இனியாவது சங்கல்பம் கொள்..

  -முல்லைஅமுதன் -

உன் ஏளனம் புரிகிறது.
வாழத்தெரியாதவன் என்பது தெரிகிறது.
ஆனாலும் என்ன செய்ய?
பிடிக்கிறது என்பதற்காக
குழந்தைக்கு
புத்தாடை எடுக்கும் போது கூட-
ஊரார் குழந்தைகள் பற்றிய
நினைப்பும் வலிக்கிறது.
உனக்கு முடிந்திருக்கிறது.
அந்தக் குழந்தைகளின் நிர்வாணம் தான்
என்னை உடைகள் உடுத்த வைத்திருக்கிறது.
அந்த மனிதர்களின்
மரணம் தான் ஒரு குவளை
நீர் அருந்த வைத்திருக்கிறது.
ஆண்டாண்டு காலமாய்
வாழ்ந்து தளைத்திருந்த
மனித மரங்களைத்
தறித்து வீழ்த்தியவனிடம் மண்டியிடச் சொல்கிறாய்!
முடியாது போ!
வீர மரணம் எய்திய
உன் தங்கையை உயிர்ப்பித்துக்கேள்.
வாழ்வின் வலிமை பற்றி...
மரணம் சாதாரணமொன்றல்ல..!
எழுதியதை முடித்துக்கொள்ள இது ஒன்றும் சிறுகவிதையல்ல....
மானுட சரித்திரம்..ஒரு இனத்தின் மீதான இன சங்காரம்.
மண்டியிடச் சொல்லி
உலகின் வல்லூறுகள் செய்து முடித்த
வதை அந்தாதி.
ஒரு இனத்தின் யுகம் யுகமான
சோகத்தின் உச்சக் கட்டம்
நடந்து முடிந்த நாட்களை மறந்து
சன்னதமாடுகிறாய்.
வேண்டாம்.
இனியாவது சங்கல்பம் கொள்..
வதைகளின் கதைகளை
உன்-
குழந்தைக்கும் சொல்லிக் கொடு.
வதைகளைத் தந்தவன்
வதைபடும் வரை விரதம் இரு!
சூரசம்காரம்
கொள்ளும் அந்த நாள் வரும் வரை
மௌனத்தை அர்த்தப்படுத்து..!
பின்னர் வா...
புத்தாண்டாய் ஆடிக்கூழ் குடித்தபடி கொண்டாடுவோம்...!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஜுமானா ஜுனைட், இலங்கை கவிதைகள்!
 

1.

அமைதியான
பயணத்தில்…    
 
சில வேளை
நீண்ட தூக்கம்
பெட்டிக்குள்ளே ., அல்லது
சிறு ஓய்வு…
 
அதன் பின்னால்
மறுபடியும்
பயணம் ஆரம்பம்
ஆர்ப்பாட்டமில்லாமல்..
 
சந்தையிலே
லாபாய், லாபாய்… சத்தம்
சரமாரியாய்
அதற்குள்ளும்
சனத்திரலின் மத்தியில்
அமைதியான பயணம்!
 
வங்கியிலிருந்து வீடு வரை
வீட்டின் பீரோவிலிருந்து
நடுரோட்டில்… .பிச்சைத் தட்டு
வரை
சந்தையில்
சாப்பாட்டுக் கடையில்
பஸ்ஸ{க்குள்
சட்டைப் பையுள்
எங்குமே
உலாப்போகின்றது
அமைதியாக.. 
 
பணம் …                 
 

2. நிசப்தங்கள் நீங்குகின்றன

இரவின் பயங்கர நிசப்தம்
தளர்கிறது

உயர்ந்த பனை மரங்களின்
ஓலைகள்
ஒன்றையொன்று உரசும் போதும்…
 
வளைந்த
ஒற்றையடிப் பாதைகளில்
ஓடித்திரிகின்ற நாய்கள்
ஒன்றையொன்று துரத்தும் போதும்

பக்கத்துக் காட்டில் சருகுகள்
சலசலத்து
காற்றில் பறக்கின்ற போதும்…
 
பக்கத்துக் குடில்களில் குழந்தைகள்
தேம்பி
அழுகின்ற போதும்…
 
பயங்கர நிசப்தம்
பயந்து பயந்து தளர்கின்றது
 
குருவிகளின் மூச்சில்
தூக்கம் கலைகின்ற பட்சிகள்
சிறகடிக்கின்ற போதும்
தூரத்து வாகனங்கள்
துரத்துகின்ற வெளிச்சத்தில்
உயிரினங்கள்
வெருண்டோடுகின்ற போதும்

இருளின் நிசப்தம்
நீங்குகின்றது!                 

