பதிவுகள்

 • Increase font size
 • Default font size
 • Decrease font size
இலக்கியம்


சிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 1 - கறுப்புப் பூனையும் காவல் வீரனும்..!

E-mail Print PDF

பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
வீட்டுக் கரசன் நான்தானே
வீட்டைக் காக்கும் காவல்காரன்
வெளியே இருந்து காக்கின்றேன்
வீரன் யாரு தெரியாதோ... ..

காவல் காரப் பெரியவரே
கனக்க வீரம் காட்டுகிறீர்
நானும் வித்தையில் வல்லவனே
நீரும் என்னை அறிவீரோ... ..

Last Updated on Sunday, 16 April 2017 06:00 Read more...
 

என் கற்பனைப் பேரன் தமிழ்-காளையனுக்கு மடல்: (சனத்தொகைப் பிரச்சினைகள் போன்றவை பற்றி)

E-mail Print PDF

-பேராசிரியர் கோபன் மகாதேவா -என் அன்புக்குரிய பேரன் தமிழ்-காளையனே, வணக்கம்!  உன் அழகுத் தேவதைத் தங்கை  தேன்மொழியாள் சுகமா? உன் வீட்டில் பெரிசு சிறிசாகப் பதின் மூன்று நபர்கள் வாழ்வதாகவும், எனவே உனக்கு நிம்மதியாய் இருந்து படிக்கவும் நித்திரை கொள்ளவும்   முடியாது இருப்பதாகவும், ஆதலால் பெற்றோர், பன்றிகள் போல் கண்-மண் தெரியாமல் பிள்ளைகள் பெறுவதை அரசினர் தடைசெய்ய வேண்டும்!  என்றும் கோபித்து எழுதியிருந்தாய்.  எமது சமுதாய, வறுமை, அரசியல் பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலமான காரணி சனத்தொகைப் பிரச்சினையே என சரியாகவே உணர்ந்துள்ளாய்.  எனவே இக்கட்டுரை உனக்கே வரைந்தது.   நான் சொல்வதைக் கவனமாகக் கேள்.

பேரா!  எம் இவ்வுலகம் சூரியனிலிருந்து 457-கோடி வருடங்களின் முன் வெடித்துப் பிறந்தது என்றும், அதில் 77-கோடி ஆண்டுகளின் பின் சிற்றுயிர்கள் தோன்றி இருக்கலாம் என்றும், 200,000-150,000 ஆண்டுகளின் முன்னரே எம் மூதாதையர் ஆகிய, நிமிர்ந்து நடக்கும் மனிதரின் இனம் ஆபிரிக்காவின் குரங்குகளிலிருந்து இயற்கையால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்றும், தமது அணு-மரபு-வழி விஞ்ஞானப் பரிசோதனைகளால், இன்றைய சிம்பன்சிக் குரங்குக்கும் எம்மின மனிதருக்கும் இடையில் 98.4 வீதம் ஒப்புமை இருப்பதாகத் தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆபிரிக்காவில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்து தம்பாட்டில் விருத்தியடைய, மிச்சப் பகுதியினர் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா முதலிய கண்டங்களுக்குக் கூட்டாக 125000 தொடக்கம் 60000 ஆண்டுகளின் முன் சென்று தாமும் தம் போக்கில் விருத்தி அடைந்தே இன்றைய மனிதஇனம் உருவாகியது என்றும், சமூகவரலாற்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Last Updated on Friday, 03 March 2017 00:28 Read more...
 

அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14: அறிஞர். அ.ந. கந்தசாமி

E-mail Print PDF

அறிஞர் அ.ந.கந்தசாமி

அந்தனி ஜீவா

- எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றித் தனது நூலான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்னும் நூலில் எழுதிய 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்னுமிக் கட்டுரையினை அவர் நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். மேற்படி நூலினை பூபாலசிங்கம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கின்றார்கள். - பதிவுகள் -


கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.

நினைவு நாள்
அதற்குச் சில தினங்களுக்கு பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் நெருக்கமான நண்பரான தான் தோன்றிக் கவிராயர் திரு.சில்லையூர் செல்வராசன் அவர்களைச் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் அ.ந.க.வின் நினைவு நாள் வருகிறது என நினைவூட்டினேன். நானும் சில்லையூரும் அ.ந.க.வைப் பற்றிய பழைய நினைவுகளை இரைமீட்டிப் பார்த்தோம். பின்னர், வீடு திரும்பிய பின்னர் அறிஞர் அ.ந.க.வைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் திரைப்படம் போல் விரிந்தன.

Last Updated on Saturday, 11 February 2017 20:51 Read more...
 

எழுத்துலக எழுச்சி எஸ்.பொ !

E-mail Print PDF

எஸ்.பொ

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் ,விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு.அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார்.இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்க லாம் என எண்ணத்தோன்றுகிறது.

பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டு விடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படா நிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும் எழுதுவார்.எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.

பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள்.1961 ஆம் ஆண்டில் " தீ " என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது.இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.

Last Updated on Thursday, 01 December 2016 00:41 Read more...
 

குடிவரவாளன்: வ.ந.கிரிதரனின் சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை.

E-mail Print PDF

-  முனைவர் ஆர்.தாரணியின் '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் கட்டுரையின் முக்கியமான தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகள். -  பதிவுகள் -


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'முனைவர் ஆர்.தாரணிகுடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும்  போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது.  நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில்  , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ  அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

சாதாரண வாசகரொருவரை இந்நூலின் நேரடியான கூறுபொருளும், நடையும் எழுச்சியூட்டும். ஆயினும், இந்ந நூலானது பலபடிகளில் அர்த்தங்களைத்தருவதிலும், தகவல்களின் விபரிப்புகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த அறிவுமிக்க கருத்துகளிலும், விமர்சனத்துக்குரிய சிக்கலான எண்ணங்களைக்கொண்டிருப்பதிலும் மிகவும் வியப்பூட்டுவதாகும். இது வெறுமனே 83 கலவரத்திலிருந்து தப்பிக் கனடாவுக்குச் சென்ற இளங்கோ என்பவனின் கதை மட்டுமில்லை. கதாசிரியர் பல சவால்மிக்க விடயங்களை, சட்டவிரோதக்குடிவரவாளன் என்ற நிலை அப்பாவி மனிதனொருவன் மேல் திணிக்கப்பட்டமை, அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடொன்றில் மறுதலிக்கப்பட்ட மனித உரிமைகள், தடுப்புமுகாமின் கடுமையான  வாழ்க்கை, சமூகக் காப்புறுதி அட்டை இல்லாததால் வேலை தேடுவதில் ஏற்படும் இன்னல்கள், ஹரிபாபு, ஹென்றி போன்ற நடைபாதை வியாபாரிகளின் தந்திரங்கள், பீட்டர், பப்லோ போன்ற முகவர்களின் சுரண்டல் நடவடிக்கைகள், சட்டத்தரணி அனிஸ்மன்னின் கோழைத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக நியூயார்க் நகரில் வசிக்கும் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் அங்கீகரிக்காமை போன்ற பல விடயங்களைப்பற்றி இந்நூலில் உரையாடுகின்றார். அனைவரையும் கவரும் தன்மை மிக்க நகரின் மறுபக்கம் நாவலின் நாயகனை மட்டுமல்ல வாசகர்களையும் அதிர்ச்சியடைய வைக்கின்றது.

Last Updated on Sunday, 23 October 2016 17:22 Read more...
 

மதிப்புரை: மரபுக் கவிதைப் பாவலன் தேசபாரதி-தீவகம் வே.இராஜலிங்கம்

E-mail Print PDF

 மரபுக் கவிதைப் பாவலன் தேசபாரதி-தீவகம் வே.இராஜலிங்கம்“தீவகம் தொட்டுத் துறைபனிச் சாரலும்
நாவகம் தந்தானெம் நம்நாடன் – பாவகத்துத்
தண்ணார் தமிழ்மணக்கச் சந்தமொடு தேனூற
விண்ணார் புகழ்பரப்பும் வேள்! – (காரையூரான்)


‘தீவகம் இராஜலிங்கம்’ எனத் தமிழ் எழுத்தாளர் உலகம் போற்றும் ஈழத் தமிழ்க் கவிஞரைக் கனடா ‘கதிரொளி’  வானொலி ‘ தேசபாரதி’ என விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இலக்கியத் துறையிலும் ஊடகத்துறையிலும் அனுபவம் உடையவராகக் கனடாவில் புகலிடம் கொண்ட இராஜலிங்கம் அவர்கள், ‘நம்நாடு’ எனும் வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து அப்பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி (1992-2003) ஓய்வு பெற்றவர். இராஜலிங்கம் அவர்கள், தாயகத்திலும் கனடாவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை அரங்குகளிற் பங்குபற்றித் தம் கவிதைகளை அரங்கேற்றியதோடு, பலகவி தை நூல்களை வெளியிட்டுத் தமிழ்த் தாயகப் பற்றும், தமிழ்மீ தான தணியாத தாகமும், சமய ஈடுபாடுங்கொண்ட தேசபாரதி அவர்கள,; ஈழத்திலும், தென்னிந்தியாவிலும் நூற்றுக்கும் மேற் பட்ட திருத்தலங்களுக்குத் தான் மேற்கொண்டதிருத்தலப் பயணங்களின் பயனாக ஆயிரக்கணக்கான பாடல்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார். இதுவரை இவராற் பத்தாயிரம் பாடல்கள்வரை இயற்றப் பட்டுள்ளன. இவற்றைவிட இன்னும் மூன்று கவிதைப் படைப்புகள் நூலாக்கம் பெறத் தயார்நிலையில், வெளியீட்டுக்காகக் காத்துக்கிடக்கின்றன.

ஏற்கனவே வேவியூ(டீயலஎநைற) பெரியபிள்ளையார் ஆலயத்தின்மீது பாடப்பட்ட பாடல்களைக் கலைமாமணி உன்னி கிருஷ்ணன் அவர்களின் தலைமையிலான இசையாளர்களைக் கொண்டு பாடுவித்து ஆலய நிர்வாகம் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளனர். அதுபோன்றே ‘திருப்பொலி ஐயனார்’ மீது பாடிய பஜனைப் பாடல்களை இசையமைப்பாளர் முரளியின் இசையமைப்பில் ஈழத்துச் சாந்தன், அவரது பிள்ளைகள் ஆகிய இசைக் குழுவினரின் குரலிசையில்பாடி, இரண்டாவது இசைத்தட்டையும் வெளியிட்ட பெருமைக்குரியவர.; இவற்றுடன், ‘நிலப்பூக்கள்’ ‘அகவைப்பா’, ‘சரவணை கிழக்கு பள்ளம்புலம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்’, ‘திருப்பொலி ஐயனார் அருட் பாமாலை’, ‘தெய்வமும் தீந்தமிழும்- கீர்த்தனைப் பாடல்கள்’ (இது பல தெய்வப் பாடல்களின் தொகுப்பாகும்) என்பனவும் இதுவரை வெளிவந்த தேசபாரதியின் கவிதை நூல்கள் ஆகும்.

Last Updated on Saturday, 01 October 2016 05:06 Read more...
 

பத்மநாபருக்கு இன்று பவள விழா

E-mail Print PDF

பத்மநாபருக்கு இன்று பவள விழா
பவள விழாக்கொண்டாடும் பத்மநாபர் அவர்களை வாழ்த்துகிறோம்.  தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆவணப்படுத்துவதில் நூலகம் தளத்துடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருபவர். ஈழத்தமிழ்ப்படைப்புகளைத் தமிழகத்துக்கும், தமிழகப்படைப்புகளை ஈழத்துக்கும் அறிமுகப்படுத்துவதில் இலக்கியப்பாலமாக விளங்கி வருபவர் இவர்.  இவரைப்பற்றி நூலகம் கோபிநாத் அவர்கள் 'வாழ்நாள் பணிகளுக்காக இயல்விருது பெற்ற இவரின் இலக்கிய, பதிப்புப் பணிகள் நன்கறியப்பட்ட அளவுக்கு அவரது ஆவணப்படுத்தற் பணிகள் கவனிக்கப் படவில்லை. ஈழத்து நூல்களை இணையத்துக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னோடியும் இவரே. 1998 இல் மதுரைத் திட்டத்தில் சமகால ஈழத்து நூல்களை இணைத்ததன் மூலம் ஈழத்தின் எண்ணிம ஆவணவாக்கத்தை தொடக்கியிருந்தார்.' என்று கூறுவார்.

தனிமனிதர்கள் தோப்பாவதில்லை என்பார்கள். ஆனால் தோப்புகள் ஆகும் தனி மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமானவர்களில் ஒருவர் இவர். இவரது இலக்கியப்பணிகளுக்காக  இன்று பவள விழா எடுக்கும் இவரை வாழ்த்துகிறோம்.

Last Updated on Saturday, 27 August 2016 05:36
 

தமிழ்ப்புலமைப் பேராசான் வித்துவான் வேந்தனார்

E-mail Print PDF

வித்துவான் வேந்தனார்ஆயிரத்தித் தொழாயிரத்தித் தொண்ணூறுகளில் மல்லிகைப் பந்தல் வெளியீடாகக் கவிஞர் தில்லைச்சிவன் 'நான்’ என்றொரு கையடக்கப் புத்தகத்தை வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் என்னிடம் கனடாவில் இருக்கிறது. வேலணை, வங்களாவடிச் சந்தியை மையமாக வைத்து, ஒரு மூன்றுமைற் கற்கள் விட்டத்தில் ஒரு ஆரை கீறினால், அதற்குள் வரலாறாக இருக்கும் ஐம்பது புலவர்கள் என்ற பதிவைக் கொண்ட 'வேலணைப் புலவர்கள் வரலாறு" தான் அந்த நூல். அந்நூல் வெளிவந்த உடனேயே விற்றுத் தீர்ந்தது என்ற தகவலையும், கவிஞர் தில்லைச்சிவன் எனக்குத் தந்தார்.

புத்தகத்தில் எனது பெயரும் பதிவாகி இருப்பதைப் பார்த்தேன். கவிதையும், கல்வியும் சிறந்த வேலணையில், பள்ளம்புலம் சார்ந்த பகுதியில் இரண்டு சைவ ஆலயங்கள் பிரசித்தமானது. ஒன்று பள்ளம்புலம், முருகமூர்த்தி கோவில், மற்றையது மயிலப்புலம் திருப்பொலி ஐயனார் கேவில். இந்தப் பாடல்பெற்ற தலங்களின் பதிவில் முதலில் வருபவர் வித்துவான் வேந்தனார் ஆகும்.

வித்துவான் வேந்தனார்
சரவணை கிழக்கு, வேலணையில் பள்ளம்புலம்தான் வித்துவான் வேந்தனார் தோன்றிய இடம் ஆகும். வித்துவான் வேந்தனார் எழுதிய கட்டுரைகள் மட்டும் ஆயிரக்கணக்கானவை. அவர் தான் இருந்து கல்விகற்ற ஐயனார் கோவில் ஆலமர நிழலை பின்வருமாறு ஒரு வெண்பாவில் குறிப்பிடுகிறார்.

'உள்ளம் உவகையுற ஊக்கமுடன் வீற்றிருந்து
அள்ளுசு வைத்தேனை ஆர்ந்திடல்போல்-விள்ளுஞ்சீர்
தெய்வமார் செந்தமிழைத் தேர்ந்துநான் கற்றவிடம்
ஐயனார் கோவிலடி ஆல்! "


என்பது விசாலித்து விசுவரூபமாகி நிழல்கொடுத்து நின்ற அந்த ஆலடி ஐயனாரது அருள்பெற்றவர் என்பதற்குச் சான்றான வெண்பாவாகும்.

Last Updated on Monday, 01 August 2016 00:36 Read more...
 

மீள்பிரசுரம்: "ஈழத்தமிழ் இலக்கியமானது, புகலிடத் தேசியத் தமிழ் இலக்கியத்தினூடாக உலகத் தமிழ் இலக்கியம் என்ற பரிமாணத்தை எய்தியுள்ளது"! ஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை!

E-mail Print PDF

-  ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமுமATLAS Function04் இணைந்து 04-06-2016 அன்று  நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)

இந்தத் தலைப்பு  பரந்துபட்ட  ஈழத்து இலக்கிய வளர்சிப்போக்கினை உள்ளடக்கியது. எனக்குத் தரப்பட்ட 30 நிமிடத்தில் இதனை அடக்குவது என்பது இலகுவான  காரியமல்ல. ஈழத்து இலக்கிய வரலாறு 2000 ஆண்டுக்கும் மேற்பட்ட காலப் பரப்பினைக்  கொண்டது என்பதை  பழந்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன. ஈழத்துப் பூதந்தேவனார்  ஈழத்துக்குரிய தனி அடையாளத்தை வழங்கிய முதல் புலவராவார். இவரது ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. அதன்பின்னர் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது. தற்போது ஈழத்திலே கிடைக்கின்ற பழைய நூல் போசராசப் பண்டிதர் எழுதிய  சரசோதிமாலை  என்ற  சோதிட நூல் ஆகும். இது கி. பி. 1309 இல் வெளிவந்தது. 15 ஆம் நூற்றாண்டிலே நான்காவது தமிழ்ச் சங்கத்தை யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் அமைத்தார்கள். யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் காவியம், சோதிடம், வைத்தியம், வரலாறு, தல புராணங்கள், பள்ளு, உலா, மொழிபெயர்ப்பு எனப் பல்வகை நூல்கள் எழுந்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பெரும் பாய்ச்சல்  நிகழ்ந்துள்ளதைக் காணலாம். தமிழ்மொழிபற்றிய தேடல்களும் ஆய்வுகளும் மேல்நாட்டார் வருகையின்பின் தொடங்கின. செய்யுள் மரபு கைவிடப்பட்டு  உரைநடை  மரபு  செல்வாக்குப் பெற்றது. அச்சு  இயந்திரத்தின் வருகை தமிழ் இலக்கியங்கள் நூல்பெற உதவின.

ஈழநாட்டில் இடம்பெற்ற  இலக்கிய முயற்சிகளை சில புலவர்கள் அக்காலத்தில் பதிவு செய்தனர். தமிழ் நாட்டுக்குச் சென்று  தமிழ்வளர்த்து ஈழத்துக்குப் புகழ்தேடித் தந்தவர்கள் ஏறத்தாழ 20 பேர் உள்ளார்கள். இவர்கள் செய்யுள் நூலாக்கம், உரைநடை நூலாக்கம், உரை நூலாக்கம், நூற்பதிப்பு, மொழிபெயர்ப்பு நூலாக்கம், தமிழ்ச்சொல் அகராதி நூலாக்கம் ஆகிய பணிகளைச் செய்துள்ளனர்.

ஈழத்து நவீன தமிழ் இலக்கியம்
மங்களநாயகம் தம்பையா எழுதிய ஈழத்தின் முதல் தமிழ் நாவல் நொறுங்குண்ட இதயம் 1954ல் வெளியாகியாகியது. ஈழத்து நவீன இலக்கியம் 1930 களிலிருந்து  உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது எனலாம்.

மறுமலர்ச்சி ஈழத்தின் முதலாவது நவீன இலக்கிய சஞ்சிகை.

“முற்போக்கு இலக்கியம் இவ்வளவு மிகச் செழிப்பாகத் தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது ஏற்கனவே இருந்த சூழல்.  ஆந்தச்சூழல் மறுமலர்ச்சி இயக்துக்குள்ளால் வந்தது. ஈழத்தின் தன்மைகளைக் கொண்டு இலக்கியம் வளருகின்ற  ஒரு தன்மையைக் காண்கிறோம்” எனப் பேராசிரியர் சிவத்தம்பி ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார்.

Last Updated on Wednesday, 15 June 2016 19:12 Read more...
 

தமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்பு

E-mail Print PDF

முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் -தமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.  அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது.  செய்யுள் இலக்கியம் படிப்பதற்குக் கடினமானது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.  அதனால் சிறுகதை இன்று தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஊடகங்களும் பேருதவியாக உள்ளன. நாளேடுகள், பருவ இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன.  பல சிறுகதை ஆக்கங்கள் உருவாகின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பல்கிப் பெருகியது.

நவீன தமிழ்ச் சிறுகதை என்ற முகவரியுடன் இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் வெளிவரு கின்றன.  அவை தொகுப்பாக்கமும் செய்யப்பட்டுள்ளன. எனவே அச் சிறுகதைகளை ஓரிடத்திலே பார்ப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.  அந்த வகையில் தமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்புப் பற்றிய கருத்துப் பகிர்வாக இக்கட்டுரை அமைகிறது.  இன்றைய சிறுகதை எழுத்தாளர்கள் உலகெங்கும் பரவி நிற்கின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு அதற்கு ஒரு காரணமாக அமைந்ததெனலாம்.  தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களில் தமிழ் ஊடகங்களும் உருவாகின.  அவ்வாறு உருவாகிய ஊடகங்கள் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் ஏற்றிருந்தன.  இந்தச் சூழலில் குரு அரவிந்தன் என்ற சிறுகதை எழுத்தாளரையும் அடையாளம் காண முடிகிறது.

Last Updated on Wednesday, 06 April 2016 05:18 Read more...
 

புலம்பெயர்ந்த படைப்புலகில் ஒரு புதியமுகம் (விமர்சனம்).

E-mail Print PDF

எழுத்தாளர் ஜெயமோகன்[எழுத்தாளர் ஆ.சி.கந்தராஜா  'ஆசிகந்தராஜாவின் முற்றம்' என்னும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டிருந்த இக்கட்டுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம் ஒரு பதிவுக்காக. - பதிவுகள் -]

‘மாறுதல் பருவம்’ என்ற ஒன்றைப்பற்றி இலக்கிய விமர்சகர்கள் பொதுவாக குறிப்பிடுவதுண்டு. இலக்கியத்திற்கு மிக உகந்த பருவம் இது. கலாச்சார மாறுதல்கள் நிகழும் போது தான் சிறந்த படைப்புகள் உருவாகின்றன. தமிழில் காப்பிய காலகட்டம், அதற்கு மகுட உதாரணம். பௌத்த, சமண மதங்களின் வருகையை ஒட்டி உருவான கலாச்சார மாறுதல் (கலாச்சார உரசல் என்று மேலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்) பெருங்காப்பியங்களின் பிறவிக்கு வழிவகுத்தது. நிலைத்துபோன மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதனால் இலக்கியத்தின் களங்கள் மாறுபடுகின்றன. அதன் விளைவாக இலக்கிய மொழியை, இலக்கியத்திற்கேயுரிய தனி மொழியை (Meta Language) உருவாக்கி நிலை நிறுத்தக்கூடிய ஆழ்மனப் படிமங்களில் பெரும் மாறுதல்கள் உருவாகின்றன. இவ்வாறு இலக்கியம் முக்கியமான மாறுதல்களை அடைகிறது. உண்மையில் இலக்கியமாறுதல் என்பது சமூகம் கொள்ளும் மாற்றத்தின் ஒரு தடையமே. இலக்கியமாறுதல் அச்சமூக மாறுதலை மேலும் துரிதப்படுத்துகிறது. இந்திய மரபுமனம் மேற்கின் இலட்சியவாத காலகட்டத்தை எதிர்கொண்டமையின் மிகச்சிறந்த விளைவுதான் பாரதி. மாறுதல் பருவமே இலக்கிய ஆக்கத்தின் சிறந்த பின்னணி என்று நிறுவ பாரதி இன்னொரு சிறந்த உதாரணம். பாரதியில் தொடங்கிய அப்பருவம் இப்போதும் நீள்கிறது.

மாறுதல் பருவம் உற்சாகம், இக்கட்டு என்ற இரு தளங்கள் கொண்டது. மாறுதல் புதிய ஒரு வாழ்விற்கான கனவினை உருவாக்குகிறது. புதிய காலகட்டத்திற்கான சவால்களை முன்வைத்து மானுட ஊக்கத்தின் முன் சவால்களை திறந்து விடுகிறது. அதேபோல மாறுதல் மரபின் இன்றியமையாத கூறுகளை கூட பழைமை நோக்கித் தள்ளுகிறது. மனிதனின் சுயநலத்தையும் பேராசையையும் இத்தகைய மாறுதல் கணங்களே விசுவரூபம் கொள்ளச் செய்கின்றன. ஒரு உரையில் நித்ய சைதன்ய யதி இதைப்பற்றி சொன்னார். மாறுதல் காலகட்டம் சாத்தியங்களை திறந்து வைக்கிறது. சாத்தியங்கள் மனிதனின் இச்சா சக்தியை திறந்து விடுகின்றன. ஆக்க சக்தியாக வெளிப்படுவதும் இச்சா சக்தியே. சுயநலமாகவும் பேராசையாகவும் போக வெறியாகவும் வெளிப்படுவதும் அதுவே.

இலங்கை படைப்பாளிகள் புலம்பெயர்ந்த பிறகு ஒரு மாறுதல் பருவத்தின் பதிவுகள், தமிழிலக்கியத்தில் எழுந்தன. அத்துடன் இணையம் மூலம் தமிழிலக்கியத்தின் சாராம்சமான பகுதியுடன் அடையாளம் காணநேர்ந்த சில இந்தியப்புலம்பெயர் தமிழர்களும் இந்த மாறுதல் காலகட்டத்தின் இலக்கியப் பதிவுகளை உருவாக்கினார்கள். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, ரமணிதரன், சோபா-சக்தி, கலாமோகன், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், சிறிசுகந்தராஜா, சக்கரவர்த்தி, வ.ந.கிரிதரன் என்று இலங்கை சார்ந்த தமிழ்படைப்பாளிகளின் புலம்பெயர் அனுபவக் கதைகள் முக்கியமானவை. காஞ்சனா தாமோதரன், மனுபாரதி, கோகுலக்கண்ணன், அலர்மேல்மங்கை, நா.கண்ணன் போன்று இந்தியத் தமிழர்களும் எழுதிவருகிறார்கள். இப்படைப்புகளில் பொதுத்தன்மைகளை வகுத்துக் கொள்ள இன்னும் காலம் ஆகவில்லை. எனினும் நம்பிக்கையூட்டும் பல ஆக்கங்கள் தொடர்ந்து வருகின்றன என்பதை கூறாமலிருக்க முடியாது.

Last Updated on Wednesday, 30 March 2016 18:27 Read more...
 

அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவாக .....

E-mail Print PDF

- ஈழத்தமிழ் இலக்கியத்தின் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் அ.ந.க என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அறிஞர் அ.ந.கந்தசாமி. அவரைப்பற்றி ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் சிலர் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றினைத் தொகுத்து , அவர் நினைவாக வழங்குகின்றோம். - பதிவுகள் -

சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்~

- அந்தனி ஜீவா -

அறிஞர் அ.ந.கந்தசாமி -- 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். 'பதிவுகள்' இணைய இதழிலும் மே 2003இலிருந்து அக்டோபர் 2003 வரை தொடராக மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தற்போது அ.ந.க.வின் நினைவு தினத்தினை ஒட்டி மீள்பிரசுரமாகின்றது. பெப்ருவரி 14, 1968 அவர் அமரரான நாள். - பதிவுகள் -

அறிஞர் அ.ந.கந்தசாமிஅந்தனி ஜீவா "வாலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு, மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என் கண்கள் வயல் வெளிகளையும், தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும்....உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசை கொண்ட காலம்....."

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும், சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்கால நினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்தானிருக்கும்.  அமரரான அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் படிக்கும் பொழுது அந்தத் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

Last Updated on Saturday, 13 February 2016 07:22 Read more...
 

ஒரு சிறுகதையின் மீளுருவாக்கம்! சயந்தனின் ஆதிரை நாவல் மீதான ஒரு பார்வை.

E-mail Print PDF

சயந்தனின் ஆதிரை நாவல்“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான  புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை  கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம்.  இதனை வாசித்ததிலிருந்து  கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும்  அவையனைத்துமே வாழ்வின் மோசமான உண்மைகளைக் கற்று தருபனவாக  இல்லாதிருந்த  போதிலும் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் சில வேளைகளில் அமைந்ததுண்டு. அவற்றில் அண்மையில் வெளிவந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ எனும் மகா நாவலைக்குறிப்பிடலாம். அது கடந்த பல தசாப்த காலமாக நீடித்த ஈழப்போரின் பின்னணியில் மறைந்திருந்த  பல மோசமான உண்மைகளையும் வரலாற்றையும் விபரித்துக்  கூறிச்சென்றது. இப்போது சயந்தனின் ‘ஆதிரை’ எனும் 664 பக்ககங்கள் அடங்கிய கனமான தடித்த நாவலொன்று எமது பார்வைக்கு கிட்டியுள்ளது. இது வாழ்வு குறித்தும் வரலாறு குறித்தும் எத்தகைய உண்மைகளை வெளிக்கொணரப் போகின்றது  என்ற ஆவலுடனேயே இந்நூலினில் நாம் உள் நுழைகிறோம்.

இன்றைய  நவீனதமிழ் இலக்கிய உலகில்  சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. அர்த்தம் சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ஆறாவடு நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன்   கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது. இப்போது இவரது இரண்டாவது நாவலாக ‘ஆதிரை’ வெளிவந்துள்ளது. தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நாவல் முன்னுரை, முகவுரை, மதிப்புரை, அணிந்துரை என மரபு சார்ந்த மதிப்பீடுகள் எதுவுமின்றி வெறும் மொட்டையாக வெளிவந்திருப்பது விசனத்தை ஏற்படுத்துகின்றது.

Last Updated on Thursday, 11 February 2016 19:51 Read more...
 

பெண்களின் குரலாக ஒலித்த பெண்ணியவாதி அருண். விஜயராணி !

E-mail Print PDF

அருண். விஜயராணிஇலங்கையில்   இலக்கியம்  பேசி  எழுதி  வாழ்ந்த  ஒருவரை அந்நியதேசத்தில்  கொண்டு  சென்றுவிட்டால்,  அது  கண்ணைக்கட்டி காட்டில்  விட்டதற்கு  சமம்  என்று  சொல்வார்கள்.  இலங்கையில் அவ்வாறு   இதழ்களிலும்    வானொலியிலும்  தனது  பெயரை ஆழமாகப்பதித்திருந்த  அருண். விஜயராணி  கணவருடன்   மத்திய கிழக்கு,    இங்கிலாந்து  என்று  பயணித்து  இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு   வந்தபொழுது    இங்கும்  கண்ணைக்கட்டிய வாழ்க்கைதானோ...?  என  யோசித்திருப்பார்.

ஆனால்,  அவர்  இங்கு  வந்த  காலத்தில்  இலங்கையிலிருந்து  வந்த சிலர்  தமது  பொதிகளுடன்  இலக்கியத்தையும்  சுமந்து வந்திருந்தனர்.   அதனால்  விஜயராணிக்கு  அவுஸ்திரேலியா நால்வகை  பருவகாலங்களைக்கொண்டிருந்தாலும்  கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில்   வசந்த காலம்தான்.

இலங்கையில்,   மத்திய  கிழக்கில்,  இங்கிலாந்தில்  அவர் வாழ்ந்தபோது  செய்ய இயலாமல்போன  ஒரு  ஆக்கபூர்வமான செயலை  அவர்  இங்கு செய்தமைக்கு  இங்கிருந்த  அவருக்கு இங்கிதமான  இலக்கியச்சூழல்தான்  காரணம்.  இங்குதான்  அவருடைய   முதல்  கன்னிமுயற்சி  கன்னிகாதானங்கள்  நூல் வெளியானது.

1989  ஆம்  ஆண்டு  அவர்  இந்த  கங்காரு  நாட்டுக்குள்  வந்தது  முதல் 2015   ஆம்  ஆண்டு  இறுதியில்  இங்கிருந்து  விடைபெற்றது வரையில், அவர்  சுவாசித்தது  கலை,  இலக்கியக்காற்றைத்தான்.

Last Updated on Saturday, 30 January 2016 18:24 Read more...
 

வீரியம் குன்றாத சாதியம்!

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்- கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். -


வீரியம் குன்றாத சாதியம்!எமது ஊரில் சவரத்தொழில் செய்து வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் கதையை, எழுத்தாளர் தெணியான் அவர்கள் ‘குடிமைகள்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதற்கான அறிமுக நிகழ்வு ஒன்றினை, கடந்த வருடம் அவரது நண்பர்கள் கொழும்பில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட கொழும்புவாழ் கனவான்கள் சிலர், ”சாதியம் செத்துப்போன இன்றைய நிலையிலும், இது போன்ற படைப்புக்களுக்கான அவசியந்தானென்ன?” எனக் கேட்டு, ’அரியண்டப்’ பட்டிருந்தனர். இதே கேள்வியை திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது இந்த நூல் குறித்து, ஒருசில தமிழ்க் கனடியக் கனவான்கள், கல்விமான்கள் கேட்டுக் கறுவிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

இந்நிலையில் திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் இந்த, தன்வரலாற்று நூல் குறித்து, கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து, இன்றைய காலகட்டத்திலும் இவை போன்ற படைப்புக்களுக்கான தேவை என்ன? இவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? என்பன போன்ற வினாக்களுக்கான ஒருசில ‘அடையாள விடைகளை’ சொல்லிச் செல்வதே எனது நோக்கமாகும்.

