

உழவுக்காடு

இப்பகுதியில் அதிகமாக நெல், கம்பு, வெங்காயம், கொத்தமல்லி, வரமிளகாய், தற்பொழுது மஞ்சள் போன்ற பணப்பயிர்கள் அதிகமாகப் பயிரிடுகின்றனர்.

கொத்துக்காடு

கொத்துக்காட்டுப் பகுதியில் தினை, கம்பு, சோளம், மெட்டுநெல், சாமை, ராகி(கேழ்வரகு), பீன்ஸ், கெள்ளு, பச்சைப்பயிறு போன்ற மேட்டுப்பயிர்களை வேளாண்மை செய்கின்றனர்.

Last Updated on Tuesday, 12 May 2015 02:17 Read more...
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் மகாபாரதப் பதிவுகள்

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை!மகாபாரதப்போர் நடந்த காலம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பது இன்றுள்ள கோட்பாடாகும். இன்று நமக்கு கிடைத்துள்ள தொன்மையான சங்கத் தமிழ் இலக்கியம் எல்லாம் மகாபாரத காலத்துக்குப் பிற்பட்டனவாகும். ஆகவே மகாபாரதச் சங்க இலக்கியங்கள் முதலான தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்திருப்பது நம் அறிந்த ஒன்றாரும். அவை, “உலகப்பெருங்காப்பியங்களுல் மகாபாரதமும் ஒன்றாகும். உலக இலக்கியங்களுல் அளவாற் பெரியது மகாபாரதமே என்பர் மோனியர் வில்லியஸ்.”1 இவை வட நாட்டில் நடந்த மகாபாரப் போரிடைத் தென்னாட்டு மூவேந்தர்களும் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியாகும். அங்ஙனம் வரலாற்றின் மகாபாரதக் கதை தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியத்தில் புறநானுறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை ஆகியவற்றுள் மகாபாரதச் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் புலவர் பெருமக்கள் கையாண்டுள்ளனர். அவற்றின் தன்மைகளைக் பற்றி விளக்குவதே இக்கட்டுரையில் நோக்கமாகும்.

Last Updated on Tuesday, 12 May 2015 02:00 Read more...
 

ஆய்வு: மெய்நிகர் உலகில் அடையாளங்கள்

E-mail Print PDF

முன்னுரை:

ஆய்வுக்கட்டுரை!

இலக்கியங்களிலும் புராணங்களிலும் பலவகை உலகங்கள் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் நாம் உலகம் தவிர வேறு எவற்றிலும் புலன் உணர்வுகளோடு வாழ இயலும் என்று அறிவியல் அடிப்படையிலும் சான்றுகள் அடிப்படையிலும் நிருவப்படவில்லை. ஆயின் இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதர்களுக்கு வேறொரு உலகத்தைக் கட்டமைத்துத் தந்திருக்கிறது. இதில் வசதியான செய்தியாதெனில் ஞானிகளோ அறிவியல் விஞ்ஞானிகளோ மட்டுமல்லாது சாதாரண மனிதர்கள் யாவரும் அவ்வுலகில் உலாவலாம், தம் இருத்தலை பதிவு செய்யலாம், பிறக்கு அறிவிக்கலாம், பிறறோரு தொடர்பாடலாம். அதுதான் தகவல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கும் கொடையான மெய்நிகர் உலகம்(Virtuval world) ஆகும். கட்டற்ற களஞ்சியமான விக்கிப்பீடியா “மெய்நிகர் உலகம் (virtual world) என்பது உலகில் உள்ள மக்கள் பலரும் கணினி அடிப்படையிலான ஒப்புச்செயலாக்கச் சூழலில் ஒருவரோடு ஒருவர் செயல்புரிதல் ஆகும்” என்று வர்ணிக்கிறது. இந்த உலகமானது மனிதர்களுக்குக் கிடைத்த வரமா? சாபமா? என பலதரப்பிலும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, இவ்வாய்வுக் கட்டுரையில் மெய்நிகர் உலகில் மனிதனின் அடையாளங்கள் குறித்து விவாதிக்கின்றது.

Last Updated on Wednesday, 06 May 2015 22:53 Read more...