3. காலப் பயணம்

ஆழ் கடல் நீருக்குள்
பொழுதெல்லாம் முக்குளித்து
ஒரேயொரு துளிநீரை
தேடி எடுத்து வந்தேன்.. 
தரைக்கு வந்த பின்தான்
புரிந்தது
அது கண்ணீரென்று…
 
ஆகாய வெளியெல்லாம்
தாண்டிச் சென்று
ஒரேயொரு மின்மினி(ப் பூச்சி)
பிடித்து வந்தேன்…,
கைசுட்ட பின்தான்
புரிந்தது
நட்சத்திரம் என்று…
 
காலமற்ற கால வெளிகளைக்
கடந்து சென்றேன்…
“அகாலமாய்”ப் போன
நேர ஆயிடைகளைக்
குறித்து வைக்கிறேன்… 
 
வாழ்வில்
வருடமாய்த்தோன்றிய நாட்கள்
கூறட்டும்
சோகமான வரலாறுகளை
என்றாவது ஒருநாள் -
அப்பொழுது
புதிதாய் ஒரு சரித்திரம் படைக்கலாம்
சந்தோஷமாய்…
 
நொடிகளாய் மறைந்த
இன்பங்களை
நுகர்ந்து பார்க்கிறேன் -
“காலப் பயணம்” சாத்தியமா
விஞ்ஞானம் கூறட்டும்
கடந்துதான் பார்க்கலாம்
என்றாவது ஒருநாள்..

4. பீதி
 
யுகாந்திரமாய்த் தோன்றிய
அந்த நிமிடங்களை
நினைத்துப் பார்க்கிறேன்.
 
ஓவ்வொரு சுவாசங்களும்
ரணமாகச் சுட்ட
அந்த இரவு நேரத்தை
எண்ணிப் பார்க்கிறேன்..
 
ஓரடிக்கு முன்னால் நின்ற
ஓவ்வொரு ஜீவனும்
பார்வைகளால் சந்திக்க முடியாத
தூரங்களில்
நிற்பதைப் போல
இயற்கை
பாவனை செய்தது…
 
சுனாமி என்ற பீதியால்
பீடிக்கப்பட்ட
ஒவ்வொரு ஆத்மாவும்
ஒப்பாரி வைத்ததை
எண்ணிப் பார்க்கின்றேன்…

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இர.மணிமேகலை கவிதைகள் இரண்டு!

1. பிம்பங்கள்     

உடல் முழுவதும்
காற்றுச்சிற்றறைகளாக மாறிவிடுகிறது
கரங்களே சிறகுகளாக
புவியின் வளிமண்டல அடுக்குகளில்  பயணிக்கிறேன்
நட்சத்திர மண்டலங்களை வாயுக்குழம்பாக்க
சிறுசிறு உருவங்கள் சுயம்புவாகின்றன
மைக்கறை படியாத இமைகள்
கூழாங்கற்கள்  நிறைந்த
நீரின் ஓட்டமென அசைகின்றன
தன்னுள்  புள்ளிகளை மட்டுமே
நிறைத்துக்கொண்ட
ஒப்பனைகளற்ற கோடுகளே பேரழகு.