வரலாறு என்பது ஆதிக்க சக்தியினரின் - ஆதிக்க சக்தியினருக்காக - ஆதிக்க சக்தியினாரால் எழுதப்பட்ட கடந்தகாலக் ’கலாபக் கதைகள்’ என்பதாகவே காலம் காலமாக இருந்து வந்தது. ஆயினும் மாறிவரும் இன்றைய நவீன உலகின் புதிய நடப்புகளுக்கேற்ப, இதிலும் பல மாற்றங்கள் இடம்பெறலாயின.  மேட்டிமையாளர்களால் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டுவந்த உழைக்கும் மக்களதும், ஒடுக்கப்பட்ட மக்களதும், அடிநிலை மக்களதும் கதைகள் இப்போது இலக்கியங்களாகப் புனையப்படுகின்றன; வரலாறுகளாக வரையப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின் ‘கருக்கு,’  கே.ஏ. குணசேகரனின் ‘வடு,’  ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

Last Updated on Wednesday, 27 January 2016 20:11 Read more...
 

வானதி' திருநாவுக்கரசு மறைவு!

E-mail Print PDF

வானதி' திருநாவுக்கரசு மறைவு!தமிழர்களின் வாசிப்பனுவத்தில் வானதி பதிப்பகத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் , மிகவும் அழகான முறையில் , நேர்த்தியாக வெளிவரும் வானதியின் நூல்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை. வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகள் , பிலோ இருதயநாத்தின் ஆதி வாசிகளுடனான பயண அனுபவங்கள், ராஜாஜியின் வியாசர் விருந்து , சக்கரவர்த்தித்திருமகன் போன்ற ஆத்மீகப்படைப்புகள் எனத்தொடங்கி சாண்டில்யன், கல்கி, அகிலன், ஜெகசிற்பியன் போன்றோர் படைப்புகள் வரையில் அழகான அட்டைப்படங்களுடன் பல்வகை நூல்களைத் தனது வானதி பதிப்பக வெளியீடுகளாக, பல வருடங்களாகத்தந்தவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்கள். இப்பதிகத்தின் நூல்களைப்பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் வெகுசனப்படைப்புகளாகவேயிருக்கும். இவர் தனது வாழ்வில் சந்தித்தவர்களைப்பற்றிய தனது பதிப்பகத்துறை அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்.

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் கொடும்பாளூர் இளவரசியும், இராஜராஜனின் மனைவியுமான வானதி என்னும் பாத்திரத்தின் மீது கொண்ட பேரபிமானத்தினால் தனது பதிப்பகத்துக்கு 'வானதி' என்று பெயரிட்டவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்கள்.  பல்துறைகளிலும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த படைப்புகளினூடுதான் எம் போன்றவர்களின் வாசிப்பும் வளர்ந்தது. நூல்களை மிகவும் நேர்த்தியாக வெளியிடுவதை ஒரு தவமாகச்செய்தவர் திருநாவுக்கரசு. அவரது மறைவு தமிழ்ப்பதிப்பகத்துறைக்கு முக்கியமானதோரிழப்பே.

Last Updated on Wednesday, 20 January 2016 01:48 Read more...
 

பேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா

E-mail Print PDF

-பேராசிரியர் கோபன் மகாதேவா -பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில்  அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.

டென்மார்க்கில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிடைத்தது. அவர் எமக்கு அன்பளிப்புச் செய்த நூல்கள் மூலமும் அவரது சமகாலப் பணிகளையும் அறிய முடிந்தது.

தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான அனுமதியை சிறிமாவிடம் வாதிட்டுப் பெற்றார் என்பதை விளக்குவதாக  டென்மார்க்கில் நடைபெற்ற கலைவிழாவில் அவரது உரை அமைந்திருந்தது. பின்னர் நான் அவரிடம் இது தொடர்பாக ஞானம் சஞ்சிகையில் வெளியிடுவதற்கென ஒரு நேர்காணலையும் பெற்றுக்கொண்டேன்.

Last Updated on Tuesday, 19 January 2016 21:54 Read more...
 

ஆய்வு: பாரதியின் பெண்ணுரிமைக் கவிதைகள்!

E-mail Print PDF

-பேராசிரியர் கோபன் மகாதேவா -- பேராசிரியர் கோபன் மகாதேவா | திருமதி சீதாதேவி மகாதேவா -(இக் கட்டுரை என் அண்மையில் மறைந்த மனைவியார் வைத்தியை சீதாதேவியுடன் செய்த ஒரு கூட்டு இலக்கிய முயற்சியே.  பாரதியார், பெண்ணுரிமை எனும் விடயத்தில் என்னவெல்லாம் எழுதியுள்ளார் என ஒரு வாரமாகக் கூடி ஆராய்ந்து, ஆணுரிமையையும் விட்டுக் கொடுக்காமல் தர்க்கித்தே முடிவுகளை எடுத்தோம்.  -- கூட்டாசிரியர்  கோ-ம.)

சுப்பிரமணிய பாரதியார் பெண் உரிமையை ஆதரித்துப் பாடி இந்தியாவில் ஆர்ப்பாட்டம் செய்த புலவர்களுள் ஒரு முன்னோடி எனலாம்.  இன்றிருந்து கிட்டத் தட்ட ஒருநூற்றாண்டு காலத்தின் முன் எழுதப்பட்ட பாரதியாரின் பெண்ணுரிமைப் பாடல்களில்: மனைத் தலைவிக்கு வாழ்த்து, பெண்விடுதலை, பெண்விடுதலைக் கும்மி, புதுமைப்பெண், பெண்மை, எனும் பாரதியின் தனிப் பட்ட, குறுகிய நேரடிக் கவிதைகளை நாம் விசேடமாகக் குறிப்பிடலாம். அத்துடன், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, எனும் நீண்ட கதைக் கவிதைகளிலும் அன்று பெண்கள், ஆண் ஆதிக்கத்தால் பட்டு வந்த பிரச்சினைகனை மறைமுகமாகப் பாரதியார் விளக்கி இருக்கின்றார்.  மேலும் அவரின் கண்ணம்மா கவிதைகள் மூன்றிலும், மகாகாளி, முத்துமாரி, கோமதி, மகாசக்தி, எங்கள் தாய், தமிழ்த் தாய், பிஜித்தீவிலே  ஹிந்து ஸ்திரிகள், தாய் மாண்பு, அம்மாக் கண்ணுப் பாட்டு, வள்ளிப்பாட்டு, ராதைப்பாட்டு, கண்ணம்மா என் குழந்தை, என்னும் கவிதைகளிலும், பெண்மைக் குணங்களை மனதாரப் போற்றி இருக்கின்றார். மனப் பெண் என்னும் ஒரே ஒரு கவிதையில் மட்டும் பெண்களின் மாறிடும் மனோநிலை பற்றி அவர் கிண்டல் செய்திருக்கின்றார். இந்தக் கட்டுரையில், பெண் விடுதலைக் கும்மி எனும் ஒரேயொரு கவிதையை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து, விளக்கி, பாரதியாரின் பெண்ணுரிமைத் தொண்டினை ஆராய்ந்து மதிப்பிடுகிறோம். முதலில், இதோ, சந்தம் பிரிக்கப் பட்ட அக் கும்மிக் கவிதை:

Last Updated on Tuesday, 19 January 2016 21:47 Read more...
 

இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015

E-mail Print PDF

இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார். 

தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘’Web 2.0’’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.  கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000.  இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார்.  இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும். இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய  இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி  திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும்,  தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலெக்சு Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது.

Last Updated on Wednesday, 06 January 2016 00:43 Read more...
 

ஆய்வு: பாரதி பாடிய யேசு கிறிஸ்து

E-mail Print PDF

பாரதி பாடிய யேசு கிறிஸ்துஆங்கில ஆண்டின் நிறைவு மாதமாக விளங்கக்கூடிய டிசம்பர் மாதத்திற்கு நிறைய சிறப்புகள் காணக்கிடைக்கின்றன.அவற்றில் மிக சிறப்பான ஒன்றாக அனைவராலும் கருதப்பெறுவது, யேசு கிறிஸ்துவின் பிறப்பு. இந்த மாதத்தில்தான் பாரதியாரும் பிறந்தார். அவர், தன்னைச் சக்திதாசனாகக் கருதிக் கொண்ட போதிலும் அவர், ஒருபோதும் தன்னைப் பிற மத துவேசியாகக் காட்டி வாழாத மகாகவியாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டியுள்ளார். சமயச் சார்பின்றி ஒரு சமய நல்லிணக்கவாதியாக விளங்கியுள்ளார். அதை அவரின் பல்வேறு பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.

பாரதியார் கவிதைகள் என்னும் பெருந்தொகுதியில் விநாயகர் நான்மணி மாலை முதலாகவும், தோத்திரப் பாடல்கள் இரண்டாவதாகவும், வேதந்தப் பாடல்கள் மூன்றாவதாகவும் காணப்படுகின்றன. இம்மூன்றாம் பகுதியாக உள்ள வேதாந்தப் பாடல்களில் முப்பது தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. இவை யாவும் 1930ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்றன. இதிலுள்ள சில பாடல்கள் 1910ஆம் ஆண்டில் வெளிவந்தவையாகும். இம்முப்பது கவிதைகளில் ஒன்பதாவது கவிதையாகக் காணக்கிடைப்பதுதான் இந்த யேசு கிரிஸ்து என்னும் கவிதையாகும். இதில் யேசுவைப் பற்றிப் பாரதியார் குறிப்பிடும் செய்திகள் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.

Last Updated on Sunday, 03 January 2016 00:44 Read more...
 

ஆய்வு: தொல்காப்பியம் நம்பியகப்பொருள் களவியல் ஒப்பீடு

E-mail Print PDF

முன்னுரை
செ.ரவிசங்கர்உலக மொழி வரலாற்றில் மேனாட்டு இலக்கண மரபுகளாகிய கிரேக்க லத்தீன் மரபுகளும் வடமொழி இலக்கண மரபும், தமிழ் இலக்கண மரபும் மிகப் பழமையானவைகளாகும், சிறப்புடையனவாகும். இப்பழமையான மூன்று மரபுகளின் தன்மை, வளர்ச்சி, வரலாறு ஆகியவற்றை ஆராயும் போது தமிழ் மரபு மற்ற இரு மரபுகளினின்றும் தனித்து நிற்கும் சிறப்புடையது என்பது புலனாகின்றது. என்கிற கூற்றுக்குகேற்ப தமிழ் இலக்கண மரபு பொருளதிகாரத்தின் பால் சிறப்பு பெற்றுள்ளது. பொருளதிகாரத்தில் பொருள் ,பொருளைப் புலப்படுத்தும் வடிவம், பொருளைப் புலப்படுத்தும் முறை ஆகிய மூன்றும் இலக்கிய ஆய்வுக்குத் தேவை. பொருளதிகாரம் அம்முறையில் மலர்ந்த பொது இலக்கணமாகும். பொருளே அகம் புறமாய், களவு கற்பாய் நிற்கும். செய்யுளியல் வடிவை நினைவுபடுத்தும் உவமை மெய்ப்பாடு பொருளியல் என்பன பொருள் புலப்பாட்டு முறைகளை அறிவிக்கும் இவ்வாறு மூன்று நிலைகளில் இலக்கியக் கூறுகளை பொருளதிகாரத்தில் காணலாம். தமிழ் மொழியில் தொல்காப்பித்திற்கு  அடுத்து வந்துள்ள இலக்கண நூல்களில் நம்பியகப்பொருளும் ஒன்று, இந்நூலில் உள்ள களவியல் பகுதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்களின் களவியல் சிந்தனை எந்த அளவில் தொல்காப்பியர் காலத்தில் இருந்து வந்துள்ளது என்பது புலப்படும் அந்த வகையில் இந்த இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப்பாக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பிய களவியல் உள்ளடக்கம்
தொல்காப்பியக் களவியல் பகுதியில், களவு ஒழுக்கத்தின் இயல்பு, காதல் முன்னைய நல்வினையால் விளைவது முதற் சந்திப்பின் விளைவு, மானுட மகளே எனத்துணிதல், தலைவன்கூற்று, தலைவன் தோழியிடம் பேசுதல், களவுப் புணர்ச்சிக்கு நிமித்தக் காரணங்கள், கைக்கிளைப் பெருந்திணை, அன்பின் ஐந்திணைக்கு உரிய உணர்வு நிலைகள், களவு ஒழுக்கத்தில் தலைவன் கூற்றுக்கள், தலைவியின் வேட்கைக் குறிப்பு, கண்களே உணர்த்தும் மகளிர் அல்ல நடையில் பேசுதல், களவுக் காலத்தில் தலைவி கூற்றுக்களும் மெய்ப்பாடுகளும், தலைவி சினந்து பேசும் இடம், தோழி கூற்று, செவிலக்கூற்று, நற்றாய் கூற்று, ஐயம் தெளிதல் காதலர்கள் தாமே சந்தித்துக் கொள்ளுதல், தலைவி குறியிடம் கூறுதல் தோழியும் களஞ்சுட்டல், தாய் என்பது செவிலியைக் குறித்தல் தோழி செவிலியின் மகள், தோழி உதவுங்காலம், தோழியின் உதவி பகற்குறி, இரவுக்குறி இடங்கள், தந்தை தமையன் அறிதல், இருவகைத் திருமணம் போன்ற நிகழ்வுகள் தொல்காப்பியரின் களவியல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

Last Updated on Sunday, 03 January 2016 01:04 Read more...
 

ஹரோ இலக்கிய சந்தியும் Post Code War உம்.

E-mail Print PDF

ஹரோ இலக்கிய சந்தியும் Post Code War உம். - எஸ்.வாசன் -தாம் வாழும் சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட அல்லது மேம்படுத்திக் காட்ட, அச்சமூகத்திலிருந்து தம்மை சற்று வித்தியாசமாக அடையாளப்படுத்துவதும், பின் அந்த அடையாளம் சார்ந்த வேறு சிலரை தன்னோடு இணைத்து தம்மை ஒரு புதிய அடையாளத்துடன் வெளிப்படுத்துவதும் மனித இயல்புகளில் அல்லது பலவீனங்களில் ஒன்றாகும். இது  மொழியால், கலாச்சாரத்தால், அல்லது பண்பாட்டால் ஒன்றிணைந்த மக்கட் கூட்டங்களை கூட  வேறு பல காரணங்களால் பிளவு படும் சாத்தியப்பாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. இதில் பிரதேச வேறுபாடு முக்கிய கவனத்தினை பெறுகின்றது. தாம் வாழுகின்ற நாட்டில் வட்டாரமாக, வலயமாக, குறிச்சியாக பிரித்துப் பார்த்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும் மற்றவர்களை தாழ்வாகப் பார்ப்பதும்  இந்த பிரதேச அடையாள வேறுபாட்டின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். இதற்கு முக்கிய உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தோரைக் குறிப்பிடலாம். வலிகாமம் வடக்கு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தி ஸ்ரீலங்கா இராணுவம் அபகரித்துக் கொண்டதன் பின்னணியில் இடம்பெயர்ந்த வலி வடக்கு மக்கள், தமக்கு மிக அண்மையில் 3,4, மைல்கள் இடைவெளியில் மட்டுமே அமைந்த பிரதேசத்திற்கே இடம்பெயர்ந்து இருந்த போதிலும் மற்றைய இடம்பெயராத மக்களால் ஏளனமாக பார்க்கப்படும் நிகழ்வு கடந்த முப்பத்து வருடமாக இன்றளவும் தொடர்கின்றது. இதற்கு அந்த இடம்பெயராத மக்கள் அதற்கு முன்னரேயே அச்சிறிய நிலப்பரப்பிலும் அவர்களை விட தாங்கள் மேன்மையானவர்கள் என்ற மனப்பான்மையைக் கொண்டிருந்ததே காரணமாகும்.

இச் சிறிய வட்டார வலய வேறுபாடுகள் காரணமாக தமக்குள் உருவாக்கிக் கொண்ட உதைபந்தாட்ட அணிகள், கிரிக்கெட் அணிகள் மூலமாக அதன் ரசிகர்கள் மோதிகொள்வதும் நாம் அடிக்கடி  அறிகின்ற  தகவல்கள். இவை உலகெங்கும் நடைபெறுகின்ற சாதாரணமான நிகழ்வுகள்.  இங்கு லண்டனில் இன்னொமொரு விசித்திரமான வழக்கு இருக்கின்றது. அது Postcode War . இது இங்கு வாழும் சிறுபான்மை சமூகங்களில் அதுவும் கறுப்பின பதின்ம வயது இளைஞர்களிடம் தொற்றிக் கொண்டுள்ள ஒரு வியாதி. இவ் வழக்கத்திபடி என்றோ ஒரு காலத்தில் லண்டன் நகரசபை தனது பரிபாலன வசதிக்காக Postcode வாயிலாக  பிரித்துக் கொண்ட பிரிவுகளில்  ஒரு Postcode பகுதியில் வாழும் இளைஞர்கள் மற்றைய Postcode பகுதியில் வாழும் இளைஞர்களுடன் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி மோதல்களில் ஈடுபடுவார்கள். இம்மோதல்கள் வருடாவருடம் பல கொலைகளில் முடிவடைவது வழக்கம். இதில் வருத்தப்பட வேண்டிய முக்கிய விடயம் இந்த மோதல்களில் இரத்த உறவுகளே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது. இதில் Postcode வேறுபாடு காரணமாக ஒரே தெருவில் எதிரும் புதிருமாக வசிக்கும் அயல் வீட்டு இளைஞர்களும் மோதிக்கொள்வது விசித்திரமானதும் வேதனை தருவதுமாகும்.

Last Updated on Tuesday, 22 December 2015 07:05 Read more...
 

மாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….

E-mail Print PDF

லதா ராமகிருஷ்ணன்மதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு,  மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா? இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.

ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது.  கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா?   மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.

Last Updated on Wednesday, 16 December 2015 04:30 Read more...
 

சில எண்ணப்பதிவுகள்: கவிஞர் அய்யப்ப மாதவன்

E-mail Print PDF

கவிஞர் அய்யப்ப மாதவன்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

நவீன தமிழ்க்கவிதைவெளியில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய  முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.

பரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர். திரைப்பட  இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவருடைய இலட்சியம். அதற்கான எல்லாத் தகுதிகளும் இவரிடம் உள்ளன. காலம்தான் இன்னும் கனியவில்லை. [திரைப்படத்துறையில் உள்ள இவருடைய நண்பர்கள் முயன்றால் அய்யப்ப மாதவனின் கனவை நிறைவேற்ற முடியாதா என்ன?]

இவருடைய கவிதை ஒன்று குறும்படமாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிஞர் அய்யப்பனின் தொடர்பு அலைபேசி எண்: +919952089604. இவருடைய மின்னஞ்சல்  முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .

இதுவரை இவருடைய 11 கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

Last Updated on Wednesday, 16 December 2015 04:30 Read more...
 

கவிஞர் வைதீஸ்வரனின் பன்முக இலக்கியப்பங்களிப்பு!

E-mail Print PDF

கவிஞர் வைதீஸ்வரனுக்கு அகவை எண்பது!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவிலோர் அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட!) குறிப்பிடத்தக்கவை. http://www.vydheesw.blogspot.in/ ) கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரை அடர்செறிவானது!   வைதீஸ்வரனின் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள், அவருடைய நேர்காணல், அவருடைய சில கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில ஆகியவை அவருடைய இலக்கியப் பங்களிப்பை மரியாதையோடு நினைவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாய் இங்கே தரப்பட்டுள்ளன.

Last Updated on Wednesday, 16 December 2015 04:30 Read more...
 

மானிடத்தை இதய சுத்தியோடு நேசித்த முதுபெரும் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்!

E-mail Print PDF

- பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ் அகஸ்தியரின் இருபதாவது நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி இக்கட்டுரை வெளியாகின்றது. -

எழுத்தாளர் அகஸ்தியர்

தமிழ் இலக்கிய உலகில் அகஸ்தியர் என்ற பெயர் மிகப் பிரபலமான ஒன்றாகும். பௌராணிக கதைகள் கூறும் குறுமுனிவர் அகஸ்தியர் இந்தியாவின் வடபுலத்திலிருந்து தென்புலத்திற்கு வந்து தமிழிலக்கியத்தையு(ள)ம் மொழி அமைப்பையும் புதிய நெறியிலே வளர்த்தார் எனக் கூறப்படுகிறது. இதே போன்று இருபதாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபுலத்திற் பிறந்து வளர்ந்து தென்புலத்திலும் மத்தியபுலத்திலும் வாழ்ந்து பூமிப்பந்தின் மேலைப்புலத்திற் சங்கமமாகிவிட்ட அசுர எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர், புதிய இலக்கிய அரசியற் கோட்பாடுகளைத் தம்மகத்தே கொண்ட நூற்றுக்கணக்கான ஆக்கங்களைத் தந்து தமிழ் இலக்கிய உலகிற் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

தனக்கெனவும் தனது குடும்பத்திற்கெனவும் தனது சுற்றத்துக்கெனவும் மட்டும் வாழாது தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்துக்காகவும் நாட்டுக்காகவும் அவற்றையும் கடந்து மனிகுலத்துக்காகவும் தனது வாழ்க்கையையும் சுகபோகங்களையும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்ணிப்பவன் சராசரி மனிதனிலிருந்து உயர்ந்து நிற்கின்றான். இறந்தும் இறவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றான்: போற்றுதலுக்குள்ளாகின்றான். அத்தகையவர்களுள் அமரரான அகஸ்தியரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையிற் பிறந்து பிரான்சின் தலைநகரான பாரிஸ் மாநகரத்திற் சங்கமமாகிவிட்ட அவரது முற்போக்குச் சிந்தனைகளும் உயர்ந்த கருத்துக்களும் இலங்கைக்கோ, தமிழ் உலகுக்கோ மட்டுமன்றி பிரதேச, இன, மத, மொழி, நாட்டு எல்லைகளைத் தாண்டிய அனைத்துலகுக்கும் சொந்தமானவை, நன்மை பயப்பவை.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டை என்னும் கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு சவரிமுத்து அன்னம்மா தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்து, ஆனைக்கோட்டைத் தமிழ்ப் பாடசாலையிற் கல்வி பயிலத் தொடங்கி, எஸ்.எஸ்.ஸி வகுப்புடன் பாடசாலைக் கல்விக்கு – வரன்முறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும் தமது அறுபத்தொன்பதாவது வயதில் அமரராகும் வரையும் கீழை நாடுகளதும் மேலைநாடுகளதும் தத்துவம், அரசியல், தர்க்கவியல், அறிவியல், சித்தாந்தக் கோட்பாடுகள் முதலிய பலதுறைகள் சார்ந்த நூல்களையும் கீழைத்தேய, மேலைத்தேய இலக்கியங்களையும் இடையறாது கற்று வந்தார். இறுதி மூச்சுவரை அலுப்புச் சலிப்பின்றி எழுதி வந்தார். மரணப் படுக்கiயில் இருந்தபோதும் அவரது கை எழுதுவதை நிறுத்தியதில்லை.

Last Updated on Wednesday, 09 December 2015 15:16 Read more...
 

வன்னிப் பிரதேசத் தமிழ் இலக்கியம்: ஈழத்தின் வன்னி மண்ணின் பண்டைய இலக்கியங்கள் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு

E-mail Print PDF

(நோர்வேயில் வதியும் ஈழத்தமிழரான  திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் என்பாரின்  பதிப்பு முயற்சியில் 2014இல்  வெளிவந்ததான வன்னி வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பிலான பெருந் தொகுப்பில் (675 பக்கங்கள்) இடம்பெற்ற கட்டுரை. எழுதியனுப்பிய நாள் 29-03-2014)

தோற்றுவாய்
dr_n_subramaniyan.jpg - 12.37 Kbஈழத்திலே தமிழர் பெருந்தொகையினராக  வாழும் நிலப்பரப்புகளிலொன்றாகத் திகழ்வது வன்னிப் பிரதேசம் ஆகும். இப்பிரதேசமானது  பண்டைக்காலம் முதலே தமிழரின் கலைகள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைச் சிறப்புற வளர்த்துவந்துள்ளது. இன்றும் வளர்த்துவருகின்றது.    ஈழத்தின் ஒட்டுமொத்த  தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலே வன்னிப்பிரதேசத்திற்;கு  ஒரு தனி இடம் உளது என்பது அழுத்திப் பேசப்படவேண்டிய முக்கிய அம்சமாகும்.  இவ்வகையில் இம்மண்ணின் இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான ஆய்வுப் பார்வையானது  தனியாக ஒருநூலாக விரிவுபெறக்கூடிய பொருட்பரப்புடையதாகும். இத்தொகுப்புநூலின்   இடச்சுருக்கம் கருதி பண்டைய இலக்கியங்களின் தோற்றம் தொடர்ச்சி என்பன தொடர்பான  மிக முக்கிய செய்திகளை மையப்படுத்திய ஒரு வரலாற்றுக் குறிப்பாக மட்டுமே  எனது இக் கட்டுரை முயற்சி அமைகிறது.1

1. வன்னி என்ற நிலப்பரப்பும் அதன் இலக்கிய வளமும்
வன்னிப் பிரதேசம் என்று இன்று நாம் குறிப்பிடும் நிலப்பரப்பானது, வடக்கில் யாழ்ப்பாணக் கடலேரியையும் தெற்கில்  வடமத்திய மாகாணப்பகுதி மற்றம் அருவியாறு ஆகியவற்றையும் கிழக்கிலும் மேற்கிலும் முறையே திருக்கோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டதாகும்.  ஏறத்தாழ 2000சதுரமைல் பரப்பளவுடையதான  இந்நிலப்பரப்பில் பெரும்பகுதி இன்றைய ‘வன்னி’ மற்றும்   ‘முல்லை’ மாவட்டங்களுள் அடங்கியதாகும்.

ஆயினும்,  கடந்தசில நூற்றாண்டுகளுக்கு முன்வரை-குறிப்பாக 12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்காலப்பகுதிகளில்- ‘வன்னி’ என்ற அடையாளச் சுட்டானது மேற்சுட்டிய எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து பரந்ததாக அமைந்திருந்தது என்பது இங்கு நினைவிற் கொள்ளப்படவேண்டியதாகிறது. குறிப்பாக மன்னார் மற்றம் திருக்கோணமலை மாவட்டப் பகுதிகளையும் உள்ளடக்கி , தெற்கே புத்தளம் மற்றும்  மட்டக்களப்பு ஆகிய   மாவங்கள் வரை  விரிந்து பரந்த நிலப்பரப்புகளும்   ‘வன்னி’ என்ற  அடையாளம் அக்காலப்பகுதிகளில் பெற்றிருந்தன. வன்னிபம் அல்லது வன்னிமை எனப் பெயர்தாங்கிய குறுநில ஆட்சியாளர்களின் ஆட்சிப்பிரதேசங்களாக  இந்நிலப்பரப்புகள் திகழ்ந்துவந்துள்ளன. எனவே ஈழத்தின் வன்னிப் பிரதேசமானது பண்டைய நிலையில்  பரந்து விரிந்ததாகத் திகழ்ந்தது என்பதையும்  நாளடைவில் அதன் எல்லைகள் சுருங்கிவந்துள்ளன  என்பதையும் இங்கு கருத்துட்கொள்வது அவசியமாகும்.

Last Updated on Wednesday, 18 November 2015 08:17 Read more...
 

வெங்கட் சாமிநாதனுடன்…

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்நாளையைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்லமுடியும்… பொதுவாக ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் நான் முதலில் வாசிப்பது அதன் உள்ளடக்கம் அல்ல. அணிந்துரை, முன்னுரை, முன்னீடு இவைகளைத்தான் படிப்பேன். இவைகள்தான் புத்தகத்தை தூக்கி நிறுத்துபவை. இவற்றை வைத்துக் கொண்டு ஓரளவிற்கு புத்தகத்தை எடை போடலாம். ஒவ்வொருத்தருக்கும் அவருடைய புத்தகம் பெரிது. நான் எனது ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு முதுபெரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனை முன்னுரை எழுதுவதற்காக அணுகினேன். அவரை நான் ஏன் தெரிவு செய்தேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘வல்லமை’ என்ற மின்னிதழ் 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றைஒரு வருட காலமாக நடத்தியது. மாதாமாதம் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தெரிவு செய்து கருத்துக் கூறினார் வெ.சா. முதல்மாதம் (ஆகஸ்ட்) வந்த கதைகளில் என்னுடைய சிறுகதையைத் (காட்சிப்பிழை) தெரிவு செய்து கருத்துக் கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் :

ஐக்கியா & வல்லமை சிறுகதைப் போட்டி ஆகஸ்ட் (2012) சிறுகதைகள் - வெங்கட் சாமிநாதன் : " வணக்கம். வல்லமைக்கு இந்த மாதம் வந்த மொத்த சிறுகதைகள் 18.  அவற்றில்,  நான் சிறந்ததாகக் கருதும் கதையைத் தேர்வு செய்யச் சொன்னீர்கள். தேர்வு, சிறந்தது, நன்றாக எழுதப்பட்டது என்ற முடிவுகள் எல்லாம் அவரவரது சுயம். இந்த அடிப்படைப் பார்வையை ஒத்துக்கொண்டால், எனக்குப் பட்டதைச் சொல்வது சிறந்தது என்று ஏதும் ISI முத்திரை குத்தும் விவகாரம் இல்லை. என்பது புரிந்தால், தேர்வு செய்யப்பட்ட கதையை எழுதியவர் புளகாங்கிதம் அடைய வேண்டியதில்லை. மற்றவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. இதெல்லாம் பால பாடங்கள். ஆனாலும் தமிழர்கள், தமிழ்ச்சூழல் எல்லாம் தொட்டாச் சுருங்கிகள். அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, டால்ஸ்டாய் என்னும் ஒரு சிகரம் ஷேக்ஸ்பியர் என்னும் இன்னொரு சிகரத்தைக் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சியிருக்கிறார்.

இந்தப் பதினெட்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. யார் யார் எந்தக் கதை என்று நான் சொல்லவில்லை.

இவற்றில் எல்லாம் சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம். மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இலலாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தபடுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது மாறுவதே இல்லை. சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள். இங்கு  தான் சுதாகர் எழுத்தை நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். இனி அவர் எழுத்தை எதிர் நோக்கியிருப்பேன்."

Last Updated on Thursday, 12 November 2015 20:47 Read more...
 

அஞ்சலி: வெங்கட் சாமிநாதன் மறைந்தார். தமிழ்க் கலை, இலக்கிய உலகின் தவிர்க்க முடியாததோர் ஆளுமை சரிந்தது!

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -தொடர்ந்து அதிர்ச்சியான இழப்புச் செய்திகளாகவே வருகின்றன. தமிழ்க்கலை, இலக்கிய உலகில் முக்கிய ஆளுமைகளிலொருவரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்தாரென்ற செய்தியினை முகநூலில் முகநூல் நண்பர்களிலொருவரும், எழுத்தாளருமான அண்ணா கண்ணன் அவர்கள் பகிர்ந்திருந்தார்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். எதையும் வெளிப்படையாக, தர்க்கரீதியாக வெளிப்படுத்தி எழுதும் தன்மை வாய்ந்தது அவர்தம் எழுத்து. அவரது கருத்துகளுடன் முரண்பட்டவர்கள் கூட அவரது பங்களிப்பினை, ஆளுமையினை மதிப்பார்கள்.

அவரது மறைவு பற்றிய செய்தி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மிகுந்த பேரிழப்பே. கடந்த பல வருடங்களாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் ஆக்கங்களைத் தொடர்ச்சியாக 'வெங்கட் சாமிநாதன் பக்கம்' என்னும் பகுதிக்கு அனுப்பி வந்தவர் வெ.சா. அவர்கள். படைப்புகள் வெளிவரத்தாமதமானால் சிறு பிள்ளைபோல் தாமதத்துக்குக் காரணம் கேட்டு மின்னஞ்சல்களை அனுப்புவார். எப்பொழுதும் படைப்புகளைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பும்போது 'நண்பரும் , ஆசிரியருமான கிரிதரனுக்கு' என்றுதான் விளித்திருப்பார். அவர் என்னைத்தன் நண்பர்களிலொருவராகக் கருதியது அவரது நல்ல மனதினைக்காட்டுகிறது.

ஒரு சமயம் அவர் அனுப்பிய படைப்புகள் சிலவற்றை மின்னஞ்சல் 'ஸ்பாம் ஃபோல்ட'ருக்குள் போட்டு விட்டது. நானும் கவனிக்கவில்லை. அதுபற்றி அவர் எழுதிய மின்னஞ்சல் எவ்வளவுதூரம் அவர் 'பதிவுகள்' இணைய இதழ் மீது அக்கறை வைத்திருக்கின்றார் என்பதைக் காட்டும்.