2. தொடுகை

பெரும் அறைகளைக் கொண்ட வீட்டில்
நவீனத்தின் பளபளப்பு அழகு விரித்திருக்கிறது
பத்தியின் மணம் கமழ்கிறது
அஞ்சறைப்பெட்டியுடன் தினைமாவும்
ஒருமித்த சமையல் கூடம்
பணிகளிலிருந்து விடுபட்டு ஓய்வுகொள்ள முற்றம்
எங்காயினும்
சிறு பாதங்களின் அழுக்குச்சுவடும் படிந்துவிடக்கூடாது
அறையயெங்கும் நீர் கொண்டு தூய்மையாக்கி நிமிர
நாவில் நீர்ச்சத்து குறைகிறது
உலர்ந்த நாவை நீராட்ட
எதிராளியின் தூய்மை குறித்த கவனத்துடன்
இரு கரங்களேந்தி நீர்ருந்துகிறாள்
பாத்திரங்களுக்கும் விரல்களுக்கும்
இடையிலான தொலைவுக்குள்
இரைகொள்ளும் தீண்டாமைப் பாம்பு
பேருடலை நெளித்துப் படுத்துக்கிடக்கிறது
அதன் வயிறு நீண்ட காலத்தைத் தின்று கொழுத்திருக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் (பரமக்குடி) கவிதைகள்!

1. தாயென்பேன்

எல்லோரா சிற்பம்போல்
எழிலான உனைக்கண்டு
துள்ளாத மனமுந்தான்
தரணிதனில் உண்டோடி?

எல்லோரும் உனைப்போல
எழிலென்று நான்சொல்ல
என்னால்தான் முடியாது

ஏனென்று நீகேட்டால்
என்னவள்தான் நீயென்பேன் – என்
இரண்டாவது தாயென்பேன்


2. குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் (துளிப்பாக்கள்)

குழந்தைகளின் மூச்சுக்காற்றுப் பட்டு
சாபவிமோசனம் அடைகிறான்
கடவுள்

குழந்தைகளின் செல்லக்கோபத்தால்
கல்லாய் மாறிவிட்டான்
கடவுள்

அடிஉதை வாங்கினேன்
வலிக்கவில்லை
மடியில் குழந்தை


3. காதல் பொம்மை

பொம்மையோடு விளையாடும்
பச்சிளங்குழந்தை போலவே
உன்னோடு பேசிச்சிரித்து
விளையாடுகிறேன் நான்

குழந்தையிடமிருந்து
பொம்மையைப் பிடுங்கிவிட்டு
வேறொரு பொம்மையைக்கொடுத்து
விளையாடச்சொல்வதைப் போல்
என்னிடமிருந்து உன்னைப்பிரித்துவிட்டு
வேறொருவனை மணம்செய்யச்
சொல்கிறார் என்அப்பா

அதே பொம்மைதான்
வேண்டும் என
அழுது அடம்பிடித்து
ஆர்ப்பாட்டம் செய்யும்
குழந்தையைப்போலவே
நீதான் வேண்டும்
அழுது தவிக்கிறேன்
என் அப்பாவிடம்...

4. காதலடி!

மாநிலம் புகழுதடி – உன்
மாநிற மேனிகண்டு
கர்வந்தான் கூடுதடி – உன்
கார்மேகக் கூந்தல்கண்டு
காதலும் வழியுதடி – உன்
கருவண்டு விழிகள்கண்டு
மேனி சிலிர்த்ததடி – உன்
மீன்விழிப் பார்வைகண்டு
சொக்கித்தான் விழுந்தேன்டி – உன்
செந்நிற இதழ்கள்கண்டு
ஆசையுந்தான் கூடுதடி – உன்
ஆன்மீக நெற்றிகண்டு
மோகந்தான் கூடுதடி – உன்
மூங்கில் தோள்கள்கண்டு
கவிபாடத் தோணுதடி – உன்
கழுத்தழகை நானுங்கண்டு
நெஞ்சந்தான் விரும்புதடி – உன்
நூலவிழும் இடையைக்கண்டு
பாட்டெழுதத் தோணுதடி – உன்
பாதமிரண்டின் அழகுகண்டு
முத்தமிடத் தோணுதடி – உன்
முன்னழகை நானுங்கண்டு
செத்துவிடத் தோணுதடி – உன்
செங்காந்தள் விரல்கள்கண்டு
பாசமும் கூடுதடி – உன்
பார்போற்றும் குணத்தைக்கண்டு

5. உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினமென்று உயர்வாகச் சொல்வோமே
களைப்பிங்கு வந்தாலும் கவனமெலாம் உழைப்பில்தான்
தொழிலெங்கள் இறையென்று தொழில்செய்து வெல்வோம்
உழைப்பெங்கள் மூச்சென்று உழைக்கத்தான் செல்வோம்