திரு. வெ.சா. அவர்கள் அண்மையில் மறைந்த கவிஞர் திருமாவளவன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். திருமாவளவனின் உடல் நிலை பற்றி அவர் எழுதிய மின்னஞ்சல்கள் சிலவற்றையும், பதிவுகள் இதழுக்கு அனுப்பிய படைப்புகள் பற்றிய அவரது மின்னஞ்சல்கள் சிலவற்றையும் ஒரு பதிவுக்காக இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.

Last Updated on Friday, 23 October 2015 04:30 Read more...
 

தாய் மண்ணை நேசிக்கும் எழுத்துப் போராளி குரு அரவிந்தன்.

E-mail Print PDF

- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாக நூல் வெளியீட்டுடன் கூடிய  பாராட்டு விழா ஒன்று எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ். சிவநாயகமூர்த்தி தலைமையில் 'டொராண்டோ'வில் (BABA Banquet Hall,  3300 McNicoll Avenue,  Toronto. On. M1V 5J6.  (Middlefield Rd / McNicoll) அக்டோபர் 16  அன்று மாலை 6.45 மணிக்கு நடைபெற இருப்பதையொட்டி , இலங்கையின் மூத்த எழுத்தாளர்களிலொருவரான குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்கள் குரு அரவிந்தனின் இலக்கியப்பங்களிப்பு பற்றி எழுதிய இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் 'பதிவுகள்' வாசர்களுக்குப் புதியவரல்லர். 'பதிவுகள்' இணைய இதழில் அவ்வப்போது அவரது சிறுகதைகள் மற்றும் 'டொரண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளும் வெளிவருவது யாவரும் அறிந்ததே. குரு அரவிந்தனின் இலக்கியச்சேவையைப் பாராட்டி அவருக்கு விழா எடுக்கப்படும் இச்சமயத்தில் மேலும் மேலும் அவரது கலை, இலக்கியப்பணி தொடர்ந்திட  'பதிவுகள்' இணைய இதழும் அவரை வாழ்த்துகிறது. - பதிவுகள் -

குரு அரவிந்தன்குறமகள்‘யுத்தம் என்பது மனித உடல்களை மாத்திரமல்ல, மனித மனங்களையும் சிதைத்து விடுகின்றது. இது போன்ற பயங்கர அனுபவங்கள் இனி யாருக்கும் வரவேண்டாம். அதை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் தெரியும். எனவே யுத்தத்தைக் கொன்று விடுங்கள். இந்த உலகத்தை சுதந்திரமான அமைதிப் பூங்காவாக்குங்கள்’ என்று குரு அரவிந்தன் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டிருப்பதில் இருந்து அவர் ஒரு அமைதி விரும்பி என்பது புலனாகின்றது. குரு அரவிந்தன் இயல்பாகவே தனது உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்டுவதில்லை. புன்சிரிப்பு தவழும் அழகான வதனம், கண்கள்கூட அமைதியைக்காட்டும் ஆனால் சுற்றியிருக்கும் அத்தனையும் அங்கே பதிவாகியிருக்கும்.  தேவையான பொழுது மட்டும் அவை எழுத்து மூலம் வெளியே கொண்டு வரப்படும். தமிழ் மீதும், தாய் மண் மீதும் அதிக பற்றுக் கொண்டவர். எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அதனால்தான் தன்னார்வத் தொண்டராகவும் புலம் பெயர்ந்த மண்ணில் தன்னை அர்ப்பணித்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வை தன் பேனா முனையால் வன்முறையின்றி அகிம்சை வழியில் சர்வதேசம் எங்கும் எடுத்துச் சென்ற முன்னோடிகளில் குரு அரவிந்தனும் ஒருவர். இவரது எழுத்துக்களில் ‘உயிருக்குயிராக உன்னையும் இந்த மண்ணையும் நேசிக்கின்றேன்’ என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறுவதை அவதானிக்கலாம். இவரது ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற புதினத்தின் மூலம் இந்த வார்த்தைகள் வெளிவருகின்றன. உறங்குமோ காதல் நெஞ்சம் என்றால் எல்லோரும் காதற் கதை என்றுதான் எண்ணினார்கள். ஆமாம், காதற்கதைதான் ஆனால் பெண் மீது கொண்ட காதலல்ல, அது மண்மீது கொண்ட காதல் கதை.

Last Updated on Tuesday, 13 October 2015 19:33 Read more...
 

இலங்கை படைப்பாளி ப. ஆப்தீன் மறைவு அஞ்சலிக்குறிப்பு

E-mail Print PDF

இலங்கை படைப்பாளி ப. ஆப்தீன் ஈழத்து  ஆக்க  இலக்கியப்  படைப்பாளியும்  மல்லிகைப்பந்தல் தோழருமான  எழுத்தாளர்  நாவல்நகர்  ப.ஆப்தீன்  அவர்கள் சுகவீனமுற்ற  நிலையில்   கடந்த  9   ஆம்திகதி   கொழும்பில்  தனது  77 ஆவது  வயதில்  காலமானார். அவரது  மறைவு  ஈழத்து  இலக்கிய  உலகில்  மட்டுமல்ல மல்லிகைப்பந்தல்   தோழமை  வட்டத்திலும்  ஒரு  வெறுமையை ஏற்படுத்தி விட்டது.

மலையகத்தைப்  பிறப்பிடமாகக்  கொண்டிருந்தாலும்  பல்வேறு பிரதேசங்களில்  ஆசிரியராகப்  பணியாற்றியதன்  காரணமாக,  முற்போக்கு  சிந்தனையுடன்  மனித  நேயப் பார்வையுடன்   சமூகப் பொறுப்புணர்ச்சியுடன்   படைப்புக்களைத்  தந்தவர்.
மல்லிகையால்   வளர்த்தெடுக்கப்பட்ட  படைப்பாளி.  இவரது  முதலாவது  சிறுகதைத்  தொகுப்பு  "இரவின்  இராகங்கள் " மல்லிகைப்பந்தல்  வெளியீடாக      வந்தது.  அதே  தொகுப்பு தமிழகத்தில் NCBH   இல்  மறுபதிப்பாக  வெளிவந்தது.  அடுத்த  அவரது சிறுகதைத்  தொகுப்பும்   மல்லிகைப்பந்தல்  வெளியீடாக   "நாம் பயணித்த  புகைவண்டி "  எனும்  பெயரில்  வந்தது.

இவர்  எழுதிய. " கருக் கொண்ட  மேகங்கள் " நாவல்  சிங்கள-தமிழ்-முஸ்லிம்  மக்கள்  இடையே  நிலவும்  ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும்  ஒரு  நாவலாக  வெளிவந்தது.

இறுதியாக  கொடகே  வெளியீடாக  வந்த  இவரது  "கொங்காணி" எனும்  சிறுகதைத்  தொகுப்பு  மலையக  மக்களின்   வாழ்வியலை அவர்களின்  சொல்லாடல்களுடன்     சொன்னது      மட்டுமல்லாமல், சமகால  ஈழத்து  மக்களின்  வாழ்வியலையும்  உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் காட்டிச் சென்றுள்ளது.

மலாய் சமூகத்தைச்  சேர்ந்தவராக  இருந்தமையால்  இலங்கை  வாழ் மலாய்  சமூகத்தினரை  அடையாளப்படுத்தும்  வகையிலான  ஒரு வரலாற்று  நாவலை   எழுதிக் கொண்டிருந்த  நிலையில்  மறைந்து விட்டார்.   அவரது  மறைவு  ஈழத்து   இலக்கியத்திற்கு  மட்டுமல்ல மல்லிகைப்பந்தல்   தோழமை   வட்டத்தினருக்கும்  ஒரு   பெரும் இழப்பு  என்றே  சொல்லவேண்டும்.
அவரது  இறுதிச்சடங்கு    10.10.2015   காலை  கொழும்பில் நடைபெற்றது.

தகவல்: முருகபூபதி This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

எழுத்தாளர் ப.ஆப்டீன் மறைவு!

E-mail Print PDF

- எழுத்தாளர் ப.ஆப்டீன் அக்டோபர் 9, 2015 அன்று காலமானார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களிலொருவர். அவரது நினைவாக அவரைப்பற்றிய தமிழ் விக்கிபீடியாக்குறிப்பினை 'பதிவுகள்' தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றது.

ப. ஆப்டீன்

எழுத்தாளர் ப.ஆப்டீன் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.....
ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகுந்தார். 1960 களில் வேலை காரணமாக நாவலப்பிட்டியில் பணியாற்றிய எழுத்தாளர் நந்தி அவர்களின் ஊக்குவிப்பாலும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தொடர்பாலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பன்முக வடிவங்களின் மூலம் தனது படைப்பிலக்கிய பங்களிப்பினை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்து இலக்கியம் வழியாக பணியாற்றி வந்தவ இவரது பல படைப்புக்கள் ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

வெளிவந்த நூல்கள்
இரவின் ராகங்கள்- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் வெளியீடு, 1987, NCBH, தமிழ்நாடு மீள்பதிப்பு 1990)
கருக்கொண்ட மேகங்கள்- (நாவல், ஆசிரியர் பதிப்பித்தது 1999)
நாம் பயணித்த புகைவண்டி- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் 2003)

Last Updated on Saturday, 10 October 2015 07:00 Read more...
 

திருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொகுதியை மையப்படுத்திய ஒரு பார்வை.

E-mail Print PDF

கவிஞர் திருமாவளவன்dr_n_subramaniyan.jpg - 12.37 Kb(05-10-2013 அன்று ஸ்காபரோ ஸிவிக் சென்டர் மண்டபத்தில் திரு. க. நவம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த கவிஞரின் முதுவேனில் பதிக அறிமுகவிழாவில்  என்னால்  நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் இது. கவிஞர் நீண்டநாள்கள் வாழ்ந்து  எமது நெஞ்சை நிறைவிப்பார் என்பதான ஆர்வத்துடன் மேற்படி உரை  நிகழ்த்தப்பட்டது. அதனைஇன்று அவர் நம்மைப் பிரிந்துவிட்ட சோகச் சூழலில் அவரது நினைவைப் பதிவுசெய்யும் நோக்கில் வாசகர்கள் பார்வைக்கு முன்வைத்து எனது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

தோற்றுவாய்

கனகசிங்கம் கருணாகரன் என்ற இயற்பெயர் தாங்கியவரான  திருமாவளவன் அவர்கள் தமிழ்க் கலை இலக்கியத் துறைகளில்  கடந்த ஏறத்தாழ  இருபதாண்டுகளாக  தொடர்ந்து இயங்கிவருபவர். பனிவயல் உழவு (2000)அஃதே இரவு அஃதே பகல் (2003)இருள்- யாழி (2008) மற்றும் முதுவேனில்  பதிகம் (2013) ஆகிய தொகுதிகள் ஊடாக தமது கவித்துவ ஆளுமையை நமது கவனத்துக்கு  இட்டுவந்துள்ள இவர், சேரன், சி.சிவசேகரம், வெங்கட்சாமிநாதன் , மோகனரங்கன், இராஜமார்த்தாண்டன் மற்றும் கருணாகரன் ஆகிய சமகால இலக்கிய வாதிகளால் தரமான ஒரு கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவருமாவார்.  கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருதை 2010இல் இருள் யாழி தொகுதிக்காக இவர் பெற்றுக்கொண்டவர். ஒரு படைப்பாளியாக மட்டுமன்றி இதழியலாளராகவும் நாடகக்கலைஞராகவும்கூடத்  திகழ்பவரான திருமாவளவன் அவர்கள் (1995—1997காலப்பகுதியில்) கனடா  எழுத்தாளர் இணையத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்தியவருமாவார். இவ்வாறு கடந்த ஏறத்தாழ  இருபதாண்டுகளாக கலை இலக்கியத் துறைகளில் செயற்பட்டுநிற்கும் திருமாவளவனின் ‘கவித்துவப் ஆளுமை’ தொடர்பான எனது அவதானிப்பு இங்கே முன்வைக்கப்படவுள்ளது. அவரது அண்மை வெளியீடாக இங்கு அறிமுகமாகும் ‘முதுவேனில் பதிகம்’ (2013) என்ற தொகுதியை முன்னிறுத்தி அமையும் இவ்வுரையானதுஅவரது ஒட்டுமொத்த கவித்துவப் பயணத்தையும் கருத்துட்கொண்டதாகும் .

Last Updated on Wednesday, 07 October 2015 19:49 Read more...
 

கவிஞர் திருமாவளவன் மறைவு!

E-mail Print PDF

கவிஞர் திருமாவளவன்கவிஞர் திருமாவளவன் காலமானார். புலம் பெயர் தமிழ் இலக்கியத்தில் கவிதைத்துறையில் முக்கியமான கவிஞர்களிலொருவர். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியத்தின் பல்துறைகளிலும் பங்களிப்புச்செய்தவர் கவிஞர் திருமாவளவன். இனி அவர்தம் படைப்புகளினூடு நிலைத்து வாழ்வார். அவரது நினைவாக 'எதுவரை' இணைய இதழிலில் வெளியான அவரது கவிதைகள் சிலவற்றைப் பதிவு செய்கின்றோம்.

கவிதைகள் – திருமாவளவன்


1.
எறும்புகள் – சிறு குறிப்பு


எறும்புகளின் வாழ்வு எளிதல்ல
தினமும் தன் வயிற்றுக்காய் நெடுந்தூரம் நடக்கிறது
நாள் முழுவதும் அலைகிறது
வியர்வை ஒழுக ஓடியோடி உழைக்கின்றது
பேரழிவிலிருந்து
தன் சந்ததியைப் பேண பேரச்சம் கொள்கிறது
மேலும்
ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒவ்வொரு ஊர்
மனிதர்களைப் போல்
எறும்பூர்கள் இரண்டு மோதுவதில்லை என்பது முரண்தான்
இருந்தாலும்
தனதினத்துக்கு வரும் இடர்ப்போதுகளில்
நீண்ட வரிசைகளில் மூட்டை முடிச்சுகளோடு
ஊர் ஊராய் அலைகிறது
அவை நடக்கிற போதில் கால்களின் வழி
துயர் வழிகிறது
ஒன்றையொன்று சந்திக்கும் தருணங்களில்
ஒரு கணம் நின்று
துக்கங்கௌவ விசாரிப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றன
ஒதுங்க இடங்களற்று கற்களின் கீழும்
மர இடுக்குகளிடையேயும் தங்கிச் சீரழிகிறது
பெரும் படையெடுப்புகளென
திடீரென எழும் தீயிலும்
மற்றும் வெள்ளப் பெருக்குகளிலும்
அவற்றின் ஊர்கள் சின்னாபின்னப்பட்டு விடுகிறது
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவை போக
எஞ்சியவை
தலைதெறிக்கச் சிதறி ஓடுகின்றன
அகப்பட்ட பொருட்களிலே தொற்றி
நெடுந்தூரம் மிதந்து
புலம் பெயர்ந்து விடுகிறது
பின்னர்
தொடரும் பிறிதொரு அலைவு

புகலிட வாழ்வும் எளிதல்ல
எறும்புக்கும்…

Last Updated on Monday, 05 October 2015 17:55 Read more...
 

கவிஞர் திருமாவளவன் சுகவீனம் காரணமாக மருத்துவ நிலையத்தில் அனுமதி!

E-mail Print PDF

கவிஞர் திருமாவளவன்கவிஞர் திருமாவளவன் அவர்கள் சுகவீனம் காரணமாக மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் அவர்கள் முகநூலில் பதிவொன்றினை இட்டிருந்தார். அப்பதிவினைக்கீழே காணலாம். கவிஞர் திருமாவளவன் பற்றிய செய்தி துயர் தருவது. புகலிடக் கவிஞர்களில் பரவலாக அறியப்பட்டவர் கவிஞர் திருமாவளவன். புகலிட அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் படைத்தவர் திருமாவளவன. கலை, இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதனின் அபிமானத்துக்குரிய கவிஞர். அவர் பூரண நலத்துடன் மீண்டு வந்திட வேண்டுகின்றோம்.


முகநூலில்: கவிஞர் திருமாவளவனுடன் சில நிமிட நேரங்கள்....

- எஸ்.கே.விக்கினேஸ்வரன் -

கவிஞர் திருமாவளவனை வைத்தியசாலையில் சென்று பார்த்தேன். அந்தக் கம்பீரமான கவிஞன் கட்டிலின் படுத்திருந்த நிலை நெஞ்சைப் பிழிந்தது . உறவுகளையும் நண்பர்களையும் அடையாளம் காணக்கூட முடியாத அளவுக்கு அவரைப் பற்றிப்பிடித்த நோய் அவரை வெற்றி கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு கவிஞனின் இந்த நிலை தாங்க முடியாத் துயர் தருவது.

" இனி இழப்பதற்கெதுவும் இல்லையென்றானபின்
கொடும் கூற்றென் செயும்
சொரியும் உறைபனிதான் என்செயும்
இறங்கி நடக்கிறேன்
தெருவில்.
வெண்மணல் சேறென
காலடிக் கீழ் நசிந்து உருகுகிறது
முதற்பனி”

என்று நம்பிக்கையுடன் பாடிய கவிஞனின் வாய் இனி ஓய்ந்துடுமோ என்ற அச்சத்துடன் குடும்பத்தினரிடம் கேட்கிறேன்.
வைத்தியர்கள் கைவிரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் அவர்கள் கண்ணீர் மல்க.

Last Updated on Wednesday, 07 October 2015 16:50 Read more...
 

அவதானிப்பும் அறிமுகம் செய்தலும்

E-mail Print PDF

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்செங்கை ஆழியான் (க.குணராசா) ஒரு காலத்தில் இளம்படைப்பாளிகளின் படைப்புகளை அவதானித்து, அவர்களை சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் அறிமுகம் செய்து வைத்தார். ‘வல்லமை’ இணையத்தளம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து, ஒருவருட காலத்திற்கு தனது இணையத்தளத்தில் வெளியாகும் சிறுகதைகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்பாளிகளை இனம் கண்டிருந்தது. வல்லமையில் வெளியான அனைத்துக் கதைகளையும் வாசித்து தனது கருத்துக்களைச் சொல்லியிருந்தார் மூத்த எழுத்தாளரான வெங்கட் சாமிநாதன். மோதிரக்கையால் குட்டுப்பட்டுக் கொண்ட படைப்பாளிகளில் எட்டுபேர் மட்டும் (சுதாகர், பழமைபேசி, மணி ராமலிங்கம், அரவிந் ச்ச்சிதான்ந்தன், மாதவன் இளங்கோ, ஜெயஸ்ரீ சங்கர், பார்வதி இராமச்சந்திரன், தேமொழி) தேறினார்கள்.

செங்கை ஆழியான், ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் சிறுகதை எழுதும் படைப்பாளிகளையே இனம்கண்டு அடையாளப்படுத்தினார்கள். ஈழத்தில் இருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகைகூட புதியவர்களை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றது. ஆனால் சிறுகதை என்பதைவிட இன்னொரு படி மேல் சென்று கட்டுரை, கவிதை படைப்போரையும் அறிமுகம் செய்கின்றது.

Last Updated on Saturday, 12 September 2015 19:39 Read more...
 

English Translation of Writer Asokamitran’s book ‘Chennai Nagaram – Oru Paarvayil’ by Dr.K.S.Subramanian

E-mail Print PDF

Asokamitran:

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

Book Release Function held on the 14th of August, 2015. Veteran Tamil writer Asokamithran’s articles on the various parts of the city of Chennai, as they were several decades ago , initially written and serialized in an Internet Magazine and later on published as a volume by Kavitha Publications. Now, Dr.K.S.Subramanian who has been translating Tamil books of his choice, both prose and poetry into English, mostly without accepting any remuneration (He calls it ‘labour of love!’) has translated this book into English. In Tamil the title is ‘Chennai Nagaram – Oru Paarvayil’ and in English the title is ‘Chennai City: A Kaleidoscope’ and it is now  published by Westland Publishers.

About the Author: Asokamitran:
Chennai City: A Kaleidoscope is a compilation of essays penned by veteran writer Asokamitran. He moved to Chennai as a young man of twenty, and having spent more than sixty years in his adopted home now, Asokamitran is well placed to describe the shifts and changes that Chennai has undergone, and he does so beautifully, with his trademark wit, perceptiveness and lucidity. Its waterways, its stations, its lanes and alleys: this is a wonderful ode to city, and a must-read for both, natives of Chennai, and visitors.

Translator Dr.K S Subramanian: Dr.K.S.Subramanian (1937) served the Govt. of Indian (IRAS) for fifteen years (1960-1975) and the Asian Development Bank at Manila for twenty-two years(1975-1998), retiring as a Director. Since his return to India in 1998 he has been involved in literary and social pursuits. He has translated from Tamil to English over 35 literary works encompassing novels, short novels and collections of poetry, short-stories and essays. His Tamil writings on literary, social and developmental themes have appeared in seven volumes. Significant works - Novels, novellas and Tamil New Poetry - have been rendered into English by him. Seven anthologies of modern Tamil poetry have been compiled by him and rendered into English. He has also translated poems of contemporary poets. So far he has translated about 40 per cent of Mahakavi Subramania Bharathis corpus of poetry.

Last Updated on Monday, 31 August 2015 19:32 Read more...
 

அவ்வை சண்முகமும், நாடக கலையும்

E-mail Print PDF

நாடகம் - அறிமுகம்

avvai_sanmugam5.jpg - 10.30 Kbமுத்தமி;ழ் வடிவங்களில் நாடகம் குறிப்பிடத்தக்கதாகும். நாடகம் என்ற தனி சொல்லைக் காலத்தால் முந்தைய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் முதன் முறையாகப் பயன்படுத்தியுள்ளது. "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்" என்பர்.

நாடக ஆர்வம்

அவ்வை சண்முகம் இளமையில் நாடகத்தில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்ததை தன் வரலாற்றில் குறித்துள்ளார். சண்முகம் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய போது கூட அவருடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்ததையும் தன் நாடக வாழ்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடக கம்பெனி தொடங்குதல்

அவ்வை சண்முகம் 1952ல் மதுரை ஸ்ரீபால சண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். பின்  1950ல் டி.கே.எஸ் நாடகக்குழு தொடங்கப்பட்டது.

நாடகத் தொழில் சிறப்புப் பெற்ற இடம்;

நாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரை மாநகரமாகும். நாடக கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள் கூட மதுரை என்று போட்டுக் கொண்டதை அவ்வை சண்முகம் நாடக வாழ்க்கையின் மூலம் அறிய முடிகிறது.

Last Updated on Sunday, 30 August 2015 00:06 Read more...
 

‘தெணியானின் பார்க்கப்படாத பக்கங்கள்’ இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் மீதான மார்க்சிய ஒளிவீச்சு

E-mail Print PDF

‘தெணியானின் பார்க்கப்படாத பக்கங்கள்’ இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் மீதான மார்க்சிய ஒளிவீச்சு - முனைவர் ந. இரவீந்திரன் -வரலாறு என்பது கடந்தகாலத்தோடு சமகால மனிதர்கள் மேற்கொள்ளும் உரையாடல்தான் என்ற ஒரு கருத்து உண்டு. ஐம்பது வருடங்களின் முன்னர் எமது வரலாறு பார்க்கப்பட்ட கோணத்திலிருந்து, அதே விடயங்கள் இன்றும் அணுகப்படும் என்பதற்கில்லை. அன்றைய காலத்தில் வரலாற்றோடு பகிர்ந்துகொண்டு பெற்றிருக்கக்கூடியவற்றிலிருந்து வேறுபல தேவைகள் இன்று எம்மைத் தூண்டும் காரணமாகப் புதிய பல விடயங்களை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து பெறக்கூடியவர்களாக இருப்போம். ஆயினும் இன்றைய எந்தத் தேவையிலிருந்து அதனை எத்தகைய நலன் அடிப்படையிலான கண்ணோட்டத்தில் அணுகுகிறோம் என்ற நோக்குநிலை காரணமாக நாம் வந்தடைகிற முடிவுகள் வேறுபட இடமுள்ளது. பலரும் காணத்தவறுகின்ற அம்சங்கள் சிலரால் உன்னிப்பாகக் கண்டறியப்படவும், அவை அவர்களால் முதன்முதலாய்ப் பேசுபொருளாக்கப்படுவதும் இதன் காரணமாகவே.

ஆங்கில ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் குடியேற்ற நாடுகளாய்ச் சிறுமைப்பட்டிருந்த காலத்தில் எமது கடந்தகால வரலாற்றைப் பார்த்த முறை ஒருவகை; அப்போதும் பாரதி பேசாப்பொருள் பலவற்றைப் பெருமுழக்கமாக்கி "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே" எனப் பிரகடனப்படுத்தினார். இது பலதடவை கவனிக்கப்பட்டு பழங்கதையாகிவிட்ட போதும், இதனுள் ஊடறுத்துக்காண முயற்சிக்காத பார்க்கப்படாத பக்கங்கள் பல இருந்தபடியே உள்ளன. இத்தகைய "பார்க்கப்படாத பக்கங்கள்" தெணியானின் கட்டுரைகளாக ஜீவநதி வெளியீடாகி அண்மையில் எமது கரங்களை எட்டியுள்ளது. கனடாவில் வாழும் க. நவம் தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூல் 190 பக்கங்களில் வெளிப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 08 July 2015 20:48 Read more...
 

ஜி. நாகராஜனின் நாவல்கள்

E-mail Print PDF

ஜி.நாகராஜன்இலக்கியம் என்பதென்ன? எழுதுவதெல்லாம் இலக்கியமா? எப்படி இலக்கியத்தை தரப்படுத்தலாம்? . முக்கியமாக தமிழ் இலக்கியத்தில் முக்கிய அணியில் இருந்தோ அல்லது, பணத்தை வாரியிறைத்தோ பரிசுகளைப் பாராட்டுகளை பெறும்போது நியாயமான சந்தேகங்கள் சாதாரணமான வாசகர்களுக்கு எழுவது சகஜம்தானே…? இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?

ஹெமிங்வேயின் ஒரு முக்கியமான கூற்றைப் படித்தேன். அதில் ‘ இலக்கியம் பனிப்பாறை போன்றது’ என்றார். நீரில் மிதக்கும் பனிப்பாறையில் எட்டில் ஒரு பகுதி வெளியே தெரிவது. மிகுதி நீரின் உள்ளே இருப்பது. அதாவது இலக்கியத்தில் எழுதப்பட்டது: சிறிதாகவும் சொல்லப்படாத விடயங்கள்: பெருமளவில் வசனங்களின் இடையில்; ஊகத்திற்கு விடப்படுபவை. இவை அம்பிகுயிற்றி (ambiguity) அல்லது பொருள்மயக்கம் எனக்கூறலாம். இது சிறுகதை நாவல் கவிதை என்பதற்கு பொருந்துமானதாலும் நான் நாவலையே இங்கு பார்க்கிறேன்.

பொருள்மயக்கத்தை ஹெமிங்வேயின் எழுத்துகளில் பார்க்க முடியும் கிழவனும் கடலும் (Old man and the sea) என்ற பிரபலமான நூலில் சொல்லப்படுபவை. அந்த சன்ரியாகோ கிழவன் மாலின் மீனோடு போராடுவது என்பது மிகவும் சிறிய விடயங்கள். ஆனால் சொல்லப்படாதது ஏராளம். முதுமையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. தூண்டில் கயிறை பிடித்திருந்த இடது கரம் களைத்து மரத்தவுடன் இரண்டு கைகளோடு நடத்தும் சம்பாசணையில் கையின்; உரத்திற்காக நான் உணவு உண்கிறேன் என்பது மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத்துவம் என்பது வருகிறது.

Last Updated on Tuesday, 02 June 2015 17:41 Read more...
 

-ஓவியர் கோபுலு மறைவு!

E-mail Print PDF

-ஓவியர் கோபுலு மறைவு! கோபுலுவின் தில்லான மோகனாம்பாள் ஓவியங்களிலொன்று.அவர் நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியா பதிவினைப் பகிர்ந்துகொள்கின்றேன். கோபுலு என்றதும் என் நினைவில் வருபவை என் பதின்மவயதினில் தமிழகத்து வெகுசன சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள்தாம். ஜெயகாந்தனின் நாவல்களான 'ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்.' (விகடன்), 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (தினமணிக்கதிர்), கதிரில் வெளியான ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் 'ரிஷி மூலம்' குறுநாவல், ஆனந்த விகடனில் வெளியான உமாசந்திரனின் 'முழுநிலா' நாவல், ஶ்ர...ீ வேணுகோபாலனின் 'நீ. நான். நிலா' (கதிரில் வெளியான நாவல்), சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' (விகடன் பிரசுரம்), அகிலனின் 'சித்திரப்பாவை' (விகடன்), நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' (விகடன்), கொத்தமங்கலம் சுப்புவின் 'பந்த நல்லூர் பாமா' (கதிர்), தேவனின் 'துப்பறியும் சாம்பு' போன்ற படைப்புகளுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், விகடனின் தீபாவளி மலர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும்தாம்.

Last Updated on Friday, 01 May 2015 21:02 Read more...
 

கலாசூரி விருது: பன்முக ஆற்றல் கொண்ட ,பிரபல பெண் எழுத்தாளர் பவளசங்கரி த. திருநாவுக்கரசுக்கு தடாகத்தின் கலாசூரி விருது!

E-mail Print PDF

கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார்.கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார். தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது ) கொடுத்து கௌரவிக்க தீர்மானித்து உள்ளார்கள். அதன் முதல் கட்டமாகாக கலாசூரி விருதினை இவர் பெறுகின்றார்

உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள் உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு. அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்.

பெண்கள்
உலகின் கண்கள் .

உலக முகத்திற்குக்
கோடி கோடியாக் கண்கள்!
இன்றேல் -
உலகம் விழித்திருக்க
முடியாது !
ஒளி பிறந்திருக்கவும் முடியாது !

பெண்கள் என்னும்
இந்தக் கண்கள் இன்றேல்
பூமி கூட
ஒரு -
அக்கினிப் பிழம்பாயிருக்கும்!

Last Updated on Friday, 01 May 2015 19:44 Read more...
 

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகைமைச் சான்றுரை

E-mail Print PDF

- 2015மார்ச்14 அன்று நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை -

dr_n_subramaniyan.jpg - 12.37 Kbமதிப்புயர்; தலைவர் அவர்களுக்கும் கனடா எழுத்தாளர் இணையத் தோழர்களுக்கும்  கனடாத் தமிழ்ழ் எழுத்தாளர் இணையம் வழங்கவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகுதியாளர்களாக இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்து எமைக் கௌரவித்துள்ள விழா நாயகர்களில் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் ஐயா அவர்களுக்கும், அவருடைய துணைவியாருக்கும் எமது அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒப்புதலளித்த பின்னர் எம்மை விட்டகன்று தேகாந்த நிலையில விண்ணிலிருந்தே எமது விருதுக் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் அதிபர்  பொ.கனகசபாபதி ஐயா அவர்களுக்கும், எமது இந்த விருது நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் நோக்கில் இங்கு வருகைதந்துள்ள பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகிய ஆட்சித்துறைசார் நண்பர்களுக்கும் பெருந்தொகையாக வருகைதந்து சிறப்பித்துள்ள அவையோருக்கும் மனமுவந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு இவ்விருதுச் சான்றுரையை இங்கு முன்வைக்கிறேன் பெரியோர்களே! இவ் விருது நிகழ்வானது மானுடத்தைப் போற்றும் நன்றிக் கடப்பாட்டுணர்வின் வெளிப்பாடாகும்.

“ நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு”

என்ற திருக்குறள்(குறள்:994) இதனை அறிவுறுத்தி நிற்கிறது. நீதியையும் அறத்தையும் சார்ந்துநின்று சமூகநிலையில் பங்காற்றிய பண்பாளரை உலகம் பாராட்டும் என்பது இதன் தெளிபொருளாகும்.

Last Updated on Friday, 03 April 2015 17:14 Read more...
 

படைப்பாளி ராஜாஜி ராஜகோபாலனின் 'உபயகாரன்' சிறுகதை பற்றிய எனது பார்வை!

E-mail Print PDF

ராஜாஜி ராஜகோபாலன்முல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்சிறுகதைக்கான களமுனைகள் தாராளமாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட செல்நெறியில் சென்றுகொண்டிருப்பதை உணர்கிறேன். கல்வி, கணினி வசதிகள், இனமுரண்பாட்டின் வன்மங்கள், வலிகள், வாழ்க்கை தந்து கொண்டிருக்கும் நோவுகள் பலரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சூழலில் பலர் தங்களின் இடப்பெயர்வு/புலப்பெயர்வு நகர்வுகளின் இருப்பில் இருந்துகொண்டு தங்களை/தங்கள் சிந்தனையை கட்டமைக்கப்பட்ட வடிவத்திற்குள் கொண்டுவருகின்றனர். அது எழுத்தாகவும், வேறு வடிவங்களாகவும் இருக்கலாம். அந்த வகையில் புலம் பெயர் வாழ்வின் இறுக்கத்திற்குள் இருந்துகொண்டு வனைகின்ற பல படைப்பாளர்கள் வரிசையில் இன்று சிறப்பாகத் தன்னை வடிவமைத்துக்கொண்ட படைப்பாளனாக நிமிர்ந்து வருகிறார் நம்மவர் திரு.ராஜாஜி ராஜகோபாலன். யாழ் புலோலி கிழக்கில் பிறந்து தன் கல்வி, சட்டத்துறை சார் தொழில் எனத் தன்னை நிறுத்திக்கொண்டாலும் எழுத்தின் மீதான தாகம் அதிகமாகவே அவ்வப்போது தினகரன், கவிஞன், வீரகேசரி, மல்லிகை, திண்ணை, காற்றுவெளி, சங்கப்பொழில், ஈழநாடு ஆகியவற்றில் எழுதினார். வேலைப்பளு அவரை குந்தியிருந்து எழுதுவதைத் தடுத்தது. ஆனால் அவரின் ஓய்வு தற்போது நிறையவே எழுதவைக்கிறது. அவரின் பாசையில் 'ஊறப்போட்ட' கற்பனைகள் வடிவம் பெறுகின்றன. தான் பார்த்த, கேட்ட அனுபவங்கள் நிதானமாகக், கவனத்துடன் எழுத முனையும் முயற்சி பாராட்டும்படி உள்ளது. எனக்குப் பிடித்த இன்னொரு விடயம் வழக்கு மொழி மீதான பற்று, அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தும் முறைமை அலாதியானது. ஒரு படைப்பு அது சார்ந்த களம், அந்தக் களத்தில் வாழுகின்ற பாத்திரங்கள், அப்பாத்திரங்களின் மொழி, அவற்றை வெளிப்படுத்தும் முறை கூர்ந்து கவனிக்கப்படாவிட்டால் படைப்பின் வீரியம் குறைந்துவிடும். இங்கு திரு.ராஜாஜி கோபாலனின் பார்வை கவனிப்புக்குரியது. கவிதையாயினும் சிறுகதையாயினும் அவர் தெர்ந்தெடுத்த பாத்திரங்கள் கதைக்களத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.  எப்போதோ நிகழ்ந்த அனுபவத்தைப் பலவருடங்களாக அசைபோட்டு, மீட்டு எழுதுவது முடியாத காரியம்தான். எனினும் இவர் எழுதிருக்கிறார். அச்சம்பவத்தை அப்படியே எழுதுவதிலும் அபாரத் துணிவு வேண்டும். கதை, மொழி இரண்டும் சிதையாமல் வடிவமைப்பதில் சிரமம் இருக்கிறது. சொல்ல வந்ததைச் சொல்லாமல் திசை திருப்பிவிடும் அபாயமும் உள்ளது. கத்திமேல் நடக்கும் விளையாட்டு. மேலும், சம்பவக் கோர்வை கவனத்தில் மையம் கொள்கிறது.

Last Updated on Saturday, 21 March 2015 22:52 Read more...
 

எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் மறைவு!

E-mail Print PDF

- எழுத்தாளரும், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஆரம்பகாலத்திலிருந்து பங்களிப்பு செய்துவந்தவரான கி.பி.அரவிந்தன் அவர்கள் மார்ச் 8 அன்று மறைந்தார். அவரது நினைவாக அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும்,   பதிவுகள் மார்ச் 2010  இதழில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியால் எழுதிப்பிரசுரமான கி.பி.அரவிந்தனின் 'இருப்பும் விருப்பும்'  பற்றிய நூல் அறிமுகக் கட்டுரையினையும் மிள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -

aravinthan_k_p_5.jpg - 27.41 Kbகி. பி. அரவிந்தன் (1953 - 8 மார்ச் 2015) விக்கிபீடியாக்குறிப்புகள்!
கி. பி. அரவிந்தன் (1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.

Last Updated on Monday, 09 March 2015 19:52 Read more...
 

அ.ந.க.வின் (கவீந்திரனின்) கவிதைகள் சில!

E-mail Print PDF

- அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கவிதைகள் மீள்பிரசுரமாகின்றன. -

- அறிஞர் அ.ந.கந்தசாமி -1. எதிர்காலச் சித்தன் பாடல்!

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான் 
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன் 
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும் 
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான் 
"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங் 
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை 
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே 
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான். 

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன் 
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச் 
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும் 
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே 
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை 
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக் 
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான் 
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன். 

Last Updated on Sunday, 15 February 2015 20:04 Read more...
 

அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய குறிப்புகள் சில...

E-mail Print PDF

- அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றயது. -

- அறிஞர் அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமியின் 'நாயினுங் கடையர்' அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் 'காளி முத்துவின் பிரஜா உரிமை' படித்ததுண்டா? அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின.  இரு கதைகளும் சான்று. "போர்க்குணம் மிக்க எழுத்தாளன் தான் உண்மையான இலக்கியவாதி" என டால்ஸ்டாய்யும் கார்க்கியும் சொன்னதின் அர்த்தம்- அந்தப் போர்க்குணம் மிக்க எழுத்து அ.ந.க., அ.செ.முவிடம் அக்காலமே வெளிப்பட்டது. இருவரையும் மனிதாபிமானம் மிக்கோர் என்பேன்.

ஒரு படைப்பாளியின் சிருஷ்டிகளைப் படியாமல் மேலெழுந்தவாரியாக 'ஆகா ஊகூ' என்று இலக்கியத்தை மலட்டுத்தனமாக்கும் கேடுகெட்ட நிலை இன்னும் விட்டபாடில்லை. படியாமலே விமரிசிக்கும் 'மேதைகளு'ம் உண்டு. ஓர் சமயம் ஓர் இலக்கிய ஆர்வலர் நான் எதிர்பாராத ஒரு கேளிவியைத் தூக்கிப் போட்டார் - "சில விமர்சகர்கள் மேடையில் பேசினாலும் பத்திரிகையில் எழுதினாலும் புத்த்கம் வெளியிட்டாலும் கனதியாக - பல்வகை உத்திகளில் ஓயாமல் எழுதுகிற அ.ந.கந்தசாமியையோ உங்களையோ ஏன் குறிப்பிடுவதில்லை". "குருடர்கள் யானை பார்த்த கதை தெரியும் தானே?" என்று திருப்பிக் கேட்டேன்.  ஒரு வகையில் பார்த்தால் எழுதிகிறவனுக்கு விளம்பரம் ஆபத்துத் தான். விளம்பர ஓடுகாலித்தனம் இலக்கியக்காரனுக்கு விழுக்காடு என்பதை இன்னும் நம்பாத - புரியாத கலை இலக்கிய 'மேதாவி'கள் நம் மத்தியில்  செப்பமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியிருப்பதும் நல்லதுதான். கம்பு எடுத்தால் அடியெடுத்து ஓடாமல் விழுந்து படுக்கிற மாடுகளும் உண்டு தானே.

Last Updated on Monday, 16 February 2015 01:41 Read more...
 

நவீன தமிழ்க்கவிதை வெளியில் நான்….

E-mail Print PDF

- கிருஷாங்கினி -[சென்ற வருடம் கிருஷாங்கினியிடம் வாங்கிய கட்டுரை (பதில்கள்) என்னிடமே தங்கி விட்டன. அவற்றையும் கிருஷாங்கினியின் கவிதைகளையும் சேர்த்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் பரப்பில் தனது கவிதை, கதை கட்டுரைகள் மூலமும், சதுரம் என்ற தனது பதிப்பகத்தின் வாயிலாகவும் ஆர்வத்தோடு பங்களித்துவரும் கிருஷாங்கினி குறித்த முடிந்த அளவு அகல்விரிவான கட்டுரை ஒன்றை அனுப்ப விரும்பி இந்த நீள்கட்டுரைத் தொகுப்பினைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியுள்ளேன் - லதா ராமகிருஷ்ணன் -]

கவிஞர் கிருஷாங்கினி : சிறு குறிப்பு
இயற்பெயர் பிருந்தா. 25.8.1947 அன்று பிறந்தவர்.நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் முனைப்பாகப் பங்காற்றிவருகிறார். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் குறித்த , சமூக அவலங்கள் குறித்த கட்டுரைகள், எழுதியுள்ளார். ஓவியம், நடனம், பிறவேறு நுண்கலைகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். கானல் சதுரம் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. கவிதை கையெழுத்தில் என்ற தலைப்பில் வெளியான இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு கையெழுத்துப்பிரதி வடிவில் கோட்டோவியங்களுடன் அமைந்து உருவமும் உள்ளடக்கமுமாய் தனிக் கவனம் பெற்றது.கவனத்தை ஈர்த்தது. கவிஞர் கிருஷாங்கினி பல்வேறு தேசிய அளவிலான, மாநில அளவிலான இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். 2002 – 04 ஆண்டுகளில் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார் ஸீனியர் ஃபெல்லோஷிப் பெற்று 50களுக்குப் பிறகு நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் எழுத்தாளர்களால் கையாளப்பட்ட கருத்தோட்டங்கள், கருப்பொருள்கள், அணுகுமுறை குறித்த ஆய்வுத்தாள் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார்.[‘The Ideas, Topics and Approach adopted by Women Writers in Modern Poetry written after the 50s.’]

சமகாலப் புள்ளிகள் என்ற தலைப்பிலான இவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு 2002இல் தமிழக அரசின் இரண்டாவது பரிசுக்குரிய நூலாக விருது வழங்கப்ப்ட்டது.ment. தேவமகள் அறக்கட்டளை வழங்கிவரும் கவிச்சிறகு விருது பெற்றவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் தனது கணவரோடு சென்னை, சிட்லப்பாக்கத்தில் வசித்துவருகிறார். கவிஞர் கிருஷாங்கினியின் மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 14 February 2015 07:16 Read more...
 

மாதொருபாகனை முன்வைத்து மேலும் சில கருத்துப்பகிர்வுகள்

E-mail Print PDF

லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் ஒருவர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொண்டார், ஏன் அந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொள்ளவில்லை; ஏன் இந்தக்கதைக்கருவை இப்படிக் கையாளவில்லை, ஏன் அந்தக் கதைக்கருவை அப்படிக் கையாண்டார் என்று கேட்பதெல்லாம் ஒருவகையில் அபத்தம்தான். அதேசமயம், ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வதற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும்போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்துமூலம் நேர்த்தியாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப்பது சில அறிவுசாலிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூகமாற்றத்திற்கான முன்முனைப்பை மெய்யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உருவாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்தமாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகு முறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப் படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.

Last Updated on Wednesday, 28 January 2015 23:03 Read more...
 

பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று!

E-mail Print PDF

தர்மசிறீ பண்டாரநாயக்க- தகவல் உதவி - விக்கிபீடியாமூலம் (சிங்களமொழியில்) - தர்மசிறி பண்டாரநாயக்கவின் 'ஏகா அதிபதி' நாடகத்தின் ஒரு பகுதி.\தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -

நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொம்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது அதற்குத் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளாக நீ என்ன செய்தாய்?'

' நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் போலச் செய்தேன்'

' நாட்டின் உயிரைக் காப்பாற்றவென்று நீ முன்வந்த நாளிலிருந்து போகத்தொடங்கியது எனது ஊர்'

' நீங்கள் என் மீது குற்றம் சுமத்தினாலும், நாட்டு மக்கள் என் பக்கம்தான் சார்ந்திருக்கிறார்கள்.'

' அழிவு ஆயுதங்களைக் காட்டினால் அந்த சார்பு நிலையை இல்லாமலாக்க முடியும்'

' ஆனால் அழிவு ஆயுதங்களால் செய்ய முடியாதவற்றைத்தான் நான் செய்திருக்கிறேன்'

'ஆயுதங்களால் செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆயுதத்தை நெஞ்சில் வைத்து எந்தவொரு மனிதனிடமிருந்தும் என்னால் வேலை வாங்க முடியும்'

Last Updated on Thursday, 01 January 2015 22:47 Read more...
 

தேவகாந்தனின் கனவுச் சிறை!

E-mail Print PDF

book_kanavuchsirai5.jpg - 11.07 Kbஎழுத்தாளர் தேவகாந்தன்.[எழுத்தாளர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் ஜனவரி 3 , 2015 அன்று தமிழகத்தில் காலச்சுவடு பதிப்ப வெளியீடாக வெளிவரவிருக்கின்றது. நீண்ட நாள்களாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாவலான 'க்னவுச்சிறை' நூலுருப்பெற்று வெளிவருவது மகிழ்ச்சியளிப்பது. வாழ்த்துகிறோம். அதனையொட்டி 'கனவுச்சிறை' நாவல் பற்றி வெளியான எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் சிலரின் கருத்துகள் சில இங்கு பதிவாகின்றன. - பதிவுகள்-]

முனைவர் நா.சுப்பிரமணியன்:
நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட - கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட - வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

Last Updated on Friday, 26 December 2014 20:56 Read more...
 

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள்; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி

E-mail Print PDF

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள் ; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானிஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான்,  தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன.  காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான்.அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன.மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’  ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த  ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் ஓர் வடிவஒழுங்கோடே படைத்தார்.இருள்மண்டிக்கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாய் சிலருக்கு ந.பி.தெரிந்தார்.இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று  வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார்.உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.

Last Updated on Thursday, 04 December 2014 22:18 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்சங்க இலக்கியம் அச்சமூக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. மடலேறுதல், என்பது அக்காலச் சமூக நடைமுறை வழக்காறுகளுள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இம்மடலேற்றத்தில் மடல், மடல் ஏறுபவன் தோற்றம், மடல் ஏறுபவரின் நோக்கம் மற்றும் அதன் சூழல் ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. அவ்வகையில் மடலேறுதல், எவ்வகையில் வன்முறையாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்துச் சங்கப் பாடல்களை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மடலேற்றம் - பெயர்க்காரணம்
பனங்கருக்குப் ‘பனைமடல்’ என்றும் ‘பனை மட்டை’ என்றும் இன்று பெயர் வழங்கப்பெறுகிறது. இப்பனை மடலால் மா செய்ததால் அதாவது குதிரை, யானை போன்ற விலங்கு உருவங்கள் செய்ததால் இதற்கு ‘மடல்மா’ என்றும், இம்மடல்மா மேல் ஏறி வருவதால் ‘மடலேறுதல்’ என்றும் பெயர்பெறுவதாயிற்று. இது மடலூர்தல் என்றும் பெயர்பெறும். இம்மடலேற்றம் காமத்தின் எல்லை தாண்டும்போது நிகழ்கிறது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து அகத்துறைகளுள் ஒன்றாக வைத்துக் கருதப்படுவதாகும். தொல்காப்பியர் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பாற்படும் பெருந்தினணயுள் அடக்குவர்.(தொல்.997,ப.273)இத்துறையில் அமைந்த கலித்தொகைப் பாடல் பின்வருமாறு.

Last Updated on Monday, 24 November 2014 22:25 Read more...
 

பேராசிரியர் செல்வா கனகநாயகம் : புன்னகையைத் தேக்கிவைத்திருந்த உதடுகள்

E-mail Print PDF

பேராசிரியர் செல்வா கனகநாயகம் ஓரு சில விஷயங்களில் மட்டும் கருத்து முரண்பாடு கொண்டு நாம் விமர்சித்தவர்கள் அகால மரணமடைகிறபோது நமக்கு ஏற்படும் உணர்வு முதலில் குற்றவுணர்வாகவே இருக்கிறது. அவர்கள் நாம் கண்டு பேசி நம்மை உபசரித்தவர்கள், நம்மோடு கனிவுடன் உரையாடியவர்கள் என்கிறபோது நமது விமர்சனம் அவர்களது இறுதிநாட்களில் அவர்களைச் சிறிதேனும் துன்புறுத்தி இருக்குமா என நினைக்கிறபோது எழுதுவதையும் விவாதிப்பதையும் சிந்திப்பதையும் கூட விட்டுவிடலாமா என்று சமயத்தில் நமக்குத் தோன்றும். தென் ஆசிய இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட கனடிய நண்பரான செல்வா கனகநாயகத்தின் மரணத்தைக் கேள்வியுற்றபோது இவ்வாறான மனநிலைக்கே நான் ஆட்பட்டேன்.

அவருடன் விரிவாகப் பேசுவதற்கான இரண்டு தருணங்கள் எனக்கு வாய்த்தன. இலண்டன் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பவென இரண்டு மணித்தியாலங்கள் அவருடன் அவரது ஆய்வு நூல்கள் குறித்து உரையாடியிருக்கிறேன். அந்த உரையாடலுக்கெனவே அவரது நூல்கள் அனைத்தையும் இரு வாரங்களில் நான் வாசித்திருந்தேன். அன்று நான்கைந்து மணிநேரங்கள் என்னுடன் இருந்தார். தொரான்றோ பல்கலைக் கழகத்தில் நடந்த தமிழியல் கருத்தரங்கில் ஈழ நாவல்கள் பற்றிய எனது கட்டுரை சமர்ப்பிப்பதற்கான பயணத்தை தனிப்பட்ட முறையில் அவரும் ‘காலம்’ செல்வமும்தான் பொறுப்பெடுத்துச் செய்தனர். அந்த நிகழ்வுக்கும் வந்திருந்து விவாதங்களைத் துவக்கி வைத்தவரும் அவர்தான். நான் மொழிபெயர்த்த மஹ்முத் தர்வீஷ் கவிதைகள் நூல் குறித்தும் அவர் என்னுடன் தனிமையில் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

Last Updated on Sunday, 23 November 2014 18:12 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறி

E-mail Print PDF

முன்னுரை  
ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறிதமிழில் வளமான இலக்கண மரபுகள் காலந்தோறும் உருப்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் பாட்டியல் இலக்கண நூல்கள் தனக்கென தனித்ததொரு மரபினை உடையனவாகத் திகழ்கின்றன. பாட்டியல் இலக்கண நூல்கள் கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டுகளிலேயே உருப்பெற்றதற்கான சான்றுகள் கிடைத்தாலும், தமிழக வரலாற்றின் இடைப்பட்ட காலமான சோழர் காலத்திலேயே (9-ஆம் நூற்றாண்டு), அவை தனக்கென தனித்ததொரு கோட்பாட்டுத் தளத்தினை நிறுவிக்கொண்டன. அத்தகைய காலப்பகுதியில் தோன்றிய பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் ஆகிய இரு நூல்களின் ஊடாக வெளிப்படும் சோழர்கால புலமைத்துவ செல்நெறிகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சோழார் காலப் பாட்டியல் நூல்களில் புலமைத்துவம்
சோழர் காலத்தில் உருவான பாட்டியல் இலக்கண நூல்களாக இரண்டினைக் குறிப்பிடலாம். ஒன்று பன்னிருபாட்டியல், மற்றொன்று வெண்பாப்பாட்டியல். இவையிரண்டும் பொருத்த இலக்கணம், பிரபந்த இலக்கணம் ஆகியவற்றைக் கூறுவனவாயினும், வெண்பாப்பாட்டியல் மட்டும் புலமைக்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது. பன்னிருபாட்டியலில் புலமைத்துவ இலக்கணம் கூறாமைக்குக் காரணம் சரிவரத் தெரியவில்லை. எனினும் ‘பின்புலத் தேவைகளே பிரதிகளின் உருவாக்கம்’ என்ற நோக்கில் அது உருவான காலப்பகுதியில் அதற்கான தேவை எழவில்லை என யூகிக்கமுடிகிறது.

Last Updated on Sunday, 23 November 2014 18:42 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: மகாபாரதத்தில் பாண்டவர்களின் பிறப்பு

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை: மகாபாரதத்தில் பாண்டவர்களின் பிறப்புஉலகப் பெருங்காப்பியங்களுள் சிறந்த ஒன்றாகத் திகழ்வது மகாபாரதம் ஆகும். இவை “தமிழ்நாட்டில் பாரதம் மட்டுமே புனித நூலாக மதிக்கப்பெற்று உலகறிந்த நூலாகப் வழங்கப்பெறுகிறது”1 என்று எம்.சீனிவாச அய்யங்கார் சுட்டுவார். இக்காப்பியம் மனிதன் வாழ்க்கையோடு ஒன்றி நிற்கின்றன.  அவை நீதிக்களஞ்சியம், மெய்ப்பொருட் சுரங்கம், உயிர்க்கும் உலகியலுக்கும் வழிகாட்டும் பனுவல், வீரர்கள், வீரப்பெண்டிர்களின் வரலாற்றுநூல், இந்தியாவிற்கேயன்றி எல்லா நாட்டிற்கும் வழிகாட்டத் தக்க காப்பியம்; சமுதாய நீதிகளில் தன்னகத்தே கொண்டது என எழுத்தாளர்களாலும் மக்களாலும் போற்றி வணங்கப் பெறுவதை அறிகின்றோம்.

“அறம், பொருள், இன்பம், வீடுகளைப் பற்றி இதில் உள்ளது தான் மற்றதிலும் இருக்கின்றது - இதில் இல்லாதது ஓரிடத்திலும்  இல்லை”2  என்ற வியாசரின் கூற்றும் நிலைத்ததாகும். தாவரங்கள், காடுகள், கடல்கள், நதிகள் பற்றியும், உலக மக்களைச் சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் இக்காப்பியத்தின் மூலம் விலகும் என்று கூறுவர்.  இக்காப்பியத்தில் முதலில் பாண்டவர்களின் முன்னோர்களைப் பற்றி குறிப்பிட்டாலும் பிற்பகுதில் மிகுதியாகப் பாண்டவர்களைப் பற்றியே பேசப்படுகிறது. அப்படிப்பட்ட பாண்டவர்களின் பிறப்பு, உறவுமுறை, நட்சத்திரம், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும். மகாபாரதத்தில் வரும் பாண்டு மன்னனின் மனைவிகளான குந்தி, மாத்தி, இவர்களுக்கு பிறந்தவர்களே பாண்டவர்கள்.  அவர்களைப் பற்றி பின்வருமாறு  வகைப்படுத்தலாம்.

Last Updated on Wednesday, 19 November 2014 03:36 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

E-mail Print PDF

- முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை -அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக அமைந்து, குருவாக அமைந்துச்  சமுதாயத்தைக் கடைத்தேற்றும் நாயகராக  ஞான சம்பந்தப் பெருமான் விளங்குகின்றார்.

 திருநல்லூர்ப் பெருமணத்தில் தன் மணம் காணவந்த அத்தனை பேருக்கும் சிவகதி அளித்த பெருமைக்கு உரியவர் ஞானசம்பந்தப்பெருமான்.

 ‘‘நந்தி நாமம் நமசிவாயவெனும்
 சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன்சொல்
 சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லாரெல்லாம்
 பந்த பாசம் அறுக்க வல்லார்களே ’’
                                                               (திருநல்லூர்ப் பெருமணம். பாடல்.12)

Last Updated on Monday, 17 November 2014 23:05 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவிய முதன்மைக் கதை மாந்தர்கள்

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவிய முதன்மைக் கதை மாந்தர்கள்ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று உதயண குமார காவியம். இக்காப்பியத்தில் உதயணன் காவிய நாயகனாக விளங்குகின்றான். உதயண குமார காவியத்தின் முதன்மை இடம் வகிக்கும் பெண் தலைமை மாந்தர்கள் பலராக விளங்குகின்றனர். இக்காப்பியத்தில்  வாசவதத்தை, விரிசிகை, பதுமாபதி, மானனீகை போன்ற நான்கு பெண்மணிகளும் முதன்மைப் பாத்திரங்களாகக் கருதத்தக்கவர்கள்.  காப்பியங்களைப் படைத்தவர்கள் ஆண்கள் என்ற நிலையிலும், ஆணாதிக்கம் தலை தூக்கியிருந்த காலகட்டத்தில் காப்பியங்கள் எழுதப்பெற்றிருந்தன என்ற நிலையிலும் ஆண் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தந்து காப்பிய ஆண்படைப்புகள் படைப்பாளர்களால் படைக்கப்பெற்றிருப்பது தவிர்க்க இயலாததாகின்றது. இருப்பினும் இக்காப்பிய படைப்புகளில் பெண் பாத்திரங்களும் உரிய நிலையில் காப்பிய சுவைக்காகவும், காப்பிய நடப்பிற்காவும்  இணைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு இணைக்கப்பெற்றுள்ள பெண் பாத்திரங்களின் நடப்புகள், அவர்களின் பண்புகள் ஆகியவற்றின் வாயிலாக காப்பிய கால பெண் சமுதாய இயல்புகளை அறிந்து கொள்ள முடிகின்றது. பெண்ணாக இருந்து ஒரு காப்பியத்தை பெண் சமுதாயத்தின் உண்மை நிலையை அறிய உதவுவது பெண்ணியத் திறனாய்வு ஆகின்றது. அவ்வழியில் உதயண குமார காவியம் என்ற காப்பியக் கதையில் இடம்பெறும் முதன்மைப் பாத்திரங்களை மட்டும் இக்கட்டுரை எடுத்துக்கொண்டு அவற்றின் இயல்புகளை பெண்ணிய நோக்கில் ஆராய்கின்றது.

Last Updated on Saturday, 15 November 2014 23:57 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்தமிழகத்தில் இலக்கியம் தோன்றிய காலத்திலேயே அவ்விலக்கியத்தை முன்மொழிதல், இலக்கியங்களைச் சான்றுகளாகப் பயன்படுத்தல் போன்ற நிலையில் இயக்கச் சாயலுடனான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன என்றே கருதலாம்.  சங்க காலத்தில் இருந்த முதல், இடை, கடைச் சங்கங்கள் இலக்கிய இயக்க அடிப்படை வாய்ந்தனவே ஆகும். பலர் ஒன்றாக ஓரிடத்தில் கூடி ஒரு பொருள் பற்றிச் சிந்திப்பது அல்லது படைப்புகள் பற்றி ஆராய்வது என்ற நிலையில் அமைந்தது சங்கம் என்ற அமைப்பாகும். குழு மனப்பான்மையுடன் பலரும் உயர இலக்கியத்தின்வழி  வழி காண்பது இலக்கிய இயக்கமாகின்றது.

சைவ சமய எழுச்சி காலத்தில் பக்தி இலக்கியம் கொண்டு சமுதாயத்தில் பெருத்த விழிப்புணர்ச்சியை அருளாளர்களால் ஏற்படுத்த முடிந்தது. 'இலக்கிய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் தனியிடத்தைப் பெற்றது பக்தி இயக்கம். இவ்வியக்கம் கலைக்குப் புத்துயிர் அளித்தது. பல்வகை இடங்களுக்குச் சென்று பதிகம் பாடியும், இறைவடிவங்களைப் பாசுரங்களில் ஒதியும்,இறையடியார்களுக்குக் காப்பியம் புனைந்தும்,இறைநலம் சார்ந்த பிரபந்தங்களை உருவாக்கியும் இலக்கிய வளம் சேர்த்தது இவ்வியக்கம்.'|  என்றவாறு பக்தி இயக்கப் பணிகள் குறிக்கத்தக்க இடத்தைத் தமிழக வரலாற்றில் பெற்றுள்ளன.

Last Updated on Saturday, 15 November 2014 23:50 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை

E-mail Print PDF

- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.

பொதுவாகப் பெண்டிர் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம். உயர்குடியில் பிறந்த பெண்டிர் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் ஏவலர்களையும் வைத்துள்ளனர். இது இரு வீட்டாரின் இசைவால் நிகழ்ந்த திருமண வாழ்விற்கு ஒத்தது. ஆனால் இரு வீட்டாரின் இசைவில்லாமல் நிகழும் களவு மணப்பெண்டிருக்கு அடுக்களைதான் வாழ்க்கை. அதனையே அகவிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அதனைக் குறுந்தொகைப் பாடல் (167) குறிப்பிடுகின்றது.

Last Updated on Friday, 07 November 2014 21:21 Read more...
 

தமிழ்ச்சிற்றிதழ்களில் நவீன படைப்புகள்

E-mail Print PDF

தமிழ்ச்சிற்றிதழ்களில் நவீன படைப்புகள்-தமிழ்மொழி வளர்வதற்கான ஊற்றுக் கண்ணாகச்சிற்றிதழ்கள் இக்கால கட்டத்தில் விளங்குகின்றன. தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள், மேலைஇலக்கியங்களுக்கு   ஒருபடி மேலே சென்று, உலக இலக்கியத் தரத்தைத் தமிழுக்குத் தந்து  கொண்டிருக்கின்றன எனலாம்.  கவிதை,  சிறுகதை, குறுங்கதைகள்,  திறனாய்வுகள்,   துணுக்குகள் எனப் பல்வகைப்பட்ட இலக்கியங்களைத் தரத்தோடு வெளிவரச்செய்ய முயல்பவைகளாகவும்  இச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கின்றன. இலக்கியத் தாகத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்பு ஆற்றலுக்கு தீனி போடக் கூடிய மற்றொரு பயனையும் சிற்றிதழ்கள் செய்கின்றன.

சிற்றிதழ் தன்மை
“எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்.” 1

என்கிறது   தமிழ் விக்கிப்பீடியா .மேலும் வணிக இதழ்களுக்கு மாறாகச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கும் தன்மையினைப் “பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிக்கைச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிக்கைகள் “ 2  என மு.யாழினி வசந்தி கூறுவார்.தமிழக அளவிலும்,உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிற்றிதழ்கள் பெரும்பான்மையாக இன்று வெளியிடப்படுகின்றன.இவ்விதமான சிற்றிதழ்களில் நவீன படைப்புகள் எவ்விதமான தன்மையினைப் பெற்றிருக்கின்றன என்பதை  ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Last Updated on Tuesday, 04 November 2014 22:38 Read more...
 

கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் - ஓர் அறிமுகம்

E-mail Print PDF

கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் - ஓர் அறிமுகம்மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுவது உணவு, உடை, இருப்பிடமாகும். இம்மூன்றில் ஒன்று குறையாக அமைந்துவிட்டால் உயிரினங்கள் வாழும் தகவமைப்பினை  இழந்து விடுவர். அவற்றில், மனிதன் தங்குவதற்கு இருப்பிடம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இத்தகைய இருப்பிடம் மக்களின் வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றனர். கற்காலத்தில் மனிதன் நாடோடியாகச் சுற்றித் திரிந்தான். அவன் வாழ்க்கையில் இயற்கை சீற்றத்தில் அவன் தப்பிப் பிழைத்தது அரிது. அக்கால கட்டங்களில் மனிதன் மரங்களின் கிளைகள் மீதும், பாறைக்குகைகளிலும் மறைந்து, விலங்குகளிடமிருந்தும், மழை போன்ற இயற்கைத் தாக்குதலிலும் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். தான் உறங்குவதற்கும் அத்தகைய குகைகளையும் மரங்களையும் பயன்படுத்தினான். புதியகற்காலத்தில் மரங்களின் இலைகள், புல், கோரை இவற்றினை வைத்து கூரைகளை வேய்ந்து, அக்கூரைகளில் வாழ்ந்து வந்தான். புல், கோரை இவற்றினை வைத்து மனிதன் கூரையமைத்து வாழ்ந்தமைக்கானச் சான்று, கலித்தொகை, சிறும்பானாற்றப்படை போன்ற நூல்களிலும் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. தற்காலத்தில் குடிசைவீடு, ஓட்டு வீடு, காரைவீடு எனப் பலவிதங்களில் அமைக்கின்றனர். இவ்வகையான இருப்பிடம் அமைத்தலில் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இங்கு கட்டிடத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் வழக்காடு சொற்களைத் தவிர்த்து தொழில் சார்ந்த கலைச்சொற்களை மட்டும் அறிமுகப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

Last Updated on Monday, 03 November 2014 23:45 Read more...
 

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனுதாபச்செய்தி: பல்துறை ஆற்றல் மிக்க செயற்பாட்டாளர் காவலூர் ராஜதுரை

E-mail Print PDF

கலை ,  இலக்கியம்,  வானொலி,  தொலைக்காட்சி,  சினிமா,  நாடகம், மற்றும்  விளம்பரம்  முதலான   துறைகளில்  தனது  ஆற்றல்களை வெளிப்படுத்தி    நீண்ட காலமாக  இயங்கிய  காவலூர்  ராஜதுரையின் மறைவு   ஈடுசெய்யப்பட வேண்டிய  இழப்பு  என்று  அவுஸ்திரேலியா தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  சார்பில்  தெரிவித்துக்கொள்கின்றோம். தமது   பூர்வீக  ஊருக்குப்பெருமை சேர்க்கும்  வகையில்  தனது இயற்பெயருடன்   ஊரின்  பெயரையும்  இணைத்துக்கொண்டு   நீண்ட நெடுங்காலமாக   கலை,  இலக்கியம்  சார்ந்த  பல்வேறு   துறைகளில் தனது ஆற்றலையும்   ஆளுமையையும்  வெளிப்படுத்திவந்த   காவலூர்  ராஜதுரை  தமது  83   வயதில்   அவுஸ்திரேலியா  சிட்னியில்   காலமாகிவிட்டார்  என்பதை  அறிந்து   எமது  சங்கத்தின் சார்பில்   ஆழ்ந்த  கவலையையும்  அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். காவலூர்  ராஜதுரை  இலங்கையில்  மட்டுமல்ல அவுஸ்திரேலியாவுக்கு   புலம்பெயர்ந்த  பின்னரும்  தாம்  சார்ந்திருந்த துறைகளில்   ஆக்கபூர்வமாக  உழைத்தவர். ஈழத்து   இலக்கிய  வளர்ச்சியைப்பொறுத்தவரையில்  நான்கு தலைமுறைகாலமாக   அவர்  குறிப்பிடத்தகுந்த  பங்களிப்புகளை வழங்கியவர். சிறுகதை,   விமர்சனம்,  நாடகம்,  வானொலி   ஊடகம்,  இதழியல், திரைப்படம்,   தொலைக்கட்சி,  விளம்பரம்  முதலான  பல்வேறு துறைகளில்   அவர் தொடர்ச்சியாக  ஈடுபட்டுவந்துள்ளார்.