அயராது உழைத்திட்டால் அடைந்திடலாம் இலக்கினையே
துயரமிங்கு வந்தாலும் தூள்தூள்தான் நம்முன்னே
உயரத்தில் போனாலும் உணர்வெல்லாம் உழைப்பிலேதான்
முயலாத மனிதர்காள் முன்னேற்றம் உழைப்பில்காண்

எதுவந்த போதினிலும் எடுப்போமே முதலடியை
பொதுவென்று வைப்போமே பொருளைத்தான் இங்கேயே
விதியின்வழி செல்கின்ற வாழ்வுமிங்கு வசப்படுமே
மதியிங்கு கூரானால் மகத்துவம் வாழ்வினிலே


6. பாட்டாளியின் பாடல்

தங்கமே தில்லாலே ஏலே
தங்கமே தில்லாலே

நாடுபோற நிலயப் பாரு
தங்கமே தில்லாலே

நாமெல்லாம் எப்டி வாழ?
தங்கமே தில்லாலே

விலைவாசி ஏத்தத்தால்
தங்கமே தில்லாலே

வெறும்வயிறு பட்டினிதான்
தங்கமே தில்லாலே

விவசாயம் நாங்க செய்றோம்
தங்கமே தில்லாலே

விலைய எவனோ நிர்ணயிப்பான்
தங்கமே தில்லாலே

நாளெல்லாம் நாம் உழைக்க
தங்கமே தில்லாலே
நாணயஸ்தன் போல்நடிப்பான்
தங்கமே தில்லாலே

உண்டுறங்க இடமில்லை
தங்கமே தில்லாலே
ஊழலிலே திளைக்கின்றான்
தங்கமே தில்லாலே

இலவங்கள் தருவதெல்லாம்
தங்கமே தில்லாலே
இளிச்சவாயன் ஆக்கத்தான்
தங்கமே தில்லாலே

7. நடைபாதை வீடு

நாளுன்னும் பாக்காம
பொழுதுன்னும் பாக்காம
நாங்கஇங்க உழைச்சாலும்
ஓடாத்தான் இளைச்சாலும்
நாணயத்துக்கு மதிப்பில்லே
நாஸ்டா துண்ண வழியில்லே
நடைபாதை வீடாச்சு
நாங்கவிடும் பெருமூச்ச்சு
நாட்டின் பெயரு இந்தியாவாம்
விலைவாசி உயர்ந்திடுச்சு
விளைநிலமும் விலையாச்சு
விவசாயம் நலிஞ்சுடுச்சு
கிராமந்தான் வெறிச்சாச்சு
பால்விலையும் உயர்ந்தாச்சு
பஸ்டிக்கெட் உயர்ந்தாச்சு
டாஸ்மாக் கடைகளிலே
கோடிகளில் வசுலாச்சு

இலவங்கள் தந்தாச்சு
மூளைச்சலவை செஞ்சாச்சு
எங்களுடைய வரிப்பணத்தை
ஏப்பமிங்கு விட்டாச்சு

கோடிகோடி ஊழலாச்சு
பணமுதலை பெருகிடுச்சு
அரசியலும் இங்கேதான்
பணம்சுருட்டும் தொழிலாச்சு

எல்லாமே இங்கேதான்
உயர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
எங்களுடைய வாழ்க்கைமட்டும்
இப்படியே இருக்குதய்யா...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


முற்றுப்புள்ளியின் திசை

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி.-

முற்றுப்புள்ளியின் வடிவையும்
தொடருகையின் வாசகத்தையும்
ஒருசேரப் பரவவிட்டபடி பெருமுரணாய்
எரிந்து கொண்டே இருக்கிறது
பச்சைவிளக்கு உன் வாசல் கதவினில்.
என்னைப்போலவே நீயும்......
வரிகளை செப்பனிட்டபடியோ
செப்பங்களை இணைத்தபடியோ
இல்லையேல்........எவரோ உனக்காய்
கோர்த்தவைகளைப் பிரித்தலசிய படியாகவோ
ஒன்றா இமைகளோடு உட்கார்ந்திருக்கலாம்.
சுட்டுவிரல் பதிக்க வரிசை வரிசையாய்
வந்தசையலாம் வந்தடைதலின்
நீள்சதுரப் படிகள்.
ஆனாலும் முயலப் போவதேயில்லை
இனியொருபோதிலுமே.........
உணர்பரப்பெங்கிலும் சதாவும்
செறிவன்னமில மொன்றையே
பெய்தபடி தொடர்கிற உன் நெடு மௌனமொன்றே
போதுமெனக்கு நீ எப்போதுமே விரும்பிய
அம்முற்றுப்புள்ளியின் திசையுணர.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


கலைமகள் ஹிதாயா றிஸ்வி கவிதைகள்!