Last Updated on Monday, 20 October 2014 23:20 Read more...
 

மகாஜனாவும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியமும்

E-mail Print PDF

dr_n_subramaniyan.jpg - 12.37 Kbdr_kauslaya_subramaniyan5.png - 47.49 Kbலங்கை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியானது 2010ஆம் ஆண்டிலே தனது நூறாவது ஆண்டை நிறைவுசெய்தது. அச்சந்தர்ப்பத்திலே அதன் கல்விசார் பன்முக இயங்குநிலைகளின் சாதனைகளை  நுனித்து நோக்கி மதிப்பிடும் முயற்சிகள் அதன் பழையமாணவர்களால் அனைத்துலக மட்டத்தில் பல நிலைகளில் முன்னெடுக்கப் பட்டன.  அக்கட்டத்திலே கனடாவில் வெளிவந்த  மகாஜனன்   நூற்றாண்டு மலருக்காக எழுதப்பட்டு, அதில் இடம்பெற்ற கட்டுரை இது.  அக்கல்லூரி சார்ந்தோர் தமிழ் இலக்கியம் சார்ந்து இயங்கிநின்ற மற்றும்  இயங்கி நிற்கின்ற நிலைகள் பற்றிய ஒரு சுருக்கமான  வரலாற்றுப்  பார்வையாக இது அமைகின்றது. இத்தலைப்பிலான ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை எமக்கு விதைத்தவர் மேற்படி கல்லூரியின் முன்னாள் அதிபர்களுள் ஒருவரான  மதிப்புயர் திரு.பொ. கனகசபாபதி  அவர்களாவார்.  அவருக்கு எமதுமனம்நிறைந்த நன்றியைத ;தெரிவித்துக்கொண்டு இக்கட்டுரையை (சில புதுத்தகவல்களையும் உள்ளடக்கியதாக) இங்கு மீள்பிரசுரமாக முன்வைக்கிறோம்.

1. ஈழத்து இலக்கியமும்  மகாஜனக் கல்லூரியும் - ஒரு தொடக்கநிலைக் குறிப்பு

    ஈழத்தின் தமிழிலக்கிய மரபானது ஏறத்தாழ ஈராயிரமாண்டு பழமைகொண்டது. சங்கப் புலவரான ஈழத்துப் பூதந்தேவனாரைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடரும்  இந்த மரபானது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ‘நவீன இலக்கியம்’   எனப்படும் புதிய வரலாற்றுப் பாதையில் அடி பதிக்கத் தொடங்கியது. இப்புதிய பாதையிலே கடந்த நூறாண்டுக்காலப்பகுதியில் ஈழத்திலக்கியம் கடந்துவந்த வரலாற்றை மூன்று முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தலாம். 

Last Updated on Monday, 27 October 2014 23:06 Read more...
 

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்வைத்து …

E-mail Print PDF

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்வைத்து …dr_n_subramaniyan.jpg - 12.37 Kbதமிழ் ஆய்வுலகின் தலைமைப் பேராசிரியராகவும் ‘விமர்சன மாமலை’ என்ற கணிப்புக்குரியவராகவும் திகழ்ந்தவர், கலாநிதி  கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்கள்(1932-2011). ஒரு கல்வியாளருக்குரிய  ‘சமூக ஆளுமை’யானது  எத்தகையதாக அமையவேண்டும் என்பதைத் தமிழ்ச் சூழலிலே இனங்காட்டிநின்ற முக்கிய வரலாற்றுப் பாத்திரம்,அவர்.  அப்பெருமகன் நம்மைவிட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. 06-07-2014 அன்று அவர் நம்மைப் பிரிந்த மூன்றாவது நினைவுதினம் ஆகும். அந்நாளையொட்டி அவரது நினைவுகளை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும்   முன்னெடுப்புகளுள்   ஒன்றாக  இச் சிந்தனை உங்கள் பார்வைக்கு வருகிறது. பேராசிரியர் பற்றி விரிவானதொரு ஆய்வுநூல் எழுதும் ஆர்வத்துடன் தகவல் தேட்டங்களில் ஈடுபட்டுவரும் நான் அத்தொடர்பில் கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது   வெளிப்படுத்திவந்துள்ள சிந்தனைகளின்  ஒரு பகுதியை இங்கு கட்டுரை வடிவில் உங்கள் கவனத்துக்கு  முன்வைத்துள்ளேன்.    பேராசிரியரைப் பற்றிய இக் கட்டுரையைத் தொடங்குவதற்கு முதற்படியாக அவரைப்பற்றிய பொது அறிமுகக் குறிப்பொன்றை இங்கு முன்வைப்பது அவசியம் எனக்கருதுகிறேன்

 பொது அறிமுகம்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியவர்கள்  ஈழத்தின்  வடபுலத்தின் வடமராட்சி மண்ணின் மைந்தன் ஆவார்.   இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற  இவர்  பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் “பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்” என்ற தலைப்பில்  மார்க்ஸிய ஆய்வாளர் Dr.George Thomson அவர்களின் வழிகாட்டலில் ஆய்வு நிகழ்த்தி டாக்டர் பட்டம் பெற்றவர்.  ஈழத்தில் வித்தியோதயா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் பணியை மேற்கொண்டவரான  இவர்,  ஈழத்தின்  கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்  தமிழகத்தின்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் , சென்னைப் பல்கலைக்கழகம்   சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும்  ‘வருகைதரு சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவராவார். அத்துடனமையாது தமிழ்நாட்டிலும் அனைத்துலக நிலையிலும்  பல்வேறு  தமிழியல் ஆய்வரங்குகளில் பங்குகொண்டு சிறப்பித்தவர். இவ்வாறான இயங்கு நிலைகளினூடாக, தமிழியலின் உயராய்வுச் செயற்பாட்டை முற்றிலும்  ‘ஆய்வறிவுப் பாங்கானதாக’க்  கட்டமைப்பதில் அவர் பெரும் பங்களிப்பை ஆற்றியவர் அவர்.

Last Updated on Monday, 27 October 2014 23:06 Read more...
 

வீரகேசரி பிரசுர நாவல்கள் -ஒரு பொது மதிப்பீடு!

E-mail Print PDF

நூல்: வீரகேசரி பிரசுரங்கள்கலாநிதி நா. சுப்பிரமணியன்தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Last Updated on Monday, 27 October 2014 23:07 Read more...
 

தினமணி.காம்: எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்

E-mail Print PDF

ராஜம் கிருஷ்ணன் தமிழ் எழுத்துலகில் பெண் எழுத்தாளராக புகழுடன் வலம் வந்த ராஜம் கிருஷ்ணன் திங்கள் கிழமை இன்று இரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. 1925ல் திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது. பள்ளி சென்று முறையான கல்வி பயிலாவிடினும், மின் பொறியாளரான கணவர் உதவியால் புத்தகங்களைப் படித்து, தாமே கதைகள் எழுதத் துவங்கினார். 1970ல் தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையைக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து, அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை உள்ளிட்ட சமூக அவலங்கள் குறித்து எழுதியுள்ளார். கலைமகள் இதழில் கதைகள் பல எழுதியுள்ளார். அதன் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதனால் எழுத்துலகில் வளர்க்கப்பட்டவர். 1953ல் கலைமகள் விருது, 73ல் சாகித்ய அகாதெமி விருது, 91ல் திருவிக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.  இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.

நன்றி: http://www.dinamani.com 

Last Updated on Monday, 20 October 2014 22:22 Read more...
 

பேட்ரிக் மோடியானோவின் தொலைந்த மனிதன் நாவலுக்கு நோபல் பரிசு

E-mail Print PDF

பேட்ரிக் மோடியானோவின் தொலைந்த மனிதன் நாவலுக்கு நோபல் பரிசுபிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ 2014ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியானோவின் "தொலைந்த மனிதன் (Missing Person)' நாவல் இப்பரிசினைப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, நாஸிக்களின் ஆக்ரமிப்பு வன்முறையால் பிரான்ஸ் அடைந்த துயரங்களைக் குறித்த விரிவான ஆய்வுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பேட்ரிக் மோடியானோ., பிரெஞ்சு நாட்டை ஜெர்மனியின் நாஸிப் படைகள் இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம்வெளிப்படுத்தி யுள்ளார்.. அன்னிய ஆக்கிரமிப்பின் பிடியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மோடியானோவின் எழுத்துகள் அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன .அதன்மூலம், யாரும் புரிந்து கொள்ள முடியாத உலகுக்கு மனித உணர்வுகளை இட்டுச் செல்லும் கலை நயத்துக்காக மோடியானோவிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று ஸ்விடனில் இருக்கும் நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் பிரஞ்சு படைப்பாளிகளின் வரிசையில் மோடியானோ 11 ஆவது நபராக இடம் பெறுகிறார்.

Last Updated on Saturday, 18 October 2014 19:32 Read more...
 

மூத்த எழுத்தாளர் காவலூர் இராஜதுரை நினைவுகள்..!

E-mail Print PDF

1_kavaloor_rajaduraiஇலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான காவலூர் இராஜதுரை அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 14 -ம் திகதி (14 - 10 - 2014) செவ்வாய்க்கிழமை மாலை காலமான செய்தி மனவருத்தத்தைத் தருகிறது. பொதுசனத் தொடர்புத் துறையில் ஈடுபடுவோர் பலர். ஆயினும், அத்துறையின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டுமல்ல, அதன் நுட்பங்களையும் உணர்ந்து, தம் முத்திரை பதிப்போர் ஒரு சிலரே. அந்த ஒரு சிலருள் 'பல்கலைவேந்தர்" சில்லையூர் செல்வராசன், காவலூர் இராஜதுரை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் இரட்டையர்கள் போன்று மிகுந்த நட்புடன் இயங்கி வந்தவர்கள். 'விளம்பரத்துறை" என்ற தனது நூலில், 'விளம்பரத் துறையில் சில்லையூர் செல்வராசன்" என்ற தலைப்பில் காவலூர் இராஜதுரை எழுதியுள்ள கட்டுரை ஊடகத்துறையில் ஈடுபடுவோர்க்கு விளம்பரத்துறை குறித்த தகவல் தரும் சிறந்ததோர் கட்டுரையாகும்.

காவலூர் இராஜதுரையின் கதை வசனத்தில் அவரது மைத்துனர் தயாரித்து புகழ்பெற்ற இயக்குனர் தர்மசேன பத்திராஜா இயக்கிய 'பொன்மணி" திரைப்படம் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்திற்குரியதாகும். சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத் தயாரிப்பின்போது யாழ்நகரில் காவலூர் இராஜதுரையோடு சில நாட்கள் செயற்பட்டமை ஞாபகத்தில் நிற்கிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக எழுபதுகளில் அவர் கடமையாற்றியபோது 'கிராமவளம்" மற்றும் கிராமிய நிகழ்ச்சிகளுக்காக, அவருக்கு உதவியாக நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு முதல் வடபகுதியின் பல கிராமங்களுக்கும் சென்று ஒலிப்பதிவுகளை மேற்கொண்டமையும், புங்குடுதீவில் எங்கள் வீட்டில் அவர் தங்கியிருந்து 'பொன்மணி" திரைப்படத் தயாரிப்புக் குறித்தும் கலை இலக்கிய விடயங்கள் குறித்தும் நிறையவே பேசிக்கொண்டமையும் இன்றும் மனதில் பசுமையாக இருக்கின்றது.

Last Updated on Friday, 17 October 2014 22:22 Read more...
 

மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்!

E-mail Print PDF

1_kavaloor_rajaduraiஇலங்கையின்   மூத்த  எழுத்தாளரும்  இலங்கை   வானொலியின்  முன்னாள்   நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் வானொலி ஊடகவியலாளருமான  காவலூர்  ராஜதுரை   நேற்று (14-10-2014)  மாலை   அவுஸ்திரேலியா  சிட்னியில்  காலமானார். இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  மூத்த உறுப்பினராகவும்  இயங்கிய   காவலூர்  ராஜதுரையின்  கதை வசனத்தில்  வெளியான   பொன்மணி    திரைப்படம்  இலங்கை    தமிழ்த் திரைப்படங்களில்  குறிப்பிடத்தகுந்தது. கொழும்பில்   வசீகரா  விளம்பர  நிறுவனத்தின்  இயக்குநராகவும்  இயங்கிய காவலூர்   ராஜதுரை  பல  வருடங்களாக  அவுஸ்திரேலியா  சிட்னியில் தமது    குடும்பத்தினருடன்    வசித்தார். இங்கு    இயங்கும்  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தினதும்   மூத்த  உறுப்பினரான  காவலூர்  ராஜதுரை   சிறுகதை,  விமர்சனம்,    கட்டுரை,   விளம்பரம்   முதலான    துறைகளிலும்    எழுதியிருப்பவர்.    சில  நூல்களின்  ஆசிரியருமாவார்.

Last Updated on Tuesday, 14 October 2014 21:00 Read more...
 

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் மீவியல் புனைவுகள்

E-mail Print PDF

books554.jpg - 8.33 Kbசெவ்வியல் வரிசையில் மூவேந்தர்களின் வரலாற்றினை திறம்படவெளிக்காட்டுவது முத்தொள்ளாயிரம். சேரன்,  சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை அகம் - புறம் வாயிலாகக் கூறுவதோடு ‘முடியுடை’ மன்னர்கள் எனும் சிறப்பினையும் இந்நூல் பெறுகிறது. புறத்திறட்டில் நூற்று எட்டு பாடல்களும் பழைய உரைகளில் இருபத்திரெண்டு பாடல்களும் சேர்த்து பனுவலாகப் படைக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் இன்னாரென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. வெண்பா யாப்பில் அமைந்துள்ள பாக்கள் இனிமையும் கருத்துச்செறிவும் மிக்கனவாக மிளிர்கின்றன. இந்நூல சேரன்,  சோழன் , பாண்டியன் என்னும் மூவேந்தர்களின் கொடைச்சிறப்புகள்,  வெற்றி, புகழ்,  போர்த்திறம்,  உலாவருதல்,  அவனைக் கண்டு காதல் மகளிர் காதல் கொள்ளுதல்,  பேய்களின் செயல்பாடுகள்,  போர்க்களச் செய்கைகள்,  புலவர்களின் கற்பனை,  சொல்லாச்சித் திறன் மக்கள்களின் வாழ்வியல் நிகழ்வுகள்,  வெறியாட்டு சடங்குகள் இவை போன்ற களங்களில் மூவேந்தர்களின் வாழ்வியலைத் தடம்பதித்துள்ளனர் புலவர்கள். அதனை திறம்பட வெளிக்காட்டுவதோடு புலவர்களின் மீவியல் புனைவுகளையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Last Updated on Thursday, 02 October 2014 21:48 Read more...
 

மீள்பிரசுரம் (எதுவரை.நெற்): சிறீதரனின்படைப்புலகம்

E-mail Print PDF

- மு. நித்தியானந்தன் -1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் அலை, மல்லிகை, கணையாழி, திசை ஆகிய சீரிய இலக்கிய இதழ்களில் எழுதிவந்திருக்கும் ஸ்ரீதரன், ஈழத்து இலக்கிய உலகில் ‘பேசாப்பொருளாக’ இருந்திருப்பது நமது துரதிர்ஷ்டம். ஈழத்துச் சிறுகதை வரலாற்றை நுணுகி ஆராய்ந்து அண்மையில் வெளியான ஒரு நூல் பட்டியலிடும் 400 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் ஸ்ரீதரனைக் காணமுடியவில்லை என்பது ஆச்சரியமானதுதான். எனவேதான், இந்த எழுத்தாளரின் தொகுப்பு நமக்கு ஒரு அர்த்தத்தில் புதிய வரவாக அமைந்திருக்கிறது.

Last Updated on Monday, 22 September 2014 23:55 Read more...
 

ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்!

E-mail Print PDF

ஸி. வி. வேலுப்பிள்ளைசெப்டம்பர் பதினான்காம் திகதி ஸி.வி வேலுப்பிள்ளை நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் சாரல் நாடனின் 'சி.வி. சில சிந்தனைகள';;; என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது. இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் ஆளுமை பண்முகப்பாட்டை வௌ;வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.

Last Updated on Sunday, 21 September 2014 20:30 Read more...
 

நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்பு

E-mail Print PDF

நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்புபாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில்,  நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு,  நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு,  அறிவு,  நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.

நூல் - விளக்கம்
     நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,

“நூலெனப்படுவது நுவலுங் காலை
 முதலு முடிவும் மாறுகோ னின்றித்
  தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
 உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”
(செய்.நூற்:159)

Last Updated on Saturday, 13 September 2014 23:14 Read more...
 

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்

E-mail Print PDF

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்சூழியல் என்பது இன்றைய நிலையில் முக்கியமாக வைத்துப் பேசப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மனித வாழ்விற்கு அடிப்படையாக அமைவது சூழல். இத்தகையச் சூழல் மனிதனின் அனைத்து வித செயல்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது. இத்தகைய சூழலால் உந்தப்பட்ட மனிதன் தனது கற்பனைச் சிறகை விரித்து இலக்கியம் படைக்கிறான். எனவே ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாளன் இருக்கின்றான். ஒவ்வொரு படைப்பினுள்ளும் படைப்பாளன் இருப்பதனால் தகடூர்த் தமிழ்க்கதிரின் ‘மழை ஒலி’ என்கின்ற இக்கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்ட சூழல் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஆய்வு எல்லை
 ‘மழை ஒலி’ என்னும் கவிதைத் தொகுப்பு மட்டும் இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக் கருதுகோள்
 ‘மழை ஒலி’ என்ற கவிதைத் தொகுப்பு படைப்பாளியின் சூழல் காரணமாக உருப்பெற்றிருக்கலாம் என்ற கருதுகோளினை அடிப்படையாக வைத்து இவ்வாய்வு தொடங்கப்படுகிறது.

படைப்பாளனும் படைப்பும்
 தகடூர்த் தமிழ்க்கதிர் என்னும் இக்கவிஞர் தர்மபுரி மாவட்டத்தில் கம்பை நல்லூரில் 15.02.1962-இல் பிறந்தார். இவர் தமிழ்க்கதிரின் எழில்வானம், ஐங்குறள் அமிழ்தம், மழை ஒலி, போன்ற கவிதை நூற்களும் அடைக்கலன் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும், பசுவும் பாப்பாவும், சிறுவர் பூக்கள் போன்ற சிறுவர்களுக்கான படைப்புகளையும் படைத்துள்ளார். மழை ஒலி என்னும் கவிதைத் தொகுப்பின் அமைப்பினைப் பத்துப் பிரிவாகப் பகுக்கலாம். அவையான, 1.இயற்கை, 2.தமிழ், 3.தமிழர், 4.சான்றோர், 5.இரங்கற்பா, 6.சமுதாயம், 7.பாவரங்கம், 8.அரங்குகளில் பாடப்பெற்ற பாடல்கள், 9.குறுங்காவியப் பாடல்கள், 10.பல்சுவைப் பாடல்கள் போன்ற பகுதியாக இந்நூலைப் பகுத்து அமைக்கலாம்.

Last Updated on Tuesday, 02 September 2014 22:31 Read more...
 

அகஸ்தியரின் பார்வை: கலை இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும்!

E-mail Print PDF

- பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 88வது (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இக்கட்டுரை பிரசுரமாகின்றது... -       

அமரர் அகஸ்தியர்கிராமியப் பாடல், நாட்டுக் கூத்து , இசை, நடனம், கவிதை, நாடகம், சினிமா, இசைக்கருவி என்னுங் கலை வடிவங்கள் விஞ்ஞானம், வரலாறு, மனித உழைப்பு, ஆய்வு, விமர்சனம், பகுப்பாய்வு ஆகிய வகைப்படுத்தலால் சிறப்படைகின்றன. எல்லயற்ற ஆய்வுக்கு மனிதனால் அனைத்தும் உட்படும்போது உன்னதமடைகின்றன. கலை இலக்கிய உலகில் இந்த உன்னதமும் ஓர் எல்லையற்றிருக்கிறது.  பூமி, சந்திரன், சூரியன், வெள்ளி ஆகிய சகல கோளங்களும் சுழற்சி ஓசையினூடு லய பாவத்துடன் சுருதி கலந்து இயங்குவதுபோலவே, ஒலி, ஒளி, காற்று என்பனவும் லய சுருதியோடு இயங்குகின்றன. ஜடப்பொருட்களின் இயக்கத்தில் மாத்திரமின்றி , சகல உயிரினங்களின் இயக்க முறைமைகளும் நாடித்துடிப்புகளும் அவ்வாறே பிசகின்றி இயல்பாகவே இவ்வாறு சுருதி லயப் பிசகின்றி இயங்குவதாலேயே அனைத்தும் எதிலும் துவைச்சல் பெருக்கெடுத்துக் குமுறுகிறது. கடல் வடுப் பெயர்ந்து அடங்கிக் குமுறுகிறது. அடங்கி, எழுந்து, சீறி, உயர்ந்து, தாழ்ந்து, சமமாகும் தன்மை ஜடப்பொருட்களிலும் லய பாவத்தோடு நிகழ்கின்றன.

Last Updated on Monday, 25 August 2014 21:17 Read more...
 

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள்

E-mail Print PDF

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள் - ச. முத்துச்செல்வம்தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தினை மொழியியல் அறிவு கொண்டு பார்க்கும் பொழுது சொல்லியல், பொருண்மையியல், தொடரியல், அகராதியியல் குறித்துப் பேசப்படுவதாக உரையாசிரியர்களும் அறிஞர்களும் கருதுகிறார்கள். இக்கருத்தின் அடிப்படையில் தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான தெய்வச்சிலையாரின் மொழியியல் சார்ந்த தொடரியல் கருத்துக்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தொடரியல் நோக்கு
மொழியில் சொற்றொடர் அமையும் நெறிகளையும், முறைகளையும் பற்றி அறிவது தொடரியல் என்பதனை “Syntax is the study of the principles and processes by which sentence are constructed in particular languages” (Noam Chomsky, 2002 : 11) என்று நோம் சோம்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். கிளவியாக்கம் என்பது சொற்களை ஆக்கிக் கொள்வது. அதற்கு விளக்கமளிக்க வந்த தெய்வச்சிலையார், “அது கிளவிய தாக்கமென விரியும். அதற்குப் பொருள், சொல்லினது தொடர்ச்சி யென்றவாறு. சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருண்மேலாகு நிலைமையைக் கிளவியாக்க மென்றார்”  (தெய்வச்சிலையார், 1984 : 7). என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒரு சொல் தனிப்பொருள் தரும் தன்மையது. அச்சொல்லுடன் மற்றொரு சொல் சேர்ந்து தொடராகும் பொழுது பொருள் மாற்றம் ஏற்படுகின்றது. இதற்குத் தொடரியல் உறவு பெரும்பங்கு வகிக்கிறது. ஆகையால் தான் கிளவியது ஆக்கம் என விரியும்  என்று தொடரியல் சார்ந்த நிலையில் தெய்வச்சிலையார் விளக்கமளித்துள்ளார். ..மேலும் வாசிக்க

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 16 August 2014 22:27
 

தனியே நிற்கும் நகுலன் எனும் உயிர்க்கவிதை

E-mail Print PDF

நகுலன்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்

“திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.”

Last Updated on Sunday, 03 August 2014 06:32 Read more...
 

தகவத்தின் பார்வையில் சமகாலச் சிறுகதைகள்

E-mail Print PDF

தகவத்தின் பார்வையில் சமகாலச் சிறுகதைகள்தகவம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். பல மாத உழைப்பிக்கிற்கு பின்னர் இன்று தகவம் குழவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை வளர்ச்சியை உக்குவிப்பதை நோக்கமாகக் 1975 களில் உதயமானது. தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, தமிழ்ச் சிறுகதைகளை நூலாக வெளியிடுவது போன்ற நோக்கங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அதன் பணிகளைத் தொடர்கிறது. நாட்டு நிலமைகள் காரணமாக இடையிடையே தொய்வுகள் எற்பட்டபோதும் தனது பணியினை இயன்றவரை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. இலங்கையில் ஏராளமான தினசரிகள், சஞ்சிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிற்றிதழ்களும் வருகின்றன். இவற்றையெல்லாம் தேடி எடுத்து அவற்றில் கடந்த இரு வருடங்களாக வந்த சிறுகதைகளைப் படித்து, மதிப்பீடு செய்து, தேர்வு செய்வது இலேசான விடயம் அல்ல. கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட மதிப்Pடு இது. வசந்தியும் தயாபரனும் முழு முயற்சி செய்து தேடி எடுத்த சில நூறு சிறுகதைகள் இவை. கண்ணில் படாது தப்பியிருக்கச் சாத்தியங்கள் இல்லை. இருந்தபோதும் எங்காவது தவறு நேர்ந்திருக்கக் கூடும என்பதை மறுக்க முடியாது.

Last Updated on Wednesday, 02 July 2014 22:41 Read more...
 

அருகிவரும் குதிர்ப் பயன்பாடு

E-mail Print PDF

- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும் கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது. அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது. இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.  குதிர் எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக் கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான். முழுமையான கட்டுரை இங்கு

Last Updated on Saturday, 14 June 2014 23:29
 

சங்காலப் பெண்பாற் புலவர்களின் உரத்த குரல்கள்

E-mail Print PDF

முன்னுரை
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

Last Updated on Saturday, 14 June 2014 22:43 Read more...
 

“தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” நாவலில் தேவதாசி ஒழிப்புமுறை!

E-mail Print PDF

“தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” நாவலில் தேவதாசி ஒழிப்புமுறை!பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் அங்கம் வகித்தப்போது இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் 1929-ஆம் ஆண்டில் மீண்டும் தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வரும் தருவாயில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றிய நாவல் 1936-ஆம் ஆண்டில் இராமாமிர்தத்தம்மாளின் நாவல்  வெளிவந்தது. இந்நாவலில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றி மிகத் தெளிவாகப் படைத்துள்ளார். இதற்குத் தாசிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதன் பிறகு தேவதாசிகளும்; இணைந்தே இச்சட்டத்தை முன்னெடுத்துச் சென்ற நிகழ்வுகளைப் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Saturday, 14 June 2014 17:50 Read more...
 

பயனுள்ள மீள்பிரசுரம்: "வறுமைதான் வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு" - வாண்டுமாமா

E-mail Print PDF

- சிறுவர் இலக்கியத்துக்கு அளப்பரிய பங்காற்றி வந்த எழுத்தாளர் வாண்டுமாமா (இயற்பெயர்: வி.கிருஷ்ணமூர்த்தி) இன்று ஜூன் 12,014 அன்று தனது தோண்ணூற்றியொரு வயதில் காலமானார். அவரது மறைவினையொட்டி இக்கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள். -

வாண்டுமாமா.
வாண்டுமாமாஇந்தப் பெயரைப் படித்ததும் மூளையில் என்ன மின்னல் அடிக்கிறது உங்களுக்கு? ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும் மந்திரவாதியின் உயிரும்... பேசும் கிளியும்... பலே பாலுவும்... உங்கள் நினைவில் மின்னினால்... சபாஷ்... உங்கள் குழந்தைப் பருவம் அலாதியாக இருந்திருக்கும்!  கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ்க் குழந்தைகளின் உலகை கதைகளால் நிரப்பியவர் வாண்டுமாமா. கடந்த நூற்றாண்டில் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’ புத்தகங்கள் அவற்றின் உச்சத்தில் இருந்தபோது வாண்டுமாமாதான் அதற்குப் பொறுப்பாசிரியர். கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் வாண்டுமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்குமாக இதுவரை 218 புத்தகங்களை எழுதி இருக்கும் வி. கிருஷ்ணமூர்த்தி இப்போது எப்படி இருக்கிறார்?   சென்னை, தியாகராய நகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் தன் மகன் வீட்டில் இருப்பவரைச் சந்தித்தோம். வாண்டுமாமா இப்போது வாண்டுதாத்தாவாக இருக்கிறார். 87 வயது. முதுமை உடலை ஒடுக்கி இருக்கிறது. காலம் எல்லாம் கதை சொன்னவருக்கு இப்போது பேச முடியவில்லை. வாயில் புற்றுநோய். காதும் கேட்கும் திறனை இழந்துவிட்டது. மனைவி சாந்தாவிடம் சொன்னால், அவர் சைகை மூலம் நாம் சொல்லும் செய்தியைத் தெரியப்படுத்துகிறார்; அதற்குத் தன்னுடைய பதிலை எழுதிக்காட்டுகிறார் வாண்டுதாத்தா. ஆனால், எழுத்துகளில் கொஞ்சமும் நடுக்கம் இல்லை. அட்சரச் சுத்தமாக இருக்கின்றன. சைகைகளும் எழுத்துகளுமாக நடந்த உரையாடல் இது...

Last Updated on Friday, 13 June 2014 23:20 Read more...
 

ஈழத்து அமுதுவின் இலக்கியத் தொண்டுகள்

E-mail Print PDF

இளவாலை அமுதுப் புலவர்' பேராசிரியர் கோபன் மகாதேவாஇந்த ஆய்வுக் கட்டுரையின் நாயகர் 2010 மாசியில் தனது 91வது வயதில் மறைந்த 'இளவாலை அமுதுப் புலவர்' என்று வழங்கப்பட்டு வந்த ஈழத்தின் பழுத்த நூலாசிரியராகிய (த.) சவரிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து ஆவார். அவரின் 10-நூல்களுள் சிறந்த மூன்று வரலாற்று நூல்கள், இரண்டு கவிதை நூல்களை அடக்கி, 1200-பக்கங்களுடன் 2008இன் 'தொகுப்புநூல்' லண்டனில் 2010-தையில் வெளிவந்தது. எனது இச் சிற்றாய்வு பெருமளவில் அத் தொகுப்பு நூலையும் அவ்வாசிரியருடன் நான் கொண்டிருந்த 10-12 வருட இலக்கியத் தொடர்பையுமே தளமாகக் கொண்டு அத் தொகுப்பிலுள்ள ஐந்து நூல்களையும் அங்குள்ள வரிசையிலேயே திறனாய்வாக விவரிக்கின்றது.

1. அன்பின் கங்கை அன்னை தெரேசா (234-பக்கம்): இப் பகுதி-நூலுக்கு அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அன்று ஈழகேசரி ஆசிரியரான ஈ.கே. ராஜகோபால், கணக்காளர்-எழுத்தாளர் ஐ. பேதுருப்பிள்ளை, கலாநிதி அ.பி. ஜெயசேகரம் அடிகள் ஆகிய நால்வர் முன்னுரையும், ஆசிரியர், தன் வாசற்படி உரையையும் எழுதியுள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளார். இந்நூல் 'பூங்கொடி மாதவன் சபைத்' துறவிகளுக்கும் தன் மனைவி ஆசிரியை திரேசம்மாவுக்கும் காணிக்கையாக 1997-2002-2005 இல் மூன்றுமுறை பதிப்பித்து வெளிவந்த, அமுதுவின் முதலாவது 'பஞ்சாமிர்தம்'.

Last Updated on Saturday, 14 June 2014 22:30 Read more...
 

கனடாவில் சிற்றிதழ்களின் தேக்கநிலை

E-mail Print PDF

நூலாசிரியர் அகில்இலங்கையில் நடந்த யுத்தம் ஈழத்தமிழ் மக்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்தது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்களின் பெரும்பாலானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். நாம் வாழும் கனடாவில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் படைப்பாளிகளில்; கணிசமானோர் கனடாவில் வாழ்கி;றார்கள் எனலாம். கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று படைப்பாளிகளின் பட்டியல் முடிவற்றது. இவர்களது படைப்புக்களின் தொகையும் எண்ணிலடங்காதது. குறிப்பாக சிற்றிதழ்கள், பத்திரிகைகளின் தோற்றம் சமீப காலத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கணினி தெரிந்தவரெல்லாம் பத்திரிகை நடத்தலாம் என்றளவில் இதன் தோற்றம் இருந்தாலும் மழைக்கால விட்டில்களாக மறைந்துவிடுகின்ற இதழ்களே அதிகம். இக்கட்டுரையின் நோக்கம் அவ்வாறான இதழ்களின் ஆழ, அகலங்களை ஆராய்வதல்ல. நிறைய எழுத்தாளர்கள் வாழ்கின்ற இந்த கனடா நாட்டில் சிற்றிதழ்கள் எதுவும் ஏன் தொடர்ந்து  வெளிவரவில்லை என்பது பற்றி நோக்குவதே  ஆகும்.

Last Updated on Saturday, 07 June 2014 19:44 Read more...
 

புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா!

E-mail Print PDF

1_sundaresanar5b.jpg - 11.64 Kbதமிழிசையின் சிறப்புகளைத் தமிழகம் முழுவதும் பாடிப் பரப்பிய இசையறிஞர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர் ஆராய்ச்சியறிஞராகவும், பாடுதுறையில் வல்லுநராகவும் விளங்கியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள், திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்களில் இருந்த தமிழிசைக் கூறுகளை மக்களுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.
  
குடந்தை ப. சுந்தரேசனார் கும்பகோணத்தில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர். நான்காம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, சமற்கிருத மொழிகளை அறிந்தவர். யாழ்நூல் ஆசிரியர் விபுலானந்தரின் மாணவராக இருந்து அடிகளாரின் தமிழிசை குறித்த கண்டுபிடிப்புகளை மக்களுக்கு எடுத்துரைத்தவர். திருவையாறு அரசர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையிலும் விரிவுரையாளராக இருந்து மாணவர்களுக்குத் தேவார இசை பயிற்றுவித்த பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞராகச் சிலகாலம் பணிபுரிந்தவர்.  அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் விருப்பப்படி இவர் பஞ்சமரபு என்ற அரிய நூலுக்கு உரை எழுதிய பெருமைக்குரியவர். சைவ, வைணவ இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய இவரின் நூற்றாண்டு 28. 04. 2014 முதல் தொடங்க உள்ளது. இவரின் தமிழிசைப் பணியை மக்களுக்கு நினைவுகூரும் வகையில் புதுச்சேரியில் இவரின் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க - இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து வரும் 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் செயராம் ஓட்டலில் நடத்துகின்றன.

Last Updated on Saturday, 10 May 2014 03:40 Read more...
 

ஷேக்ஸ்பியரின் ஆங்கில இலக்கிய விருந்துகள் [ஷேக்ஸ்பியர் நினைவு தினக்கட்டுரை.]

E-mail Print PDF

[வில்லியம் ஷேக்ஸ்பியர் ஞானஸ்நானம் பெற்ற தினம் ஏப்ரில் 26, 1564. அவர் பிறந்த தினம் ஏப்ரில் 23, 1564 என்று கருதப்படுகின்றது. அவரது மறைந்த தினமும் ஏப்ரில் 23, 1616. - பதிவுகள்-]

முன்னுரை
வில்லியம் ஷேக்ஸ்பியர்பேராசிரியர் கோபன் மகாதேவாஆங்கிலமொழியில் நன்றே எழுதிப் புகழீட்டிய வில்லியம் ஷேக்ஸ்பியர், என் இலக்கிய நாயகர்களின் முதல் வரிசையில் வீற்று இருப்பவர். அவர் இங்கிலாந்தின் முதலாவது எலிசபெத் மகாராணியின் காலத்தவர். அதாவது இன்றிருந்து 450 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 52 வருடங்கள் வாழ்ந்து இலக்கியப் படைப்பினையே தன் தொழிலாகச் செய்து பணத்துடனும் புகழுடனும் இறந்தவர். தன் 52 வருட வாழ்க்கையிலே 39-பிரபலமான நாடகங்களையும், 154-சொனெற்-ரகக் கவிதைகள், அத்துடன் ஆறு சங்கீதத்துக்கு உரிய சொனெற்றுக்களையும், ஐந்து நீள்-கவிதைக் கதைகளையும் எழுதியிருக்கிறார்.
    
இன்று பொதுமக்கள் ஆங்கிலத்தில் சாதாரணமாகச் சம்பாசிக்கும் போது கூட, ஷேக்ஸ்பியரின் பல எழுத்து ஓவியங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து ஓரிரண்டு சொற் தொடர்களையாவது பாவிக்காமல் நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கூடப் பேச முடியாது, என்று சொல்லப் படுகிறது. அந்த அளவுக்கு ஷேக்ஸ்பியரின் இலக்கியங்கள் ஆங்கில மொழியை மேன் மேலும் தளைக்கவும் உதவியுள்ளன என்பர். எனவே இவர் ஆங்கிலத்தில் ஒரு முக்கியமான நாடகக் கவி எனக் கருதப்படுபவர். தன் மொழிக்குச் சிறப்பூட்டிய ஓர் இலக்கிய மேதை.

Last Updated on Monday, 28 April 2014 20:47 Read more...
 

மாந்திரீக எதார்த்தப் படைப்புகளைத்தந்தவர் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்!

E-mail Print PDF

கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் "லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள், கடந்தகாலம் மற்றும் தேசியம்தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்." -பாப்லே நெருடா.

மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்இறப்பெய்தினார். யதார்த்தை கூறும் முறையில் இலக்கியத்தின் உறவை அங்கீகரித்துச்சென்ற மார்க்வைஸ் இறந்ததும் மாயத்தன்மை கொண்டதுமான நினைவுகளையும் தன் பாட்டியிடம் கேட்டறிந்த புதிர்களையும் தனக்குரிய வாலயப்பட்ட ஸ்பானிய மொழியிலே கதை சொல்லி வந்தார். இந்தக் கதை சொல்லி ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். என்பத்தி ஏழுவயதில் இன்று  அவர் உடல் இவ்வுலகினை விட்டுப் பிரிந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே அவர் நினைவாற்றலை இழக்கும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். என்ற உண்மையில் நாம் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருந்தோம். இன்று அவரது உடலும் எம்மிடமிருந்து இல்லாமல் போய்விட்டது. 

Last Updated on Wednesday, 23 April 2014 22:49 Read more...
 

BBC.Com: Gabriel Garcia Marquez (6 March 1927 – 17 April 2014)

E-mail Print PDF

Gabriel Garcia Marquez The vivid prose of Gabriel Garcia Marquez described a world as exotic as a Latin American carnival. His backdrop was the poverty-stricken, and often violent world of his Colombian home where democracy never really found roots. His stories wove imaginary magical elements into real life and were often set in a fictional village called Macondo. A left-winger by conviction he was not slow to criticise the Colombian government and spent a great part of his life in exile. Garcia Marquez was born in the town of Aracataca, Colombia on 6 March 1927.  Shortly after he was born, his father became a pharmacist and his parents moved away. The young Marquez was left in the care of his maternal grandparents.

Critical acclaim
His grandfather, a veteran of Colombia's Thousand Days' War and a liberal activist, gave him an awareness of politics. From his grandmother, Garcia Marquez learned of superstitions and folk tales. She spoke to him of dead ancestors, ghosts and spirits dancing round the house, all in a deadpan style that he would later adopt for his greatest novel. Garcia Marquez went to a Jesuit college and began to study law, but soon broke off his studies to work as a journalist. In 1954, he was sent to Rome on a newspaper assignment, and since that time, lived mostly abroad, in Paris, Venezuela, and finally Mexico City. He always continued his work as a journalist, even when his fiction increased in popularity.

Last Updated on Friday, 18 April 2014 05:26 Read more...
 

பூந்துணர்- 2012

E-mail Print PDF

முல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்இன முரண்பாடுகளின் அறுவடையாக மக்கள் புலபெயர்நாடுகளில் வாழும் நிலை ஏற்பட தங்களின் இலக்கியம் மீதான தாகத்தை படைப்பிலக்கியம் மூலம் வெளிபடுத்தினர்.அவ் விலக்கியத்தை பத்திரிகை,வானொலி,இணையம் என பல்வகை ஊடகங்களின் மூலம் வாசகர் பார்வைக்கு வைக்கையில் பலரின் கவனிப்புக்கும் உள்ளாகினர்.அவர்கள் பின்னர் தனித்தும்,கூட்டாகவும் நூல்களை வெளியிட்டு இன்னும் பலம் பெற்றனர்.நண்பர்களின் தொடர்பு,பிற இலக்கியங்களில் தேர்ச்சி என்பன அவர்களை இன்னும் இலக்கியத்தினை ஆழமாக சிந்திக்கவும் உதவின.. இந் நிலையில் நவீன தொழில்நுட்ப சாதன பயில்முறை இலகுவாகவே கைகளுக்குள் வர எழுத்து திருத்தங்களுடன் வரவும்,பதிப்பின் இலகுத்தன்மையும் சாத்தியமாகின. பலர் படைப்பாளர்களாக அடையாளப்படுத்தி நின்றார்கள். ஒரு புறம் எழுத்தில் ஆழமாக சிந்தித்து எழுதியவர்களிடையேயும் சிலர் வசதி வாய்ப்பு கிடைத்த மாத்திரத்தில் எழுத்தாளர்களாயினர்.அதிலும் சிலர் ஒரு நூலை வெளியிட்டதுமே உலக இலக்கியம் தன் கைகளுக்குள் என்கிற தொனியில் பேசவும் செய்கின்றையும் காணக்கிடைக்கின்றன. இவர்களின் பலம் அதிகமானால் ஆபத்தும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இங்கு புலம் பெயர் சூழலில் ஆங்காங்கே இலக்கிய அமைப்புக்கள், ஒன்றியங்கள், சங்கங்கள் தோன்றியும் உள்ளன. சில தொடர்ச்சியான செயல்பாட்டிலும் உள்ளன..  அவ் அமைப்புக்களுடாக பலரின் படைப்புக்களை உள்ளடக்கி நூலாகவும் கொண்டுவருகின்றமை பாராட்டக்கூடியதாகும். கனடாவில் இருந்து எனக்குக் கிடைத்த 'கூர்,யாதும், லண்டனிலிருந்து திரு.பத்மநாப ஐயர் தொகுத்த உகம் மாறும்,கண்ணில் தெரியுது வானம் போன்ற தொகுப்புக்களும் அடங்கும்.இன்னும் வந்திருக்கலாம்.

Last Updated on Thursday, 10 April 2014 04:51 Read more...
 

ஆய்வு: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்

E-mail Print PDF

ஆய்வு: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்!- க.லோகமணி, பகுதிநேரமுனைவர்பட்டஆய்வாளார், தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19.பண்டைத் தமிழரின் சிறப்பையும், பெருமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க நூல்களுள் ஒன்றான புறநானூறு தமிழக வரலாற்றை அறிவதற்கு மிகப்பெரிய சான்று ஆகும்.  புறநானூற்றின் மூலம் நாகாpகம், பண்பாடு, வீரம், ஆட்சி, கொடை, வாணிகம் போன்றவற்றையும், படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரையும் கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல்களையும் கற்றறிந்த சான்றோர்களையும் பழந்தமிழ்க் குலங்களையும் அறியமுடிகிறது. மேலும் அரசனின் ஆட்சிக்கு அடித்தளமான அரண் குறித்த கருத்துக்களையும் உணரமுடிகின்றது. திருக்குறளிலும் அரண் குறித்த செய்திகளைப் பொருட்பாலில் அரண் என்ற அதிகாரத்தின் மூலம் அறியமுடிகின்றது.

அரண்
அரண்  - பாதுகாப்பு, கோட்டை. போரில் வெற்றி பெற்ற அரசனும் வீரர்களும் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவர் என்பதைத் தொல்காப்பியம் முதலான நூல்களில் காணலாம். வாகை என்பது வெற்றியாளரை அடையாளப்படுத்தி வெற்றிக்கு ஆகுபெயராகியது. வாகை என்றால் வெற்றி என்றும், வாகை சூடினான் என்றால் வெற்றி பெற்றான் என்றும் பொருள்படுவது போல பாதுகாப்பு என்று பொருள்படும் அரண், அரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கோட்டைக்கு ஆகுபெயராகி வருகிறது. அரண் என்றால் ‘கோட்டை’ என்றும் பொருள்படுகிறது.

Last Updated on Tuesday, 01 April 2014 17:36 Read more...
 

ஈழத்தின் பிரதேச வரலாறு ஓர் அறிமுகம்.

E-mail Print PDF

- என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பது பாரதியார் வாக்கு. மானிடவாழ்வில் தாய்க்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. முற்றும்; துறந்த முனிவர்களும் தாயைப் போற்றியுள்ளனர். அத்தகைய தாய்க்கு அடுத்தபடியாகப் போற்றப்படவேண்டியது  ஒருவர் பிறந்த நாடாகும். தேசப்பற்று,  ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று எல்லோருக்கும் இருக்கவேண்டிய  ஒன்றாகும். ஆனால் அப்பற்று  மற்றைய இனத்தவரையோ மற்றைய ஊரவர்களையோ துன்புறுத்துவதாகவும் தாழ்த்துவதாகவும் அமைந்துவிடக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை  நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள்  பிரதேச வரலாற்றாய்வுகள், இடப்பெயர் ஆய்வுகள் என்பன முக்கியமானவை.  இவ்வாய்வுகள்  மொழியியல், வரலாறு, தொல்பொருளியல், நிலநூல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகின்றன. மக்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அறியவும் இவ்வாய்வு துணைசெய்கின்றது. பல்லாண்டு காலமாக ஊரின் சிறப்புப் பற்றிக் கூறும் வழக்கம் தமிழ்மொழியில் இருந்து வந்துள்ளதை நாம் காண்கிறோம். பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்ககால நூல்கள் நகர்கள் பற்றிக் கூறுவனவாகும். ஊரின் அமைப்பு, மக்களின் தொழில்வளம், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சிறப்பு ஆகியவை பற்றிய பல செய்திகளை இந்நூல்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சிற்றிலக்கிய வகைகளான ஊர் விருத்தம், ஊர்வெண்பா என்பனவும் ஊரின் வரலாறு பற்றிக் கூறுவனவாகும். பாட்டுடைத்தலைவன் வாழ்ந்த ஊரின் சிறப்பினை பத்து ஆசிரிய விருத்தங்களால் சிறப்பித்துப் பாடப்பெறுவது  ஊர்விருத்தம் என்பார்கள். ஒரு  ஊரினைப் பத்து வெண்பாக்களால் சிறப்பித்துக் கூறுவது  ஊர் வெண்பா எனவும் அறியப்படுகின்றது.

Last Updated on Thursday, 13 March 2014 20:08 Read more...
 

எழுத்துப்பறவை ஒன்று சிறகசைத்தது விண்ணோக்கி: ந,பாலேஸ்வரி

E-mail Print PDF

இலங்கை நாவல் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் ந.பாலேஸ்வரி.அந் நாட்களில் மித்திரன், ஜோதி, தினகரன், ஈழநாடு, கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவை, சுடர், சிரித்திரன், கவிதை உறவு, தமிழ்மலர், ஒற்றைப்பனை, திருகோணமலை எழுத்தாளர் சங்கம் மலர், சுதந்திரன் போன்ற பல அச்சு ஊடகங்களில் சிறுகதை, நாவல்,கட்டுரை என எழுதிவந்தவர்.இன்றுவரை அவரை நாவல் ஆசிரியராகவே அனைவர்க்கும் தெரியும்.அவர் சிறந்த பேச்சாளர்.சிரித்திரன் ஆசிரியர் கூட அவரின் எழுத்தை சிலாகித்துப் பேசியதை கேட்டிருக்கிறேன்.

இவரின் எழுத்தில் லக்ஸ்மி,ரமணிச்சந்திரன் போன்றோரின் சாயல் இருப்பதாகக் கூறுவர்.ஒருமுறை திரைப்படம் சார்ந்து  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவரின் நாவலைப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசித்தோம்.அப்போது செங்கை ஆழியானின் யானை எனும் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொண்டதாகவும்,வனபரிபாலனச்  சட்டம் இடம் கொடுக்காததால் அது கைவிடபட்டதகவும் சொன்னார்கள்.பிறகு காலம் எம்மை மாற்றிவிட அது முடியாது போயிற்று. எளிமையாக வாழ்ந்தவர்.தனது சேகரிப்புகளெல்லாம் அழிந்துவிட்டதாகவும் சொன்னார்.இவரின் தந்தையின் தமிழ்ப்பற்றும்,தந்தையாரின் தம்பி திருகோணமலையின் பிரபல எழுதாளராகவும் இருந்ததும் இவரையும் அதுறை நாடிச் சென்றதாக இருக்கலாம்.ஆரம்பத்தில் தந்தையாரின் பெயரான பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரையும் இணைத்தே எழுதினார்.பின்னர் திருமணமாகியதும் கணவனின் பெயருடன் இணைத்து தொடர்ந்து எழுதினார்.

Last Updated on Friday, 28 February 2014 20:36 Read more...
 

CMR: "அண்ணை றைற்" புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் காலமானார்!

E-mail Print PDF

கே.எஸ்.பாலச்சந்திரன்; நன்றி - வடலி- 27 பெப்ரவரி 2014,  கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன்  இன்று (26.02.14) கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார்.  10 ஜூலை 1944 கரவெட்டியில்  பிறந்து இணுவிலில் புகுந்து; பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார். உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்த இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடிய கே.எஸ்.பாலச்சந்திரன் ஏறத்தாள 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்திருந்தார்.  தணியாத தாகம்  என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி  நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய 'புரோக்கர் பொன்னம்பலம்' என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

Last Updated on Thursday, 27 February 2014 04:40 Read more...
 

திருக்குறளும் உரை ஆசிரியர்களும்

E-mail Print PDF

திருக்குறளும் உரை ஆசிரியர்களும்இருபதாம் நூற்றாண்டில்  திருக்குறள் பற்றிய ஆய்வில்   பெரும் புரட்சி ஏற்பட்டது. குறள் பற்றி நூற்றுக்கும் மேலான  நூல்கள்  வெளிவந்தன. அய்ம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் குறள் மொழிபெயர்க்கப் பட்டது. நூற்றுக்கணக்கான உரையாசிரியர்கள் குறளுக்குப் புத்துரையும் தெளிவுரையும் கண்டனர்.  திருக்குறளுக்குப் பல சிறப்புக்கள் இருக்கின்றன. இந்த சிறப்புக்கள் காரணமாகவே திருக்குறள் காலம் தோறும் கற்றோரால் போற்றி வரப்பட்டுள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல்.  அதில் அய்ம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.  திருக்குறளின் முதல் பெயர்  முப்பால். பின்னால் வந்தவர்களே அதன் ஆசிரியரின் பெயரை நூலுக்கு வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு குறளும்  இரண்டு அடிகள்,  ஏழு சீர் களைக்  கொண்டது. திருக்குறளில்  இடம்பெறாத இரு சொற்கள்     -     தமிழ், கடவுள். திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்  -   மணக்குடவர்.  முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்   -    ஜி.யு. போப். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு.  திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் (10 ஆம் நூற்றாண்டு) உரை வழியாகவே. பரிமேலழகரின் உரை  பத்தாவது.  மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.

Last Updated on Monday, 17 February 2014 22:27 Read more...
 

நிவேதா உதயாராஜனின் சிறுகதைகள் மீதானதொரு பார்வை

E-mail Print PDF

நிவேதா உதயாராஜன்சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து வருகின்றன என்றே சொல்லலாம். இன மோதல்களில் சிதறுண்ட மக்கள் பல நாடுகளில் வாழும் நிலையில் வாழ்வின் சோகம்,யுத்த நோவுகள்,குடும்ப சிதைவுகள்,ஒன்றினைவுகள் எல்லாம் இன்னும் கைகளுக்குள் வராத சூழலில் பலர் எழுத்தை தம் வடிகாலாக்கினர். பழையவர்களுடன்  புதியவர்களும் இணைந்துகொண்டனர். இதற்கு புலம்பெயர் சூழலில் வானொலிகளின், தொலைக்காட்சிகளின், அச்சு ஊடகங்களின் வருகை பலரையும் உள்வாங்கும் களமாகவும் ஆகிவிட்ட நிலையில் சிறுகதைகள் எழுதும் பலரையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலகுவாக வாசிக்கும் சூழலும், இங்குள்ள கல்வி,நண்பர்களின் தொடர்பு கதை வடித்தல் அவர்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தவும் செய்வதை மறுக்கமுடியாது.

Last Updated on Tuesday, 04 February 2014 22:17 Read more...
 

விளம்பர உத்திகள்!

E-mail Print PDF

விளம்பர உத்திகள்!1.0. ‘உத்தி’ என்பது இல்லையென்றால், வாழ்க்கையே இல்லை எனுமளவிற்கு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது. அந்த வகையில், விளம்பரம் என்பது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் வணிக உத்திகளில் ஒன்றாகும்.

1.1. உத்தி  விளக்கம்:
 உத்தி என்பதற்கு அகராதிகளும், அறிஞர்களும் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றனர். உத்தி என்வபது கலை ஆக்க முறையாகும். ஒன்றைச் சொல்ல, ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல செயற்கையாகக் கலை நுணுக்கத்துடன் விளம்பரங்களில் அமைக்கும் முறையே உத்தியாகும்.  ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பம், விரைவூக்கம், முனைப்புப் போன்றவற்றை ஏற்படுத்த கவர்ச்சியான அம்சங்களை விளம்பரங்களில் புகுத்துவதே உத்தி எனப்படுகின்றது.  தொல்காப்பியரும், நன்னூலாரும் பல்வேறு உத்திகளைக் கூறுகின்றனர்.

1.2. விளம்பர உத்திகள் 
 விளம்பர உத்திகளை, காட்சிப் பயன்பாட்டு உத்திகள், மொழிப்பயன்பாட்டு உத்திகள், பிற உத்திகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

Last Updated on Sunday, 02 February 2014 18:04 Read more...
 

ஆய்வு: பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும்

E-mail Print PDF

முன்னுரை
manikandan_cd.jpg - 22.36 Kbதமிழின் உயர்வை உலகறியச்செய்த இலக்கியங்களுள் சங்க இலக்கியம் முதன்மையான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. அத்தகு சிறப்புப்பொருந்திய சங்க இலக்கியத்தில், எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றி பாடப்பட்டுள்ள இரண்டு நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்தாகும். இந்நூல் சேர அரசர்களின் வாழ்வியல் பண்புகளை எடுத்தோதும் ஒப்பற்ற இலக்கியம். இதனை கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியை திருமதி காஞ்சனா அவர்களால் எளிய மலையாலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது சிறப்பான ஒன்று.

நூல் அமைப்பு
பாடாண் தினையில் அமைந்த 80 பாடல்களைக் கொண்டது. இதில் எட்டு சேர வேந்தர்களைப் பற்றி குமட்டூர்க் கண்ணனார், பாலைக்கவுதமனார், காப்பியாற்றுக்காப்பியனார், பரணர், காக்கைப்பாடினியார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் என எட்டு புலவர்கள் பாடியுள்ளனர். 

Last Updated on Saturday, 01 February 2014 23:40 Read more...
 

ஆய்வு: முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்

E-mail Print PDF

முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -தமிழ் மரபிலக்கணங்களை ஆய்வறிஞர்கள் அகத்தியம், தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோகவிவேகம் என நான்கு மரபுகளாக இனங்காண்கின்றனர். இவ்வகைப் பிரிப்புமுறைகள் இலக்கண உருவாக்க நோக்கம், புறக்கட்டமைப்பு, முன்னோர் நூலைப் பின்பற்றும் பொதுமரபு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன எனலாம். தமிழ் மொழிக்குரிய முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், அதன் மரபாக்கம் குறித்தும் விளக்க முனைகின்றது இக்கட்டுரை.

தமிழ் நெடுங்கணக்கு:  தமிழ் மொழிக்குரிய நெடுங்கணக்குகள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தியேழு என ஆரம்பக்கல்வியில் புகட்டப்படுகின்றது; புகட்டப்பெற்று வருகின்றது. இந்நெடுங்கணக்குகளை மரபிலக்கணிகள் முதல், சார்பு எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இவற்றுள் முதலெழுத்து விளக்கமுறைகளில் மரபிலக்கணிகளிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. அஃதியாங்கெனின் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) எனக் கருதியதை, முதல் எழுத்துகளுடன் இணைத்துப்பார்ப்பதேயாம்...மேலும் வாசிக்க

 

Last Updated on Sunday, 19 January 2014 19:37
 

எழுத்தாளர் அன்புமணி (இராசையா நாகலிங்கம்) மறைவு!

E-mail Print PDF

எழுத்தாளர் அன்புமணி (இராசையா நாகலிங்கம்) இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவரும், சிறந்த சஞ்சிகையாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி நின்றவருமான அன்புமணி (இராசையா நாகலிங்கம்) அவர்கள் இயற்கை எய்திய செய்தி மனதை உலுக்கி நின்றது. இப்போது தான் பேசினோம். அதற்குள்... மனம் கவலை கொள்கிறது. சிறுகதையாளனாக, நாவலாசிரியனாக, கட்டுரையாளனாக, விமர்சகராக, நாடக ஆசிரியராக, நடிகனாக, நாடக இயக்குனராக, இதழாசிரியனாக, நல்ல நேர்காணலாளராக, நண்பனாக வலம் வந்தவர். 06/03/1935இல் ராசையா/தங்கமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். தமிழின் மீதான அளப்பரிய ஈடுபாடே அவரின் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களாக வைத்து அழகு பார்த்தார். மட்டக்களப்பு ஆரையம்பதி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, ஆரையம்பதி சிறி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியை முடித்தபின் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பயின்றார்.அந்த நாளைய கல்வித் தராதரக்(எஸ்.எஸ்.சி) கல்வியை கற்று முடித்தவர் லிகிதராக,உதவி அரசாங்க அதிபராக,உள்துறை உதவி செயலாளராகவும், சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி அவர்களின் செயலாளராகவும் பணி புரிந்தார். இவரின் படைப்புக்களை மலர், தினகரன், கல்கி, செங்கதிர், ஞானம், தாரகை, வீரகேசரி, சாளரம், வெளிச்சம், தொண்டன்,     எனப் பல அச்சு ஊடகங்களும், ஒலி/ஒளி  ஊடகங்களும் தாங்கி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.செங்கதிரின் வளர்ச்சியிலும் ஊக்குசக்தியாக இருந்திருக்கிறார். மனித நேயம் மிக்கவர்.எப்போது நான் தொலைபேசியில் அழைத்தாலும் அன்பாக பேசி என்னைக் கவர்வார்.ஆரம்பத்தில் 'மலர்' எனும் இலக்கிய சஞ்சிகையை நடத்தினார்.பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.இலக்கிய அனுபவம்,ஆளுமை மிக்கவர்.செ.யோகநாதனின் 'தோழமை என்றொரு சொல்' மலர் வெளியீடாகவே வெளிவந்தது.

Last Updated on Tuesday, 14 January 2014 21:59 Read more...
 

இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

E-mail Print PDF

 - *இது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள குறுநூல் வரிசையில் பிரசுரமாகியுள்ளது. 100க்கும் மேற்பட்ட குறுநூல்கள் 10 ரூபாய், இருபது ரூபாய் அதற்குட்பட்ட விலைகளில் பலதரப்பட்ட சமூக இலக்கிய கருப்பொருள்களில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் இத்தகைய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. நூல்கள் வேண்டுவோர் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ஐ தொடர்புகொள்ளவும். -

இலக்கியம் மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு

latha ramakrishnanஇலக்கியம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும், மனித வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கினைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம் விளங்க வேண்டும் என்றும், இவ்விரண்டு பிரதிபலிப்புகளும் கலந்ததே இலக்கியம் என்றும் நம் வாசிப்பனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறோம். எழுத்தின் வலிமை எல்லோருக்கும் தெரியும். சிறந்த நேர்மையான படைப்புகள் பல சமூகத்தில் சீரிய மாற்றங்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கின்றன; இருந்துவருகின்றன.

உண்மையின் அடிப்படையில் உருக்கொள்வதுதான் புனைவு அல்லது கற்பனை. உலகில், காலங்காலமாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பு என்பது நடப்புண்மை. எனில், அவர்களைப் பற்றிய சித்திரிப்புகள் இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளனவா? உள்ளது எனில் எப்படிப்பட்ட சித்தரிப்புகள்? இலக்கியப் படைப்புகளில் பண்டைய இலக்கியந்தொட்டு சமகாலஇலக்கியம் வரை, உள்ளூர் இலக்கியம் முதல் உலகளாவிய இலக்கியம் வரை எத்தனை கதாபாத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

Last Updated on Sunday, 12 January 2014 22:00 Read more...
 

ஆய்வு: இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்க வரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்

E-mail Print PDF

மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,மிழ்மொழி பன்னெடுங்கால வரலாற்றையும் இருத்தலையும் இலக்கிய இயங்கியலையும் கொண்ட மொழி எனும் கருத்தியலுக்குச் சான்றாகத்திகழ்வனவற்றுள் ஒன்றாக விளங்குவது முச்சங்க வரலாறும் ஆகும். இச்சங்கங்கள் குறித்து இறையனார் அகப்பொருளுரை சில கருத்தியல்களை முன்வைக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியம் சங்கங்கள் குறித்துச் சிலகருத்தியல்களை முன்வைக்கும் பொழுதும் இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் கருத்தியல்களே ஆய்வாளர் பலராலும் விவாதப்படுத்தப் பெறுகின்றன. இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் சங்கங்கள் குறித்த கால எல்லை வரையரையும் வீற்றிருந்த மன்னர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை, முதலானவற்றின் மிகைப்படுத்தப்பட்ட குறிப்புகளே இவ்விவாதங்களுக்கான காரணிகளாகின்றன. சங்கங்கள் குறித்த பதிவுகள் உண்மை என நிறுவுவோர் தங்களுக்கு ஆதாரமாக விளங்கும் சான்றுகளைக் கொண்டும் அவை உண்மையான நடப்பிலுக்குப் புறம்பானவை எனக் கருதுவோர் தங்களுக்குரிய ஐயப்பாடுகளைக் கொண்டும் விவாதித்து வருகின்றனர்.

Last Updated on Wednesday, 08 January 2014 22:54 Read more...
 

ஆய்வு: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு

E-mail Print PDF

1.0. முன்னுரை

- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா? அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா? எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அவ்விரு கவிஞர்களின்  சிறப்புகளை,

1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு
2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள்   என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.

Last Updated on Sunday, 05 January 2014 23:36 Read more...
 

ஆய்வு: மகாகவிபாரதியாரின் திருநெல்வேலி பள்ளிநாட்கள்

E-mail Print PDF

- முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி], திருநெல்வேலி -மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

Last Updated on Thursday, 02 January 2014 20:36 Read more...
 

ஆய்வு: திருக்குறள் அதிகாரப் பெயர்களும் தெலுங்கு மொழிப் பெயர்ப்பும்

E-mail Print PDF

திருக்குறள் அதிகாரப் பெயர்களும் தெலுங்கு மொழிப் பெயர்ப்பும்திருக்குறள் அதிகாரப் பெயர்களும் தெலுங்கு மொழிப் பெயர்ப்பும்உலகறிந்த திருக்குறள் பல்வேறு உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப் பட்டுள்ளது.  அவற்றில் திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்த தெலுங்கு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலின் தன்மைகளையும், சிக்கlல்கள் மற்றும் தீர்வுகளையும் எடுத்துக்கூறும் வகையில் இக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. ..... கட்டுரை முழுமையாக இங்கே

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 02 January 2014 19:48
 

ஆய்வு: வினைவயிற்பிரியுமுன் : தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்

E-mail Print PDF

ச.பார்வதி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி –       கற்புவாழ்க்கையில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரியக்கூடிய சூழல்கள் நேரிடும். அப்படி தலைவன் தலைவியைவிட்டு பிரியக்கூடிய பிரிவுகள் வேந்தன் பொருட்டுப் பிரிவுää பொருள்வயிற்பிரிவு என இருவகைப்படும். ‘வினையே ஆடவற்கு உயிரே’ என்பதால் வினையின் அவசியத்தைத் தமிழர் உணர்ந்திருந்தமையைக் கற்பு வாழ்க்கை குறித்த  சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன.  இவ்வகையில் சங்க அகஇலக்கியப் பாடல்களுள் அடங்கும் கற்பு பற்றிய பாடல்களுள் ‘வினைவயிற் பிரியுமுன்’ கூற்று நிகழும் பாடல்களைத் தொல்காப்பியச் செய்திகளுடன் ஒப்பிட்டு இவ்வியல் ஆராய்கிறது.  வினை மேற்கொள்வதற்குமுன் பிரிந்தால் ஏற்படும் துன்பம் கண்டு கலங்கி தலைவன், தலைவிää தோழி ஆகிய மூவரும் பேசுவர்.  வினைவயிற்பிரியுமுன் தான் மேற்கொள்ள இருந்த வினையைத் தவிர்தல் வேந்தற்குற்றுழி பிரிவில் நிகழாது. பொருள்வயிற் பிரிவிலேயே தவிர்தல் நிகழும்.....மேலும் வாசிக்க

Last Updated on Monday, 16 December 2013 21:20
 

'கரிகாலன் விருது' பெறும் ஜெயந்தி சங்கரை வாழ்த்துகிறோம்!