1. தொப்புள் கொடி

நட்புள்ளங்களை வறட்டு மனம் என்று
சொல்லக்கூடாது நாம்
உயிரில்  நிறைந்திருக்கலாம்
அன்பின் ஊற்று ...!

அன்பின்  ஆழமும்
உள்ளத்து   உறவுகளும்  வித்தியாசப்படலாம்
பிரிவு  என்று சொல்லாதீர்கள்
நெருக்கமாய்   வரலாம் அவை உறவினில்

நான் இதயமா  உனதென்று
என் தோழியிடம்  கேட்டேன்
உப்பாய்  தண்ணீரில்  கரைந்து போகிறது
வடிகின்ற  கண்ணீரின் துடைப்பம் போல அது

வானத்திலிருந்து சிதறிய தூளிகள்
வெள்ளமாய்  ஓடுகையில்
மனதில் வழியெடுத்து
புதுப் பாதை தேடுகிறது உறவு
தன்  மனதை மாற்றிக் கொள்ள

பாசத்தில் உறவாடுகின்றான் மனிதன்
தானே  தொப்புள் கொடியாகி விட்டது போல் !

2. பரவாய் இல்லை ...!

அன்புள்ளங்கள் மனதுக்குள்
வேதனைகள் தரும்போது...
உயிரென்று நேசித்தவர்கள்
பகையாகி பேசும் போது ...

நட்புள்ளமே நட்பினை
பொழுது போக்காக கருதும் போது...
நினைவுகளே மனசுக்குள்
துயரினை சுமக்கும் போது

நட்பென்று பழகியவர்கள்
உள்ளத்தால் வெறுக்கும் போது ...
அன்புக்காய் அரவவனைத்தவர்கள்
அன்னியமாய் போகும் போது....

தூய்மை நிறைந்த உறவில்
துர் நாற்றம் வீசும் போது
உறவு இன்றி ஒரு இதயம்
மண்ணில் துடிக்கும் போது

தோழரே ..., நீ சொன்ன
வார்த்தைகள் பெரிதல்ல ...,
சுவாசமே....!
நீ - உயிரை
விட்டும் போனாலும் கவலை இல்லை
எனக்கு -
உலகத்தை விட்டும் போனாலும் பரவாய் இல்லை ...!

3.    முற்றுப் பெறாத வினாக்களாய் ....?

கண் திறந்து  பார்க்கையில்....
மனச்  சுமையாய் இருந்தது என் கனவு
 அன்பும்   ,பாசமும் நிறைந்த...
 மனதில் ஓர்  இருளாய் நிகழ்வு  ...!

உன் மனதினை  நேசித்துப் பார்க்க ..
பல சோதனைகள் செய்தே இடம்   தந்தாய்....
அன்று நான் அறியேன்.....
வாழ் நாள் முழுதும் நீ எனை நேசிக்க  மாட்டாய்  என....

எனக்கு பாசம்  காட்டிய
உன்   சுவாசம் ...
வெறும் வேஷம் என்றறியேன்....?

அன்பே .
உன்னிலிருந்து எனை பிரித்து விட்டாய்  என்று .
அழுது  துடிக்கின்றேன் ..
ஆயூள்  முழுக்க நீ எனை விட்டு பிரிந்திருப்பாய்...
என்பதை  அறியாமல் ...!

உன்னிலிருந்து பெற்ற  அன்பை
தூய  உறவில் -
 வைத்துக் காப்பாற்றுவாய் என்றெண்ணினேன்....