E-mail Print PDF

ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலுக்குக் கரிகாலன் விருதுமுல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் தனக்கென முத்திரை பதித்து எழுதி வருபவர் திருமதி ஜெயந்தி சங்கர். கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை, நாவல் என இவரின் இலக்கியம் விரிகிறது. தமிழக மதுரையில் 1964இல் பிறந்தவர்.சிங்கப்பூரில் வாழ்கிறார். மதுரை ஹிந்து சினீயர் செகண்டரி பள்ளி,சிதாலக்ஸ்மி ராமசாமி கல்லூரி, பெசண்ட்தியாசோபிகல் பள்ளி ஆகியவற்றில் பயின்று இன்று பி.எஸ் சி பிசிக்ஸ் பட்டதாரியாகவும், பகுதி நேர மொழிபெயர்ப்பாளராகவும், முழுநேர எழுத்தாளராகவும் நமக்குத் தெரிந்திருக்கிறார். நாலேகால் டாலர், பின்சீட், நியாயங்கள் பொதுவானவை, மனுஷி, திரைகடலோடி, தூரத்தே தெரியும் வான்விளிம்பு,வாழ்ந்து பார்க்கலாம் வா,நெய்தல், மனப்பிரிகை, குவியம், ஏழாம் சுவை, பெரும் சுவருக்குப்பின்னே, சிங்கப்பூர் வாங்க,ச்சிங்மிங், கனவிலே ஒரு சிங்கம், முடிவிலும் ஒன்று தொடரலாம், மிதந்திடும் சுயபிரதிமைகள், சூரியனுக்கு சுப்ரபாதம்,இசையும் வாழ்க்கையும், மீன்குளம் எனப் பல சிறுகதை,மொழிபெயர்ப்பு,சிறுவர் இலக்கியம், நாவல், கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

Last Updated on Monday, 16 December 2013 20:28 Read more...
 

மக்களாற்றுப்படையின் அமைப்பு

E-mail Print PDF

- சு.சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி –ஆற்றுப்படை இலக்கியம் வளர்வதற்கு காரணம் அக்காலச் சூழலே காரணமாகும். ஏனெனில் சங்க காலம் மன்னரின் ஆட்சிகாலம் என்பதால் அவை சமூக உணர்வு நோக்கோடு செயல்பட்டது. மன்னனுக்காக சமுதாயமும் வாழ்ந்த காலம் சங்ககாலம். மன்னர்கள் வீரம் கொடை என்ற இரண்டையும் உயிராக மதித்து வாழ்ந்துள்ளார்கள். ஆகையால் கலைஞர்கள் மன்னரிடம் செல்லும்போது அக்கலைஞர்களை மன்னாகள்; ஆதரித்துப் போற்றியுள்ளனர். இருவரிடையே இணக்கமான நட்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் போற்றி வாழ்ந்தமையால் ஆற்றுப்படை இலக்கியம் தோன்றலாயிற்று. சங்ககால ஆற்றுப்படைக்கு பின்னர் எழுந்தது பிற்கால ஆற்றுப்படை. கால மாற்றத்திற்கேற்ப அறிவியலின் பரிமாண வளர்ச்சி போன்றுää இலக்கியத்திலும் காலத்திற்கேற்றவாறு பாடுபொருளில், மாற்றத்தினையும் வளர்ச்சியினையும் பார்க்க முடிகிறது. இவ்வகையில் வளர்ந்தது தான் பிற்கால ஆற்றுப்படை....மேலும் படிக்க

Last Updated on Thursday, 12 December 2013 01:41
 

ஆய்வு: வரைவுகடாதல்: தொல்காப்பியமும் அகநானூறும்

E-mail Print PDF

த. முத்தமிழ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-தோழி தலைவியைத் தலைவன் வரைந்துகொள்ளாது காலந்தாழ்த்தும் சூழலில் தலைவனிடம் தலைவியை வரைந்து கொள்ளுமாறு பல்வேறு காரணங்களைக் கூறியும் தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளைக் (வெறியாட்டுää இற்செறிப்பு, அலர், தலைவனையே எண்ணி தலைவி மெலிதல், வருந்துதல்) கூறியும் வரைவினை வேண்டுவாள். இது ‘வரைவு கடாதல்’ ஆகும். இவ்வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்திலும் எட்டுத்தொகை அகநூல்களுள் ஒன்றான அகநானூற்றிலும் எவ்வாறு அமைந்துள்ளது என்றும்,  அகநானூற்றில் அமைந்துள்ள வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்துடன் எவ்வாறு பொருந்தியும் மாறுபட்டும் அமைந்துள்ளது என்றும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. “வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்: கடாவல் -திருமணத்தில் செலுத்தல்”1 என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழியகராதி குறிப்பிடுகிறது. மு. இராகவையங்கார் வரைவுகடாதல் என்பதற்கு, “தலைவன் இருவகைக்; குறிகளிலும் பலகாலும் வந்தொழுகும் இடத்து, இக்களவு வெளிப்படச்; சுற்றத்தார் இற்செறிப்பரோ என்றும், வழியாலும் பொழுதாலும் தலைவற்கு ஏதம் வருங்கொல் என்றும்; தோழி அச்சமுற்று, இவ்வொழுக்கமொழுகல், நுங்குடிப் பிறப்புக்குஞ் சிறப்புக்கும் பொருந்தாமையின், இனி நீவிர் இவளை மணந்து கொள்வதே தகுதியென்று தலைவனை வரைவுகடாவத் தொடங்குவாள் (வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்)”2 என்று விளக்கமளிக்கின்றார்.. ... மேலும் வாசிக்க

Last Updated on Thursday, 12 December 2013 00:35
 

ஆய்வு: காலந்தோறும் பெண்ணடிமை : சூழல் காரணிகள்

E-mail Print PDF

முன்னுரை

- முனைவர் சொ.சுரேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி - உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால சமூகத்தினை இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது. நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும், சிலப்பதிகாரத்தில் பெண் விற்கப்படுதலையும் பற்றி ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Wednesday, 11 December 2013 23:53 Read more...
 

ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்1.0 முன்னுரை

தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Read more...
 

ஆய்வு: கேடு

E-mail Print PDF

முகப்பு

- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

அம்மும்மூர்த்திகளுள் கேடுகள் தரக்கூடிய செயல்பாடுகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறும் போக்கு திருவள்ளுவரிடமும் வேமனவிடமும் காணப்படுகின்றது. ஆனால், அக்கேடுகள் எவை என நீண்டதொரு பட்டியலைத் தருவதில் சர்வக்ஞர் திகழ்கிறார். அவ்வாறு திகழ்வதற்கும் ஒரு காரணம் உண்டு. கேடுகளாக அறியக்கூடியவற்றை அனைத்தையும் உவமைப்படுத்திக் கூறினால் அது விரியும். ஆகையால் அவர் சுருக்கித் தொகுத்து விளக்கியுள்ளார். இத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

Last Updated on Wednesday, 11 December 2013 23:53 Read more...
 

“ஆய்வு: திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனைகள்“

E-mail Print PDF

முன்னுரை

திருவள்ளுவர்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்ஒழுக்கநெறி சார்ந்த சமண பௌத்த சமயங்களின் வரவால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழில் தோன்றின.  அப்பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் நீதிநூல்களாய் அமைந்தன.  கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, காமம் இன்மை, கள்ளாமை எனும் பஞ்சசீலக் கொள்கைள் இவ்விலக்கியங்களால் புதிய கருத்தாக்கமாய் முன்நிறுத்தப்பட்டன.  அக்காலப் புலவர்கள் மருத்துவர்களாகவும், இருந்ததால் உடல்நோயை, உள்ள நோயை நீக்குவதற்கு இலக்கியத்தையே மருந்தாகக் கருதினர்.  பரத்தமை ஒழுக்கம், கள் அருந்துதல், அளவுக்கதிகமாய் உணவு அருந்துதல் போன்றவற்றை நோய்க்கான காரணிகளாகச் கண்டு, எளிமையான யாப்பமைப்பில் உடல், உள்ள நோயை நீக்க இலக்கியங்கள் படைத்தனர்.  வாதம், பித்தம், கபம் எனும் மூன்றே நோய்களுக்குக் காரணமாக அப்புலவர்கள் கண்டனர்.

 “ஊணப்பா உடலாச்சு உயிருமாச்சு
 உயிர் போனாற் பிணமாச்சு உயிர்போ முன்னே
 பூணப்பா வாத பித்த சேத்து மத்தாற்
 பூண்டெடுத்த தேகவளம் புகலுவேனே“

Last Updated on Wednesday, 11 December 2013 23:54 Read more...
 

ஆய்வு: சங்காலப் பெண்பாற் புலவர்களின் உயரிய ஆளுமைகள்

E-mail Print PDF

முன்னுரை

அவ்வையார்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

Last Updated on Wednesday, 11 December 2013 23:54 Read more...
 

ஆய்வு: பாரதியின் மரபும் மரபு மாற்றமும்

E-mail Print PDF

முன்னுரை

மகாகவி பாரதிபேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்நூற்றாண்டுகள் வாழும் வரங்கேட்ட மகாகவி பாரதி, இம்மண்ணில் வாழ்ந்தது 39 ஆண்டுகளே! புதுக்கவிதையின் பிதாமகனாக, 24 வயதில் அரசியல் பார்வைகொண்ட பத்திரிகையாளராக, சமுதாய மாற்றம் கண்ட சமூக சீர்த்திருத்தப் போராளியாக மகாகவி பாரதி திகழ்ந்தார்.  பிராமண சமுதாய மரபுக்கு உட்பட்டு ஏழுவயதில் (1889) உபநயனம் மேற்கொண்டு, 14½ வயதில் அச்சமுதாய மரபுக்கு உட்பட்டு 7 வயதுச் செல்லம்மாவைப் பால்ய திருமணம் செய்து கொண்ட பாரதியின் வாழ்வில் 1898ஆம் ஆண்டு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது.  அவ்வாண்டின் ஜீன் மாதத்தில் பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் இறப்பைத் தழுவ, பாரதி காசிக்குக் கிளம்புகிறான்.  அத்தை குப்பம்மாளுடன் காசியில் வசித்த பாரதி, அலகாபாத் சர்வகலா சாலையில் பிரவேசத்தேர்வில் தேர்வாகி, காசி இந்து கலாசாலையில் சமஸ்கிருதம், இந்தி மொழிகள் பயின்றார்.  1898 – 1902 வரை நான்கு ஆண்டுகள் காசியில் வசித்த பாரதி, மரபு மாற்றவாதியாக உருமாறினான்.  கம்பீரமான தலைப்பாகை அணிந்தான்.  திறந்த மார்பும் பூணூலோடும் இருப்பதற்குப்பதில் பஞ்சகச்சமும், கோட்டும் அணிந்தான், மழித்த மீசையோடிருக்க வேண்டிய முகத்தில் கம்பீரமான மீசை வைத்தான்.  1882 – 1901  வரை முதல் 20 ஆண்டுகள் பாரதி மரபு சார்ந்து வாழ்ந்ததாகவும், 1902 – 1921 வரை 19 ஆண்டுகள் அனைத்து மரபுகளையும் மாற்றி புதிய மரபு அமைத்ததாகவும் பாரதியைப் பகுத்துப் பார்க்கலாம்.  இக்கட்டுரை பாரதி கட்டிக்காத்த மரபையும் மரபு மாற்றத்தையும் விளக்க முயல்கிறது.

Last Updated on Wednesday, 11 December 2013 23:55 Read more...
 

பயனுள்ள மீள்பிரசுரம்: பேராசிரியர் நா.தர்மராஜன்!

E-mail Print PDF

பேராசிரியர் நா.தர்மராஜன்!முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு எளிய கிராமத்துச் சிறுவனுக்கு தமிழ் வழியாக என்ன வாசிக்க கிடைத்திருக்கும்? முதலில் ராணி, தேவி, கல்கண்டு. பின்னர் மெல்ல குமுதம், கல்கி, விகடன். அவற்றின் வழியாக சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான தொடர்கதைகள். அவற்றில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் வரும் கட்டுரைகள். அவற்றின் வழியாக தெரியவரும் உலகம் ஒரு உள்ளங்கைக் கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வது போன்றது. அவ்வளவுதான். அதற்குமேல் அவனை தற்செயல்கள் உந்திச்சென்று எங்காவது சேர்ப்பித்தால் ஒழிய அவனுக்கு இன்னொரு உலகம் அறிமுகம் ஆகப்போவதில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த உலகம் விரிவடையப்போவதில்லை. மெல்ல சலித்து அவன் தன் அன்றாட வாழ்க்கையின் முடிவில்லா அலைகளில் மூழ்கி மறைந்து போய்விடுவான். இந்த ஒற்றைப்பெரும்பாதைக்கு மாற்றாக அன்று இருந்த ஒரே சிறுபாதை சோவியத் நூல்களினால் ஆனது. சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகம், முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் ஓர் ஆர்வமுள்ள தொடக்க வாசகனுக்கு  அவனுடைய இளமையை சவாலுக்கு அழைக்கும் அற்புதமான பாதை ஒன்றை அறிமுகம் செய்தன. பேரிலக்கியங்களின் ஒளிமிக்க கனவுகளின் வழியாக அவனை நடத்திச்செல்லும் பாதை.

Read more...
 

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

E-mail Print PDF

ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. -குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. -

உங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள் மற்றும் கால இடைவெளி பலவற்றைக் கடந்து கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத் தாண்டி சர்வதேச அளவில் கதையை விரிவாக்கிச் செல்ல நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

Last Updated on Saturday, 12 October 2013 19:31 Read more...
 

பயனுள்ள மீள்பிரசுரம்: எனதருமை டால்ஸ்டாய்

E-mail Print PDF

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும்ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும். அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே, ஒவ்வொரு நாவலின் பின்னேயும் எழுத்தாளர்கள் வெளியே பகிர்ந்து கொள்ளாத கஷ்டங்கள். நெருக்கடிகள்.  நாவலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவங்கள். நிஜமனிதர்களின் சாயல்கள் என வாசகஉலகம் அறியாத எவ்வளவோ இருக்கின்றன. அவை எழுத்தாளனின் ரகசியங்கள். அவற்றை தனக்குள்ளாகவே புதைத்துவிடவே எழுத்தாளன் எப்போதும் விரும்புகிறான், அரிதாக சிலர் தனது நாவலின் அந்தரங்கக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்,  பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை புகழ்ந்து பேசப்படுகிறது, தோற்ற குதிரை புறக்கணிக்கப்படுகிறது ஆனால் ஒடி வலித்த அதன் கால்களின் வேதனையை ஒருவருமே கவனிப்பதில்லை, அப்படி பட்டது தான் நாவலின் வெற்றி தோல்வியும், அதன் முன்னே எழுத்தாளின் வலிகள் கண்டுகொள்ளபடாமல் போகின்றன,

Last Updated on Sunday, 13 October 2013 21:17 Read more...
 

புனைவுக் கட்டுரை: வரகு மான்மியம்

E-mail Print PDF

1

- ஆசி கந்தராஜா -கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்!

'வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர்..., கோயில் விஷயமப்பா..., சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ...'

மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு. விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்...? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு!

கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவாறு ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று... என ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கலசங்கள் உண்டு. கலசங்களுள் வரகு, நெல்லு, சாமை, குரக்கன் போன்ற தானியங்கள் கும்பாபிஷேகத்தின்போது நிரப்பப்படும். சில கோயில்களில், வரகை மாத்திரம் எல்லாக் கலசங்களிலும் நிரப்புவார்கள். இடியையும் மின்னலையும் தாங்கும் சக்தி வரகுக்கு உண்டென்றும், அது ஒரு இடிதாங்கியாக செயல்படுமென்றும் இதற்குக் காரணம் சொல்லப்படுவதும் உண்டு. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கோபுர கலசங்களிலுள்ள தானியங்கள், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு, புதிய தானியங்கள் நிரப்பப்படும் மரபினைக் கோயில் குருக்களும் உறுதி செய்தார்.

Last Updated on Wednesday, 09 October 2013 20:54 Read more...
 

பாரதியார் நினைவாக .....

E-mail Print PDF

Last Updated on Tuesday, 10 September 2013 22:58
 

பயனுள்ள மீள்பிரசுரம்: இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய்!

E-mail Print PDF

அருந்ததிராய்யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து போயினர். கலப்பு மணம் புரிந்து கணவனைப் பிரிந்து வாழ்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததனால் இவருக்கும் ஊரின், உறவின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அருந்ததி ராய்க்கு சமூகம் எதிர் உலகமாகத்தான் முதலில் அறிமுகமாகியது. பின்னர் எல்லாவற்றையும் மீறி நீலகிரியில் பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பில் சேர்ந்தார். உடன் படித்த ஒருவரைக் காதலித்து மணந்த தால் படிப்பு பாதியில் நின்றது. அந்த வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள்தான் நிலைத்தது. அவரிடமிருந்து பிரிந்த பின்னர் “பிரதீப் கிரிஷன்’ என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து திரைப் படம் எடுத்தனர். இவ்வாழ்க்கையும் இவருக்கு நிலைக்க வில்லை. இவரின் கட்டற்ற சிந்தனை அடக்குமுறைக்கு அடங்காதவராக இவரை வடிவமைத்திருந்தது. மேலும் புரட்சிச் சிந்தனை மிக்கவராகவும் இவர் இருந்தார். இவரின் முதல் ஆசிரியரே இவரின் தாய்தான். “”உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற பாடம் அவருக்குச் சூழலே கற்றுக் கொடுத்தது. அதனால் எல்லாவற்றின்மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி படைப்புகளின் மூலம் பலரின் கவனம் பெற ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 1997-ல் அவர் எழுதிய “த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small things) என்னும் நாவல் புக்கர் பரிசினைப் பெற்றது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர்தான்.

Last Updated on Tuesday, 10 September 2013 18:15 Read more...
 

ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?

E-mail Print PDF

1.0 முகப்பு

ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.

Last Updated on Monday, 09 September 2013 22:12 Read more...
 

TheGuardian.Com: Seamus Heaney's books were events in our lives!

E-mail Print PDF

Seamus Heaney In a time of burnings and bombings Heaney used poetry to offer an alternative world; he gave example by his seriousness, his honesty, his thoughtfulness, his generosity Two years ago I invited Seamus Heaney to read at the Kilkenny arts festival in Ireland. The venue was St Canice's Cathedral, one of the most beautiful churches in Ireland. It was here almost 40 years earlier that, as a young poet, he had met Robert Lowell, who had become a friend and a mentor. Heaney admired Lowell's utter dedication to his craft, his ability to change, his absolute belief in the importance of poetry. When I suggested that Dennis O'Driscoll, who had done a book of interviews with Heaney, should introduce him on stage, Seamus said he would like that, but he would prefer it if Dennis would read as well. Dennis, he said, had done enough introducing; since he was also a poet, he should get equal billing. It was typical of Seamus's generosity. That evening, I suggested to him that he should do no signing of books after the reading, but go and have a drink with the theatre director Peter Brook, who was in Kilkenny and wanted to meet him. As we left by a side door and walked away from the church, he sighed and said that all his life after readings when everyone else was free to walk out into the world, he would spent an hour or more signing books and meeting people. He was the most tactful and careful and scrupulous of men. He used a deep-rooted conscientiousness in his work, but it also came across every time you met him. He had a way of holding back, watching every word, weighing the moment. In his public readings he had a real command; privately, he was almost shy, always thoughtful.

Last Updated on Saturday, 31 August 2013 21:32 Read more...
 

ஆய்வுக் கட்டுரை: வள்ளுவரும் சர்வக்ஞரும்: நட்புச்சிந்தனைகள்!

E-mail Print PDF

1.0 முன்னுரை
 
ஆய்வுக் கட்டுரை: வள்ளுவரும் சர்வக்ஞரும்: நட்புச்சிந்தனைகள்!மனித உறவில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு கடப்பாடு உண்டு. தாய்க்குப் பிள்ளையைப் பெற்றெடுப்பது; தந்தைக்குப் பொருளீட்டச் செல்வதும், பிள்ளைகளைச் சான்றோர்களாக்குவதும் ஆகும். இவை சமுதாயத்தில் நடக்கும் என்றும் மாறாத இயல்புகள். அதனைப் போல் நட்புக்கும் சில கடப்பாடு உண்டு . அது நட்பு உடையவர்களை நன்னெறிப்படுத்துவதும், உயர்வடையச் செய்வதும் ஆகும். ஞாயிறு எவ்வாறு இயல்பாக தோன்றுகின்றதோ அதுபோல நட்பினைப் பெறுவதற்கு யாரும் அடையாளம் காட்டத் தேவையில்லை. இயல்பாக மனத்தால் அறியக்கூடிய ஓர் உன்னத உறவே நட்பு. நட்பிற்கு இணையாக நட்பே கருதப்படுகிறது. அந்நட்புக் குறித்துத் தமிழில் வள்ளுவரும், கன்னடத்தில் சர்வக்ஞரும் எடுத்தியம்பியுள்ளனர். திருக்குறளிலும் சர்வக்ஞர் உரைப்பாவிலும் (மொழிபெயர்ப்பு) அமைந்த நட்புச் சிந்தனைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கட்டுரையை முழுமையாக வாசிக்க

Last Updated on Thursday, 01 August 2013 19:50
 

Granta.Com: Best Untranslated Writers: Shobasakthi

E-mail Print PDF

Granta.Com: Best Untranslated Writers: ShobasakthiThe Best Untranslated Writers series – in which established writers select and showcase fellow writers from their own languages who are not yet widely translated or read – began with a trio of Brazilians on the writers they love most but are yet to make the leap into English. Today V.V. Ganeshananthan introduces us to Shobaskathi, also known as Anthony X, who writes about Sri Lanka and its diaspora communities, and who was previously involved in the Liberation Tigers of Tamil Eelam. Shobasakthi is also known as Anthony X; he is an ex-militant; he is an expatriate. Based in France, he writes about Sri Lanka in Tamil, his native language (and the native language of my parents). I read Tamil, but not yet well enough to get through the original versions of his books; instead, I use popular English translations by Anushiya Ramaswamy. I finished his novel Gorilla very shortly before meeting him; I read another, Traitor, many years after that initial conversation.

Last Updated on Thursday, 25 July 2013 22:31 Read more...
 

கலை, இலக்கிய, சமூக நேசன் புலம்பெயர்ந்த பூபதிக்கு 62 வயது

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிஅருண்.விஜயராணிஇதமான   கடற்காற்று….  ஆர்ப்பரிக்கும்   கடல்… அந்தக்காற்றை   சுவாசித்தவாறும் கடலோசையை   கேட்டவாறும்   மாலையில்   சூரிய   அஸ்த்தமனத்தின் அற்புதக்காட்சியை   ரசித்தவாறும்  தனது   தாத்தா,  பாட்டி, தாய்,  தந்தை, அக்கா, தங்கை,   தம்பிமாருடன் மனிதநேயத்துடனும்   எண்ணற்ற   கனவுகளுடனும் வாழ்ந்து வளர்ந்த   இளைஞன்,   அந்தக்கடற்கரையோர   நகரத்தில் தமிழ் சார்ந்த பல பணிகளில் ஊர்மக்களுடன்   இணைந்திருந்தான். தனது   ஆரம்பக்கல்விக்கு   துணையாக   நின்ற பாடசாலையிலும் அதற்கு வித்திட்ட வெகுஜன அமைப்பான இந்து இளைஞர் மன்றத்திலும் இயல், இசை, நாடகத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக   நின்றான்.   பாடசாலை   பழைய   மாணவர் மன்றத்தை உருவாக்குவதிலும்  அதன்   ஊடாக மாணவரிடையே   ஊக்குவிப்பு   போட்டிகளை நடத்துவதிலும் உறுப்பினர்களுடன்  இணைந்திருந்தான். இவ்வாறு   இலங்கையின்   மேற்கே   தமிழ் அலைகள் ஆர்ப்பரிக்க, அதில் தன்னாற்றலால் நீச்சலிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆச்சரியப்படத்தக்கது அல்ல. உள்ளார்ந்த படைப்பிலக்கவாதி எங்கிருந்தாலும் அப்படித்தானிருப்பான். அவனுக்கு   எழுத்தின்மீதும்  வாசிப்பின்  மீதும்   பற்றுதல்  அதிகம். பெற்றவர்களின் கனவு வேறுவிதமாக இருக்க அவனோ   தனது   கனவை வேறுவிதமாக வளர்த்து நனவாக்கிக்கொள்ள முயன்றான். அவனது உழைப்பு வீண்போகவில்லை. தான் நேசித்த கடல் மாந்தர்கள்   பற்றிய கதைகளையே முதலில் எழுதி முதல் தொகுப்பிற்கு   தேசிய சாகித்திய விருதையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டான்.

Last Updated on Monday, 22 July 2013 04:08 Read more...
 

பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை

E-mail Print PDF

பிரேம்ஜி“ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம், ஆனால் உண்மையான மனிதராக முடியாது” என தனது பள்ளிப்பருவத்திலே எழுதியவர் காரல் மார்க்ஸ். சக மனிதர்கள் குறித்தும் அம்மனிதர்களின் வாழ்வுக் குறித்தும் உயரிய நிலையில் சிந்தித்து செயலாற்றியமையே வரலாற்றினுடைய மனிதராக அவர் போற்றப்படுவதற்கான அடிப்படையாகும். மனித குல வளர்ச்சிப் போக்க்pல் அறிவு என்பது சமுதாயம் சார்ந்த விடயமாகும். எனவே அவ்வறிவு எப்போதும் விஞ்ஞானம் தழுவியதாக அமைந்திருப்பதுடன் செருக்ககோ நேர்மையீனமோ இல்லாது சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதாக அது அமைந்துக் காணப்படுகின்றது. பிரம்ஜி என்ற ஆளுமையின் பணிநலன் பாரட்டு நிகழ்வு குறித்த சிந்திக்கின்ற போது மேற்கறிக்க வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

Last Updated on Tuesday, 16 July 2013 20:14 Read more...
 

பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு

E-mail Print PDF

பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு 1.0 முகப்பு
பாலவியாகரணம் தெலுங்கு மொழிக்குரிய முழுமையான இலக்கணநூலாகக் கருதப்படுகிறது. இதனை யாத்தவர் சின்னயசூரி (கி.பி. 1858). இந்நூல் இக்காலம் வரை கற்றலிலும் கற்பித்தலிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வந்துள்ளது. அதற்குக் காரணம் பழைமையைப் போற்றும் பண்பே. மேலும், இந்நூல் பயனாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுள், முந்து நூல்களின் கருத்தியல்களின் ஆட்சியே மிகுதி. அவ்வாட்சியின் விழுக்கட்டைப் பி.சா.சுப்பிரமணியனின் குறிப்புகளை முன்வைத்து மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

2.0 பாலவியாகரணமும் முந்து நூல்களும்
சின்னயசூரி, பாலவியாகரணத்தின் மூலம் தெலுங்கு எழுத்துலகை  ஒழுங்கமைவுக்கு உட்படுத்தினார். இதனை  அந்நூல் வெளிவந்தபிறகு பழைமையான இலக்கியங்களும் திருத்தம் செய்து மீள்பதிப்பாக வெளிவந்தமையின்வழிக் காணலாம்(ஆனைவாரி ஆனந்தன்:1999). அதன் பின்பு இவர் வகுத்த கோட்பாடுகளே நிலைபேறாக்கம் பெற்றன என்பதே உண்மைநிலை. ... மேலும் வாசிக்க

 

Last Updated on Monday, 01 July 2013 21:11
 

எதுவரை.நெட்: மல்லிகை’ டொமினிக் ஜீவா – அரை நூற்றாண்டுக் கால எழுத்து, இதழியல் ஊழியம்!

E-mail Print PDF

['மல்லிகை; சஞ்சிகையின் வெளியீட்டாளரும், ஆசிரியரும், எழுத்தாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்கு ஜூன் 27 அன்று வயது எண்பத்தியேழு. அவரது பிறந்த தினத்தையொட்டி 'எதுவரை.நெட்' இணைய இதழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுமாகின்றது.  - பதிவுகள் -]

தோழமைக்கும் பெருமதிப்பிற்குமுரிய டொமினிக் ஜீவா அவர்களை, அவரது அயராத உழைப்பிற்கும் அதன் சமூக முக்கியத்துவத்திற்குமாக கௌரவம் செய்து, எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துவது முக்கிய கடமை எனக் கருதுகிறோம்!  டொமினிக் ஜீவா நமது சமூக, பண்பாட்டு, எழுத்து செயற்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் மேலான பங்களிப்புடைய போராளி! காயங்களையும் வலிகளையும் தாங்கி ஓங்கி ஒலித்த குரல் ஜீவாவுடையது. ‘மல்லிகை ஜீவா” என்கின்ற ஒரு இயக்கத்திற்கு நாம் செய்ய வேண்டிய சமூகக் கடமையில் இந்த நிகழ்வு ஒரு சிறு துளியானதே! இனம், மதம், சாதி, பால், பிரதேச, மேலாதிக்க, அனைத்து வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக புகலிட நாடுகளில் மாற்றுக் குரலாக செயற்பட்டு வரும் 25 வருட வரலாற்றைக் கொண்ட ‘இலக்கியச் சந்திப்பு அரங்கு”, அதே மூல நோக்கினை தனது வாழ்நாள் இலட்சியமாகவும் நாளாந்தப் பணியாகவும் கொண்டிருந்த ஜீவா என்கின்ற அந்த மகத்தான வரலாற்று மனிதனை கௌரவிப்பதானது, எம்மில் ஒருவரை கௌரவம் செய்வது என்கின்ற அரசியல் தெளிவுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் இன்று நடைபெறுகிறது.

Last Updated on Sunday, 30 June 2013 20:41 Read more...
 

கவிதையெனும் தவளை!

E-mail Print PDF

எழுத்தாளர் ஜெயமோகன்[அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான 'பிரமிளின் தவளைக் கவிதை பற்றியதொரு புரிதல்' என்னும் எனது கட்டுரையில் 'தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அது பற்றிய ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்துள்ள பதிற் கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. -  வ.ந.கி -] ஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம். குறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது. ஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்த குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம். அப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.

Last Updated on Saturday, 22 June 2013 19:31 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் - 22: லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் தொடரும் மொழிபெயர்ப்புப் பணி: 'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைளை வெளியிட்ட ஆர்க் வெளியீட்டகத்துக்கு இங்கிலாந்தின் பேனா அமைப்பின் மொழிபெயர்ப்புக்கான விருது!

E-mail Print PDF

லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom)'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் 'ஆர்க்' வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு  இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN - UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவ்ர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.

Last Updated on Wednesday, 12 June 2013 18:01 Read more...
 

Independent publishers scoop PEN awards for translation

E-mail Print PDF
- Cheran's 'In a Time of Burning', translated from the Tamil by Lakshmi Hostrom, receives a 2013 English PEN Award for Translation. -

[Grants] Independent publishers scoop PEN awards for translation Posted May 15th, 2013 by Emma Cleave & filed under Translation. In a Time of Burning by Cheran, translated from the Tamil by Lakshmi Hostrom. Published by Arc Publications, July 2013Publishers Arc, Peirene, Haus Publications, And Other Stories, Portobello Books and Harvill Secker were all named today as recipients of English PEN’s latest series of awards for books in translation.  Alongside these five award-winners, English PEN announced a further 16 titles that will receive grants to enable publishers to bring into English outstanding writing from languages as diverse as Farsi, Tamil, Portuguese, Occitan, Hebrew, French, German and Spanish. Each year, English PEN highlights worldwide writing of exceptional literary merit and courage. The charity awards grants to support both the promotion of published titles to readers in this country and to help finance the translation of planned titles, to ensure they reach English-speaking readers around the world.
 

Last Updated on Tuesday, 11 June 2013 17:34 Read more...
 

பயனுள்ள மீள்பிரசுரம்: "புலம்பெயர் இலக்கிய' முன்னோடி ப.சிங்காரம்!.

E-mail Print PDF

எழுத்தாளர் ப.சிங்காரம்தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட்ட படைப்பாளிகளைவிட கவனிக்காமல்விட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகமென்பது பலரும் அறிந்ததுதான். ஓர் எழுத்தாளரைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து, அவருடைய படைப்புகளை அங்கீகரிக்கும்போது அவரிடமிருந்து மேலும் சில சிரத்தையானப் படைப்புகளை எதிர்பார்க்க முடியும். அந்த அங்கீகாரம் மேலும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை அவருக்குக் கொடுக்கும். காலம் கடந்து ஒருவரின் சாதனைகளைப் பாராட்டுவதும், விழா எடுப்பதும் தமிழ்ச்சூழல் கண்டிராத ஒன்றல்ல. அந்த வகையில், நிகழ்காலம் மறந்த ஓர் எழுத்தாளர்தான் ப.சிங்காரம். தான் எழுதிய இரு நாவல்களுக்காக எந்தவித அங்கீகாரமும் கோராத மகத்தான மனிதர். இவர் எழுதியது "கடலுக்கு அப்பால்', "புயலிலே ஒரு தோணி' ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே!

Last Updated on Thursday, 06 June 2013 21:44 Read more...
 