திசையரு கருவியற்ற கப்பலைப் போன்று ...
வரண்ட  நாவுக்கு  பாலைவனத்து  கானல்  நீர் போன்று ... 
 கொதிக்கும்  மண்ணில் துடிக்கும்  புழுப்  போன்று ....
எனை விட்டு  விட்டு போவாய் ....
என அறியாமல்.......! புரியாமல் ...!!

நேசித்தவள் மனம் அறியாமல்...
பாசம் காட்டியவள் அன்பு புரியாமல்
யாரையோ நினைத்து அழுது அழுது ....
வாழ்கின்றேன்......
என் மன நிம்மதி இல்லாமல் ....

அன்பானவளின் இதயம் அறியேன் ......?
ஆனாலும் -
எனை நேசித்த ......
 உறவுகள் என் உயிரின்  உணர்வுகளாய் ..

என்  மனதிற்கு  ......
பாசம் ... காட்டியோர்
என் ஆத்மாவின் ... சுவாசமாய் .
எனைப்போல்...இன்னும் பலர்.....
என் நட்புள்ளங்களாய் ....
வாழ்கின்றோம் ஓர் இதயத்தில் ....
ஓட்டிப் பிறந்த சிசுக்க்களாய் ....

நட்புள்ளங்களின்  ஆழம்  அறியோம்
ஆதலால் ..
தோழி அன்று  உன்...
 மனதினில் நான் பூவாய்.....
மணந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
முள்ளாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
உனக்கு சுகமாய்....நான்
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
சுமையாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
மனமின்றி -
எனை  நேசித்து வளர்த்தாய்
தோழி -
உன் உறவு
இன்று -
என் மனதில் முற்றுப் பெறாத வினாக்களாய் ....?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வேர்கள்

- மெய்யன் நடராஜ் (இலங்கை) -

எரித்துப் போட்டாலும்
ஈரப்பசை இருப்பின்
எப்படியும் ஊன்றும்
அறுகின் வேர்கள்

எத்தனை பெரிய
மாளிகை என்றாலும்
ஊடுருவினால் போதும்
சிதைத்தே போடும்
அரசு வேர்கள்

சிறு வித்தால்
புறப்பட்டு
பரந்த இடம் பிடித்து
நீண்டு போகும்
ஆலின் வேர்கள்

பூக்களாய் புன்னகைத்து
நீந்தி வர தலையசைத்து
நீருக்குள்ளே சிக்க வைத்து
சிதற வைக்கும்
தாமரையின் வேர்கள்.
எந்தக் காற்றடித்தாலும்
காடுகள்
பறந்துவிடாமல் இருப்பது
வேர்களின் கைகளால்
மரங்கள் மண்ணை
பிடித்துக் கொள்வதால்தான் 

சதை போர்த்தி
உயிர் காக்கும்
உடல் முழுதும்
படர்ந்து கிடக்கும்
நரம்பு வேர்கள்

உடலுக்குள் உயிராய்
இயங்கும் ஆத்மாவின்
வேர்களோ
தொடக்கமும் முடிவும்
இல்லா
அந்தரங்க வேர்கள்

விழி வயல்களில்
பார்வை விதைகளாய்
விழுந்து விட்டால்
இதயத்தில் படரும்
காதலின் வேர்கள்

பூக்களாய் மொட்டுவிடவும்
பூகம்பமாய்
தகர்த்துப்போடவும் என
புரியாமல் இருப்பது
மௌனத்தின் வேர்கள்

கறையானாய்
புற்று வைக்கும்
சந்தேக வேர்கள்
எங்கும் படராமல்
இருந்தாலே அது
சந்தோசத்தின்
வேர்களாகிவிடும்

இனவாதங்களால்
இதயத்தில் ஊன்றும்
குரோதத்தின் வேர்கள்
அடக்குமுறைகளால்
முளைவிடும்
போராட்ட விருட்சங்கள்
உதிர்க்கும்
புதிய விதைகளால்
காலூன்றும்
புரட்சியின் வேர்கள்

இப்படி எத்தனை
வேர்கள் மண்ணில்
இருந்தபோதும்
இறுதியில் எல்லா
வேர்களையும்
அறுத்துப் போடவென்று
எதிலும் மட்டுமல்ல
எமக்குள்ளும்தான்
சூழ்ந்துக் கிடக்கின்றது
மரணத்தின் வேர்கள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R