உலக நெறியான மனித நேயம்

E-mail Print PDF

- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் ஆறறிவுள்ள மனிதனுக்கு மிக முக்கியமாக வேண்டப்படுவது மனிதனால் வகுக்கப்பட்ட மனித நேயமாகும். மனித நேயம் என்பது 'மனித உலக வாழ்க்கை இயல்', 'மனித இனநலக் கோட்பாடு', 'மனிதப் பொதுமைநல இயல்', 'மனித இனப் பொதுச்சமய அமைதி', 'மனித இன இயற் பண்பாய்வுத் துறை' என்றும் பொருள்படும். மனித நேயத்துக்குரிய ஒழுக்கத் தத்துவ முறைகளை மனிதன் சிந்திப்பதாலும், வரலாறுகளைப் படிப்பதாலும், தன்னிடமுள்ள   அனுபவத்தாலும் பெற்றுக் கொள்கின்றான். இதைக் கருத்திற் கொண்ட ஆன்றோரும், சான்றோரும் அன்பு, பண்பு, சத்தியம், உண்மை, தர்மம், நேர்மை போன்ற அறநெறிகளைத் தமது இலக்கியங்களிலும், நீதிநெறி நூல்களிலும், சமய நூல்களிலும் எழுதி வருகின்றனர். மக்கள் இவற்றைப் படித்துத் தாமும் இவ்வறநெறிகளை உள்வாங்கித் தமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கின்றனர். இதனால் மக்களும் மனித நேயமுள்ளவர்களாகி அவ்வழி நின்று செயல்படுவதனால் மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வைக் காண்கின்றனர். மனித நேயம் மக்கள் மத்தியில் மிளிர்வதால் அவர்கள் மக்களையும், மற்றைய ஐயறிவுடைய உயிரினங்களையும் கட்டிக்காப்பாற்றிப் பேணி வருவதும் தெளிவாகின்றது.

Last Updated on Tuesday, 04 June 2013 22:33 Read more...
 

தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஒரு விமர்சன அறிமுகம்......

E-mail Print PDF

1. வரலாற்றுக் காட்சியான ஒரு படைப்பாக்கம்
எழுத்தாளர் தேவகாந்தன்.முனைவர் நா.சுப்பிரமணியன் நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட - கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட - வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

Last Updated on Monday, 03 June 2013 17:46 Read more...
 

அகவை எண்பத்து ஐந்தினைக் காணும் அன்பு நண்பரை அணைக்கிறேன்!

E-mail Print PDF

பொன்-பாலா என்று எம்மால் ஆசையுடன் அழைக்கப்படும் எம்இனியநண்பர் பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் 85 ஆகிவிட்டார்கள். பேராசிரியர் கோபன் மகாதேவாபொன்-பாலா என்று எம்மால் ஆசையுடன் அழைக்கப்படும் எம் இனிய நண்பர் பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் வயது எண்பத்து ஐந்தினை அடைந்துவிட்டார். குறொய்டனுக்குக் கிட்டிய 'பேர்ளி'யில் ஒரு கிறீத்தவக் கோவிலில் கொண்டாட்டம். அவரின் மூத்த மருமகன் கிருபாகரன், எமக்குத் தொலை பேசியில் அழைப்பு விடுத்தார். 2013 மேமாதம் 27 திங்களில் அந்தஒன்றுகூடல். என் மேசைத்தொலை பேசிக்குக் கிட்டப் பேனா, கடுதாசி இருந்தபடியால் எல்லா விபரங்களையும் கேட்டு மடமடவென்று மகிழ்ச்சியுடன் குறித்தேன். (இப்போஅதைத் தேடுகிறேன்! தேடித்தேடிக் கொண்டே இவ்வாழ்த்துக் கட்டுரையை எழுதுகிறேன்!!). பொன்-பாலாவுக்கும் எனக்கும் நல்ல ஒற்றுமைகள் பல உள்ளன. . ஒன்று, நாம் இருவரும் தமிழ் கவிதையின் தாசர்கள். நாங்களும் கவிப்போம். எனது கவிதைகளை அவர் தன் இதயத்தினால் இமயத்தில் வைத்துப் பாராட்டுவார். நானும் அவரின்கவிதைகளை உடனுடன் மிகவும்மெச்சுவேன். அவரின் கட்டுரைகளில் ஒன்றை மட்டும் நான் சுருக்கி இருக்கிறேன். என் ஆங்கிலக் கவிதை ஒன்றில் மட்டும் சில தட்டெழுத்துப் பிழைகளை அவரால் திருத்த முடியவில்லை. இவை எம் தொகுப்புக் கடமைகளை ஆற்றும் போது நாம் எதிர்கொண்ட நிர்ப்பந்தங்கள்@ இன்றுமட்டும் இவை எம்மால் பேசப்படாதவை.
 

Last Updated on Sunday, 02 June 2013 23:48 Read more...
 

எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

E-mail Print PDF

- யாழ்ப்பாணப் பொது நூலகம் சிங்கள வன்முறையாளர்களால் தீவைத்து அழிக்கப்பட்ட நினைவுநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது (01.06.2013) -

N.Selvarajahநூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக்கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளாக உலகெங்கினும் உள்ள அரசியல் அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இருந்த நூல் ஒரு பிரதியோ, சில பிரதிகளோ  ஏடுகளிலும், களிமண் தகடுகளிலும் எழுதப்பட்டுப் பேணப்பட்டு வந்திருந்தன. அவற்றை அழிப்பதன் மூலம் அதிகார வர்க்கம் அதிலிருந்த கருத்துக்களை குழி தோண்டிப் புதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்று அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்காலத்திலும் இந்த நடைமுறையைக் கைக்கொள்வதினால் இவர்கள் எதைச்சாதித்து விட்டார்கள்?

Last Updated on Saturday, 01 June 2013 05:05 Read more...
 

தொல்காப்பியம் - பாலவியாகரணம் எச்சவியல் ஒப்பீடு!

E-mail Print PDF

தொல்காப்பியர்1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ்.  தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது.  இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை பெற்று விளங்குகிறது. தெலுங்குமொழி சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைச் சார்ந்தது.  தெலுங்கின் முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி (நன்னயப்பட்டு, கி;.பி.11). இந்நூலின் பெரும்பகுதி சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன்பின், பன்னூறாண்டுகள் கழித்து மாணவர்களுக்காக தெலுங்கில் பாலவியாகரணம் (சின்னயசூரி, 1858) இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் பாலவியாகரணத்திலும் எச்சவியல் இடம்பெற்றுள்ளது.  அவ்வியல்களின் கருத்தியல்களை ஒப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. [மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ] .....முழுவதும் வாசிக்க

Last Updated on Tuesday, 09 April 2013 18:40
 

தினக்குரல்.காம்: பவள விழாக்காணும் கவிஞர் இக்பால்

E-mail Print PDF

தினக்குரல்.காம்: பவள விழாக்காணும் கவிஞர் இக்பால்இன்றைய தினம் (11.02.2013) பவள விழா அகவையைத் தொட்டு நிற்கும் கவிஞர் ஏ.இக்பால் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அசைக்க முடியாததொரு ஆளுமை என்பது யாவரும் அறிந்ததே. அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மேல் மாகாணம் தர்கா நகரை புகுந்தகமாகக் கொண்டு அங்கு இற்றைவரை வாழ்ந்து வருகிறார். இலக்கியத்துறையில் தன்னை நிலைநாட்டி ஜாம்பவானாகத் திகழும் அதே நேரத்தில் கல்விப் புலத்தில் அவர் பணி இரண்டாம் பட்சமானதல்ல. அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் படிக்கும்போது அங்கு பயிற்சி ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எம்.வை.எம். முஸ்லிம், அ.ஸ.அப்துஸ்ஸமது ஆகியோரால் இனம் காணப்பட்டு வழி நடத்தப்பட்டார். அங்கு "கலாவள்ளி' என்ற கையெழுத்துச் சஞ்சிகை இவர் பொறுப்பில் நடத்தப்பட்டது. ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர் தமிழ்ப் பாட நூல் ஆலோசனை சபை உறுப்பினராக, இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராக விடுவிப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, கல்விக் கல்லூரி தமிழ்ப் பிரிவு போதனாசிரியராக பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

Last Updated on Wednesday, 27 March 2013 21:08 Read more...
 

National Post: Things Fall Apart author Chinua Achebe dead at 82

E-mail Print PDF

Chinua Achebe, the internationally celebrated Nigerian author, statesman and dissident who gave literary birth to modern Africa with Things Fall ApartChinua Achebe- March 22, 2013 - Chinua Achebe, the internationally celebrated Nigerian author, statesman and dissident who gave literary birth to modern Africa with Things Fall Apart and continued for decades to rewrite and reclaim the history of his native country, has died. He was 82. Achebe died following a brief illness, said his agent, Andrew Wylie. “He was also a beloved husband, father, uncle and grandfather, whose wisdom and courage are an inspiration to all who knew him,” Wylie said. His eminence worldwide was rivaled only by Gabriel Garcia Marquez, Toni Morrison and a handful of others. Achebe was a moral and literary model for countless Africans and a profound influence on such American writers as Morrison, Ha Jin and Junot Diaz. As a Nigerian, Achebe lived through and helped define revolutionary change in his country, from independence to dictatorship to the disastrous war between Nigeria and the breakaway country of Biafra in the late 1960s. He knew both the prestige of serving on government commissions and the fear of being declared an enemy of the state. He spent much of his adult life in the United States, but never stopped calling for democracy in Nigeria or resisting literary honours from a government he refused to accept.

Last Updated on Friday, 22 March 2013 22:03 Read more...
 

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்

E-mail Print PDF

முன்னுரை

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை.  கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி.  1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.

வண்ணதாசனும் இயற்கையும்

சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.  தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார்.  ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.

 “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
 செய்தி யாழினி பகுதியொடு
 அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1

Last Updated on Monday, 18 March 2013 23:58 Read more...
 

அந்தனி ஜீவா வின் ‘’அ.ந.க ஒரு சாகாப்தம்’ –ஒரு மதிப்பீடு

E-mail Print PDF

அந்தனி ஜீவா வின் ‘’அ.ந.க ஒரு சாகாப்தம்’ –ஒரு மதிப்பீடுஎழுத்தாளர் மேமன்கவி[அறிஞர் அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனை முன்னிட்டு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுன் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூல் பற்றிய எழுத்தாளர் மேமன்கவியின் இக்கட்டுரை பிரசுரமாகின்றது. இதனைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பிய மேமன்கவிக்கு நன்றி. -பதிவுகள்.] அ.ந.க.என நெருக்கமானவர்களால் அழைக்கப்பட்டவர்.. அவரது மறைவு நிகழ்நது சுமார் 40 வருடங்கள் கடந்து அவரை பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகள் உதிரிகளாக ஆங்காங்கே  பிரசுமாகி இருப்பினும், அவர் பற்றிய ஓரு நூல் என்ற வகையில் அந்தனி ஜீவாவின் ‘அ.ந.க ஒரு சகாப்தம்’ முக்கியமான நூலென்றே சொல்லவேண்டும். இன்றைய நமது கலை இலக்கிய சூழலில் முக்கிய தேவை ஒன்று இருக்கிறது. புதிய தலைமுறையைச் சார்ந்த கலை இலக்கிய ஈடுபாட்டாளார்களுக்கு, அவர்கள் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் நவீன கலை இலக்கிய வளர்ச்சிக்கு அஸ்திவாரமிட்டுப் போன முன்னோடிகளைப் பற்றிய அறிதலை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இந்த நூல் அந்த தேவையை நிறை வேற்றுவதில் பங்காற்றி இருக்கிறது. அந்தனியின் இந்த சிறிய நூல் அ.ந.க வை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஆய்வு செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

Last Updated on Monday, 18 March 2013 19:09 Read more...
 

தேசம்நெற்.காம்: நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு தமிழகத்தில் கௌரவம்!

E-mail Print PDF

கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர். கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர்.  சென்னை பாரதீய வித்தியா பவனில் 29.1.2013 அன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக இவ்வரவேற்புபசாரம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றான பலனை எதிர்பார்க்காமல் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்ய வேண்டும் என்ற வாக்கைத் தன் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வரும் செல்வராஜாவுக்கு இந்நிகழ்வு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிகழ்ச்சிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும். பாரதீய வித்தியா பவன் வாயிலில் நூலகவியலாளரின் புகைப்படத்தைத் தாங்கிய பாரிய வண்ணப் பதாதையொன்று “இலண்டன் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வரவேற்பு விழாவுக்கு வருகைதரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று வரவேற்றது.

Last Updated on Saturday, 16 March 2013 16:33 Read more...
 

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

E-mail Print PDF

வெங்கட் சாமிநாதன்[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ]  -  'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று.

Last Updated on Saturday, 29 September 2012 00:43 Read more...
 

பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'

E-mail Print PDF

பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' - வ.ந.கிரிதரன் -['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையினை முன்வைத்துக் கட்டுரையொன்றினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையில் எழுதியிருக்கின்றேன். 1981 அல்லது 1982ஆம் ஆண்டு வெளிவந்ததாகவிருக்க வேண்டும். அப்பொழுது அதன் ஆசிரியராகவிருந்தவர் பொறியியலாளர் பிரேமச்சந்திரன். எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரனை நான் முதன் முதலில் அறிந்துகொள்ளக் காரணமாகவிருந்ததும் அக்கட்டுரையே. 'நுட்பத்தில்' வெளிவந்த அக்கட்டுரையினை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். அதன் பின்னர் அக்கட்டுரை கைவசமில்லாத காரணத்தால் மீண்டும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் 'டொராண்டோ'வில் வெளிவந்த 'தாயகம்' (சஞ்சிகை/ பத்திரிகை)யில் எழுதினேன். பின்னர் அக்கட்டுரை 'பதிவுகள்' இணைய இதழிலும், 'திண்ணை' இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையினை எழுத்தாளர் (சீர்காழி) தாஜ் தனது வலைப்பதிவான 'தமிழ்ப்பூக்க'ளிலும் மீள்பிரசுரம் செய்து அது பற்றிய தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். பாரதியின் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 11) அக்கட்டுரை மீண்டும் பதிவுகளில் பாரதியின் நினைவுக்காகவும், ஒரு பதிவுக்காகவும் பிரசுரமாகின்றது. - வ.ந.கி]  தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்:

Last Updated on Tuesday, 11 December 2012 23:48 Read more...
 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் வெளியீடு பற்றி...

E-mail Print PDF

குடிவரவாளன் பற்றிச் சில குறிப்புகள்......

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'[வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் இந்த வருட இறுதிக்குள் தமிழகத்தில் வெளிவரவுள்ளது. அதனையொட்டி இக்கட்டுரை, ஓர் அறிமுகத்துக்காகப் பிரசுரமாகின்றது. - பதிவுகள்-] இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா 'எயார் லைன்ஸ்' எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.

Last Updated on Thursday, 07 March 2013 20:08 Read more...
 

கரிகாலன் விருது பற்றிச் சில குறிப்புகள்!

E-mail Print PDF

வே.ம.அருச்சுணன் – மலேசியாகடந்த  10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில்  ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம்  மிகச் சிறப்பாக  நடத்தியது பாராட்டுக்குரியது. இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும்  சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய  நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் போன்று நானும் மகிழ்கிறேன்.  கரிகாலன் விருது  குறித்து என் கருத்தைக் கூற விழைகிறேன். தமிழ்நாட்டிலுள்ள தஞ்சைப் பல்கலைக்கழகம் இவ்விருதினை வழங்குவதில்,எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக விளைந்ததே இந்த விருது. இதற்காகச் சங்கத்தையும் தொலைநோக்காகச் செயல்படும் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களையும் பாராட்டத்தான் வேண்டும்.

Last Updated on Tuesday, 12 March 2013 21:45 Read more...
 

சசிபாரதி என்கிற அற்புத மனிதன்.

E-mail Print PDF

சசிபாரதிவாழ்வது   அர்த்தமுள்ளதாய்  வாழ்தல்  வேண்டும். குறைந்த  பட்சம்  மனிதனாய் வாழவேண்டும். அப்படி  வாழ்கின்றவர்கள்  குறைவு.குறை கூறுதல்,பழி சொல்லல்,இருட்டடிப்பு, மனிதரிடையே புரையோடிய மனிதர்களே அதிகம். மாறாக, மனித நேயம்,அன்பு,பழி கூறாமை,அனைவரையும் அன்புடன் நேசிப்பது,முடிந்தவரை ஊக்கப்படுத்துவது என மதிக்கப்பட்ட அற்புத மனிதர் தான் சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் ஆவார். அமரர்களான சுப்பிரமணியம்,செல்லம்மா தம்பதியர்க்கு மகனாக புங்குடுதீவில் 26/06/1930 இல் பிறந்தவர். எனினும் வாழ்வின் பல நாட்களை யாழ்ப்பாணம்,கொழும்பு என வாழ்ந்ததினால் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்றே  கணிக்கப்பட்டார். புங்குடுதீவு விக்னேஸ்வரா வித்தியாசாலை,புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, யாழ்/இந்துக்கல்லூரி, யாழ்/ மத்திய கல்லூரி, ஊர்காவற்துறை/புனித அந்தனீஸ் கல்லூரி ஆகியவ்ற்றில் தன் கல்வியைத் தொடர்ந்து க.பொ.த.தரம் வரை பயின்றார். சிறு வயது முதலே பேச்சாற்றல் நிறைந்தவராகவும்,எழுத்தின் மீது ஆர்வம் மிகுந்தவராக காணப்பட்டார். அதனால் கவிதை, கதைகள், நாடகம், கட்டுரை என தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். ஈழத்து குறுங்கதைகள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்தியவர்களுள் ஒருவராக கணிக்கப்படுகிறார்.

Last Updated on Tuesday, 12 March 2013 21:21 Read more...
 

புலவர் பார்வதிநாதசிவம்: உணர்வைத் தந்த தமிழாசிரியர்!

E-mail Print PDF

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!எனக்குள் உணர்வைத் தந்த தமிழாசிரியர். ஈழத்துப்  பைந்தமிழ்க் கவியாள்பவர்களின்  வரிசையில்  புலவரும்  நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்தவர். எளிமையானவர். பழகுவதில்  இனிமையானவர். தோய்த்துலர்ந்த  வேட்டி, நாஷனலுடன்  வகுப்புக்குள்  வந்தால்  அமைதியாகிவிடும். உடையிலேயே  தேசியத்தைக்  கடைப்பிடித்த  தமிழாளர். உரையாசிரியர். ம.க.வேற்பிள்ளை, ம.வே. மகாலிங்கசிவம், ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை, பண்டிதை. இ. பத்மாசினி,  பண்டிதர், சா.வே.பஞ்சாட்சரம், மயிலங்கூடலூர். ப. நடராஜன் போன்ற  பலரை உறவுகளாகக்  கொண்ட  பாக்கியம்  பெற்றவர். மேலாக, ம. ப.மகாலிங்கசிவம் அவர்களின்  இலக்கியப் பணி கூட  இவரிடம்  இருந்து  வந்ததுவோ? ஆனைப்பந்தி  உயர்கலைக் கல்லூரியில்  தமிழாசிரியராக  எனக்குக் கிடைத்தது நான் செய்த  கொடுப்பினை. இலக்கியப்பூக்களுக்கு  கட்டுரைகள்  ம.பா.மகாலிங்கசிவம்  அவர்களிடமிருந்து கிடைத்த போது பெருமிதமாக  இருந்தது. பின்னாளில், அவரின்  பசிப்பிணி  மருத்துவன், இன்னும் ஒரு திங்கள்  நூல்களை  வாசிக்கக் கிடைத்தது  போது  அவரின் கவிதைகள்  மீது  அளப்பரிய  விருப்பம்
ஏற்பட்டது.

Last Updated on Saturday, 09 March 2013 17:35 Read more...
 

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!

E-mail Print PDF

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கோர் இழப்பே. அவரது காணொளியிலான நேர்காணலொன்றினை இணையத்தில் 'யு டியூப்' இல் கேட்டேன். அவரது காணொளி நேரகாணலில் அவர் கூறியுள்ள தகவல்கள் (குறிப்பாக ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகள்) மிகவும் பயனுள்ளவை. ஈழநாடு பற்றிய அவரது கருத்துகள் எனக்கு அன்றைய காலகட்ட நினைவுகளைத் தோற்றுவித்தன. என் எழுத்துலக வாழ்வில் ஈழநாடு சிறுவர் மலர் மிகவும் முக்கியமானது. அதில் கட்டுரைகள், கவிதைகள், குட்டிக்கதை என எனது சிறுவர் காலத்து ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. புலவர் நேர்காணலில் ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகவிருந்த பெருமாள் பற்றிக் கூறியிருந்தார். பெருமாள் வாரமலருக்குப் பொறுப்பாகவிருந்தபோது எனது சிறுகதைகள் , நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள், பழமையின் சின்னங்கள் பேணப்படுதல் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார்.  அன்றைய காலகட்டத்தில் புலவரின் கவிதைகள் போன்ற ஆக்கங்கள் பலவற்றை ஈழநாட்டில் வாசித்ததாக ஞாபகம். அவரை நான் அறிந்து கொண்டதே ஈழநாடு மூலம்தான். அமைதியாகத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களில் புலவரும் முக்கியமானவர். அவரது மறைவினையொட்டி இணையத்தில் கிடைத்த பிற தளச் செய்திகள் சிலவற்றை, நன்றியுடன், மீள்பிரசுரம் செய்கின்றோம். அவரது படைப்புகளை இணையத்தில் காண முடியவில்லை. அவரது  படைப்புகள்  சேகரிக்கப்பட்டு,  நூலகம்  போன்ற  தளங்களில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதவசியம்.  அத்துடன் அவரது மறைவால் வாடும் அனைவரின் துயரத்திலும்  பங்குகொள்கின்றோம்.

Last Updated on Wednesday, 06 March 2013 19:46 Read more...
 

Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province - A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan

E-mail Print PDF

[Recently, a conference on canadian writing  was held in the National college , Trichy. Called 'Canada:A Multitude of Spaces', the conference was spearheaded by the Indian Association of Canadian Studies. The following paper on V.N.Giritharan's writings was submitted to the conference by Dr R Dharani.] 

Literature, in a way, is a manifestation of an individual’s or a community’s elusive experiences. A grand procession of happy episodes alone in a life is highly impracticable and astonishing, as life itself is, and in most cases, akin to the tragi-comedies of Shakespeare. However, in the history of literature across the globe, catastrophe gained more attention than romance, chivalry and happy endings. The misfortunes of African- American writers have ever earned them the proper justice. The sorrow-stricken lives of a community who had been intimidated simply because of their ethnic background have been the cause of many social changes in western countries. Of all the complexities of life, the crisis of a survival stands first in the life of any human being. This is not the case with any other living creature in any part of the world. In any piece of literature, it is not uncommon to unearth such a theme intertwined with many other themes. Man struggles to locate a place of his own on this planet to ascertain a sense of identity of his life. Nationality, nativity, society, family, tradition, culture, language are such things endorsing the survival impulse of a man. Depending on the needs, man sets the priority for concepts like nationality, family and other matters.

Last Updated on Wednesday, 27 February 2013 00:28 Read more...
 

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடைக்காப்பு

E-mail Print PDF

திருஞானசம்பந்தர்திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன.  திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார்.  அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh,  இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும்.  சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை.  ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது.  இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர்  தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார்.  சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார்.  அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.

திருக்கடைக் காப்பு:
பத்து பத்து பாடல்களால் பாடப்பெறுவது தான் பதிகம் என்று  பெயர் பெறும், சமய இலக்கியங்களில் காரைக்காலம்மையார் இம்முறையைத் தொடங்கி வைக்கிறார்.  அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்;கள் இதற்குச் சான்றாகும்.  திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதினொரு பாடல்கள் அமைந்துள்ளன.  புதினொன்றாவதாக உள்ள பாடலுக்கு திருக்கடைக்காப்பு என்று பெயர்.  இதைப் பதிகப் பயன் என்றும் கூறுவர்.  தம்முடைய பதிகங்களை ஓதுவதால் வரும் நன்மைகளை திருக்கடைக்காப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.

Last Updated on Monday, 11 February 2013 21:19 Read more...
 

தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு

E-mail Print PDF

தொல்காப்பியர்1.0. முகப்பு

தமிழ் மொழிக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். தெலுங்கு மொழிக்காக எழுதப்பட்ட முதல் இலக்கணநூல் அந்திர சப்த சிந்தாமணி(நன்னயா, கி.பி.11). இந்நூல் சமசுக்கிருத மரபைப் பின்பற்றி சமசுக்கிருதத்தில் யாக்கப்பட்டதாகும். அதன் பின்பு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் தூயதெலுங்கில் இலக்கணம் எழுத முனைந்த நூல் ஆந்திர பாஷா பூஷணம்(மூலகடிக கேதனா). இந்நூலுக்குப் பிறகு கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நூல் எழுதப்பட்டது. அந்நூல் பாலவியாகரணம். இஃது தெலுங்கு மொழியைக் கற்கும் மாணவருக்காக எழுதப்பட்டது. இந்நூலிலும் தொல்காப்பியத்திலும் அமைந்துள்ள சொற்பாகுபாடு குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

2.0. தொல்காப்பியமும் சொற்பாகுபாடும்

 தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்புடைத்து. இதனை யாத்தவர் தொல்காப்பியர். இவரின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் கி.மு.5 என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

Last Updated on Saturday, 09 February 2013 22:48 Read more...
 

பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)

E-mail Print PDF

முகப்பு
பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது  தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம்.  அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி  தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார்.  இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது.

Last Updated on Saturday, 09 February 2013 22:45 Read more...
 

ரொக்கட் செய்த குற்றம் என்ன?

E-mail Print PDF

2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா?- 'டொக்டர்' நோயல் நடேசன் -2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா? மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது. இதனால் கண்ணீர் விடுவது, கோபம் கொள்வது போன்ற உணர்வின் வெளிபாடுகள் இலகுவானது. அதே நேரத்தில் விடயங்களை அறிவு பூர்வமாக அணுகுவதற்கான தேவை வரும்போது மூளையின் முன்பகுதி வேலை செய்யவேண்டும். இது சிறிது காலம் கடந்து நடக்கும். அத்துடன் சிலவேளைகளில் பெரும்பாலானவர்கள் நடக்கும் திசைக்கு எதிர்திசையில் தனிமையில் பயணப்பட வேண்டியுள்ளது. இப்படியான சிக்கலை எப்படி கடந்து போவது ? எவருக்கும் கடினமானனது. இதனால்தான் சட்டங்கள் நீதிமன்றங்கள் என்பன உருவாக்கப்படுகிறது.

Last Updated on Thursday, 17 January 2013 19:41 Read more...
 

மூத்த எழுத்தாளராகக் கௌரவம் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கான பாராட்டுரை

E-mail Print PDF

மூத்த எழுத்தாளராகக் கௌரவம் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கான பாராட்டுரைஇந்த மாலைப்பொழுது மிக இனியதாக இருக்கிறது. இப்பொழுது இம் மேடையில் நிற்பது அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டும் பெறும் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களை விட, பாராட்டப் புறப்பட்ட நான் களிப்பில் மிதந்து நிற்கிறேன். பாராட்டுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்பது மட்டும் காரணமல்ல. ஈழத்தின் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளருக்கு பாராட்டுரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பானது நோயாடும், சீழோடும்; பிணியோடும் நிதம் கலந்தலையும் எனக்கு, பூவோடு கூடிய நார்போன்று, இவர் அருகே நிற்பதே பெருமை வீச்சதை தருகிறது. இந்த வாய்ப்பைத் தந்த தகவம் அமைப்பினருக்கு நன்றி. எழுத்துலகில் அவர் சாதாரணர் அல்ல. பூனையையும் எலியையும் வழுக வழுகப் பிடித்துவிட்டு இமயமலை உச்சியில் ஏறிநின்று, மார்தட்டி, கைஉயர்த்தி இருவிரல் சுட்டி, அது தன் வெற்றியெனத் தாமே பறைசாற்றுபவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர். அத்தகையோர் பலர் எழுத்துலகில் இருக்கிறார்கள். காலத்திற்கும் தருணத்திற்கு ஏற்ப குயளவ குழழன போலக் கதைகட்டிச் சுடச்சுடப் பரிமாறும் எழுத்தாளர்கள் அவர்கள். இவர் அவற்றில் சேர்த்தியல்ல. அனுபவங்களோடு கூடியவை இவரது படைப்புகள். இரை மீட்டி, மீள மீள அரைத்து, மனத்தில் செரிமானமான பின் எழுத்தில் வந்து யதார்த்தமாக வீழ்பவை.

Last Updated on Sunday, 13 January 2013 22:57 Read more...
 

மீள்பிரசுரம்: தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…

E-mail Print PDF

கவிஞர் தேவதேவன்கவிதை ரசனை அந்தரங்கமானது. சொல்லுக்கும் வாசகனின் அகமனதிற்கும் இடையேயான மர்மமான, முடிவற்ற உறவின் மூலம் இயங்குவது. அதைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஓர் எல்லைவரை பகிர்வதும் சாத்தியமில்லை. அதே சமயம் ஒருவன் ஒரு கவிதையை ரசிக்கும் முறையைத் தன்னுடைய ரசனைமுறையைத் தானாக கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆழ்மனமும் தனித்தன்மை உடையது. எனினும் ஒருவகையில் அனைத்தும் ஒன்றுதான். ஒரு கவிதைக்கு நான் என்ன அர்த்தத்தைத் தருகிறேன் என்பது இன்னொருவருக்குச் சற்றும் முக்கியமில்லை. ஆனால் அந்த அர்த்தத்தை நான் எப்படி வந்தடைந்தேன் என்பது உதவிகரமானது. இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சாதாரணமாகக் கவிதை பற்றிப்பேசும் விமரிசகர்கள் அதன் குறைந்தபட்ச சாத்தியங்களைப்பற்றி மட்டுமே பேசுவார்கள். காரணம் அதுவே புறவயமானது என அவர்கள் நம்புகிறார்கள். கவிதையில் எதுவுமே புறவயமானதல்ல. எனவே ஒரு கவிதையிலிருந்து நான் போகக்கூடிய – அதாவது எழுதக்கூடிய அளவுக்குப் போகக்கூடிய – அதிகபட்சத்தை முன் வைப்பதே உதவிகரமானது.

Last Updated on Tuesday, 25 December 2012 23:28 Read more...
 

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

E-mail Print PDF

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.

Last Updated on Wednesday, 19 December 2012 06:58 Read more...
 

அகஸ்தியரின் 'மானுட தரிசனங்கள்' நூலிலிருந்து...

E-mail Print PDF

அகஸ்தியரின் 'மானுட தரிசனங்கள் [எஸ் அகஸ்தியர் அவர்களின் நினைவையொட்டி (29.08.1926  -- 08.12.1995)  அவரது ‘மானிட தரிசனங்கள்’ என்ற விவரணச் சித்திரத்திலிருந்து தரிசனம் 23 ஐத் தருகின்றோம். 'பதிவுகள்' இதழுக்கு அனுப்பியவர் அவரது மகள்: நவஜோதி யோகரட்ணம் - பதிவுகள் ]

      லெக்ஷனெண்டா தமிழருக்க தமிழர்தான் போட்டியெண்டில்லை.
      அந்த நசல் வந்து முடிஞ்சாலும் தமிழருக்கு, ‘நான்  
      உயர்ந்தவன்,  நீதாழ்ந்தவ’னெண்ட போட்டி பொறாமை   
      பெருமைதான் முதிசச்  சொத்து. வீண் பெருமை பேசி
      அநியாயமாக அழியிறதுக்கும் பந்தயம் கட்டுவினம்.
      இவேதான், தமிழர் ஒற்றுமையா இருக்கவேணு’மெண்டு சும்மா
      ஓயாமல் கத்துறது. இந்தப் புலுடா சிங்களச் சனத்துக்கும்
      வடிவாத் தெரியும்.
    
யாழ்ப்பாண நகரசபைக் கோபுர முகப்பு வாசலை மருவிய வெட்டை மைதானம் சன நெருக்கடிக்குள் திமிலோகப்பட்டது. வட மாகாணக் கனதனவான்கள், அப்புக்காத்து புரக்கிராசியார், பேர்போன டாக்குத்தர்மாரும், நொத்தாரிஸ், உடையார், மணியம், விதானைமாரும், இந்திய ஆமை வாய்க்குள் அபின் திணித்துக் கடத்தல் வியாபாரம் செய்கிற பெரும் புள்ளிகள், நகைக் கடைக்காறர்கள், சம்மாட்டிமார், கத்தோலிக்கச் சுவாமிமார் என்று தங்கள் தங்கள் சீவியத்துக்காகத் தவம் செய்ய வந்தவர்களாட்டம் மேடையைச் சூழ்ந்து ஓர் அரண்மனை ஏவலாளர்கள்போல் புட்டுவங்களில் வீற்றிருந்தனர்.

Last Updated on Friday, 07 December 2012 23:21 Read more...
 

அ.செ.மு

E-mail Print